இந்த வெட்டி திண்ணைப் பேச்சு என்ற பகுதியை சில மாதங்களாக நிறுத்தி வைத்திருந்தேன். இதற்கு முக்கிய காரணம் விவாதம் செய்ய தேவையான காரசாரமான விஷயங்கள் எதுவும் நாட்டில் நடக்காமல் இருந்ததுதான். தேர்தல் நெருங்குவதால் மீண்டும் இதை துவக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த வாரம் முதல் துவக்கியுள்ளேன். வழக்கம் போலவே தேர்தல் வரை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் வரும்.
இதிலுள்ள கருத்துக்கள் பெரும்பாலும் என்னுடையவைதான் என்றாலும் அதற்கு மாற்றாக உள்ள கருத்துக்களையும் உங்கள் முன் வைக்கவே ரஹீம்பாய், கணேஷ் என்ற கற்பனை நபர்களையும் இணைத்துள்ளேன்.
*****
ரஹீம்பாய் அவருடைய வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கிறார். ஜோசப்பும் உடன் இருக்கிறார். கணேஷ் அப்போதுதான் வருகிறார்.
ரஹீம்: என்னய்யா வழக்கம் போலவே இன்னைக்கிம் லேட்டாத்தான் வறீர் போல?
கணேஷ்: (சிரிப்புடன்) லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நியூசோட வருவோம்ல?
ஜோசப்: அதென்னங்க லேட்டஸ்ட் நியூஸ்?
கணேஷ்: நம்ம வாசன அம்போன்னு விட்டுட்டாங்களே அத சொல்ல வந்தேன்.
ரஹீம்: (சிரிக்கிறார்) ஓ அதுவா. கரெக்ட். ஒரு சீட்டுக்கு பாத்தா வர்ற தேர்தல்ல கிடைக்கற ஒன்னும் ரெண்டும் கிடைக்காம போயிருமேன்னு பாத்துருப்பாங்க. அது மட்டுமில்லீங்க. இதுல இன்னொன்னும் இருக்கு.
ஜோசப்: அதென்ன இன்னொன்னு?
ரஹீம்: மந்திரி சபையில இருந்துக்கிட்டே இது சரியில்ல, அது சரியில்லன்னு அறிக்கை விட்டுக்கிட்டே இருந்தாருல்ல? நாராயணான்னு இருந்தவரு போட்டுக் குடுத்துருப்பாரு.
ஜோசப்: அப்படீங்கறீங்க? எனக்கென்னவோ இது திமுகவோட மறுபடியும் கூட்டணி வச்சிக்கறதுக்கு காங்கிரஸ் பண்ற அட்டெம்ப்ட்டுன்னு நினைக்கேன். என்ன சொல்றீங்க கணேஷ்?
கணேஷ்: ஆமா எனக்கும் அப்படித்தான் தோனுது. ஆனா இப்பவும் கலைஞர் இதப் பத்தி மூச்சு விடாம இருக்கார் பாருங்க. கூட்டணி வேணும்னா அவங்களே வரட்டும்னு....
ரஹீம்: அவர் கூப்ட்டும் நடிகர் பதிலே சொல்லாம இருக்காரில்லையா அந்த கடுப்பாருக்கும்.
கணேஷ்: அதான் நடிகர் வந்தா காங்கிரசோட வாங்கன்னு சொல்லிட்டாராமே.
ஜோசப்: இதத்தான் நேரம்னு சொல்றது. அறுபது வருசமா அரசியல்ல இருந்துட்டு இப்போ நேத்து பேய்ஞ்ச மழையில முளைச்ச காளான்கிட்டல்லாம் கையேந்த வேண்டியிருக்கு பாருங்க. இத என்னன்னு சொல்றது?
ரஹீம்: நீங்க என்ன ஜோசப் புரியாத ஆளாருக்கீங்க? அறுபது வருசம் இருந்து என்ன பிரயோசனம்? தனியா நின்னா ஒன்னு கூட கிடைக்காது போலருக்கே?
கணேஷ்: அதென்னவோ உண்மைதான். வீட்ல இருக்கறவங்கள கட்டுக்குள்ள வச்சிக்க முடியாதவங்கல்லாம் நாட்டுக்கு நல்லது பண்றேன்னு வந்தா யார் நம்புவாங்க? சரி, அப்படியே இவங்க மூனு பேரும் கூட்டணி வச்சாலும் பெருசா எதுவும் கிடைக்குமா என்ன?
ஜோசப்: நல்ல கேள்வி. நாலு முனை, அஞ்சி முனை போட்டின்னு இல்லாம மும்முனை போட்டின்னு ஓட்டு சிதறாம இருக்கும்.
ரஹீம்: என்னது மும்முனை போட்டியா? எது பாஜக, பாமக, மதிமுக கூட்டணியா? நீங்க வேறங்க. அதெல்லாம் ஒரு கூட்டணின்னு சொல்லிக்கிட்டு. டெப்பாசிட் கிடைச்சா லாபம்.
கணேஷ்: (கோபத்துடன்) யோவ் பாய், ஆரம்பிச்சிராத. இன்னைக்கி நாடு முழுசும் அடிக்கற மோடி அலையில...
ரஹீம்: (குறுக்கிடுகிறார்) என்னது மோடி அலையா? எங்க, இங்கயா? ஜோக் அடிக்காதைய்யா. நார்த்ல எப்படியோ, சவுத்ல அப்படியொன்னும் காணம். குறிப்பா தமிழ்நாட்ல.... போன தடவ மாதிரிதான்... ஒன்னு கிடைச்சா லாபம்.
கணேஷ்: பாத்துக்கிட்டே இருங்க. நாப்பதையும் அள்றமா இல்லையான்னு...
ஜோசப்பும் ரஹீம்பாயும் உரக்க சிரிக்கின்றனர். கணேஷ் அவர்கள் இருவரையும் எரித்துவிடுவதுபோல் பார்க்கிறார்.
கணேஷ்: (எரிச்சலுடன்) என்ன ஜோசப், நீங்களும் இந்தாள் கூட சேந்துக்கிட்டு சிரிக்கறீங்க?
ஜோசப்: தப்பா நினைச்சிக்காதீங்க கணேஷ். ஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் பேராசை. இல. கணேசனுக்கே இந்த அளவுக்கு ஆசை இருக்காது. அஞ்சோ ஆறோ கிடைச்சாப் போறும், நாமளும் ஒரு ஸ்டேட் மந்திரியாயிரலாம்னு நினைச்சிக்கிட்டிருப்பார்.
ரஹீம்: அது இருக்கட்டுங்க. திமுக-காங்கிரஸ்-தேதிமுக கூட்டணிய பத்தி சொல்லுங்க, எத்தன சீட் கிடைக்கும்?
ஜோசப்: கரெக்டா சொல்ல முடியாது. என்னெ கேட்டா இந்த கூட்டணியால அம்மாவுக்கு கிடைக்கப் போற விக்டரி மார்ஜின் வேணும்னா குறையலாம். ஆனா இவங்களுக்கு உருப்படியா இடங்க ஏதாச்சும் கிடைக்குமாங்கறது சந்தேகம்தான். மிஞ்சிப் போனா நாலஞ்சி கிடைக்கலாம். அதையும் நிச்சயமா சொல்ல முடியாது.
ரஹீம்: எனக்கும் அப்படித்தான் தோனுது. முப்பத்தொன்பது சீட்ல முப்பதுக்கு குறையாம அம்மாவுக்கு போயிரும். வைகோ ஜெயிக்க சான்ஸ் இருக்கு. விடுதலை சிறுத்தை சரியான தொகுதியில நின்னா ஜெயிக்கலாம். மீதி மூனு சீட்டு திமுகவுக்கு கிடைக்கும். காங்கிரசுக்கும் தேதிமுகவுக்கும் ஒன்னும் கிடைக்க சான்ஸ் இல்ல. என்ன சொல்றீங்க?
கணேஷ்: (சலிப்புடன்) அடப் போங்கய்யா.... நீங்களும் ஒங்க ப்ரடிக்ஷனும்... பாஜகவுக்கு தமிழ்நாட்லருந்து கிடைக்கற ஒவ்வொரு சீட்டும் நம்ம ஸ்டேட்டுக்கு முக்கியம். ஏன்னா சென்ட்ரல்ல மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ணப் போறது நாங்கதான். இங்க மட்டும் ஒன்னும் கிடைக்காம போச்சி அடுத்த அஞ்சி வருசத்துக்கு நம்மள யாரும் கண்டுக்க மாட்டாங்க. அது இலங்கை விஷயமானாலும் சரி, நம்ம ஃபிஷ்ஷர் மேன் விஷயமானாலும் சரி....
ரஹீம்: (நக்கலாக) அப்படி நடந்தாத்தான?
ஜோசப்: அப்படியே நடந்தாலும் இங்க மேடத்துக்கு கிடைக்கற முப்பது, முப்பத்தஞ்சி சீட்டும் ரொம்ப பெரிய ரோல் ப்ளே பண்ணுங்க. ஏன்னா பாஜகவுக்கு 200 சீட்டுக்கு மேல கிடைக்கறதுக்கு சான்ஸே இல்லேங்கறாங்க. மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ணணும்னா அதிமுகவோட சப்போர்ட் நிச்சயம் வேண்டியிருக்கும். என்ன சொல்றீங்க பாய்?
ரஹீம்: மேடத்துக்கு முப்பது இடங்க கிடைக்கும்கறத ஒத்துக்கறேன். ஆனா நீங்க சொல்றா மாதிரி பிஜேபிக்கு இருநூறு சீட் கிடைக்கும்கறத நா ஒத்துக்க மாட்டேன். 175லருந்து 180க்கு மேல ஒப்பேறாது. அத்தோட அதிமுகவ தவிர வேற எந்த பெரிய கட்சி பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணுங்கறீங்க? தமிழ்நாட்ட விட்டா சொல்லிக்கறளவுக்கு சீட் கையில இருக்கப் போற கட்சிங்கள்ல எஸ்.பி, பி.எஸ்.பி, டிஎம்சி... இவங்கள்லாம் பிஜேபிய சப்போர்ட் பண்ணுவாங்களா என்ன? அப்புறம் பீஹார்ல நித்தீஷ். மோடின்னு பேர் சொன்னாலே கடுப்பாறவர். அகாலிக்கு இந்த தடவ பெருசா ஒன்னும் கிடைக்கப் போறதில்லையாம்.
ஜோசப்: என்ன பாய் ரொம்ப டீப்பாவே அனலைஸ் பண்ணி வச்சிருக்கீங்க போல?
ரஹீம்: (சிரிக்கிறார்) நம்ம கடையில வியாபாரம் நடக்குதோ இல்லையோ வர்றவங்கள்லாம் இதப்பத்தித்தான பேசிக்கிறாங்க? எல்லாம் கேள்வி ஞானம்தான்.
கணேஷ்: யோவ், ரோட்ல போற வர்றவன் சொல்றதையெல்லாம் வச்சிக்கிட்டு பேத்தாத. 225லருந்து 250 சீட்டுக்கு கீழ போறதுக்கு சான்ஸே இல்ல. மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்றதுக்கு சிம்பிள் மெஜாரிட்டி இருந்தாலே போறும். உங்க மேடம் சப்போர்ட்லாம் நமக்கு தேவையே இருக்காது. சிவசேனா சப்போர்ட் மட்டுமே போறும்.
ரஹீம்: இந்த நினைப்புலத்தான கூட்டணியில இருந்த நித்தீஷ கட் பண்ணி விட்டுட்டீங்க?
கணேஷ்: பின்னே? இன்னைக்கி நாடு முழுசும் மோடிய நம்பறத தவிர வேற வழியே இல்லேன்னு பேசிக்கிறாங்க நீங்க என்னடான்னா மேடம் அத செஞ்சிருவாங்க, இத செஞ்சிருவாங்கன்னு பேசிக்கிட்டு....
ஜோசப்: சரி கணேஷ். நீங்க சொல்ற 250 சீட் எங்கருந்தெல்லாம் கிடைக்கும்னு சொல்றீங்க?
கணேஷ்: அதெல்லாம் கரெக்டா சொல்ல முடியாது. ஆனா கிடைக்கும்.
ரஹீம்: (சிரிக்கிறார்) அதான பாத்தேன். எந்த டீட்டெய்லும் இல்லாம மோடி வித்தை காட்ற மாதிரி பேசாதய்யா. இருக்கறதிலயே பெரிய ஸ்டேட்ஸ்ல எதுலயும் உங்களுக்கு பெருசா கிடைக்கப் போறதில்ல. அப்புறம் எப்படி 250னு சொல்றீங்க? சவுத்லருக்கற ஆந்திரா, கர்நாடகா, கேரளா அப்புறம் தமிழ்நாடு/பாண்டியிலருக்கற மொத்த இடங்க 130ல ஒங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்னாவது சொல்ல முடியுமா?
கணேஷ்: (கூரையை பார்க்கிறார்) 50 இல்லன்னா 60 கிடைக்கும்.
ரஹீம்: (சிரிக்கிறார்) யோவ், எங்க வீட்டுக் கூரைய பாக்காத. அது வெறும் ஓடு, ஓட்டு இல்ல. நா சொல்றேன். கர்நாடகாவ தவிர வேற எங்கயும் ஒன்னும் பேறாது. அங்கக் கூட போன தடவ மாதிரி டபுள் டிஜிட்ல கிடைக்காது. நாலஞ்சி கிடைச்சா லாபம். வெஸ்ட்ல மஹாராஷ்டிராவுல ஒங்களுக்கும் சிவசேனாவுக்கும் சேத்து இருக்கற 48 சீட்ல பாதி கிடைக்கலாம். அப்புறம் குஜராத், சட்டீஸ்கர், மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், ஹரியானாவுலருந்து எழுபதுலருந்து எண்பது வரைக்கும் கிடைக்கும். பீஹார், ஒரிசா, பஞ்சாப்லருந்தெல்லாம் ஒரு பத்து பதினைஞ்சி.... கொல்கொத்தாவுலருந்து நாலஞ்சி கிடைச்சா லாபம், உபியில எஸ்.பி, பிஎஸ்பிக்கு கிடைச்சதுபோக ஜாஸ்தி போனா பத்து... எல்லாத்தையும் கூட்டி கழிச்சி பாத்தா 175லருந்து 180 வரைக்கும்தான்.....
கணேஷ்: யோவ், அது மோடி இல்லாமையே கிடைச்சிரும். மோடிதான் பிரைம் மினிஸ்டர் கேன்டிடேட்டுன்னு சொன்னதுக்கப்புறம் பெரிய அலையே வீசுதுய்யா. இதுல மேடம் கட்சிய சேத்து எல்லாமே அடிச்சிக்கிட்டுப் போயிரும். நீங்க வேணா பாருங்க.
மீண்டும் ஜோசப்பும் ரஹீம்பாயும் சிரிக்கின்றனர்.
ஜோசப்: சரிங்க நீங்க சொல்றா மாதிரியே நடக்கட்டும். வேற ஏதாச்சும் பேசுவோம்.
கணேஷ்: (சிரிக்கிறார்) ஒங்க ராஹுல் பேபி ஒரு பேட்டி குடுத்தார அதப் பத்தி பேசலாமா? நா ரெடி.
ஜோசப்: அரசியல பொறுத்தவரைக்கும் ராஹுல் பேபிதான் ஒத்துக்கறேன். ஆனா அன்னைக்கி அவர் சொன்னதுல விஷயம் இல்லாம இல்ல.
கணேஷ்: எது? விஷயமா? நீங்க வேற ஜோசப். அவர் அன்னைக்கி எந்த கேள்விக்கி ஒழுங்கா பதில சொன்னார்? செவிடன் காதுல விழுந்தா மாதிரி கோஸ்வாமி கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே பதிலத்தான சொல்லிக்கிட்டிருந்தார்? நாட்ல இருக்கற எல்லா பொம்பளைங்களையும் எம்பவர் பண்ணப் போறாராம். அத ஏன் இந்த பத்துவருசத்துல செய்யலேன்னு கேட்டா பதில காணம். அத்தோட விட்டாரா? இவர் என்னவோ ஃபாரின்லருந்து வந்து குதிச்சா மாதிரி இங்க நடக்கற எதுவுமே சரியில்ல, நா வந்து எல்லாத்தையும் மாத்தப்போறேங்கறார். எது சரியில்ல, எத மாத்தப்போறேன்னு சொல்லாம..... என்னெ கேட்டா இவருக்கு விஷய ஞானமே இல்லீங்க... இப்படியொரு முக்கியமான இன்டர்வ்யூவுக்கு வர்றவரு எதையுமே ப்ரிப்பேர் பண்ணாம வந்து சொதப்பி இருக்கற கொஞ்ச நஞ்ச பேரையும் ரிப்பேராக்கிட்டு போனதுதான் மிச்சம்.
ஜோசப்: அப்படி ஒரேயடியா சொல்லிற முடியாதுங்க. அவர் சொன்ன நாலு விஷயத்த பத்தி சொல்றேன். கேட்டுட்டு சொல்லுங்க.
ரஹீம்: நாலு விஷயமா? அப்படியென்ன சொன்னார்?
ஜோசப்: 1. அரசியல் கட்சிங்க, ஜுடிஷியரி அப்புறம் மீடியாவையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குள்ள கொண்டு வரணும். 2. குஜராத் கலவரத்துக்கு ஸ்டேட் கவர்ன்மெண்ட் சரியான ஆக்ஷன் எடுக்காததுதான் முக்கிய காரணம். அதனால அப்போ சீஃப் மினிஸ்டரா இருந்த மோடிதான் இதுக்கு பொறுப்பு 3. பார்லிமென்ட், கேபினட் மினிஸ்ட்ரின்னு இருக்கறப்போ ஒரு ப்ரைம் மினிஸ்டர் மட்டும் பெருசா எதையும் செஞ்சிற முடியாது. 4. மோடி சொல்ற மெத்தேட இம்ப்ளிமென்ட் பண்ணா அது அதிகாரம் முழுசையும் ஒரு சின்ன க்ரூப்கிட்ட குடுத்தா மாதிரி ஆயிரும்னு அவர் சொன்னதுல தப்பு ஏதாச்சும் இருக்காங்க?
கணேஷ்: (கோபத்துடன்) என்ன ஜோசப் நீங்களுமா? குஜராத் கலவரத்துல மோடி மேல எந்த தப்பும் இல்லேன்னு இதுக்குன்னு சுப்ரீம் கோர்ட் போட்ட டீமே சொல்லிருச்சி. அவங்க சொன்னதுல தப்பு ஒன்னும் இல்லேன்னு சுப்ரீம் கோர்ட்டும் சொல்லிருச்சி. அதுக்கப்புறமும் இதையே சொல்லிக்கிட்டிருந்தா எப்படின்னு கோஸ்வாமி கேட்டாரே? அதுக்கு ஒங்க தலைவர் என்ன சொன்னார்? கேட்டத வுட்டுப்போட்டு எதை, எதையோ சொல்ல்க்கிட்டிருந்தார். சுப்ரீம் கோர்ட் சொன்னதையெல்லாம் ஏத்துக்க முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதான?
ரஹீம்: யோவ் என்னய்யா பெரியா டீம்? அவனுங்க யார் கிட்ட விசாரிச்சாங்க? கலவரம் நடந்தப்போ அதிகாரத்துல இருந்தவங்கக் கிட்டத்தான? பாதிக்கப்பட்ட யாரையாச்சும் விசாரிச்சாங்களா? எல்லா இடத்துலயும் போலீஸ் இருந்தும் ஒன்னுமே செய்யாம வேடிக்கைப் பாத்துக்கிட்டிருந்தாங்களே அதுக்கு யார்யா பொறுப்பு? ஃபீல்டுல இருக்கற போலீஸ் டீம் அவங்க மேலதிகாரிங்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும் கலவரம் ஜாஸ்தியாய்ட்டே இருக்கு நாங்க என்ன பண்ணணும் சொல்லுங்கன்னு மெசேஜ் மேல மெசேஜா அனுப்பியும் மேலருந்து ஒன்னும் பதிலே வராம இருந்துதுன்னு பேப்பர்ல எல்லாம் போட்டுருந்தானே அது பொய்யா? இவ்வளவு ஏன், மோடியோட டைரக்ட் சூப்பர்விஷன்ல இருந்த போலீஸ் அதிகாரிகளே அவர் சொல்லித்தான் நாங்க செஞ்சோம்னு அஃபிடவிட்லாம் தாக்கல் பண்ணாங்களே அதெல்லாம் பொய்யின்னா அவங்க மேல எதுக்கு இதுவரைக்கும் ஆக்ஷன் எடுக்காம இருக்காங்க? ஒன்னு சொல்றேன் கேளு. அடுத்த எலெக்ஷன்ல பிஜேபி தோக்கணும். மோடி குஜராத் சீஃப் மினிஸ்டர் போஸ்டலருந்து ராஜினாமா பண்ணணும். அதுக்கப்புறம் ஒரு இன்வெஸ்ட்டிகேஷன் நடக்கட்டும். அப்புறம் பாருங்க. ஒவ்வொரு அதிகாரியும் கதறிக்கிட்டு உண்மைய சொல்றத. இதுக்கு பயந்துதானய்யா மோடி இன்னும் கூட அந்த போஸ்டலருந்து ரிசைன் பண்ண மாட்றாரு?
கணேஷ்: (கோபத்துடன்) யோவ் எதையாவது ஒளறாத. சுப்ரீம் கோர்ட்டே அவங்க ரிப்போர்ட்ட படிச்சிட்டு எல்லாம் சரிதான்னு சொல்லியாச்சி....
ஜோசப்: கணேஷ் கோபப்படாதீங்க. ரஹீம் பாய் சொல்றதுலயும் நியாயம் இருக்கு. ஒரு சீஃப் மினிஸ்டர் பதவியில இருக்கறப்பவே அவருக்கு எதிரா எந்த அதிகாரிங்க பேசுவாரு? நியாயமா இவர் மேல அலிகேஷன் வந்தப்பவே இவர் ராஜினாமா செஞ்சிட்டு என்ன இன்வெஸ்ட்டிகேஷன் வேணும்னாலும் செஞ்சிக்குங்கனு சொல்லியிருக்கணும். சரி அப்பத்தான் செய்யல. பி.எம். கேன்டிடேட்டுன்னு அனவுன்ஸ் பண்ணதுக்கப்புறமாவது செஞ்சிருக்கலாம்லே? பாய் சொல்றா மாதிரி அவர் பதவியில இல்லாட்டி எந்த அதிகாரி என்ன விட்னெஸ் குடுப்பாரோங்கற பயத்துலதான் இன்னமும் அந்த போஸ்ட்ல ஒட்டிக்கிட்டுருக்கார். அந்த மாதிரி அதிகாரிங்க சொன்னத வச்சித்தான் சுப்ரீம் கோர்ட் அப்பாய்ன்ட் பண்ண இன்வெஸ்ட்டிகேஷன் டீமும் அவங்க ரிப்போர்ட ப்ரிப்பேர் பண்ணியிருப்பாங்க. அவங்க ரிப்போர்ட்ல டிஃபெக்ட் எதுவும் இல்லேன்னுதான் சுப்ரீம் கோர்ட் சொல்லுதே தவிர மோடி குத்தம் இல்லாதவர்னு சொல்லல. ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.
கணேஷ் சலிப்புடன் எழுந்து நிற்கிறார்: இதுக்கு மேலயும் இங்க இருந்தா எதையாவது எக்குத்தப்பா சொல்லிருவேனோன்னு பயமா இருக்குங்க. நா வரேன்.... அடுத்த வாரம் பாக்கலாம்.
அத்துடன் அவர் எழுந்து அவர்களுடைய பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட ஜோசப்பும் ரஹீம்பாயும் செய்வதறியாது அமர்ந்திருக்கின்றனர்.
********
டீப்பாவே அனலைஸ் பண்ணி வச்சிருக்கீங்க போல - உரையாடலை - தொடரை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
நாட்டு நடப்பு அலசல் சூப்பர்
பதிலளிநீக்குExcellent... Enjoyed
பதிலளிநீக்குWaiting for next week..
பதிலளிநீக்குஎனக்கு வெட்டிப்பேச்சு ரசிக்காது. அதுவும் அரசியல் பற்றியதாயிருந்தால் சொல்லவே வேண்டாம். அரசியலில் கருத்துக்களைக் கூட அடுத்தவர் முகம் பார்த்துத்தான் சொல்லவேண்டும். பல இடங்களில் காழ்ப்புணர்ச்சியை வளர்த்துவிடும் சாத்தியக் கூறுகள் இருக்கிறது. இருந்தாலும் உங்கள் எழுத்துக்களைப் படிக்கிறேன்.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
நாட்டு நடப்பு நிலவரங்களை. நல்ல உரையாடல் மூலம் கூறிய விதம் நன்று..
தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வெட்டிப் பேச்சு என்ற பெயரில் நாட்டில் நடக்கும் உண்மைகளை அப்படியே சொல்லி இருக்கீங்க. நீங்கள் நினைப்பதும் நான் நினைப்பதும் ஒன்றே பொறுத்திருந்து பார்ப்போம்
பதிலளிநீக்குஅலசல் அருமை
Nice and keep it up .....
பதிலளிநீக்குசுவையான பேச்சுதான். தற்போதைய சூழ்நிலையை நன்றாக அலசி இருக்கிரீர்கள்.
பதிலளிநீக்குவெட்டிப் பேச்சு சுவையாக இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை எது எப்படி நடக்கும் என யாராலும் சொல்லமுடியாது. அதுவரை அனுமானங்களின் பேரில் யூகிக்கவேண்டியதுதான்.
பதிலளிநீக்குBlogger திண்டுக்கல் தனபாலன் said...
டீப்பாவே அனலைஸ் பண்ணி வச்சிருக்கீங்க போல - உரையாடலை - தொடரை...
வாழ்த்துக்கள்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
2:35 PM
Delete
Blogger ராஜி said...
நாட்டு நடப்பு அலசல் சூப்பர்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
2:35 PM
Delete
Blogger Thanigai Arasu said...
Excellent... Enjoyed
Waiting for next week..
Thanks Arasu.
2:39 PM
Delete
Blogger G.M Balasubramaniam said...
எனக்கு வெட்டிப்பேச்சு ரசிக்காது. அதுவும் அரசியல் பற்றியதாயிருந்தால் சொல்லவே வேண்டாம். அரசியலில் கருத்துக்களைக் கூட அடுத்தவர் முகம் பார்த்துத்தான் சொல்லவேண்டும். பல இடங்களில் காழ்ப்புணர்ச்சியை வளர்த்துவிடும் சாத்தியக் கூறுகள் இருக்கிறது. இருந்தாலும் உங்கள் எழுத்துக்களைப் படிக்கிறேன்.
உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். வருகைக்கு நன்றி.
4:53 PM
Delete
OpenID 2008rupan said...
வணக்கம்
ஐயா.
நாட்டு நடப்பு நிலவரங்களை. நல்ல உரையாடல் மூலம் கூறிய விதம் நன்று..
தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//
நன்றி ரூபன்.
6:26 PM
Delete
Blogger Avargal Unmaigal said...
வெட்டிப் பேச்சு என்ற பெயரில் நாட்டில் நடக்கும் உண்மைகளை அப்படியே சொல்லி இருக்கீங்க. நீங்கள் நினைப்பதும் நான் நினைப்பதும் ஒன்றே //
Great men think alikeஎனு சும்மாவா சொன்னாங்க. :)
வ
6:35 PM
Delete
Blogger J. ANTONY RAJA said...
Nice and keep it up ..... //
Thanks Mr. Antony.
9:35 PM
Delete
Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...//
சுவையான பேச்சுதான். தற்போதைய சூழ்நிலையை நன்றாக அலசி இருக்கிரீர்கள்.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
8:03 AM
Delete
Blogger வே.நடனசபாபதி said...
வெட்டிப் பேச்சு சுவையாக இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை எது எப்படி நடக்கும் என யாராலும் சொல்லமுடியாது//
உண்மைதான். இது எல்லாமே ஊகம்தான். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நல்ல கலந்துரையாடல்.....
பதிலளிநீக்குஇந்த வருட தேர்தலில் என்ன நடக்கிறது என எனக்கும் ஆர்வம்.... பார்க்கலாம்.
எனக்கு ஒரு கேள்வி. பதிவுலகில் பொதுவாக எழுதுபவர்கள் மோடியை எதிர்த்து எழுதுவதைத் தான் அதிகம் படிக்கிறேன். ஆனால் சில பதிவர்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்பது போன்ற ‘ஓட்டுப் பெட்டி’ வைத்த போது மோடிக்கு ‘அமோக’ வெற்றி இருப்பது கண்டு வியந்தேன்.
பதிலளிநீக்குஇதில் எது சரி?
பதிவுலகில் பொதுவாக எழுதுபவர்கள் மோடியை எதிர்த்து எழுதுவதைத் தான் அதிகம் படிக்கிறேன். ஆனால் சில பதிவர்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்பது போன்ற ‘ஓட்டுப் பெட்டி’ வைத்த போது மோடிக்கு ‘அமோக’ வெற்றி இருப்பது கண்டு வியந்தேன்.//
பதிலளிநீக்குஇணையதளங்களில் ஓட்டு இடுபவர்களில் எத்தனை பேர் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பார்கள் என்று கணக்குப் போட்டு பாருங்கள். மிஞ்சிப் போனால் பத்து சதவிகிதம் இருக்கும். இவர்களுடைய ஓட்டு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது என்னுடைய கருத்து.