பணமும் பலாத்காரமும் தேர்தல்களில் மட்டும் வெற்றிபெற உதவுவதில்லை. அரசியலை பணம் பண்ணும் தொழிலாகவும் மாற்ற உதவுகிறது.
உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு கிரிமினல் குற்றங்களில் சிறை சென்றவர்கள் நாட்டில் நடைபெறவிருக்கும் எந்த தேர்தல்களிலும் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுவார்கள் என்று தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம்.
நாட்டை ஆளும் நம் தலைவர்கள் எந்த அளவுக்கு செல்வந்தர்களாக, கிரிமினல்களாக உள்ளனர் என்பதை சமீபத்தில் வெளியாகியுள்ள கணிப்பு ஒன்று மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த ஆய்வின்படி கடந்த பத்து ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் மனுக்களுடன் சமர்ப்பித்த சொத்து விவரங்களின்படி அவர்களுள் 62,847 பேருடையை சராசரி சொத்து மதிப்பு சுமார் 1.37 கோடி!
ஆனால் அவர்களுள் ஏற்கனவே தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களுடைய சராசரி சொத்து மதிப்பு ரூ.3.83 கோடி!
இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல்: இவர்களுள் ஆள் கடத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களுடைய சொத்து மதிப்பு சராசரியாக ரூ.4.38 கோடி!
அரசியல் மற்றும் க்ரிமினல் குற்றங்கள் மூலம் கோடிகளை சம்பாதிக்கும் இத்தகைய வேட்பாளர்கள் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை பெறுவதிலும் முன்னிலை வகிக்கின்றனர் என்பதும் உண்மை.
சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்ட தமிழ் திரைப்படம் ஒன்றில் நேர்மையுடன் செயல்படும் அமைச்சரைவிட தன் தந்தையிடமே கடத்தல் நாடகம் ஆடி பணத்தை கொள்ளையடிக்கும் அவருடைய மகனுக்கு கட்சித் தலைவரும் முதல்வருமானவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதுபோன்ற ஒரு காட்சி வைக்கபட்டிருந்தது.
நிஜ வாழ்க்கையிலும் அதுதான் நடக்கிறது என்கிறது இந்த ஆய்வு. நேர்மையாளர்கள் என்று பெயரெடுத்த வேட்பாளர்களை விட கிரிமினல்கள் என்ற குற்றத்தை சுமந்துக்கொண்டிருப்பவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறதாம்!
2004ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட 62,847 வேட்பாளர்களில் 11,063 வேட்பாளர்கள் (18%) ஏற்கனவே கிரிமினல் வழக்குகளில் சம்மந்தப்பட்டிருந்தவர்கள். இவர்களுள் 5,253 வேட்பாளர்கள் (8%) கொலை, கொள்ளை போன்ற பயங்கர வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்கிறது இந்த ஆய்வு.
அதுமட்டுமல்ல. இவர்களுள் 4182 வேட்பாளர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்களை ஆய்வு செய்தபோது இவர்களுள் 1072 வேட்பாளர்கள் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டபோதே அவர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தன என்றும் இவர்களுள் 788 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டபோதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்களுடைய முழு குற்றப் பின்னணியும் தெரிந்திருந்தும் இவர்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர்கள் சார்ந்திருந்த கட்சிகளால் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதும் தெளிவாகிறது.
மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர்களுடைய சொத்து மதிப்பு முன்பிருந்ததை விட பலமடங்கு அதிகரித்துள்ளதாம்!
மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்ட 4181 வேட்பாளர்களில் 3173 வேட்பாளர்களுடைய சொத்து மதிப்பு சராசரியாக 2.34 கோடி உயர்ந்துள்ளதாம். அதில் கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமந்துக்கொண்டிருப்பவர்களுடைய சொத்து மதிப்பு இரண்டு மடங்கும் 684 பேர்களுடைய சொத்து மதிப்பு ஐந்து மடங்கும் 317 பேர்களுடைய சொத்து மதிப்பு சுமார் பத்து மடங்கும் அதிகரித்துள்ளதாம்! (ஆச்சரியக் குறி போட்டு போட்டு கை அலுத்துருச்சிங்க.... ஆய்வு முடிவுகள் அனைத்துமே ஆச்சரியம் மட்டுமல்லாமல் அதிர்ச்சியும் அளிக்கின்றன என்றால் மிகையாகாது)
இத்தகையோரை மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதித்த கட்சிகள் எவை என்று தெரிய வேண்டுமா?
இதோ பட்டியல்:
சிவசேனா: 2004லிருந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுள் 75% பேர் க்ரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.
RJD: 46%
JD: 44%
BJP: 31%
Cong: 22%
அங்கிங்கெனாதபடி அனைத்துக் கட்சிகளிலும் நிறைந்திருக்கும் கிரிமினல்களுக்கு எதிராக வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வரை இவர்களை சட்டம் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனம்.
வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் மனுக்களுடன் சொத்து பட்டியலை மட்டுமல்லாமல் தங்களுக்கு எதிராக நிரூபணமான மற்றும் நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்குகளைப் பற்றிய பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தால் சட்டம் அவர்களை தண்டிக்காவிட்டாலும் மக்கள் அவர்களை இணம் கண்டுக்கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காமல் நிராகரிக்க முடியும்.
செய்யுமா தேர்தல் ஆணையம்?