13 பிப்ரவரி 2013

யூதரும் இஸ்லாமியர்களும் 2

இஸ்ரவேல் மக்களுக்கு தாங்கள் கடவுளால் தெரிவு செய்யப்பட்ட இனம் (chosen people of God) என்ற எண்ணம் இருக்கிறது.  ஏன், மமதை என்றும் கூட கூறலாம். உலகெங்கும் வசிக்கும் யூத இன மக்களுக்கு இஸ்ரவேல்தான் தாங்கள் சென்று சேர வேண்டிய இடம் (Destined Homeland) என்ற எண்ணமும் உண்டு. 1948ம் ஆண்டு தன்னை தனி நாடாக இஸ்ரவேல் பிரகடனப்படுத்திக்கொண்டதிலிருந்து உலகெங்குமுள்ள யூதர்கள் தங்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட, தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடும், ஜெருசலேம் நகரைத் தலைநகரமாகக் கொண்ட புனித பூமிக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். புதிதாக இஸ்ரவேல் நாட்டிற்குள் நுழையும் யூதர்கள் அங்கே தங்களுக்கு எத்தகைய வரவேற்பு அளிக்கப்பட்டாலும் தங்களுடைய வாழ்க்கைத் தரத்தில் எத்தனை சரிவு ஏற்பட்டாலும் வாக்களிக்கப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம் என்ற மனநிறைவு தங்களுக்கு இருப்பதாக கருதுகின்றனர்.

அன்று கடவுள் ஆபிரகாமுக்கு வாக்களித்ததுபோல் யூத இனம் கடல் மணல் போல் பலுகிப் பெருகத்தான் செய்தது. இன்று யூதர்கள் இல்லாத கண்டமே உலகில் இல்லை என்று கூறலாம், ஆசியா உட்பட. அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய ஆதிக்கம் இல்லாத துறையும் இல்லை என்று கூறும் அளவுக்கு அவர்கள் தங்களுடைய புத்திக் கூர்மையாலும், கடின உழைப்பாலும் அதைவிட அதிகமாக, சாதுரியத்தாலும் உலகையே ஒரு சமயம் ஆட்டிப்படைத்துள்ளனர். ஜெர்மானியில் அவர்களுடைய அதீதமான ஆதிக்கத்தால் தன்னுடைய ஆரிய இனம் அழிந்துவிடும் தருவாயில் இருந்தது என்பதை உணர்ந்துதான் ஹிட்லர் அவர்களை உலகிலிருந்தே அழித்துவிடும் நோக்குடன் அவன் படையெடுத்து வெற்றி கண்ட அனைத்து நாடுகளிலிருந்தும் அவர்களை தனியே பிரித்து முகாம்களில் அடைத்து கொடுமைப் படுத்தி கொலை செய்தான். இரண்டாம் உலகப் போர் வெற்றிக்குப் பிறகு ஜெர்மானியை ஆக்கிரமித்திருந்த அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்ய நாடுகள் அப்போது ஜெர்மானியின் பிடியிலிருந்த தலைசிறந்த யூத விஞ்ஞானிகளை தங்களுடைய நாடுகளுக்கு சிறைபிடித்துச் சென்றதன் விளைவுதான் அந்த நாடுகள் அறிவியலில் வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டன என்பதும் உண்மை.

யூத மக்களுக்கும் அவர்களைச் சுற்றிலும் அமைந்திருந்த எகிப்து, ஜோர்தான், சிரியா, ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வசித்து வந்த இஸ்லாமியர்களுக்கும் 19ம் நூற்றாண்டிலிருந்தே சுமூகமான உறவு இருந்ததில்லை. குறிப்பாக யூதர்களுடன் ஒரு சிறிய வால் போன்ற நாட்டைப் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் கணக்கிட முடியாத சண்டைகள், சச்சரவுகள் என இன்றும் தொடர்ந்துக்கொண்டுதான் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரவேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேம் இஸ்லாமியர்களின் பல புனித ஸ்தலங்களைக் கொண்டுள்ளது. ஆகவே ஜெருசலேமை ஒரு பொது நகரமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பாலஸ்தீனர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களைச் சுற்றிலும் அமைந்துள்ள இஸ்லாமிய நாடுகளுக்கும் உண்டு. ஆகவே இஸ்ரவேல் தன்னை தனி நாடாக பிரகடனப்படுத்தி ஏறத்தாழ எழுபது ஆண்டுகள் ஆகியும் இன்றும் அது பல இஸ்லாமிய நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

யூத மன்னர்களுள் மிகவும் பிரசித்திபெற்ற சாலமோன் அரசரிடம் கடவுள் உனக்கு செல்வம் வேண்டுமா விவேகம் வேண்டுமா (ஞானம்) என கேட்டதாகவும் சாலமோன் எனக்கு செல்வம் வேண்டாம் விவேகமே போதும் என்றாராம். ஆகவேதான் அவரை சாலமோன் அரசர் என்பதைவிட சாலமோன் ஞானி என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். ஆபிரகாமின் அதிமிகு விவேகம் அவருக்கு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தையும் அளப்பரிய முடியாத செல்வத்தையும் ஈட்டு தந்தது என்றும் பைபிள் கூறுகிறது.

சாலமோன் வேண்டாம் என்று மறுதலித்த செல்வம் ஆபிரகாமின் மற்றுமொரு மகன் இஸ்மயேலின் சந்ததியினருக்கு அருளப்பட்டது என்றும் ஒரு கூற்று உண்டு. அதுதான் எண்ணெய் கிணறுகளாக அரபு நாடெங்கும் முளைத்தன. விவேகம் இருக்கும் இடத்தில் செல்வம் இருக்கும் ஆனால் செல்வம் இருக்கும் இடத்தில் விவேகம் இருக்க வாய்ப்பில்லை என்னும் கூற்றை இஸ்ரவேலுடனான பல மோதல்களில் அரபு நாடுகள் நிரூபித்தன. அரபு நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து நின்று இஸ்ரவேல் நாட்டை எதிர்கொண்டதில்லை. அவர்களிடைய ஒற்றுமையில்லாததும் அவற்றுள் பெரிய நாடாக கருதப்படும் சவுதி அரேபியாவுக்கு தங்களுடைய எண்ணெய் உற்பத்தி பெருக்க அமெரிக்க தொழில்நுட்பம் இல்லாமல் முடியாது என்ற எண்ணமும் இதற்குக் காரணம்.

இஸ்ரவேலை நேரடியாக எதிர்கொண்டு வெற்றிகொள்ள முடியாத பல இஸ்லாமிய நாடுகள் பலவும் மறைமுகமாக இஸ்லாமிய போராளிகளுக்கு உதவுவதுதான் இன்றைய இஸ்லாமிய ஜிகாதிசம் பெருகி வர முக்கிய காரணம். இஸ்ரவேலின் மிக முக்கிய ஆதரவாளர்களான அமெரிக்காவை அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தால் அது இஸ்ரவேலை ஆதரிப்பதை நிறுத்திக்கொள்ளும் என்பது ஜிகாதியர்களின் தவறான எண்ணமும் இத்தகைய மறைமுக தாக்குதல்களுக்கு முக்கிய காரணம்.

இது அடிப்படையில் ஒரு பங்காளி சண்டை. ஆகவே இது இன்றோ அல்லது நாளையோ ஓய்ந்துவிடப் போவதில்லை என்பது உறுதி.

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு இந்தியா மீதுள்ள கோபம் அமெரிக்காவுடன் இந்தியா கொண்டுள்ள நட்பு ஒரு காரணம் என்றாலும் இந்துத்வா தீவிரவாதிகளின் மூடச் செயல்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இதற்கு காஷ்மீர்தான் முக்கிய பிரச்சினை என்று பாகிஸ்தான் தொடர்ந்து வாதிட்டாலும் அதுவல்ல முக்கிய காரணம்.

இதைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். இது போதும் என்று கருதுவதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

**********



6 கருத்துகள்:

  1. மிக அருமையான ஆழமான விளக்கம். இதை இவ்வளவு சுருக்கமாய் நிறுத்தியத்துதான் அழகு. இல்லாவிடில் உங்கள் தளாம் அதகளம் ஆகியிருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. உங்களுடைய வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அகலிகன்.

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும்[ஸ்தோத்திரம்] சகோ,

    கிறித்தவ யூத பார்வையில் எழுதப் பட்ட பதிவு என்பதால், குரான் வழி நடக்கும் காஃபிர் என்ற முறையில் பதிவுக்கு கண்டனம்.

    குரான் முந்தைய வேதங்களுக்கு பதிலாக வந்த ஒரே வேதம் என்பதும் முகமது(சல்) அவர்களே இறைதூதர் என ஏற்காத எவரும் காஃபிரே!!

    நான் முகமது(சல்) ஐ, குரான் ஐ ஏற்றாலும் அல்லாஹ் என்னும் ஏக இறைவனை மறுப்பதால் காஃபிர் ஆகிறேன்!!
    **
    இப்ராஹிம்(ரலி) அவர்களின் பெயரை ஆபிரஹாம் என மாற்றிக் கூறுவது ஏன்?

    சுலைமான்(ரலி) அவர்களை சாலமன் என மாற்றிக் கூறுவது ஏன்?

    ஈசா(அலை) அவர்களின் பெயரையும் இயேசு,ஜீசஸ் என மாற்றி மாறி கூறும் போதே உங்கள் பொய் வெளிப்படுகிறது.

    எந்த மொழியாக இருந்தால் முகமது(சல்) அதே பெயரே!!

    இதுவே இஸ்லாமே சரியான மார்க்கம், கிறித்தவ யூத வேதங்கள் மாற்றப் பட்டன என்பதன் நிரூபணம்!!
    **

    மறுமையில் ஈசா(அலை) வந்து என்னை வணங்க சொன்னேனா என் உங்களைக் கேட்கும் போது நாங்கள் நகைப்போம்!!

    http://suvanathendral.com/portal/?p=24

    “நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ‘என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன் அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும்)” (அல் குஆன் 5:117)
    **
    யூதர்களை அல்லாஹ் வெறுக்கிறார் எனவே குரான் கூறுகிறது. அப்படி இருக்கும் போது எப்படி மூமின்கள் நேசிக்க‌ முடியும்?
    9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?

    உஜைர்(ரலி) அவர்களையும் எஸ்ரா என பேர் மாற்றுவதும் சதியே!!

    அப்படி யூதர்களை அல்லாஹ் வெறுப்பது அறிந்து அனைத்து யூதர்களும் அன்பு,அமைதி வழியில் ஏக இறைவனின் உத்த்ம மார்க்கத்தில் சேர்ந்து விடார்கள் என்பதை மறைப்பது ஏன்?

    சவுதி அரசர் இபின் சவுத் வம்சமே அவர்களே யூத வம்சத்து மூமின் என்பதையும் நினைவு படுத்துகிறேன்!!

    இஸ்ரேலில் இருக்கும் போலி யூதர்கள் அனைவருமே ,இரஷ்ய,ஐரோப்பியர்கள்
    இஸ்லாத்தை ஒழிக்க இஸ்ரேலில் வந்து குடியேறி அப்பாவி மூமின்களை துன்புறுத்துகின்றனர்.

    ஆகவே இஸ்ரேலில் உள்ள போலி யூதர்கள் ,உண்மையான யூத வம்சத்து மூமின்கள் பாலஸ்தீனர்களிடம் கொடுத்து விட்டு ஓடி விடலாம்.இல்லையேல் ஏக இறைவனின் மார்க்கத்தில் இணைந்து விட்டு ,கொல்வதென்றால் ஷியா,அகம்தியா,..பிரிவு மூமின்களை போட்டுத் தள்ளலாம்

    ஆகவே ஏக இறைவனின் மார்க்கத்தில் அலை அலையாக இணைந்து இம்மையில் இன்பமும், மறுமையில் சுவனம் பெற யூத ,கிறித்த,இந்து காஃபிர்களை அன்போடு அழைக்கிறோம்!!

    இஸ்மவேல்(ரலி) அவர்களே இப்ராஹிம் (ரலி) அவர்களால் பலியிட முயற்சி செய்யப்பட்ட மகன்!!. அவரை கிண்டல் செய்த நசரியா காஃபிர் இராபினுக்கு கடும் கண்டனம்

    மார்க்கம் குறித்த விள்க்கங்களை ஆஃப்லைன் ஜே.பி.கோம் ல் கேட்கலாம்!!
    டொட்டய்ங்!!

    நன்றி!!

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யமான நடை. இன்னும் தொடர்ந்திருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  5. சுவாரஸ்யமான நடை. இன்னும் தொடர்ந்திருக்கலாம்..//

    தொடர ஆசைதான். ஆனால் அது சில விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் நிறுத்திக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  6. கிறித்தவ யூத பார்வையில் எழுதப் பட்ட பதிவு என்பதால்.../

    இது ஒரு கத்தோலிக்க கிற்ஸ்த்தவ பார்வையில் என்று இருக்க வேண்டும்..

    நான் யூதனோ அல்லது யூத மதம் உயர்ந்தது என்றோ கருதுபவன் அல்ல.

    ஆபிரகாமும் இப்ராஹிமும் ஒன்றுதான். பைபிளில் ஆபிரகாம், குரானில் இப்ராஹிம்... அவ்வளவுதான் வித்தியாசம்.

    மற்றபடி உங்களுடைய கருத்தை எதிர்த்து சொல்ல ஒன்றுமில்லை.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு