17 ஆகஸ்ட் 2010

பின்னூட்ட மோகமும் வாசகர் பரிந்துரையும்

சாதாரணமாக இத்தகைய விஷயங்களைப் பற்றி நான் அதிகம் எழுதுவதில்லை.

ஆனால் சமீபகாலமாக வாசகர் பரிந்துரை பட்டியலில் தினமும் தரிசனம் தரும் சில பதிவர்களின் இடுகைகளை வாசித்துவிட்டு இனியும் வாளாவிருப்பது நல்லதல்ல என கருதியதால் இந்த இடுகை.

கடந்த சில நாட்களாகவே இந்த பட்டியலில் வரும் அனைத்து இடுகைகளையும் தவறாமல் வாசித்ததில் நான் கண்டது இது ஒரு வடிகட்டின அயோக்கியதனம் என்பதுதான்.

அதுவும் ஒரு வங்கியில் பணியாற்றும் பதிவர் ஒருவர் கடந்த வாரம் எழுதிய இடுகைகளில் எதுவுமே இந்த பட்டியலில் வர தகுதியற்றவை என்பது என் கருத்து.

ஒருவேளை அவர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களை தன்னுடைய தினசரி இடுகைக்கு ஓட்டளிக்க வைக்கின்றாரோ என்று கூட கருத தோன்றுகிறது!

இன்னும் சில பதிவர்களைப் பற்றி கூற வேண்டுமென்றால் ஓட்டுக்கு காசு என்கிற அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை.

ஓரிரண்டு பின்னூட்டங்கள் கூட இல்லாத பதிவுகள் எப்படி இந்த பரிந்துரை பட்டியலில் இடம் பெற முடிகிறது? அதிசயம்தான்.

வெட்கக்கேடு.

தமிழ்மணத்தின் செயல்பாடுகளையே ஒருசிலர் கேலிக்கு உள்ளாக்குகின்றனர் என்பதை நிர்வாகம் உணர்ந்து இந்த பட்டியலையே முகப்பிலிருந்து என்று நீக்குமோ அன்றுதான் தமிழ்மணத்திற்கு விடிவுகாலம்.

6 கருத்துகள்:

 1. விடுங்க பாஸ், பதிவர் வட்டம்னாலே அப்படி தானே!

  பதிலளிநீக்கு
 2. வாங்க வால்பையன்,

  பதிவர் வட்டம்னாலே அப்படி தானே!//

  அதாவது ஒருசில பதிவர்களை மட்டுமே சுற்றி வரும் வட்டம் அப்படித்தானே. என்றாலும் அந்த வட்டத்திற்குள் ஒரு சில தேர்ந்த பதிவர்களையாவது நுழைய அனுமதிக்கலாமே. பெரும்பாலானவை வெத்துவேட்டாக இருந்தால் எப்படி?

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவுகள் இந்த பித்தலாட்டத்தை தாண்டியும் தனித்து நிற்கும் வெற்றி பெரும்..

  குறை குடங்கள் கூத்தாடிவிட்டு போகட்டும் .. அதைகுறித்து அதிகம் வருந்தவேண்டாமே...

  இணைய உலகம் மிக பெரிது...:)

  பதிலளிநீக்கு
 4. வாங்க புன்னகை தேசம்,

  நல்ல பதிவுகள் இந்த பித்தலாட்டத்தை தாண்டியும் தனித்து நிற்கும் வெற்றி பெரும்..//

  ஒப்புக்கொள்கிறேன்.

  குறை குடங்கள் கூத்தாடிவிட்டு போகட்டும் .. அதைகுறித்து அதிகம் வருந்தவேண்டாமே...//

  நானும் அப்படித்தான் நினைத்து இதுவரை இதைப்பற்றி எழுதாமல் இருந்தேன். ஆனால் இது எல்லை மீறி செல்கிறது என கருதுகிறேன். தடியெடுத்தவன் எல்லாம் தலலவன்ன் என்பதுபோல் எனக்கு ஆள்பலம் இருந்தால் போதும் என்று நினைத்து கண்ட குப்பையையும் பரிந்துரை பட்டியலில் வரச் செய்தால் எப்படி?

  இணைய உலகம் மிக பெரிது...//

  ஆனால் தமிழ்'மணம்' மிகவும் குறுகியது:((

  பதிலளிநீக்கு
 5. பரிந்துரைக்காக இப்படியெல்லாம் செய்யணுமா ச்சீ தூ இதெல்லாம் ஓரு பிழைப்புன்னு போட்டுட்டு போங்க சார்....

  இப்பல்லாம் புரட்சியும் புண்ணாக்கும் பரிந்துரையிலும், மகுடத்திலும்தான் ஒளிந்திருந்திருக்கிறது அய்யா...

  பதிலளிநீக்கு
 6. நீங்க சொல்வது உண்மை தான்..ஆனால் மாற்ற முடியாது :-(

  பதிலளிநீக்கு