16 ஏப்ரல் 2008

தடுமாறுகிறாரா மு.க?

காங்கிரஸ் கோமாளி அர்ஜுன் சிங்கைப் பற்றியும் அவருடைய இந்திராகாந்தி குடும்ப விசுவாசத்தைப் பற்றியும் நாடே அறியும்.

பல வருடங்களாகவே இ.காந்தி குடும்பத்தினரை அரசு தலைமைப் பதவிகளில் அமர்த்துவது என்ற ஒரே குறிக்கோளுடன் செயலாற்றி வருபவர் அவர். அவர் வேண்டுமானால் ராஹுல் காந்தியையோ அல்லது பிரியங்காவையோ நாட்டின் அடுத்த பிரதமராக கற்பித்துக்கொள்ளட்டும்.

நாட்டிலுள்ள காங்கிரஸ் அல்லாத தலைவர்களுள் எவரும் அர்ஜுன் சிங்கின் இந்த முட்டாள்தனமான ஆலோசனையைப் பொருட்படுத்தவே இல்லை.

ஆனால் மு.க? அதை வழிமொழிந்திருக்கிறார்.

இன்றைய தினம் காங்கிரசே அர்ஜுன்சிங்கின் இந்த பரிந்துரையில் கட்சிக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்று அறிவித்துவிட்டது.

ஏற்கனவே ஹொகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சோனியா காந்தி அவர்களுடைய அறிவுரையால்தான் நீங்கள் தள்ளி வைத்தீர்கள் என்று நாவடக்கம் இல்லாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் போட்டு உடைத்தார்.

அந்த விவகாரமே இன்னும் சூடு ஆறாத நிலையில் இப்படியொரு கோமாளித்தனமான பேச்சு உங்களிடமிருந்து.

மு.க., உங்களுக்கு இது தேவைதானா?

5 கருத்துகள்:

  1. Arjun Singh is neither sincere not Gandhi family loyalist. Pls see :

    http://www.hindu.com/2008/04/16/stories/2008041660801200.htm

    பதிலளிநீக்கு
  2. வாங்க அதியமான்,

    ஹிந்து சொல்வதும் உண்மைதான். ஒருவேளை அவர் வேண்டுமென்றே இதை செய்கிறாரோ?

    முன்பு இப்படித்தான் சோனியா பிரதமராகவேண்டும் என்று சொல்லி சொல்லி அவரை பிரதமராக வரவிடாமல் செய்தார்.

    அவர் எப்படியோ போகட்டும். மு.க எதற்கு இதில் தலையிட்டு மூக்கை உடைத்துக்கொண்டார்.

    த.நா.வில் இல்லாத பிரச்சினையா? அதை விட்டுவிட்டு..

    பதிலளிநீக்கு
  3. //நாட்டிலுள்ள காங்கிரஸ் அல்லாத தலைவர்களுள் எவரும் அர்ஜுன் சிங்கின் இந்த முட்டாள்தனமான ஆலோசனையைப் பொருட்படுத்தவே இல்லை.

    ஆனால் மு.க? அதை வழிமொழிந்திருக்கிறார்.//

    ஐயா,

    காங்கிரசின் கொள்கையை திமுக பின்பற்றுதே, வழிமொழியாமல் இருக்க முடியுமா ?

    என்ன கொள்கையா ?
    வாரிசு அரசியல் !
    :)

    பதிலளிநீக்கு
  4. அரசியலுக்கு வந்திட்டீங்க போல.

    பதிலளிநீக்கு