நம்முடைய அதிரடி நாயகன், அரசியல் தலைவர் விஜயகாந்த் அவர்கள் இந்த வார ஆனந்தவிகடனில் ஒரு அதிரடி (அடாவடி என்பதுதான் சரி) பேட்டி அளித்திருக்கிறார்.
அதிலிருந்து சில அடாவடிகள் மட்டும்...
அவருடைய திருமண மண்டபத்தை அரசு ஏற்றுக்கொண்டதைப் பற்றிய கேள்விக்கு பதில்:
"வேர்வை சிந்திச் சேர்த்த காசு. சில பேரு மாதிரி ஊரை அடிச்சு, உலையில போட்டுச் சம்பாதிச்சதில்லை. ஊழல் பண்ணி சேர்க்கலை. கடன்பட்டு, கஷ்டப்பட்டுக் கட்டி முடிச்ச மண்டபம்."
அப்படியா? அப்படியானால் அதே பகுதியில் தங்களுடைய வீடுகளையும், கடைகளையும் இழந்தவர்கள் ஊழல் செய்து, ஊரை ஏமாற்றி சம்பாதித்தார்கள் என்று சொல்கிறீர்களா? ஏதோ தானமாக கொடுத்துவிட்டத்தைப் போன்று அங்கலாய்க்கிறீர்களே? இழப்பீடு பெற்றுக்கொண்டுதானே கொடுத்தீர்கள்? அதில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு மட்டுமல்ல அந்த பகுதியில் இருந்த அனைவருக்குமேதான்.
ஆனால் சட்டப்படித்தானே நடக்குது என்று கேள்வி கேட்கப்படுகிறது.
"அப்படி நடந்தாத்தான் சந்தோஷப்படுவேனே" என்கிறார்.
அப்ப எதுக்கு உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்றீர்கள்? சட்டப்படித்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, உங்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடையும் வரை நீங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை என்ற கேள்வி உங்கள் முன் உச்சநீதிமன்றம் வைத்ததே?
"நான் மாற்றுத் திட்டம் கொடுத்தேன்.. ஆனால் வேண்டுமென்றே ஏற்றுக்கொள்ளப்படவில்லை."
அதாவது அரசு திட்டங்கள் உங்களுடைய சவுகரியத்தைப் பொருத்து மாற்றப்படவில்லை என்கிறீர்கள். அப்படி பாதிக்கப்பட்ட வேறு யாராவது இப்படியொரு திட்டத்தை தர முன்வைத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களுடைய கோரிக்கை மட்டும் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்..
"இங்கே நடந்தது அதிகார துஷ்பிரயோகம். இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். கிரிமினல் அரசியல்னா என்னன்னு எனக்கு கத்துக்குடுத்தீட்டீங்க. அதை வெச்சே என்னாலேயும் திருப்பியடிக்க முடியும்."
உங்களுக்கு கிரிமினல் அரசியல் கத்துக்கொடுத்தது யார் சார்? தி.மு.கவா? இல்லை வேறு எந்த கட்சியுமா? அதே வச்சே திருப்பியடிச்சிருவீங்களா? அதாவது ஆளும் கட்சியினருடைய சொத்துக்களை இடித்து தள்ளுவீர்கள் என்கிறீர்களா? அல்லது ஆட்களையே இடித்து தள்ளிவிடுவேன் என்கிறீர்களா? அதையாவது நீங்களே செய்வீர்களா அல்லது சினிமா பாணியில் டூப் போட்டு செய்வீர்களா?
அரசியலுக்கு வந்து ஐந்து வருடங்கள் கூட ஆகவில்லை... ஐம்பதாண்டுகாலம் சட்டமன்ற அனுபவஸ்தரை மிரட்டுகிறீர்கள்...
உங்களையெல்லாம் ஆட்சியில் அமர்த்தினால்.... மக்களுக்கு இது தேவைதான்...
அடக்கி வாசிங்க சார்... அப்பத்தான் அரசியல்ல நிலைச்சி நிக்க முடியும்...
பேட்டி முழுவதுமே பேத்தல்தான்... ஒரு முதிர்ச்சியற்ற மனிதரின் பிதற்றல்கள்...
ஜோசப் சார்...பேத்துறதுக்கு முதிர்ச்சி தேவையில்லை..இருக்குறவன்..இல்லாதவன்...முதிர்ந்துக்கிட்டேயிருக்குறவன் எல்லாரும் பேத்தலாம். அதுதான் இப்போதைய தமிழக அரசியல். உண்மையச் சொன்னா வெறுத்துப் போச்சு சார்.
பதிலளிநீக்குபோட்டு தாக்கு !
பதிலளிநீக்குவாங்க ராகவன்,
பதிலளிநீக்குஇல்லாதவன்...முதிர்ந்துக்கிட்டேயிருக்குறவன் எல்லாரும் பேத்தலாம். அதுதான் இப்போதைய தமிழக அரசியல். //
உண்மைதான் போலருக்கு...
வாங்க சுந்தர்,
பதிலளிநீக்குபோட்டு தாக்கு ! //
மொதல்ல எனக்கு போட்டு தள்ளுன்னு தெரிஞ்சிது:-)
விஜய காந்த் பேசியது இந்த விசயத்தில் நடந்து கொண்டது தவறுதான் என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் இது மிரட்டல் தான் என்பதை விவாதிக்காமல் எல்லோரும் ஒத்துக்கொள்வார்கள்! அந்த கவலை விஜயகாந்திற்க்கு வந்திருக்கிறது. வெளிபடுத்துவதில் தவறு செய்கிறார்!
பதிலளிநீக்குஜோசம் சார்
பதிலளிநீக்குபோர இடம் எல்லாம் இவரு அழுவாச்சி தாங்க முடியிலிங்க,
http://kusumbuonly.blogspot.com/2007/05/blog-post_24.html
இந்த பதிவ பாருங்க,
நாம எல்லாரும் சாதாரணமா அவரு கல்யாண மண்டபம் இடிப்ப
பத்தி கிண்டல் பண்றேம், நிஜமா முட்ட உடுற கோழிக்குதான். Back ஏரிச்சல்
தெரியும் என்று சொல்லுவாங்க...அதுபோல நினைச்சுகிட்டு இவர விட்டுவிடுவோம்.
அன்புடன்
குசும்பன்
Vijakanth has been importing palm oil from Malaysia for long time and
பதிலளிநீக்குi heard from a cutoms officer that he was into large scale maniulation and evasion of duties.
even managed to transfer a tough officer who caught him. and his party men are money and power hunger and none of them can be deemed to be honest and clean ; if they come to power they will certainly try to 're-earn' the money they have spent so far. hence the public need not be fooled into beliving that he is the "ramana' of the films.
he is a cheap populist who promised that rations will be door delivered !!!
பேட்டி முழுவதுமே பேத்தல்தான்... ஒரு முதிர்ச்சியற்ற மனிதரின் பிதற்றல்கள்...
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது தான் உண்மை .....
//நான் மாற்றுத் திட்டம் கொடுத்தேன்.. ஆனால் வேண்டுமென்றே ஏற்றுக்கொள்ளப்படவில்லை//
பதிலளிநீக்குமத்திய அரசு குழு அமைத்து தீட்டிய திட்டத்துக்கு சமமானதா இவருடைய மாற்று திட்டம். சினிமாவில் காஷ்மீர் தீவிரவாதிகளை காலால் உதைப்பது போல் இதையும் நினைத்துவிட்டாரா
கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...
பதிலளிநீக்குஇவரைப் போன்றவர்களை மக்கள் விரைவில் நிராகரித்துவிட வேண்டும். இப்போது இருப்பவர்களை விடவும் ஊழல் பேர்வழியாக, பொறுப்பற்றவராக, ஆணவம் பிடித்தவராக இவர் இருப்பது நன்றாகவே தெரிகிறது...
//அப்படியா? அப்படியானால் அதே பகுதியில் தங்களுடைய வீடுகளையும், கடைகளையும் இழந்தவர்கள் ஊழல் செய்து, ஊரை ஏமாற்றி சம்பாதித்தார்கள் என்று சொல்கிறீர்களா? ஏதோ தானமாக கொடுத்துவிட்டத்தைப் போன்று அங்கலாய்க்கிறீர்களே? இழப்பீடு பெற்றுக்கொண்டுதானே கொடுத்தீர்கள்? அதில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு மட்டுமல்ல அந்த பகுதியில் இருந்த அனைவருக்குமேதான்.//
பதிலளிநீக்குSaarval, i think he meant to say when compared to others his property is of more value and he sees more loss in it, it doesnt mean others are corrupt or earned in illegal way... Hope you understand the point...Pls Dont think iam supporting him...Innum koncham varusham ivar katchi nadatharathuliyeh ivar arasiluku theruma theradhaanu terinjudum...
"நான் மாற்றுத் திட்டம் கொடுத்தேன்.. ஆனால் வேண்டுமென்றே ஏற்றுக்கொள்ளப்படவில்லை."
Idhu oru abathamana badhil, Idhula andha reporter orediya ethividarar, rombha mudhirchi arasiyalla adainjhutaarn ....Ennatha mudhirchi adanjaaro... bhagawanuku thaan velicham.
//
"இங்கே நடந்தது அதிகார துஷ்பிரயோகம். இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.//
Bayandhuta katchi yaaru nadatharadhu, karithuppa maatanga...
Apparam kalaingarku oru kavithai Netru mulaitha kaalannu ezhudha aaramichuruvaar,
கிரிமினல் அரசியல்னா என்னன்னு எனக்கு கத்துக்குடுத்தீட்டீங்க. அதை வெச்சே என்னாலேயும் திருப்பியடிக்க முடியும்."//
Cinemla varamadhiri Suvathula egiri adikamudiyadhunga Karupu MGR(kodumai MGR irundhurundha Yedhukuda indhaaluku andha VAN kuduthoaamnu varuthapaturupaar) (hahaha)