29 மார்ச் 2007

எனக்குள் ஒரு பைத்தியம் (weird mega serial!)

இந்த weirdங்கற சமாச்சாரமே weirdதான்..

நம்ம எல்லாருக்குள்ளயுமே இந்த மாதிரி ஒரு ஆசாமி இருக்கறது சகஜம்தான்.

அப்படீன்னா எனக்குள்ளயும் ஒருத்தன் இருக்கணுமில்லே..

மொதல்ல நம்ம ரஷ்யா (தஞ்சை) இராமனாதன்தான் அவரோட weird லிங்க அனுப்பி படிச்சி பாருங்கய்யான்னார்.

அத படிச்சதும் அவர் சொன்னதுல பலதும் எனக்கும் ஒத்துப்போறத பார்த்தேன்.

அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி நம்ம மா.சிவக்குமார்கிட்டருந்து ஒரு SMS. சார் உங்களயும் நம்ம weird பட்டியல்ல சேர்த்துருக்கேன்ன்னு.. அப்ப நா கொச்சியிலருந்தேன். சரின்னு பதில் குடுத்துட்டு ஊருக்கு போயி பாத்துக்கலாம்னு இருந்தேன்..

ரெண்டு நா கழிச்சி சென்னை வந்தா நம்ம துளசி அப்புறம் சீனியர் ராகவன் சார் கிட்டருந்து கூகுள்ல மெயில்.. வாங்க நம்ம கிறுக்கர்கள் (மன்னிச்சிக்குங்க.. weirdக்கு அப்படியும் அர்த்தம் சொல்லலாம்!) க்ளப்புல வந்து மெம்பராவுங்கன்னு..

சரி வேறு வழியில்லை.. ஆனா இன்னைக்கி எழுதலாம் நாளைக்கி எழுதலாம்ணு.. தள்ளிப் போயி இன்னைக்கி எப்படியும் எழுதிறணும்னு...

1. நா புடிச்ச முயலுக்கு மூனு காலு.

இது ரொம்ப நாளா எங்கிட்ட இருந்த கிறுக்குத்தனம். இத ஒருமாதிரியான ஈகோன்னும் சொல்லலாம். ஒருதரம் - ரெண்டு வருசத்துக்கு முன்னாலன்னு நினைக்கேன் - எனக்கு ப்ரஷர் அதிகமாயி ஹாஸ்ப்பிடல்ல சேக்க வேண்டியதாயிருச்சி. ஒரு வாரம் தங்கியிருந்து hypertensiveங்கற முத்திரையோட வீட்டுக்கு வந்திருந்தேன். ஒரு ரெண்டு மூனு வாரம் ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் உத்தரவு. ஆனா அதெல்லாம் தேவையில்லை நா இல்லன்னா ஆஃபீசே அஸ்தமிச்சிப் போயிரும்னு வொய்ஃப் கிட்ட வாதம் பண்ணிக்கிட்டிருக்கேன். திடீர்னு எங்க சேர்மன் - ரெண்டு நாள் அஃபிஷியல் விசிட்ல சென்னைக்கு வந்துருக்கார் போல. சரி இவன் ஒரு வழியா காலியாயிருவான் அதுக்கு முன்னால ஒரு பார்வை பாத்துருவோம்னு நினைச்சாரோ என்னவோ - வீட்டுக்கு வந்துட்டார். என் மனைவி இவர் நா என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கார் சார். நீங்களாவது சொல்லுங்களேன்னு புகார். அவர் சிரிச்சிக்கிட்டே 'அட நீங்க ஒன்னும்மா இவரு நாங்க சொன்னால கேக்கமாட்டார். அவர் சொன்னதுதான் சரின்னு நிப்பார்.' அப்படீன்னார்.

உண்மைதான் நான் அப்படித்தான்.. இதுவரைக்கும்.. இப்ப கொஞ்சம் கொஞ்சமா மாறப் பாக்கறேன்.. முடிஞ்சாத்தானே?

2. ஒரு நேரத்துக்கு ஒரு பேச்சு

இதுவும் ரொம்ப நாளா இருந்துக்கிட்டு வர்ற கிறுக்குத்தனம். இத அடிக்கடி எனக்கு ஞாபகப்படுத்தறது என் இரண்டு மகள்கள். 'நீங்க எந்த நேரத்துல என்ன பேசுவீங்கன்னே புரிஞ்சிக்க முடியலப்பா' என்பார்கள். என் மனைவி ஒரு அப்பாவி. நான் எந்த நேரத்தில் என்ன பேசினாலும் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்னு சொல்லிருவாங்க. ஒருவேளை மேக்கொண்டு கேட்டா முன்னால சொன்னதுக்கு நேர்மாறா சொல்லிருவேன்னு நினைப்பாங்களோ என்னவோ. வீட்டுலயே இப்படீன்னா ஆஃபீஸ்ல கேக்கவே வேணாம். நம்ம ஜூனியர்ங்க கிட்டன்னா பரவால்லை.. இது சரியான லூசுன்னு விட்டுருவாங்க. ஆனா சில சமயத்துல எங்க டைரக்டர்ஸ்ங்களோட கமிட்டி கூட்டத்துலயே முன்னுக்குபுரணா (இந்த வார்த்த சரிதானா?)_ பேசி மாட்டிக்கிட்டு முழிச்சிருக்கேன். Be consistent in your statements tbr..னு பலதடவ எங்க சேர்மன் எரிஞ்சி விழுந்துருக்கார்..

இதையும் மாத்திக்கலாம்னுதான் பாக்கேன்.. முடிய மாட்டேங்குது..

3. வீட்டுப் பைத்தியம்

'கால்ல சக்கரத்த கட்டிக்கிட்டு பொறந்துட்டே போலருக்குடா'ன்னு பலதடவ ஏசியிருக்காங்க எங்கம்மா. 'நல்லா சொல்லுங்க அப்பவும் உரைக்காது'. அப்படீம்பாங்க என் மனைவி, அதாவது நா வீட்ல இல்லாதப்போ..

எங்க பேங்க்ல எல்லாருக்கும் மூனு வருசத்துக்கு ஒருமுறைதான் டிரான்ஸ்ஃபர் வரும். நா ஆஃபீசராயி சுமார் முப்பது வருசம் ஆவுது. அப்படிப்பாக்கப்போனா நா பத்து வீடுதான் மாறியிருக்கணும். அதாவது ஊர விட்டு மாறும்போது மட்டும். மூனு வருசத்துக்கு ஒரு வீடுன்னு..
ஆனா நா ஏறக்குறைய ஒவ்வொரு ஊர்லயும் குறைஞ்சது மூனு வீடாவது மாறியிருப்பேன். சென்னையிலயே பத்து வீடுக்கும் மேல.. ''எல்லா வீட்லயும் ஏதாச்சும் குறை இருக்கத்தாண்டா செய்யும்? அதுக்குன்னு இப்படியா நரிக்குறவன் மாதிரி.. நீ போடற ஆட்டத்துக்கெல்லாம் ஒம் பெஞ்சாதியும் சேர்ந்து ஆடறா பாரு... அதான் இப்படி வீடு வீடா ஓடறீங்க"ம்பாங்க எங்கம்மா இப்பவும். அது ஏன்னுதான் தெரியல.. எந்த வீட்டுக்கு போனாலும் ஒரே வருசம்.. மிஞ்சிப் போனா ரெண்டு வருசம்.. கடைசியா கொச்சியிலருந்து மாறி வந்து 26 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ள ரெண்டு வீடு மாறியாச்சி. இப்பருக்கற வீட்டோட லீஸ் வர்ற ஜூலை மாசம் முடியுது.. 'ஹூம்.. இருப்பமா மாறுவமான்னு இப்பவே சொல்லிருங்க..' அப்படீங்கறாங்க என் மனைவி. 'அப்பா இதான் கடைசி.. இங்கருந்து பத்து நிமிசத்துல நா ஆஃபீசுக்கு போயிடறேன்.. இனியும் வீடு மார்ற வேலையெல்லாம் வேணாம்.. நா வரமாட்டேன்'னு க்ளியரா சொல்லிட்டா என் ரெண்டாவது மகள். 'என்னப்பா இன்னும் மாறலையா'ன்னு நக்கலா கேக்கறா என் முதல் மகள் கோலாலம்பூர்லருந்து..

இத்தோட நிறுத்திக்கணும்னுதான் தோன்றது.. ஆனா என்ன பண்றதுன்னு தெரியலையே..

4. பேனா பைத்தியம்..

இது ஒருகாலலத்துல இருந்தது.. கட்டுபடியாகாம விட்டுட்டேன்.. அதுவும் இங்க் பேனா.. எத்தன இருந்ததுன்னே கணக்கு மறந்துப் போச்சு.. எப்படி ஆரம்பிச்சதுங்கறதும் மறந்து போச்சு.. ஆனா ஒரு காலத்துல அதுவே பைத்தியமா அலைஞ்சேன்.. ப்ளாட்பாரம், ப்ளாட்பாரமா.. அது போறாதுன்னு விதம் விதமா எழுதற நிப்புங்க வேற.. ஞாயித்துக் கிழமையானா எல்லாத்தையும் எடுத்து தொடைச்சி.. இங்க் ஊத்தி.. சாயந்தரம் ஆகறதுக்குள்ள தலையிலருந்து கால் வரைக்கும் ஹோலி பண்டிகையன்னிக்கி இங்க் சாயம் பூசுனா மாதிரி நிப்பேன். ஹூம்.. இப்படியொரு மனுசன கட்டி வச்சிட்டாங்களேன்னு நொந்துப் போயிருவாங்க என் மனைவி. ஆனா வாய தொறந்து ஒருநாளும் திட்டுனதில்லை. சென்னையிலருந்து பம்பாய் மாறி போனப்போ வீடு சரியா அமையாம என்னோட ஜாமானெல்லாம் ஒரு லாரி ஆஃபீஸ்ல ரெண்டு வாரமா கெடக்க வேண்டியாதா போச்சு. அதுவும் நல்ல மழையில. அதுக்கப்புறம் ஒடஞ்சி பாதி ஒடயாம பாதின்னு வீடுவந்து சேர்ந்ததுல முதல் விக்டிம் நம்ம பேனா கலெக்ஷந்தான். அத்தோட விட்டுது அந்த கிறுக்கு..

5. புத்தக பைத்தியம்

இதுவும் இப்ப இல்லை. அப்பத்தான் (முப்பது வருசத்துக்கு முன்னாடி) லெண்டிங் லைப்ரரி சென்னையில அறிமுகமான காலம். பழைய பேப்பர் எடுத்து விக்கற ஒருத்தர் சென்னை புரசைவாக்கத்துல, அதாவது எங்க வீட்டுப் பக்கத்துலயே, ஒரு லெண்டிங் லைப்ரரி துவக்கி ஒங்களமாதிரி (அதாவது பைத்தியக்காரங்க) ஆளுங்கதான் சார் எங்களுக்கு வேணும்னு ரொம்பவும் மரியாதையா கூப்ட்டு மெம்பராக்கினார். அப்போ இருபத்தஞ்சி ரூபா டெப்பாசிட். ஒரு புத்தகத்துக்கு வாரத்துக்கு ஒரு ரூபா. ரெண்டு நாள்ல திருப்பித் தந்துட்டா அம்பது பைசா டிஸ்கவுண்ட். அப்படி ஆரம்பிச்சது இந்த பைத்தியம். ஆஃபீசராயி மும்பைக்கி மாறிப் போயும் இது விடல. நா தங்கியிருந்த செம்பூர்ல ஸ்டேஷன் எறங்குனதுமே ஒரு லைப்ரரி இருந்தது (அது இப்பவும் அதே எடத்துல இருக்குங்கறதுதான் ஆச்சரியம்!) வசதியா போச்சு. வாரம் ரெண்டு மூனுன்னு பரீட்சைக்குக் கூட அப்படி படிச்சிருப்பனோ என்னவோ.. இந்த ஆத்தர் இந்த டைட்டில்னுல்லாம் ஒன்னும் கிடையாது அய்ன் ராண்ட்லருந்து ஹெரால்ட் ராபின்சன் வரைக்கும் தமிழ்ல நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன்லருந்து சுஜாதா வரைக்கும் எது கெடச்சாலும் விடறதில்லை. க்ரைம் பக்கம் மட்டும் போக மாட்டேன். அதுமாதிரியே பெண் எழுத்தாளர் பக்கமும் போமாட்டேன் (தயவு செஞ்சி ஏன்னு கேட்டுறாதீங்க) கண்ணாடி இல்லாம படிக்க முடியாதுன்னு வந்ததும் விட்டுட்டேன்..

6. எமோஷனல் பைத்தியம்

'நீ சரியான எமோஷனல் ஃபூல்றா'ம்பானுங்க என்னோட ஆஃபீஸ் நண்பர்கள். ரொம்ப கஷ்டம்னு வந்து' நீங்க நெனச்சா ஹெல்ப் பண்லாம் சார்'னு சொன்னா போறும். எந்த செக்யூரிட்டியும் இல்லன்னா கூட பரவால்லை.. என் அதிகாரத்துக்குள்ள செக்யூரிட்டி இல்லாம எவ்வளவு லோன் குடுக்க முடியுமோ அத குடுத்துருவேன். சிலர் அத ஒழுங்கா யூஸ் பண்ணி பெரிய ஆளா வந்திருக்காங்க. பலர் என்னெ இளிச்ச வாயனாக்கிட்டு போயிருக்காங்க. மாட்டிக்கிட்டு முழிச்சிருக்கேன். வார்னிங்கும் கிடைச்சிருக்கு. ஆனா இவன் ஒரு எமோஷனல் ஃபூல் மட்டும்தான், ஃப்ராடு இல்லைன்னு எங்க பேங்க்லருக்கறவங்களுக்கு நல்லாவே தெரியும். அதனால பெரிசா எதுவும் பனிஷ்மெண்ட் இதுவரைக்கும் கிடைக்கல.. கடவுள் புண்ணியம்னுதான் சொல்லணும்.. பிராஞ்ச் மேனேஜர் பதவியிலருந்து விலகி வந்து பத்து வருசத்துக்கு மேல ஆயிருச்சி.. அதனால தப்பிச்சேன்.

சொந்த வாழ்க்கையிலும் இப்படி பல தடவைகள்ல ஏமாந்துருக்கேன். ஆனாலும் பெரிசா எதுவும் இழப்பு வந்துரலை.

இவ்வளவுதாங்க...

'எனக்குள் ஒரு பைத்தியம்'கற தலைப்புக்கு பதிலா 'எனக்குள் இருக்கும் பைத்தியங்கள்'னு தலைப்பு வச்சிருக்கலாம் போல.. அத்தன பேர் இருக்காங்க..

ஒவ்வொரு நேரத்துல ஒவ்வொன்னு வரும், போவும்...

இன்னும் எத்தன வருமோ எத்தன போவுமோ.. .பொறுத்திருந்துதான் பாக்கணும்..

சரி.. இந்த காலத்து இளைஞர்கள் என்ன சொல்றாங்கன்னு பாப்போம்..

தப்பா நினைச்சிக்காம வந்து வரிசையா சொல்லுங்க..

ஜோ,
ஜிராகவன்,
இலவச கொத்தனார்,
முத்து (தமிழினி) இவர் சனிக்கிழமைகள்ல மட்டுந்தான் வருவார் போலருக்கு.

27 கருத்துகள்:

  1. நான் பைத்தியம்னு எந்தப் பைத்தியமாவது சொல்லுமான்னு கேள்வி. ஆனா தமிழ் வலைப்பூக்கள்ள பலர் நான் பைத்தியந்தான்னு உறுதியோட வந்து நிக்குறாங்க. போட்டி பலமாத்தான் இருக்கு. நீங்களும் நல்ல வகையாத்தான் சொல்லீருக்கீங்க.

    அடுத்து வீடு மாத்தாதீங்க. கட்டீருங்க. அதான் சரி. அப்புறம் மாத்த முடியாது.

    என்னைய ஏற்கனவே உள்ள இழுத்து விட்டுட்டாங்க சார். நானும் பொலம்பித் தள்ளியிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  2. ஜோசப் சார்,
    ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. நீங்க சொன்ன கடைசி 'எமோஷனல் முட்டாள்' எனக்கும் பொருந்தும் . இளகிய மனது காரணமா அறிவை கொண்டு யோசிக்கிறதுக்கு முன்னால மனது முடிவெடுத்து எதாவது செய்து பின்னர் முழிப்பேன்.

    உங்க அழைப்புக்கு மிக்க நன்றி .ஆனா முன்னாலயே தருமி வாத்தியார் அழைத்து நானும் பதிவு போட்டுட்டேன் (http://cdjm.blogspot.com/2007/03/1.html ) .மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நல்லா ப்ரூவ் பண்ணி இருக்கீங்க. ச்சீ, எழுதி இருக்கீங்க. :))

    //Be consistent in your statements tbr..னு பலதடவ எங்க சேர்மன் எரிஞ்சி விழுந்துருக்கார்..//

    I am always consistent, Sir....


    .... in being inconsistent அப்படின்னு ஒரு போடு போட்டு இருக்க வேண்டியதுதானே!!

    நம்மளை வேற கூப்பிட்டுட்டீங்க. ஆனாப் பாருங்க, கிறுக்குன்னு சொன்ன உடனே நம்ம பேரு நிறையா பேருக்கு ஃப்ளாஷ் ஆச்சா, அவங்களும் கூப்பிட்டுட்டாங்க. பதிவும் போட்டாச்சு. படிச்சுப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க.

    நன்றி டிபிஆர்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க ராகவன்,

    ஆனா தமிழ் வலைப்பூக்கள்ள பலர் நான் பைத்தியந்தான்னு உறுதியோட வந்து நிக்குறாங்க//

    ஏன்னா இது 'அவங்க' கூடற எடமாச்சே (கோச்சிக்காதீங்க:))

    அடுத்து வீடு மாத்தாதீங்க. கட்டீருங்க. அதான் சரி. அப்புறம் மாத்த முடியாது.//

    ஒங்களுக்குத்தான் தெரியுமே. பேருக்கு ஒரு வீடு ஊர்ல இருக்கு. ஆனா இருபது வருசமா வாடகை வீட்லதான் இருக்கேன்..

    என்னைய ஏற்கனவே உள்ள இழுத்து விட்டுட்டாங்க சார். நானும் பொலம்பித் தள்ளியிருக்கேன். //

    பாருங்க ஒலகத்துல என்ன நடக்குதுன்னே தெரியாம இருக்கேன்:(

    படிச்சிட்டு சொல்றேன்.

    பதிலளிநீக்கு
  5. வாங்க ஜோ,

    இளகிய மனது காரணமா அறிவை கொண்டு யோசிக்கிறதுக்கு முன்னால மனது முடிவெடுத்து எதாவது செய்து பின்னர் முழிப்பேன்.//

    சரிதான்.. நம்மள மாதிரி இன்னொருத்தரும் இருக்கார்னு தெரிஞ்சதும் சந்தோஷமாருக்கு:)

    ஆனா முன்னாலயே தருமி வாத்தியார் அழைத்து நானும் பதிவு போட்டுட்டேன் //

    கொஞ்ச நாளா ஊர்ல இல்லன்னதும் எல்லாரும் எல்லாரையும் கூப்ட்டுருக்காங்க..

    படிச்சிட்டு சொல்றேன் ஜோ..

    பதிலளிநீக்கு
  6. வாங்க கொத்தனார்,

    ரொம்ப நல்லா ப்ரூவ் பண்ணி இருக்கீங்க. ச்சீ, எழுதி இருக்கீங்க. :))

    //Be consistent in your statements tbr..னு பலதடவ எங்க சேர்மன் எரிஞ்சி விழுந்துருக்கார்..//

    I am always consistent, Sir....


    .... in being inconsistent அப்படின்னு ஒரு போடு போட்டு இருக்க வேண்டியதுதானே!!

    போடலாம்தான்.. ஆனா யார்கிட்ட மோதறோம்கறதையும் பாக்கணுமே:(

    நம்மளை வேற கூப்பிட்டுட்டீங்க. ஆனாப் பாருங்க, கிறுக்குன்னு சொன்ன உடனே நம்ம பேரு நிறையா பேருக்கு ஃப்ளாஷ் ஆச்சா, அவங்களும் கூப்பிட்டுட்டாங்க. பதிவும் போட்டாச்சு. படிச்சுப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க.//

    போச்சிறா. நீங்களுமா?

    சரி. முத்து என்ன சொல்றார்னு பாக்கணும்.

    பதிலளிநீக்கு
  7. //1. நா புடிச்ச முயலுக்கு மூனு காலு
    2. ஒரு நேரத்துக்கு ஒரு பேச்சு
    3. வீட்டுப் பைத்தியம்
    4. பேனா பைத்தியம்.
    5. புத்தக பைத்தியம்
    6. எமோஷனல் பைத்தியம்
    //
    நிச்சயம். இந்த ஆறில் ஏதேனும் ஒன்றாவது சராசரி மனிதர்களுக்குள் இருக்கும்.

    பேனாக்காலங்கள் போய்விட்டனவே!! இப்போ எல்லாம் எலிக்குட்டி மற்றும் தட்டச்சுப்பலகை தானே. கையெழுத்து போடும் நேரம் தவிர பெரும்பாலனா நேரங்களில் பேனா இப்போதெல்லாம் தேவைப்படுவதில்லை.

    6. எமோஷனல் பைத்தியம்
    இதனைப் பயன்படுத்தி 10 பேர்ல நாலு பேர் முன்னுக்கு வந்திருந்தால் கூட பெரிய விசயம் தான் சார். மனிதனை மற்றவைகளிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டுவது இந்த "எமோசனல் செண்டிமெண்ட்ஸ்" தான்.

    5. புத்தக பைத்தியம்
    உங்களின் இந்த அனுபவம் உங்களின் எழுத்துக்களை வாசிக்கும் போது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  8. வாங்க வினையூக்கி,

    இந்த மெகா சீரியல்ல அஞ்சி பேர சொல்லணுமாம்.. அஞ்சாவது யார சொல்லலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன் ஞாபகத்துக்கே வரலை..

    நீங்களா வந்து மாட்டிக்கிட்டீங்க..

    நீங்க இதுவரைக்கும் இப்படியொரு பதிவு போடலன்னா நீங்கதான் அந்த அஞ்சாவது invitee:)

    இந்த ஆறில் ஏதேனும் ஒன்றாவது சராசரி மனிதர்களுக்குள் இருக்கும். //

    உண்மைதான். இதுவரைக்கும் போட்டுருக்கற எல்லா பதிவுகள படிக்கறப்பவும் அப்படித்தான் எனக்கும் தோனுச்சி.

    பேனாக்காலங்கள் போய்விட்டனவே!! இப்போ எல்லாம் எலிக்குட்டி மற்றும் தட்டச்சுப்பலகை தானே. கையெழுத்து போடும் நேரம் தவிர பெரும்பாலனா நேரங்களில் பேனா இப்போதெல்லாம் தேவைப்படுவதில்லை. //

    இப்பல்லாம் கையெழுத்து போடறதுகூட முடியறதில்லை. மணிக்கட்டு வலிக்குது. எழுதற பழக்கமே விட்டுப்போய்ட்டதாலயோ என்னவோ.. என்னதான் இருந்தாலும் பவுண்டன் பேனாவுல இங்க ஊத்தி எழுதறா மாதிரி வருமா? ஹூம் அது ஒரு காலம்.

    6. எமோஷனல் பைத்தியம்
    இதனைப் பயன்படுத்தி 10 பேர்ல நாலு பேர் முன்னுக்கு வந்திருந்தால் கூட பெரிய விசயம் தான் சார். மனிதனை மற்றவைகளிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டுவது இந்த "எமோசனல் செண்டிமெண்ட்ஸ்" தான். //

    உண்மைதான். எங்க ஜாப்ல அது ஒரு வரப்பிரசாதம்தான். எந்த ஜாப்லயும் இல்லாத ஒரு மனநிறைவு ஒரு வங்கி மேலாளருக்கு இருக்கறதுண்டு.

    5. புத்தக பைத்தியம்
    உங்களின் இந்த அனுபவம் உங்களின் எழுத்துக்களை வாசிக்கும் போது தெரிகிறது. //

    அப்படியா? அது நல்லதுதான்னு நினைக்கிறேன்.. எனக்கு ஜெயகாந்தன்னா ரொம்பவும் புடிக்கும். ஆங்கிலத்துல ஹார்தர் ஹெய்லி..

    பதிலளிநீக்கு
  9. சார், சேர்மன் மனைவியிடம் வீட்டம்மாவைப் பேச சொன்னா, அவங்களும் இதையே சொல்லுவாங்க. இது ஆண்களின் இயல்பான குணம் :-)
    பெண் எழுத்தாளர்கள் எழுதியதைப் படிக்க மாட்டீங்களா? சரி சரி :-)))))))

    ராகவா, இன்னும ஜோதியில ஐக்கியம் ஆகலை????

    பதிலளிநீக்கு
  10. 'முன்னுக்குப்பின் முரண் 'அப்படின்னு சொல்வாங்க:-)))


    ஜாய்ன் த க்ளப்:-))))

    பதிலளிநீக்கு
  11. அட ராகவா, எழுதிட்டீயா? என் கண்ணுல விழலை. பிசி

    பதிலளிநீக்கு
  12. வாங்க உஷா,

    அடடடா.. பைத்தியத்த சுத்தி பத்து பேருன்னு சொல்வாங்க.. அது உண்மைதான் போலருக்கு.

    பாருங்க ரொம்ப நாளா நம்ம ப்ளாக் பக்கம் வராதவங்களையெல்லாம் கூட இழுத்துக்கிட்டு வந்திருக்கு..

    சும்மா தமாஷ் பண்ணேன் உஷா.. தப்பா நினைச்சிக்காதீங்க:)))

    சார், சேர்மன் மனைவியிடம் வீட்டம்மாவைப் பேச சொன்னா, அவங்களும் இதையே சொல்லுவாங்க. இது ஆண்களின் இயல்பான குணம் :-)//

    இது உண்மைதான். வீட்டம்மாவுக்கு மரியாதை அவ்வளவுதான்.. அவங்களுக்கு உலகம் தெரியாதுன்னு நினைப்பு. ஆனா நிறைய விஷயங்கள்ல அவங்க சொல்றதும் செய்யறதும்தான் சரியா இருக்கும்.

    பெண் எழுத்தாளர்கள் எழுதியதைப் படிக்க மாட்டீங்களா? சரி சரி :-)))))))//

    வேற ஒன்னுமில்லை.. சோகமாவே இருக்குமே அதான்....

    இந்திரா பார்த்தசாரதி அப்புறம் வாஸந்தி இவங்கள புடிக்கும்..

    ராகவா, இன்னும ஜோதியில ஐக்கியம் ஆகலை???? //

    ஐக்கியமாய்ட்டேன்னு சொன்னாரே:)

    பதிலளிநீக்கு
  13. வாங்க துளசி,

    'முன்னுக்குப்பின் முரண் 'அப்படின்னு சொல்வாங்க:-)))


    ஜாய்ன் த க்ளப்:-))))//

    ஜாய்ன் பண்ணிட்டேன்..:)

    ஆனா ஒன்னுங்க.. இப்படியாபட்ட ஆளுங்கள கூட நம்பிரலாம்.. ஒன்னுமே பேசாம கமுக்கமா இருக்கறவங்களதான் நம்பமுடியாது.. என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  14. //இந்த மெகா சீரியல்ல அஞ்சி பேர சொல்லணுமாம்.. அஞ்சாவது யார சொல்லலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன் ஞாபகத்துக்கே வரலை..

    நீங்களா வந்து மாட்டிக்கிட்டீங்க..

    நீங்க இதுவரைக்கும் இப்படியொரு பதிவு போடலன்னா நீங்கதான் அந்த அஞ்சாவது invitee:)
    //
    சார், என்னை weird விளையாட்டுக்கு, யாரும் கூப்பிடும் அளவுக்கு பிரபல்யம் இல்லையோ என நினைத்துக் கொண்டிருந்தேன். தங்கள் அழைப்புக்கு நன்றி. விரைவில் பதிகின்றேன்.

    பதிலளிநீக்கு
  15. சார், நேரமில்லாததால் தொடர் விட்டுப் போச்சு. முடிஞ்சதும் மொத்தமாய் படிக்கிறேன். நானெல்லாம் ஆண்கள் எழுதியதைப் படிக்க மாட்டேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் :-)
    இந்திராபார்த்தசாரதி. ஒரு ஆண். அவருடைய அனைத்து படைப்புகளையும் படித்திருக்கிறேன். எனக்கு விருப்பமான எழுத்துக்களில்
    அவருடையதும் ஒன்று. சமீபத்தில் எழுதிய "கிருஷ்ணா கிருஷ்ணா" படிச்சீங்களா? மாஸ்டர் பீஸ்!

    பதிலளிநீக்கு
  16. சார், என்னை weird விளையாட்டுக்கு, யாரும் கூப்பிடும் அளவுக்கு பிரபல்யம் இல்லையோ என நினைத்துக் கொண்டிருந்தேன்.//

    சேச்சே.. அப்படியெல்லாம் யாரும் நினைச்சிருக்கமாட்டாங்க. நான் மறந்தா மாதிரிதான்..

    தங்கள் அழைப்புக்கு நன்றி. விரைவில் பதிகின்றேன். //

    நிச்சயம் போடுங்க..

    பதிலளிநீக்கு
  17. நேரமில்லாததால் தொடர் விட்டுப் போச்சு. முடிஞ்சதும் மொத்தமாய் படிக்கிறேன். //

    நா சும்மா தமாஷ் பண்ணேன் உஷா.. டைம் கிடைக்கறப்போ படிங்க, போறும்..

    நானெல்லாம் ஆண்கள் எழுதியதைப் படிக்க மாட்டேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் :-)//

    நானும் சொல்லமாட்டேன்:)

    இந்திராபார்த்தசாரதி. ஒரு ஆண். //

    ஆமாங்க. எழுதி பப்ளிஷ் பண்ணதும்தான் நினைச்சேன்..

    அவருடைய அனைத்து படைப்புகளையும் படித்திருக்கிறேன். எனக்கு விருப்பமான எழுத்துக்களில்
    அவருடையதும் ஒன்று. சமீபத்தில் எழுதிய "கிருஷ்ணா கிருஷ்ணா" படிச்சீங்களா? மாஸ்டர் பீஸ்! //

    கதை புக்ஸ் படிக்கற பழக்கம் விட்டுப்போயி அஞ்சாறு வருசம் ஆயிருச்சிங்க.. பொடி எழுத்துங்கள படிக்க முடியறதில்லை..

    பதிலளிநீக்கு
  18. ஜோசப் சார், weird பதிவு போட்டாச்சு.

    பதிலளிநீக்கு
  19. :))

    vanthutaen..(coming saturday)

    பதிலளிநீக்கு
  20. 'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சார்' ..
    சொல்லிட்டேன் லோன் அனுப்பவும் ..;)

    தலையிலருந்து கால் வரைக்கும் ஹோலி பண்டிகையன்னிக்கி இங்க் சாயம் பூசுனா மாதிரி நிப்பேன்.
    weird . :).. இங்கே இணைக்கப்படுகிறது

    பதிலளிநீக்கு
  21. 'நல்லா இருந்தது'-னு சொன்னா தப்பா ('weird'னு) நினைச்சிக்க மாட்டிங்களே..

    பதிலளிநீக்கு
  22. 'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சார்' ..
    சொல்லிட்டேன் லோன் அனுப்பவும் ..;) //

    ஆனா நா இப்ப பிராஞ்சில இல்லையே.. வேணும்னா ஒரு ஓட்ட ஒடசல் கம்ப்யூட்டர அனுப்பறேன்.:)

    'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சார்' ..
    சொல்லிட்டேன் லோன் அனுப்பவும் ..;)

    தலையிலருந்து கால் வரைக்கும் ஹோலி பண்டிகையன்னிக்கி இங்க் சாயம் பூசுனா மாதிரி நிப்பேன்.//

    படிச்சிட்டு சொல்றேன்..

    பதிலளிநீக்கு
  23. 'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சார்' ..
    சொல்லிட்டேன் லோன் அனுப்பவும்!

    டி.டி அல்லது செக்! எதுவாணாலும் ஓ.கே!

    பதிலளிநீக்கு
  24. வாங்க சிபி,

    'நீங்க நெனச்சா எனக்கு ஹெல்ப் பண்லாம் சார்' ..
    சொல்லிட்டேன் லோன் அனுப்பவும்!

    டி.டி அல்லது செக்! எதுவாணாலும் ஓ.கே! //

    எல்.எல். தாசுக்கு சொன்ன பதில்தான் ஒங்களுக்கும் :)

    பதிலளிநீக்கு
  25. ஜோசப் சார், weird பதிவு போட்டாச்சு.

    வினையூக்கி.

    பதிலும் போட்டாச்சு. என்ன கொஞ்சம் லேட்டாயிருச்சி..

    பதிலளிநீக்கு
  26. வாங்க தென்றல்,

    'நல்லா இருந்தது'-னு சொன்னா தப்பா ('weird'னு) நினைச்சிக்க மாட்டிங்களே.. //

    கண்டிப்பா நினைச்சிப்பேன்:)

    பதிலளிநீக்கு
  27. வாங்க முத்து,

    vanthutaen..(coming saturday) //

    படிச்சிட்டு சொல்றேன். வந்ததுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு