24 April 2014

தேர்தல் குளறுபடிகள்!


இந்தியா போன்றதொரு நாட்டில் தேர்தல் அதுவும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது என்றால் மிகவும் சிரமமான காரியம்தான். ஆகவே அங்கும் இங்குமாக சிறு, சிறு தவறுகள் குறைபாடுகள் ஏற்படுவது சகஜம்தான்.
 
இன்று காலையிலேயே சென்னையில் பல வாக்குச் சாவடிகளில் ஓட்டு இயந்திரங்கள் சரிவர இயங்கவில்லை என்றும் அவற்றில் சில வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும் கூறப்படுகிறது. எப்போது சரியாகும் என்ற வாக்குறுதியும் அறிவிக்கப்படாததால் வரிசையில் காத்திருந்த பல வாக்காளர்கள் வாக்களிக்காமலே திரும்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
வாக்கு இயந்திரங்கள் பழுதடைவது ஒரு குறைபாடு என்றால் முந்தைய தேர்தல்களில் வாக்களித்தவர்களுடைய பெயர்களும் வாக்காளர் பட்டியிலிருந்து காணாமல் போவது இன்னொரு குறைபாடு. நானும் என்னுடைய மனைவியும் ஒரே நேரத்தில் பதிவு செய்தும் என்னுடைய மனைவி பெயர் மட்டுமே பட்டியலில் இருந்தது. ஏன் என்று கேட்டால் பதிலளிக்க அங்கிருந்த அரசு ஊழியர்களால் முடியவில்லை. அவர்களையும் குறை கூறுவதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.. அவர்கள் இருப்பதற்கு சரியான இருக்கைகள் இல்லை. கழிப்பறைகளோ, குடிநீர் வசதியோ செய்துத் தரப்பட்டிருக்கவில்லை. விடியற்காலையிலிருந்து வாக்குச்சாவடிகளில் பணியில் இருக்கும் இவர்கள் கையோடு காலை உணவு கொண்டு வந்திருந்தும் அதைக் கூட உண்ண முடியாமல் படும் அவஸ்தையைக் கண்டபோது வாக்காளர்கள் தங்களுடைய பெயரைக் காணாமல் எரிச்சலடையும்போதும் அவர்களும் திருப்பி கோபப்படுவதில் தவறேதும் இல்லையென்றே தோன்றுகிறது.
 
சுமார் ஆயிரத்து ஐந்நூறு வாக்காளர்களைக் கொண்ட என்னுடைய வாக்குச் சாவடியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களுடைய பெயரைக் காணவில்லை. 'உங்க ஓட்டர் ஐடி நம்பர நெட்ல அடிச்சி பாருங்க சார்' என்ற பதிலையே திருப்பி திருப்பிச் சென்று சமாளிப்பதையே பார்க்க முடிந்தது. நான் தவீட்டுக்கு திரும்பியதும் தமிழக தேர்தல் அதிகாரியின் தளத்துக்குச் சென்று பார்த்தால் அதில் எந்த தொடுப்பும் (link) வேலை செய்யவில்லை. வாக்களிக்க வந்தவர்களை விட பெயர் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றவர்களே அதிகம் பேர் இருந்தனர்.
 
இதன் அடிப்படையில் பார்த்தால் மொத்தமுள்ள வாக்காளர்களில் குறைந்தபட்சம் பத்து விழுக்காடு வாக்காளர்களுடைய பெயர்களாவது விடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு தொகுதியிலும்  பல்முனை போட்டி நடைபெறுகின்ற இந்த சூழலில் பெருமளவிலான எண்ணிக்கையில் வாக்காளர்கள் விடுபட்டு இருப்பது முடிவுகளில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
 
 
 
 

20 comments:

Bagawanjee KA said...

கடைசி நேர ஏமாற்றத்தை முதலில் செக் செய்து தவிர்த்து இருக்கலாமே ?

திண்டுக்கல் தனபாலன் said...

நகரங்களில் வருவதே பெரிய விசயம்... இதில் இப்படி வேறேவா...?

தி.தமிழ் இளங்கோ said...

இன்று நடந்த வாக்குப் பதிவு குறித்து உடனுக்குடன் பகிர்ந்தமைக்கு நன்றி! நீங்கள் முன்பே தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தை பார்த்து இருந்தால் உங்கள் மனைவியின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து இருக்கலாம். நான் இப்போது எதுவாக இருந்தாலும் இணையதளத்தில் பார்த்து சரி செய்து கொள்வது வழக்கம்.
வாக்குச் சாவடியில் ஒரு ஓட்டும், தமிழ் மணத்தில் நண்பர்களுக்கு பல ஓட்டும் போட்டாயிற்று.
த.ம.2

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

2008rupan said...

வணக்கம்
ஐயா

தேர்தலுக்கு முன்பு எல்லாம்சரி என்பார்கள் பின்புதான் சொல்வார்கள் மிஷ்சிங் என்று...
பழக்க தோசம்....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Packirisamy N said...

ஜனநாயகம் ஒரு பெரிய கேள்விக்குறிதான். யாரைக் குறை சொல்வது?

‘தளிர்’ சுரேஷ் said...

உங்கள் பெயர் விடுபட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள் என்று நமது ஆணையம் பல முறை தகவல்கள் செல்போனில் குறுஞ்செய்திகள் கூட அனுப்பியதே! பல கோடி வாக்காளர்கள் உள்ள நமது நாட்டில் சிலருடைய அலட்சியம் இப்படி சிறு தவறுகள் ஏற்பட காரணமாகிவிடுகிறது!

G.M Balasubramaniam said...

எங்களுக்கு வோட்டர் ஐ. டி கார்ட் இருந்தது. ஓட்டளிக்கும் இடம் வரிசை எண் எல்லாம் கணினியில் பார்த்துப் போனோம். யாருடைய ஸ்லிப்புக்காகவும் காத்திருக்கவில்லை. ஓட்டிங் மெஷினில் ஆங்காங்கு தவறுகள் நடக்கின்றன. யாரையும் குறை சொல்ல முடியாது. ஆனால் ஓட்டளிப்பவர் பெயர்கள் இல்லாமல் இருப்பது ஓட்டர்கள் பெயரை எழுதி அதை லிஸ்டில் சேர்க்க வேண்டியவர்களின் கவனக் குறைவே. இதைத் தடுக்க ஓட்டர்கள் முன்னமே போய் செக் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

வே.நடனசபாபதி said...

வாக்காளர் பட்டியலை சரி பார்க்க தேவையான அலுவலர்கள் தேர்தல் ஆணையத்திற்கென்று தனியாக இல்லாததுதான் வாக்காளர் பட்டியலில் பெயர் விட்டுப்போவதன் காரணம். அதனால் நாம் தான் நம் பெயர் இருக்கிறதா என பார்க்கவேண்டும். எது எப்படியோ இந்த முறை உங்களால் வாக்களிக்க முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியதே.

Vetrivendan said...

யார் யாரோ செய்த தவறுகளுக்கெல்லாம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் சூழ்நிலையில் உள்ள வாக்குச் சாவடி ஊழியர்களின் நிலை பரிதாபமான.

டிபிஆர்.ஜோசப் said...

Vetrivendan said...
யார் யாரோ செய்த தவறுகளுக்கெல்லாம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் சூழ்நிலையில் உள்ள வாக்குச் சாவடி ஊழியர்களின் நிலை பரிதாபமான.//

உண்மைதான். புதிய வாக்காளர்கள் பட்டியலை இணையத்தில் ஏற்றும் பணியை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிடுகிறார்களாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அதை செய்து முடிக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் இருப்பதால்தான் இத்தகைய குளறுபடிகள் ஏற்படுகின்றன என்கிறார் எனக்கு தெரிந்த அரசு ஊழியர் ஒருவர்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
வாக்காளர் பட்டியலை சரி பார்க்க தேவையான அலுவலர்கள் தேர்தல் ஆணையத்திற்கென்று தனியாக இல்லாததுதான் வாக்காளர் பட்டியலில் பெயர் விட்டுப்போவதன் காரணம். அதனால் நாம் தான் நம் பெயர் இருக்கிறதா என பார்க்கவேண்டும். எது எப்படியோ இந்த முறை உங்களால் வாக்களிக்க முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியதே.//

நான் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்புதான் புதிதாக்க படிவம் 6ஐ என் மனைவியுடன் சேர்ந்து சமர்ப்பித்தேன். தேர்தல் நாள் வரை புதிய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தன்னுடைய இணையத்தில் வெளியிடவே இல்லை. இணையத்தில் இல்லாத பட்டியல் வாக்குச் சாவடியில் இருந்ததை காண முடிந்தது. அதில் என்னுடைய மனைவி பெயர் மட்டுமே இருந்தது. அன்று என்னுடன் படிவத்தை சமர்பித்த சுமார் ஐம்பது பேர்களில் இருபது பேருக்கும் மேல் பெயர்கள் விட்டுப்போயிருந்தன. ஒரு மாதம் முன்பு படிவத்தைப் பெற்றுக்கொண்டு ஒப்புதல் சீட்டைக் கையொப்பமிட்டுக் கொடுத்த அதே பணியாளர்கள்தான் அன்றும் வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கே இது எப்படி விட்டுப்போனது என்று சொல்ல முடியவில்லை. இதுதான் அரசு இயந்திரம். யாரையும் குறை சொல்ல முடியாது. இனி மீண்டும் அடுத்த சட்டமன்ற தேர்தலின் போது முயற்சிக்க வேண்டியதுதான்.டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
எங்களுக்கு வோட்டர் ஐ. டி கார்ட் இருந்தது. ஓட்டளிக்கும் இடம் வரிசை எண் எல்லாம் கணினியில் பார்த்துப் போனோம். யாருடைய ஸ்லிப்புக்காகவும் காத்திருக்கவில்லை. ஓட்டிங் மெஷினில் ஆங்காங்கு தவறுகள் நடக்கின்றன. யாரையும் குறை சொல்ல முடியாது. ஆனால் ஓட்டளிப்பவர் பெயர்கள் இல்லாமல் இருப்பது ஓட்டர்கள் பெயரை எழுதி அதை லிஸ்டில் சேர்க்க வேண்டியவர்களின் கவனக் குறைவே. இதைத் தடுக்க ஓட்டர்கள் முன்னமே போய் செக் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.//

வாக்காளர்களை செக் செய்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது எளிது. நானும் இதையே பலருக்கும் கூறியுள்ளேன். ஆனால் தேர்தல் ஆணையத்தில் வாக்காளர்களை அந்தந்த வாக்குச் சாவடியின் கீழ் பட்டியலிட்டிருப்பதை காணலாம். ஒரே இடத்தில் பல ஆண்டுகள் வசித்தவர்களுடைய பெயர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. ஆனால் என்னைப் போன்று அடிக்கடி இடம் மாறுபவர்கள் விஷயத்தில் வாக்குச் சாவடி எது என்றே தெரியாத சூழலில் பெயரை எப்படி கண்டுபிடிப்பது? பெயர் மூலம் கண்டுபிடிக்கலாம் என்றால் என்னுடைய பெயரிலேயே பல வாக்காளர்கள் உள்ளனர். வயதும் தந்தையார் பெயர் கூட ஒத்துப்போவதைக் காண முடிந்தது! வாக்காளர்களுடைய பெயரை மட்டுமல்லாம் இனிஷியலையும் சேர்த்து பட்டியலில் வெளியிட்டால் எளிதில் தேடலாம் என்று நினைக்கிறேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

‘தளிர்’ சுரேஷ் said...
! பல கோடி வாக்காளர்கள் உள்ள நமது நாட்டில் சிலருடைய அலட்சியம் இப்படி சிறு தவறுகள் ஏற்பட காரணமாகிவிடுகிறது!//

யாருடைய அலட்சியம் என்கிறீர்கள்? நிச்சயம் என்னுடையது இல்லை. ஏனெனில் என்னுடன் அன்று படிவம் 6ஐ சமர்ப்பித்த என்னுடைய மனைவியின் பெயர் கூட இணையத்தில் இருக்கவில்லை. ஆனால் வாக்குச்சாவடியிலிருந்த பட்டியலில் இருந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது? திருத்தப்பட்ட பட்டியலை தேர்தல் ஆணையம் இணைத்தில் இறுதி நாள் வரை ஏற்றவில்லை. வாக்குச் சாவடியிலிருந்து திரும்பியதும் என்னுடைய மனைவியின் பூத் ஸ்லிப்பில் இருந்த அடையாள எண்ணை வைத்து மீண்டும் மீண்டும் செக் செய்தேன். அந்த எண் தவறானது என்கிறது இணையம். இது தேர்தல் ஆணையத்தின் அலட்சியமே தவிர வேறொன்றும் இல்லை.

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...
ஜனநாயகம் ஒரு பெரிய கேள்விக்குறிதான். யாரைக் குறை சொல்வது?//

இந்த கணினியுகத்திலும் இப்படியெல்லாம் நடப்பது வேடிக்கைதான். ஏற்கனவே பலமுறை வாக்களித்தவர்கள் மற்றும் Votes ID அட்டையை வைத்திருந்தவர்களுடைய பெயரும் கூட காணாமல் போயிருந்ததைப் பார்த்தால் இது ஏதோ வேண்டுமென்ற செய்யப்பட்டது என்று கூட என்ன தோன்றுகிறது.
2:18 PM

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


2008rupan said...
வணக்கம்
ஐயா

தேர்தலுக்கு முன்பு எல்லாம்சரி என்பார்கள் பின்புதான் சொல்வார்கள் மிஷ்சிங் என்று...
பழக்க தோசம்....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//

சரியாக சொன்னீர்கள். ஜெட்மலானி பெயரே விடுபட்டுப் போனதாம். இப்படியிருக்கும்போது நான் குறைபட்டுக்கொண்டு என்ன பயன்?

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


தி.தமிழ் இளங்கோ said...
இன்று நடந்த வாக்குப் பதிவு குறித்து உடனுக்குடன் பகிர்ந்தமைக்கு நன்றி! நீங்கள் முன்பே தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தை பார்த்து இருந்தால் உங்கள் மனைவியின் பெயரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து இருக்கலாம். நான் இப்போது எதுவாக இருந்தாலும் இணையதளத்தில் பார்த்து சரி செய்து கொள்வது வழக்கம்.
வாக்குச் சாவடியில் ஒரு ஓட்டும், தமிழ் மணத்தில் நண்பர்களுக்கு பல ஓட்டும் போட்டாயிற்று.//

உண்மையில் நான் கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று விலாசத்தில் தங்கியிருந்துள்ளேன். புதுவீடு குடிவந்து ஒரு வருடம் கூட முழுவதுமாக ஆகவில்லை. ஆகவே கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாடகை வீட்டிலிருந்துக்கொண்டு எதற்கு பதிவு செய்வது அடுத்த ஆண்டு மீண்டும் விலாசம் மாற்றுவதற்கு அலைய வேண்டுமே என்ற எண்ணத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்க்க தேர்தல் ஆணையம் அறிவிப்பு வந்ததும் செய்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். கடந்த மார்ச் ஒன்பதாம் தேதி எங்களுடைய பகுதி வாக்குச்சாவடியிலேயே புதிய வாக்காளர் சேர்க்கைக்கு படிவம் 6 கொடுத்தார்கள். நானும் என்னுடைய மனைவியும் இணைந்தே படிவத்தை சமர்ப்பித்தோம். தேர்தல் தியதி வரை தேர்தல் ஆணைய இணையத்தை செக் செய்யாத நாளே இல்லை எனலாம். துணை வாக்காளர் பட்டியலும் இணையத்தில் ஏற்றியாகிவிட்டது என்ற செய்தி தினந்தோறும் வந்திருந்தும் இறுதி நாள் வரை அதாவது வாக்குச் சாவடிக்கு செல்லும் நாளன்றும் இணையத்தைப் பார்த்துவிட்டுத்தான் சென்றேன். எங்கள் பகுதியில் வாக்காளர் சேர்க்கைக்கு படிவத்தை சமர்பித்திருந்த ஒருவருடைய பெயரும் இணையத்தில் இருக்கவில்லை. ஆனால் இணையத்தில் இல்லாத பட்டியல் வாக்குச் சாவடியில் பணிக்கு இருந்த அரசு பணியாளர்களிடம் இருந்ததைக் காண முடிந்தது. ஆனால் அதில் என்னுடைய மனைவியின் பெயர் மட்டுமே இருந்தது. 'ஏங்க இந்த லிஸ்ட் சைட்ல இல்லையே?' என்று கேட்டேன். அவர்களிடமிருந்து சரியான பதிலேதும் வரவில்லை. இதற்கு யாரை குறை சொல்ல முடியும்? சரி அடுத்த சட்டமன்ற தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


12:04 PM
திண்டுக்கல் தனபாலன் said...
நகரங்களில் வருவதே பெரிய விசயம்... இதில் இப்படி வேறேவா...?

இது எல்லா தேர்தல்களின்போதும் நடக்கும் விஷயம்தான். ஆனால் பழுதடைந்த இயந்திரத்தை பழுதுபார்க்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாவதுதான் சோதனை.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


12:04 PM
திண்டுக்கல் தனபாலன் said...
நகரங்களில் வருவதே பெரிய விசயம்... இதில் இப்படி வேறேவா...?

இது எல்லா தேர்தல்களின்போதும் நடக்கும் விஷயம்தான். ஆனால் பழுதடைந்த இயந்திரத்தை பழுதுபார்க்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாவதுதான் சோதனை.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

Bagawanjee KA said...
கடைசி நேர ஏமாற்றத்தை முதலில் செக் செய்து தவிர்த்து இருக்கலாமே ?//

நான் இதுவரை பல தேர்தல்களில் வாக்களித்துள்ளேன். ஆனால் பணிநிமித்தமாக அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் தேர்தலின் போது எந்த நகரத்தில் உள்ளேனோ அந்த இடத்தில் பதிவு செய்துக்கொள்வது வழக்கம். இணையதள வழியாக பதிவு செய்துக்கொள்ள வசதியில்லாத காலத்திலும் கூட இந்நிலை எனக்கு ஏற்பட்டதில்லை. மேலும் ஒரே தினத்தன்று, ஒரே வாக்குச் சாவடியில் படிவம் 6ஐ நானும் என்னுடைய மனைவியும் சமர்ப்பித்தோம். என் மனைவியின் பெயர் கூட இணையதள பட்டியலில் கிடைக்கவில்லை. ஆனால் வாக்குச் சாவடியில் இருந்த பணியாளர்களிடம் இருந்த பட்டியலில் அவருடைய பெயர் இருந்தது. என்னுடைய பெயர் மட்டும் எப்படியோ விட்டுப்போனது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.