15 ஏப்ரல் 2014

நாஞ்சில் கே சம்பத்தின் அநாகரீகப் பேச்சு

தொலைக்காட்சிகளில் அரசியல் தலைவர்களை நேர்காணல் செய்வது கடந்த சில வருடங்களாக மிகவும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக ஆங்கில தொலைக்காட்சிகள் இதில் மிகவும் சிறந்து விளங்குகின்றன.
 
ஆங்கிலத் தொலக்காட்சி சானல்களில் அரசியல் தலைவர்களை நேர்காணல் செய்தே மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பிரபல ஆங்கில தொலைக்காட்சிகளில் DEVIL'S ADVOCATE என்ற நிகழ்ச்சியை நடத்திவரும் கரண் தாப்பர்.  TIMESNOWன் அர்னாப் கோஸ்வாமியும்  CNN-IBN தொலைக்காட்சியைச் சார்ந்த ராஜ்தீப் சர்தேசாயும் நேர்காணல்கள் மூலம் பிரபலமடைந்தவர்களுள் சிலர். இவர்கள் மூவருக்கும் தனிப்பட்ட பாணி இருப்பதைக் காணலாம். அர்னாப் கோபத்துடன் உரத்த குரலில் கேள்விகளை தொடுப்பது வழக்கம். இந்த கோபம்தான் எதிராளியை பணிய வைக்க அவர் பயன்படுத்தும் ஆயுதம். ஆனால் கரண் தாப்பர் நிதானமாக அதே சமயம் ஒவ்வொரு கேள்வியையும் அழுத்தம் திருத்தமாக கேட்பார். ராஜ்தீப் சற்று விஷய ஞானம் இல்லாதவர் போல் தெரியும். ஏனெனில் இவருடைய பல கேள்விகள் பாமரத்தனமாக இருக்கும். பல தலைவர்களிடம் குட்டுப்படுபவர் இவர். 
 
இவர்களிடம் சிக்கிக்கொண்டு பதிலளிக்க முடியாமல் விழித்த அரசியல் தலைவர்கள் பல உள்ளனர்.  உதாரணத்திற்கு அர்னாப் கோஸ்வாமியின் எந்த கேள்விக்கும் நேரடியாக பதிலளிக்க முடியாமல் திணறிய ராகுலைக் குறிப்பிடலாம்.  அதே நேரத்தில் இவர்களை தங்களுடைய அறிவாற்றலாலும், வாதத் திறமையாலும் திணறடித்த தலைவர்களும் இல்லாமல் இல்லை. உதாரணம்: மத்திய நிதியமைச்சராகவுள்ள ப.சிதம்பரம்.  இவரிடம் சிக்கித் திணறி தோல்வியடைந்தவர்கள் பலர் உள்ளனர். 
 
இத்தகைய நேர்காணல் ஒன்றில் இடையிலேயே எழுந்து ஓடிய தலைவர்களும் உள்ளனர். அதில் மிக பிரபலமானவர் நம்முடைய வருங்கால பிரதமர் நமோ என்றால் நம்ப முடிகிறதா?
 
 
பந்தாவாக ஆங்கிலத்தில் பதிலளிக்க துவங்கி பிறகு அதை தொடர முடியாமல் இந்திக்கு தாவி பிறகு அதிலும் சமாளிக்க முடியாமல் பாதியிலேயே அவர் எழுந்து ஓடுவதைப் பார்த்தால் இவர் பிரதமராகி பிபிசி போன்ற அயல்நாட்டுத் தொலைக்காட்சிகள் இவரை நேர்காணல் செய்ய வேண்டும் என்று கேட்டால் என்னாவது என்று நினைக்கத் தோன்றுகிறது. அதனால்தான் அவர் எந்த தொலைக்காட்சி  நேர்காணல்களுக்கும் குறிப்பாக, ஆங்கில தொலைக்காட்சிகளுக்கு  ஒத்துக்கொள்வதில்லை போலிருக்கிறது.
 
தொலைக்காட்சி நேர்காணல்களை எதிர்க்கொள்ள நல்ல விஷய ஞானம் இருக்க வேண்டும். அத்துடன் எத்தகைய தர்மசங்கடமான கேள்விகளையும் உணர்ச்சிவசப்படாமல் எதிர்கொள்ளும் திறனும் வேண்டும். இந்த இரண்டுமே மோடிக்கு இல்லை என்பதால்தான் நேர்காணல்களை அவர் தவிர்த்துவருகிறார் என்று நினைக்கிறேன்.  சரி, இந்த கட்டுரை மோடியை விமர்சிக்க எழுதப்பட்டதல்ல என்பதால் இதை இத்துடன் விட்டுவிட்டு தொடர்வோம்.
 
தமிழ் தொலைக்காட்சி சானல்களை எடுத்துக்கொண்டால் நேர்காணல்களை சுவாரஸ்யமாக வழங்குவதில் பெயர்பெற்றவர் ரவி பெர்னார்ட் என்று கூறலாம். பல வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சியை நடத்தி புகழ் பெற்றவர் அவர். ஆனால் காலப்போக்கில் அவருடைய இந்த திறனே பல விரோதிகளை உருவாக்க சன் டிவியிலிருந்து இடம் பெயர்ந்து தற்போது  ஜெயா டிவியில்.... ஆனால் முன்பிருந்த வேகம் இப்போது இல்லை என்றுதான் கூறவேண்டும்.
 
இந்த வரிசையில் சமீப காலங்களில் தந்தி தொலைக்காட்சியில் நேர்காணல்களை நடத்திவரும்  ரங்கராஜ் பாண்டேயை குறிப்பிடலாம். இவர் நேர்காணல்கள் நடத்தும் விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் நேர்காணல்கள் நடத்துபவர்களைப் போல் உணர்ச்சிவசப்படாமலும் நிதானம் இழக்காமலும் கேள்விகளை தூய தமிழில் அழகான உச்சரிப்புடன் தொடுப்பதில் வல்லவர் இவர். 
 
தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இவர் நடத்திவரும் நேர்காணல்களை தவறாமல் பார்த்துவந்ததில் கடந்த வாரத்தில் ஒளிபரப்பான மூன்று நேர்காணல்களைப் பற்றி இங்கு விமர்சிக்கலாம்.
 
இதில் முதல் நேர்காணல் மதிமுகவிலிருந்து சமீபத்தில் அதிமுகவுக்கு தாவிய நாஞ்சில் கே. சம்பத் அவர்களுடனான சந்திப்பு.
 
இது நான் சற்று முன்னர் குறிப்பிட்ட பாதியிலேயே கைவிடப்பட்ட மோடியின் நேர்காணல் போலிருந்தது.  இத்தகைய நேர்காணல்களுக்கு வரும்போது நேர்காணலுக்கு உள்ளாகிறவர் சரியாக தயார் செய்துக்கொண்டு வரவேண்டும். அல்லது நல்ல விஷய ஞானம் உள்ளவராக இருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் வெறும் வாதத்திறமையை மட்டுமே நம்பி வந்தால் என்னாகும் என்பதற்கு உதாரணம்தான் நாஞ்சிலாருடனான இந்த சந்திப்பு காட்டியது.
 
ஒருவருடைய பேச்சுத் திறன் மேடைப் பேச்சுக்கு வேண்டுமானால் கைகொடுக்கலாம். ஆனால் நேருக்கு நேர் என்ற நேர்காணல்களில் அது பயனளிக்காது என்பதும் அவர் ரங்கராஜ் பாண்டேயின் பல கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் திணறியதைக் காண முடிந்தது. வடி கொடுத்து அடி வாங்குவது என்பார்கள் மலையாளத்தில். அதாவது தன்னுடைய பதில்களாலேயே பல இடங்களில் சங்கடத்தில் சிக்கிக்கொண்டு அவர் தவித்ததைக் காண பரிதாபமாக இருந்தது. ஒரு இடத்தில் நாகரீகமில்லாமல் ஸ்டாலினையும் அழகிரியையும் ஒருமையில் விளித்தபோது ஒரு முதிர்ந்த அரசியல் தலைவருக்கு இது அழகில்லையே என்று பாண்டே சுட்டிக்காட்டியபோது சிவனையும் நாம் அவன், இவன் என்றுதானே அழைக்கிறோம் என்று சமாளிக்க துவங்கி மக்கள் இதை விடவும் மோசமாக பேசுவதை விரும்புகின்றனர் என்று தரம் தாழ்ந்து நின்றபோது இவர் அரசியல் நாகரீகம் இல்லாதவர் மட்டுமல்லாமல் ஒரு அடிப்படை மனித பண்பும் கூட இல்லாதவர் என்பதை காண முடிந்தது.  ஒரு மூன்றாம் தர அரசியல்வாதியைப் போல நொடிக்கொருமுறை அம்மா, அம்மா என்று அம்மா ஜெபம் செய்தே நேர்காணலை சமாளித்தார்.  தான் சார்ந்துள்ள கட்சியின் நோக்கம் என்ன என்பதைக் கூட தெளிவாக சொல்ல முடியாமல் அவர் திணறிய விதம் அவருடைய 'அம்மா'வின் கண்டனத்திற்கும் உள்ளாகியிருக்கும் என்பது நிச்சயம்.
 
அடுத்தது தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருட்டினனுடனான நேர்காணல். இவரும் பல கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் திணறியதைக் காண முடிந்தது. அதற்கு அவருடைய கட்சி அமைத்துள்ள சந்தர்ப்பவாத கூட்டணிதான் காரணம். கொள்கையளவில் எவ்வித ஒற்றுமையும் இல்லாத இரண்டு மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதை நியாயப்படுத்த முடியாமல் திணறியதைக் காண பாவமாக இருந்தது. ஆனாலும் விட்டுக்கொடுக்காமல் சமாளித்த விதமும் தற்போது நாட்டில் வீசும் மோடியின் அலை தமிழகத்திலும் தங்களுடைய கூட்டணியை நிச்சயம் காப்பாற்றும் என்று சொல்லி முடித்ததும் என்னைக் கவர்ந்தது. பாண்டேயின் பல தர்மசங்கடமான கேள்விகளை அவர் பொறுமையுடன் கையாண்டவிதமும் என்னைக் கவர்ந்தது.
 
இறுதியாக ப. சிதம்பரத்துடனான நேர்காணல்.
 
இத்தகைய நேர்காணல்களில் பழம் தின்று கொட்டைப் போட்டவர் என்பதை மிகத் தெளிவாக மீண்டும் ஒருமுறை ப. சிதம்பரம் நிரூபித்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய அரசியல் செயல்பாடுகளில் எனக்கு பல கருத்து பேதங்கள் இருப்பினும் அவருடைய விஷய ஞானமும், பொறுமையும் வாதத்திறனும் அபாரம்.  அவருடைய பல பதில்கள் நேர்காணல் நடத்திய பாண்டேயின் உதடுகளில் புன்னகையை வருவித்தது. அவருடைய பதில்களை ஆமோதிக்கவும் வைத்தது.
 
இந்த மூன்று நேர்காணல்களின் நகல்களும் இதோ.
 
 
ப.சிதம்பரம் தமிழராக பிறந்ததால்தான் அவரால் இன்னும் பிரதமராக முடியவில்லை என்று நினைக்கும் அளவுக்கு அவருடைய பல நேர்காணல்களும் அமைந்துள்ளதை அவற்றைப் பார்த்து ரசித்தவர்களுக்குத்தான் தெரியும். பொருளாதார துறையில் மட்டுமல்லாமல் மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அவருக்கு இணையாக விஷய ஞானம், நிர்வாகத் திறனுள்ள அரசியல் தலைவர்கள் இந்தியாவில் மிகச் சிலரே உள்ளனர் என்றாலும் தவறில்லை என்பது என்னுடைய கருத்து.

சில மாதங்களுக்கு முன்பு அவர் கரண் தாப்பாருக்கு அளித்த நேர்காணலின் உரையாடல் நகலைப் படித்தாலே இது புரிந்துவிடும்.  தன்னுடைய

 கட்சியில் தனக்கு இணையாக உள்ள தலைவர்களை அனுசரித்துச் செல்லவியலாத அவருடைய குணம்தான் திறமையிருந்தும் பிரதமர் பதவிக்கு வருவதற்கு தடையாக உள்ளது என்று கருதுகிறேன். மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாத தலைவர் என்றெல்லாம் கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்பதும் என்னுடைய கருத்து. நல்ல விஷயஞானம், திறமை அதே சமயம் மக்கள் மத்தியில் செல்வாக்கும் உள்ள தலைவர்கள் யாரேனும் இந்தியாவில் உள்ளனரா என்று தேடிப்பார்த்தால் யாரும் இல்லை என்றே பதில் வரும். 
 
இது நாட்டுக்கு மட்டுமல்ல நிறுவனங்களுக்கும் பொருந்தும். விஷயஞானம், திறமை, நேர்மை, செல்வாக்கு என்று அனைத்தையும் பெற்றிருக்கும் தலைவர்கள் அல்லது அதிகாரிகள் நாட்டின்/நிறுவனத்தின் உயர்ந்த பதவியை அடைவது மிக, மிக அபூர்வம். என்னுடைய அனுபவத்தில் இவை ஏதுமே இல்லாமல் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள தலைவர்கள்தான் அதிகம் என்பேன்.  திராவிடக் கட்சிகளின் பல தலைவர்களும் இத்தகையோரே.  ஆகவேதான் இத்தனை வளம் இருந்தும் தமிழகம் இன்னும் இந்திய அளவில் முதலாம் இடத்திற்கு வர முடியாமல் திணறுகிறது. இதிலிருந்து விடுபட வழியே இல்லை என்னும் அளவுக்கு தேசிய கட்சிகள் இங்கு வலுவிழந்துப்போய் விட்டன என்பதுதான் வேதனை.
**************
 
 

 

20 கருத்துகள்:

  1. ஒரு கொள்கையில் உறுதியாக இருந்த வரை நாஞ்சில் சம்பத் தெளிவாகத்தான் இருந்தார் ,சுயநலத்திற்காக இன்னோவா காரில் உட்கார்ந்த நாளில் இருந்தே உளற ஆரம்பித்து விட்டார் !

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய வட இந்திய நண்பன், கரண் தாப்பரை ஜெயலலிதா உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார் என்று ஆச்சரியத்துடன் கூறியது நினைவில் உள்ளது. வார இறுதியில்தான் பேட்டிகளைக் காணவேண்டும். சிதம்பரம் அவர்கள் ஹார்வர்டில் படித்தவர் என்று நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட அளவு தகுதி இருந்தால்தானே அங்கு சேரமுடியும். தாங்கள் கூறுவது போல அவர் தமிழராக இருப்பதும் தலைமைப்பதவியை அடையாததற்குக் காரணமாக இருக்கலாம். தமிழ் நாட்டிலிருந்து, இந்திய அளவுக்கு பிரபலமான அரசியல்வாதிகளும் இல்லை. இப்பொழுதெல்லாம் I.A.S -க்கும் தமிழ் நாட்டிலிருந்து அதிகமானோர் முயல்வதும் இல்லை.

    பதிலளிநீக்கு
  3. நாஞ்சில் சம்பத் அவர்கள் எதிரணியை கீழ்த்தரமாக பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் அவரது பேச்சில் காரம்(?) குறைந்திருக்கிறது என எண்ணுகிறேன். என் செய்ய இது போன்றவர்களின் பேச்சையும் கேட்கவேண்டும் என்பது நம் தலைவிதி.
    தந்தி தொலைக்க்காட்சியில் ரங்கராஜ் பாண்டே அவர்கள் நீங்கள் சொல்வதுபோல் உணர்ச்சிவசப்படாமலும் நிதானம் இழக்காமலும் கேள்விகளை தூய தமிழில் அழகான உச்சரிப்புடன் தொடுப்பதில் வல்லவர் என்பது சரியே. நானும் அவரது நேர்காணல் நிகழ்ச்சியின் இரசிகன்.

    பதிலளிநீக்கு
  4. தமிழ் தொலைக் காட்சிகளில் அரசியல் நேர்காணல் இதுவரை பார்த்ததில்லை. ஆங்கில தொலைக்காட்சி டைம்ஸ் நௌ வில் ஒன்பது மணிக்கு ந்யூஸ் அவரில் யாரையும் ஒழுங்காகக் கருத்து சொல்ல விடாத அர்னாப் கோஸ்வாமியின் நிகழ்ச்சி நாய்ஸ் அவராக இருக்கும் . விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் தொடர்ச்சியாக வருபவரே. யார் எப்படி பேசுவார்கள் என்று யூகிக்கலாம் மீடியாக்கள் செய்திகளைத் தருவதைத் தவிர்த்து கொள்கைகளை உருவாக்குகிறதோ என்னும் சந்தேகம் எழுவதுண்டு. பெரும்பாலும் நடுநிலைமைஇல்லை. அந்த விதத்தில் த ஹிந்து பத்திரிக்கை தேவலாம்.

    பதிலளிநீக்கு
  5. நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்டதில்லை. (இந்தியாவிற்கு வெளியே குடியிருப்பதில் இப்படியும் ஒரு நன்மை!) ஆனால், சிதம்பரம் ...
    தெலுங்கானாவை அவசர அவசரமாக சோனியா பிறந்த நாள் அன்பளிப்பாக அறிவித்ததிலிருந்து எல்லாமே அவரசக் கோலம்.. அள்ளித் தெளி தான்! சென்ற முறை அவர் தேர்தலில் பெற்ற 'வெற்றி' பற்றி எல்லோருக்கும் தெரியும்..

    வேதாந்தா டிரஸ்ட்டில் அரசில் பதவி வகிக்காத சில வருடங்கள் சிதம்பரம் டைரக்டர் ஆக இருந்தார். இவர் பதவிக்கு வந்தவுடன் வேதாந்தா டிரஸ்ட் மிகப் பெரிய அளவில் ஒரிஸ்ஸாவில் மினெரல் அள்ளும் காண்ட்ராக்ட் முதல் பல விதத்தில் பலன் அனுபவிக்கிறார்கள்.
    ‘சேவை’ வரியை பயன்படுத்தி நன்றாக நடந்து கொண்டிருக்கும் எல் ஐ சி யை ஒழித்துக் கட்ட சதி செய்திருக்கிறார் இவர். எட்டு திட்டங்கள் தவிர எல்லா எல் ஐ சி திட்டங்களும் நிறுத்தப் பட்டு விட்டன.. முதலில் டிசம்பர் 31 எல்லா திட்டத்தையும் நிறுத்தி வேறு பெயர்களில் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டு, இன்று வரை வெறும் எட்டு திட்டங்கள் மாத்திரமே வெளியிட்டிருக்கிறார்கள்.. இதனால், 2014 வருட புது வியாபாரம் போன வருட வியாபாரத்தை கணக்கிட்டால் வெறும் 10% கூட இருக்காது! பல வருடங்களாக எல் ஐ சி உடன் போட்டி போட முடியாத தனியார் நிறுவனங்கள் இப்போது கொழிக்கிறார்கள்.. எல் ஐ சி வருமானம் முழுவதும் அரசு திட்டங்களுக்கு கடனாக கொடுக்கப் படுகிறது. இப்போது தனியாருக்கு அந்த வருமானத்தை கொடுக்க வழி செய்திருக்கிறார் சிதம்பரம்..

    காந்தியின் பொன் மொழியே இவரை நன்கு புரிந்து கொள்ள உதவி செய்கிறது..

    Education without a character is a menace. – Gandhi

    பதிலளிநீக்கு
  6. Blogger Bagawanjee KA said...
    ஒரு கொள்கையில் உறுதியாக இருந்த வரை நாஞ்சில் சம்பத் தெளிவாகத்தான் இருந்தார் ,சுயநலத்திற்காக இன்னோவா காரில் உட்கார்ந்த நாளில் இருந்தே உளற ஆரம்பித்து விட்டார் !//

    மிகச் சரியாக சொன்னீர்கள். ஜெ எதிர்பார்க்கும் அளவுக்கு இடங்கள் கிடைக்காவிட்டால் இவரெல்லாம் தூக்கியெறியப்படப் போவது உறுதி!

    பதிலளிநீக்கு
  7. Blogger Bagawanjee KA said...
    ஒரு கொள்கையில் உறுதியாக இருந்த வரை நாஞ்சில் சம்பத் தெளிவாகத்தான் இருந்தார் ,சுயநலத்திற்காக இன்னோவா காரில் உட்கார்ந்த நாளில் இருந்தே உளற ஆரம்பித்து விட்டார் !//

    மிகச் சரியாக சொன்னீர்கள். ஜெ எதிர்பார்க்கும் அளவுக்கு இடங்கள் கிடைக்காவிட்டால் இவரெல்லாம் தூக்கியெறியப்படப் போவது உறுதி!

    பதிலளிநீக்கு
  8. Blogger Packirisamy N said...
    . இப்பொழுதெல்லாம் I.A.S -க்கும் தமிழ் நாட்டிலிருந்து அதிகமானோர் முயல்வதும் இல்லை.//

    இது ஒரு வகையில் உண்மைதான். மேலும் இப்போதெல்லாம் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பைத்தானே இளைஞர்கள் விரும்புகின்றனர்! நட்டவுடனே பூக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்கு ஐ.ஏ.எஸ் படித்தாலும் ஐம்பது வயது வரை பெரிதாக காசு பார்க்க முடியாதே என்று தோன்றுகிறது போலும்.

    பதிலளிநீக்கு
  9. Blogger வே.நடனசபாபதி said...
    நாஞ்சில் சம்பத் அவர்கள் எதிரணியை கீழ்த்தரமாக பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் அவரது பேச்சில் காரம்(?) குறைந்திருக்கிறது என எண்ணுகிறேன். என் செய்ய இது போன்றவர்களின் பேச்சையும் கேட்கவேண்டும் என்பது நம் தலைவிதி. //

    சரியாகச் சொன்னீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    4:50 PM

    பதிலளிநீக்கு
  10. Blogger G.M Balasubramaniam said...
    தமிழ் தொலைக் காட்சிகளில் அரசியல் நேர்காணல் இதுவரை பார்த்ததில்லை. ஆங்கில தொலைக்காட்சி டைம்ஸ் நௌ வில் ஒன்பது மணிக்கு ந்யூஸ் அவரில் யாரையும் ஒழுங்காகக் கருத்து சொல்ல விடாத அர்னாப் கோஸ்வாமியின் நிகழ்ச்சி நாய்ஸ் அவராக இருக்கும் . விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் தொடர்ச்சியாக வருபவரே. யார் எப்படி பேசுவார்கள் என்று யூகிக்கலாம் மீடியாக்கள் செய்திகளைத் தருவதைத் தவிர்த்து கொள்கைகளை உருவாக்குகிறதோ என்னும் சந்தேகம் எழுவதுண்டு. பெரும்பாலும் நடுநிலைமைஇல்லை. அந்த விதத்தில் த ஹிந்து பத்திரிக்கை தேவலாம். //

    விவாதங்கள் பெரும்பாலும் அக்கப்போர்தான். யாருக்கும் எதிரணியினரின் கருத்துக்களை முழுமையாக கேட்டுவிட்டு பதிலளிக்கும் அளவுக்கு பொறுமையும் இல்லை பண்பும் இல்லை. நானும் இவற்றை தவிர்த்துவிடுவேன். நான் சொல்ல வந்தது ஒன் டு ஒன் உரையாடல்கள். அவை சுவாரஸ்யமானதுதான். தந்தி டிவி இணையதளத்தில் சென்றால் முகப்பிலேயே நான் குறிப்பிட்டுள்ள நேர்காணல்களின் சுட்டி கிடைக்கும். ஒரு முறை பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

    இந்து பத்திரிக்கை நடுநிலைமையை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. இலங்கை விவகாரத்தில் அவர்கள் ராஜபக்‌ஷே அரசை ஆதரித்தே பல கட்டுரைகளையும் ஏன் தலையங்கங்களையும் கூட எழுதி நீங்கள் படித்ததில்லையா?

    பதிலளிநீக்கு
  11. Blogger bandhu said...
    நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்டதில்லை. (இந்தியாவிற்கு வெளியே குடியிருப்பதில் இப்படியும் ஒரு நன்மை!)

    தந்தி டிவியின் இணையதள முகப்பிலேயே இவருடைய நேர்காணல் காணொளி உள்ளது. நான் அளித்துள்ள சுட்டிவேலை செய்யவில்லை என்று நினைக்கிறேன். சென்று பாருங்கள்.

    Education without a character is a menace. – Gandhi//

    I don't deny. But I don't think PC is worse than many of our Dravidian leaders.

    பதிலளிநீக்கு
  12. Correct links.

    P.Chidambaram interview.

    http://www.youtube.com/watch?v=U_OiXsewMQs

    Ponnar interview.

    https://www.youtube.com/watch?v=TLvdtE1w8is

    Nanjil Sampath interview

    https://www.youtube.com/watch?v=9_Bl4I1W7Wo

    பதிலளிநீக்கு
  13. Gujaal said...
    Correct links//

    மிக்க நன்றிங்க. சரி செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  14. உங்களுடைய இந்த கட்டுரை ஆரம்பகால ஜூனியர் விகடனைப் போல படிக்க விறுவிறுப்பாக இருந்தது.

    நாஞ்சில் சம்பத் ம.தி.மு.க.வில் இருந்தபோது கருணாநிதியையும் அவரது குடும்பத்தையும் மேடையில் ரொம்பவும் மோசமாக பேசுவார். ஆனால் வை.கோபாலசாமி இதனை கண்டித்ததே கிடையாது. இப்பவும் வை.கோவுக்கும் நாஞ்சில் சம்பத்திற்கும் நல்ல UNDERSIANDING உண்டு. என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.

    நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மோடி ஏதோ அடுத்தவர்கள் கட்டாயத்திற்காக பிரதமர் பதவிக்கு நிற்பதுபோல் இருக்கிறது.

    சிதம்பரம் அவர்கள் இன்னொரு மன்மோகன்சிங். பொதுத்துறை ஊழியர்களின் எதார்த்தமான உண்மை நிலைமையைப் புரிந்து கொள்ள மறுப்பவர்.

    பதிலளிநீக்கு
  15. 3 AM Delete
    Blogger தி.தமிழ் இளங்கோ said...


    சிதம்பரம் அவர்கள் இன்னொரு மன்மோகன்சிங். பொதுத்துறை ஊழியர்களின் எதார்த்தமான உண்மை நிலைமையைப் புரிந்து கொள்ள மறுப்பவர்.//மிகச் சரியான கணிப்பு. ஆனால் மன்மோகன் சிங்கைப் போல் ரிமோட் கன்ட்ரோலுக்கு அடிப்பணியாதவர். ஆகவேதான் அவரால் பிரதமராக முடியாமல் போனது. இல்லையென்றால் ஒரு காலத்தில் ராஜீவ் காந்திக்கு மிக நெருக்கமானவர்களுள் ஒருவராக இருந்தவருக்கு நிச்சயம் பிரதமராயிருக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  16. நீங்கள் சொல்வதைப் போல மோடி விவாதங்களில் பங்கு கொள்வதில் திறமை அற்றவராக இருக்கலாம். ஆனால் ஒரு மாநிலத்தை திறம்பட ஆட்சி செய்து அதை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் திறமை உடையவர் அவர்.விவாத திறன் மட்டுமே நிர்வாகத் திறன் என்பது போல் எழுதியிருப்பது விசித்திரம்! நீங்கள் கூறி இருப்பதைப் போல விவாத திறன் மிக்க சிதம்பரத்தின் நிர்வாகத் திறனையும் அதன் பலனையும் நாடு நன்கு பார்த்து விட்டதே! மோடியை குறை சொல்வது நோக்கம் இல்லாத போதே அவரை இரண்டு முறை இழுத்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. http://muthuvintamil.blogspot.in/2005/12/blog-post_05.html


    Amazing to see you support a cheat who spoiled the indian economy and even planted booby traps for the next government....

    He is clever but not a good man

    பதிலளிநீக்கு
  18. 9 PM Delete
    Blogger Vetrivendan said...
    நீங்கள் சொல்வதைப் போல மோடி விவாதங்களில் பங்கு கொள்வதில் திறமை அற்றவராக இருக்கலாம். ஆனால் ஒரு மாநிலத்தை திறம்பட ஆட்சி செய்து அதை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொண்டிருக்கும் திறமை உடையவர் அவர்.விவாத திறன் மட்டுமே நிர்வாகத் திறன் என்பது போல் எழுதியிருப்பது விசித்திரம்!//

    அப்படியா எழுதியிருக்கிறேன்? இல்லை. ப.சியை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் நிர்வாகத்திறன் அற்றவர் என்று மட்டும் விமர்சிக்க முடியாது.

    நீங்கள் கூறி இருப்பதைப் போல விவாத திறன் மிக்க சிதம்பரத்தின் நிர்வாகத் திறனையும் அதன் பலனையும் நாடு நன்கு பார்த்து விட்டதே! //

    என்னத்தை பார்த்துவிட்டது? கடந்த பத்தாண்டுகளில் நாடு வளர்ச்சியடையேவில்லை என்கிறீர்களா? இத்தகைய வாதங்கள் எதிர்கட்சித் தலைவர்கள் முன்வைப்பது. மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் உங்களுடைய வாழ்க்கைத் தரம் கடந்த பத்தாண்டுகளில் முன்னேறவே இல்லையா?


    மோடியை குறை சொல்வது நோக்கம் இல்லாத போதே அவரை இரண்டு முறை இழுத்து இருக்கிறீர்கள்.//

    மோடியை குறை சொல்ல ஆரம்பித்தால் ஒரு பதிவு போதாதுங்க. எப்படியோ அவரை பிரதமராக தெரிவு செய்ய வேண்டுமென்று தீர்மானித்தாயிற்று. பட்டால் தான் தெரியும் என்பார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  19. M Delete
    Blogger Muthu Thamizhini said...

    Amazing to see you support a cheat who spoiled the indian economy and even planted booby traps for the next government....

    He is clever but not a good man//

    He is knowledgeable, he is efficient. But his arrogance, and inability to get along with his peers in the ministry and outside let him down. Can you name one politician who is a good man?

    பதிலளிநீக்கு