04 செப்டம்பர் 2012

ஶ்ரீலங்கா Vs தமிழ்நாடு!

 
சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் இலங்கையைச் சார்ந்த இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கலாகாது என்று தமிழகத்தைச் சார்ந்த அனைத்து கட்சி தலைவர்களும் (இந்த விஷயத்தில் மட்டும்தான் இவர்களுக்குள் ஒற்றுமை!) ,மத்திய அரசிடம் வற்புறுத்தினர். இதே இராணுவம்தான் இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்ததுடன் தமிழக மீனவர்களையும் காரணமில்லாமல் துன்புறுத்தி வந்ததுள்ளது என்பதால் அந்த கோரிக்கையில் நியாயம் இருந்தது. ஆனால் மத்திய அரசோ இலங்கை நட்பு நாடு என்பதால் பயிற்சி அளிப்பதை தடுத்து நிறுத்த முடியாது என்று கைவிரித்து விட்டது. .
 
ஆனால் சமீபத்தில்  இலங்கை பள்ளி மாணவர்கள் அடங்கிய கால்பந்து அணி ஒன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சென்னை சுங்கத்துறை அணியினருடன் விளையாட அனுமதித்ததற்காக அரங்கின் அதிகாரி ஒருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதும், சென்னை பள்ளி அணி ஒன்றுடன் விளையாட வந்திருந்த வேறொரு இலங்கை பள்ளி ஒன்றின் கால்பந்தாட்ட அணியை முதலமைச்சரின் உத்தரவின் பேரில் திருப்பி அனுப்பியதும் முட்டாள்தனம் என்றே தோன்றிகிறது.
 
காலங்காலமாக நம்மை விரோதியாக பாவித்து வந்துள்ள பாகிஸ்தானியரையே சென்னை இரு கரம் விரித்து வரவேற்கிறது. மருத்துவ சிகிச்சைக்கென அந்த நாட்டிலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் வரலாமாம், வேண்டிய காலம் மட்டும் தங்கலாமாம். ஏனெனில் இன்றும் பாகிஸ்தான் சிறைகளில் வருடக் கணக்கில் அடைக்கப்பட்டிருக்கும் பல இந்தியர்கள் வடநாட்டினர்தானே அதனால் நமக்கென்ன என்ற மனநிலை நமக்கு! ஆனால் இலங்கை விஷயத்தில் அப்படியல்ல. இலங்கை இராணுவம் செய்துவரும் அக்கிரமங்களுக்கு அப்பாவி இலங்கை மாணவர்கள்  (இலங்கையில் இருந்து வருபவர்கள் எல்லாருமே சிங்களர்கள் என்பது பொருளல்ல. ஏனெனில் கால்பந்தாட்ட அணியில் தமிழ் மாணவர்களும் இருக்க வாய்ப்புண்டு!) எந்த வகையில் பொறுப்பாவார்கள் என்பது அம்மையாருக்கே வெளிச்சம்! ஒருவேளை நம்மை முந்திக்கொண்டு கலைஞர் எங்கே எதிர்ப்பு குரல் கொடுத்துவிடுவாரோ என்கிற அச்சம் காரணமாக இருக்கலாம். இதை ஒரு மட்டமான oneupmanship politics என்றுதான் கூறவேண்டும்.
 
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய வேண்டாமா? இரண்டு தினங்களுக்கு முன்பு தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பூண்டி மாதா கோவிலுக்கு வந்திருந்த இலங்கையரை (சிங்களர்கள் என்று பத்திரிகைகளில் குறிப்பிட்டிருந்தாலும் இலங்கையில் கிறிஸ்துவ மதத்தை சார்ந்திருப்பவர்களுள் பெரும்பாலானோர் தமிழர்களே) எதிர்த்து அதிமுகவினரும் வேறு சில துக்கடா கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்களாம்.
 
சில வாரங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து சில இசைச் கலைஞர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு வந்தார்களே, அப்போது ஏன் எதுவும் கூறாமல் மவுனம் சாதித்தன இக்கட்சிகள்? அதாவது இங்கிருந்து யார் வேண்டுமானாலும் இலங்கைக்குச் செல்லலாம் (இந்திய கிரிக்கெட் அணி உட்பட), ஆனால் அங்கிருந்து யாரும் இங்கு வரக்கூடாது! இது என்ன நியாயமோ? இலங்கை அதிபர் இந்தியா வந்தால் எதிர்ப்போம். அல்லது அவருடைய அமைச்சரவை சகாக்கள் வந்தால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். ஆனால் அந்த நாட்டு மக்கள் எவர் வந்தாலும் எதிர்ப்போம் என்றால்......
 
இப்படியே போனால் எதிர் வரும் காலங்களில் சென்னை விமான நிலையத்தின் வாயிலில் நிரந்தரமாக ஒரு கூடாரம் அடித்து இந்த கட்சிகள் இலங்கையிலிருந்து வரும் எவரையும் சென்னைக்குள் விடமாட்டோம் என்று போராட்டம் நடத்தினாலும் வியப்பில்லை!
*******
 
 

5 கருத்துகள்:

  1. unmaidhan,
    pakisthaniyar india virku ediranavargale ..!
    vada indiavil India pak cricket match enna thakkathai erpaduthugiradhu..?
    oru rioting situation arises.
    It is all depending on people sentiment.
    It applies here too.
    The concept if India it self conceived by some people, who did not considered world history . Think of roman empire? Larger than India , Older than India .. but what happened? same thing will happen to less aged , very problematic India too. It is a matter of time.
    So in a Tamilians view Pakistan is a friendly nation.

    பதிலளிநீக்கு
  2. unmaidhan,
    pakisthaniyar india virku ediranavargale ..!
    vada indiavil India pak cricket match enna thakkathai erpaduthugiradhu..?
    oru rioting situation arises.
    It is all depending on people sentiment.
    It applies here too.
    The concept if India it self conceived by some people, who did not considered world history . Think of roman empire? Larger than India , Older than India .. but what happened? same thing will happen to less aged , very problematic India too. It is a matter of time.
    So in a Tamilians view Pakistan is a friendly nation.

    பதிலளிநீக்கு
  3. நூல் விட்டு மீன் அசைகிறதா என நூல் விட்டுப் பார்க்கும் இலங்கையின் தந்திரங்களில் இதுவும் ஒன்று.நீங்கள் காங்கிரஸ் சார்பாளரா என தெரியவில்லை.ஏனென்றால் காங்கிரஸ்காரர்கள் நீங்கள் சொல்வது போன்ற கருத்தையே பிரதிபலிக்கிறார்கள்.

    தமிழகத்தோடு நட்பு கொள்வதா வேண்டாமா என்பதை ராஜபக்சேவும்,இனி வரும் பாட்சாக்களும் தமிழர் நலன் சார்ந்த செயல்பாடுகள் மூலமே நிரூபிக்க முடியும்.அடிப்படைக் காரணங்களும்,கோபங்களும் அப்படியே இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. அடிப்படைக் காரணங்களும்,கோபங்களும் அப்படியே இருக்கின்றன//

    என்னங்க அடிப்படைக் காரணம்? ராஜபக்ஷே மேல கோபம்னா அவர் வரும்போது கூச்சல் போடுங்க, கொடி காட்டுங்க. அப்பாவி இலங்கையர் - அதுவும் பெரும்பாலானோன் இலங்கை வாழ் தமிழர்கள் - ஊர் சுற்றி பார்க்கவோ, தெய்வ வழிபாடுகளுக்கோ வருபவர்களள கல்லெறிவதுதான் தமிழர் பண்பாடா?

    பதிலளிநீக்கு
  5. The concept if India it self conceived by some people, who did not considered world history .//

    You are right. It is the illiterate dravidian parties and some other irrelevant group of people who create such nuisance. They should be treated with iron hand by Police.

    பதிலளிநீக்கு