05 ஜூலை 2011

சமச்சீர் கல்வி கமிட்டி அறிக்கை தாக்கல்!

"சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்த கமிட்டி தன் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், தற்போது இருக்கும் பாடத்திட்டங்கள், நடப்பு வருடத்துக்கு பயன்படத்தக்க வகையில் இல்லை என்றும், பாடத்திட்டங்கள் முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.






இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வி குறித்த வழக்கை 7ம் தேதிமுதல் தினமும் விசாரிக்கும் என்று தெரிகிறது."





செய்தி: தினமணி இணைய தளம்.



இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதானே!



அரசு தலைமைச் செயலர் தலமையில் தனியார் பள்ளிகளுடைய முதலாளிகளுடன் கூட்டு சேர்ந்து அமைக்கப்பட்டுள்ள ஒரு கமிட்டி வேறென்ன சொல்லும்?



ஆனாலும் தமிழகமெங்கும் கல்வியாளர்களும், அரசியல் கட்சிகளும் ஏன், பள்ளி மாணவர்களும் கூட சமச்சீர் கல்வியை உடனே அமுல்படுத்த போராட்டங்களை நடத்தியதை பார்த்த பிறகும் இப்படியொரு அறிக்கையை தயார் செய்து உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஜெயலலிதாவுக்கு நிறைய நெஞ்சுறுதி வேண்டும்.



யார் என்ன சொன்னாலும் எனக்கென்ன, என் வழி தனி வழி, அதில்தான் நான் பயணம் செய்வேன் என்கிற அம்மையாரின் பிறவிக் குணம் மாறவே மாறாது என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சியம் வேண்டும்?



நடக்கட்டும், இன்னும் ஐந்தாண்டுகள் தானே!