10 பிப்ரவரி 2010

புதிதாய் ஒரு ஜனணம்

.

சுமார் முப்பத்தைந்தாண்டுகள். ஒரே நிறுவனத்தில் இத்தனை ஆண்டுகளா என்று இன்றைய தலைமுறையினர் மலைத்துபோகிற அளவுக்கு நீண்டதொரு உறவு. முடிந்துவிட்டதாக நான் நினைத்தாலும் விட்ட குறை தொட்ட குறையாக ஓய்வு பெற்று இன்னும் (இரு வாரங்களாக தினம் ஒருமுறையாவது ) தொடர்கிற தொலைபேசி உறவு..

இனி தினமும் காலையில் எழுந்தவுடன் அவசரகதியில் இயந்திரமாய் குளித்து, உடைமாற்றி ஓடுகிற தலைபோகும் அவசரம் இல்லை. ஆனால் கண் முன்னே நீளும் எட்டு மணி நேரத்தில் என்ன செய்வது என்கிற மலைப்பு... அதை சாதுரியமாய் எதிர்கொள்கிற தெம்பு சற்று குறைவுதான், தற்போதைக்கு. காலப்போக்கில் அது பழகிப்போகுமோ என்னவோ.

ஜனவரி 31ம் தேதி ஓய்வு பெற்றாலும் கடந்த ஒரு வார காலமாக வீட்டை மாற்றி, புதிய வீட்டில் காஸ், தொலைபேசி இணைப்பு என நடையாய் நடந்து.. இன்றுதான் காஸ் வந்தது. தொலைபேசி இனிதான்...

ஓய்வே இல்லை என்கிற நிலைமாறி ஓய்வுதான் நிரந்தரம் என்கிற நிலையில்... துவக்கத்தில் சுகமாகத்தான் இருந்தது என்றாலும் கடந்த சில நாட்களாக ஓய்வே ஒரு சுமைதானோ என்பதுபோன்ற ஒரு மாயை..

ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆவலில் ஒரு தொண்டு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டேன். வருகிற வாரத்தில் வந்து பாருங்கள் என்று வந்த பதில் சற்றே ஒரு நிம்மதியை அளித்துள்ளது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு நாளின் சில மணி நேரங்களாவது இதற்கென்று ஒதுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இறைவன் விட்ட வழி...சென்று வந்து அதைப் பற்றி கூறுகிறேன்.

தனியார் Internet இணைப்பு வசதி இருந்தாலும் பி.எஸ்.என்.எல் வழங்கும்  Broadband அளவுக்கு வேகம் இல்லாததால் எளிதாய் வலையேற்ற முடியவில்லை. Upload பொத்தானை அழுத்திவிட்டு உறங்கப் போய்விடலாம் போன்றதொரு ஆமை வேகம். கேட்டால் ஃபோட்டான் வேகமாம். இதற்குபோய் அப்படியொரு விளம்பரம்... எதற்கு அதிகமாய் விளம்பரம் வருகிறதோ அதன் தரம் குறைவாகத்தான் இருக்கும் என்பது சரிதான் போலிருக்கிறது.

மீண்டும் வருவேன்...

இது எனக்கு இரண்டாம் பிரவேசம்... வேகமில்லாத, ஆர்ப்பாட்டமில்லாத பிரவேசமாய்... கடந்த முப்பதாண்டு நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆசைகளுடன் அமைதியாய் ஒரு...


மீண்டும் சந்திப்போம்.. சில தினங்களில்..

10 கருத்துகள்:

  1. நன்றி அகிலா, ஜோ.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நாளா காணோமேனு நினைச்சேன்!

    /இது எனக்கு இரண்டாம் பிரவேசம்... /
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. திருமண நாள் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  4. ஓ, பணி ஓய்வு பெற்று விட்டீர்களா..
    ஒரே நிறுவனத்தில் 35 வருடம் என்பது அபாரமான சாதனை!! வாழ்த்துக்கள்!
    காதலர் தின & திருமண தின வாழ்த்துக்கள்! :-)

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா3:22 PM

    Dear Sir,

    All the best for your new endevour. I read your Banking experience. Please do post some interesting experience in your own way.

    Regards
    Rangarajan

    பதிலளிநீக்கு
  6. 35 ஆண்டுகள் நெடும் பயணம் நிறைவுற்றது என்று சொல்லுங்கள்.

    நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. Welcome back. When are you going to start suriyan??

    பதிலளிநீக்கு
  8. Welcome back. When are you going to start suriyan??//

    I need some more time for that. May be sometime in August this year. Thanks for the interest shown.

    பதிலளிநீக்கு