30 நவம்பர் 2005

இது எப்படியிருக்கு!!

சவுதியிலுள்ள ஒரு கடைக்கோடி கிராமத்தில் வசித்துவரும் நான்கு சவுதி பெண்கள் தங்களை தினமும் ஏற்றிச் செல்லும் ஒரு வாடகைக்கார் ஓட்டுனரை திருமணம் செய்துக்கொண்டனர்!

எதற்காம்?

Al-Watan செய்தித்தாளின் கூற்றுப்படி சவுதி அரேபியாவிலுள்ள Al-Baha பகுதியைச் சார்ந்த அந்நான்கு பெண்களும் தினமும் தாங்கள் வசித்து வந்த பகுதியிலிருந்து தொலை தூரத்திலுள்ள பள்ளிக்கு சென்று போதித்து விட்டு வருவது வழக்கமாம். தினமும் அவர்களைக் கொண்டு செல்லும் ஓட்டுனரின் நன்னடத்தையால் கவரப்பட்டு நால்வரும் அவரை திருமணம் செய்துக்கொண்டனராம். இந்த விபரீத முடிவுக்கு காரணம் அதுமட்டுமல்லவாம். அவர்கள் போதித்து வந்த பள்ளியிருந்த பகுதியைச் சார்ந்த அவரை திருமணம் செய்துகொண்டால் தினமும் இத்தனை தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்காதே என்று நினைத்தனராம்.

எனவே நான்கு பெண்களும் அவரை திருமணம் செய்துக்கொண்டு தங்களுடைய மாத ஊதியத்தையும் அவருடன் பகிர்ந்துகொள்வது என்று முடிவு செய்தனராம்.

சவுதியில் பெண்கள் வாகனங்களை செலுத்த முடியாது என்பதும் ஆண்கள் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்பதும் இப்பெண்களை இந்த முடிவுக்கு இட்டு சென்றிருக்கலாமோ..

என்னத்த சொல்றது?

நன்றி: தி எக்கானமிக் டைம்ஸ்

21 கருத்துகள்:

  1. பெயரில்லா3:07 PM

    நல்ல வேளை. நாலு பெண்ணுன்னு ஒரு அதிகப்ட்சம் வச்சாங்க. இல்லன்னா நினைச்சி பாக்கவே பயமாயிருக்கு.

    இன்னொன்னு நல்லவேளை அது டாக்சியா போயிருச்சி. இதுவே பஸ்சா இருந்தா.

    அம்மாடியோவ்!!!!!!!

    பதிலளிநீக்கு
  2. மூளையைப் பாவிக்க மறந்த பெண்கள்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா4:17 PM

    அந்த ஆனை நினைத்து பரிதாபப்படுகின்றேன், ஒன்றைவைத்தே தள்ளாடுகிறது கஸ்ரம் இதில் நான்கா...????

    பதிலளிநீக்கு
  4. இன்னொன்னு நல்லவேளை அது டாக்சியா போயிருச்சி. இதுவே பஸ்சா இருந்தா.//

    அதானே!!

    பதிலளிநீக்கு
  5. மூளையைப் பாவிக்க மறந்த பெண்கள் //

    திருமணம்கறது ஒரு வசதிக்காக செய்துக்கொள்ளப்படும் கேலி கூத்தாகிவிட்டார்கள். படிச்சு குடுக்கறவங்களும் சில சமயத்துல மூளைய பாவிக்க மறந்துருவாங்களோ?

    பதிலளிநீக்கு
  6. ஒன்றைவைத்தே தள்ளாடுகிறது கஸ்ரம் இதில் நான்கா...????


    அவருக்கென்ன கஸ்ரம். தேவையில்லேன்னா தலாக், தலாக்குன்னு சொல்லிட்டு போயிருவார். இவியளுக்கு எங்க போச்சி புத்தி? சந்திரவதனா சொல்றா மாதிரி அதைத்தான் அவிக பாவிக்கலையே. கஸ்ரம்டா சாமி!

    பதிலளிநீக்கு
  7. ஜோஸப் ஸார்,

    நம் ஊடகங்களுக்கு இது செய்தியாக இருக்கலாம். பல தார மணம் என்பது மதரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. மதத்தை விடுங்கள். ஏன் இப்படி என்பதற்கு வாழ்வியல் ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன.

    வளைகுடாவில் மணமகன் மணப்பெண்ணிற்கு தட்சணை கொடுக்க வேண்டும். குறைந்த கல்வி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல பிரச்சினைகளில் பல வளைகுடா நாடுகள் சிக்கித் தவிக்கின்றன. நொண்டியடிக்கும் மக்கள்தொகை இன்னொருபக்கம். எல்லாவற்றிற்கும் வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்பவர்களையே நம்பியிருப்பது. மன்னராட்சி என்பதால் மறைமுக எதிர்ப்பு நடவடிக்கைகளை இனங்கண்டு முளையிலேயே கிள்ளி எறிவது; குறைந்து வரும் எண்ணை வளம்; என்று பல பிரச்சினைகள் அவர்களுக்கு.

    செய்தித்தாளில் சொல்லிய மாதிரி இது நகைக்கத் தகுந்த விஷயம் இல்லை என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா8:31 AM

    Interesting News! Thanks for the info

    பதிலளிநீக்கு
  9. சுந்தர் நீங்கள் கூறுவது உண்மைதான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதை நான் வெளியிட்டதற்கு காரணம் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த காரணம்தான். இனி இவ்வளவு தூரம் தினமும் பயணம் செய்யவேண்டியதில்லையே என நினைத்து அந்நான்கு பெண்களும் பள்ளிக்கு அருகிலேயே வசிக்கும் அந்த ஓட்டுனரை திருமணம் செய்துக் கொண்டார்கள் என்பதுதான் ஜீரணிக்க முடியாத, நகைப்புக்குரிய விஷயமாக எனக்குப் பட்டது.

    பதிலளிநீக்கு
  10. இது நகைப்புக்குரிய விஷயமல்ல. திருமணம் என்பது பெருமைக்குரியதாக கருதுகின்றவர்களுக்கு இதனை ஏற்றுக் கொள்வது சிரமமாகவே இருக்கும். இதற்கு அந்தப் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்திருக்கலாம். அந்த நிலையில் அந்தப் பெண்களின் பிரச்சனை எப்படித் தீரும் என்று யாரும் வாதடவரையில் நன்று. வீட்டுக்கு வீடு வாசப்படி.

    பதிலளிநீக்கு
  11. சந்திரவதனாவின் கருத்தே என்னுடையதும்.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா2:27 PM

    அன்பிற்க்கினிய ஜோஸப்...

    ஆர்வ மிகுதியால் கேட்கிறேன். இந்த செய்தியின் சுட்டி இருந்தால் தயவு செய்து தாருங்கள்.
    நான் எகனொமிக் டைம்சில் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. உங்களிடம் இருக்கிறதா..?

    நன்றி
    கதிரவன்.

    பதிலளிநீக்கு
  13. கதிரவன்,

    முதல் பக்கத்துல 'Suddenly something' தினமும் ஒரு நியுஸ் போடுவாங்களே அதுல இருக்கும் பாருங்க. சைட்டுல பாத்தா கிடைக்காது. நானும் தேடிபார்த்தேன்.29த் நவ. பேப்பர் இருந்தா பாருங்க.

    பதிலளிநீக்கு
  14. They were married in a short ceremony, and have agreed to pay the driver a share of their monthly salaries, Al-Watan said.

    ஒரு பெண்ணை மஹர் கொடுத்து மணம் முடிக்க வசதியற்ற பெரும்பாலான சவுதி இளைஞர்களுக்கு மத்தியில் நான்கு பெண்கள் அந்த இளைஞனின் நடத்தையால் கவரப்பட்டு திருமணம் எனும் பந்தத்துக்குள் இருந்து வாழ எடுத்த முடிவு எப்படி விபரீதம் என்கிறீர்கள்? ஒருவேளை அந்த நான்கு பெண்களும் அந்த இளைஞனை திருமணம் செய்யாமல் "வைத்து" இருந்தால் மூளையை பயன்படுத்தியவர்கள் என்றிருப்பீர்கள் போலும்.

    மேலும் நான்கு பேருக்கும் வாழ்வாதாரங்களைக் கொடுப்பது கணவனின் கடமை என்பதே இஸ்லாமிய சட்டம் என்ற நிலையில் அந்த நான்கு பெண்களும் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை கணவனுக்கு கொடுப்பதாகச் சொல்லி இருப்பது முரண்பாடான தகவல்!

    அதிகபட்சம் நான்கு திருமணமங்கள் என்பது பெரும்பாலான சமயங்களில் துஷ்பிரயோகிக்கப் படுவதும், அதற்காக இஸ்லாம் விமர்சிக்கப்படுவதும் காலங்காலமாக பார்த்து வருவதுதான். தோண்டித் துருவினால் எல்லா மதங்களிலும் வெவ்வேறு பெயர்களில் துஷ்பிரயோகங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

    Women are not allowed to drive in Saudi Arabia, while men can marry up to four women according to Islamic law.

    பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்காத சவூதியின் அரசியல் அமைப்பைத்தான் சாட வேண்டுமே தவிர, அந்த பெண்களையும் மணம் முடித்த இளைஞனையும் அல்ல.

    உங்கள் செய்தியை கூகில் பண்ணியதில் கிடைத்த தொடுப்புகள்:

    http://au.news.yahoo.com/051128/15/wzix.html

    http://www.msnbc.msn.com/id/10235951/

    பதிலளிநீக்கு
  15. வாங்க நாலடியார், நன்றி.

    நீங்கள் அளித்திருந்த இரண்டு தொடுப்புகளையும் சென்று பார்த்தேன்.

    இரண்டிலும் திருமணத்திற்கு காரணமாயிருந்ததாய் கண்டதை கீழே கொடுத்துள்ளேன்.


    "Tired of commuting"

    "avoiding a tiring daily commute."

    இதைத்தான் Strange என்று நினைத்தேன். தவறு என்று ஒரு இடத்திலும் நான் குறிப்பிடவில்லை. ஓட்டுனரை விரும்பி திருமணம் செய்துகொண்டார்கள் என்றால் சந்தோஷம். தினசரி பயண களைப்பிலிருந்து தப்பிக்கவும் என்று நினைக்கும்போதுதான் நெருடுகிறது.

    பதிலளிநீக்கு
  16. திரு ஜோசப்

    இதனை சாதாரண செய்தியாகத் தான் சொல்லி இருக்கிறீர்கள் என்று தான் தொடுப்பை முதலில் படித்தபோது நினைத்தேன்.. ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் முத்தலாக் பற்றிய உங்கள் எள்ளலைப் படித்தபோது தான் நீங்கள் எப்படிப்பட்ட பின்னூட்டங்களை எதிர் பார்த்து இதனை இட்டீர்கள் எனப் புரிந்தது.. முத்தலாக் குறித்தும் இசுலாமிய மணங்கள் குறித்தும் பல இசுலாமியப் பதிவர்கள் மிக நீண்ட விளக்கங்கள் அளித்துள்ளனர்.. அதனை எல்லாம் படித்துவிட்டு பின்னர் அவை குறித்து உங்களுக்கு ஐயம் இருந்தால் தெரிவிக்கலாம். அதனை விடுத்து இப்படிப் பொத்தாம் பொதுவான எள்ளலைத் தவிர்க்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    http://abumuhai.blogspot.com/2005/05/1.html

    http://abumuhai.blogspot.com/2005/06/2.html

    உங்கள் பதிவைத் தொடர்ந்து படித்து வருபவன் எனும் உரிமையிலேயே இதனையும் சொல்கிறேன்..

    பதிலளிநீக்கு
  17. ஜோசப் சார்,

    இப்பத்தான் நீங்க உஷாரா இருக்கணும்.உங்களோட இந்த பதிவு ரொம்ப சென்சிட்டிவ் ஆன ஒரு பிரச்சினையை நோக்கி போகுது. அதிக பின்னூட்டம் பெறவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இதை நீங்கள் வளர்த்துக்கொள்ளுங்கள்.இல்லையென்றால் முடித்துக்கொள்ளுங்கள்.
    மேற்படி விளக்கம் வேண்டுமென்றால் கேளுங்கள். சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. ஜோசப் சார்,

    அனுபவித்ததை , பார்த்ததை சொல்றேன்.புரிஞ்சுக்கங்க.

    பதிலளிநீக்கு
  19. வாங்க அட்றா சக்கை, நன்றி.

    வெரி சாரிங்க. நான் ஒன்னை நினைச்சி இந்த பதிவ போட அது உங்கள ரொம்பவும் பாதிச்சிருச்சி.

    உங்க பின்னூட்டத்த பாத்துட்டு என் மகள் சொன்னது: ஏம்பா? உங்களுக்கு தெரியாத விஷயத்த பத்தியெல்லாம் ஏன் எழுதிட்டு இப்படி வாங்கி கட்டிக்கிறீங்க? எத்தனை சத்தியமான விமர்சனம் அவளுடையது?

    செய்தி வெளியிட்டிருந்த பத்திரிகைகளும் அதை ஒரு Trivilஆன விஷயமாகவே வெளியிட்டிருந்ததால்தான் நான் அதை என் பதிவிலும் இட்டேன். என்னுடைய observationஐ தவிர்த்திருக்கலாம் என்று உங்களுடைய பதிவை படித்தபோதுதான் புரிந்தது.

    Very Sorryங்க.

    பதிலளிநீக்கு
  20. வாங்க முத்து,

    நீங்க சொல்றத என்னால புரிஞ்சுக்க முடியுதுங்க.

    இதை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை.

    உங்க கவலை நியாயமானதுதான். நன்றி.

    பதிலளிநீக்கு