18 May 2007

அத்வானியின் புது யோசனை!

புதுதில்லியில் நேற்று துவக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாடு மாநாட்டில் பா.ஜ.க தலிவர் அத்வானி அவர்கள் ஏற்கனவே குழம்பியுள்ள இட ஒதுக்கீடு பிரச்சினையை தன் பங்குக்கு ஒரு புதிய யோசனையை தெரிவித்து மேலும் குழப்பியுள்ளார்.

அதாவது உயர் ஜாதியைச் சேர்ந்த ஏழைகள் மற்றும் முஸ்லீம்களை மேம்படுத்த சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டுமாம். இதற்கு 'உயர் ஜாதியைச் சார்ந்த ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்த முடியும்' என்று சமீபத்தில் மாயாவதி கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தடி சாக்கில் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஏழை முஸ்லீம்களின் கல்விக்காக முஸ்லிம் தலைவர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்று புகழாரம் சூட்டியுள்ளார். அதாவது தென்னிந்திய முஸ்லீம்கள் ஏற்கனவே முன்னேறிவிட்டார்கள் ஆகவே அவர்களுக்கு சலுகைகள் தேவையில்லை என்பதுபோல் இருக்கிறது அவருடைய பேச்சு..

ஏற்கனவே இந்திய அரசியல் சட்டம் 15வது பிரிவில் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா என்ற கேள்வி எழுப்பப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் அதை திசை திருப்பும் நோக்கத்துடனேயே அத்வானி அவர்கள் இந்த புதிய யுக்தியைக் கையாண்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் தொடர்ந்து, 'ஜாதி, மதம், இனம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு இந்தியனும் மேம்பாடு அடையவேண்டும்.' என்கிறார்.

அதாவது ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மாத்திரம் மேம்பாடு அடைந்தால் போதாது. உயர் ஜாதியிலும் பிந்தங்கியோர் உள்ளனர். ஆகவே அவர்களும் மேம்பட சிறப்பு திட்டங்கள் வேண்டும் என்கிறார். இதற்கென்று இட ஒதுக்கீடும் கேட்பார்கள் போலிருக்கிறது.

இதை அப்படியே ஆதரிப்பதாக பாரதப் பிரதமர் அதே மாநாட்டில் தெரிவித்தாலும் பா.ஜ.கவின் உள்நோக்கத்தை அவர் உணர்ந்திருக்கிறாரா என்பதுதான் கேள்விக்குறி.

மேலோட்டமாக பார்த்தால் இந்த யோசனையில் தவறேதும் இருப்பதாக தெரியாது.

ஆனால் இந்த நேரத்தில் இதை முன்வைத்திருப்பதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா?

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இந்த நேரத்தில் இப்படியொரு யோசனை தேவைதானா?

அவருடைய இந்த யோசனையில் உயர்ஜாதியிலுள்ளவர்களைப் போலவே மற்ற ஜாதியிலுள்ளவர்களுக்கும் பொருளாதாரத்தில் பிந்தங்கியவர்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்பதுபோன்ற தொனி ஒலிக்கிறதே?

10 comments:

கோவி.கண்ணன் said...

அத்வானி ஒரு அறிவு ஜீவி அவர் சொன்னால் தப்பாவா இருக்கும் ?
:)

சாதி வேண்டும் ... சாதி பெயரால் இட ஒதுக்கீடு வேண்டாம் ?

இதற்கு என்ன அர்த்தம் நாங்கள் பாதிக்கப்படக் கூடாது ... குழுவும் சிதைந்திடக் கூடாது !

உயர்சாதிக் காரர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் திருந்தாதவரை ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முடியாது. அவர்களுக்கும் அதுதான் வேண்டும். இதில் தேசியவாதம் பேசும் லூசுகளை நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது.

:(

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

உயர்சாதிக் காரர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் திருந்தாதவரை ....//

அவங்க உயர்சாதிக்காரங்களாவே இருக்கணுங்கறதுதான அவங்க கொள்கை!

தப்புன்னு நினைச்சாத்தான திருந்தறதுக்கு?

K.R.Athiyaman said...

From : K.R.Athiyaman, Chennai - 96

To : Thriru.Ki.Veeramani Ayya Avargal, Chennai

Anbulla Ayya,

The creamy layer (that is, those who are upper middle class and above) among BC/SC/ST communities continue to enjoy the benifits of reservation unashamedly.(i hail from such a family).

We propose that economic criteria should also be included as an additional qualification for being eligible for reservation benefits.
Families whose annual income is above say, Rs.1,80,000/- and where the parents are well educated may be deemed as FCs. And many schools,
where annual fees are above Rs.60,000 may be classified as FC schools.

Reservation was meant to be a short term issue and never a permenent institution as it has become now. And there should be a
standing committe consisting of eminent jurists, educationalists and honest people to perodically evaluate the effects/abuse of reservation benefits. The whole process should a dynamic one, not a static one, which is now a vote bank issue and nutured by vested interests. And there should be a
maximum limit for resrvation (and not the present >70%), which should be gradually brought down.

And in promotion among govt staff only seniority, merit and efficency should be the criteria. Only one generation of any family must be eligible for the benefits.
Subsequent generation must be deemed FCs.

Unfair reservation benefits to numerous well off students has created resentment and heart burn among FCs and many fair minded people. The caste divisions has become more rigid and divisive (esp in govt offices).

I am sure Thandai Periyar and Ambedhkar would endorse my above views if they are alive today.
They were basicaly honest in all issues.

DK should have functioned as a bridge between BCs and SCs (esp in rural areas) and established
peace committes for stopping caste clashes. The aliented SCs have formed many organisations of their own to fight for their rights, instead of joinning DK. Blaming brahmins alone for all the ills of the society will not solve any thing.

Thanks & Regards

K.R.Athiyaman
Chennai

tbr.joseph said...

வாங்க அதியமான்,

We propose that economic criteria should also be included as an additional qualification for being eligible for reservation benefits.
Families whose annual income is above say, Rs.1,80,000/- and where the parents are well educated may be deemed as FCs.//

இதெல்லாம் நடைமுறைபடுத்துவது அத்தனை எளிதல்லீங்க..

சரி... ஒரு குடும்பத்தினருடைய ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சம் இருக்க வேண்டும் என்கிறீர்கள். அதை எப்படி உறுதிப்படுத்துவது? ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் சான்றிதழ் பெற வேண்டுமா? அப்படியென்றால் யாரிடமிருந்து? தாசில்தாரிடமிருந்தா?

நாளடைவில் அவர்களுக்கு அளித்துவரும் ஒதுக்கீடு விகிதத்தை குறைக்க வேண்டும் என்கிறீர்கள்... இந்த நாளடைவில்.. என்னும் காலத்தை எப்படி நிர்ணயிப்பது... பாதிக்கப்பட்டவர்களை கேட்டால் இன்னும் அந்த காலம் வரவில்லை என்றும் பாதிக்கப்படாதவர்கள் அது எப்போதோ வந்துவிட்டது என்றும் கூற வாய்ப்புள்ளதே...

இந்த க்ரீமி லேயர் என்ற வாதமே நடைமுறைக்கு ஒவ்வாத வாதம் என்பது என் கருத்து...

இன்றைய தியதியில் யாருமே சாதியின் அடிப்படையில் பிற்படுத்தவர்களென கருதப்பட மாட்டாது என்று அறிவித்துவிடுங்கள்.. ஆனால் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்களை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வருமானத்தின் அடிப்படையில் தரம் பிரிப்பதெல்லாம் ஒவ்வாத காரியம் என்று கருதுகிறேன்..

siva gnanamji said...

ரூ 180000 வருமானமுள்ள குடும்பத்தில 4 பிள்ளைகள் படிக்கின்றன.
ரூ ஒரு லட்சம் வருமானமுள்ள குடும்பத்தில் ஒரே பிள்ளை படிக்கின்றது
இதில் பொருளாதார ரீதியாக மேட்டுக்குடியினர் யார்?

இல்லாத ஊருக்குப் போகாத வழியைக்
காட்டுவது என்பது இதுதானோ?

tbr.joseph said...

வாங்க ஜி!

இல்லாத ஊருக்குப் போகாத வழியைக்
காட்டுவது என்பது இதுதானோ? //

இல்லாத ஊராக இருந்தாலும் பரவாயில்லை.. இது இருக்கின்ற ஊருக்கு தவறான வழியைக் காட்டுவது போலாகும்...

K.R.Athiyaman said...

Or we can classify according to the school fees. or only students from govt and panchayth schools must be preferred.

all this talks evade the main issue of 'real' backwardness. i am BC techinically but to be fair i should be a FC as i had excellent schooling and my parents are well educated.

the economic cirteria can be fixed
using the same methods used to identify the deserving poor for giving govt subsidies and free colour TVs or lands. if such people can be 'identified' and given aid...

and as per Mandal commission judgement by SC, the creamy layer are excluded in employment in central govt using a standard norms. it is already being practised in central govt.

It is hihly unfair and ridiculous that Anbumani's children are classified as MBCs and will get
reservation.

I am from Kongu belt, one of the highly acheiving areas in TN. most of the beneficiaies in my caste/area are really not backward as they get good schooling and come from middle / upper middle class families. and many are off-springs of teachers and professors.

why should more than one generation of a family be benefitted for reservation ? and why reservation is promotions ?
grossly unfair.

And the emergence of SC/STs is
not being tolerated by BC staff in govts. and there is sharp divisions and petty politics and jealosises within the govt depts.

opposite of the objectives.

and our founding fathers of constitution (incl Ambedhkar) did
not envision permenent set up. the
current vote bank politics is making this reservation indefinite
and forever.

is it fair or honest ?

Anbudan
Athiyaman

siva gnanamji said...

ஒரு காலத்தில் சென்னை
மாநகராட்சித்தலைவர் பொறுப்பு
சாதி அடிப்படையில்தான் ரொடேஷனில் விடப்பட்டது. அப்பொழுது எல்லா

சாதியினர்க்கும்
சுழற்சிமுறையில் வாய்ப்பு கிடைத்தது
ஆனால் அம்முறையை திரு
ம .பொ.சிவஞானம் போன்ற
மாபெரும் அறிவுஜீவிகள்(!)எதிர்த்தனர்
திரு ம.பொ.சி அதியமானாக உயிர்த்தெழுந்து வந்தாரோ?
சமூகப்போராட்டத்தை திரு அதியமான்
இன்னும் அறிந்துகொள்ளவேண்டும்
தனிமனித முன்னேற்றம் என்பது சமுதாய முன்னேற்றம் அன்று என்பதை அவர் உணரட்டும்

K.R.Athiyaman said...

I am not opposing reservation per se. only the distortions and abuses
built into the system. Why not a
standing committee of honest and neutral experts to analysis the
effects and results of the reservation system ? The system should be a dynamic one with reviews and corrections in the list and norms ; not the static and rigid one like present. The creamy layer people are shamelessly asking for benifits which they don't deserve. If we analyse the status of the BC list that make it to the Anna University (3 collages), we will find that most of the beneficiaries are from the creamy layer ; and the BCs corner
a good chunk of the open category
seats too.

EVR Periyar and Ambedkar would not have accepted this if they are alive. They are honest and forthright..

Anbudan
Athiyaman

K.R.Athiyaman said...

Dear Friends,

The creamy layer among OBC/SC/ST have been cornering the bulk of the reserved seats at the cost of the poor among them.

Like every other subsidy or dole by govt of India (incl labour policy and exit policy)
reservation policy is full of loopholes and distortions, which is being effectively utilised and safeguarded by vested intersts
masquerading as 'for the people'....

As the FCs are, in effect a minority (less than 30 % of population), all the political parties are silent in this issue, as they vie with each other for the votes of the majority
(OBC and SC/STs) of the populace.

The parliament will enact the bill into law and courts cannot stop this as there is a provision in the constitution.

This is called majoritarianism : imposing the will of the majority of the population on the minority ; and fundamental rights and fair play be damned. Legal sanctity will make it look like right thing.

In Nazi Germany, in 1933-45, the majority of the German people did not object to the genocide
against the minority (Jews mainly). the German state did it with the tacit approval of the
majority of the Germans. But it is a gross violation of fundamental rights of the minorites.

Indians too have become so cynical that the majority is ready to supress the monorites rights.

I am sorry to say that this bill will be enacted even if all the FCs fight against it, as the
majority's will (due to vote share) is being imposed without any inhibition.

Unless and until a party like LP has two thirds majority in parliament, no one can
stop these bills.

TN has shown the ugly way some decades back and hence FCs in TN are resigned to their fate
and not much protest here. And it induces brain drain and mass emigration of FCs. And the
caste feelings and divisiveness increses.

The only positive aspect currently is that the BC/SC/ST youth are no longer under the spell of castist leaders like Ramadoss (PMK) or
Krishnaswamy (SC/ST) and are slowly realising the true nature of these cynical and selfish
leaders, who utilise the castist feeling for their personal improvements. That the vote share
of these leaders is decreasing over the years, is the only silver lining.

K.R.Athiyaman
Chennai -96