10 மே 2006
கலைஞருக்கு ஒரு கடிதம்..
மதிப்பிற்குறிய கலைஞர் அவர்களே!
தாங்கள் மீண்டும் முதல்வரானதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ஐந்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்திருக்கும் தங்களிடம் என்னைப் போன்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை சுருக்கமாகக் கூறவே இக்கடிதம்.
முதல்வர் இருக்கையில் அமர்ந்தவுடன் 'நான் இடும் முதல் கையொப்பம் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலே அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்க உத்தரவிடும் ணையாகத்தான் இருக்கும்' என்றீர்கள்.
நல்ல திட்டம். வரவேற்கப்பட வேண்டிய திட்டம்தான். இல்லையென்று கூறவில்லை. ஆனால் அதை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை நீங்கள் எண்ணிப் பார்த்து ஒரு தெளிவான வரைமுறையை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் அரசு மான்யத்தை உபயோகித்து செயல்படுத்த உத்தேசித்துள்ள திட்டம் ஏழை எளியோர்க்கு, அதாவது உண்மையிலேயே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களை மட்டுமே சென்றடையவேண்டும் என்பதை நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களுடைய கட்சி தொண்டர்கள் இத்திட்டம் சரிவர செயல்பட இடையூறாக இருக்க தாங்கள் அனுமதிக்கலாகாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாணையில் கையொப்பம் இட்ட அதே மூச்சில் தாங்கள் கையொப்பம் இட வேண்டிய வேறோரு ஆணையும் இருக்கிறது. அதுதான் வேலையிழந்து நிற்கும் பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தும் ஆணை. அத்துடன் கடந்த நான்காண்டுகாலமாக அவர்களுக்கேற்பட்டுள்ள பொருளாதார இழப்பையும் தங்களால் இயன்ற அளவு ஈடுகட்டவேண்டும்.
இரண்டாவது.. உங்களுடைய கடந்த ஆட்சிக் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ.. அல்லது உங்களுடைய விருப்பத்துனுடனோ, இல்லாமலோ முந்தைய முதல்வர் ஜெயலலிதாவையும் அவருடைய உடன்பிறவா சகோதரியையும் குறிவைத்து பல விரும்பத்தகாத நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன.
அதுபோன்ற எந்த ஒரு நடவடிக்கையையும் மீண்டும் அவசரப்பட்டு எடுக்கலாகாது என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் மீது ஏற்கனவே தொடுக்கப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை தகுந்தபடி நடத்துவதற்கு கர்நாடகா அரசுக்கு ஒத்துழைப்பு தந்து நடத்திமுடித்தாலே போதுமானது. அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கிடைக்கும் தண்டனையே போதுமானதாக இருக்கும். அதை விட்டுவிட்டு மீண்டும் அவரைக் கைது செய்து அவர் மேல் தேவையில்லாத அனுதாபத்தை ஏற்படுத்திவிடாதீர்கள். என்னைக் கேட்டால் அப்படியொரு அரசியல்வாதி இருந்தார் என்பதையே மக்கள் மறந்துபோகும் அளவுக்கு நீங்கள் அவரை உங்களுடைய நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கிவிடவேண்டும்.
மூன்றாவது. ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஆக்கிக் காட்டுவேன் என்றார். ஆனால் அவருடைய ஐந்தாண்டு கால ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழகம் பின்தங்கிவிட்டது என்று பல பொதுக்கூட்டங்களில் புள்ளி விவரத்துடன் விளக்கினீர்கள். என்னைக் கேட்டால் அதையே நீங்கள் சவாலாக ஏற்றுக்கொண்டு உங்களுடைய ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டை உண்மையிலேயே முதல் மாநிலமாக ஆக்கிக் காட்ட வேண்டும் என்று கூறுவேன்.
நான்காவது. தங்களைப் பற்றி அடிக்கடி கூறப்படுவது. அதாவது வெட்டொன்று துண்டு இரண்டாக முடிவெடுக்காமல் பார்ப்போம், பார்ப்போம் என்று காலந்தள்ளுவது. முக்கியமாக தங்களுடைய கட்சியினர் ஊழலிலும், அராஜகத்திலும் ஈடுபடும்போது உடனே தட்டிக் கேட்காமல் இருப்பது. ஜெயலலிதா எதில் வெற்றி பெற்றாரோ இல்லையோ சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அடாவடி அரசியல் நடத்திவந்த ரவுடிகளின் கொட்டத்தை அடக்கியது என்னைப் போன்ற நடுத்தரவாசிகளுக்கெல்லாம் மிகுந்த ஆறுதலாக இருந்தது. அதே மாதிரியானதொரு சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும்.
ஐந்தாவது. அமைச்சரவை அமைப்பது. தங்கள் மேல் இருக்கிற இன்னுமொரு குற்றச்சாட்டு. வயதானவர்களுக்கே எதிலும் முன்னுரிமை என்பது. தங்களைச் சுற்றி தங்களுடன் கட்சி துவக்கப்பட்ட காலத்திலிருந்தே உண்மையுடனும், விசுசாசத்துடனும் இருந்தவர்களிடம் நன்றியுடன் இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் அதே சமயம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காவினை திறம்பட நடத்திச்செல்லக்கூடியவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு தங்களுடைய அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழலுக்கு இலக்காகியிருந்த எவரையும் இம்முறை அமைச்சரவையில் இடமளிக்காமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். இளைஞர்கள், பட்டதாரிகள், சுயமாய் சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர்கள் இவர்களுக்குத்தான் அமைச்சரவையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஆறாவது. வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்குவது. தங்களுடைய குடும்பத்தாரை எப்போதுமே அரசு பதவிகளிலிருந்து தாங்கள் விலக்கி வைத்திருந்தீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அது இந்த ஆட்சியிலும் தொடர வேண்டும். தங்களுடைய மகன் என்ற காரணத்திற்காகவே திரு. ஸ்டாலின் அவர்களைப் பற்றி பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். சமீபத்திய கணிப்பில் அவருக்கு ஒரு சதவிகித வாக்காளர்களே முதல்வராக வர விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதைக் கேட்க வருத்தமாகத்தான் இருந்தது. தாங்கள் அவரை மீண்டும் சென்னையின் மேயராக இருத்த வேண்டும். அவர் கடந்தமுறை மேயராக இருந்து ஆற்றிய பணிகள் மிகச்சிறந்தவை என்பது என்னைப்போன்ற பலருக்கும் தெரிந்ததே. ஆகவே அவர் தங்களுடைய அமைச்சரவையில் இருப்பதை விட தனித்து சென்னை மாநகராட்சியை நடத்திச் செல்வதே நல்லது என்று நினைக்கிறேன். இரு பதவிகளை ஒருவரால் வகிக்கமுடியாதென்றால் அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தாலும் நல்லதுதான் என்று எண்ணுகிறேன். அத்துடன் திரு.மு.க அழகிரியை தங்களுடைய நேரடி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் வேண்டும்.
ஏழாவது. நீங்கள் தேர்தலின்போது கொடுத்த மற்ற வாக்குறுதிகள். அவற்றுள் விவசாய பெருங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த கடனை ரத்து செய்வதைப் பற்றி மட்டும் கூற விழைகிறேன். அதில் ஐந்து ஏக்கர் மற்றும் அதற்கு குறைவான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களை மட்டுமே தாங்கள் ரத்து செய்ய வேண்டும். பணம் படைத்த முதலைகள் பெற்றிருக்கும் கடன் தொகையையும் ரத்து செய்வதில் எந்த பயனும் இல்லை. மற்றபடி கேஸ் அடுப்பு, கலர் தொலைக்காட்சி பெட்டி வழங்குவது எல்லாம் இப்போதைக்கு முக்கியமில்லை என்றும் கூற விழைகிறேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இவ்விரு திட்டத்தையும் செயல்படுத்த முயலும்போது ஊழல் நடக்க வாய்ப்பிருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்யப் போய் வயதான காலத்தில் தேவையில்லாத தலைவலியை வாங்கிக்கொள்ளாதீர்கள்.
எட்டாவது. போலீஸ் நிர்வாகம். ஜெயலலிதாவைப் போலவே காவல்துறையை தாங்களே தங்களுடைய பொறுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் தாங்கள் வரையறுத்த எல்லைக்கோட்டை விட்டு தாண்டிச்செல்ல அனுமதிக்கலாகாது. முந்தைய ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்திற்காக எவரையும் தகுந்த காரணம் இல்லாமல், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து தகுந்த விளக்கம் கேட்காமல் இடம் மாற்றம் செய்யக்கூடாது.
ஒன்பதாவது. மதுபானக் கடைகள். ஒரு அரசின் தலையாயப் பணி ஆட்சி செய்வ்துதான். வணிகம் செய்வதல்ல. ஆகவே மதுபானக் கொள்முதல், சில்லறை விற்பனை எல்லாவற்றையும் தனியார் மயமாக்கிட வேண்டும். விமர்சனங்களுக்கு அஞ்சாமல் தாங்கள் நேர்மையான முறையில் இவற்றை செயல்படுத்த வேண்டும். அதே போன்றதுதான் கல் மற்றும் மணல் குவாரிகளையும்.. ஆனால் அதே சமயம் எவர் மீதும் பழிவாங்கும் (மிதாஸ் நிறுவனத்தைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு தெரியும்) எண்ணத்துடன் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படலாகாது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்..
பத்தாவது மற்றும் இறுதி வேண்டுகோள்.. தங்களால் உடல் ரீதியாக என்றைக்கு முதலமைச்சராக திறம்பட பணியாற்ற இயலவில்லை என்று நீங்கள் உணர்கிறீர்களோ அன்றைக்கே, அந்த நிமிடமே தாங்கள் தங்களுடைய கட்சி உறுப்பினர்களை சுதந்திரமாக, எவ்வித தலையீடும் இல்லாமல் ஒரு முதலமைச்சரை தெரிந்தெடுக்க வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதே சமயம் இனி வரும் ஐந்தாண்டுகாலமும் தாங்கள் முதலமைச்சர் பதவிலியிருந்து திறம்பட பணியாற்ற தங்களுக்கு நல்ல உடல் வலிமையை அளிக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கும்,
தங்களில் உண்மையுள்ள,
...
இதெல்லாம் உண்மையிலேயே நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் ஜோசப் சார்.ஆனால் ஸ்டாலினை கண்டிப்பாக அமைச்சராக்குவார்கள் என்று தான் தோன்றுகிறது.2 ரூபாய் அரிசி நிச்சயம் உண்டு(சில மாதங்களுக்காவது).புது அரசுக்கு உடனடி தலைவலி ஜூன்12 மேட்டுர் அணைதிறப்பு விவகாரம்தான்.கூட்டணி அரசு அமைந்தால் இன்னும் சிக்கல் தான் அதிகமாகும்.
பதிலளிநீக்குஆனால் இதை எல்லாம் தாண்டி கலைஞர் நல்லாட்சி தருவார் என நம்புகிறேன்.
Lets pray for the best
ஜோசஃப்,
பதிலளிநீக்குஇதை நாளை 11.05.'06 11 மணிக்குமேல் பதிப்பித்திருக்கலாமே! அவ்வளவு நிச்சயமா நம்புகிறீர்களா? உங்கள் நம்பிக்கை பலிக்க வாழ்த்துக்கள்.
சார், முடிவே பண்ணிட்டீங்களா முக தான் அடுத்த முதல்வர்னு, இல்ல, ஜெ -க்கு கடிதம் வந்துட்டேயிருக்கா.
பதிலளிநீக்குகலர் டிவி குடுக்கற மாதிரி பாவ்லா கூட காட்டலன்னா, கத கந்தல்னும், தந்தா, கஜானா காலின்னும் அவருக்குத் தெரியும், பார்க்கலாம் தோழர் எப்படி இதை சமாளிக்க வழி சொல்றார்னு.
சில அவர் செய்யக் கூடியவை, சில அவர் செய்யப் போகாதவை, சில அவரால் செய்ய முடியாதவை...
//ஆனால் ஸ்டாலினை கண்டிப்பாக அமைச்சராக்குவார்கள் என்று தான் தோன்றுகிறது//
பதிலளிநீக்குwhat is ur problem?
after he is in politics for 20 years minimum..
every tom dick and harry are getting opportunities in admk
வாங்க செல்வன்,
பதிலளிநீக்குகூட்டணி அரசு அமைந்தால் இன்னும் சிக்கல் தான் அதிகமாகும்.
உண்மைதான். ஆனால் அப்படி நடக்காது.
ஆனால் இதை எல்லாம் தாண்டி கலைஞர் நல்லாட்சி தருவார் என நம்புகிறேன்.//
நிச்சயமாக தருவார்.
வாங்க சாம்,
பதிலளிநீக்குஅவ்வளவு நிச்சயமா நம்புகிறீர்களா? //
எத்தனை கணிப்புகள்? எல்லாமேவா பொய்த்துப்போகும்?
நிச்சயம் இல்லை.
ராஜ் எழுதியதையே எழுதி, தட்டுவதற்குள், அவரது கருத்து தாவி வந்துள்ளது!
பதிலளிநீக்குஆகவே, திரு ராஜ் முன்மொழிந்ததை, இந்த கிருஷ்ணா வழி மொழிகிறேன்.
சில அவர் செய்யக் கூடியவை, சில அவர் செய்யப் போகாதவை, சில அவரால் செய்ய முடியாதவை... //
பதிலளிநீக்குஉன்மைதான் கிருஷ்ணா. ஆனால் நாம் ஆசைப்படுவதில் தவறில்லையே..
உங்கள் நம்பிக்கையும், வேண்டுகோள்களும் நிறைவேற பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஅவர் (யார் முதல்வர் என்றாலும்) போடக் கூடிய முதல் கையெழுத்து
"வாக்குறுதி, நிறைவேற்றுதல்" போன்ற வார்த்தைகளை தமிழிலிருந்து நீக்குவதற்கான அவசரச் சட்டமாமே!
:-)
வாங்க ராஜ்,
பதிலளிநீக்குஏதும் anti-climax நடந்தேறாமல் இருக்கவும் வேண்டும். //
நிச்சயம் நடக்காது.
உங்க, விஸிடர்ஸ் ஆன்லைன் பட்டியல் கண்ணில் பட்டது. 9 நாடுகளில் இருக்கும் 21 தமிழர்கள் இப்பொது உங்கள் பதிவில் பங்கு கொண்டுள்ளோம். மகிழ்ச்சியாய் இருக்கிறது
பதிலளிநீக்குவாங்க சிபி,
பதிலளிநீக்குஉங்கள் நம்பிக்கையும், வேண்டுகோள்களும் நிறைவேற பிரார்த்திப்போம். //
ஆமாம். பிரார்த்தனைதான் வெற்றியை தரும்.
very good appeal to the C.M
பதிலளிநீக்குhope he may visit this blog also
He should not forget what ANNA did when he was approached by the FORWARD BLOCK members to take action against the police officials involved in mudhukulathoor shooting and 2)the treatment extended to ARUL by ANNA
மாணவர் சமுதாயம் பல பிரச்சனைகளை எதிர் நோக்குகிறது (முக்கியமாக நுழைவுத்தேர்வு). அதிலும் அவர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
பதிலளிநீக்குஎன்னுடைய பேராசை "அனைத்து மாணவரும் கட்டாயமாக தமிழை ஒரு பாடமாக 10ஆம் வகுப்பு வரை படிக்கவேண்டும்" என்ற சட்டத்தை உருவாக்கவேண்டும்.
ஜோசப் சார்,
பதிலளிநீக்குகலைஞர் வெற்றி குறித்து உங்கள் நம்பிக்கையும் ,உங்கள் எதிர்பார்ப்புகளும் பலிக்க வாழ்த்துக்கள்!
ஜி, அருள் விஷயத்தில் அண்ணாவின் அணுகுமுறையை அரைகுறையாய் அறிந்திருக்கிறேன். முடிந்தால் அதைப் பற்றி எழுதுங்களேன். நிறைய பேருக்குத் தெரியாதென நினைக்கிறேன்...
பதிலளிநீக்குவாங்க கிருஷ்ணா,
பதிலளிநீக்குஉங்க, விஸிடர்ஸ் ஆன்லைன் பட்டியல் கண்ணில் பட்டது. 9 நாடுகளில் இருக்கும் 21 தமிழர்கள் இப்பொது உங்கள் பதிவில் பங்கு கொண்டுள்ளோம். மகிழ்ச்சியாய் இருக்கிறது //
அப்படியா? நான் கவனிக்கவில்லை. நம் தமிழ் இளைஞர்கள் இல்லாத திசையே இல்லை போலிருக்கிறது..
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து சொல்லடா என்று சும்மாவா சொன்னார்கள்..?
வாங்க ஜி!
பதிலளிநீக்குhope he may visit this blog also//
அவருக்கு இருக்கற வேலையில.. நீங்க வேற.. இதல்லாம் ஆசையில்லை பேஏஏஏராசை..:)
வாங்க arunmoli,
பதிலளிநீக்குமாணவர் சமுதாயம் பல பிரச்சனைகளை எதிர் நோக்குகிறது (முக்கியமாக நுழைவுத்தேர்வு). அதிலும் அவர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.//
உண்மைதான். நிச்சயம் ஒரு நல்ல நிரந்தரமான முடிவை எடுப்பார்.
வாங்க ஜோ,
பதிலளிநீக்குகலைஞர் வெற்றி குறித்து உங்கள் நம்பிக்கையும் ,உங்கள் எதிர்பார்ப்புகளும் பலிக்க வாழ்த்துக்கள்! //
நன்றி.. நம் எல்லோருடைய நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் நிச்சயம் பலிக்கும்.
எனக்கென்னவோ தங்கள் கணக்கு தவறு எனத்தான் தோன்றுகிறது. எது எப்படியிருந்தாலும் இலவசம் மற்றும் 2ரூபாய்க்கு அரிசி என்பது நடைமுறை படுத்தமுடியாமா? அல்லது 67ல் சொன்னார்களே, 'உச்சம் ரூபாய்க்கு மூன்று படி நிச்சம் ஒருபடி' என அதுவும் இல்லாமல் போனதே.!! இது எப்படியோ கஜானாவை ஒழித்து தனது சொத்தை இருவரும் சேர்த்து கொண்டு நம்மை ஏமாற்றினால் அவர்களது கணக்கு சரி.
பதிலளிநீக்குஜோசப் சார்!
பதிலளிநீக்கு"ஜெ.வுக்கு ஒரு கடிதம்" என்றும் ஒன்று தயார் செய்து வையுங்கள்! நாளைக்கு கண்டிப்பாக அது உபயோகப்படும்!
இது என் நம்பிக்கை! :)
perisu pattai sariya sollunga;
பதிலளிநீக்குthamizhan enru sollada;
thalai nimirndhu NILLADA!
//AVARUKKU IRUKKIRA.....//
appadi nadandha aachariyap padaadheergal
என்னுடைய பேராசை "அனைத்து மாணவரும் கட்டாயமாக தமிழை ஒரு பாடமாக 10ஆம் வகுப்பு வரை படிக்கவேண்டும்" என்ற சட்டத்தை உருவாக்கவேண்டும்.
பதிலளிநீக்குஅருண்மொழியை வழிமொழிகிறேன்.
வாங்க என்னார்,
பதிலளிநீக்குஎனக்கென்னவோ தங்கள் கணக்கு தவறு எனத்தான் தோன்றுகிறது//
உங்களுடைய கணக்கு தவறாகவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்:(
எது எப்படியிருந்தாலும் இலவசம் மற்றும் 2ரூபாய்க்கு அரிசி என்பது நடைமுறை படுத்தமுடியாமா? //
முடியும்னு FM ஏ சொல்லிட்டாரே.. கலைஞர் நினைத்தால் நிச்சயம் முடியும்..
to krisnna
பதிலளிநீக்குANNA was arrested;while he was sent to the lockup his towel was removed using a latti by a highest police official. the official could have asked him to remove the towel. it was considred as an insult....he became cm. the officil met him. at that time cm took his towel,waved it then placed again on his shoulders with a smile. mr arul held the highest post at that time
what is ur problem?
பதிலளிநீக்குafter he is in politics for 20 years minimum..////
Anbazakan is in politics for 40 years.Veerapandi arumugam for more than 30 years.
Hmm...
I wrote that comment because TBR joseph sir said that Mr.karunanidhi should make stalin as mayor and not as minister.I said that it's not going to work out that way.I dont care whether stalin becomes CM or PM.Tamilnadu politics has gone rotten and it wouldnt matter who sits where.
//every tom dick and harry are getting opportunities in admk////
Is'nt this better than dynastic rule?
Even ADMK isnt free of dynastic rule.Its gonna be occupied by dinakaran dynasty after Ms.Jayalalitha.
Both these parties suck.
ஜி!
பதிலளிநீக்குநீங்க ஜி.ஜி. அருளைப் பற்றித்தானே சொல்கிறீர்கள்? அப்போது அவர் சென்னை கமிஷனராக இருந்தார். ஆங்கிலோ இந்தியர். மிகவும் கண்டிப்பானவர். ஆனால் மென்மையானவர். இப்போது அவருடைய மகள் ஜெனிஃபர் அருள் NDTVல் பகுதி நேர நிரூபராக இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
வாங்க இளவஞ்சி,
பதிலளிநீக்குஜெ.வுக்கு ஒரு கடிதம்" என்றும் ஒன்று தயார் செய்து வையுங்கள்! நாளைக்கு கண்டிப்பாக அது உபயோகப்படும்!
இது என் நம்பிக்கை! //
உங்கள் நம்பிக்கை பொய்க்கட்டும். அப்படியே நடந்தாலும் ஜெ வுக்கெல்லாம் கடிதம் எழுதி எந்த பயனும் இருக்காது.. அவர் வழி.. தனீஈஈஈ வழியாச்சே..
வாங்க தருமி அண்ணா!
பதிலளிநீக்குஅருண்மொழியை வழிமொழிகிறேன். //
நான் ஏதாவது சொல்லப்போக.. வேண்டாம் அண்ணா.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை..
ஒன்னே ஒன்னு மட்டும்.. அதனால் பெரிதாக என்ன பலன் நம் பிள்ளைகளுக்கு கிடைத்துவிடப்போகிறது?
நானும் திமுக கூட்டணியே வெல்லும் என்றே எண்ணுகிறேன்.
பதிலளிநீக்குஇந்தத் தேர்தலின் முக்கிய காட்சிகளே அரசு அமைந்தவுடன்தான் ஆரம்பமாகப்போகின்றன.
கூட்டணி நாற்காலியில் பா.ம.க. கால் ஊன்றுவதும், காலை வாரி விடுவதும் திமுக எத்தனை தொகுதிகளில் தனியாக வெல்கிறது என்பதைப்பொருத்துள்ளது.
பாமகாவை ஒதுக்கிவிட்டும் அரசமைக்கவல்ல பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில், கருணாநிதி கூடிய விரைவிலேயே துணை முதலமைச்சராக ஸ்டாலினை அறிவிப்பார் என்றே நினைக்கிறேன். (இல்லாவிட்டாலும்கூட ஆட்சியமைத்து 12 அல்லது 18 மாதங்களுக்குள் இது நடக்கும்)
பாமக அரசில் பங்கு பெறாமல் இருப்பது அதற்கு (மத்தியில் கம்யூ. போல) பொறுப்புச்சுமையற்ற அதிகாரம் என்ற வகையில் அரசியல் leverage-ஐத் தரும். (அன்புமணி மத்திய அமைச்சராக இருக்கையில், மாநில அளவில் அரசில் பங்கு கொண்டு வேறொருவர் வளர்வதை ராமதாஸ் விரும்ப மாட்டார் என்றே எண்ணுகிறேன்).
ஸ்டாலின் படிப்படியாக முதல்வர் நாற்காலிக்குத் தயாராக்கப்படும்போது வெளிவரப்போகும் உள்ளுறை அதிருப்தியைத் திறமையாக தனக்குச்சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்வதில்,
மதிமுகவின் வளர்ச்சியும் எதிர்காலமும் அடங்கியுள்ளது.
இந்தத்தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அடுத்த தேர்தலில் விஜயகாந்த் குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகம்.
அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழக அரசியல் களத்தில் ஒரு watershed என்று சொல்லப்படும் வகையில் குறிப்பிடத்தக்க ஆண்டுகளாக இருக்கப்போகின்றன என்பது மட்டும் நிச்சயம்.
To reiterate: இந்தத் தேர்தலின் முக்கிய காட்சிகளே அரசு அமைந்தவுடன்தான் ஆரம்பமாகப்போகின்றன.
அய்யா...ஸ்டாலிந் கு ஒரு சதவீதம் ஆதரவு என்று யாரும் வருந்தத் தேவை இல்லை.
பதிலளிநீக்குமு.க இருக்கும் போது அவருக்குத்தான் ஆதரவு தெரிவிப்பார்களேயன்றி ஸ்டாலினுக்கு இல்லை.
பட்டியலில் இருவரின் பெயரும் இருந்திருக்கும். எனவே மு.க. விற்கு கிடைத்த ஆதரவில் குறிப்பிட்ட பகுதி ஸ்டாலினுக்கும் உண்டு.
ஜி, நன்றி.
பதிலளிநீக்குவாங்க arunagiri,
பதிலளிநீக்குஉங்களுடைய கருத்துக்களை எப்பவும் போல் ஆணித்தரமாக எழுதியுள்ளீர்கள்..
நீங்கள் எழுதியுள்ளவற்றிற்கு நிச்சயம் நம்முடைய நண்பர்களுள் சிலர் பதிலளிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஆகவே இப்போது நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை..
To reiterate: இந்தத் தேர்தலின் முக்கிய காட்சிகளே அரசு அமைந்தவுடன்தான் ஆரம்பமாகப்போகின்றன. //
நீங்கள் எந்த கண்ணோட்டத்தில் இதை கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நீங்கள் நினைப்பதுபோல் நடக்க வாய்ப்பில்லை. கூட்டணியில் பிளவுகள் வரலாம். ஆனால் நிச்சயம் முதல் இரண்டாண்டுகளில் இருக்காது..
ஸ்டாலின் முதல்வராகும் விஷயம். நிச்சயம் கலைஞர் அவசரப்படமாட்டார் என்றே நினைக்கிறேன்.
//ஒன்னே ஒன்னு மட்டும்.. அதனால் பெரிதாக என்ன பலன் நம் பிள்ளைகளுக்கு கிடைத்துவிடப்போகிறது? //
பதிலளிநீக்குமுதலாம் பானிபட், ஆப்பிரிக்கா கண்டம், பிரெஞ்ச் புரட்சி இவை எல்லாம் பலன் பார்த்தா படிக்கின்றோம்.
தாய்மொழிக் கல்வி குறைந்து கொண்டே வருகிற விஷயம் மிகவும் கவலை அளிக்கக்கூடியது. கல்வியாளர் வசந்திதேவி ஆனந்தவிகடனில் ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார். அதை தயவு செய்து படியுங்கள்.
முடிவே பண்ணிட்டீங்களா கலைஞர்தான் அடுத்த முதல்வருன்னு. பார்க்கலாம் என்ன நடக்குமுன்னு.
பதிலளிநீக்குவாங்க அருண்மொழி,
பதிலளிநீக்குநானும் ஆரம்பப்பளியை விட்டபிறகு தமிழ் படித்ததே இல்லைங்க..
எனக்கென்ன தமிழ் மீது பற்றில்லாமலா போய்விட்டது?
தமிழை வீட்டில் பேசினாலே போதும். தமிழ் மொழியின் மீது பற்று குறையவே குறையாது.
என்னுடைய இரு பிள்ளைகளும் தமிழை பள்ளியில் படித்ததில்லை. ஆனால் இருவருக்குமே தமிழ் எழுத, படிக்க நன்றாக வரும். வீட்டில் தமிழைத்தவிர வேறெந்த மொழிக்கும் குறிப்பாக ஆங்கிலம் அனுமதியில்லை.
அதில் பெற்றோர்கள் கண்டிப்பாக இருந்தால் போதும்.
//முதலாம் பானிபட், ஆப்பிரிக்கா கண்டம், பிரெஞ்ச் புரட்சி இவை எல்லாம் பலன் பார்த்தா படிக்கின்றோம்.
பதிலளிநீக்குதாய்மொழிக் கல்வி குறைந்து கொண்டே வருகிற விஷயம் மிகவும் கவலை அளிக்கக்கூடியது. கல்வியாளர் வசந்திதேவி ஆனந்தவிகடனில் ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார். அதை தயவு செய்து படியுங்கள்./
நிஜம் தான்.தாய் மொழிக்கல்வி தேவை.எத்தனையோ பிள்ளைகள் ஆங்கிலத்தை புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதை நான் பார்த்ததுண்டு.
அனால் அதை ஆரம்பத்திலேயே செய்ய தவறிவிட்டோமோ என்று தோன்றுகிறது.
It could be too late to revert.
//கல்வியாளர் வசந்திதேவி //
ஒன்னு கவனிச்சேன்.அந்த கட்டுரையில தேவையில்லாம ரானுவ செலவு பத்தி அதுல ஒரு (தவறான) செய்தி.எல்லாருக்கும் இரானுவம்ன்னா ஒரு இளிச்சவாய்த்தனம்.(சாகுறதுக்கு போறவன் தானே!- sarcasm)
வாருங்கள் மணிகண்டன்,
பதிலளிநீக்குஎனவே மு.க. விற்கு கிடைத்த ஆதரவில் குறிப்பிட்ட பகுதி ஸ்டாலினுக்கும் உண்டு. //
இருக்கலாம். ஆனாலும் அவருக்குக் கிடைத்ததை விஜயகாதுடன் ஒப்பிட்டுப்பார்த்தபோதுதான் கஷ்டமாக இருந்தது.
ஸ்டாலின் பேச்சை வெகுவாகக் குறைத்துக்கொண்டதால்தான் மக்களுக்கு (குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு) அவருடைய திறமையைப் பற்றி சரியாகத் தெரியாமல் போய்விட்டதோ என்றும தோன்றியது.
வாங்க முத்து,
பதிலளிநீக்குமுடிவே பண்ணிட்டீங்களா கலைஞர்தான் அடுத்த முதல்வருன்னு. //
ஏன் உங்களுக்கு வேற யாரும் வருவார்னு தோணுதா என்ன?
நிச்சயம் வருவார்.
ஜி!
பதிலளிநீக்குperisu pattai sariya sollunga;
thamizhan enru sollada;
thalai nimirndhu NILLADA!/
எழுத்துப்பிழைங்க.. உங்க குட்டு கொஞ்சம் பலமா விழுந்து மண்டையில ஒரு குழியே விழுந்திருச்சி.. ஹி..ஹி..
"நான் ஏதாவது சொல்லப்போக.. வேண்டாம் அண்ணா.. நான் இந்த விளையாட்டுக்கு வரலை.."
பதிலளிநீக்குசேற்றுக்கு அஞ்சி மாற்றுக்கருத்துகளை
மறைக்க வேண்டி வருவதில் தோற்றுப்போவது
துணிவு மட்டுமல்ல.
"ஒன்னே ஒன்னு மட்டும்.. அதனால் பெரிதாக என்ன பலன் நம் பிள்ளைகளுக்கு கிடைத்துவிடப்போகிறது?"
மேலோட்டமாகக் கேட்கப்பட்டதுபோல் தோன்றினாலும் தமிழ் வளர வேண்டுமானால் உண்மையிலேயே செய்ய வேண்டுவது தமிழ் படிப்பதனை தனி மனித பொருளாதார மேம்பாட்டுடன் நேரடித்தொடர்பு உடையதாக ஆக்குவதே. அன்று பண்டிதர்களிடம் சிறைப்பட்டிருந்த தமிழ் பாரதியால் விடுதலை அடைந்தது போல, வெறும் அதிகாரப்படிக்கல்லாக இன்று ஆகி விட்ட தமிழ் அரசியல்வாதிகளின் கையிலிருந்து விடுதலை அடைய வேண்டும். "தமிழ் படித்தால் என்ன உபயோகம்?" என்பதற்கான பதில் ஆக்க பூர்வமாக கண்கூடாக்கப்பட வேண்டும்.
வாங்க சமுத்ரா
பதிலளிநீக்குநிஜம் தான்.தாய் மொழிக்கல்வி தேவை.//
அது இந்தியா முழுவதும் ஒரே மொழி தாய்மொழியாகும்போது.. ஆங்கிலம் பயிலவில்லையென்றால் இந்தியாவிலேயே குப்பைக் கொட்ட முடியாது என்ற சூழ்நிலையில் இது எப்படிங்க சாத்தியமாகும்?
சேற்றுக்கு அஞ்சி மாற்றுக்கருத்துகளை
பதிலளிநீக்குமறைக்க வேண்டி வருவதில் தோற்றுப்போவது
துணிவு மட்டுமல்ல.//
அடடா.. தமிழ் உங்க கையில ஜொலிக்குத்து arunagiri..
தமிழைப் பற்றி என்னுடைய கருத்துக்கு ஏற்கனவே பல எதிர்ப்புகளை கிளப்பியிருக்கின்றன என்பதை மனதில் வைத்துத்தான் மீண்டும் ஒரு சர்ச்சையில் நான் இறங்க விரும்பவில்லை..
தமிழை இலக்கிய கண்ணோட்டத்துடன் விரும்பி படிப்பது வேறு.. பிள்ளைகளுக்கு ஒரு பாடமாக வைத்து கட்டாயப்படுத்துவது வேறு.. இன்று பள்ளியில் பிள்ளைகள் பயில்வதே மிக அதிகம் என்று நினைப்பவன் நான். என்னைப் போன்று இரண்டுவருடங்களுக்கு ஒருமுறை மாற்றலாகிப் போனவர்களுக்குத்தான் இதனுடைய சிரமம் புரியும். என் இரு மகள்களுமே ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு.. ஏன் மலையாளம் கூட பள்ளிகள் படித்து தொலைக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்கள்.. மாநிலத்திற்கு ஒரு மொழி என்று இருக்கும் இந்தியாவில் பிள்ளைகள் படும்பாட்டை நாம் உணர்ந்திருக்கிறோமா என்பதுதான் என்னுடைய கவலையெல்லாம்.
"To reiterate: இந்தத் தேர்தலின் முக்கிய காட்சிகளே அரசு அமைந்தவுடன்தான் ஆரம்பமாகப்போகின்றன. //
பதிலளிநீக்குநீங்கள் எந்த கண்ணோட்டத்தில் இதை கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நீங்கள் நினைப்பதுபோல் நடக்க வாய்ப்பில்லை. கூட்டணியில் பிளவுகள் வரலாம். ஆனால் நிச்சயம் முதல் இரண்டாண்டுகளில் இருக்காது.."
இதே கண்ணோட்டத்தில்தான் நானும் எழுதினேன். ஆட்சி அமைந்தவுடனேயே ஏதும் நடக்கத்தொடங்கி விடும் என்று நானும் நினைக்கவில்லை. இந்தத்தேர்தலைவிட அடுத்த ஐந்தாண்டுகளே தமிழக அரசியல் களத்தில் முக்கியமாகப்போகின்றன என்ற பொருள்படவே அவ்வாறு எழுதினேன். மாற்றங்கள் 12- 18 மாதங்களில் வரத்தொடங்கலாம். ராமதாஸ் மண்குதிரை ஐந்தாண்டு ஆற்றினைக் கடக்காது. இதில் ஒரு விஷயம் என்னவென்றால் விஜயகாந்த் போன்றவர்கள் கூட வலுப்பெற சாத்தியமிருக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் சிதம்பரம் போன்றவர்களோ ஐந்தாண்டுகள் கழிந்தும் இன்றுள்ள நிலையிலேயே இருப்பார்கள் என்பதுதான்.
"தமிழ் உங்க கையில ஜொலிக்குத்து arunagiri"
பதிலளிநீக்கு"ஜொலிக்குத்து"? இதில் ஏதும் உள்குத்து வெளிக்குத்து இல்லையே சார்? :))) (ச்சும்மா)
மிக்க நன்றி.
"என் இரு மகள்களுமே ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு.. ஏன் மலையாளம் கூட பள்ளிகள் படித்து தொலைக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்கள்.."
படிக்கையில் தொல்லைபோல் இருப்பினும் இது கட்டாயம் அவர்களுக்கு ஒரு assetதான். ஐரோப்பாவில் இதுபோன்ற நிலை சகஜம். நீங்கள் அறியும் ஒவ்வொரு மொழியும் அவர்களுக்கு ஒரு additional கை போல. வெளிநாட்டில் வேலைக்குச்சென்றால் தவிர, பல இந்திய மொழிகள் தெரிவது ஒரு unique advantage. பல மாநிலங்கள் கண்ட நீங்களும் இதனை ஒப்புக்கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.
ராமதாஸ் மண்குதிரை ஐந்தாண்டு ஆற்றினைக் கடக்காது. //
பதிலளிநீக்குடாக்டர் ராமதாஸ் அடுத்த ஐந்தாண்டுகளில் மீண்டும் தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டால் மக்கள் மத்தியில் என்ன மதிப்பிருக்கும் என்பதையும் அவர் நினைத்துப்பார்ப்பார்த்துத்தான் எந்த முடிவுக்கும் வருவார் என்று நினைக்கிறேன்.
இதில் ஒரு விஷயம் என்னவென்றால் விஜயகாந்த் போன்றவர்கள் கூட வலுப்பெற சாத்தியமிருக்கும் //
அவர் முதலில் அடுத்த ஐந்தாண்டுகள் பொதுவாழ்வில் நிலைத்து நிற்க வேண்டுமே..
அடுத்த 5 ஆண்டுகளில் சிதம்பரம் போன்றவர்களோ ஐந்தாண்டுகள் கழிந்தும் இன்றுள்ள நிலையிலேயே இருப்பார்கள் என்பதுதான்//
அவர் மட்டும் நினைத்தால் போறாதே.. ஒருவேளை காங்கிரஸ் மேலிடம் கூட்டணியிலிருந்து விலகலாம் என்று தீர்மானித்தால் அவரும் மாறித்தானே ஆகவேண்டும்..
இதெல்லாம் நடக்கக்கூடாது என்றுதான் நாம் எல்லோருமே விரும்புகிறோம்..
"ஜொலிக்குத்து"? இதில் ஏதும் உள்குத்து வெளிக்குத்து இல்லையே சார்? ://
பதிலளிநீக்குநிச்சயமா இல்லை அருணகிரி. நீங்கள் ஆங்கிலமும் மிக அழகாக எழுதுகிறீர்கள். என்னுடைய மும்பை மாற்றத்தையொட்டி என்னுடைய மூத்த மகளை என்னுடைய சகோதரர் வீட்டில் விட்டுச் சென்றதைப் பற்றி நீங்கள் எழுதிய பின்னூட்டம் இன்னும் அப்படியே நினைவில் நிற்கிறது.. அதற்கு நான் எழுதிய பதிலை படித்தீர்களோ தெரியவில்லை. ஆனால் உங்களுடைய கருத்து மிகவும் அருமையாக இருந்தது..
வெளிநாட்டில் வேலைக்குச்சென்றால் தவிர, பல இந்திய மொழிகள் தெரிவது ஒரு unique advantage. பல மாநிலங்கள் கண்ட நீங்களும் இதனை ஒப்புக்கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்//
உண்மைதான் எனக்கே அது பலவகைகளில் உதவியிருக்கிறது.. ஆனால் அந்த பள்ளிப்பருவத்தில் நானும் என் பிள்ளைகளும் என்ன பாடுபட்டிருப்போம்.. இப்போது நினைத்தாலும் நடுங்குகிறேன்..
4 ஆண்டு முதல்வராக இருந்து சாதிக்காததை ஐந்தாவது முறையாக முதல்வரானதும் என்னத்த சாதிக்க போகிரார்//
பதிலளிநீக்குஎன்ன செல்வன் இப்படி சொல்லிட்டீங்க? கலைஞர் சாதிக்காதவற்றையா ஜெ சாதித்துவிட்டார் என்கிறீர்கள்?
கலைஞர் முதல்வர் பதவியேற்றால் ஜெயலலிதாவைப்போல் துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும்//
பதிலளிநீக்குநிச்சயம் எடுப்பார் தமிழ்முஸ்லீம்!
ஆனா உங்க உதாரணம்..
உள்நோக்கம் இல்லாத முடிவுகள் என்கிறீர்களா? நிச்சயம் இல்லை..
வாங்க அரவிந்தன்,
பதிலளிநீக்குஒரு காலத்தில் கண்ணியத்துடன் இருந்த இவர்கள் இன்று மூன்றாந்தர ஆட்களைப்போல் கேவலமாக (படித்த அரசியல்வாதிகள் கூட) அடித்துக் கொள்கின்றனர்.//
அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே.. யாரும் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர விரோதியும் இல்லையே..
இதற்க்கெல்லாம் சரியான தீர்வு வேறு ஒரு புதிய கட்சி அல்லது நல்ல கண்ணியமான தலைமை உருவாக வேண்டும். //
இனி ஒரு கட்சியா? அதுவும் சில வருடங்களுக்குள்ளாகவே தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளுமே..
கண்ணியம் என்பது ஒரு ரிலேட்டிவ் டேர்ம்.. ஒவ்வொருவருடைய கண்ணோட்டத்தைப் பொறுத்தது. அரசியல்வாதி மட்டுமே கண்ணியத்துடன் நடந்துக்கொள்ளவேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம் என்று எனக்கு விளங்கவில்லை.. கண்ணியம் நம் எல்லோருக்குமே தேவையாயிற்றே.. அதை நாம் உணர்ந்திருக்கிறோமா? அப்படிப்பட்டவனை பிழைக்கத்தெரியாதவன் என்றுதானே பட்டம் கட்டிவிடுகிறோம்.. பிழைக்கத்தெரியாத அரசியல்வாதி நாட்டையே செல்லாக்காசாக்கிவிடுவானே..
இதை நான் என் மனைவி சார்பாக கண்டிக்கிறேன் //
பதிலளிநீக்குஆனா ராஜ். உங்க மனைவிக்கு மலையாளம் எழுத, படிக்க தெரியாதுதானே.. படிச்சிருந்தா தெரியும் அது எவ்வளவு தொல்லைப் பிடிச்ச மொழின்னு.. தெலுங்கும் அதுமாதிரிதான்.
STALIN and VASAN are the leaders
பதிலளிநீக்குwho toured all over tamilnadu...all others have restricted thenselves to selected pockets of tamilnadu, leave alone the octogeneraian
being the son of MK is not a disqualification as it is not a qualification
முதல்ல அவர் சொந்தமாக நடக்கட்டும். பிறகு சொல்லலாம் அவர் சொந்தமாக சிந்தித்து முடிவுகள் எடுத்து செயல்படுவாரா என்பதை...
பதிலளிநீக்குவாங்க ஜி!
பதிலளிநீக்குSTALIN and VASAN are the leaders
who toured all over tamilnadu...//
சரியாகச் சொன்னீர்கள் ஜி!
ஸ்டாலினை விஜயகாந்துடன் ஒப்பிடுவதுதான் துரதிர்ஷ்டமான விஷயம்.
வாங்க ரவி,
பதிலளிநீக்குமுதல்ல அவர் சொந்தமாக நடக்கட்டும். //
This is hitting below the belt Ravi. It is not fair..
///என்னைக் கேட்டால் அப்படியொரு அரசியல்வாதி இருந்தார் என்பதையே மக்கள் மறந்துபோகும் அளவுக்கு நீங்கள் அவரை உங்களுடைய நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கிவிடவேண்டும். ///
பதிலளிநீக்குமிக சரியானதே
நல்ல பதிவு ஜோசப்.நடக்குமா என்று பார்ப்போம்.
நடக்கும் என்று நம்புவோம்.
நமக்கும் வயசாகும் சாரே..எல்லாரைப் போலவும். எண்பதுகளை விடுங்கள், எழுபதுகளிலேயே, நம்மில் பெரும்பாலோர் அக்கடா என உட்கார்ந்திருப்போம்.
பதிலளிநீக்குவாங்க சித்தி,
பதிலளிநீக்குஆனால் அவரை தி.மு.க வில் உள்ளவர்கள் முதலமைச்சர் ஆக்குவார்களா?.... அட தயாநிதி & கோ. விடுவார்களா பொருத்துஇருந்து பார்ப்போம்..... //
ஸ்டாலைனை முதலமைச்சராக்குவதற்கு கழகத்திற்குள்ளேயே நிறைய எதிர்ப்புகள் உள்ளன என்பதை நாம் எல்லோருமே அறிந்ததுதான். ஆனால் தயாநிதிக்கு இதில் எந்த ரோலும் இருக்காது என்பது நிச்சயம். ஏனென்றால் தலைகீழாக நின்றாலும் ஸ்டாலினுடைய அரசியல் அனுபவம் தயாவுக்கு இல்லவே இல்லை. அவர் ஒரு மனமுதிர்ச்சியில்லாத ஒரு இளைஞர். இனியும் ஒரு ஐந்தாறு வருட அரசியல் வாழ்க்கைக்குப் பிறகு வேண்டுமானால் அவர் இப்படி ஒரு கனவு காணலாம்.
சார், உங்க தம்பி படத்தை இப்பத்தான் பார்த்தேன். ஜம்முன்னு இருக்காறே!!
பதிலளிநீக்குவாங்க மனசு,
பதிலளிநீக்குநடக்கும் என்று நம்புவோம். //
நம்பிக்கைதானே வாழ்க்கை..
ஜோசப் சார், முதன்முறையாக உங்கள் வலைப்பக்கதிற்கு விஜயம் செய்திருக் கிறேன். உங்களைப்பற்றிய விவரம் அறிய முற்பட்டபோது உங்களுக்கு பிடித்தது மாலி சிட்டிபாபுவின் புல்லாங்குழல் என்று தெரிந்தது. எனக்குத் தெரிந்து சிட்டிபாபு வீணை வாசிப்பதாக ஞாபகம். ஒருவேளை எனக்கு சரியாகத் தெரியவில்லையோ?
பதிலளிநீக்குநல்ல ஞாபக சக்தி தான் சார்..//
பதிலளிநீக்குஏதோ கொஞ்சம் இருக்கு ராஜ்..
கழகத்துக்குள்ள எதிர்ப்பா? என்ன சார் சொல்றீங்க. அப்படி எதிர்ப்பவங்க எல்லாம் வைகோ பின்னால போயாச்சி. இப்போ ரூட் கிளியர்.
பதிலளிநீக்குஎன்ன, ஒரு இரண்டு வருஷம் கழித்தென்றால், தந்தைக்கும் நற்பெயரைப் பெற சமயமிருக்கும், மகனுக்கும் ஆட்சியில் காலூன்றி, மக்கள் மதிப்பைப் பெற சமயமிருக்கும், மீண்டும் ஸ்டாலின் 2011ல் வரவேண்டுமென்றால் நல்லாட்சி ஒன்றே வழியென்பதால், நல்லவை நடக்க வாய்ப்புகள் இருக்கும் என்பதால் மக்களுக்கும் நலமாயிருக்கும்.
வாங்க சந்தர்,
பதிலளிநீக்குசிட்டிபாபுவின் புல்லாங்குழல் என்று தெரிந்தது. எனக்குத் தெரிந்து சிட்டிபாபு வீணை வாசிப்பதாக ஞாபகம்.//
நீங்க சொல்றதுதான் சரி. நான் அப்படியா எழுதியிருக்கேன்? ரொம்ப நாளைக்கு முன்னால எழுதியது. பார்த்துட்டு கரெக்ட் பண்ணிடறேன்..
சுட்டிக்காட்டியதற்கு நன்றி..
அடிக்கடி வாங்க..
arul anglo indian aa? are you shure?
பதிலளிநீக்குi am under the impression that he hails from a christian family from tuticorin (may be from A,V.THOMAS group)
pls correct me if i am wrong
ஜோசப் சார். கொஞ்சம் அவசரப் பட்டு விட்டீர்களோ என்று தோன்றுகிறது. உங்கள் விருப்பம் எனக்குப் புரிகிறது. ஆனால் நடந்த மிகவும் வித்தியாசமான தேர்தலில் வித்தியாசமான அளவுக்குக் கூடிய வாக்குப்பதிவில் நான் என்னுடைய ஊகத்தைத் துடைத்துச் சும்மா வைத்திருக்கிறேன். நாளைக்கு முடிவுகள் வரட்டும். பிறகு வாழ்த்துக் கடிதம் போடலாம்.
பதிலளிநீக்குஎன்னுடைய விருப்பம் என்று உண்டு. எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்கப் பெரும்பான்மை பெறக்கூடாது. அத்தோடு போட்டியிட்ட கூட்டணிக்கட்சிகள் அத்தனையையும் கூட்டிக் கொண்டால்தான் மெஜாரிட்டி கிடைக்க வேண்டும். இன்றைய சூழலில் அதுதான் நன்று என்று தோன்றுகிறது.
திமுகவில் கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் என்பது முடிவான விஷயம்தானே.
முத்து, இருபது வருடங்களாக அரசியலில் இருப்பது தகுதி என்று சொல்வது சரிதான். அப்படியானால் 20 வருடங்களாக அரசியலில் இல்லாத தயாநிதி வருவது சரியா? இதை விவாதத்திற்காகக் கேட்கவில்லை. நீங்கள் இவ்வளவு சீற வேண்டியதில்லை என்பதற்காகச் சொன்னேன். :-) அதிமுகவில் இருப்பதால் திமுகவில் இருக்கலாம் என்றால் இரண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும்.
அதிமுகவோ, திமுகவோ யார் பதவிக்கு வந்தாலும் அவர்களது இலவச வாக்குறுதிகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குகொஞ்சம் அவசரப் பட்டு விட்டீர்களோ என்று தோன்றுகிறது.//
அப்படீங்கறீங்க? பார்க்கலாம்.
இன்றைய சூழலில் அதுதான் நன்று என்று தோன்றுகிறது.//
எனக்கு அப்படி தோணலை ராகவன். அது தேவையில்லாத குழப்பத்தைத்தான் விளைவிக்கும்..
அதிமுகவோ, திமுகவோ யார் பதவிக்கு வந்தாலும் அவர்களது இலவச வாக்குறுதிகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.//
ஆனால் சம்பந்தப்பட்டவங்க வருத்தப்படுவாங்களே..
கழகத்துக்குள்ள எதிர்ப்பா? என்ன சார் சொல்றீங்க. அப்படி எதிர்ப்பவங்க எல்லாம் வைகோ பின்னால போயாச்சி. //
பதிலளிநீக்குஅப்படியா சொல்றீங்க கிருஷ்ணா?
மீண்டும் ஸ்டாலின் 2011ல் வரவேண்டுமென்றால் நல்லாட்சி ஒன்றே வழியென்பதால், நல்லவை நடக்க வாய்ப்புகள் இருக்கும் என்பதால் மக்களுக்கும் நலமாயிருக்கும்.//
உண்மைதான்.
ஐயா! புகைப்படம் மாற்றியிருக்கிறீர்கள் போல் தெரிகிறது!
பதிலளிநீக்கு:-)
arul anglo indian aa? are you shure?
பதிலளிநீக்குஜி! I am sure. One of my friends' Dad was working under him when he was in service.
//அதை விட்டுவிட்டு மீண்டும் அவரைக் கைது செய்து அவர் மேல் தேவையில்லாத அனுதாபத்தை ஏற்படுத்திவிடாதீர்கள். என்னைக் கேட்டால் அப்படியொரு அரசியல்வாதி இருந்தார் என்பதையே மக்கள் மறந்துபோகும் அளவுக்கு நீங்கள் அவரை உங்களுடைய நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கிவிடவேண்டும். //
பதிலளிநீக்குசபாஷ் சார். நல்ல அறிவுரை. நம்மளை மாதிரி சாதாரண ஆடகளுகே இருக்கிற இந்த அறிவு அவருக்கு எப்படி இல்லாம போச்சுன்னே தெரியலை. ஈ என்றால் மலத்தில் கூட சென்று அமர்ந்து மல்லுக்கட்டும். தேனி பூக்களிடம் மட்டுமே செல்லும். நாம பதில் சொல்ல நம்ம எதிரிக்கு அருகதை இருக்க வேண்டாமா..?? அருகதை கெட்டவர்களை அலட்சியப்படுத்த வேண்டாமா..? என்னமோ போங்க. கலைஞருக்கு புரிஞ்சா சரி.
புகைப்படம் மாற்றியிருக்கிறீர்கள் போல் தெரிகிறது! //
பதிலளிநீக்குஆமாம் சிபி. நான் தூத்துக்குடியில் மேலாளராக இருந்த சமயத்தில் எடுத்தது. இளைமையாய் தெரிகிறதா:-)
//At 5:40 PM, Krishna சொல்றத கேளுங்க
பதிலளிநீக்குசார், உங்க தம்பி படத்தை இப்பத்தான் பார்த்தேன். ஜம்முன்னு இருக்காறே!!//
//ஆமாம் சிபி. நான் தூத்துக்குடியில் மேலாளராக இருந்த சமயத்தில் எடுத்தது. இளைமையாய் தெரிகிறதா:-)
//
இப்ப படமும், குரலப் போலவும் மனசப் போலவும் இளமையா இருக்கு சார்!!:-)
வாங்க மூ.சுந்தர்,
பதிலளிநீக்குநம்மளை மாதிரி சாதாரண ஆடகளுகே இருக்கிற இந்த அறிவு அவருக்கு எப்படி இல்லாம போச்சுன்னே தெரியலை. //
அவர மட்டும் சொல்லி பலனில்லை சுந்தர். சுத்தியிருக்கறவங்களோட தொல்லை தாங்காம செய்திருப்பாரு.. ஆனா இந்த தடவையும் அதே தவற செய்யமாட்டார்னு நினைக்கிறேன்.
பார்க்கலாம்.
11/05/06...11=20 a.m
பதிலளிநீக்குkanavu nanavaiduchu;
kanippu sariyayduchu!
VAZHTUGAL
aama adukkaga ennulagam idama vuttuteengale sir
பதிலளிநீக்குஉங்க நம்பிக்கைதான் ஜெயிச்சிருச்சு!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் கலைஞருக்கும் உங்களுக்கும் !
:))
வாங்க ஜி!
பதிலளிநீக்குkanavu nanavaiduchu;
kanippu sariyayduchu!
VAZHTUGAL
நன்றி ஜி!
aama adukkaga ennulagam idama vuttuteengale sir
அதுக்காக இல்லை. இன்னைக்கி காலைல ரெண்டு மீட்டிங்குக்கு போவேண்டியதா போச்சு. 12 மணிக்குத்தான் வந்தேன்.. வந்ததும் போட்டுட்டேன். சூரியன் உதிக்கறதுக்கும் கொஞ்சம் லேட்டாகும்..:-)
நன்றி இளவஞ்சி,
பதிலளிநீக்குகலைஞர் என்னுடைய கடிதத்தைப் படித்திருப்பார் என்று நினைக்கிறேன்:)
ஜோசப் ஸார்,
பதிலளிநீக்குஉங்க வாக்குப் பலிச்சுப் போச்சு. ஜெ.வுக்கு ஒரு கடிதம் நீங்க எழுத வேண்டிய தேவை இப்போ இல்லை.
கலைஞர் உங்கள் கடிதத்தைப் படிக்கட்டும், படித்து அதன் படி நடந்து தமிழகம் உயரட்டும்
வாழ்த்துகள்.
ஜோசப் சார். உங்க வாக்குப் பலிச்சாலும், கடைசீல நான் திரும்பத் திரும்ப வலியுறுத்துன கூட்டணி ஆட்சிதான். மத்தியில கருணாநிதி பிரச்சனை பண்ணுனா மாநிலத்துல காங்கிரஸ் பிரச்சனை பண்ணும். மாநிலத்துல காங் பிரச்சனை பண்ணுனா.....மத்தியில திமுக...இப்பொழுதைக்கு இதுதான் சரி.
பதிலளிநீக்குஆனால் இந்தத் தேர்தலில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைவு. இதையும் திமுக மனதில் கொள்ள வேண்டும். விஜயகாந்தைக்கூட குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் பாமக தோற்கடித்திருக்கிறது. உண்மையிலேயே கொஞ்சம் வாக்கு வங்கி இருப்பதை விஜயகாந்த் நிரூபித்து விட்டார் என்றே நான் சொல்வேன். அன்பழகன் நானூறு வாக்கு வித்தியாத்தில் வென்றதும் கருணாநிதி மறக்கக் கூடாது.
அதுசரி காயகல்ப்பம் எங்க வாங்குனீங்க?
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஆனால் இந்தத் தேர்தலில் வெற்றி வித்தியாசம் மிகக் குறைவு. இதையும் திமுக மனதில் கொள்ள வேண்டும். //
த.நா வாக்காளர்கள் முகவுக்கு ஒரு செக் மேட் வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்.
ஊரல்லாம் சுத்துனவரு கோட்டை இருக்கற எடத்துலயே கோட்டை விட்டுட்டாரேன்னு நினைச்சா வருத்தமாருக்கு. எங்க வேட்பாளரும் தோத்துட்டாரு.. சின்ன அன்பழகன்..
காயகல்ப்பம் இல்ல ராகவன்.. தங்கபஸ்ப்பம்..
என்னுடைய பின்னூட்டம் ஒன்று மட்டுறுத்தலுக்குக் காத்திருக்கிறதோ?
பதிலளிநீக்கு"விஜயகாந்தைக்கூட குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் பாமக தோற்கடித்திருக்கிறது".
பதிலளிநீக்குவிஜயகாந்த் ஜெயித்து விட்டார் என்றல்லவா செய்தி? இது என்ன புதுக்குழப்பம்?
என்னுடைய பின்னூட்டம் ஒன்று மட்டுறுத்தலுக்குக் காத்திருக்கிறதோ?
பதிலளிநீக்கு10:16 PM
இல்லையே அருணகிரி. எல்லாவற்றையும் போட்டுவிட்டேனே..
arunagiri said...
"விஜயகாந்தைக்கூட குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் பாமக தோற்கடித்திருக்கிறது".
விஜயகாந்த் ஜெயித்து விட்டார் என்றல்லவா செய்தி? இது என்ன புதுக்குழப்பம்? //
வி.கா விருத்தாசலத்தில் பா.ம.க வேட்பாளரை 13,777 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறாரே.
ராகவன் கூறியதை நான் மறுக்காமல் இருந்துவிட்டேன். நானும் கவனிக்கவில்லை.. அவருக்கு எங்கிருந்து இந்த செய்தி கிடைத்ததோ தெரியவில்லை..
இரண்டு விஷயம்: ஒன்று - பின்னூட்டம் சிறிது நீண்டு விடுமென நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு2. - உங்களின் பதிவைத் திசை திருப்புமோ இது என்ற பயம். (ஆயினும் பதிவின் நோக்கம் முடிந்துவிட்டதல்லவா?)
வாங்க தருமி அண்ணா!
அருண்மொழியை வழிமொழிகிறேன். //
உங்கள் பதில்: .. அதனால் பெரிதாக என்ன பலன் நம் பிள்ளைகளுக்கு கிடைத்துவிடப்போகிறது?
இதற்குரிய பதில்...? கடைசியில்..
வாங்க அருண்மொழி,
நானும் ஆரம்பப்பளியை விட்டபிறகு தமிழ் படித்ததே இல்லைங்க..
நான் கல்லூரி எட்டிப் பார்த்த பின்தான் ஆங்கிலக் கல்வி பெற்றேன். அதனால் என்ன ஆங்கில அறிவு இல்லாமலா போய்விட்டது?
வாங்க சமுத்ரா
நிஜம் தான்.தாய் மொழிக்கல்வி தேவை.//
அது இந்தியா முழுவதும் ஒரே மொழி தாய்மொழியாகும்போது..
போகாத ஊருக்கு வழி சொல்லுகிறீகள், ஜோசஃப்!
என் தாய் மொழியில் நான் கற்கவேண்டும்என்பதுதான் முக்கியமே ஒழிய, நாட்டில் எல்லோருக்கும் ஒரு பொது மொழி என்ற விவாதம் இங்கே சரியானதா?
தாய்மொழிக்கல்வியின் முக்கியத்தை எனது ஆங்கிலப் பதிவில்
சொல்லிச் சென்றுள்ளேன். நீங்களும் அதை ஆமோதித்துள்ளீர்கள் என்றுதான் நான் நினைத்தேன்!
வாங்க தருமி அவர்களே,
பதிலளிநீக்குஉங்களுடைய ஆதங்கத்திற்கு இன்று உங்களுடைய ஆங்கிலப்பதிவில் பதிலளித்திருக்கிறேன்.
அதன் சுருக்கத்தை இங்கு அளிக்கிறேன். பயிலும்போது நம்முடைய தாய்மொழியில் படிப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பள்ளியிலும் கல்லூரியிலும் தமிழில் படித்தவர்களுக்கு ஆங்கிலப்புலமை குறைவாய் இருப்பதை என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன். தமிழில் படிக்க விருப்பமுள்ளவர்கள் படிக்கட்டும். வேண்டாம் என்று சொல்ல நான் யார்? ஆனால் அவர்களுக்கு வெளியுலகில் வேலை வாய்ப்பு குறைவாய் இருக்கும் என்பது மட்டுமே என் வாதம். தமிழகத்தைவிட்டு பிறமாநிலங்களிக்குச் சென்று பிரகாசிக்க வேண்டுமென்றால் தமிழ்மட்டுமே போறாது. தமிழை நான் நேசிக்கிறேன்.. ஆனால் ஆங்கிலத்தை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன் என்றால் மிகையாகாது. ஏனென்றால் அதுதான் எனக்கு சோறு போடுகிறது.
ஜோசப் சார்,
பதிலளிநீக்குஎன்னுடைய பேராசை "அனைத்து மாணவரும் கட்டாயமாக தமிழை ஒரு பாடமாக 10ஆம் வகுப்பு வரை படிக்கவேண்டும்" என்ற சட்டத்தை உருவாக்கவேண்டும்.
நான் எல்லா பாடங்களையும் தமிழில் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழை ஒரு பாடமாக படிக்க வேண்டும் என்று சொன்னேன். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
வாங்க arunmoli,
பதிலளிநீக்குநான் எல்லா பாடங்களையும் தமிழில் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. தமிழை ஒரு பாடமாக படிக்க வேண்டும் என்று சொன்னேன். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. //
ஒத்துக்கொள்கிறேன்.
தாய்மொழிக் கல்வி குறைந்து கொண்டே வருகிற விஷயம் மிகவும் கவலை அளிக்கக்கூடியது//
நீங்கள் கூறிய இந்த வாதத்திற்குத்தான் நான் இதனால் பிள்ளைகளுக்கு என்ன பெரிதாக கிடைத்துவிடப்போகிறது என்றேன்.
தமிழை கற்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்காக அதை ஒரு பாடமாக வைக்க தேவையில்லை என்பதுதான் என் வாதம். தமிழர்கள் தமிழில் பேசவும், எழுதவும், படிக்கவும் முடியாமற்போவது கேவலம் என்பதை உணர்ந்தாலே போதும்.. ஆனால் அதை சிலர் பெருமையாக, புலமையாக நினைப்பதை நான் எதிர்க்கிறேன். அவ்வளவுதான்.
//hope he may visit this blog also//
பதிலளிநீக்குஅவருக்கு இருக்கற வேலையில.. நீங்க வேற.. இதல்லாம் ஆசையில்லை பேஏஏஏராசை..:)//
முதல்வர் கலைஞர் நிறையப் படிப்பவர். அவர் பார்வைக்கு இந்தக் கருத்துக்களை அனுப்புவது தங்கள் கடமை. இதை ஒரு இ-மடல் வழியாக முதல்வருக்கு அனுப்பலாமே.... முயன்று பாருங்கள்
வாங்க தேவ்,
பதிலளிநீக்குஇதை ஒரு இ-மடல் வழியாக முதல்வருக்கு அனுப்பலாமே.... முயன்று பாருங்கள் //
அப்படீங்கறீங்க? செஞ்சா போச்சி..
ஐயா!
பதிலளிநீக்குதங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை!
கலைஞரே அரியாசணத்தில் அமர்ந்துவிட்டார்.
தங்கள் எண்ணப்படியே யாவும் நடக்க வாழ்த்துக்கள்.
100வது பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கள்! :-)
ஜோசப் சார், மொதல் பின்னூட்டத்த வழி மொழிகிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
வேற எதுக்கு, 100க்கு தான்.
திமுகவாலத்தான் செஞ்சுரி போடமுடியல. நீங்க போடுங்க சார்....
பதிலளிநீக்குசிபி, நன்மனம், கிருஷ்ணா,
பதிலளிநீக்குநன்றி, நன்றி, நன்றி:-)