07 ஏப்ரல் 2006
வேண்டாமே நண்பர்களே!
இந்த சாதி அரசியல்!
என்னுடைய இருபதாண்டு கால அலுவலக வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்கள், அவர்கள் படித்தவர்களானாலும், பாமரர்களானாலும், செல்வந்தர்களானாலும், நடுத்தர வர்க்க மற்றும் வறியவர்களானாலும் அவர்களிடையே சாதி, மத, மொழி என்ற பாகுபாடுகளால் ஏற்பட்டிருந்த பிரிவினையையும் அதனால் ஏற்பட்டிருந்த சீர்கேடுகளையும் குறித்து என்னுடைய தி.பா தொடரில் எழுதுவதன் காரணமே எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாக இருக்கட்டுமே என்றுதான்.
ஆனால் சமீபகாலமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் களத்தில் நேரிடையாக மோதிக்கொள்ளும் அரசியல் கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதை விட்டு விட்டு அதில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல் தலைவர்களைக் குறித்து நம்முடைய தமிழ்மண பதிவுகளில் எழுதப்பட்டு வரும் கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தபோதெல்லாம் நான் சொல்ல நினைத்ததுதான் என்னுடைய இப்பதிவின் தலைப்பாய் தந்திருக்கிறேன்.
வேண்டாமே நண்பர்களே இந்த சாதி அரசியல்!
அரசியல் தலைவர்களைப் பற்றி, அவர்களுடைய ஆட்சித் திறமைகளைப் பற்றி, அவருடைய குணாதிசயங்களில் உங்களுக்கு பிடித்தவற்றையும் பிடிக்காதவற்றையும் எழுதுங்கள். அவர்கள் தலைமையில் இயங்கி வரும் கட்சியைப் பற்றியும், அவர்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளைப் பற்றியும் அவர்கள் செய்யாமல் விட்டவற்றைப் பற்றியும விமர்சிப்பதில் உங்களுடைய திறனைக் காட்டுங்கள்.
நம் எல்லோருக்குமே பிடித்த கட்சிகள், பிடித்த அரசியல் தலைவர்கள் இருக்கும், இருக்க வேண்டும்.
ஆனால் நான் திராவிடன் அதனால் எனக்கு இவரைப் பிடிக்கும், ஏனெனில் இவர்தான் உண்மையான திராவிடப் பிரதிநிதி என்றோ அவரை எதிர்ப்பவர் எவராகிலும் அவர் தமிழினத்துரோகி என்பது போலவும் அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர் என்பதுபோலவும் எழுதாதீர்கள்.
ஒரு படித்த இளம் வங்கி அதிகாரி நான் திராவிட ராஸ்கல் என்பதில் பெருமைக் கொள்கிறேன் என்று எழுதினால் வேறொரு படித்த மேலை நாட்டில் பணிபுரியும் ஒரு இளைஞர் நானுந்தான் என்று பெருமைப் பாராட்டிகொள்கிறார்.
வேறு சாதியைச் சார்ந்த ஒருவர் இது மட்டும் என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்று எதிர்கருத்து எழுதினால் நீர் அந்த சாதியைச் சார்ந்தவந்தானே அய்யா நீர் பிறகு எப்படி எழுதுவீர் என்று வேறொருவர் எழுதுகிறார்.
நண்பர்களே..
உங்களில் பலரும் கனவிலும் நினைத்திராத அவமானங்களை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.
நான் காப்பி குடித்த தம்ளரை என் கண் முன்னரே கிடுக்கியால் பிடித்து எடுத்து சென்ற ஒரு மேற்குடி குடும்பத்தலைவியையும் கண்டிருக்கிறேன். அவருடைய செய்கையைக் கண்டு அவமானத்தால் சிறுத்துப் போய் அடுத்த நாளே என் அலுவலகத்திற்கு வந்து என் அறையிலிருந்த வேறு சில வாடிக்கையாளர்கள் முன்பாகவே இத உங்க காலா நினைச்சி மன்னிப்பு கேக்கறேன் சார் என்று என் கைகளைப் பிடித்து மன்னிப்புக் கோரிய அவருடைய கணவரையும் சந்தித்திருக்கிறேன்.
நீர் என்னவே? நம்ம சாதியா இருந்துக்கிட்டே நம்ம வீட்டுக்கு வந்து குடுத்த கடன திருப்பி அடைச்சாத்தான் ஆச்சின்னு வீட்டாளுங்கள மிரட்டுறீரு என்ற என்னை அவதூறு பேசி அவமானப்படுத்திய வாடிக்கையாளரையும் சந்தித்திருக்கிறேன்.
வேண்டாம் நண்பர்களே..
ஓட்டு வங்கிகளை மட்டும் கருத்தில் கொண்டு சாதி, மதம், இனம், மொழி என்ற அடிப்படையில் மக்களுடைய உணர்ச்சிகளை தூண்டிவிட்டு ஆதாயம் தேடும் சாதி அரசியல் என்ற தாழ்நிலை எங்களுடைய தலைமுறையோடு ஒழிந்து போகட்டும்..
உங்களைப் போன்ற இனிவரும் தலைமுறையாவது ஆரோக்கியமாக சிந்தியுங்கள்..
வேண்டாம் இந்த கேடுகெட்ட சாதி அரசியல்..
கேட்டால் நாயகன் கமலைப் போல அவன விடச் சொல்லு நான் விட்டுடறேன் என்று கூறாதீர்கள்..
நாம் முதலில் இதை விட்டுவிடுவோம்...
Mr. Joseph,
பதிலளிநீக்குI fully agree with your post. We should elect our representatives bases on their merits (I dont think anyone has it - thats a different issue).
In our land, we have only 2 choices. It is either DMK or AIADMK.
Unfortunately I have to pinpoint a particular caste. The brahmins were personally against DMK. They think that they were forced out of jobs/positions because of DMK regimes. So they hate DMK & Karunanidhi personally. This kind out outrage can be heard from local lad upto the currently accused kanchi mutt head.
Apart from the brahmins most of the other castes doest not align with a single party.
People might say that
- Devars back AIADMK - then why did JJ lost the 1996 elections??
- Vaniyars back PMK - off-course they do - but not all vanniyars - most of them continue to support DMK, AIADMK & other parties.
- Dalits back the dalit parties. The dalits parties cannot win elections with the support of dalits only. They need other people votes too.
அருமையான கருத்துக்கள் சார்.well said.
பதிலளிநீக்கு//வேறொரு படித்த மேலை நாட்டில் பணிபுரியும் ஒரு இளைஞர் நானுந்தான் என்று பெருமைப் பாராட்டிகொள்கிறார்.//
பதிலளிநீக்குஜோசப் சார்,
இது என்னைத் தான் குறிக்கிறது என்பது தெரியும் .உங்கள் வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றி ..ஆனால் நான் திராவிட ராஸ்கல் என்று சொல்வதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு விளங்கவில்லை .சாதி அமைப்பில் நம்பிக்கையில்லாதவன் நான் .இதுவரை சாதி பற்றியோ ,அது குறித்த விவாதங்களிலோ நான் கலந்து கொண்டதில்லை .அதை முற்றிலுமாக நிராகரிப்பவன் .ஆனால் இங்கு திராவிட என்று சொல்லும் போது அது தமிழர்களை உள்ளடக்கியது .நான் ஒரு இந்தியன் என்று எப்படி பெருமை கொள்கிறேனோ ,அவ்வாறே ஒரு தமிழனாக இருப்பதிலும் பெருமை கொள்கிறேன் .தமிழனாக இருப்பதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிரறு என்று நீங்கள் கேட்டால் ,இந்தியனாக இருப்பதில் என்ன பெருமை இருப்பதாக நினைக்கிறோமோ அதே பெருமை இருக்கிறது என்று சொல்வேன் .இதைவிட பரந்த மனம் வேண்டும் ,உலகன் என்றும் மனிதன் என்றும் பெருமைபடுவது போதும் என்றால் அதற்கும் நான் தயார் .பல இன ,மொழி மக்களோடு அவர்கள் கலாச்சாரத்தையும் மொழியையும் மதித்து செயல்பட்டு வருகிறேன் .மற்றபடி எப்படி என் குடும்பம் மேல் எனக்கு தனிப்பட்ட அன்பு இருக்கிறதோ அது போல தமிழ் மீது ,தமிழர் மீது தனிப்பட்ட அன்பு இருக்கிறதே தவிர ,மற்றவர் மேல் வெறுப்பை காட்டும் இனவெறியாக அது இல்லை என தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன் .
அதுபோக ,முத்து அவர்கள் தன்னை திராவிட ராஸ்கல் என்று சொல்லிக்கொண்டதன் உட்கருத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன் .கலைஞரை ஆதரிப்பதால் ,கலைஞரின் தீவிர எதிர்ப்பாளர்கள் அவரை திராவிட ராஸ்கல் என்று முத்திரை குத்தினாலும் அதற்காக அவர் கவலைப்பட போவதில்லை என்பது தான் அதன் உட்கருத்து என் எண்ணம் .அந்த முறையிலேயே நானும் அவ்வாறே என்று சொன்னேன் .தயவு செய்து புரிந்துகொள்ளவும்.
//சாதி அரசியல் என்ற தாழ்நிலை எங்களுடைய தலைமுறையோடு ஒழிந்து போகட்டும்..
பதிலளிநீக்குStright from the Heart! Thanks for the post.
ஜோசப் சார்,
பதிலளிநீக்குசாதியை என் வாழ்க்கையில் என்றுமே ஒரு பொருட்டாக கருதாத என்னை நீங்கள் அந்த கண்ணோட்டத்தோடு பார்த்தது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது.
ஜோசப் சார்! அருமையான கருத்துக்கள்!!
பதிலளிநீக்குஒரு + :)
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஅன்புள்ள ஜோ,
பதிலளிநீக்குமுதலில் இதில் வரும் எந்த பின்னூட்டத்திற்கும் பதில் எழுதி விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் உங்களைப் பற்றி எழுதியதை நீங்கள் தனிப்பட்ட தாக்குதலாக நினைத்து மனம் வருந்தியதால் இதை எழுதுகிறேன்.
நான் இன்றைய பதிவில் உங்களுடைய கருத்தைத்தான் விமர்சித்தேன். உங்களை அல்ல.
சாதிக்கும், இனத்துக்கும் வித்தியாசம் தெரியாதவனல்ல நான். ஆனால் நீங்கள்
எதிர்ப்பதாய் எழுதும் ஜெ. கர்நாடகர் என்கிறீர்களா? . அல்லது அவருடைய
கட்சியிலுள்ள பலரும் திராவிடர் அல்லவா?
எனக்கும் கலைஞரை மிகவும் பிடிக்கும். ஆனால் அதே சமயத்தில் ஜெ வின் சில
ஆட்சித்திறமைகளையும் எனக்குப் பிடிக்கும். எனக்கு அவரிடம் பிடிக்காதது அவருடைய
அர்த்தமில்லா கோபமும், சாதிப் பற்றும்தான். கலைஞர் தன்னைப் பகுத்தறிவாளர் என்று
கூறிக்கொண்டு தன் தோளில் ஒரே கலர் துண்டை எப்போதும் போர்த்திக்கொண்டு அலைவது
மூடத்தனமில்லையா? அதை நான் குறை கூறினால் நான் திராவிட எதிர்ப்பாளன் என்று
முத்திரை குத்திவிடுவது சரியா? அதுபோல்தான் எஸ்.கேயும் தன்னுடைய கருத்தை
எழுதினார். உடனே அவரை நீர் பிராமணர் என்று எழுதுகிறார்கள்.
அதை எதிர்க்கவேண்டுமென்றுதான் நான் இதை எழுதினேன். மற்றபடி உங்களி தனிப்பட்ட
முறையில் எழுதவேண்டும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
அன்புடன் டிபிஆர்.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇவ்வளவு அருமையாக ஜாதியை எதிர்க்கும் நீங்கள் இணையத்தில் ஜாதியை வளர்க்க நினைவுக்கும் டோண்டுவுக்கு ஆதரவளிப்பது ஜனநாயக கேலிக்கூத்து.
பதிலளிநீக்குஜோசப் சார்,
பதிலளிநீக்குநன்றி.என்னை விமர்சிக்க உங்களுக்கு முழு தகுதியுண்டு .தயங்காமல்
விமரிசியுங்கள் .அதை எப்போதும் நல்லவிதமாகவே நான் எடுத்துக்கொள்வேன்.
நானும் ஒரு காலத்தில் கலைஞரின் முழு ஆதரவாளனாக இருந்து இப்போது அவர் மேல் நிறைய
வெறுப்பு உள்ளவன் தான் .ஆனாலும் மற்றவர்களுக்கு கலைஞர் தேவலை என்று நீங்கள் நினைக்க சில காரணங்கள் இருப்பது போல ,எனக்கும் சில காரணங்கள் இருக்கின்றன
.அதனால் கலைஞரை யோக்கியசிகாமணி என்று நான் வாதிடும் கட்சிக்காரன் அல்ல .அவரை
தாக்கி 'கலைஞர் தடுமாறுகிறார்' என்று பதிவு போட்டதும் உங்களுக்கு தெரியும்.
என்னைப் பொறுத்தவரை என்னுடைய வாழ்க்கையிலும் ,வலைப்பதிவிலும் என்றுமே சாதி
பற்றி பேசியதே இல்லை .சாதி குறித்த எந்த விருப்பு வெறுப்போ எனக்கில்லை .உங்கள்
நண்பர் டோண்டு சார் அவர்களை கருத்து ரீதியாக பலமுறை எதிர்த்தாலும் ,ஒரு முறை
கூட ஜாதி கண்ணோட்டத்தில் அவரைப் பார்த்ததில்லை ,இன்னும் சொல்லப்போனால் மேல்
ஜாதியை குறிக்கும் அந்த வார்த்தையைக்கூட நான் இது வரை என்
பதிவுகளிலோ,பின்ன்னூட்டங்களிலோ உபயோகித்ததில்லை .
என்னை தமிழ் தீவிரவாதி ,இனப்பற்றாளன் என்றெல்லாம் நீங்கள் அதீதமாக
நினைத்தால் கூட நான் பெரிதாக எடுக்க மாட்டேன் .ஆனால் சாதி என்று வரும் போது
அதில் என் பெயர் அடிபடுவதை நான் கேவலமாக கருதுகிறேன்
periyar thavira matra sathi ozhippu veerargal ellorume sathi sagathiyil veezndhu vittargal--atleast candidate podumpozhudhu!
பதிலளிநீக்குsadhi unarvai thiramaiyaga exploit seyginranar..idhuvum oru vanmuraidhan; oru vahai theeviravadham dhan
இவ்வளவு அருமையாக ஜாதியை எதிர்க்கும் நீங்கள் இணையத்தில் ஜாதியை வளர்க்க நினைவுக்கும் டோண்டுவுக்கு ஆதரவளிப்பது ஜனநாயக கேலிக்கூத்து//
பதிலளிநீக்குஇதற்கும் பதிலளிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இதென்ன திருப்பாச்சி புதுசா இருக்கு. டோண்டு என்ற தனிப்பட்ட நபரை எனக்குப் பிடிக்கும். அவர் பிராமணர் ஆனால் என்ன?
இந்த கண்ணோட்டத்தைத்தான் நான் எதிர்க்கிறேன். போலி டோண்டு என்ற ஒரு கேடு கெட்டவனை பிராமணன் அல்லாதவன் என்பதால் நம்முடைய நண்பர் என்று கொள்ளலாமா?
Your enemy's enemy is my friend என்பதுபோலல்லவா இருக்கிறது உங்களுடைய வாதம்?
அடக் கடவுளே,
பதிலளிநீக்குஇங்கேயுமா?
Your enemy's enemy is my friend //
பதிலளிநீக்குIt should be 'my enemy's enemy is my friend' என்று இருக்க வேண்டும்.
டிபிஆர் சார், நல்ல பதிவு.
பதிலளிநீக்குஎன் இளைய வயதில் சமுகாயத்தில் சாதி இருந்தது; இளைஞர் மனதில் இல்லாதிருந்தது. இன்று சமுகாயத்தில் குறைந்துள்ளது, இளைஞர் மனதில் குடிகொண்டுவிட்டது.
படித்தவர்கள் மத்தியில் சாதி துவேஷம் வர வர தமிழிணயத்தில் அதிகமாக்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு மனம் சோர்ந்திருந்த தருணத்தில் தேவையான பதிவுங்கய்யா! சாதியை நம் சமூகத்தில் சுலபமாய் ஒழிக்க முடியாது. ஆனால் வரும் தலைமுறைகளில் பரஸ்பர
பதிலளிநீக்குவெறுப்பை குறைக்கும் என்று நம்புவோம்.
Hi Joseph
பதிலளிநீக்குThis is one of the best posts that i have read in the Tamil Blogging Community
Caste is a sad reality even in a progressive state like Tamil Nadu
I am always amused to notice- even justified criticism of Karunanidhi being dismissed as inspired propaganda of "Brahmanical Forces".For instance caste is not invoked when Cho(not that he is without his idisyncrancies - ridiculous and simplistic views on many issues) visits Anna Airvalayam and forges a alliance between DMK/TMC but when he rightfully lambasts DMK for going soft on hardened criminals like Veerapan(how can any human being support him leave alone view him as Tamil Nationalist),"Papan" criticism is invoked
And same with Jayalalitha.That dubious character Shankaracharya(really think he is where he deserves to be) was supposed to be her mentor and guide for this lady.The Tamil press saw this as a Brahminical affilation.But the shrewd politican that she is put him inside the jail.And press was stunned to silence
And both DMK/ADMK had no qualms in aligning with BJP which is supposed to represent the anti-thesis of Dravidian Ideology
So all these ideologies(Dravidian/Hinduvta) are irrelevant and outdated.None of these ideologies have been useful in getting rid of caste system.While Dravidian Movement rightfully broke the strangehold of Brahmins,it did just that.Today the intermediate cate groups that got empowered through Darvidian Movement are caste oppressors in Tamil Nadu.This is quite shameful
So this entire caste is a sham.Yesterday's exploited becomes today's exploiters
True alternative in Tamil Nadu will be a ideology that find middle ground by reconciling the the powerful elements of Dravidian Movement with the emerging Indian Pan Nationalism
Tamil Nadu has the real potential to lead India 's specactular progress in the next century provided the right leadership emerges-leadership that is socially progressive,truly secular ,meritrocracy driven (no more Marans,Anbumani's and Vasan's)and economically liberal.And importantly devoid of any celluloid connection
Talented Workforce,good academic pool,tolerant and stable society,good work ethics.State has everything going for it to suceed in the globalised era .
I am just hoping that in the next two elecions that this will happen
ஜாதிவெறி இல்லாத நீங்கள் ஏன் கிறிஸ்துவத்தைப் பற்றிய வலைப்பதிவு எழுதுகிறீர்கள் என நாங்கள் அறிந்து கொள்ளலாமா?
பதிலளிநீக்குஅது என்ன உங்களுக்கு ஒரு நியாயம்? ஊருக்கு ஒரு நியாயமா?
what is happening here? can't you remove the previous two comments?
பதிலளிநீக்குஜாதிவெறி இல்லாத நீங்கள் ஏன் கிறிஸ்துவத்தைப் பற்றிய வலைப்பதிவு எழுதுகிறீர்கள் என நாங்கள் அறிந்து கொள்ளலாமா?//
பதிலளிநீக்குசா'நக்கி'யனின் இந்த குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்க வேண்டும்.
நான் கிறிஸ்துவத்தைப் பற்றி எழுதுவதன் நோக்கத்தை என்னுடைய பதிவின் தலைப்பிலேயே கூறியிருக்கிறேன். மீண்டும் கூறுகிறேன். என்னுடைய மதத்தின் மகத்துவத்தைப் பற்றி எழுதுவது மட்டுமே அதன் நோக்கம். அதை பரப்புவதோ அல்லது மற்ற மதத்தை இழிவுபடுத்துவதோ அல்ல.
மேலும் அரசியல் தலைவர்களை அவர் தமிழர் என்றோ, திராவிட இனத்தலைவர் என்றோ ஆதரிக்காதீர்கள் என்று அறிவுறுத்துவது மட்டுமே என்னுடைய வேண்டாம் நண்பர்களே இடுகையின் நோக்கம்.
சார். மிக அவசியமான பதிவு. இதை உங்கள மாதிரி ஆட்கள்தான் சொல்ல முடியும், சொல்லனும். நன்றி.
பதிலளிநீக்குஅந்த போலியின் உளறலை வெளியிட்டிருக்க வேண்டாமே...
Sorry Muthu,
பதிலளிநீக்குI am not planning to remove the comments you mentioned.
Let it be there. Enough is enough.
என்னுடைய இரண்டாவது பதிவு தகுந்த காரணம் இன்றி உங்களால் தடுக்கப்பட்டு இருக்கிறது. நான் அதில் விளக்கம் மட்டுமே அளித்தேன். உங்களின் பார்ப்பன அடிவருடும் கொள்கைக்கு இதுவே தகுந்த உதாரணம் என்பேன் நான்.
பதிலளிநீக்குசார். அலட்சியப்படுத்துவது, புறக்கணிப்பது மாதிரி வலிமையான ஆயுதம் எதுவுமில்லை. அந்த பெரிய மனிதருடைய பின்னூட்டங்களை நேரே கழிவுக்கு அனுப்புவதே மேலென்பது என் தாழ்மையான கருத்து.
பதிலளிநீக்குஎன்னுடைய இரண்டாவது பதிவு தகுந்த காரணம் இன்றி உங்களால் தடுக்கப்பட்டு இருக்கிறது//
பதிலளிநீக்குஉங்களுடைய எந்த பின்னூட்டத்தையும் நான் தவிர்க்கவில்லை.
தவிர்க்கவும் மாட்டேன். நீங்கள் சொல்லவந்ததை விட்டுவிட்டு தேவையில்லாதவற்றை எழுதாதீர்கள்.
எனது பதிவுக்கு நீங்கள் விளக்கம் கொடுத்தீர்கள். அதன்பின்பு நான் ஒரு பதில் எழுதினேன். இன்னும் அது வெளியாகவில்லை. எனவே நான் சொல்வது உண்மை. எனது உண்மையான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.
பதிலளிநீக்குஅலட்சியப்படுத்துவது, புறக்கணிப்பது மாதிரி வலிமையான ஆயுதம் எதுவுமில்லை. //
பதிலளிநீக்குஉங்களுடைய கருத்தை மிகவும் மதிக்கிறேன் கிருஷ்ணா.
பின்னூட்டமாயும் தனி மெய்லிலும் அந்த மூடனின் பின்னூட்டத்தை எடுத்துவிட கூறி வேண்டுகோள்கள் வந்த வண்ணம் உள்ளன.
உங்கள் எல்லோருடைய வேண்டுகோளையும் ஏற்று எடுத்துவிடுகிறேன்.
நன்றி.
ஜோசப் சார், தயவு செய்து இதைவிட்டு வேற நல்ல பதிவுக்கு செல்லுங்க. ஸ்ரீதர்
பதிலளிநீக்குஜோசஃப் அவர்களே,
பதிலளிநீக்குஎல்லாரது வேண்டுகோளுக்கும் இணங்கி போலி டோண்டுவின் ஆபாசப் பின்னூட்டங்களை தூக்கியதற்கு நன்றி.
போலி டோண்டுவிற்கு நல்ல புத்தி அளிக்குமாறு விஸ்வகர்மாவைப் பிரார்த்திக்கிறேன்.
சூரியனின் இன்றைய இன்ஸ்டால்மெண்டை சீக்கிரம் வெளியிடுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களுடைய மதம் மகத்துவமாக இருக்கிறது. எனவே அது குறித்து நீங்கள் எழுதுகிறீர்கள். ஆனால் என்னுடைய மதம் என்னை இன ரீதியாக தாழ்த்தப்பட்டவனாக ஆக்கி, என் இனத்தை கூறுபோட்டு வைத்துள்ளது. இது பழங்கதை அல்ல. இன்றும் நடப்பதுதான்.
பதிலளிநீக்குவங்கி அதிகாரியாக மட்டுமல்ல, அவன் இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக ஆனாலும் தாழ்த்தப்பட்டவன் என்ற நிலையில்தானே மற்றொரு இனம் அவனைக் கருதுகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாக நடத்தப்பட்டு, அவ்வாறு நடத்தப்படுவதற்கு மதச்சாயம் பூசி அதை வேதங்கள் என்று கூறப்படுபவையும் ஆதரிக்கும் நிலையில், அடிமைகளாக நடத்தப்பட்ட கேவலமாக சித்தரிக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒருவன் நான் திராவிடன் என்று பெருமை கொள்கிறேன் என்பதில் தவறு என்ன இருக்க முடியும்?
இன்னொன்றும் கவனித்தீர்களா, ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறும் போலி டோண்டு யாரையாவது திட்ட நினைக்கும்போது தலித் ஜாதியை சொல்லித்தான் திட்டுகிறான். சட்டத்தால் தடை செய்யப்பட்ட, சுப்பிரமணியம் சுவாமிக்கு எதிராக வன்கொடுமைச் சட்டம் பாயக் காரணமாயிருந்த ஜாதி வசவை சர்வ சாதாரணமாகப் பிரயோகிக்கிறான்.
பதிலளிநீக்குஅவன் இதே பதிவில் மற்றப் பெயர்களிலும் பின்னூட்டமிட்டிருக்கிறான். நான் உங்களிடம் அந்தப் பெயர்களையும் கூறியுள்ளேன். அவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்பு நண்பர்களே,
பதிலளிநீக்குஇதுவரை என்னுடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த மற்றும் எதிர்ப்பு தெரிவித்த எல்லாருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய இந்த கட்டுரை யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதப்பட்டதல்ல. சமீப காலமாக சாதி, மொழி, இனம் இவற்றை மட்டுமே வைத்து அரசியல் ஆதாயம் தேடிவரும் சில தலைவர்களைப் பற்றி ஆதரித்து சில நண்பர்களுடைய பதிவுகளில் வந்த கட்டுரைகளைக் கண்டு மனம் வெதும்பி எழுதியதுதான் இக்கட்டுரை. திராவிடம் என்ற தராசில் வைத்து நம்முடைய ஆட்சியாளர்களை தரம் பார்க்காதீர்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.. மு.கவை ஆதரிப்பது திராவிடத்தை ஆதரிப்பது என்றாகிவிடாது. அல்லது ஜெ. ஜெயித்துவந்தால் பிராமணீயம் செழித்து வளர்ந்துவிடும் என்பதும் சரியில்லை.
மு.கவும் சரி ஜெ.யும் சரி சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்தான். இவர்களில் யார் மேலானவர் என்றுமட்டும் பார்த்து அவரை ஆதரியுங்கள் என்றுதான் கேட்க விழைகிறேன்.
நான் திராவிடன் என்றோ அல்லது நான் தமிழன் என்றோ ஒரு குறுகிய வட்டத்திற்குள் இன்றைய படித்த, திறமைவாய்ந்த தலைமுறை சுருங்கிவிடக்கூடாது என்பது மட்டுமே என்னைப் போன்ற முந்தைய தலைமுறையினரின் ஆதங்கம். ஒரு குஜராத் அல்லது பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மாவட்ட ஆட்சியாளர்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதல்லவா? அதே போல வட மாநிலத்தைச் சார்ந்தவரானாலும் அவர் திறமையுள்ளவராக இருந்தால் அவரையும் முதலமைச்சராகவும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும். அப்போதுதான் நாம் உன்மையிலேயே முன்னேறிவிட்ட மக்களாக கருதப்படுவோம்.
//ஒரு குஜராத் அல்லது பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மாவட்ட ஆட்சியாளர்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதல்லவா? அதே போல வட மாநிலத்தைச் சார்ந்தவரானாலும் அவர் திறமையுள்ளவராக இருந்தால் அவரையும் முதலமைச்சராகவும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும். //
பதிலளிநீக்குஜோசப் சார்,
இதெல்லாம் உங்களுக்கு கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா? வடநாட்டுக்காரர்கள் வெளிமாநிலத்தவரை குறிப்பாக தமிழனை கலெக்டராக ஏற்றுக்கொள்வார்களே தவிர ,முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .பிறமாநிலத்தவரானாலும் தலைவராகவும் ,சூப்பர் ஸ்டாராகவும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எந்த மாநிலத்துக்காரனை விடவும் தமிழ்நாட்டுக்காரனுக்கு அதிகமாகவே இருக்கிறது .மற்றவர்களிடமிருந்து அந்த பக்குவத்தை கற்றுக்கொள்ளும் நிலையில் தமிழன் இல்லை ..தமிழன் என்பது குறுகிய மனப்பான்மை என்ற உங்கள் கண்ணோட்டத்துக்கு என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன் .உங்கள் பரந்த மனப்பான்மை ஏன் இந்தியாவோடு நின்றுவிட்டது என்று புரியவில்லை .
ஜோ,
பதிலளிநீக்குஉங்களுடைய வாதத்தின் பொருள் இப்போதும் எனக்கு விளங்க மாட்டேன் என்கிறது..
தமிழர்கள் கொடிகட்டிப் பறக்காத நாடு உலகில் இருக்கிறதா என்ன?
தமிழ்நாட்டைச் சார்ந்த தலைவர்கள் நம்முடைய தேசிய அளவிலும் கிங் மேக்கர்ஸாக அங்கீகரிக்கப்படவில்லையா?
உலகின் வர்த்தக எல்லைகள் திறக்கப்பட்டு உலகெங்கும் நம்முடைய தமிழ் இளைஞர்கள் உலகெங்கும் சென்று சாதனைப் படைத்திருக்கும் சூழலில் த.நாவில் மட்டும் தமிழந்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?
//த.நாவில் மட்டும் தமிழந்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?//
பதிலளிநீக்குஜோசப் சார்,
நான் நினைப்பதாக நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் .நீங்கள் தான் இந்தியாவிலேயே தமிழன் தான் அப்படி நினைப்பது போலவும் சொல்லுகிறீர்கள் .நானோ இந்தியாவிலேயே தமிழன் மட்டும் தான் அப்படி நினைப்பதில்லை .அத்தகைய சகிப்புத்தன்மையும் பக்குவமும் தமிழனை விட யாருக்கும் இல்லை என்று சொல்லுகிறேன் .
நகர மாட்டேன் என்று சொல்பவனை விட்டு விட்டு கூட இருக்கிற நாலு எட்டாவது வைத்தவனைப் பார்த்து மட்டும் ஏன் அட்வைஸ் மழை பொழிகிறீர்கள் என தெரியவில்லை .நீங்கள் ஒரு தமிழனாக இருப்பதால் தான் இப்படி சிந்திக்கவாவது முடிகிறது .மற்றமாநிலத்தவன் இது பற்றி சிந்திக்க கூட மாட்டான் .
பதிலளிநீக்குஇந்தியாவின் ஆறு மாநிலங்களிலும் த.நாவின் ஐந்து மாவட்டங்களிலும் பணிபுரிந்த அனுபவத்தில் சொல்கிறேன்..
பதிலளிநீக்குகுறுகிய சிந்தனையுள்ளவன் த.நாவிலும் இருக்கிறான் பரந்த சிந்தனையுள்ளவன் வெளி மாநிலங்களிலும் இருக்கிறான்.
நீங்கள் சொல்வது போன்ற மக்கள் குஜராத், பீகார், உ.பி போன்ற மாநிலங்களில் வேண்டுமானால் இருக்கலாம்.
//நான் திராவிடன் என்றோ அல்லது நான் தமிழன் என்றோ ஒரு குறுகிய வட்டத்திற்குள் இன்றைய படித்த, திறமைவாய்ந்த தலைமுறை சுருங்கிவிடக்கூடாது என்பது மட்டுமே என்னைப் போன்ற முந்தைய தலைமுறையினரின் ஆதங்கம். //
பதிலளிநீக்குஎது சார் குறுகிய வட்டம்?
தன் அடையாளத்தை உணர்வதா? இல்லை தன் அடையாளத்தை, இருப்பை சொல்வதிலா? இதில் என்ன சுருக்கம் வந்து விட்டது. அடையாளத்தை உணராது இருப்பதும் அடிமையாய் இருப்பதும் ஒன்றுதான்.
அடிமையாய் இருப்பது சுகமாக இருக்கலாம் சுரணையற்றவர்களுக்கு......
தமிழன் உலக நாடுகளில் அங்கீகாரம் பெறுவதை கண்டு புளங்காகிதம் அடையும் நீங்கள் இங்கு இருக்கும் சிறுமைகள் இல்லவே இல்லை என்று சொல்கிறீர்களா? விரல் விட்டு எண்ணக்கூடிய விதிவிலக்குகளுக்கும் நிறைந்து கிடக்கும் அவலங்களுக்குமிடையேயான வேறுபாடு மிக அதிகம்
Dear Joseph Sir,
பதிலளிநீக்குThank you very much for this extremely valuable and timely post. Your experience and maturity speaks here much louder than anything else.
I only wish this message goes across to all people who votes in the election.
Salutes for your interest in the society at large. Very few posts are of this type.
Thanks and regards
K.Sudhakar
முதலில் நாமெல்லாம் மனிதர்கள். பிறகு தமிழர்கள். இது நம்மால் உணரப் பட வேண்டியது.
பதிலளிநீக்குஜோசப் சார் சொல்கின்ற பிரச்சனை எதுவென்று எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு மேலே அரசியலையும் சாதியையும் பற்றிச் சொல்லியிருப்பது புரிகிறது.
சாதியும் மதமும் அரசியலில் இருந்து மறைய வேண்டும். இன்றைய நிலையில் நிறைய பேர் அப்படித்தான் நடக்கிறது என்று சொன்னாலும் இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும்.
இன்றைய நிலையில் இதையெல்லாம் வைத்து அரசியல் செய்கின்றவர்கள்தான் இருக்கிறார்கள். இந்த உண்மைதான் சுடுகிறது.
உலகமயமாக்கலுக்கு பின்னர் இன்றைக்கு தனி அடையாளங்கள் அவசியம். அவற்றை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குநான் தமிழன் என்பதோ திராவிடன் என்றோ இந்தியன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்வதில் சிறுமை இல்லை. அதற்காக அடையாளங்களின் பெயரால் அடித்துக்கொள்வதும் பெருமை அல்ல.
எனக்கு இப்போதும் புரியவில்லை. திராவிடன் என்றால் தமிழன் மட்டும் தானா? தெலுங்கரும் கன்னடத்தவரும் மலையாளியும் திராவிடர்கள் இல்லையா?
வெங்காயம் எழுதியிருக்கிறார் குடியரசுத் தலைவரே ஆனாலும் தாழந்த ஜாதி என்று சொல்கிறார்களே என்று? இது எதனால் வந்தது தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல் செய்பவர்களுக்கு சலுகைகள் தேவை என்பதற்காக.
இன்றைக்கு சலுகைகள் கிடைப்பதற்காக எல்லோரும் தங்களை பிற்படுத்தபட்டியலில் சேர்க்க வேணடும் என குரலிடுகிறார்கள். அது ஏன்?
முன்னேற்றம் ஏற்படுத்தாமல் அதையே காரணமாக்கி சலுகைகள் என அரசியல் அறுவடை செய்வதனால் தான் இன்னமும் அந்த நிலை நீடிக்கிறது.
பிராமணர்கள் தான் மேல்ஜாதி என்றும் அவர்களை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுத்தே வளர்ந்த கழகங்களின் நிழலில் ஒதுங்கிய மற்ற மேல் ஜாதிகளினால் தானே வட தமிழகத்திலும் தென் தமிழகத்திலும் கலவரங்கள் நடக்கின்றன?
படித்தவர்களாவது செய்திக்குள் இருக்கும் உணர்ச்சிகளை தாண்டி சிந்தனை செய்யுங்கள். ஏன் என்று கேள்வி கேளுங்கள்.
//ஒரு படித்த இளம் வங்கி அதிகாரி நான் திராவிட ராஸ்கல் என்பதில் பெருமைக் கொள்கிறேன் என்று எழுதினால் வேறொரு படித்த மேலை நாட்டில் பணிபுரியும் ஒரு இளைஞர் நானுந்தான் என்று பெருமைப் பாராட்டிகொள்கிறார்//
பதிலளிநீக்குசினிமா கிசு கிசு கெட்டுது போங்க. ;-)
//சினிமா கிசு கிசு கெட்டுது போங்க. ;-)//
பதிலளிநீக்குமூக்கு குறும்புய்யா உனக்கு
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குi would like to know your view on the 49.5% reservation in IIT&IIM
பதிலளிநீக்கு>> நான் திராவிடன் என்றோ அல்லது நான் தமிழன் என்றோ ஒரு குறுகிய வட்டத்திற்குள் இன்றைய படித்த, திறமைவாய்ந்த தலைமுறை சுருங்கிவிடக்கூடாது என்பது மட்டுமே என்னைப் போன்ற முந்தைய தலைமுறையினரின் ஆதங்கம். ஒரு குஜராத் அல்லது பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மாவட்ட ஆட்சியாளர்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதல்லவா? அதே போல வட மாநிலத்தைச் சார்ந்தவரானாலும் அவர் திறமையுள்ளவராக இருந்தால் அவரையும் முதலமைச்சராகவும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும். அப்போதுதான் நாம் உன்மையிலேயே முன்னேறிவிட்ட மக்களாக கருதப்படுவோம >>
பதிலளிநீக்குYour 'disconnect' with the Political realities of a 'Linguistic Federal' nature of India is well manifested here sir.
முதிர்ச்சியற்ற 'அறிவுரை' போல் தொனிக்கும் - மொழி-இன வழி தேசிய அடியாளத்தை மறுக்கிற, சமூக அறிவியல் உண்மைகளை ஒப்புக் கொள்ள மறுக்கிற தன்மைதான் இங்கே தெரிகிறது!
உண்மையில் 'மணிரத்னம்' படம் பார்த்து வந்த effect தான் தெரிகிறது!
Very Shallow and mis-directed and non focussed பதிவு.
உங்கள் நோக்கம் உயர்ந்ததாக தொனிக்கிறது; ஆனால் முழுமையான புரிதலோடு எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்ல இயலவில்லை.