24 பிப்ரவரி 2006
கே.பியுடன் ஒரு நேர்காணல்
சாதாரணமாக நான் சர்ச்சைக்குரிய விஷயங்கள்ல அவ்வளவா விருப்பம் காட்டுவதில்லை..
அதுக்கு முக்கிய காரணம் நாம் சரியென்று நினைப்பதை மற்றவர்களும் சரியானதுதான் என்று நினைக்கத் தேவையில்லையே என்பதுதான்.
ஆனாலும் இன்றைய ஹிந்து செய்தித் தாளில் Friday Reviewவில் நம்முடைய முன்னாள் இயக்குனர் சிகரம் (ஏன் இப்படி சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். அதற்கு காரணம் இருக்கிறது) கே. பாலசந்தர் அவர்களின் பேட்டியில் அவர் ஆணவத்துடன் (அவர் என்ன நினைத்து அப்படியெல்லாம் சொன்னாரோ.. ஆனால் அதை படித்தபோது எனக்கு அவை ஆணவம் என்றுதான் தோன்றியது) அளித்த சில பதில்கள் என்னை இப்பதிவை எழுதத் தூண்டியது..
இப்போதே சொல்லிவிடுகிறேன். இது என்னுடைய கண்ணோட்டத்திலிருந்து நான் பார்க்கும் பார்வை. இதற்கு எல்லோருமே ஒத்துப்போகவேண்டும் என்றில்லை..
சரி விஷயத்துக்கு வருவோம்..
பாலசந்தர் இதுவரை நூறு படங்களை இயக்கியிருக்கிறார். அதையொட்டி அவரிடம் பேட்டியாளர் கேட்ட சில கேள்விகளையும் அதற்கு கே.பி அளித்த பதில்களை மட்டும் இங்கு அலசலாம் என்று நினைக்கிறேன்.
கேள்வி: நீங்கள் இயக்கிய நூறு படங்களில் உங்களுடைய பார்வையில் மிகச்சிறந்ததாக கருதும் ஐந்து படங்கள் எவை?
கே.பி: நான் இயக்கிய படங்களில் சிறந்த படங்களில் ஒன்று புன்னகை. பிறகு ஏக் துஜே கேலியே, தண்ணீர், தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை.. அத்துடன் வானமே எல்லை, சிந்து பைரவி, என்று பட்டியல் நீள்கிறது.. இறுதியில் ஜாதி மல்லி..
புன்னகை, ஹ்ரிஷிக்கேஷ் முக்கர்ஜி இயக்கிய சத்யகாம் என்ற ஹிந்தி படத்தின் அப்பட்டமான காப்பி.
ஏக் துஜே கேலியே.. அவர் அதை எதற்காகக் குறிப்பிட்டார் என்பது விளங்கவில்லை.. என்னைப் பொறுத்தவரை அது ஒரு மிகச்சாதாரணமான ஒரு மூன்றாம் தர மசாலாப் படம்..
தண்ணீர், தண்ணீர்.. அவருக்கு சிறந்த திரைக்கதை சிரியர் விருது பெற்றுத்தந்த படமாம்! அது ஒரு சரியான வானம் பார்த்த மேடையில் (open air stage) நடத்தப்பட்ட நாடகம் என்பதுதான் என்னுடைய கருத்து.. அவருடைய பல படங்களைப் பார்க்கும்போது முன் வரிசையில் அமர்ந்துக்கொண்டு அண்ணாந்து ஒரு நாடகத்தைப் பார்க்கும் எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டதுண்டு. அவருடைய பல கேமரா கோணங்கள் அப்படித்தான் இருக்கும்.. தண்ணிர், தண்ணீரும் அதற்கு விதிவிலக்கல்ல..
வானமே எல்லை.. கேட்கவே வேண்டாம்..கே.பியின் கோணத்தில் இளைஞர்களின் பிரச்சினையைக் கையாண்ட விதம் ஒரு சிறுபிள்ளைத்தனம் என்று இளைஞர்களுக்கே தெரியும்..
சிந்து பைரவி.. ஒரு வித்வானின் இசைக்கச்சேரியில் வாரப்பத்திரிகையை வாசித்துக்கொண்டிருக்கும் காட்சி, இரு பெண்கள் பேசிக்கொண்டிருக்கும் காட்சி.. என கதாநாயகி பார்ப்பதை ஒரு நாடகத்தனமாகக் காட்டுவார். ஏனாம்? பாடகர் தெலுங்கில் பாடிக்கொண்டிருக்கிறாராம்! ஆகவே அவரே எழுந்து (ஒரு அமெச்சூர் பாடகி!) நின்று ஒரு நாட்டுப்புற பாடலைப் பாடி கைத்தட்டல் பெறுவதைப்போல் நாடகத்தனமான ஒரு காட்சியை அமைத்திருப்பார்.. அக்காட்சிதான் அத்திரைப்படத்தின் உயிர்நாடி.. அதுவே அப்படியென்றால் மீதி படத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்.. அதில் ஒரு காட்சியில் அப்பாடகியின் பெரீஈஈஈய ஃபளாட்டைக் காட்டுவார்.. மிக விசாலமான அந்த ஃப்ளாட்டில் பாடகியின் உள்ளாடைகள் சோபாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரைந்து கிடக்கும்! அதை நாயகனுடைய பார்வையிலிருந்து எடுத்து வீசியெறிவார்! அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியாது..
இதெல்லாம் கூட பரவாயில்லை. அப்பட்டியலில் கடைசியாக ஜாதிமல்லி என்ற ஒரு குப்பைப் படத்தையும் சேர்த்ததுதான் சகிக்க முடியவில்லை..
அடுத்த கேள்விக்கு அவர் அளித்த பதில் அதைவிட தமாஷானது!
கேள்வி: பார்த்தாலே பரவசம் ஏன் வெற்றி பெறவில்லை?
கே.பி.: மாதவனும், சிம்ரனும் நடிக்காமல் அதிகம் பிரபலமடையாத நடிகர்களை (Minor actors) வைத்து எடுத்திருந்தால் படம் பாக்ஸ்ஆஃபீஸ் வெற்றி பெற்றிருக்கும்.. அதுமட்டுமல்லவாம்.. பாடல்கள் முக்கியமாக போகவே அவருடைய திரைக்கதை எடுபடவில்லையாம்!
இதென்ன லாஜிக்கோ தெரியவில்லை..
மாதவனைப் போன்ற ஒரு அலட்டிக்கொள்ளாமல் நடிக்கும் நடிகரை வைத்து படம் எடுக்கத்தெரியாமல் சொதப்பிவிட்டு சால்ஜாப்பு சொன்னா எப்படி..
அடுத்த சில கேள்விகளை விட்டு விடுவோம்..
கே.பியின் நடிப்பைப் பற்றிய ஒரு கேள்வி..
கேள்வி: உங்களுடைய அடுத்த படமான ‘பொய்’யில் நீங்கள் நடிக்கிறீர்கள். உங்களுடைய பார்வையில் நடிகர் கே.பியை எப்படி எடைப் போடுவீர்கள்?
கே.பி.: அடிப்படையில் நான் ஒரு நடிகன்! நான் இயக்குநர் தொழிலை மேற்கொண்டதால் நடிப்பை கைவிட வேண்டியிருந்தது!
அடடா.. நமக்கு நல்லதொரு நடிகர் கிடைக்காமல் போய்விட்டாரே என்று நினைக்காதீர்கள்.. அவருடைய இயக்கத்தைவிட கொடுமை அவருடைய செயற்கையான, அதிகப்படியான நடிப்பு! அவருக்கு டி.ஆரே மேல்.. வசனங்களையாவது உணர்ச்சிகரமாக டெலிவரி செய்வார்..
அடுத்த கேள்வி.. உங்களுடைய ‘பொய்’ எதைப் பற்றியது?
கே.பி: அது ஒரு வில்லன் இல்லாத காதல் கதை. திரைக்கதையில் clich'e (இதற்கு தமிழில் என்ன சொல்லலாம்? ஃபார்முலா?) இருக்காது.
கே.பி சார், அப்படின்னா உங்களுடைய மத்த படங்களோட திரைக்கதையில எல்லாம் இது இருக்குன்னு ஒத்துக்கறீங்களா?
நீங்க clich'e னு எத சொல்ல வரீங்களே தெரியலை.. ஆனா ஏறக்குறைய உங்களுடைய எல்லா திரைக்கதைகளுமே ஒரே மாதிரியான ஃபார்முலாவின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன்.
காட்சியமைப்புகளும் அப்படித்தான்..
மிகச்சிறந்த நடிகர்களாகக் கருதப்படும் சரிதாவையும் சுஜாதாவையும் ஏன் கமலையும் கூட உங்களுடைய contrived பாத்திர சித்தரிப்பில் சிறைபடுத்தியவர்தானே நீங்கள்?
கடைசி கேள்வி..
நீங்கள் எதையாவது சாதித்திருப்பதாக நினைக்கிறீர்களா (கேள்வியின் உள்ளே புகுந்து பார்த்தால் வேண்டுமென்றே நக்கலாக கேட்கப்பட்டது போல் தெரிகிறது?)
கே.பி: I have always given films, which are ahead of my times!
எங்கே இதை தமிழில் மொழிபெயர்த்து அதிலுள்ள அகங்காரத்தை குறைத்துவிடுவேனோ என்ற பயத்தில் பத்திரிகையில் வந்ததை அப்படியே கொடுத்துள்ளேன்..
அதாவது, காலத்தை விஞ்சிய என்று சொல்லலாமா?
எது? ஒரு வசவு (தகப்பன் தெரியாத பயலே) வார்த்தையை கமலை உச்சரிக்க வைத்தீர்களே, அதுவா?
அல்லது, உன் அம்மா உன் கணவரோட அப்பாவோட மனைவின்னா நான் உனக்கு என்ன உறவுன்னு ஒரு புதிர் போட்டீங்களே, அதுவா?
அதையே மறுபடியும் ஒரு காதலனோட காதலியே அவனோட அப்பாவோட இரண்டாவது மனைவியா வந்து அவன சத்தாய்க்கிறா மாதிரி ஒரு படம் பண்ணீங்களே, அதுவா?
இன்னும் உங்களோட அபத்தமான, ஏன் வக்கிரமமான கற்பனைகளை சொல்லிக்கிட்டே போகலாம் கே.பி சார்..
உங்களுக்கு ஒரு வார்த்தை.. அறிவுரைன்னு சொல்றதுக்கு எனக்கு வயசு போறாது..
உங்க டைம் முடிஞ்சிப் போயிருச்சி சார். கே.எஸ் கோபால கிருஷ்ணன்னு ஒருத்தர் இருந்தார். அருமையா வசனம் எழுதறேன்னு சொல்லிட்டு பக்கம் பக்கமா எழுதி அத நடிகர் நடிகைகளை ஏத்தி, இறக்கி பேசவச்சி அறுத்துடுவார்..
உங்களோட ஒப்பிடும்போது அவரே தேவலைன்னு தோனுது.. அதான் உண்மை.. அதப் புரிஞ்சுக்குங்க..
சின்ன, சின்ன குட்டிப் பசங்கல்லாம் வந்து எமோஷனலா, டெக்னிக்கலா சூப்பரா எடுக்கறாங்க..
நீங்க என்னவோ பெரிசா சாதிச்சிட்டதா..
போங்க சார்..
ஜோசப் சார்,
பதிலளிநீக்குA/C வேலை செய்யலியா? ரொம்ப சூடா இருக்கீங்க போல..பாலசந்தர் தீவிர அனுதாபிகள் யாரவது பதிலடி குடுக்குறாங்களாண்ணு பார்ப்போம் .எனக்கு பிடிச்ச இயக்குநர் மகேந்திரன் தான்.
வாங்க ஜோ,
பதிலளிநீக்குநான் தினமும் காலையில் (அதாவது என் வீட்டம்மா எழுவதற்கு முன்) எழுந்து பால்பாக்கெட்டை எடுக்கும்போதே வாசலில் கிடக்கும் பேப்பரையும் எடுத்துக்கிட்டு வந்து சூடா ஒரு காப்பிய போட்டு ஒரு கைல காப்பியும் ஒரு கைல பேப்பருமா உக்காந்து படிக்கறது வழக்கம்.
வெள்ளிக் கிழமையானா Friday Reviewவுக்குதான் முதல் இடம்.. அதுல இவரோட கால் மேல கால் போட்டுக்கிட்டு சிரிக்கற படத்த பார்த்ததுமே இத படிச்சிட்டுதான் முதல் வேலைன்னு உக்காந்து படிச்சேன்.. அப்பவே பிரஷர் ஷூட் ஆயிருச்சி.. இருந்தாலும் படிச்சிட்டு வாக் போய்ட்டேன்.. போற வழியில ஒரு ரெண்டு ஜெபமாலை படிக்கறது வழக்கம். இன்னைக்கு அத செய்யக்கூட முடியலை.. அவ்வளவுக்கு ஆத்திரம்.. மவனே இரு உன்ன வந்து வச்சிக்கறேன்னு கருவிக்கிட்டே வீட்டுக்கு திரும்புனதும் உக்காந்து என் பொண்ணோட பி.சியில எழுதுனது.. போடலாமா வேணாமான்னு ஆலோசிச்சே ஒரு மணியாயிருச்சி.. சரி போட்ருவோம்னு நினைச்சி போட்டது..
பார்ப்போம் யார் யார் கல்லெறியறாங்கன்னு..
வாங்க முத்து,
பதிலளிநீக்குகே.பி ஓ.கோ வும் இல்லை...படு மட்டமும் இல்லை//
மட்டம்னு சொல்லவே மாட்டேன்.. ஹி ஈஸ் ஓக்கே.. அவ்வளவுதான்.
சர்ச்சை என்று ஒதுங்கினால் எப்படி சார் யார் சார் தட்டி கேக்கறது? எனக்கு ரொம்ப சந்தோஷம்..ஐ...ஜாலி ..ஜாலி.....
பதிலளிநீக்குமற்றபடி கே.பி ஓ.கோ வும் இல்லை...படு மட்டமும் இல்லை..சராசரி இயக்குநர்தான் என்பது என் கருத்து.
ம். வலைப்பதிவு எவ்வளவு பெரிய வசதியாயிருக்கிறது?
பதிலளிநீக்குநீங்கள் கே.பி எணடதும் நான் வேறொரு "கே.பி" ஆக்கும் எண்டு நினைச்சுப் போட்டன்.
வாங்க வசந்தன்,
பதிலளிநீக்குநீங்க நினைச்ச கே.பி. யாரு? பாக்யராஜா? ஐயோ அவர் அத விட கொடுமை..
ஆனா ஒன்னு. அவர் இந்த மாதிரியெல்லாம் தன்னை பெரீஈஈஈய ஆளா நினைச்சிக்கிட்டு பேட்டி கொடுக்க மாட்டார்.
சார்...பாலச்சந்தரை ஒரு இயக்குனர் என்கின்ற வகையில் நிறையவே அலசனும்.
பதிலளிநீக்குஎன்னுடைய கருத்துப் படி அவர் நல்ல படங்களும் நிறைய எடுத்திருக்கார். காலத்தைத் தாண்டி சிந்தித்த விதத்தில் படம் என்றால் நிச்சயமாக அக்னி சாட்சி என்று அடித்துச் சொல்லலாம்.
நான் பாலச்சந்தர் ரசிகன் இல்லை. பாலச்சந்தருக்கும் ரசிகன்.
நமது நாட்டில் ஒரு கலைஞனின் படைப்பை விட கலைஞன் ரசிக்கப் படுகிறான். அங்குதான் பிரச்சனை தொடங்குகிறது. மாலை வந்து பெரிய பின்னூட்டம் போடுகிறேன்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குநான் பாலச்சந்தர் ரசிகன் இல்லை. பாலச்சந்தருக்கும் ரசிகன்.//
நானுந்தான். இல்லாவிட்டால் அவருடைய எல்லா படங்களையும் பார்த்திருக்க மாட்டேனே..
அக்னி சாட்சி.... அதுவும் அவருடைய contrived சிந்தனையிலிருந்து உருவான படம்தான். நான் தஞ்சையிலிருந்த போது வந்த படம்..
எனக்கு அவரிடம் பிடிக்காதது என்னவென்றால் தன்னை ஒரு அறிவுஜீவியாக நினைத்துக்கொண்டு பிரசங்கம் செய்வதுதான்..
I liked the post, because most of the views expressed are mine too.
பதிலளிநீக்குI rate KB well below Shankhar, S A Chandrasekar, and sometimes Rama narayanan.
வாங்க சுரேஷ்,
பதிலளிநீக்குஐயையோ பாவங்க கே.பி.. இராமநாராயணனுக்கு கீழயா?
அவர் இத படிச்சா நொந்துருவார்..
கே.பி அவ்வளவு மோசமா? தெரியலை..
Hats off to your comments. True said. The tamil cinema was spoiled after KB's entry only. Myself is a fan of Director Sridhar till now.May be some of his pictures alre also dramatically taken but he was aware of the community while directing his films.
பதிலளிநீக்குவாங்க கீதா,
பதிலளிநீக்குநீங்க சொன்னா மாதிரி கே.பி.யோட ஆதிக்கத்துல ஸ்ரீதர அதிகம் பேர் மறந்தே போய்ட்டாங்க.
அவர் அமைதியானவர். அவருடைய பல படங்களும் யதார்த்தமானவை.. ஒளிப்பதிவுல ஒரு புரட்சியே செய்தவர் அவர்..
அவருடைய பல படங்கள் எனக்கு பிடிக்கும்.. சிவாஜியையும் ஜெமினியையும் மிக அழகாக கையாண்டவர் அவர்..
வாங்க ஷிவாஜி,
பதிலளிநீக்குநான் கே.பி. நல்ல கருத்துள்ள படமே எடுக்கலைன்னு சொல்லலையே..
எந்த கருத்தானாலும் அதை நாடகப்பாணியில், ஒருவிதமான செயற்கைத்தனமாய் சொல்வார் என்பதுதான் என்னுடைய அங்கலாய்ப்பு..
நம்ம விசுவும் அதே மாதிரிதான் எடுப்பார்.. ஆனா அவர் எப்பவுமே அத மறுக்க மாட்டார். தன்னுடைய படங்கள் Trendsettersனு சொன்னதே கிடையாதுன்னு நினைக்கிறேன்..
அதுதான் கே.பி.யிடம் எனக்கு பிடிக்காதது..
ஆகா,கங்குலிக்கு சாப்பல்,கேபி க்கு ஜோசஃப் ஆ? நேற்றுவரை சாதனையாளர்,இன்று 'முன்னாள்'. இருவருமே திறமையிருந்தும் ஆணவத்தால் விழுந்தனர்.ஆனால் அது அவர்கள் தவறு மட்டுமல்ல, அவர்களின் ரசிக/சிஷ்யர்களின் 'ஏத்திவிடலு'ம் தான்.
பதிலளிநீக்குமற்றபடி நானும் உங்களுடன் அவரின் செயற்கைதன்மையான திரைக்கதையையும் அதிகப்பிரசிங்கித் தனமான வசங்களையும் கண்டு கடுப்பானவன்தான். ஆயினும் அவர் காலத்து வெள்ளிக்கிழமை படங்களுக்கு ஒரு மாற்றாகவும் புதுக் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள ஒரு அடித்தளத்தை அமைக்கவும் உதவினார். அந்த அடித்தளமே பிற்கால மகேந்திரன, பாரதிராஜா, பாலுமகேந்திரன் படங்களுக்கு வித்தானது.
எனக்கும் ஸ்ரீதர் படங்கள் பிடிக்கும். நெஞ்சில் ஓர் ஆலயமும், மீண்ட சொர்க்கமும் classics.நகைச்சுவையில் காதலிக்க நேரமில்லையும் கலாட்டா கல்யாணமும் மறக்க முடியுமா ?
திரைப்படங்களை விமர்சிக்கும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று : ரசிக்கும் தன்மை ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. இப்படி எடுத்தால் அனைவரும் பார்ப்பார்கள், இரசிப்பார்கள் என்று துல்லியமாக கூற முடிந்தால் அனைவரும் வெற்றி படம் அல்லாவா கொடுத்து கொண்டு இருப்பார்கள்.
பதிலளிநீக்குஇது வலை பதிவாளர்களுக்கு பொருந்துமே..
வெற்றி தோல்வி தாண்டி ஒரு இயக்குனர் இவ்வளவு காலம் தாக்கு பிடித்தது மிக அபாரமான சாதனையே. அவர் தன்னுடைய படங்கள் பற்றி கர்வமாக பேசினார் என்று ஏன் கருதுகிறீர்கள்? அது சாதாரணமான உண்மை.
கதாநாயகர்களையும் , 4 வரி கதைகளயும் மட்டுமே நம்பி செயல்பட்டு கொண்டிருந்த ஒரு உலகத்தில் யாருமே துணியாத கதைகளை தொட்டது அவருடைய தன்னம்பிக்கை மற்றும் கற்பனை திறனை காட்டுகிறது. தண்ணீர், தண்ணீர் கதையை படமாக்கும் துணிச்சல் மற்றவர்களுக்கு உண்டா என்பது மிக முக்கியமான கேள்வி.
உண்மையில் விமர்சனம் செய்ய படவேண்டியவர் தயாரிப்பாளர் பாலசந்தர். ஏனெனில் கவிதாலாயா தயாரித்த படங்கள் தரம் தாழ்ந்தவை. பாலசந்தர் செய்து கொண்ட வியாபார தந்திரம் அது. தர வரிசை என்று பார்த்தால் அவர் பல அடி மற்றவர்களை விட முன்னே உள்ளார். அதன் பின்னர் அந்த வழியில் போகும் துணிச்சல் மற்றவர்களுக்கு வந்தது. அந்த வழியில் தமிழ் திரை உலகம் அவருக்கு கடமை பட்டுள்ளது.
விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்காக பாலசந்தரை இங்கே ஷங்கர்,சந்திரசேகர், இராம. நாரயணன் அவர்களுக்கு கீழாக ஒப்பிடுவது விமர்சனம் அடிப்படையற்று உள்ளது என்பதையே காட்டுகிறது.
வாங்க பா.கணேசன்,
பதிலளிநீக்குஉங்க பேர்ல இருக்கற பாலசந்தர் நீங்க கே.பி அபிமானிங்கறதுனால வச்சிக்கிட்டதா? சும்மா தமாஷ்க்கு கேட்டேன். சீரியசா எடுத்துக்காதீங்க.
உங்க கருத்தை நான் டிஸ்ப்யூட் பண்ண மாட்டேன்.. எனக்கு எப்படி ஒரு கருத்து இருக்கோ அது மாதிரி உங்களுக்கும் இருக்கு, இருக்கணும். நான் அதை மதிக்கிறேன்..
அதே மாதிரிதான் கே.பி.ஐ சங்கர், இராமநாராயணனுடன் ஒப்பிட்டதும்.. அது அவருடைய கருத்து..
// சிந்து பைரவி.. ஒரு வித்வானின் இசைக்கச்சேரியில் வாரப்பத்திரிகையை வாசித்துக்கொண்டிருக்கும் காட்சி, இரு பெண்கள் பேசிக்கொண்டிருக்கும் காட்சி.. என கதாநாயகி பார்ப்பதை ஒரு நாடகத்தனமாகக் காட்டுவார். ஏனாம்? பாடகர் தெலுங்கில் பாடிக்கொண்டிருக்கிறாராம்! ஆகவே அவரே எழுந்து (ஒரு அமெச்சூர் பாடகி!) நின்று ஒரு நாட்டுப்புற பாடலைப் பாடி கைத்தட்டல் பெறுவதைப்போல் நாடகத்தனமான ஒரு காட்சியை அமைத்திருப்பார்.. அக்காட்சிதான் அத்திரைப்படத்தின் உயிர்நாடி.. அதுவே அப்படியென்றால் மீதி படத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்..//
பதிலளிநீக்குஎன்னங்க இப்பிடிச் சொல்லீட்டீங்க....இப்பக்கூட ஒரு எழுத்தாளரு என்னமோ சொல்லப் போக....அதுக்கு அவரு மேடைல பேசும் பொழுது எழுந்து எதிர்ப்புத் தெரிவிச்சாங்களே...நெஜத்துலயே நாடகம் மாதிரி நடக்குது பாருங்க....
தமிழ்ப்பாட்டுப் பாடனும்னு நெனச்சாரே...அதப் பாராட்டுவோம்...அடுத்தவங்ககிட்ட தப்பு கண்டுபிடிச்சிக்கிட்டே இருந்தா சந்தோஷமா இருக்கவே முடியாதுங்க.
// அதில் ஒரு காட்சியில் அப்பாடகியின் பெரீஈஈஈய ஃபளாட்டைக் காட்டுவார்.. மிக விசாலமான அந்த ஃப்ளாட்டில் பாடகியின் உள்ளாடைகள் சோபாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரைந்து கிடக்கும்! அதை நாயகனுடைய பார்வையிலிருந்து எடுத்து வீசியெறிவார்! அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியாது.. //
ஒரு விஷயம் சொல்றேன். பெண்கள் தனியாக இருக்கும் வீடுகள் பாச்சிலர்ஸ் வீடுகளை விட மோசமக இருக்கும். என்னுடைய ராக்கி சகோதரியின் பெற்றோர்கள் அவள் வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்வதேயில்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். போட்டது போட்ட இடத்தில் இருக்கும். இப்பொழுது அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. வீட்டை எப்படி வைத்திருக்கிறாள் என்று இன்னும் பார்த்ததில்லை.
// கேள்வி: பார்த்தாலே பரவசம் ஏன் வெற்றி பெறவில்லை?
பதிலளிநீக்குகே.பி.: மாதவனும், சிம்ரனும் நடிக்காமல் அதிகம் பிரபலமடையாத நடிகர்களை (Minor actors) வைத்து எடுத்திருந்தால் படம் பாக்ஸ்ஆஃபீஸ் வெற்றி பெற்றிருக்கும்.. அதுமட்டுமல்லவாம்.. பாடல்கள் முக்கியமாக போகவே அவருடைய திரைக்கதை எடுபடவில்லையாம்! //
இது கே.பிக்குக் கொஞ்சம் அதிகம்தான். எந்த நடிகரை வைத்தும் நல்ல படம் குடுக்க வேண்டும். சின்னச் சின்ன நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களைக் குடுத்த கே.பி சிவாஜியை வைத்துத் தோல்விப்படம்தான் தந்தார். பார்த்தாலே பரவசத்தின் திரைக்கதை மிகவும் சுமார் ரகம். ஆனால் நல்ல கதைக்கரு. அதை நல்ல படமாக ஆக்க விடாமல் தடுத்தது திரைக்கதையும் பொருத்தமில்லாத பாடல்களும்.
// சின்ன, சின்ன குட்டிப் பசங்கல்லாம் வந்து எமோஷனலா, டெக்னிக்கலா சூப்பரா எடுக்கறாங்க..
பதிலளிநீக்குநீங்க என்னவோ பெரிசா சாதிச்சிட்டதா..
போங்க சார்.. //
பாலச்சந்தரின் சகாப்தம் முடிஞ்சி போச்சு. உண்மைதான். இப்ப நீங்க சொல்ற சின்னப்பசங்களப் பத்தி ஒரு பத்துப் பதினைஞ்சு வருஷம் கழிச்சு இன்னொருத்தர் வந்து நீங்க சொன்ன மாதிரியே கமெண்ட் அடிப்பாரு. :-)
ஜோசப் சார்,
பதிலளிநீக்குஅப்படி பார்த்தால் உங்களுக்கு ஏற்ற படம் Tom & Jerry தான் :-)
இட்லிவடை
இட்லி வடை,
பதிலளிநீக்குஇந்த நக்கல்தானே வேணாங்கறது?
என்னுடைய கருத்தைத்தான் நான் சொன்னேன். அதை நக்கல் செய்ய உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை..
இங்க வந்திருக்கறவங்க எல்லாம் எவ்வளவு அழகா அவங்க கருத்தைச் சொல்லியிருக்காங்க. நான் எதையாவது மறுத்தோ கேலி செய்தோ சொல்லியிருக்கேனா.
You came in and spoiled the mood of this Blog. Please don't do that in future.
கே.பி.க்கு சரின்னு நினைச்சதை அவர் எடுத்திருக்கார்.. அது அந்த காலத்துக்கு பொருத்தமா இருந்திருக்கலாம்..
ஆனா இப்பவும் அவர் வந்துக்கிட்டு நான் காலத்தை மிஞ்சி படம் எடுக்கறேன்னு சொன்னதாலதான் அவருடைய படங்களை விமர்சிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது..
நீங்க நக்கலா சொன்னீங்களோ இல்ல சீரியசாவே சொன்னீங்களோ தெரியலை.. ஆனா எங்க பயிற்சி கல்லூரியில சீனியர் மேலாளர்களுக்கு எச்.ஆர் செஷன்ஸ்ல ரிலாக்ஸ் பண்றதுக்கு டாம் & ஜெர்ரி படத்தை சுமார் அரைமணி நேரம் போடுவாங்க.. தங்களுடைய அலுவல்களில் சந்திக்கும் பிரச்சினைகளை மறந்து அந்த அரைமணி நேரத்தில் தங்களுடைய குழந்தைப் பருவத்திற்கு சென்று திரும்புவார்கள்..
You need to go back to your childhood level once in a while.. there is nothing wrong in it.
அது உங்களுடைய மன இறுக்கத்தை வெகுவாக குறைக்க பயன்படும்..
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஉங்க பின்னூட்டங்கள் உங்களுடைய கருத்துகளைப் பிரதிபலிக்கின்றன..
அதைப்பற்றி நான் ஒன்றும் கூறப்போவதில்லை..
என்னுடைய பதிவின் துவக்கத்திலேயே கூறியிருக்கிறேன்.. இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து.. இதை எல்லோரும் ஒப்புக்கொள்ள தேவையில்லை என்று..
So, no comments!
ஆனாலும் உங்களுடைய வாதத்திறமை மிக அருமை!
பாராட்டுக்கள்..
நான் என்னுடைய வங்கியின் பயிற்சி கல்லூரி முதல்வராக பணியாற்றியபோது அதிகாரிகளுக்கான எச். ஆர் செஷன்சில் இப்படி ஒருவரை Devil's Counsel என்று நியமித்து நான் வகுப்பில் கூறுபவற்றையெல்லாம் மறுத்துப் பேச வைப்பேன்..
அவருடைய வாதம் சரியா, தவறா.. சரியென்றால் எப்படி சரி, தவறென்றால் எப்படி தவறு என்பதை நியாயப்படுத்தி பேச வகுப்பில் உள்ளவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து சுமார் ஒரு மணி நேரம் ஒதுக்குவோம்..
பிரின்ஸி பேசியதை எப்படி எதிர்த்துப் பேசுவது என்று நாற்பது வயதைக் கடந்தவர்கள் நிறைய யோசிப்பார்கள்.. ஆனால் இளைஞர்கள் கவலையில்லாமல் பேசி அமர்க்களப்படுத்திவிடுவார்கள்..
உங்களுடைய வாதத்தைப் படித்தபோது எனக்கு அப்படித்தான் தோன்றியது..
நல்ல நாகரீகமான வாதங்கள் எப்போதுமே அரங்கத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்..
ஆனா இந்த வரிகள்தான் கொஞ்சம் பிசிறு தட்டுது..
அடுத்தவங்ககிட்ட தப்பு கண்டுபிடிச்சிக்கிட்டே இருந்தா சந்தோஷமா இருக்கவே முடியாதுங்க.//
அப்படியென்றால் விமர்சனங்களே இருக்காதே..
இறுதியாக ஒன்று..
இதுவும் முழுக்க முழுக்க என்னுடைய கருத்து மட்டுமே..
கே.பி. தமிழ்த்துரையில் ஒரு சகாப்தம். அதை யாரும் மறுக்கவில்லை என்னையும் சேர்த்து..
ஆனால் அவருடைய படங்களைப் பற்றி அவரே சிலாகித்து பேசிக்கொள்வதுதான் சகிக்க முடியாதது..
Joseph Sir, Idly Vadai has gone a bit too far. I agree and disapprove his action of not commenting on the subject.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீதர்,
பதிலளிநீக்குIdly Vadai has gone a bit too far. I agree and disapprove his action of not commenting on the subject. //
அவருக்கு புரிஞ்சா சரி.
ஜோசப் சார். நான் என்னுடைய கருத்துகளை எடுத்து வைத்தேன். அவ்வளவே. உங்கள் கருத்துகளை நான் மதிக்கிறேன்.
பதிலளிநீக்கு// ஆனா இந்த வரிகள்தான் கொஞ்சம் பிசிறு தட்டுது..
//அடுத்தவங்ககிட்ட தப்பு கண்டுபிடிச்சிக்கிட்டே இருந்தா சந்தோஷமா இருக்கவே முடியாதுங்க.//
அப்படியென்றால் விமர்சனங்களே இருக்காதே..//
இல்லை. இல்லை. நன்றாகப் படியுங்கள். தப்பு கண்டுபிடிப்பதற்கும் தப்பு கண்டுபிடிச்சிக்கிட்டே இருப்பதற்கும் வேறுபாடு உண்டுதானே.
அடுத்தவங்ககிட்ட தப்பு கண்டுபிடிச்சிக்கிட்டே இருந்தா சந்தோஷமா இருக்கவே முடியாதுங்க.//
பதிலளிநீக்குநான் வேண்டாம்னு கண்டுக்காம விட்டாலும் விடமாட்டீங்க போலருக்கு.
சரி..
நீங்க, 'சந்தோஷமா இருக்கவே முடியாதுங்க' ன்னு யாரை சொல்றீங்க?
என்னையா?
சரி, அதுவும் போட்டும்,
அடுத்தவங்ககிட்ட தப்பு கண்டுபிடிச்சிக்கிட்டே இருந்தா //
இதுக்கென்ன அர்த்தம்.. யார் அடுத்தவங்ககிட்ட தப்பு கண்டுபிடிச்சிக்கிட்டே இருக்கறது?
நானா?
நிஜமாவே புரியலீங்க.
இல்லை இல்லை...உங்களை இல்லை. அது பொதுப்படையான கருத்து. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைன்னு சொல்றத கொஞ்சம் வேற மாதிரி சொல்லீருக்கேன். அவ்வளவுதான்.
பதிலளிநீக்குவாழ்க்கையில் தவறுகளைக் கண்டுபிடிக்கனும். ஆனால் தவறு கண்டுபிடிக்கிறதே வாழ்க்கையாயிரக்கூடாதுன்னு சொல்ல வந்தேன்.
உங்களைத் தனிப்பட்ட முறையில் நான் ஒன்றும் சொல்லவில்லை. :-)
OK Raghavan, I accept your explanation..
பதிலளிநீக்குLet us leave it at that.
Thanks.
A Director Who has No originality.
பதிலளிநீக்குIRUKODUGAL -Joseph Anandan"s Drama
THANNEER THANNEER-Komal swaminathan's drama
Punnagai- Satyagam Hindi Film
Thamarai Nenjam-Bengali film
Avl oru Thodarkathai-M.S.Perumal's story
I can go on telling like this.,
IVARPOLA YAAR ENRU OOR SOLLA VENDUM.THANE SOLLAKKOODADHU