24 பிப்ரவரி 2006
கே.பியுடன் ஒரு நேர்காணல்
சாதாரணமாக நான் சர்ச்சைக்குரிய விஷயங்கள்ல அவ்வளவா விருப்பம் காட்டுவதில்லை..
அதுக்கு முக்கிய காரணம் நாம் சரியென்று நினைப்பதை மற்றவர்களும் சரியானதுதான் என்று நினைக்கத் தேவையில்லையே என்பதுதான்.
ஆனாலும் இன்றைய ஹிந்து செய்தித் தாளில் Friday Reviewவில் நம்முடைய முன்னாள் இயக்குனர் சிகரம் (ஏன் இப்படி சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். அதற்கு காரணம் இருக்கிறது) கே. பாலசந்தர் அவர்களின் பேட்டியில் அவர் ஆணவத்துடன் (அவர் என்ன நினைத்து அப்படியெல்லாம் சொன்னாரோ.. ஆனால் அதை படித்தபோது எனக்கு அவை ஆணவம் என்றுதான் தோன்றியது) அளித்த சில பதில்கள் என்னை இப்பதிவை எழுதத் தூண்டியது..
இப்போதே சொல்லிவிடுகிறேன். இது என்னுடைய கண்ணோட்டத்திலிருந்து நான் பார்க்கும் பார்வை. இதற்கு எல்லோருமே ஒத்துப்போகவேண்டும் என்றில்லை..
சரி விஷயத்துக்கு வருவோம்..
பாலசந்தர் இதுவரை நூறு படங்களை இயக்கியிருக்கிறார். அதையொட்டி அவரிடம் பேட்டியாளர் கேட்ட சில கேள்விகளையும் அதற்கு கே.பி அளித்த பதில்களை மட்டும் இங்கு அலசலாம் என்று நினைக்கிறேன்.
கேள்வி: நீங்கள் இயக்கிய நூறு படங்களில் உங்களுடைய பார்வையில் மிகச்சிறந்ததாக கருதும் ஐந்து படங்கள் எவை?
கே.பி: நான் இயக்கிய படங்களில் சிறந்த படங்களில் ஒன்று புன்னகை. பிறகு ஏக் துஜே கேலியே, தண்ணீர், தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை.. அத்துடன் வானமே எல்லை, சிந்து பைரவி, என்று பட்டியல் நீள்கிறது.. இறுதியில் ஜாதி மல்லி..
புன்னகை, ஹ்ரிஷிக்கேஷ் முக்கர்ஜி இயக்கிய சத்யகாம் என்ற ஹிந்தி படத்தின் அப்பட்டமான காப்பி.
ஏக் துஜே கேலியே.. அவர் அதை எதற்காகக் குறிப்பிட்டார் என்பது விளங்கவில்லை.. என்னைப் பொறுத்தவரை அது ஒரு மிகச்சாதாரணமான ஒரு மூன்றாம் தர மசாலாப் படம்..
தண்ணீர், தண்ணீர்.. அவருக்கு சிறந்த திரைக்கதை சிரியர் விருது பெற்றுத்தந்த படமாம்! அது ஒரு சரியான வானம் பார்த்த மேடையில் (open air stage) நடத்தப்பட்ட நாடகம் என்பதுதான் என்னுடைய கருத்து.. அவருடைய பல படங்களைப் பார்க்கும்போது முன் வரிசையில் அமர்ந்துக்கொண்டு அண்ணாந்து ஒரு நாடகத்தைப் பார்க்கும் எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டதுண்டு. அவருடைய பல கேமரா கோணங்கள் அப்படித்தான் இருக்கும்.. தண்ணிர், தண்ணீரும் அதற்கு விதிவிலக்கல்ல..
வானமே எல்லை.. கேட்கவே வேண்டாம்..கே.பியின் கோணத்தில் இளைஞர்களின் பிரச்சினையைக் கையாண்ட விதம் ஒரு சிறுபிள்ளைத்தனம் என்று இளைஞர்களுக்கே தெரியும்..
சிந்து பைரவி.. ஒரு வித்வானின் இசைக்கச்சேரியில் வாரப்பத்திரிகையை வாசித்துக்கொண்டிருக்கும் காட்சி, இரு பெண்கள் பேசிக்கொண்டிருக்கும் காட்சி.. என கதாநாயகி பார்ப்பதை ஒரு நாடகத்தனமாகக் காட்டுவார். ஏனாம்? பாடகர் தெலுங்கில் பாடிக்கொண்டிருக்கிறாராம்! ஆகவே அவரே எழுந்து (ஒரு அமெச்சூர் பாடகி!) நின்று ஒரு நாட்டுப்புற பாடலைப் பாடி கைத்தட்டல் பெறுவதைப்போல் நாடகத்தனமான ஒரு காட்சியை அமைத்திருப்பார்.. அக்காட்சிதான் அத்திரைப்படத்தின் உயிர்நாடி.. அதுவே அப்படியென்றால் மீதி படத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்.. அதில் ஒரு காட்சியில் அப்பாடகியின் பெரீஈஈஈய ஃபளாட்டைக் காட்டுவார்.. மிக விசாலமான அந்த ஃப்ளாட்டில் பாடகியின் உள்ளாடைகள் சோபாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இரைந்து கிடக்கும்! அதை நாயகனுடைய பார்வையிலிருந்து எடுத்து வீசியெறிவார்! அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியாது..
இதெல்லாம் கூட பரவாயில்லை. அப்பட்டியலில் கடைசியாக ஜாதிமல்லி என்ற ஒரு குப்பைப் படத்தையும் சேர்த்ததுதான் சகிக்க முடியவில்லை..
அடுத்த கேள்விக்கு அவர் அளித்த பதில் அதைவிட தமாஷானது!
கேள்வி: பார்த்தாலே பரவசம் ஏன் வெற்றி பெறவில்லை?
கே.பி.: மாதவனும், சிம்ரனும் நடிக்காமல் அதிகம் பிரபலமடையாத நடிகர்களை (Minor actors) வைத்து எடுத்திருந்தால் படம் பாக்ஸ்ஆஃபீஸ் வெற்றி பெற்றிருக்கும்.. அதுமட்டுமல்லவாம்.. பாடல்கள் முக்கியமாக போகவே அவருடைய திரைக்கதை எடுபடவில்லையாம்!
இதென்ன லாஜிக்கோ தெரியவில்லை..
மாதவனைப் போன்ற ஒரு அலட்டிக்கொள்ளாமல் நடிக்கும் நடிகரை வைத்து படம் எடுக்கத்தெரியாமல் சொதப்பிவிட்டு சால்ஜாப்பு சொன்னா எப்படி..
அடுத்த சில கேள்விகளை விட்டு விடுவோம்..
கே.பியின் நடிப்பைப் பற்றிய ஒரு கேள்வி..
கேள்வி: உங்களுடைய அடுத்த படமான ‘பொய்’யில் நீங்கள் நடிக்கிறீர்கள். உங்களுடைய பார்வையில் நடிகர் கே.பியை எப்படி எடைப் போடுவீர்கள்?
கே.பி.: அடிப்படையில் நான் ஒரு நடிகன்! நான் இயக்குநர் தொழிலை மேற்கொண்டதால் நடிப்பை கைவிட வேண்டியிருந்தது!
அடடா.. நமக்கு நல்லதொரு நடிகர் கிடைக்காமல் போய்விட்டாரே என்று நினைக்காதீர்கள்.. அவருடைய இயக்கத்தைவிட கொடுமை அவருடைய செயற்கையான, அதிகப்படியான நடிப்பு! அவருக்கு டி.ஆரே மேல்.. வசனங்களையாவது உணர்ச்சிகரமாக டெலிவரி செய்வார்..
அடுத்த கேள்வி.. உங்களுடைய ‘பொய்’ எதைப் பற்றியது?
கே.பி: அது ஒரு வில்லன் இல்லாத காதல் கதை. திரைக்கதையில் clich'e (இதற்கு தமிழில் என்ன சொல்லலாம்? ஃபார்முலா?) இருக்காது.
கே.பி சார், அப்படின்னா உங்களுடைய மத்த படங்களோட திரைக்கதையில எல்லாம் இது இருக்குன்னு ஒத்துக்கறீங்களா?
நீங்க clich'e னு எத சொல்ல வரீங்களே தெரியலை.. ஆனா ஏறக்குறைய உங்களுடைய எல்லா திரைக்கதைகளுமே ஒரே மாதிரியான ஃபார்முலாவின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன்.
காட்சியமைப்புகளும் அப்படித்தான்..
மிகச்சிறந்த நடிகர்களாகக் கருதப்படும் சரிதாவையும் சுஜாதாவையும் ஏன் கமலையும் கூட உங்களுடைய contrived பாத்திர சித்தரிப்பில் சிறைபடுத்தியவர்தானே நீங்கள்?
கடைசி கேள்வி..
நீங்கள் எதையாவது சாதித்திருப்பதாக நினைக்கிறீர்களா (கேள்வியின் உள்ளே புகுந்து பார்த்தால் வேண்டுமென்றே நக்கலாக கேட்கப்பட்டது போல் தெரிகிறது?)
கே.பி: I have always given films, which are ahead of my times!
எங்கே இதை தமிழில் மொழிபெயர்த்து அதிலுள்ள அகங்காரத்தை குறைத்துவிடுவேனோ என்ற பயத்தில் பத்திரிகையில் வந்ததை அப்படியே கொடுத்துள்ளேன்..
அதாவது, காலத்தை விஞ்சிய என்று சொல்லலாமா?
எது? ஒரு வசவு (தகப்பன் தெரியாத பயலே) வார்த்தையை கமலை உச்சரிக்க வைத்தீர்களே, அதுவா?
அல்லது, உன் அம்மா உன் கணவரோட அப்பாவோட மனைவின்னா நான் உனக்கு என்ன உறவுன்னு ஒரு புதிர் போட்டீங்களே, அதுவா?
அதையே மறுபடியும் ஒரு காதலனோட காதலியே அவனோட அப்பாவோட இரண்டாவது மனைவியா வந்து அவன சத்தாய்க்கிறா மாதிரி ஒரு படம் பண்ணீங்களே, அதுவா?
இன்னும் உங்களோட அபத்தமான, ஏன் வக்கிரமமான கற்பனைகளை சொல்லிக்கிட்டே போகலாம் கே.பி சார்..
உங்களுக்கு ஒரு வார்த்தை.. அறிவுரைன்னு சொல்றதுக்கு எனக்கு வயசு போறாது..
உங்க டைம் முடிஞ்சிப் போயிருச்சி சார். கே.எஸ் கோபால கிருஷ்ணன்னு ஒருத்தர் இருந்தார். அருமையா வசனம் எழுதறேன்னு சொல்லிட்டு பக்கம் பக்கமா எழுதி அத நடிகர் நடிகைகளை ஏத்தி, இறக்கி பேசவச்சி அறுத்துடுவார்..
உங்களோட ஒப்பிடும்போது அவரே தேவலைன்னு தோனுது.. அதான் உண்மை.. அதப் புரிஞ்சுக்குங்க..
சின்ன, சின்ன குட்டிப் பசங்கல்லாம் வந்து எமோஷனலா, டெக்னிக்கலா சூப்பரா எடுக்கறாங்க..
நீங்க என்னவோ பெரிசா சாதிச்சிட்டதா..
போங்க சார்..
22 பிப்ரவரி 2006
சங்கிலிப் பதிவு - டி.ராஜின் கைங்கரியம்
சிங்கை D. ராஜ் (என்ன ராஜ் இப்படி மாட்டி விட்டுட்டீங்க?) அன்புத்தொல்லையால் (!) வந்த வினை..
இச்சங்கிலிப் பதிவில் அடுத்த வளையம் நான்..
எனக்குப் பிடித்த நாலு விஷயங்கள்..
Four Jobs I have had:
லெதர் குட்ஸ் தயாரிப்பு நிறுவனம்: வருடம்: 1967-69. இது என்னுடைய உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. ஆல் இன் ஆல் என்பார்களே அதுபோன்ற பதவி இருந்தேன். சுமார் ஒன்றரை ஆண்டுகள்..
ஹிக்கின்பாதம்ஸ்: வருடம் 1969-1970. சென்னையில் அப்போது இருந்த புத்தகக் கடைகளில் மிகப் பெரியதாகக் கருதப்பட்டது.. சென்னையில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கிளைகளைக் கொண்ட நிறுவனம். Amalgamations என்ற தென்னிந்தியாவில் உள்ள மிகப் பெரிய நிறுவன குழுவில் சேர்ந்தது.. சுமார் பதினெட்டு மாதங்கள் குமாஸ்தாவாக பணியாற்றினேன்.. பணி நிரந்தரம் அடைய வாய்ப்பில்லை என்பதால் விலகினேன்.
இப்போதுள்ள வங்கி: 1971 ஏப்ரல்: குமாஸ்தாவாக சேர்ந்தேன்.. இன்று Deputy General Manager..
நான்காவது? தேவைப்பட்டால் பணி ஓய்வு பெற்ற பிறகு..
Four Movies I would love to watch over and over again..
1. உதிரிப் பூக்கள்
2. மவுன ராகம்
3. சேது
4. தவமாய் தவமிருந்து
Four Places I have lived
1. சென்னை
2. தஞ்சை
3. மும்பை
4. மதுரை
Four places I would rather be (now)
1. என் மூத்த மகளுடன் (சிறிது காலமாவது) மலேசியாவில்
2.என் அம்மாவுடன் (திருத்துறைப் பூண்டியில்)
3.தனிமையில் (பழைய சிந்தனைகளை அசைபோட)
4.என் அலுவலகம் (வேறு வழியில்லாமல்)
Four TV serials I love to watch
உண்மையா சொல்றேன் எனக்கு அதுக்கு நேரமே கிடைச்சதில்லை.. இருந்தாலும், தமிழ்ல ஒன்னுமே சொல்றதுக்கில்லை.. ஆங்கிலத்தில்? வீட்ல செட் டாப் பாக்ஸே இல்லை..
Four Places I have been on vacation
1. லோனாவாலா, மும்பை,
2. ஊட்டி,
3. கொடைக்கானல்
4. மூனார், கேரளா
Four of my favourite Foods (ரொம்ப முக்கியம்!)
1. வெங்காய ஊத்தப்பம்,
2. வெண் பொங்கல்,
3. ரவா தோசை
4. கேசரி (ஒரு காலத்தில். இப்பவும் சைதான்.. ஆசை இருந்து என்ன பண்ண?)
Four sites I visit Daily
1. என்னுடைய வங்கியின் இணைய தளம்
2. கூகுள்
3. தமிழ்மணம் (வேற வழி?)
4. Tamilnetmalaysia.com (என்னுடைய படைப்புகளை தெரியாத்தனமாக வெளியிடுவதால்)
Four People I would like to tag (மன்னிச்சிருங்கய்யா)
1. கோ. ராகவன்,
2. ஜோ மில்டன்
3. சோம்பேறிப்பையன்
4. டோண்டு (சாரி, போலி டோண்டு இல்லை)
இச்சங்கிலிப் பதிவில் அடுத்த வளையம் நான்..
எனக்குப் பிடித்த நாலு விஷயங்கள்..
Four Jobs I have had:
லெதர் குட்ஸ் தயாரிப்பு நிறுவனம்: வருடம்: 1967-69. இது என்னுடைய உறவினர் ஒருவருக்கு சொந்தமானது. ஆல் இன் ஆல் என்பார்களே அதுபோன்ற பதவி இருந்தேன். சுமார் ஒன்றரை ஆண்டுகள்..
ஹிக்கின்பாதம்ஸ்: வருடம் 1969-1970. சென்னையில் அப்போது இருந்த புத்தகக் கடைகளில் மிகப் பெரியதாகக் கருதப்பட்டது.. சென்னையில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கிளைகளைக் கொண்ட நிறுவனம். Amalgamations என்ற தென்னிந்தியாவில் உள்ள மிகப் பெரிய நிறுவன குழுவில் சேர்ந்தது.. சுமார் பதினெட்டு மாதங்கள் குமாஸ்தாவாக பணியாற்றினேன்.. பணி நிரந்தரம் அடைய வாய்ப்பில்லை என்பதால் விலகினேன்.
இப்போதுள்ள வங்கி: 1971 ஏப்ரல்: குமாஸ்தாவாக சேர்ந்தேன்.. இன்று Deputy General Manager..
நான்காவது? தேவைப்பட்டால் பணி ஓய்வு பெற்ற பிறகு..
Four Movies I would love to watch over and over again..
1. உதிரிப் பூக்கள்
2. மவுன ராகம்
3. சேது
4. தவமாய் தவமிருந்து
Four Places I have lived
1. சென்னை
2. தஞ்சை
3. மும்பை
4. மதுரை
Four places I would rather be (now)
1. என் மூத்த மகளுடன் (சிறிது காலமாவது) மலேசியாவில்
2.என் அம்மாவுடன் (திருத்துறைப் பூண்டியில்)
3.தனிமையில் (பழைய சிந்தனைகளை அசைபோட)
4.என் அலுவலகம் (வேறு வழியில்லாமல்)
Four TV serials I love to watch
உண்மையா சொல்றேன் எனக்கு அதுக்கு நேரமே கிடைச்சதில்லை.. இருந்தாலும், தமிழ்ல ஒன்னுமே சொல்றதுக்கில்லை.. ஆங்கிலத்தில்? வீட்ல செட் டாப் பாக்ஸே இல்லை..
Four Places I have been on vacation
1. லோனாவாலா, மும்பை,
2. ஊட்டி,
3. கொடைக்கானல்
4. மூனார், கேரளா
Four of my favourite Foods (ரொம்ப முக்கியம்!)
1. வெங்காய ஊத்தப்பம்,
2. வெண் பொங்கல்,
3. ரவா தோசை
4. கேசரி (ஒரு காலத்தில். இப்பவும் சைதான்.. ஆசை இருந்து என்ன பண்ண?)
Four sites I visit Daily
1. என்னுடைய வங்கியின் இணைய தளம்
2. கூகுள்
3. தமிழ்மணம் (வேற வழி?)
4. Tamilnetmalaysia.com (என்னுடைய படைப்புகளை தெரியாத்தனமாக வெளியிடுவதால்)
Four People I would like to tag (மன்னிச்சிருங்கய்யா)
1. கோ. ராகவன்,
2. ஜோ மில்டன்
3. சோம்பேறிப்பையன்
4. டோண்டு (சாரி, போலி டோண்டு இல்லை)
13 பிப்ரவரி 2006
பதவி உயர்வு - ட்ரீட் பதிவு
நாமக்கல் சிபியின் வேண்டுகோளுக்கிணங்கி..
என்னுடைய பதவி உயர்வுக்கு ஒரு ட்ரீட் குடுக்கலாம்னு...
பதவி உயர்வு ட்ரீட்
லிமிடெட் சீட்தான் இருக்கு..
First come First served!!
ஏமாற்றத்தைத் தவிர்க்க முந்துங்கள்!!
அன்புடன்..
டிபிஆர்..
பி.கு.: குடி குடியைக் கெடுக்குங்கறது நான் சொல்லித்தான் தெரியுணும்னு இல்லை..
என்னுடைய பதவி உயர்வுக்கு ஒரு ட்ரீட் குடுக்கலாம்னு...
பதவி உயர்வு ட்ரீட்
லிமிடெட் சீட்தான் இருக்கு..
First come First served!!
ஏமாற்றத்தைத் தவிர்க்க முந்துங்கள்!!
அன்புடன்..
டிபிஆர்..
பி.கு.: குடி குடியைக் கெடுக்குங்கறது நான் சொல்லித்தான் தெரியுணும்னு இல்லை..