பல முறை பிணை பெற முயன்று சோர்ந்து போயிருந்த கனிமொழிக்கு இறுதியாக பிணை வழங்கியுள்ள தில்லி உயர் நீதிமன்றத்தின் ஆணையை படித்து பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்கள்....
"கனிமொழி மீதான குற்றச்சாட்டு பெரும்பாலும் ஆவணங்களை சார்ந்தே இருப்பதால் அவர் சாட்சியங்களை கலைக்கக் கூடும் என்ற ஐயம் உள்ளதாக கூறி அவருக்கு பிணை வழங்க மறுத்த சிபிஐ சிறப்பு மன்ற நீதிபதியின் உத்தரவு சரியில்லை...."
இதுதான் உயர்நீதிமன்ற நீதிபதியின் கணிப்பு.
அப்படியானால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தலைவராக இருக்கும் நீதிபதியின் சட்ட அறிவில் குறை உள்ளது என கொள்ளலாமா? அல்லது அவர் வேண்டுமென்றே அதாவது சட்ட காரணங்களுக்காக அல்லாமல் வேறேதும் காரணங்களுக்காக அவர் கனிமொழியின் பிணை மனுவை நிராகரித்தாரா?
ஒரு விசாரணைக்கு தீர்ப்பு வழங்கும் பொறுப்பிலுள்ள நீதிபதி வழக்கு விசாரனையில் உள்ள சமயத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் - அவர் யாராக இருப்பினும் - குற்றவாளிதான் என்ற முடிவெடுத்துவிட்டால் அவருடையை தீர்ப்பில் எந்த அளவுக்கு நியாயம் அல்லது நீதி இருக்க முடியும்?
கனிமொழி குற்றவாளிதானா அல்லது அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளனவா என்றெல்லாம் விசாரனையின் இறுதியில்தானே தெரியவரும்? அவருக்கு எதிராக திரட்டப்பட்டுள்ள ஆவண ஆதாரங்களை வைத்து மட்டுமே அவர் குற்றவாளை என்ற முடிவுக்கு ஒருவர் - இங்கு நீதிபதி - வந்துவிட முடியுமென்றால் பிறகு எதற்கு வழக்கை மேலும் நடத்தி அரசின் பணத்தை வீணடிப்பது?
***