07 மார்ச் 2014

ஜெயலலிதா பிரதமரானால் ஆதரிப்பேன் - மமதா!

தேர்தல் தேதிகள் அறிவித்துவிட்ட சூழலில் தமிழகத்திலும் சரி இந்திய அளவிலும் சரி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்த வார துவக்கத்திலிருந்தே கூட்டணி விஷயமாக முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வந்தவண்ணம் இருப்பதைக் காண முடிகிறது. கூட்டணியில் இருப்பவர்கள் பிரிந்து செல்வது, பின்னர் எதிரணியிலிருந்து சாதகமான பதில் வராத சூழலில் மீண்டும் அதே அணிக்கு திரும்புவதையெல்லாம் பார்க்கும்போது இவர்களுக்கெல்லாம் சூடு சுரணையே இருக்காதோ என்றெல்லாம் கேட்க தோன்றுகிறது. கேட்டால் அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை நிரந்தர நண்பனும் இல்லை என்று சமாளிக்கிறார்கள். கவுண்டமனி பாணியில் இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்று ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் போலுள்ளது.

ஆகவேதான் இத்தகைய அரசியல் நிகழ்வுகளை விமர்சனம் செய்வதில் பலரும் முன்வருவதில்லை. ஆனாலும் நான் பதிவு எழுதத் துவங்கிய காலத்திலிருந்தே அரசியல் மற்றும் நாட்டு நடப்புகளை விமர்சித்து எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளேன். என்னுடைய தளத்தின் Tag Lineஏ 'உலகின் நடப்பவை என் பார்வையில்' என்பதுதான். துவக்கத்தில் இத்தகைய நிகழ்வுகள் என்னை எவ்வாறு பாதித்தன அல்லது இவைகளைப் பற்றிய என்னுடைய கருத்து என்ன என்பதை மட்டுமே பதிவு செய்து வந்திருந்தேன். ஆனால் இணையத்தில் வெளிவரும் பல பிரபல பத்திரிகைகளின் மின் பதிப்புகளில் வெளியாகும் பல அரசியல் கட்டுரைகளைப் படிக்கும்போது கட்டுரைகளை விடவும் சுவாரஸ்யமாக தெரிந்தது அவற்றிற்கு வரும் வாசகர்களின் எதிரும் புதிருமான கருத்துக்களே என்றால் மிகையாகாது. அப்போதுதான் என்னுடைய அரசியல் கட்டுரைகளையும் நண்பர்கள் சிலர் விவாதிக்கும் விதமாக அமைத்தால் என்ன தோன்றியது. இந்த பாணியில் எழுதும்போது என்னுடைய கருத்துக்களை மட்டுமல்லாமல் அதற்கு மாற்றாக எழக்கூடிய கருத்துக்களையும் கூட எழுத முடிகிறது. இத்தகைய மாற்றுக் கருத்துக்கள் இணையத்தில் வாசகர்கள் எழுதும் கருத்துக்களின் சாராம்சமே அல்லாமல் முழுக்க முழுக்க என்னுடைய கற்பனையல்ல. 

ஆகவே இனி வரும் அரசியல் விமர்சன பதிவுகளையும் இதே பாணியில் எழுதவே விரும்புகிறேன். என்னுடைய இந்த பாணியை மாற்றினால் நல்லது என்று கருத்துரைகளில் பதிவிட்ட பதிவுலக நண்பர்களின் பரிந்துரையை இந்த முடிவின் மூலம் அலட்சியப்படுத்துகிறேன் என்று யாரும் எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து படித்து தங்ககளுடைய மேலான கருத்துக்களை அவை மாற்றுக் கருத்துக்களாக இருந்தாலும் பதிவிட வேண்டுகிறேன்.

இனி கடந்த இரு நாட்களாக நடந்த அரசியல் கூத்துக்களை பார்க்கலாம்.

ரஹீம்: (கேலியுடன்) என்ன கணேஷ், கடைசியா கேப்டன இழுத்துப் போட்டுட்டீங்க போலருக்கு?

கணேஷ்: என்னங்க கேள்வியே நக்கலா இருக்கு? நாங்க என்னவோ அவர தேடிப் போய் சேத்துக்கிட்டா மாதிரி சொல்றீங்க?

ஜோசப்: (கேலியுடன்) அதானங்க உண்மை? பாய் கேக்கறதுல என்ன தப்பு?

கணேஷ்: சரிங்க அப்படியே வச்சிக்குவோம். அதுல என்ன தப்பு? ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாயி ஜெயிலுக்கு போய்ட்டு வந்திருக்கற லல்லு கூட ராகுல் கூட்டு வச்சிக்கலாம்னா நாங்களும் கேப்டன் கூட கூட்டு வச்சிக்கலாம் தப்பே இல்ல.

ஜோசப்: இங்க பாருங்க. அதைப் பத்தி அப்புறம் பேசலாம். நா கேக்கற கேள்விக்கி பதில் சொல்லுங்க.

கணேஷ்: (சலிப்புடன்) இதுல என்னங்க கேக்கறதுக்கு இருக்கு?

ஜோசப்: தேர்தல் நேரத்துல யார் கூட யார் கூட்டணி வச்சிக்கறதுங்கற விவஸ்தையே இல்லாம போயிருச்சிங்கறது வாஸ்தவந்தான். அதனால பிஜேபி கேப்டன் கூட கூட்டணி வச்சிக்கறதுல ஒன்னும் பெருசா தப்பு இல்லதான். ஆனா இந்த கூட்டணியால கேப்டனுக்குத்தான் லாபமே தவிர உங்க கட்சிக்கு பெருசா எதுவும் கிடைக்கப் போறதில்லை. அது ஏங்க உங்களுக்கு தெரிய மாட்டேங்குது?

கணேஷ்: எதுக்கு அப்படி சொல்றீங்க?

ஜோசப்: சொல்றேன். கேப்டனுக்குன்னு முன்னால இருந்த ஓட் ஷேர்லாம் இப்ப இல்ல. அத்தோட ஏற்கனவே கேப்டன தீவிரமா எதிர்த்துக்கிட்டிருந்த கட்சி பாமக. அதே கூட்டணியில கேப்டன் கட்சியையும் சேர்த்தா இது வெறும் சந்தர்ப்பவாத கூட்டணின்னு ஜனங்க ரிஜெக்ட் பண்ணிருவாங்க. அது கேப்டனுக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் அவர் இந்த கூட்டணிக்கு ஒத்துக்கிட்டார்னா அதுக்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். பிஜேபியோட கூட்டணி வச்சி தமிழ்நாட்டுல பெருசா எதுவும் சாதிக்க முடியலைன்னாலும் சென்ட்ரல்ல அடுத்த மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ணப் போறது பிஜேபின்னு கேப்டனுக்கு நல்லா தெரியும். அப்போ நாங்க உங்களோட சேர்ந்ததாலதான் எங்களுக்கு கிடைக்கறதா இருந்த ஒன்னு ரெண்டு சீட்டும் போயிருச்சி. அதனால மினிஸ்ட்ரியில ஒன்னோ ரெண்டோ போஸ்ட்டிங் எங்களுக்கு குடுங்கன்னு கேக்கலாமில்ல? அதான். 

ரஹீம்: கரெக்ட். இவர் மட்டுமில்ல பாஜக, மதிமுகன்னு ஆளாளுக்கு கேக்கத்தான் போறாங்க, பாத்துக்கிட்டே இருங்க.

கணேஷ்: (அலட்சியத்துடன்) அத அப்போ பாத்துக்குவோம், உங்களுக்கு எதுக்குங்க அந்த கவலையெல்லாம்?

ஜோசப்ள் (சிரிக்கிறார்) அதாவது ஜெயிக்கறப்போ பாத்துக்கலாம்கறீங்க. அப்போ உங்களுக்கே மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்றதுல நம்பிக்கையில்ல, அப்படின்னு எடுத்துக்கலாமா?

கணேஷ்: அட நீங்க வேற. நா சொல்ல வந்தது மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்றப்போ பாத்துக்கலாம்னு...

ரஹீம்: ஜோசப் இவர் சொல்ல வர்றது புரியுதா? அதாவது மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்றப்போ இவங்கள யார் கண்டுக்கப்போறா, அப்படித்தானங்க?

ஜோசப்: (சிரிக்கிறார்) அப்படியும் வச்சிக்கலாம். ஆனா ஒன்னுங்க, தேதிமுக திமுகவோட சேர்ந்திருந்தா நாலஞ்சி இடத்துலயாவது ஜெயிச்சிருக்கலாம். ஏன்னா திமுகவுக்குன்னு இருக்கற வோட் ஷேர் இவங்களுக்கு வந்துருக்கும். இவர் சேர்ந்துருக்கற கூட்டணியில இருக்கற எந்த கட்சிக்குமே பெருசா வோட் ஷேர் இருக்கறா மாதிரி தெரியல. 

கணேஷ்: (எரிச்சலுடன்) இங்க பாருங்க. ஒன்னு சொல்லிக்கறேன். இப்ப வீசுறது மோடி அலை. நீங்க சொல்றது இதுவரைக்கும் நடந்த தேர்தலுங்களுக்கு வேணும்னா பொருத்தமா இருந்துருக்கலாம். இந்த தடவை இந்த மாதிரி கேல்குலேஷன்லாம் மோடி அலையில அடிபட்டுப் போயிரும். 

ரஹீம்: சரி ஜோசப் இவர் சொல்றதையேத்தான் சொல்லிக்கிட்டிருப்பார். வேற விஷயத்த பேசுவோம்.

கணேஷ்: ஏன் ஒங்க மேடம் கம்யூனிஸ்ட்டுங்கள கழட்டி விட்டுட்டாங்களே அதப் பத்தி பேசுங்களேன்.

ரஹீம்: என்னது எங்க மேடமா? 

ஜோசப்: (சிரிக்கிறார்) அவங்க இவங்களோட மேடம் இல்லையே. அதான் உங்க மேடம்னு சொல்றார். அதானங்க?

கணேஷ்: கடுப்படிக்காதீங்க ஜோசப். மேட்டருக்கு வாங்க. கம்யூனிஸ்ட்டுங்களுக்கு இத விட அவமானம் வேணுமா?

ஜோசப்: அதென்னவோ உண்மைதான். ஆளுக்கு ஒரு சீட்டுதான், வேணும்னா இருங்க இல்லன்னா ஓடுங்கன்னு சொன்னா மாதிரிதான இருக்கு?

ரஹீம்: இது மேடம் நாப்பது சீட்டுக்கும் வேட்பாளர்ங்கள அறிவிச்சப்பவேதான் க்ளியரா தெரிஞ்சிருச்சே. இவங்கதான் வெக்கங்கெட்டுப் போய் காத்துக்கிட்டே இருந்தாங்க. அதுக்கு மேடம் என்ன பண்ணுவாங்க? நாசூக்கா சொல்றப்பவே வெளியேறியிருக்கணும். 

கணேஷ்: சரிங்க. ஆனா நீங்க எங்கக்கிட்ட வந்தா நாங்க சேத்துக்கறோம்னு கலைஞர் சொல்றது கலைஞ்சிருக்கற குட்டையில மீன் புடிக்க நினைக்கிறாமாதிரிதான அதுக்கு என்ன சொல்றீங்க?

ஜோசப்: அதுவும் அரசியல்தான். ஆனா ஒன்னு, குட்டைய கலக்கிவிட்டது அவர் இல்ல. 

ரஹீம்: எனக்கென்னவோ கம்யூனிஸ்ட்டுங்க இந்த தடவ தனியாத்தான் நிப்பாங்கன்னு தோனுது. 

ஜோசப்: என்னவோ போங்க. ஒவ்வொரு சீட்டுலயும் மும்முனை நால்முனை போட்டின்னு வந்தா அது அதிமுகவுக்குத்தான் லாபம். மேடம் சொல்லிக்கிட்டிருந்தா மாதிரி நாப்பதும் அவங்களுக்கே போனாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. அதனாலதானோ என்னவோ மமதா மேடம் பிரதமர் பதவிக்கு ஜெயா மேடம் வர்றத நா ஆதரிக்கிறேன்னு திடீர்னு ஒரு குண்ட தூக்கி போட்டுட்டாங்க.

ரஹீம்: அப்படியா? எப்போ?

ஜோசப்: நேத்து ஒரு டிவி இன்டர்வ்யூவுல மமதா ரொம்ப க்ளியராவே சொல்லிட்டாங்க.

கணேஷ்: அட நீங்க வேறங்க. அதிமுக கம்யூனிஸ்ட்ட நோஸ் கட் பண்ணி அனுப்பிட்டாங்கன்னு அவங்க கேள்விப்பட்டிருப்பாங்க. அதான் எதிரிக்கி எதிரி நண்பன்ங்கறா மாதிரி ஜெயா மேடத்த ஆதரிக்கிறா மாதிரி...

ஜோசப்: அப்படியும் இருக்கலாம். ஆனா கொஞ்ச நாள் முன்னால வரைக்கும் என் தலைமையிலான கூட்டணிதான் அடுத்த மினிஸ்ட்ரி ஃபார்ம் பண்ணும்னு சொல்லிக்கிட்டிருந்தவங்க திடீர்னு ஜெயா மேடம் தலைமைக்கு ஆதரவுன்னு சொல்றதுக்குப் பின்னால ஏதோ இருக்குன்னுதான் தோனுது. 

கணேஷ்: (எரிச்சலுடன்) அந்தம்மா ஒரு நாளைக்கி ஒன்னு பேசுவாங்க ஜோசப். அதையெல்லாம் பெருசா எடுத்துக்கறதுல அர்த்தமே இல்ல. அப்படியொரு சிச்சுவேஷன் வரவே வராது. நீங்க வேணா பாருங்க.

ரஹீம்: அப்புறம் இன்னொசு விஷயம் கேள்விப்பட்டேனே. இன்னைக்கி தந்தி டிவியில கூட சொன்னாங்க.

ஜோசப்: தந்தி டிவியிலயா? நியூஸ்லயா? நான் பாக்கலையே!

ரஹீம்: நியூஸ்ல இல்ல. காலையில மெய்பொருள் காண்பதறிவுன்னு ஒரு ப்ரோக்ராம் வருமே. அதாங்க நியுஸ் பேப்பர்ங்கள்ல அன்னைக்கி காலையில வந்திருக்கற எல்லா நியூஸ் ஐட்டம பத்தியும் ரெண்டு பேர் அலசறா மாதிரி....

ஜோசப்: ஓ அதுவா? நா அந்த ப்ரோக்ராம பாக்கறதில்லை. அதுல சும்மா வம்படிக்கறதுதான் நடக்குமே தவிர உருப்படியா எதுவும் பேச மாட்டாங்களே?

கணேஷ்: (சிரிக்கிறார்) அந்த மாதிரி வம்பு பேச்சுத்தான் பாய்க்கு ரொம்ப புடிக்கும். என்ன பாய்?

ரஹீம்: யோவ், என்ன நக்கலா?

ஜோசப்: அவர விடுங்க. அதுல என்ன சொன்னாங்க, சுருக்கமா சொல்லுங்க.

ரஹீம்: போன வாரம் நம்ம சிதம்பரம் ஸ்டாலின கூப்ட்டு நாம ரெண்டு பேரும் மறுபடியும் சேர்ந்து போட்டி போட்டா நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதுங்கறா மாதிரி சொன்னாராம். 

ஜோசப்: உண்மையாவா?

ரஹீம்: அப்படித்தான் சொன்னாங்க. அதுக்கு ஸ்டாலின் இல்லைங்க அதெல்லாம் சரி வராது. இப்ப இருக்கற சூழ்நிலையில நாம கூட்டு சேர்ந்தா நல்லாருக்காதுன்னுதான் தலைவர் ஏற்கனவே சொல்லிட்டாரே. பொதுக்குழுகூட்டத்துலயும் அந்த மாதிரிதான் எல்லா தொண்டர்களும் சொன்னாங்க. அதனால தேர்தல் முடியட்டும் அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லி கட் பண்ணிட்டாராம்.

ஜோசப்: ஸ்டாலின் சொல்றதுல தப்பே இல்லைங்க. இப்ப இருக்கற சிச்சுவேஷன்ல இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா அதப்பாத்து சந்தோஷப்படப் போறது மேடம்தான். அது ஸ்டாலினுக்கு நல்லாவே தெரியும். 

கணேஷ்: ஆனா கலைஞருக்கு இப்பவும் அந்த ஐடியா இல்லாம இல்லேன்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?

ஜோசப்: இருக்கலாம். ஆனா இப்ப ஸ்டாலின் சொல்றத எதிர்த்து பேசற தைரியம் அங்க யாருக்குமே இல்ல போலருக்கு. அதனால இப்படியொரு கூட்டணி அமையறதுக்கு சான்ஸே இல்லை.

ரஹீம்: அப்படியும் சொல்ல முடியாதுங்க. திமுக வேட்பாளர் லிஸ்ட் வர்ற வரைக்கும் என்ன வேணும்னா நடக்கலாம். ஏன்னா ஒருவேளை காங்கிரஸ் யாரும் எதிர்பார்க்காம ஜெயிச்சி வந்துட்டா பென்டிங்ல இருக்கற 2G கேஸ்ல மாட்டிக்கிட்டிருக்கற கனிமொழி பாடெல்லாம் திண்டாட்டமாயிருமே?

கணேஷ்: (சிரிக்கிறார்) வந்தாத்தான? அதுக்கு சான்ஸே இல்லை. இது உங்களுக்கு தெரியுதோ இல்லையோ ஸ்டாலினுக்கு நல்லாவே தெரியும். அதான் சிதம்பரத்துக்கிட்டவே அப்படி பேசியிருக்கார். 

ஜோசப்: நீங்க சொல்றதும் ஒருவகையில சரிதான். மீதிய நாளைக்கி பேசிக்கலாமா?

ரஹீம்: இருங்க ஜோசப். ஒன்னேயொன்னு. 

ஜோசப்: சொல்லுங்க.

ரஹீம்: நம்ம கெஜ்ரிவால் குஜராத்ல போயி ஒரு பெரிய கலாட்டாவே பண்ணிருக்காரே?

ஜோசப்: ஐயோ, அதப் பத்தி பேசினா இன்னைக்கி முழுசும் போயிருமே.... எனக்கு அர்ஜன்டா போகணுங்க... நாளைக்கி பேசிக்கலாம். 

ஜோசப் எழுந்து நிற்க வேறு வழியில்லாமல் ரஹீம் பாயும் கணேஷும் எழுந்து அவரை வழியனுப்புகின்றனர்.

******** 

12 கருத்துகள்:

  1. உங்கள் பாணியே தொடரட்டும் ஐயா... மனதில் உடனே எழும் சில கேள்விகளும் (சந்தேகம் + சுவாரஸ்யம்) வருவதால் இது போலவே (வம்பு, நக்கல்) தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  2. //ஆளுக்கு ஒரு சீட்டுதான், வேணும்னா இருங்க இல்லன்னா ஓடுங்கன்னு சொன்னா மாதிரி...//

    இந்தக் கம்யூ.க்களுக்கு எத்தனை வருஷம் ஆனாலும் புத்தியே வராதான்னு தோணுது. இன்னும் ரெண்டு உக்கி போட்டாலும் 2 சீட் கிடைக்கும். ஆனா அதற்குப் பதில் சொந்தக் கால்ல நிக்கிற தைரியம் எப்போதைக்கு அவங்களுக்கு வருமோ தெரியலையே!

    நல்ல கட்சிகளை ரொம்பவே அவங்களே கேவலப்படுத்துறாங்க....

    பதிலளிநீக்கு
  3. நாட்டு நடப்பை கலக்கலா சொல்றீங்க ,இதே பாணி தொடரட்டும் !
    த ம +1

    பதிலளிநீக்கு
  4. அருமையான அலசல்! சிறப்பாக இருக்கிறது! தொடருங்கள் ஐயா! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. இப்போது நடப்பதைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், ‘யாருக்கும் வெட்கமில்லை’ என்றுதான் சொல்லவேண்டும். Politics Makes Strange Bedfellows என்று சும்மாவா சொன்னார்கள்.
    பதிவை இரசித்தேன்.தேர்தல் நெருங்க நெருங்க சுவை கூடும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. என்னதான் சொன்னாலும் கேப்டனின் அரசியல், லாபகரமாதான் போயிகிட்டு இருக்கு !

    பதிலளிநீக்கு
  7. //கட்டுரைகளை விடவும் சுவாரஸ்யமாக தெரிந்தது அவற்றிற்கு வரும் வாசகர்களின் எதிரும் புதிருமான கருத்துக்களே என்றால் மிகையாகாது.//

    சில சமயங்களில் நான் கட்டுரையைப் படிக்காமல் வாசகர்களின் கருத்துக்களையே விரும்பிப்படிப்பேன். பத்திரிக்கையாளர்களுக்கு, கட்டுரை எழுதும்பொழுது சமரசத்துடன் எழுதவேண்டிய கட்டாயங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. வாசகர்கள் கருத்துதான் மக்களின் உண்மையான மனநிலையைக் காட்டுகிறது. கட்டுரையாளர் உண்மைக்கு புறம்பாக எழுதினாலும், இன்றைக்கு வாசகர்கள், உண்மையை உடனடியாக எடுத்துக் கூறவும் சாதகமான சூழல் உள்ளது.
    தொடர்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு

  8. Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    உங்கள் பாணியே தொடரட்டும் ஐயா... மனதில் உடனே எழும் சில கேள்விகளும் (சந்தேகம் + சுவாரஸ்யம்) வருவதால் இது போலவே (வம்பு, நக்கல்) தொடருங்கள்...//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க டி.டி.

    1:05 PM
    Delete
    Blogger தருமி said...
    //ஆளுக்கு ஒரு சீட்டுதான், வேணும்னா இருங்க இல்லன்னா ஓடுங்கன்னு சொன்னா மாதிரி...//

    இந்தக் கம்யூ.க்களுக்கு எத்தனை வருஷம் ஆனாலும் புத்தியே வராதான்னு தோணுது. இன்னும் ரெண்டு உக்கி போட்டாலும் 2 சீட் கிடைக்கும். ஆனா அதற்குப் பதில் சொந்தக் கால்ல நிக்கிற தைரியம் எப்போதைக்கு அவங்களுக்கு வருமோ தெரியலையே!

    நல்ல கட்சிகளை ரொம்பவே அவங்களே கேவலப்படுத்துறாங்க....//

    ஆமாம். அவர்களை அவர்களே கேவலப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதே சரி.

    3:47 PM
    Delete
    Blogger Bagawanjee KA said...
    நாட்டு நடப்பை கலக்கலா சொல்றீங்க ,இதே பாணி தொடரட்டும் !
    த ம +1//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    6:48 PM
    Delete
    Blogger ‘தளிர்’ சுரேஷ் said...
    அருமையான அலசல்! சிறப்பாக இருக்கிறது! தொடருங்கள் ஐயா! நன்றி!//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    7:30 PM
    Delete
    Blogger வே.நடனசபாபதி said...
    இப்போது நடப்பதைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், ‘யாருக்கும் வெட்கமில்லை’ என்றுதான் சொல்லவேண்டும். Politics Makes Strange Bedfellows என்று சும்மாவா சொன்னார்கள். //

    மிகச் சரியாக சொன்னீர்கள். இதை தவிர்க்க வேண்டுமென்றால் யாரும் யாருடனும் கூட்டணியில்லாமல் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விதி வர வேண்டும். இதைப் பற்றிய என்னுடைய கருத்தையும் அடுத்துவரும் பதிவுகளில் சொல்லலாம் என்று எண்ணியுள்ளேன்.

    பதிவை இரசித்தேன்.தேர்தல் நெருங்க நெருங்க சுவை கூடும் என நினைக்கிறேன். //

    தேர்தல் நெருங்க, நெருங்க இத்தகைய கேலிக் கூத்துக்கள் இன்னும் அதிகரிக்கத்தானே செய்யும். நிச்சயம் சுவையும் கூடும் என்று நினைக்கிறேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    8:53 PM
    Delete
    Blogger MANO நாஞ்சில் மனோ said...
    என்னதான் சொன்னாலும் கேப்டனின் அரசியல், லாபகரமாதான் போயிகிட்டு இருக்கு !//

    கரெக்ட். இப்பல்லாம் அரசியல்ல லாபம் பண்றதுக்குன்னே நிறைய பேர் வராங்க. கேப்டன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    9:45 PM
    Delete
    Blogger Packirisamy N said...
    //கட்டுரைகளை விடவும் சுவாரஸ்யமாக தெரிந்தது அவற்றிற்கு வரும் வாசகர்களின் எதிரும் புதிருமான கருத்துக்களே என்றால் மிகையாகாது.//

    சில சமயங்களில் நான் கட்டுரையைப் படிக்காமல் வாசகர்களின் கருத்துக்களையே விரும்பிப்படிப்பேன். பத்திரிக்கையாளர்களுக்கு, கட்டுரை எழுதும்பொழுது சமரசத்துடன் எழுதவேண்டிய கட்டாயங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. வாசகர்கள் கருத்துதான் மக்களின் உண்மையான மனநிலையைக் காட்டுகிறது. கட்டுரையாளர் உண்மைக்கு புறம்பாக எழுதினாலும், இன்றைக்கு வாசகர்கள், உண்மையை உடனடியாக எடுத்துக் கூறவும் சாதகமான சூழல் உள்ளது.//

    சரியாக சொன்னீர்கள். இன்றைய ஊடக வளர்ச்சி இதை எல்லாம் சாத்தியமாக்குகிறது. ஆனால் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மிகக் குறைவாகவே வருகின்றன என்பதும் உண்மை. //

    தொடர்கிறேன். நன்றி.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு

  9. Blogger திண்டுக்கல் தனபாலன் said...

  10. AM Delete
    Blogger siva gnanamji(#18100882083107547329) said...
    kindly let me know the URL of your THINNAI//

    அப்படீன்னு தனியா எதுவும் இல்லீங்களே ஜி!

    என்னுலகம் பதிவுலதான் எழுதறேன். முன்னால 'திண்ணைப் பேச்சு'ன்னு தலைப்பு வைப்பேன். இப்போ ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு தலைப்பு குடுக்கறேன், அவ்வளவுதான் வித்தியாசம் :))

    பதிலளிநீக்கு
  11. நல்ல அலசல்....

    கவுண்டமணி சொன்னது போல “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்று சொல்ல வைக்கிறார்கள் இன்றைய அரசியல்வாதிகளும்....

    பதிலளிநீக்கு