11 March 2014

கம்யூனிஸ்ட்டுகளின் கஷ்டகாலம்!

ஜோசப் வந்தும் வராததுமாக ரஹீம் பாய்: என்ன ஜோசப் நேத்து அவ்வளவு சீக்கிரமா இறங்கிப் போனீங்களே, போன வேலை முடிஞ்சிதா?

ஜோசப்: (சிரிக்கிறார்) அதெல்லாம் அர்ஜன்டா ஒன்னும் இல்லீங்க பாய். நாம தினமும் டிஸ்கஸ் பண்றத அப்படியே வாரம் ஒரு தரம் என்னோட ப்ளாக்ல எழுதுறது வழக்கம். நிறைய விஷயங்கள டிஸ்கஸ் பண்ணா பதிவு ரொம்ப நீளமா போயிருது. படிக்கறவங்களுக்கு கஷ்டமா இருக்காம். அதான் அன்னைக்கி டிஸ்கஸ் பண்ண வரைக்கும் போதும்னு எழுந்து போய்ட்டேன்.

கணேஷ்: (கோபத்துடன்) ஏங்க, அதெப்படிங்க எங்க பர்மிஷன் இல்லாம நாங்க சொல்றதையெல்லாம் அப்படியே நெட்ல போடுவீங்க? அப்புறம் எங்கள பத்தி ஜனங்க என்ன நினைப்பாங்க?

ரஹீம்: (கேலியுடன்) யோவ் நீ என்ன எலக்‌ஷன்லயா நிக்க போற? நம்மள பத்தி யார் என்ன நினைச்ச நமக்கென்ன?

ஜோசப்: (சிரிக்கிறார்) அதான?

ரஹீம்: ஒருவேளை இவர் பிஜேபி ஆளுடான்னு நினைச்சி யாராச்சும் போட்டு தள்ளிருவாங்களோன்னு பயப்படறீரா ஓய்?

கணேஷ்: (கோபத்துடன்) பாய், ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்போ?

ஜோசப்: சரி, சரி மறுபடியும் சண்டை வேணாம். பாய் அன்னைக்கி கடைசியா நீங்க என்ன கேட்டீங்க?

ரஹீம்: அதாங்க கெஜ்ரிவால் குஜராத்ல போயி ஒரு கலாட்டாவே பண்ணிட்டு வந்தாருன்னு போட்டுருந்தானே அதப்பத்தித்தான்.

கணேஷ்: அதப் பத்தி பேசறதுக்கு முன்னால நேத்து திமுக வேட்பாளார் பட்டியல்ல மறுபடியும் 2ஜி ராஜாவுக்கு இடம் குடுத்துருக்காங்களே அதப்பத்தி பேசுவோம்.

ஜோசப்: அதப் பத்தியும் பேசலாம். முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க. எதுக்கு மோடி கெஜ்ரிவால அரெஸ்ட் பண்ண வச்சார்?

கணேஷ்: ஏங்க, இதுக்கு எதுக்குங்க மோடி? ரோட்ல நின்னுக்கிட்டு போராட்டம்கற பேர்ல அடாவடி பண்ணா போலீஸ் அரெஸ்ட் பண்றாங்க.

ரஹீம்: இல்லையே. என்னெ அரெஸ்ட் பண்ணச் சொல்லி டாப்லருந்து ஆர்டர் வந்துதுன்னு கெஜ்ரிவால் பப்ளிக்கா சொன்னாரே?

கணேஷ்: அவர் சொன்னா அது உண்மையா ஆயிருமா? 

ஜோசப்: (கேலியுடன்) என்ன இருந்தாலும் அவர் முன்னாள் முதலமைச்சராச்சிங்களே?

கணேஷ்: (எரிச்சலுடன்) கடுப்படிக்காதீங்க ஜோசப். நாப்பது நாள் முதலமைச்சரா இருந்தா முன்னாள் முதலமைச்சராயிருவாரா? மோடி நாலு டேர்ம் முதலமைச்சரா சக்சஸ்ஃபுல்லா ஆட்சி பண்ணவர். இவர் யாருங்க அவர் ஒன்னுமே செய்யலேன்னு சர்ட்டிஃப்க்கேட் குடுக்கறதுக்கு? அதுவும் அவர் இருபது வருசம் செஞ்சத இவர் நாலு நாள் டூர் பண்ணி கண்டுபிடிச்சிருவாராம். போறப்பவே இவர் இப்படித்தான் சொல்லப் போறார்னு மீடியாவுக்கு மட்டுமில்லீங்க நம்மள மாதிரி சாதாரணவங்களுக்கும் தெரிஞ்சதுதானே? 

ஜோசப்: நீங்க சொல்றதும் ஒரு வகையில சரிதான். எனக்கும் அவர் அங்க போயி திடுதிடுப்புன்னு மோடிய மீட் பண்ணணும்னு சொன்னது சரியான கோமாளித்தனம்னுதான் தோனுது. பர்மிஷன் கிடைக்காதுன்னு தெரிஞ்சிதான் அந்த டிராமாவ போட்டார்னு நினைக்கேன். அவருக்கு வேண்டியதெல்லாம் தினமும் ஏதாவது ஒருவகையில மீடியா பப்ளிசிட்டி. 

கணேஷ்: அதுக்குன்னு இந்த மாதிரியெல்லாமா செய்வாங்க? ஒரு படிச்ச ஆள், அரசாங்கத்துல கொஞ்ச நாள் அதிகாரியா இருந்தவரு செய்யிற காரியமாங்க இது? கேவலமா இருக்கு.

ரஹீம்: சரிங்க. அவர் செஞ்சது சரின்னு நா சொல்ல வரலை. ஆனா மோடி நினைச்சிருந்தா கெஜ்ரிவால மீட் பண்ணி அவர் என்னதான் கேக்கறார்னு பாத்துருக்கலாமே?

கணேஷ்: அட நீங்க வேற பாய்! ரெண்டு பேருக்கும் இடையில தேவையில்லாத ஆர்க்யுமென்ட்தான் நடந்துருக்கும். இந்த மாதிரி நேருக்கு நேர் வா யார் பெரிய ஆள்னு பாத்துறலாம்கறதெல்லாம் சுத்த முட்டாத்தனம். இவருக்கு வேணும்னா அதெல்லாம் சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனா மோடி ரொம்ப சீரியசான ஆளு. இந்த மாதிரி சீப் பப்ளிசிட்டியெல்லாம் அவருக்கு தேவையே இல்ல.

ஜோசப்: (கேலியுடன்) அப்போ இந்த ச்சாய் பே சர்ச்சான்னு ஊர்ல இருக்கற டீக்கடையிலல்லெம் டிவிய வச்சிக்கிட்டு பேசறாரே அது ரொம்ப சீரியசான விஷயம்னு நினைக்கிறீங்களா கணேஷ்? 

கணேஷ்: அதுவும் ஒரு கேம்பெய்ன் ஐடியாதாங்க. ஃபேஸ்புக், ட்விட்டர் வழியா பண்றா மாதிரிதான் இதுவும்.

ஜோசப்: சரிங்க. இன்னொரு விஷயம் முந்தியெல்லாம் பிஜேபி எலெக்‌ஷன் கூட்டம்னா அத்வானி, சுஷ்மா, யஷ்வந்த், ஜெட்லி மாதிரி ஆளுங்கல்லாம் பேசுவாங்க. ஆனா இப்ப என்னடான்னா மோடிய தவிர யாருமே பேசறா மாதிரி தெரியலையே? 

ரஹீம்; கரெக்ட்டுங்க. இதப் பத்தி அத்வானியே கூட சொல்லி குறைபட்டுக்கிட்டாராமே?

கணேஷ்: அது என்னவோ சரிதாங்க. எதுக்கு இந்த மனுஷன் எல்லாத்தையும் தலைமேல போட்டுக்கிறாரோ தெரியல. கடைசியில இவர் நினைக்கிறா மாதிரி சீட்டு எண்ணிக்கை வரலைன்னா இவர ஓரங் கட்டுனாலும் கட்டிறுவாங்க போலருக்கு.

ஜோசப்: நா சொல்லலாம்னு நினைச்சேன், நீங்களே சொல்லிட்டீங்க. அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. ஏன்னா  இவர் தேவையில்லாம கட்சியிலருக்கற எல்லா சீனியர்ஸையும் பகைச்சிக்கிட்டார் போலருக்கு. 

ரஹீம்: சரியா சொன்னீங்க ஜோசப். அதனாலதான இவர் போட்டி போடறதுக்கு தன்னோட தொகுதிய கூட மனோகர் ஜோஷி விட்டுக்குடுக்க முடியாதுங்கறார்? உண்மையிலயே இவர்தான் அடுத்த பிரதமர்னா இவங்கல்லாம் இப்படி பிஹேவ் பண்ணுவாங்களா?

ஜோசப்; ஆமாங்க தெரியாமத்தான் கேக்கறேன். இவர்தான் குஜராத்ல கிங்குன்னீங்க? அதுக்கப்புறம் எதுக்கு இவர் அங்க போட்டி போடாம உ.பிக்கு போறார்? 

ரஹீம்: அதான?

கணேஷ் பதிலளிக்காமல் அமர்ந்திருக்கிறார்.

ஜோசப்: சரி விடுங்க பாய். வேற ஏதாச்சும் பேசுவோம்.

ரஹீம்: அதான் கணேஷ் கொஞ்ச முன்னால கேட்டாரே ராஜாவ பத்தி!

கணேஷ்: கரெக்ட். அந்த ஊழலுக்கே இவர்தான் முக்கிய காரணம்னு பார்லி கமிட்டி ரிப்போர்ட்டே சொல்லுது. ஏறக்குறைய ஆறு மாசத்துக்கு மேல ஜெயில்ல வேற இருந்துருக்கார். இவர எப்படிங்க மறுபடியும் நாமிநேட் பண்ணலாம்?

ஜோசப்: (சிரிக்கிறார்) இதுக்கு மட்டும் எவ்வளவு லவுடா குரல் வருது  பாருங்க பாய்.

கணேஷ்: பேச்ச மாத்தாதீங்க. பதில சொல்லுங்க.

ஜோசப்: சரியில்லைதாங்க. ஆனா இதே கேஸ்ல ஜெயில்ல இருந்துட்டு வந்த கனிமொழிய ராஜ்யசபா மெம்பராக்கின மு.க.வுக்கு இத விட்டா வேற வழி இல்லீங்களே. அதான் அவர் மேல எந்த குற்றச்சாட்டும் இன்னும் நிரூபிக்கப்படலேன்னு சப்பைக் கட்டு கட்றார். 

ரஹீம்: ஜோசப். இவர் கட்சியில மட்டும் என்னங்க வாழுது? எட்டியூரப்பாவும் ஜெயில்ல இருந்துட்டு வந்தவர்தான? அப்புறம் அந்த ரெட்டி பிரதர்ஸ். அவங்களையும் மறுபடியும் கட்சியில சேத்துக்க மோடி ஒன்னும் அப்ஜக்‌ஷன் பண்லையாமே?

ஜோசப்: (சிரிக்கிறார்) கரெக்டா பாய்ன்ட புடிச்சிட்டீங்க பாய்.  காங்கிரஸ்லயும் கல்மாடி, பன்ஸால் மாதிரி ஆளுங்களுக்கு மறுபடியும் சீட் குடுக்கப் போறாங்களாமே? ஆனா ஒன்னுங்க, இப்படியெல்லாம் பாத்தா தேர்தல்ல நிக்கிறதுக்கு யாருமே கிடைக்க மாட்டாங்க போலருக்கே. ஊழல் வழக்குல சிக்காம இருக்கறவங்கல்லாம் நேர்மையானவங்கன்னு சொல்லிற முடியாது பாய். அவங்க இதுவரைக்கும் மாட்டலைன்னு கூட சொல்லலாம். 

ரஹீம்: நீங்க சொல்றதும் சரிதான். இதுவரைக்கும் ஊழல் பண்ணாதவங்கன்னு சொல்லித்தான் டெல்லியில புதுசா ஒரு கட்சிக்கு ஆளுங்க ஓட்டுப் போட்டாங்க. ஆனா என்ன ஆச்சி? எங்களுக்கு ஊழலுக்கு எதிரா கோஷம் போடத்தான் தெரியும் ஆட்சி பண்ணத் தெரியாதுன்னுட்டு அம்பது நாளைக்குள்ள வாபஸாய்ட்டாங்க. பேசறப்போ நல்லா பேசு எழுதறப்போ கோட்ட விட்ருன்னு நாகேஷ் சொல்வாரே அது மாதிரி மேடையில பேசறப்போ ஆவேசமா பேசினாங்க. ஆனா ஆட்சி பண்ண தெரியலையே?

ஜோசப்: (சிரிக்கிறார்) பாய் இன்னைக்கி ரொம்ப ஃபார்ம்ல இருக்கீங்க போலருக்கு ஒரே தத்துவமா அடிச்சி விடறீங்க?

மூவரும் சிரிக்கின்றனர். 

கணேஷ்: அப்புறம் இந்த கம்யூனிஸ்ட்டுங்க எதுக்கு தனியா நிக்கறதுன்னு டிசைட் பண்ணிட்டங்க? 

ஜோசப்: வேற என்ன செஞ்சிருக்க முடியும்னு நினைக்கிறீங்க? திமுக கூட சேர முடியாது. ஏன்னா 2ஜி. காங்கிரஸ் கூடயும் சேர முடியாது. ஏன்னா 2ஜி மாதிரி இன்னும் என்னென்னமோ இருக்கு. எனக்கென்னவோ இந்த டிசிஷந்தான் சரியான டிசிஷன்னு தோனுது. அவங்களுக்கு எங்க ஸ்ட்ரெங்த் இருக்கோ அங்க மட்டும் நின்னுக்க வேண்டியதுதான். ஜெயிச்சா லாபம். இல்லன்னா பெருசா நஷ்டம் எதுவும் இல்லை. ஜெயிக்கறதுக்காக எங்க வேணும்னாலும் போய் சேந்துக்குவாங்கன்னு நாளைக்கி யாரும் சொல்ல முடியாதுல்ல?

கணேஷ்: லாஜிக் நல்லாத்தான் இருக்கு. ஆனா மத்த எடங்கள்ல யார சப்போர் பண்ணுவாங்கன்னு நீங்க நினைக்கறீங்க?

ரஹீம்: அவங்க சப்போர்ட்டல்லாம் ஒரு சப்போர்ட்டா? நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்கள தவிர வேற எங்கயும் இவங்களுக்குன்னு யாரும் கிடையாது. அதிமுகக்கிட்ட கேட்ட மூனு தொகுதிங்கள்ல நின்னுக்க வேண்டியதுதான். அதுலயும் ஒன்னுலயும் இவங்க ஜெயிக்கப் போறதில்லேங்கறது வேற விஷயம். என்ன ஜோசப்?

ஜோசப்: கரெக்ட் பாய். இன்னைக்கி நீங்க சொல்றதெல்லாமே கச்சிதமா இருக்கு.

ரஹீம்: (சிரிக்கிறார்) எல்லாம் குருட்டாம் போக்குல அடிச்சி விடறதுதான். 

கணேஷும் ஜோசப்பும் அவருடைய சிரிப்பில் கலந்துக்கொள்கின்றனர்.

ஜோசப்: சரிங்க இந்த மூட்லயே இன்னைக்கி முடிச்சிக்கலாம். என்ன கணேஷ்?

கணேஷ்: (எரிச்சலுடன்) ஏங்க நா என்னவோ டெய்லி சண்டை போடறா மாதிரி சொல்றீங்க?

ரஹீம்: யோவ் ஆரம்பிச்சிறாத. நாளைக்கி பாக்கலாம். 

ஜோசப் சிரித்தவாறே எழுந்திருக்க கணேஷும் முனுமுனுத்தவாறே எழுந்து அவருடன் செல்கிறார். 

*********
15 comments:

Bagawanjee KA said...

தா பா வை நினைச்சா அழுகை அழுகையா வருதே ...

Bagawanjee KA said...

ADMK யின் அதிகாரபூர்வமற்ற கொ ப செ ஆக செயல்பட்ட தோழர் தா பா வை நினைத்தால் அழுகை அழுகையா வருது !
த ம 1

வே.நடனசபாபதி said...

எப்போது அதிமுக 40 ம் நமதே என்று சொன்னதோ அப்போதே கம்யூனிஸ்டுகள் சுதாகரித்திருக்க வேண்டும். எப்படியோ கோட்டை விட்டு விட்டார்கள். .

அடுத்த திண்ணைப் பேச்சு மதிமுக, பாமக, தேமுதிக, பாஜக கூட்டணியின் இடியாப்பச்சிக்கல் பற்றி இருக்குமோ?

திண்டுக்கல் தனபாலன் said...

கம்யூனிஸ்ட்டு நிலை ரொம்ப பரிதாபம்...

வேகநரி said...

கம்யூனிஸ்டுகளை கவுக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர் தாபாவே போதும்.

G.M Balasubramaniam said...

ஊழல் சம்பந்தப்பட்ட எவருக்கும் எந்தக்கட்சியானாலுமோட்டுப் ப்பொடக் கூடாதுயாரும் திட்டங்களைப் பற்றியோ அவற்றை நிறைவேற்றும் வகை பற்றியோ மூச் விடுவதில்லை.

siva gnanamji(#18100882083107547329) said...

kindly go through AA.RAASA in
abiappa blogspot.com

siva gnanamji(#18100882083107547329) said...

may i expect your response to this
article?

டிபிஆர்.ஜோசப் said...

Bagawanjee KA said...
தா பா வை நினைச்சா அழுகை அழுகையா வருதே ...
2:04 PM
Bagawanjee KA said...
ADMK யின் அதிகாரபூர்வமற்ற கொ ப செ ஆக செயல்பட்ட தோழர் தா பா வை நினைத்தால் அழுகை அழுகையா வருது //

கம்யூனிஸ்ட்டுகளில் த.பா. ஒரு பெரிய தலைவலி. அவரால்தான் இரு கட்சிகளுமே அதிமுக பக்கம் சாய்ந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போதும் இட ஒதுக்கீட்டில் பிரச்சினையாகி கூட்டணியிலிருந்து விலகுவது உறுதி என்றெல்லாம் சவடால் அடித்துவிட்டு கேப்டன் சொன்னதும் வாலைச் சுருட்டிக்கொண்டு கொடுத்ததை வாங்கிக்கொண்டார். இம்முறை அவருடைய பாச்சா பலிக்கவில்லை போலும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
எப்போது அதிமுக 40 ம் நமதே என்று சொன்னதோ அப்போதே கம்யூனிஸ்டுகள் சுதாகரித்திருக்க வேண்டும். எப்படியோ கோட்டை விட்டு விட்டார்கள். .//

அந்த அளவுக்கு அவர்களுக்கு விவேகம் இல்லை என்பதை விட அதிமுகவிடம் ஒட்டிக்கொண்டிருந்தால்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும் என்ற ஆசைதான் அதிமுகவின் வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகும் பேச்சு வார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கக் காரணம்.

அடுத்த திண்ணைப் பேச்சு மதிமுக, பாமக, தேமுதிக, பாஜக கூட்டணியின் இடியாப்பச்சிக்கல் பற்றி இருக்குமோ? //
நிச்சயமாக. அத்துடன் காங்கிரசின் பரிதாப நிலையைப் பற்றியும் சொல்ல வேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


திண்டுக்கல் தனபாலன் said...
கம்யூனிஸ்ட்டு நிலை ரொம்ப பரிதாபம்...//

இதுவும் ஒருவகையில் நல்லதுக்குத்தான். அவர்களுக்கு தமிழகத்தில் எந்த அளவுக்கு பலம் இருக்கிறது என்பதை அவர்களே தெரிந்துக்கொள்ள வாய்ப்பாயிற்றே. குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகள் இல்லாமல் அதிமுக ஜெயிக்க முடியாது என்று கரத் அறிக்கை விட்டிருக்கும் சூழலில் யாரால் யார் கடந்த தேர்தல்களில் லாபம் அடைந்தனர் என்பது தெரிந்துவிடும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


4:56 PM
வேகநரி said...
கம்யூனிஸ்டுகளை கவுக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர் தாபாவே போதும்.//

சரியா சொன்னீங்க.

டிபிஆர்.ஜோசப் said...


6:14 PM
G.M Balasubramaniam said...
யாரும் திட்டங்களைப் பற்றியோ அவற்றை நிறைவேற்றும் வகை பற்றியோ மூச் விடுவதில்லை.//

ரெண்டு திராவிடக் கட்சிகளுமே பல திட்டங்களை - அவைகளை நிறைவேற்ற முடியுமா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் - அறிவித்துள்ளதை மறுக்க முடியாது. ஆனால் பத்தோடு பதினொன்றாக பார்லியில் அமரப்போகும் இத்தகைய துக்கடா கட்சிகளால் அப்படியென்ன பெரிதாக சாதித்துவிட முடியும் என்பதை மக்கள் உணர்ந்தால் இவர்களை ஆதரிக்க மாட்டார்கள்

டிபிஆர்.ஜோசப் said...


8:48 PM
siva gnanamji(#18100882083107547329) said...
kindly go through AA.RAASA in
abiappa blogspot.com//

பதிவின் லிங்க் இல்லாமல் எப்படிங்க? நீங்க குடுத்த ப்ளாக் அட்றஸ்ல அப்படி எதுவும் பதிவு இல்லையே?

டிபிஆர்.ஜோசப் said...


10:11 PM
siva gnanamji(#18100882083107547329) said...
may i expect your response to this
article?//

எந்த ஆர்ட்டிக்கிள், புரியலையே?