20 பிப்ரவரி 2014

தமிழக முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!!

ரஹீம் பாயும் கணேஷும் திண்ணையில் அமர்ந்து அன்றைய பத்திரிகையை எதிரும் புதிருமாக அமர்ந்துக்கொண்டு வாசித்துக்கொண்டிருக்க ஜோசப் வந்து அமர்கிறார். 

ரஹீம்: (எரிச்சலுடன்) என்னய்யா படிச்சி முடிச்சாச்சா?

கணேஷ்: (நிமிர்ந்து பார்க்கிறார்) இல்லை. கொஞ்சம் பொறுங்க.

ரஹீம்: (எரிச்சலுடன்) ஏங்க  நீங்க என்ன எல்கேஜி குழந்தையா எழுத்துக்கூட்டி படிக்க? இதுக்குத்தான் ஒரு ஆளு படிச்சிக்கிட்டிருக்கறப்ப எதுத்தாப்பல ஒக்காந்து படிக்கக் கூடாதுங்கறது.

ஜோசப் (சிரிக்கிறார்) அப்படி என்னங்க இருக்கு ரெண்டு பேரும் ஒரே நேரத்துல படிக்கறீங்க?

அப்போதுதான் ஜோசப் வாசலில் நிற்பதை ரஹீம் பாய் பார்க்கிறார். : வாங்க ஜோசப். ஒரு பேஜ படிச்சி முடிக்கறதுக்கு கால் மணி நேரம் போறாது? சும்மா தலைப்ப பாத்துட்டு போகாம விழுந்து விழுந்து படிக்கறத பாருங்க. அதுவும் ஓசியில.

கணேஷ்: (பேப்பரை தள்ளிவிட்டு நிமிர்கிறார்) இந்தாய்யா பாய், ஏதோ நியூஸ் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கேன்னுட்டு பாத்தேன். ஒரேயடியா பிகு பண்ணிக்காத, நாங்களும் வீட்ல பேப்பர வாங்கத்தான் செய்யிறோம். 

ரஹீம்: அப்போ அங்கயே ஒக்காந்து படிச்சிட்டு வர வேண்டியதுதானய்யா?

கணேஷ்: நாங்க இங்க்லீஷ் பேப்பர்ல வாங்கறோம்? அதுல இந்த மாதிரி நீயூஸ்லாம் விலாவாரியா போடறதில்லையேய்யா!

ரஹீம்: அது சரி. அப்போ நாளையிலருந்து தமிழ் பேப்பர போடச் சொல்லு. 

ஜோசப்: சரி சரி சண்டைய ஆரம்பிச்சிறாதீங்க. அப்படி என்ன போட்ருக்கான் சொல்லுங்களேன் கேப்போம். 

ரஹீம்: அதாங்க நேத்து பார்லிமென்ட் ஒளிபரப்ப சொல்லாம கொள்ளாம நிறுத்திட்டாங்களே அதப் பத்தித்தான்.

ஜோசப்: சரிதான? அதுல ஒன்னும் தப்பு இருக்கறாப்பல எனக்கு தெரியல. ஆந்திரா எம்.பிங்க. சீமாந்திரா பேனர புடிச்சிக்கிட்டு நிக்கறதே அவங்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கணுங்கறதுக்குத்தான? அதுமட்டுமில்லாம நாம போன வாரம் இந்த மாதிரி சில்லியா பிகேவ் பண்ற எம்பிங்கள இங்க நம்ம சட்டசபையில செய்யிறா மாதிரி கூண்டோட வெளியேத்தணும் சொல்லிக்கிட்டிருந்தோம்ல, அது ஸ்பீக்கர் அம்மா காதுவரைக்கும் போயிருச்சோ என்னவோ? அந்த மாதிரி வெளியேத்துற சீனையெல்லாம் எதுக்கு டெலிக்காஸ்ட் பண்றதுன்னு நினைச்சிருப்பாங்க. எதுக்குங்க தேவையில்லாம இந்த மாதிரியான கூத்தையெல்லாம் கவர்ன்மென்ட் பணத்துல டெலிகாஸ்ட் பண்றது?

கணேஷ்: (கோபத்துடன்) அதெப்படிங்க? ஆந்திரா எம்பிங்க மட்டுமா இத எதுக்குறாங்க? 

ரஹீம்: அது இருக்கட்டும் நேத்து வரைக்கும் நாங்க இந்த பில்ல பாஸ் பண்ண விடமாட்டோம்னு பிஜேபி சொல்லிக்கிட்டிருந்தாங்களே அது என்னாச்சி? திடீர்னு நாங்க சப்போர்ட் பண்றோம்னு சொல்லிட்டாங்க? எதாச்சும் அன்டர்க்ரவுன்ட் டீலிங்கா?

ஜோசப்: (சிரிக்கிறார்) அன்டர்க்ரவுன்டோ அப்பர் க்ரவுன்டோ பில் பாசாயிருச்சி. ஆனா ஒரு டவுட்டுங்க.

ரஹீம்: என்ன?

ஜோசப்: இந்த விஷயத்துல காங்கிரஸ் அவசரப்படறதே புரியல. அப்படி இருக்கறப்போ பிஜேபி எதுக்காக அவசரப்படறாங்க?

ரஹீம்: அட நீங்க ஒன்னு ஜோசப். இது ஒரு கான்ட்ரவர்சியல் பில்லாச்சே. எப்படியோ நாம ஆட்சிக்கு வர்றதுக்குள்ள இது முடிஞ்சிரட்டுமேன்னு பாத்துருப்பாங்க. அப்படியே இதால ஏதாச்சும் பெருசா பிரச்சினை வந்துதுன்னா நாங்க அப்பவே சொன்னோம் காங்க்ரஸ்தான் கேக்கலேன்னுட்டு பழிய அவங்க மேல தூக்கி போட்ருலாமே?

ஜோசப்: ஆனா காங்கிரசுக்கு இது ஒரு பெரிய நஷ்டமாகும் போலருக்கு. தெலுங்கானாவுலருந்தும் இவங்களுக்கு சீட் எதுவும் கிடைக்காது, சீமாந்தாராவுலருந்தும் ஒன்னும் கிடைக்கப் போறதில்ல. எல்லாமே ரெண்டு சைட்லயும் இருக்கற ரீஜியனல் பார்ட்டீசுக்குத்தான் போகப் போகுது. அந்த சீட்டுங்களால அவங்களுக்கும் பிரயோஜனம் இருக்காது காங்கிரசுக்கும் பிரயோஜனம் இருக்காது. 

கணேஷ்: (சிரிக்கிறார்) இதுதானங்க எங்களுக்கு வேணும்? அதுக்குத்தான் கடைசி நிமிஷத்துல இந்த மசோதாவ சப்போர்ட் பண்றதுன்னு டிசைட் பண்ணோம். இதான் மோடி ஸ்ட்ரோக்குங்கறது!

ரஹீம்: (எரிச்சலுடன்) இந்த மாதிரி கலங்குன குட்டையில மீன் பிடிக்கிற புத்தி உங்கள விட்டு எங்கங்க போவும்? இதுல மோடி ஸ்ட்ரோக்குன்னு வேற பீத்திக்கிறீங்க? 

கணேஷ்: என்ன வேணா சொல்லிக்குங்க பாய். இந்த தெலுங்கானா காங்கிரஸ் தனக்குத்தானே அடிச்சிக்கிற இன்னொரு ஆணி. அப்போ தமிழ்நாடு மாதிரியே ஆந்திராவையும் காங்கிரஸ் சுத்தமா இழந்தாச்சின்னு சொல்லலாம். இனி எத்தன வருசம் ஆனாலும் அங்க காங்கிரஸ் வர சான்சே இல்ல.

ஜோசப்: அதென்னவோ உண்மைதான். சரிங்க, இந்த வாரம் இன்னொரு ஹாட் நியூஸ் ராஜீவ் காந்தி கொலை கேஸ்ல தூக்குத் தண்டனை விதிச்சிருந்தவங்களுக்கு லைஃப் சென்டன்ஸாக்குனதுதான? இதப்பத்தி நீங்க என்ன சொல்றீங்க?

கணேஷ்: எனக்கென்னவோ அது சரியான டிசிஷன்னுதான் தோனுது. மொதல்ல இவங்கள ராஜீவ் காந்தி கொலையாளிகள்னு கூட சொல்லக்கூடாது. விவரமில்லாம அந்த கொலையாளிங்களுக்கு ஏதோ ஒரு விஷயத்துல ஹெல்ப் பண்ணிக்கிட்டு மாட்டிக்கிட்ட அப்பாவிங்கன்னுதான் சொல்லணும். குறிப்பா இந்த பேரறிவாளன். அவர் சப்ளை பண்ண பேட்டரிய யூஸ் பண்ணித்தான் அந்த குண்ட வெடிக்க வச்சாங்களாம். அத நாந்தான் சப்ளை பண்ணேன்னு அறிவு ஒத்துக்கிட்டாலும் அது எதுக்கு யூஸ் பண்ணப் போறாங்கன்னு எனக்கு தெரியாதுங்கன்னு அவர் சொன்னத சிபிஐ ஒத்துக்கலையாம். இதுல இன்னொரு விஷயமும் இருக்குங்க. இந்த கேஸ்ல அரெஸ்டான எல்லாரையுமே அவங்க போலீஸ் கிட்ட குடுத்த ஒப்புதல் வாக்குமூலத்த வச்சித்தான் கன்விக்ட் பண்ணியிருக்காங்க.

ரஹீம்: அப்படியா? சாதாரணமா ஒரு ஜூடிஷியல் மஜிஸ்டிரேட்டுக்கு முன்னால எழுத்து மூலமா குடுக்கற வாக்குமூலம் மட்டுந்தான செல்லுபடியாகும்? 

ஜோசப்: அது என்னவோ உண்மைதான். ஆனா தடா (TADA) சட்டத்துல கைதான குற்றவாளிங்களுக்கு இந்திய எவிடென்ஸ் ஆக்ட்ல இருக்கற இந்த கண்டிஷன் பொருந்தாதாம். எஸ்.பி. ராங்க்ல இருக்கற ஒரு போலீஸ் அதிகாரி முன்னால குற்றவாளிங்க குடுக்கற வாக்குமூலம் மட்டுமே போறுமாம். அதனாலதான் அவங்க வாக்குமூலத்த வச்சே அவங்க எல்லாரையும் கன்விக்ட் பண்ணிட்டாங்க.

ரஹீம்: சரிங்க. எனக்கு ஒரு டவுட்டு. இந்த கேஸ லோக்கல் போலீஸ் மட்டுமில்லாம டாக்டர். கார்த்திக்கேயன் தலைமையில சிபிஐ ஒரு ஸ்பெஷல் இன்வெஸ்ட்டிகேஷன் டீமையே போட்டு விசாரிச்சி குடுத்த ரிப்போர்ட்ட வச்சித்தான சுப்ரீம் கோர்ட்டும் நம்ம தடா கோர்ட்டோட தீர்ப்ப கன்ஃபர்ம் பண்ணாங்க? இப்ப திடீர்னு இவங்க எல்லாரும் அப்பாவிங்கன்னு சொன்னா அத எப்படி ஏத்துக்கறது? அதுவும் இல்லாம இந்த மூனு பேர்ல பேரறிவாளன் மட்டும்தாங்க தமிழ் ஆளு.  சாந்தனும் முருகனும் LTTEகாரங்களாமே. அவங்க அந்த டைம்ல இங்க என்னாங்க செஞ்சிக்கிட்டு இருந்தாங்க?

ஜோசப்: வாஸ்தவம்தான். ஆனா இன்னைக்கி இருக்கற சூழல்ல இந்த மாதிரியெல்லாம் கேள்வி கேக்க யாருக்குங்க தைரியம் இருக்கு? இப்ப இவங்க உண்மையிலேயே குத்தவாளிங்களா இல்லையாங்கறது ஒரு விஷயமே இல்ல. சுப்ரீம் கோர்ட்டே அவங்க தூக்கு தண்டனையை ரத்து பண்ணிட்டாங்க. ஏற்கனவே இருபது வருசத்துக்கும் மேல ஜெயில்ல இருந்துருக்கறதால இனிமேலும் இவங்கள உள்ள வச்சிக்கிட்டிருக்கணுமாங்கறதுதான் கேள்வியே?

ரஹீம்: உண்மைதான். ஆனா தீர்ப்பு வந்த அடுத்த நாளே நளினி உட்பட இவங்க எல்லாரையும் ரிலீஸ் பண்ணிறலாம்னு மேடம் டிசிஷன் எடுத்தது கொஞ்சம் ஆச்சரியம்தான். 

கணேஷ்: அதுவும் ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுத்தான். 

ஜோசப்: காலத்தின் கட்டாயம்னும் சொல்லலாம். இப்போ வைக்கோ மாதிரி ஆளுங்க நாங்க சொன்னதுக்கப்புறந்தான் இவங்கள ரிலீஸ் பண்ணாங்கன்னு சொல்லிக்க முடியாதுல்ல? அதான் அடுத்த நாளே இவங்கள ரிலீஸ் பண்றதுன்னு டிசைட் பண்ணி சென்டருக்கு அனுப்பிட்டாங்க. இனி சென்டர்தான் பொறுப்பு. 

ரஹீம்: ஆனா அதுக்கும் மேடம் ஒரு செக் வச்சிருக்காங்களே? ஏதாச்சும் சொல்றதா இருந்தா மூனு நாளைக்குள்ள சொல்லிறணும். இல்லன்னா நா ரிலீஸ் பண்ணிருவேன்னுல்ல மிரட்டியிருக்காங்க?

கணேஷ்: அதுக்கும் ஷிண்டே பதில் குடுத்துருக்காரே. எனக்கு இதுவரைக்கும் எந்த லெட்டரும் வரல. அப்படியே இருந்தாலும் சிபிஐ விசாரிச்ச கேஸ்லருந்து விடுவிக்கிற அதிகாரம் ஸ்டேட் கவர்ன்மென்ட்டுக்கு இல்லேன்னும் சொல்லிட்டாரே. பாப்போம் என்ன நடக்குதுன்னு.

ஜோசப்: இதுக்கிடையில அவங்க தூக்குத் தண்டனையை ரத்து பண்ணி போர்ட்ட ஆர்டர மறுபரிசீலனை செய்யணும்னு சென்டரலருந்து பெட்டிஷன் பைல் பண்றாங்களாமே? அதனால அதுக்கு கோர்ட்லருந்து தீர்ப்பு வர வரைக்கும் இவங்கள ரிலீஸ் பண்றதுக்கு சான்ஸ் இல்லேன்னுதான் நினைக்கிறேன்.

ரஹீம்: ஓ! இது வேற இருக்கா? 

ஜோசப்: ஆமா. இன்னும் ரெண்டொரு நாள் வெய்ட் பண்ணித்தான் பாக்கணும். இது எப்படி முடியப் போவுதுன்னு.

கணேஷ்: எது எப்படியோ இந்த விஷய்த்துல மேடத்துக்கு நல்ல மைலேஜ் கிடைச்சிருச்சி. 

ரஹீம்: அப்புறம் இந்த விஷயத்த படிச்சீங்களா?

கணேஷ்: இந்த விஷயம்னா? 

ரஹீம்: அன்னா ஹசாரே மமதா மேடம் மாதிரி சிம்பிளான ஆளுதான் இந்தியாவுக்கு தேவைன்னு சொல்லியிருக்காரே? 

கணேஷ்: (எரிச்சலுடன்) அவருக்கு புத்தி பிசகிருச்சின்னு நினைக்கறேங்க. மமதா மேடம் டிரஸ் வேணும்னா சிம்பிளா பண்ணிக்கிட்டிருக்கலாம். அவங்கள மாதிரி ஈகோ புடிச்சவங்கள நா பாத்ததே இல்ல. என்னமா கோவம் வருது அந்தம்மாவுக்கு? யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் ஒன்னு அடி உதை, இல்லன்னா உள்ள தள்ளிடறது. இவங்களா சிம்பிள் லேடி? அன்னாவுக்கு சம்திங் ராங்.

ஜோசப்: (சிரிக்கிறார்) ஒருவேளை கெஜ்ரிவால இன்ஸல்ட் பண்றதா நினைச்சிக்கிட்டு அன்னா இப்படி செய்றாரோ என்னவோ?

கணேஷ்: அதுக்காக இப்படியா? இப்படியே பேசிக்கிட்டிருந்தார்னா அன்னாவ ஒரு பய மதிக்க மாட்டான். இதுக்கு அவர் பேசாம இருந்துருக்கலாம். 

ரஹீம்: இந்த விசயத்துல மட்டும்தான் நாம மூனு பேரும் ஒத்துப்போறோம் போலருக்கு. (சிரிக்கிறார்)

ஜோசப்: சரிங்க. போன வாரமே இதப் பத்தி டிஸ்கஸ் பண்லாம்னு நினைச்சேன். 

ரஹீம்: எதப்பத்தி?

ஜோசப்: அதாங்க நம்ம ஸ்டேட் கவர்ன்மென்டோட பட்ஜட்ட பத்தி.

கணேஷ்: அதுல என்ன டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கு? எப்பவும் போல சொதப்பல்தான். எலக்‌ஷன் வருசம்கறதால புதுசா வரி எதுவும் போடாம பாவ்லா பண்ணியிருக்காங்க. எலெக்‌ஷன் முடியட்டும் மறுபடியும் பால், பஸ் கட்டணம், எலக்ட்ரிக் சார்ஜஸ் எல்லாத்தையும் ஏத்திருவாங்க பாருங்க. 

ரஹீம்: அப்படின்னு ஒரேயடியா சொல்லிற முடியாது. சில நல்லதுங்களும் இருக்கத்தான் செய்யிது. 

கணேஷ்: (எரிச்சலுடன்) எது, மிக்ஸி, க்ரைன்டர், ஆடு, மாடுன்னு  குடுக்கறதுக்கு போன வருசம் மாதிரியே ஒரு பெரிய தொகைய ஒதுக்குனத சொல்றீராக்கும்? இதெல்லாம் ஒரு திட்டமாய்யா? யார் வீட்டு காச எடுத்து யாருக்கு குடுக்கறது?

ரஹீம்: அப்போ முந்தைய கவர்ன்மென்ட் டிவி, கேஸ்னு குடுத்தது மட்டும் சரியா?

கணேஷ்: அதுவும் தப்புத்தாங்க. ஸ்கூல் பசங்களுக்கு மடிக்கணினி குடுக்கறது கூட தேவையில்லாத விஷயம்தான். பாதிக்கு மேல வித்துட்டாங்க தெரியுமா? ப்ளஸ் டூ படிக்கறவங்களுக்கு சைக்கிள் குடுக்கறத ஏத்துக்கலாம். ஆனா லேப்டாபுங்கறதெல்லாம் ரொம்ப ஓவர். இந்த ரெண்டு திட்டங்களுக்குமே ஏறக்குறைய ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்காங்க போலருக்கு.

ரஹீம்: சரிங்க. ரோடு போடறதுக்குன்னே 2800 கோடிய ஒதுக்கியிருக்காங்களாமே அது நல்லதில்லையா?

கணேஷ்: (எரிச்சலுடன்) பாய், விவரம் புரியாம பேசாதீங்க. எங்க ஏரியாவுல ட்ரெய்னேஜ் போடறேன்னுட்டு ரோடுங்களையெல்லாம் தோண்டி போட்டு ரெண்டு வருசத்துக்கு மேல ஆவுது. சரி ட்ரெய்னேஜாவது வேலை செய்யிதான்னு பாத்தா அதுவும் இல்லை. நிறைய எடத்துல அந்த திட்டமே ஃபெய்லாயிருச்சாம். தெரியாமத்தான் கேக்கறேன். இதே மாதிரிதானங்க போன தடவையும் ஒதுக்குனாங்க? அந்த திட்டத்தோட இன்றைய ஸ்டேட்டஸ் என்னங்க? அதப் பத்தி எதுவுமே சொல்லாம மறுபடியும் மறுபடியும் ரெண்டாயிரம் மூனாயிரம் கோடின்னு ஒதுக்கிட்டே போனா என்னங்க அர்த்தம்? மொதல்ல இவங்க ஆட்சிக்கு வந்ததுலருந்து இந்த விஷயத்துக்கு எத்தன கோடி ஒதுக்குனாங்க அதுல எத்தன கோடி செலவு செஞ்சாங்கன்னு ஒரு ஆக்‌ஷன் டேக்கன் ரிப்போர்ட் தரட்டும். 

ஜோசப்: கணேஷ் சொல்றத நூத்துக்கு நூறு நா சப்போர்ட் பண்றேங்க. ஒன்னும் வேணாம். சென்னையிலருந்து இருபது கி.மீட்டர் தூரத்துல இருக்குற அம்பத்தூர், ஆவடியிலயே இதுவரைக்கும் ட்ரெய்னேஜுக்கு தோண்டுன ரோட்டுல பெரும்பாலான ரோடுங்க அப்படியேதான் கிடக்குது. ஏறக்குறைய பத்துவருசத்துக்கு முன்னால அம்பத்தூர் ஏரியாவுல தொடங்குன ட்ரெய்னேஜே திட்டமே இன்னைக்கி வரைக்கும் இம்ப்ளிமென்ட் பண்ணல. அப்படியிருக்கறப்போ எதுக்கு இதே மாதிரி ஸ்கீம்ஸ மத்த எடங்கள்லயும் ஸ்டார்ட் பண்றாங்க?

ரஹீம்: இது இங்க மட்டுமில்ல ஜோசப், ஏறக்குறைய தமிழ்நாடு முழுசுமே இதே மாதிரிதான் செஞ்சி வச்சிருக்காங்களாம். கவர்ன்மென்ட் பணம் கோடி கணக்குல செலவாயிருக்காம். இதுல பெரும் பகுதி யார் யாருக்கோ போயிருக்காம். 

கணேஷ்: இருக்கும். எங்க ஏரியாவுல ஆளுங்கட்சி ஆள் ஒருத்தர் இருக்கார். அவர் போன ரெண்டு வருசத்துல ரெண்டு பெரியா லாரி, ஒவ்வொரு பையனுக்கு புதுசா கார்னு ஜமாய்க்கிறாருங்க. எங்கருந்துதான் இவங்களுக்கு காசு வருதுன்னு நானும் நினைச்சிருக்கேன். இப்பத்தான் புரியுது எங்கருந்து வருதுன்னு.

ரஹீம்: அவரே ஒரு ரோடு கான்ட்ராக்டரோ என்னவோ?

கணேஷ்: (சிரிக்கிறார்) கரெக்ட் பாய்.

ஜோசப்; கவர்ன்மென்ட் இந்த மாதிரி திட்டங்கள கொண்டு வரப்போ அதுல இத்தன பர்சென்ட் இந்த மாதிரி ஆளுங்க கபளீகரம் பண்றது நடக்கறதுதான? அதுக்காக திட்டங்களே வேணாம்னு சொல்லிற முடியுமா என்ன?  பட்ஜெட்ல நல்ல திட்டங்களும் இல்லாம இல்லீங்க. குறிப்பா சொல்லணும்னா இந்த திட்டங்கள சொல்லலாம். 

1. காற்றாலையிலருந்து கிடைக்கற எலக்ட்ரிசிட்டிய கொண்டு போறதுக்கு பாதை (transmission channels) ஜெர்மன் நாட்டு கம்பெனி கே.எப்.டபிள்யூவோட சேந்து 1600 கோடி செலவுல போடப் போறாங்களாம்.  

2. மீடியம் மற்றும் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ மேப்படுத்துறதுக்கு ரூ.750 கோடி.

3.தமிழ்நாடு முழுசும் ஆதரவில்லாதவங்க தங்கறதுக்கு ரூ.65 கோடியில விடுதிங்க கட்டப்போறாங்களாம். 

4.சூரியன்லருந்து எலக்ட்ரிசிட்டி தயாரிக்கற ஆலைகளை அமைக்கறதுக்கு ரூ.100 கோடியில திட்டம். 

5. ஸ்டேட்டுக்குள்ளருக்கற எல்லா ரிவர்ஸ்சையும் (rivers) ஒன்னு சேக்கற திட்டத்துக்கு ரூ.100 கோடியில திட்டம். 

கணேஷ்: அப்படீங்களா? நீங்க சூரியன்லருந்து எலக்ட்ரிசிட்டி தயாரிக்கற திட்டம்னு சொன்னதும் எனக்கு ரெண்டு நாளைக்கி முன்னால டிஸ்கவரி டிவியில பாத்த ப்ரோக்ராம் ஞாபகத்துக்கு வருதுங்க.  வேர்ல்ட்லயே பெரிய சோலார் பவர் ஜெனரேட்டிங் யூனிட் ஒன்ன காமிச்சான். அட்டகாசமா இருந்துது. அங்கருந்து ப்ரொட்யூஸ் பண்ணப்போற பவர வச்சி ஏறக்குறைய பத்து பெரிய இன்டஸ்ட்ரீயல் யூனிட்ஸ ரன் பண்லாமாம். வருசத்துல ஆறு மாசம் இருக்கற வெயில வச்சே அவங்களால எலக்ட்ரிசிட்டி தயார் பண்ண முடியும்னா வருசத்துல ஒம்போது மாசத்துக்கு மேல சுட்டெரிக்கற சூரியன வச்சி நாம எவ்வளவு எலக்ட்ரிசிட்டி தயாரிக்கலாம்? 

ரஹீம்: ஜோசப் கூவம் ரிவர மேம்படுத்தறதுக்கு ரூ. 4000 கோடியில புதுசா ஒரு மெகா திட்டம் வருதாமே அத நீங்க மென்ஷன் பண்ணவே இல்லையே?

கணேஷ்: அடப்போய்யா. இந்த மாதிரி இதுவரைக்கும் நிறைய கோடிங்கள செலவு பண்ணதுதான் மிச்சம். நாலாயிரம் கோடி! இத வச்சி உருப்படியா என்னவெல்லாம் செஞ்சிருக்கலாம்? 

ஜோசப்: ஏன் அப்படி சொல்றீங்க? நாமல்லாம் சின்னப் பசங்களா இருந்தப்போ இதே கூவம் வழியா சரக்கு போட்டெல்லாம் போவுமே பாத்ததில்ல? நா பாத்துருக்கேன். அதே மாதிரி  இப்பவும் செய்யலாங்க. அத்தோட இத ஒரு பெரிய டூரிஸ்ட் அட்ராக்‌ஷனா கூட மாத்தலாம். 

கணேஷ்: அட நீங்க வேற. அப்பல்லாம் கூவத்துக்கு ரெண்டு பக்கத்துலயும் காலியா இருந்தது. ஆனா இப்ப அப்படியா? ஒரு இஞ்ச் இடம் பாக்கியில்லாம குடிசைய போட்டு அங்கயே குடும்பம் நடத்தறாங்களே பாத்ததில்ல? இந்த ஆளுங்க போடற வேஸ்ட்டுங்கதாங்க கூவம் இப்படி இருக்கறதுக்கு காரணம். அதுமட்டுமா? ஸ்டேட் கவர்ன்மென்டே ஸ்லம் க்ளியரன்ஸ்னு சொல்லி ரெண்டு பக்கத்துலயும் ஃப்ளேட்டுங்கள கட்டி குடிசை வாசிங்கள குடிவச்சாங்களே அவங்க என்ன பண்றாங்க? வீட்டுக்குள்ள ஜாமான்களையெல்லாம் வச்சிட்டு சாப்டறது, தூங்கறதுன்னு எல்லாமே வெளியிலதான? இந்த மாதிரி ஆளுங்கள ஒட்டுமொத்தமா அங்கருந்து ரிமூவ் பண்ணாம எத்தன கோடி செலவு செஞ்சாலும் கூவம் இப்ப மாதிரியே நாறிக்கிட்டுத்தான் இருக்கும். இந்த மாதிரி திட்டம்னு சொல்றதெல்லாம் அதிகாரத்துலருக்கற சில பேரோட பாக்கட்ட நிறைக்கறதுக்குத்தான் யூஸ் ஆவும். 

ரஹீம்: கணேஷ் சொல்றா மாதிரிதான் நடக்கும்னு நானும் நினைக்கிறேன்.

ஜோசப்: (சிரிக்கிறார்) உங்கள மாதிரிதான் நிறைய பேர் நினைக்கிறாங்க.  இந்த தடவ அப்படி நடக்காதுன்னு நினைக்கிறேன். பாக்கலாம்.

ரஹீம்: எனக்கொரு சந்தேகம் ஜோசப்.

ஜோசப்: சொல்லுங்க.

ரஹீம்: பட்ஜெட்ல ரெவென்யூ சர்ப்ளஸ்னு(Revenue surplus) காமிச்சிட்டு கடைசியில பத்தாக்குறை (fiscal deficit) பட்ஜெட்னு சொல்றாங்க, அது ஏன்?

ஜோசப்: ரெவின்யூ சர்ப்ளஸ்ங்கறது அரசாங்கத்தோட வருமானம் அரசாங்கத்தோட செலவ விட ஜாஸ்தியாருக்கறப்போ வர்ற தொகை. ஆனா fiscal defecitங்கறது அரசாங்கத்தோட மொத்த வரவு (Receipts) அதோட செலவுத் திட்டங்கள (Plan and Non plan Expnditure + Capital investments) விட குறைவா இருக்கறப்போ வரும். 

ரஹீம்: புரியலீங்க. அரசாங்கத்தோட செலவு அவங்க வருமானத்தோட ஜாஸ்தியாத்தான இருக்கு?

ஜோசப்: கொஞ்சம் டீட்டெய்லாவே சொல்றேன். அரசாங்கத்தோட வருமானம்கறது நம்மள மாதிரி ஆளுங்கக் கிட்டருந்து வசூல் பண்ற வரி (சாலை வரி, சொத்து வரி, வாகன வரி). . அத்தோட சென்ட்ரல் கவர்ன்மென்ட் கலெக்ட் பண்ற வரியிலருந்து கிடைக்கற பங்கு, இதான் ஒரு ஸ்டேட் கவர்ன்மென்டோட  மெய்ன் வருமானம். அதுக்கப்புறம் நம்மள மாதிரி ஜனங்களுக்கு குடுக்கற சர்வீஸ்ங்களுக்காக வசூல் பண்ற சார்ஜஸ் (பர்த் சர்ட்டிஃபிக்கேட், ஜாதி சர்டிஃபிக்கேட் மாதிரி சான்றிதழ் குடுக்கறப்போ வசூல் பண்ற சார்ஜஸ், கவர்ன்மென்ட் செஞ்சிருக்கற இன்வெஸ்ட்மென்ட்லருந்து கிடைக்கற டிவிடன்ட், கடன்லருந்து கிடைக்கற வட்டி இப்படி நிறைய இருக்கு. இதெல்லாம் சேந்து வர்றதுதான் கவர்ன்மென்டோட ரெவின்யூன்னு சொல்றாங்க. இதுல பாதிக்கி மேல  கவர்ன்மென்ட் ஸ்டாஃபுக்கு  குடுக்கற சம்பளமாவே போயிருதாம். மீதியிருக்கறதுல கவர்ன்மென்ட் நடத்தறதுக்கு ஆகற மத்த செலவு எல்லாம் நடக்குது. கவர்ன்மென்ட் சிக்கனமா இருந்தா  வருமானத்த விட செலவு குறைவா இருக்க சான்ஸ் இருக்கு. அந்த மாதிரிதான் வர்ற வருசமும் இருக்கும்னு இந்த பட்ஜெட்லயும் சொல்லியிருக்காங்க. ஆனா வருச முடியறப்போதான் இந்த யூகம சரியா இல்லையான்னு தெரியவரும். 



ரஹீம்: லேசா புரியறா மாதிரி இருக்கு. அப்போ ஃபிஸ்கல் டெஃபிசிட்ங்கறது (fiscal deficit) என்னது?

ஜோசப்: சாதாரணமா பட்ஜெட்ல சொல்ற திட்டங்கள செஞ்சி முடிக்கிறதுக்கு அரசாங்கத்துக்கு கிடைக்கற ரெவின்யூ மட்டும் போறாது. அதனால அவங்க ஜனங்கக்கிட்டருந்தும் சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஏன் வேர்ல்ட் பேங்க்லருந்து கூட  கடன் வாங்குவாங்க. அந்த மாதிரி வாங்குற கடன்லருந்து ஏற்கனவே வாங்கியிருக்கற கடனுக்குண்டான வட்டி அப்புறம் ஏற்கனவே ட்யூவாயிருக்கற லோனையெல்லாம் திருப்பி அடைச்சிட்டு மீதியிருக்கற தொகைய வச்சித்தான் வரப்போற வருசத்துல செய்யப் போறதா பட்ஜெட்ல சொல்லியிருக்கற எல்லா திட்டங்களையும் செஞ்சாவணும். நாம கொஞ்ச நேரத்துக்கு முன்னால டிஸ்கஸ் பண்ணமே கூவம் மேம்பாட்டு திட்டம். ஸ்டூடன்சுக்கு லேப்டாப், லேடீசுக்கு மிக்ஸி, க்ரைன்டர் அப்படீன்னு இது எல்லாத்தையும் செஞ்சாவணும். ஆனா பட்ஜெட்ல சொல்லியிருக்கற எல்லா திட்டத்துக்கும் போதுமான கடன் கிடைக்காதில்லையா? அப்பத்தான் பற்றாக்குறை பட்ஜெட் வருது. இந்த பற்றாக்குறையத்தான் fiscal deficitனு சொல்றாங்க. ஆனா இதுக்கும் ஒரு லிமிட் வச்சிருக்காங்க. அதாவது நம்ம தமிழ்நாட்டோட மொத்த உற்ப்பத்தி மதிப்புல (GDP) மூனு சதவிகிதத்துக்கு மேல போகக் கூடாது. இவங்க ஆட்சிக்கு வந்ததுலருந்து அதுக்குள்ளவேதான் இருக்குதுன்னு பட்ஜெட்லயே பெருமையடிச்சிருக்காரு நம்ம பன்னீர் செல்வம். 



ரஹீம்: ஆனா ஸ்டேட்டோட மொத்த கடன் தொகை நாங்க இருந்த அளவ விட ரொம்ப ஜாஸ்தின்னு ஸ்டாலின் சொல்றாரே?

கணேஷ்: ஏங்க, வருசா வருசம் திட்டங்கள் ஜாஸ்தியாய்ட்டே போய்க்கிட்டிருக்கறப்போ கடனும் ஜாஸ்தியாத்தான ஆவும்? . ஆனா ஒன்னு. கடன வாங்கித்தான் விலையில்லா லேப்டாப், மிக்ஸி, க்ரைன்டர்னு குடுக்கணுமான்னுதான் கேள்வி. அதுவும் ரெண்டாயிரம் கோடி அளவுக்கு இந்த மாதிரி வேஸ்ட் பண்றது ரொம்ப பெரிய க்ரைம்தான். 

ஜோசப்: வாஸ்தவம்தான். ஆனா இத துவக்கி வச்சது மு.க.தான? அதுக்கு முன்னாலல்லாம் இப்படி யாரும் செஞ்சதில்லையே? ஆடு, மாடு, கோழின்னு குடுப்பாங்க.  அவர் ஆரம்பிச்சி வச்சார். ஆனா அது அவருக்கும் லாபமா இல்ல, ஜனங்களுக்கும் லாபமா இல்ல! அதுமாதிரிதான் இவங்க குடுக்கறதும். இது எப்பத்தான் முடிவுக்கு வருமோ தெரியல.

ரஹீம்: இவங்கள பாத்து உ.பியில கூட ஸ்கூல், காலேஜ் பசங்களுக்கு லேப்டாப் குடுக்கறாங்களாமே?

ஜோசப்: (சிரிக்கிறார்) இந்த மாதிரி எல்லா ஸ்டேட்லயும் செய்ய ஆரம்பிச்சா எல்லா கவர்ன்மென்ட்டும் திவாலாவாக வேண்டியதுதான். 

கணேஷ்: இவ்வளவு சொல்றீங்களே சென்ட்ரல் பட்ஜெட்ல மட்டும் என்னவாம்? நம்ம ப.சி. குடுத்துறுக்கறது இன்டரிம் பட்ஜெட் மாதிரியா இருக்கு? 

ரஹீம்: ஏன் அப்படி சொல்றீங்க? எக்சைஸ் வரிய குறைச்சதால ஏறக்குறைய எல்லாமே விலை குறைஞ்சிருமே?

கணேஷ்: அட நீங்க வேற? எத்தன பேருக்கு இதனால லாபம் இருக்கப் போவுது? அரிசி, பருப்பு விலையா குறைய போவுது? பணக்காரங்க வாங்கற கார், மொபைல் ஃபோன், டிவி, ஃபிரிட்ஜ் இதுங்க விலைதான குறையப் போவுது? 

ஜோசப்: இதே ரேட்டுல வருமான வரி லிமிட்டையும் கொஞ்சம் ஏத்தியிருக்கலாம்.

ரஹீம்: இது நல்லாருக்கே. சந்தடி சாக்குல ஒங்களப் பத்தியும் சொல்லிக்கிறீங்களோ? (சிரிக்கிறார்)

ஜோசப்: பின்ன என்னங்க? சர்வீஸ்ல இருக்கறப்பத்தான் கட்டிக்கிட்டிருந்தோம். அதே ரேட்டுல பென்ஷன்லருந்து புடிச்சா நியாயமாங்க? 

ரஹீம்: ஏங்க அந்த அளவுக்கு பென்ஷன் வந்தா கட்ட வேண்டியதுதான?

கணேஷ்: (கோபத்துடன் முறைக்கிறார்) யோவ் பாய், மனசாட்சிய தொட்டு சொல்லு. நீ என்னைக்காவது இன்கம் டாக்ஸ் கட்டியிருக்கியா?

ரஹீம்: எனக்கு அந்த அளவுக்கு வருமானம் இல்லீங்களே அப்புறம் எதுக்கு கட்டணும்?

ஜோசப்: (சிரிக்கிறார்) அதான! இவர் சொல்றதும் நியாயம்தான கணேஷ்?

கணேஷ்: (கடுப்புடன்) ஜோசப் கடுப்படிக்காதீங்க. வருமானம் இல்லாமத்தான் பெரிய பொண்ணுக்கு நூறு பவுன் நகைய போட்டு கட்டிக்குடுத்தாரா? சிட்டியில சென்டர்ல இவ்வளவு பெரிய வீடு இருக்கு? சிட்டியில ஒன்னும் அவுட்டர்ல ஒன்னுன்னு ரெண்டு பெரிய கடை இருக்கு. இவருக்கு இன்கம் டாக்ஸ் கட்ற அளவுக்கு வருமானம் இல்லேன்னு இவரும் சொல்றார் நீங்களும் ஜால்ரா அடிக்கறீங்க. அக்கிரமம்யா.

ஜோசப்: (சிரிக்கிறார்) சரி, சரி, டென்ஷன் ஆகாதீங்க. நாம ஒன்பதுலருந்து அஞ்சி வரைக்கும் வேல செய்யிறோம். ஆனா இவரு? ஒரு நாளைக்கி பதினஞ்சி மணி நேரமில்ல ஒழைக்கிறாரு? அத்தோட இவர் எடுக்கற அளவுக்கு ரிஸ்க் நாம என்னைக்காவது எடுத்துருக்கமா? பிசினஸ்னா லாபம் மட்டுமா வரும்? நஷ்டமும் வருதுல்ல? அப்போ இவருக்கு கவர்ன்மென்டா காம்பன்ஸேட் பண்ணுது? அதான் லாபத்த குறைச்சி காட்டி டாக்ஸ அவாய்ட் பண்றாங்க. மத்தவங்கள மாதிரி டாக்ஸ எவேட் (evade) பண்ணல இல்ல?

ரஹீம்: சூப்பர்ங்க. இதெல்லாம் இவருக்கு எங்க தெரியுது? நானெல்லாம் ஆரம்ப காலத்துல ஓட்ட ஒடசல் சைக்கிள்லதாங்க போவேன், வருவேன்.  ஒரு நாளைக்கு ஒருவேளை கூட ஒழுங்கா சாப்டது கிடையாது. அப்படியெல்லாம் பாடு பட்டுத்தான் இன்னைக்கி ஓரளவுக்கு நல்லாருக்கேன். இப்ப வர்றா மாதிரியே என்னைக்கும் வருமானம் இருக்கும்னுல்லாம் சொல்லிற முடியாது. 

கணேஷ்: என்னது இவங்க பண்றது எவேஷன் இல்லையா? வருமான வரி கட்ற அளவுக்கு வருமானம் இருந்தாலும் வரி கட்டாம இருக்கறதுக்காக அரசாங்கம் அலவ் பண்ற மொத்த ரிபேட்டையும் சம்பாதிக்கற அளவுக்கு சேவ் (Save) பண்றாங்களே அவங்க பண்றதுதான் tax avoidance. வருமான வரி கட்ற அளவுக்கு வருமானம் இருந்தும் அத குறைச்சி காமிக்கற இவங்க செய்றதெல்லாம் சுத்தமான, வடிகட்டுன tax evasion. 

ஜோசப்: விடுங்க கணேஷ். இதப் பத்தி பேச ஆரம்பிச்சா என்டே (end) இருக்காது. சரி வேற ஏதாச்சும் இருக்கா. 

இல்லன்னா அடுத்த வாரம் மீட் பண்லாம். என்ன பாய்?

ரஹீம்: வேற என்ன இருக்கு? அடுத்த வாரம் பாக்கலாம்.  

ஜோசப்பும் கணேஷும் அவரிடம் இருந்து விடைபெற்று செல்ல அவர்கள் இருவரும் சென்று மறையும் வரை வாசலில் 

நிற்கிறார் ரஹீம். 

************


















19 கருத்துகள்:

  1. அப்பப்பா எத்தனை எத்தனை விசயங்கள். இது போல கொஞ்சம் வித்தியாசமா முயற்சி செய்றவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம் மத ஒற்றுமைக்காக உள்ள பெயர்களை கவனித்த போது

    சபாஷ் என்று சொல்லத் தோன்றுகின்றது.

    கலக்குங்க வாத்தியாரே.

    பதிலளிநீக்கு
  2. எல்லாத்தையும் பற்றி நல்ல அலசல்...

    இந்த இலவசங்கள் தான் எங்கே போய் முடியும் என்று தெரியலே...!

    பதிலளிநீக்கு
  3. ஒரே பதிவில் ஏகப்பட்ட விஷயங்களை எழுதிவிட்டீர்கள். முழுவதையும் படிக்கவில்லை. மீண்டும் படிக்க வேண்டும். ராஜாக்கள் காலமாக இருந்திருந்தால்கூட இவ்வளவு பணவிரயம் செய்யமாட்டார்கள். கோடி கோடியாக பட்ஜெட் போட்டு, தனக்கு எவ்வளவு கிடைக்கும் என்று அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கணக்கிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஜோதிஜி திருப்பூர் said...
    அப்பப்பா எத்தனை எத்தனை விசயங்கள். இது போல கொஞ்சம் வித்தியாசமா முயற்சி செய்றவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம் மத ஒற்றுமைக்காக உள்ள பெயர்களை கவனித்த போது
    சபாஷ் என்று சொல்லத் தோன்றுகின்றத//

    நாட்டு நடப்பு மற்றும் அரசியல் எல்லோரையும் கவர்வதில்லை. ஆகவேதான் இப்படியொரு கற்பனை விவாதங்கள் மூலம் நாட்டில் நடப்பவைகளை எடுத்துக் கூறலாம் என்று நினைத்தேன். கருத்துரைகள் அவ்வளவாக வருவதில்லை என்றாலும் நிறைய வாசகர்கள் படிக்கிறார்கள் என்பதால் இதை தொடர்கிறேன்.

    உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. :40 PM Delete
    Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    எல்லாத்தையும் பற்றி நல்ல அலசல்...

    இந்த இலவசங்கள் தான் எங்கே போய் முடியும் என்று தெரியலே...!//

    இலவசங்களைத்தான் விலையில்லா பொருட்கள் என்று பெயர் மாற்றிவிட்டார்களே!

    இது ஒரு கேவலமான அரசியல் என்பதை எப்போது தலைவர்கள் உணர்கிறார்களோ அப்போதுதான் இது முடிவுக்கு வரும்.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. Packirisamy N said...
    ஒரே பதிவில் ஏகப்பட்ட விஷயங்களை எழுதிவிட்டீர்கள். முழுவதையும் படிக்கவில்லை.//

    இந்த பதிவை வாரம் முழுவதும் அன்றைய தினம் நடப்பவைகளை விமர்சித்து எழுதி வைத்துவிட்டு வார இறுதியில் வெளியிடுவதால் பதிவு நீளமாக தென்படுகிறது. அந்த வாரத்தில் நடப்பவைகளை அந்த வாரமே விமர்சித்தால் பயனுள்ளதாக இருக்கும். அந்த அளவுக்கு விவகாரமான விஷயங்கள் நாட்டில் நடப்பதால் பதிவின் நீளமும் அதிகரித்துவிடுகிறது.

    ராஜாக்கள் காலமாக இருந்திருந்தால்கூட இவ்வளவு பணவிரயம் செய்யமாட்டார்கள். கோடி கோடியாக பட்ஜெட் போட்டு, தனக்கு எவ்வளவு கிடைக்கும் என்று அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கணக்கிடுகிறார்கள்.//

    மிகச் சரியாக சொன்னீர்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் நம் நாட்டின் மிகப் பெரிய சாபக்கேடு. ஆனால் அனைவரையும் ஒட்டுமொத்தமாக குறை கூறிவிட முடியாது. நல்லவர்களை விட தீயவர்கள் அதிகம் உள்ளனர் என்பதுதான் வேதனை.

    பதிலளிநீக்கு
  7. வழக்கம்போல் மூவர் கூட்டணியின் தற்கால அரசியல் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் ஒன்று. ‘உப்புக் கடல் கூட சர்க்கரையாகலாம். முப்பது நாளிலும் நிலவைக் காணலாம். நீ சொன்னது எப்படி உண்மையாகலாம்.’என்று ஒரு திரைப் பாடப் பாடல் உண்டு. அதை மாற்றி கூவம் மாறும் என்பதை எப்படி நம்பலாம் எனக் கூறலாம். கூவம் நதி சீரமைப்பிற்காக ஒதுக்கும் தொகையை சிலர் தங்கள் குடும்பத்தை ‘சீரமைக்க’ ஒதுக்கிவிடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே!

    பதிலளிநீக்கு
  8. சுவையான பல செய்திகளை சிறப்பாக விமர்சனம் செய்துள்ளீர்கள்! பதிவின் நீளம்தான் கொஞ்சம் கஷ்டப்படுத்துகிறது! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய நேர்மையான பதிவு. ஜோதிஜியின் கருத்துதான் என் கருத்தும். பதிவும் பெரியது. விஷயமும் பெரியது. வார்த்துக்கள். த.ம.வாக்கு போட்டாச்சி.

    பதிலளிநீக்கு
  10. சகோதரர்க்கு வணக்கம்
    அனைத்து செய்திகளையும் உரையாடலாய் தொகுத்து கூறிய விதம் அருமை. பதிவு கொஞ்சம் நீளம் தான். இருப்பினும் விடயங்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அவர்கள் தூக்கு தண்டனை பயத்தில் நாட்களை கடத்தினதே ஐந்து ஆயுள் தண்டனைக்கு சமம் என்று ராம்ஜெத் மலானி தெரிவிச்சி இருக்கார்.

    பதிலளிநீக்கு
  12. எனக்கு இப்படிப்பட்ட பதிவுகள் பிடிக்கும் காரணம் தொலைதூர நாட்டில் வசிக்கும் எனக்கு நானும் இவர்களுடன் பேசுவது போல ஒரு உணர்வு தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  13. நடனசபாபதி said...
    கூவம் நதி சீரமைப்பிற்காக ஒதுக்கும் தொகையை சிலர் தங்கள் குடும்பத்தை ‘சீரமைக்க’ ஒதுக்கிவிடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே!//

    நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இம்முறையாவது ஒதுக்கப்பட்ட தொகையில் பாதியாவது கூவத்தை சீரமைக்க பயன்படும் என்று நம்புவோம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

  14. Avargal Unmaigal said...
    எனக்கு இப்படிப்பட்ட பதிவுகள் பிடிக்கும் காரணம் தொலைதூர நாட்டில் வசிக்கும் எனக்கு நானும் இவர்களுடன் பேசுவது போல ஒரு உணர்வு தோன்றுகிறது.

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  15. MANO நாஞ்சில் மனோ said...
    அவர்கள் தூக்கு தண்டனை பயத்தில் நாட்களை கடத்தினதே ஐந்து ஆயுள் தண்டனைக்கு சமம் என்று ராம்ஜெத் மலானி தெரிவிச்சி இருக்கார்.//

    அவர் சொல்வதும் உண்மைதான். இன்றைக்கு தூக்கு நாளைக்கு தூக்கு என்று அவர்களை மனத்தளவில் துன்புறுத்தியதே போதும் என்றுதான் தோன்றுகிறது. உண்மையில் பார்க்கப்போனால் இவர்களுடைய கருணை மனுக்களை எதற்காக பைசல் செய்யவில்லை என்று பிரனாப்புக்கு முன்பிருந்த இரு பிரசிடென்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

  16. அ. பாண்டியன் said...
    சகோதரர்க்கு வணக்கம்
    அனைத்து செய்திகளையும் உரையாடலாய் தொகுத்து கூறிய விதம் அருமை. பதிவு கொஞ்சம் நீளம் தான். இருப்பினும் விடயங்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி.//

    இந்த வாரத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அதிகமாக இருந்ததால்தான் பதிவின் நீளமும் அதிகரித்துவிட்டது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரரே.

    பதிலளிநீக்கு

  17. கவிப்ரியன் ஆர்க்காடு said...
    எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய நேர்மையான பதிவு. ஜோதிஜியின் கருத்துதான் என் கருத்தும். பதிவும் பெரியது. விஷயமும் பெரியது. வார்த்துக்கள். த.ம.வாக்கு போட்டாச்சி.

    உங்கள் கருத்துக்கும் த.ம. வோட்டுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  18. s suresh said...
    சுவையான பல செய்திகளை சிறப்பாக விமர்சனம் செய்துள்ளீர்கள்! பதிவின் நீளம்தான் கொஞ்சம் கஷ்டப்படுத்துகிறது! தொடருங்கள்! நன்றி!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  19. // ரஹீம்: அட நீங்க ஒன்னு ஜோசப். இது ஒரு கான்ட்ரவர்சியல் பில்லாச்சே. எப்படியோ நாம ஆட்சிக்கு வர்றதுக்குள்ள இது முடிஞ்சிரட்டுமேன்னு பாத்துருப்பாங்க. அப்படியே இதால ஏதாச்சும் பெருசா பிரச்சினை வந்துதுன்னா நாங்க அப்பவே சொன்னோம் காங்க்ரஸ்தான் கேக்கலேன்னுட்டு பழிய அவங்க மேல தூக்கி போட்ருலாமே?//

    ஆந்திரா பிரிவினையில் காங்கிரஸ் – பிஜேபி இரண்டுமே கூட்டுக் களவாணிகள் என்பதனை ரஹீம் பாய் மூலம் நன்றாகத் தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு