21 January 2014

நாடாளுமன்ற தேர்தல் ஆரூடம்எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தல் இந்திய அரசியல் சரித்திரத்தில் ஒரு பெரும் மாற்றத்தை  ஏற்படுத்தும்  என்று பாஜகவும் சில எதிர்கட்சிகளும் கூறி வருகின்றன. இதை சமீபத்தில் நடந்து முடிந்த நான்கு மாநில சட்டசபை தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளன என்றும் நாள்தோறும் தன்னுடைய பொதுக்கூட்டங்களில் கூறிவருகிறார் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.

அவர் கூறுவது எந்த அளவுக்கு உண்மை, அப்படியே பாஜக தேர்தலில் ஜெயித்தாலும் அது தனிக் கட்சியாக ஆட்சியை அமைக்க முடியுமா, அப்படியே அமைத்தாலும் நமோ பிரதமராக முடியுமா என்பதை சற்று விரிவாக ஆய்வு நடத்தினால் என்ன என்று தோன்றியதன் விளைவே இந்த பதிவு. 

ஆனால் இதில் எழுதியுள்ளது போலவே நடக்கும் என்று ஆருடம் கூறுவதல்ல என்னுடைய நோக்கம்.  கடந்த பொதுத் தேர்தலில் நாட்டின் இரு பெரும் கட்சிகளான காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் கிடைத்த நாடாளுமன்ற இடங்களின் அடிப்படையிலும் அதன் பிறகு இந்திய அரசியலில் ஏற்பட்ட ஒரு சில நிகழ்வுகளால் ஏற்பட்ட தாக்கங்களின் அடிப்படையிலும் இந்த கணிப்பு செய்யப்பட்டுள்ளது. 

இது ஒரு கணிப்பு மட்டுமே. 

இந்த கணிப்பு முழுக்க, முழுக்க என்னுடையதல்ல. பல ஆங்கில பத்திரிகை மற்றும் மின்சஞ்சிகைகளில் வெளிவந்துள்ள பிரபல அரசியல் கண்ணோட்டகர்களின் (observers) கட்டுரைகளை சார்ந்து செய்யப்பட்ட கணிப்பு என்றும் கூறலாம்.

இந்த கணிப்பின் அடிப்படை தத்துவமாக  நான் எடுத்துக்கொண்டது இதுதான்:

1. மாநில கட்சிகளான திமுக, அதிமுக, தெலுங்கு தேசம், திரினாமூல்,  எஸ்.பி, பி.எஸ்.பி, ஆர்.ஜே.டி. போன்ற மாநில கட்சிகள் மற்றும்  தேசிய கட்சிகள் என்று கருதப்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் அதே கட்சிகளுக்கே தொடர்ந்து வாக்களிப்பார்கள். இத்தகையோருக்கு மாநில தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களுக்கு இடையிலுள்ள வேறுபாடு ஒரு பெரிய பொருட்டல்ல.

2. பாஜகவுக்கு வாக்களித்து வந்துள்ளவர்களும் இம்முறை மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பில்லை. 

3. காங்கிரசின் தொண்டர்களும் அதன் தீவிர ஆதரவாளர்களும் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள் மாட்டார்கள். 

4.  ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றி எதிர்வரும் பொதுத்தேர்தலிலும்  தாக்கத்தை ஏற்படுத்தும்.


இந்த கணிப்பில் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கோ அல்லது தனிப் பெரும் கட்சியாகவோ வரக் கூடிய தகுதியுள்ள இருபெரும் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவினருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கக் கூடும் என்பதை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளேன்.  ஏனெனில் இவ்விரு கட்சிகளாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் போனாலும் இவர்களுடைய தலமையில் மட்டுமே கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. இவர்களைத் தவிர்த்து மூன்றாம் அணி என்பதெல்லாம் சாத்தியமில்லை என்பது என் கருத்து. 

இதற்கு முதலில் இவ்விரு கட்சிகளுக்கும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு மாநிலங்களிலும் கிடைத்த இடங்களை கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் பார்க்கலாம். இதன்படி நாட்டிலுள்ள 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்திய தேசீய காங்கிரஸ் 26ல் மட்டுமே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதாவது மீதமுள்ள பதினோறு மாநிலங்களில் இந்த கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. 

பாஜகவோ 14 மாநிலங்களில் மட்டுமே இடங்களை வென்றுள்ளது. அதாவது மூன்றில் ஒரு பங்கு மாநிலங்களில் மட்டுமே அதற்கு இடங்கள் உள்ளன.   நாட்டிலுள்ள மாநிலங்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களில் இவர்கள் ஒரு பொருட்டே இல்லை. இதில் தமிழகமும் அடங்கும். 

மேலும் இந்த 14 மாநிலங்களில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு பாஜக கர்நாடகாவில் ஆட்சியை இழந்துள்ளதையும் பீகாரில் இதுவரை தங்களுடைய கூட்டணியில் இருந்த ஜனதாதளத்தின் ஆதரவை இழந்துள்ளதையும் கருத்தில் கொள்ளும்போது இவ்விரு மாநிலங்களில் கிடைத்த 25 இடங்களும் கூட பறிபோய்விட வாய்ப்புள்ளதையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில் சாதாரணமாக, மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் கட்சிக்கே நாடாளுமன்ற தேர்தலிலும் மக்கள் வாக்களிப்பது வழக்கம்.

அதே சமயம் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பெருமளவில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம். சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருடைய  சொந்த மாநிலமான குஜராத்திலும் கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக அளவு இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் மாநில கட்சிகளின் ஆட்சி நடைபெறும்  ஒடிசா, உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம், ஆந்திரா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு ஏற்படும் இழப்பு பாஜகவுக்கு சாதகமாக அமைய வாய்ப்பில்லை என்பதும் உண்மை! காங்கிரஸ் இழக்கும் இடங்கள் அந்தந்த மாநில கட்சிகளான பிஜு ஜனதா தளம், எஸ்.பி அல்லது பிஎஸ்பி, திரினாமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் அல்லது YSR காங்கிரஸ், திமுக அல்லது அதிமுக, அகாலிதளம் மற்றும் ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கே கிடைக்க வாய்ப்புள்ளது.

நாளையுடன் முடிவு பெறும்..

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பொறுத்திருந்து பார்ப்போம்...!

ராஜி said...

எந்த கட்சி ஜெயிச்சாலும் தோற்கப்போறதென்னமோ வாக்காளர்களாகிய நாமதான்

டிபிஆர்.ஜோசப் said...


Blogger திண்டுக்கல் தனபாலன் said...
பொறுத்திருந்து பார்ப்போம்...!//

வேற வழி?

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

PM Delete
Blogger ராஜி said...
எந்த கட்சி ஜெயிச்சாலும் தோற்கப்போறதென்னமோ வாக்காளர்களாகிய நாமதான்//

அதென்னமோ உண்மைதான் :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வே.நடனசபாபதி said...

காத்திருக்கிறேன் உங்களுடைய தேர்தல் முடிவு பற்றிய ‘ஆருடம்’ அறிய!

Avargal Unmaigal said...

மிக நன்றாக அலசி இருக்கிறீர்கள் ஜூவி நக்கிரன் ரிபோர்ட்டரில் வரும் அலசலைவிட மிக அருமை மட்டுமல்ல உண்மையை தெளிவாக சொல்லி இருக்கீங்க். அவர்கள் எல்லோரும் ஒரு பட்சமாகவே சொல்லுவார்கள் ஆனால் நம்மை போல உள்ள வலைப்பதிவர்கள் மட்டும் உண்மையை பட்டென போட்டு உடைக்கிறோம்.

பாராட்டுக்கள் tha.ma 5

தி.தமிழ் இளங்கோ said...

அரசியல் அலசல். நன்றாகவே சொன்னீர்கள்! தங்களது , அடுத்த பதிவினையும் பார்த்துவிட்டு முழு கருத்தினையும் தெரிவிக்கின்றேன்!

டிபிஆர்.ஜோசப் said...

5 PM Delete
Blogger வே.நடனசபாபதி said...
காத்திருக்கிறேன் உங்களுடைய தேர்தல் முடிவு பற்றிய ‘ஆருடம்’ அறிய!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

டிபிஆர்.ஜோசப் said...

5 PM Delete
Blogger Avargal Unmaigal said...
மிக நன்றாக அலசி இருக்கிறீர்கள் ஜூவி நக்கிரன் ரிபோர்ட்டரில் வரும் அலசலைவிட மிக அருமை மட்டுமல்ல உண்மையை தெளிவாக சொல்லி இருக்கீங்க். அவர்கள் எல்லோரும் ஒரு பட்சமாகவே சொல்லுவார்கள் ஆனால் நம்மை போல உள்ள வலைப்பதிவர்கள் மட்டும் உண்மையை பட்டென போட்டு உடைக்கிறோம்.//

உண்மைதான். பத்திரிகைகளுக்கு இல்லாத சுதந்திரம் நம்மைப் போன்றவர்களுக்கு உள்ளதே. நாம் எவருக்கும் ஜால்ரா அடிக்க தேவையில்லையே.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

AM Delete
Blogger தி.தமிழ் இளங்கோ said...
அரசியல் அலசல். நன்றாகவே சொன்னீர்கள்! தங்களது , அடுத்த பதிவினையும் பார்த்துவிட்டு முழு கருத்தினையும் தெரிவிக்கின்றேன்!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...

AM Delete
Blogger தி.தமிழ் இளங்கோ said...
அரசியல் அலசல். நன்றாகவே சொன்னீர்கள்! தங்களது , அடுத்த பதிவினையும் பார்த்துவிட்டு முழு கருத்தினையும் தெரிவிக்கின்றேன்!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

காலம்தான் பதில் சொல்ல வேண்டும். காத்திருப்போம்.

Vetrivendan said...

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து .பார்க்கலாம் என்ன நடக்குமென்று .