13 January 2014

எதற்கு இந்த பெயர் மாற்றங்கள்?

உழவனுக்கு
நன்றின்னு சொல்ல
ஒரு நாள் !

அது பொங்கல் திருநாள்.


உழவனின் தோழன் மாட்டுக்கு
நன்றி சொல்லவும் ஒரு நாள்!

மாட்டுப் பொங்கல்.

இப்போ அதுக்கு பேர்
திருவள்ளுவர் தினமாம்!!

பெரியவங்களுக்கு
நன்றி சொல்றதுக்கு
ஒரு நாள்

காணும் பொங்கல்.

அதுக்கு பேர்
இப்போ உழவர் தினமாம்!!

அப்போ பொங்கல் திருநாளுக்கும்
உழவனுக்கும் உறவில்லையோ?

எதற்கு இந்த பெயர் மாற்றங்கள்?

எந்த பேர்ல வந்தாலும்
இந்த மூனு நாளுமே
திருநாள் தினங்கள்தான்.

பானை வாயிலிருந்து நுரையுடன்
பொங்கும் சோறு
நம் உள்ளங்களிலும்
பொங்கி எழச் செய்யட்டும்
நல்ல எண்ணங்களை!

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!  

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குழப்பம் வேண்டாம்...

தித்திக்கும் இனிய தைப் பொங்கல் + உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

வே.நடனசபாபதி said...


ரோஜாவை எந்த பெயரில் அழைத்தாலும் அது அதே நறுமணத்தோடுதான்
மணக்கும்’ என்று William Shakespeare ரோமியோ & ஜூலியட்
நாடகத்தில் கூறுவார். அதைத்தான் நான் நானும் சொல்லுவேன்.எப்படி அழைத்தாலும்
பொங்கல் விழா, இயற்கைக்கும், கால் நடைகளுக்கும் நன்றி செலுத்தும் நாட்கள் தான்.எனவே அனைவரும் பொங்கலைக் கொண்டாடுவோம். உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள்!

அபயாஅருணா said...

நான் வேலை பாத்துகிட்டு இருந்தவரை
எப்படியோ லீவு கிடைச்சாப் போதும் கட்சி .
பொங்கல் வாழ்த்துக்கள்...

அ. பாண்டியன் said...

விழா எதுவாகினும் மக்கள் மகிழ்ச்சி தான் முக்கியம். அந்த வகையில் நமக்கும் மகிழ்ச்சியே. தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது அன்பான உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

2008rupan said...

வணக்கம்

ஆயிரம் பேர் ஆயிரம் கதை கதைப்பார்கள்.வேண்டாம் ..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

aana ondr niinggal yarume tamilan illai endru nandraaga purigirathu

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் போல உங்கள் வாழ்வும் இனிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

Avargal Unmaigal said...

எது எப்படியோ நாங்கள் பொங்கல் கொண்டாடுவதில்லை. காரணம் பெரிசா ஏதும் இல்லை ஒரு சில காரணம்தான். 1. பொங்கலில் ஸ்வீட் அதிகமாக இருக்குமாம் அதனால உடம்புக்கு ஆகாதாம் பொங்கல் வைக்காதற்கு வீட்டில் இப்படியெல்லாம் காரணம் சொல்லுறாங்க பாருங்க 2. தமிழகத்தில் மூன்று நாள் லீவு இங்கே அது கிடையாதாம்

G.M Balasubramaniam said...


நீங்க நம்ம டைப் போல இருக்கு. நிறையவே கேள்விகள். என் இனிய பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்

விவரணன் நீலவண்ணன் said...

உழவுத் தொழிலைப் போற்றிய ஒப்பற்றக் கவிஞன் வள்ளுவன், அவனது பிறந்த தினமோ, ஊரோ அறியோம், ஆன போதும் அவனை உழவுத் திருநாளோடு போற்றிப் புகழவே வள்ளுவர் தினம்.. பொங்கல் என்பது உத்தராயண், லோக்கிரி என இந்தியாவின் ஒவ்வொரு விவசாயக் குடியும் கொண்டாடுகின்றது. ஆன போதும் நாம் இதனைத் தமிழர் திருநாள் என்று விட்டோம். அவரவர் வசதிக்கும் வட்டார வாய்ப்புக்கும் ஏதுவாயே பெயர்கள், ஆனால் அதன் ஆத்மா ஒன்று தான்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//உழவனின் தோழன் மாட்டுக்கு
நன்றி சொல்லவும் ஒரு நாள்!

மாட்டுப் பொங்கல்.

இப்போ அதுக்கு பேர்
திருவள்ளுவர் தினமாம்!!// இரண்டும் ஒரே நாளில் வருகிறது. அவ்வளவுதான்.., நீங்கள் எழுதியிருக்கும்தொணி உள்நோக்கம் இருப்பது போல உள்ளது. அப்படியெல்லாம் உள்நோக்கம் எதுவும் இருக்காது. வெறும் அறியாமை அல்லது சொல் அலங்காரம் மட்டுமே இதற்கு காரணம் என்றே நம்புகிறோம்.

டிபிஆர்.ஜோசப் said...

வந்திருந்து தங்களுடைய கருத்துக்களையும் பொங்கல் வாழ்த்துக்களையும் பகிர்ந்துக்கொண்ட அனைத்துபதிவுலக நண்பர்களுக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

நீங்கள் எழுதியிருக்கும்தொணி உள்நோக்கம் இருப்பது போல உள்ளது. அப்படியெல்லாம் உள்நோக்கம் எதுவும் இருக்காது. வெறும் அறியாமை அல்லது சொல் அலங்காரம் மட்டுமே இதற்கு காரணம் என்றே நம்புகிறோம்//

உள்நோக்கம் என்று சொல்ல வரவில்லை. எதற்கு என்ற சந்தேகம்தான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

நீங்கள் எழுதியிருக்கும்தொணி உள்நோக்கம் இருப்பது போல உள்ளது. அப்படியெல்லாம் உள்நோக்கம் எதுவும் இருக்காது. வெறும் அறியாமை அல்லது சொல் அலங்காரம் மட்டுமே இதற்கு காரணம் என்றே நம்புகிறோம்//

உள்நோக்கம் என்று சொல்ல வரவில்லை. எதற்கு என்ற சந்தேகம்தான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Manimaran said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

sivagnanamji said...

THANK YOU TBR
WISHING YOU THE SAME

டிபிஆர்.ஜோசப் said...

Thanks Ji for your greetings.

வேகநரி said...

அதை ஏன் கேக்கிறீங்க! ஒருவருக்கு பொங்கல் வாழ்த்து சொன்னா அவர் கடுப்பாயிடுவாரோ, புது வருட வாழ்த்துன்னு சொன்னா தான் ஏற்றுகுவாரா என்று எல்லாம் குழம்ப வேண்டியிருக்கு.
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...

Sasi Kala said...

கதை அடுத்து கவிதை சிறப்பு சிறப்பு... தாமதமான புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். நலம் தானே ?