18 நவம்பர் 2013

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்ன சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது ஏன்?

தமிழக சட்டமன்றத்தை அவசர, அவசரமாக கூட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாக கலந்துக்கொள்வது என்று எடுத்த முடிவை எதிர்த்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய தமிழக அரசு அது மக்களுக்கு முழுமையாக சென்றடைவதற்கு முன்னரே தஞ்சையில் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றச் சுற்றுச் சுவரையும் அதனையொட்டி அமைக்கப்பட்டிருந்த பூங்காவையும் ப்ரொக்ளைன் இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி அதிர்ச்சியை அளித்தது. 

இதை சற்றும் எதிர்பாராத எதிர்கட்சிகள் அனைத்தும் - காங்கிரசைத் தவிர - இது தமிழக முதல்வரின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்றன. பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. 

இதற்கு அரசு சொல்லும் காரணம்: இடிக்கப்பட்ட பகுதிகள் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இவற்றை அகற்ற வேண்டுமென்று சம்மந்தப்பட்டவர்களுக்கு பலமுறை அறிவிக்கைகள் அனுப்பியும் அவர்கள் கண்டுக்கொள்ளாததால்தான் இதை இடிக்க வேண்டியதாயிற்று.

ஆனால் உண்மை காரணம் அதுவல்லவாம். இந்த நினைவுச் சின்னத்தை எழுப்பியவர்களுக்குப் பின்னால் இருந்த ஒருவர் முதலமைச்சரின் பரம வைரி என்பதுதானாம்! 

ஒரு நாளைக்கு முன்பு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிவிட்டு அடுத்த நாளே இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யபட்ட இலங்கை தமிழர்கள் நினைவாக தஞ்சையில் எழுப்பப்பட்ட ஒரு நினைவுச் சின்னத்தின்  சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய தமிழக அரசின் இந்த செய்கையால் ஆட்சியாளரிளின் உண்மை முகம் தெரிந்துவிட்டது என்றும் இதற்கு காரணமாக இருந்த ஆளும் கட்சிக்கு எதிர்வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவோம் என்ற மதிமுக, பாமக போன்ற கட்சிகளின் வாதம் தமிழக மக்கள் முன் எடுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவுச் சின்னம்




ஆனால் இப்படியொரு சின்னம் தமிழ்நாட்டில் திறக்கப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் எங்களுடைய கட்சியின் முடிவு என்றார் காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன்.

இப்படியொரு நினைவுச் சின்னம் தேவைதானா? முள்ளிவாய்க்காலில் அப்படியென்ன நடந்துவிட்டது?

சுருக்கமாக பார்க்கலாம். 

இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ போராளிகளுக்கும் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நேரம். தங்கள் வசம் இருந்த பெரும்பாலான பகுதிகளை இழந்துவிட்டு பின்னோக்கி ஓடத்துவங்கியிருந்தனர் போராளிகள். இந்த சூழலில் வன்னி மாவட்டத்தை முற்றுகையிட்டு எப்போது தாக்குதலை துவங்கலாம் என்று காத்திருந்தது இலங்கை ராணுவம். 

ஒருபக்கம் போராளிகள், மறுபக்கம் இராணுவம். இவர்களுக்கு இடையில் சுமார் மூன்று இலட்சம் அப்பாவி மக்கள். போராளிகளிடமிருந்து தப்பித்து இலங்கை ராணுவத்திடம் சரணடந்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவர்கள். 


முள்ளிவாய்க்கால் வன்னி மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமம். மலை, மகுடு என எவ்வித முரண்பாடுகளும் இல்லாத சமவெளிப் பிரதேசம். போர்க்காலங்களில் எதிரிகளின் தாக்குதலிலிருந்து பதுங்கி தப்பிக்க முடியாதபடி நிலம் வெட்டவெளியாக இருந்தது. தங்கள் உயிருக்கு பயந்து மக்கள் தஞ்சமடைந்திருந்த இந்த இடத்தை No Fire Zone ஆக அறிவிக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தியது அகில உலக செஞ்சிலுவை சங்கம். 

அதுவரை நடந்த போரில் காயமுற்றிருந்த போராளிகள் மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டிருந்த தாற்காலிக மருத்துவமனையும் அங்குதான் இருந்தது. இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த போரில் காயமுற்ற பல அப்பாவி மக்களும் இந்த மருத்துவமனையில்தான் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆகவேதான் செஞ்சிலுவை சங்கம் மட்டுமல்லாமல் ஐநா மனித உரிமைகள் குழுவின் தலைவரும் இந்த பகுதியை பாதுகாப்பு வளையமாக அறிவிக்க இலங்கை அரசை வலியுறுத்தினர். 

ஆனால் இலங்கை அரசு செவிமடுக்கவில்லை. அவர்களுக்கு இந்த சலுகையைப் பயன்படுத்தி கூட்டத்தோடு கூட்டமாக போராளிகள் அமைப்பைச் சார்ந்த தலைவர்களும் தப்பித்துக்கொள்வார்கள் என்ற அச்சம் இருந்தது. போராளிகளுக்கோ இந்த மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி இராணுவத்தினரிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம். 

இருப்பினும் ஐநாவின் தொடர் வற்புறுத்தலுக்கு பணிந்து முள்ளிவாய்க்காலில் மருத்துவமனை அமைந்திருந்த பகுதியை No Fire Zoneஆக அறிவித்தது இலங்கை அரசு. இதற்கு தங்களுடைய தொடர் வற்புறுத்தலும் ஒரு காரணம் என்று மார்தட்டிக்கொண்டது இந்திய அரசு.

ஆனால் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என்பதுபோல் பாதுகாப்பு வளையம் என்று அறிவித்த அதே இடத்தை கண்மூடித்தனமாக ஆகாயம், தரை, கடல் என அனைத்து திசைகளிலிருந்தும் தாக்கியது இலங்கை இராணுவம். எவ்வித பாதுகாப்பும் இன்றி நிர்க்கதியாய் நின்ற அப்பாவி மக்களில் சுமார் எண்பதாயிரம் பலியாயினர். எண்ணற்றோர் இருந்த இடம் தெரியவில்லை....

இதற்கு தங்களுடைய உத்தரவை இராணுவம் மதிக்காததுதான் முக்கிய காரணம் என்று கூறி அப்போதைய இராணுவ தலைவர் பொன்சேகாவை போர்க்குற்றத்திற்கு ஆளாக்கி தப்பித்தது இலங்கை அரசு.

ஆனால் அதிக அளவிலான சிவிலியன் சாவுக்கு  அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்திய போராளிகள்தான் காரணம் என்றது இலங்கை இராணுவம். 

முள்ளிவாய்க்காலை ஒட்டியிருந்த கடற்பகுதியில் இவ்விருதரப்பினரிடமிருந்து தப்பி வரும் மக்களை  காப்பாற்றி அழைத்துச் செல்ல செஞ்சிலுவை அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்க கப்பல் ஒன்று காத்திருந்தது எனவும் ஆனால் அதை நோக்கி சென்ற மக்களை ஒரு புறம் போராளிகளும் மறுபுறம் இராணுவமும் சுட்டதால்தான் இந்த அளவுக்கு மனித உயிர்கள் பலியாயின என்றன ஊடகங்கள்.

எது உண்மையோ, பொறியில் சிக்கிய எலிகளாய் அப்பாவி மக்கள் இவர்களுடைய ஈவு இருக்கமற்ற தாக்குதல்களுக்கு பலியானதென்னவோ உண்மை.

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது ஏற்பட்ட சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்கள் நாலாபுறம் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொலை, ஜாலியன்வாலபாத்தில் குழுமியிருந்த கூட்டத்தை எவ்வித முன்னறிவுப்பும் இன்றி கொன்று குவிப்பு என்று இதுபோன்ற பல படுகொலைகளுக்கு காரணமாயிருந்த இங்கிலாந்தைச் சார்ந்த பிரதமர்தான் இன்று முள்ளிவாய்க்கால் கொலைக்கு பகிரங்க விசாரணை வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். இதை சுட்டிக்காட்டித்தானோ என்னவோ கண்ணாடி வீட்டிலிருந்துக்கொண்டு கல்லெறிகிறார் என்கிறார் ராஜபக்‌ஷே.

ஆனால் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நடைபெற்ற மிகப் பெரிய மக்கள் படுகொலை நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் இந்த முள்ளிவாய்க்கால் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் இது அனைத்து உலக மக்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

அத்தகைய தாக்குதலுக்குள்ளாகி பலியான அப்பாவி மக்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்ப நினைத்ததில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் இதை எழுப்பியவர்கள் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு செயல்பட்டிருந்தால் இன்று அரசின் எதிர் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் இருந்திருக்கலாம்.  

**********





27 கருத்துகள்:

  1. அய்யா,

    கட்டுனது தப்புனு சொல்லுறிங்களா,இல்லை இடிச்சது தப்புனு சொல்லுறிங்களா?

    ஒன்னியுமே பிரியலை அவ்வ்!

    பதிலளிநீக்கு
  2. இதைப் பார்க்கும்போது தேசியக்கவி பாரதியாரின்

    ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,
    வஞ்சனை சொல்வாரடீ! - கிளியே!
    வாய்ச் சொல்லில் வீரரடி.’
    என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

    ஒன்று மட்டும் நிச்சயம் உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கவேண்டும் தப்பு செய்தால் தண்டனை பெறவேண்டும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

    பதிலளிநீக்கு

  3. வவ்வால் said...
    அய்யா,

    கட்டுனது தப்புனு சொல்லுறிங்களா,இல்லை இடிச்சது தப்புனு சொல்லுறிங்களா?

    ஒன்னியுமே பிரியலை அவ்வ்!//

    கட்டுனது தப்பில்லை... அதே சமயம் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் கட்டியது தவறுதானே?

    இதைத்தான் கடைசி பாராவில் சொல்லியுள்ளேன். மீண்டும் படியுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. அய்யா,

    //கட்டுனது தப்பில்லை... அதே சமயம் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் கட்டியது தவறுதானே?
    //

    அப்போ இடிச்சது சரினு சொல்லுறிங்க ,சரிதானே!

    எனக்கு ஒன்னுப்புரியலை, இந்த நினைவிடத்தை எங்கோ செஞ்சு , ஒரே ராத்தியில யாரும் கொண்டு வந்து நட்டு வச்சிட்டு போகலை, ரெண்டு வருடத்துக்கு மேல ஆமைவேகத்தில தான் கட்டினாங்க,அப்படி இருக்கும் போது கட்டிக்கிட்டு இருக்கும் போதே நெடுஞ்சாலை இடம்னு சொல்லி நிறுத்தி இருக்கலாமே?

    ஏன்னா அரசு இடத்தில அத்து மீறிக்கட்டினா அதை இடிக்க என சில புர்சீஜர்ஸ் இருக்கு, அதுப்படி பின்ப்பற்றி இருந்தால் ,இடிக்க நீதிமன்றத்தில் தடையாணை வாங்க முடியும். அதற்கான கால அவகாசம் ஏன் கொடுக்கப்படலைனு ஒரு கேள்வி யாருக்குமே எழமாட்டேங்குது, கிராம பஞ்சாயத்துல சொல்லுறாப்போல நீ திட்டின,அவன் அடிச்சான் ரெண்டுக்கும் சரியாப்போச்சுனு தீர்ப்பு சொல்லுறாப்போல இருக்கு அவ்வ்!

    ஊரெல்லாம் ஏகப்பட்ட ஆக்ரமிப்புகள் இருக்கு அதெல்லாம் நீக்கிட்டாங்கலானு தெரியலை :-))

    பதிலளிநீக்கு
  5. the last paragraph is not based upon
    adequate information.
    the sponsors have applied for renewal of the lease-deed in appropriate time. but it was not renewed by the authorities for reasons known only to them
    kindly check it so that we can
    understand the real reason

    பதிலளிநீக்கு
  6. பாராளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, எல்லாவற்றிலும் அரசியல். தமிழ்நாட்டில் யாரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்து தேர்தலில் ஓட்டு போடுவதில்லை. திமுக. அல்லது அதிமுக என்றுதான் மாற்றி மாற்றி வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள். .முள்ளி வாய்க்கால் முற்றம் திறக்கப்பட்டதிலும், அது இடிக்கப்பட்டதிலும் முழுக்க முழுக்க அரசியல். இதனால் இங்குள்ள தமிழர்களுக்கோ அல்லது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கோ ஒரு பயனும் கிடையாது.



    பதிலளிநீக்கு
  7. //the sponsors have applied for renewal of the lease-deed in appropriate time. but it was not renewed by the authorities for reasons known only to them
    kindly check it so that we can
    understand the real reason//

    சிவஞானம்ஜி சொன்னது போல,போனக்கலைஞர் ஆட்சியில் ஏதோ அனுமதி கொடுத்ததாக சொல்லிக்கிட்டு இருக்காங்க,அது லீஸ் ஆ இல்லை நில ஒதுக்கீட்டு ஆணையானு தெரியலை, அதான் நான் சுத்தி வலைச்சி கேட்டிக்கிட்டு இருக்கேன்.

    சரி ஏதோ அனுமதிக்கொடுத்திருக்கார் ஏன் அதை ரொம்ப குறுகிய காலத்திற்கு கொடுத்து இப்படி மாட்டிவிட்டார்னு இப்போ இன்னொரு கேள்வியும் வருது அவ்வ்!

    இந்த இடிப்பு முழுக்க "சில தனிப்பட்ட காரணங்களால்' தான், அரசு இடத்தில கட்டினது,இடிச்சதுலாம் வெறும் கதை,அதை வச்சு ஜோசப் அவர்களும் எழுதி இருப்பதாலேயே சந்தேகம் கேட்டேன் ,அஃதே!

    பதிலளிநீக்கு
  8. முள்ளி வாய்க்கால் கட்டபட்டது இனவாத அரசியல் செய்து இலாபம் பார்க்க.
    //முள்ளி வாய்க்கால் முற்றம் திறக்கப்பட்டதிலும் அது இடிக்கப்பட்டதிலும் முழுக்க முழுக்க அரசியல். இதனால் இங்குள்ள தமிழர்களுக்கோ அல்லது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கோ ஒரு பயனும் கிடையாது.//
    தமிழ் இளங்கோ அவர்களின் கருத்து முழுதான உண்மை.

    பதிலளிநீக்கு
  9. //இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நடைபெற்ற மிகப் பெரிய மக்கள் படுகொலை நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் இந்த முள்ளிவாய்க்கால் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.//
    இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு?
    பிரித்தானியா அமெரிக்காவுடன் சேர்ந்து ஈராக்கில் நடத்திய யுத்தத்தின் போது, ஈராக்-ஈரான் யுத்தத்தின்போது,சதாம் உசேன் குர்தீஷ் தீவிரவாத இயக்கத்தை அழித்த போது கொல்லபட்ட பொது மக்களைவிட முள்ளிவாய்க்கால் யுத்தத்ததில் கொல்லபட்டவர்கள் அதிகமென்கிறீர்களா?

    பதிலளிநீக்கு

  10. siva gnanamji(#18100882083107547329) said...
    the last paragraph is not based upon
    adequate information.
    the sponsors have applied for renewal of the lease-deed in appropriate time. but it was not renewed by the authorities for reasons known only to them
    kindly check it so that we can understand the real reason//

    வாங்க ஜி!

    நீங்க சொன்னது உண்மைதான். ஆனால் பூங்கா அமைந்துள்ள இடத்திற்கு வழங்கப்பட்டிருந்த லீஸ் காலத்தை மேலும் நீட்டிக்க முடியாது என்று ஏற்கனவே சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாம். மேலும் நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த சுற்றுச் சுவரை அகற்றுங்கள் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததாம். ஆனால் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டுவதும் அதை அகற்றுங்கள் என்று அரசு எத்தனை நோட்டீஸ் அனுப்பினாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் நம் நாட்டில் சகஜம்தானே. நான் வசிக்கும் ஆவடியிலுள்ள CTH என அழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை NH 205 அது திட்டமிடப்பட்ட காலத்தில் நூறடி அகலமுடையதாக இருந்ததாம். ஆனால் இப்போது பல இடங்களிலும் சுமார் இருபதிலிருந்து முப்பதடி அகலமே உள்ளதாம். சுமார் பத்தாண்டு காலம் உறக்கத்திலிருந்த நெடுஞ்சாலை துறை கடந்த மாதம் ப்ரொக்ளைன் எந்திரங்களை கொண்டு வந்து ஏறக்குறைய இருநூறு கட்டிடங்களை இடித்து தள்ளியது. யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது அந்த பகுதியே அணுகுண்டு வீசப் பட்ட இடம்போல் தெரிகிறது. ஆகவே பழ.நெடுமாறனுடைய டிரஸ்ட் செய்த ஆக்கிரமிப்பிலும் வியப்பில்லை, அதை சில பல காரணங்களுக்காக அரசு இடித்துத் தள்ளியதிலும் வியப்பில்லை. என் கேள்வி இதுதான். ஒரு நல்ல செயலில் ஈடுபடும் ஒரு அமைப்பு எதற்கு ஆக்கிரமித்த நிலத்தில் அதை கட்ட வேண்டும் என்பதுதான். பூங்கா இருக்கும் இடம் மட்டும்தான் லீஸில் உள்ளதாம். சுற்றுச் சுவரின் பெரும்பகுதி உண்மையிலேயே ஆக்கிரமிப்பு நிலத்தில்தான் உள்ளதாம். அதை உறுதிசெய்துக்கொண்டுதான் என்னுடைய பதிவை எழுதினேன்.

    பதிலளிநீக்கு

  11. தி.தமிழ் இளங்கோ said...
    பாராளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, எல்லாவற்றிலும் அரசியல். தமிழ்நாட்டில் யாரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்து தேர்தலில் ஓட்டு போடுவதில்லை. திமுக. அல்லது அதிமுக என்றுதான் மாற்றி மாற்றி வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள். .முள்ளி வாய்க்கால் முற்றம் திறக்கப்பட்டதிலும், அது இடிக்கப்பட்டதிலும் முழுக்க முழுக்க அரசியல். இதனால் இங்குள்ள தமிழர்களுக்கோ அல்லது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கோ ஒரு பயனும் கிடையாது.//

    சரியாக சொன்னீர்கள். சாமான்யனுக்கு இந்த விஷய்த்தைப் பற்றியெல்லாம் கவலைப்பட நேரமில்லை. அவனுக்கு நாள்தோரும் விஷம் போல் ஏறிவரும் உணவுப் பொருட்களின் விலை இறங்காதா என்ற கவலையே போதும்.

    பதிலளிநீக்கு

  12. வேகநரி said...
    //இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நடைபெற்ற மிகப் பெரிய மக்கள் படுகொலை நடந்ததாகக் கூறப்படும் இடம்தான் இந்த முள்ளிவாய்க்கால் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.//
    இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு?
    பிரித்தானியா அமெரிக்காவுடன் சேர்ந்து ஈராக்கில் நடத்திய யுத்தத்தின் போது, ஈராக்-ஈரான் யுத்தத்தின்போது,சதாம் உசேன் குர்தீஷ் தீவிரவாத இயக்கத்தை அழித்த போது கொல்லபட்ட பொது மக்களைவிட முள்ளிவாய்க்கால் யுத்தத்ததில் கொல்லபட்டவர்கள் அதிகமென்கிறீர்களா?//

    நீங்க சரியாத்தான் பேர் வச்சிக்கிட்டிருக்கீங்க. எதிலும் அவசரம் :/)) நான் சொன்னது 'ஒரே இடத்தில்', 'ஒரே தாக்குதலில்' மரித்தது இதுதான் அதிகம் என்று. இதையும் கூட நான் சொல்லவில்லை. ஊடகங்கள் அதுவும் இலங்கை ஊடகங்கள்தான் கூறியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் சிறிய இடத்தில் ஒரே சமயத்தில் லட்சக் கணக்கில் குவிந்திருந்ததுதான். ஆகவேதான் இத்தனை உயிரிழப்பு. மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனையும் தாக்குதலுக்கு இரையாகி மூடப்பட்டுவிட்டதால் சரியான மருத்துவ வசதியும் இல்லாமல் போனதாம். உடனடி சிகிச்சை கிடைத்திருந்தால் உயிர் பிழைத்திருக்கக் கூடியவர்களும் மரித்ததால்தான் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துப்போனதாம். அதனால்தானே இணையத்திலேயே இதற்கு Mullivaikal Massacre என்று பெயரிட்டுள்ளார்கள்!!

    பதிலளிநீக்கு

  13. வே.நடனசபாபதி said...


    ஒன்று மட்டும் நிச்சயம் உப்பு தின்றால் தண்ணீர் குடிக்கவேண்டும் தப்பு செய்தால் தண்டனை பெறவேண்டும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. //

    சரியான சொன்னீர்கள் சார். இதை பலரும் மறந்துவிடுவதால்தான் இன்றும் இத்தகைய அக்கிரமங்கள் தொடர்கின்றன.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா2:03 PM

    //இந்திய சுதந்திர போராட்டத்தின்போது ஏற்பட்ட சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட இந்திய சிப்பாய்கள் நாலாபுறம் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக்கொலை, ஜாலியன்வாலபாத்தில் குழுமியிருந்த கூட்டத்தை எவ்வித முன்னறிவுப்பும் இன்றி கொன்று குவிப்பு என்று இதுபோன்ற பல படுகொலைகளுக்கு காரணமாயிருந்த இங்கிலாந்தைச் சார்ந்த பிரதமர்தான் இன்று முள்ளிவாய்க்கால் கொலைக்கு பகிரங்க விசாரணை வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். இதை சுட்டிக்காட்டித்தானோ என்னவோ கண்ணாடி வீட்டிலிருந்துக்கொண்டு கல்லெறிகிறார் என்கிறார் ராஜபக்‌ஷே. //


    அவர்களின் முன்னோர்கள் நியாயமாக நடக்காமல் தவறு செய்தார்கள் என்பதுக்காக இப்போ இருக்கிறவன் கேக்க கூடாதா ????

    பதிலளிநீக்கு
  15. 3 PM
    siva gnanamji(#18100882083107547329) said...
    //maji kaNavar...//objection my Lord
    pls correct it//

    இன்னும் மாஜி ஆகலையா? நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். கரெக்ட் பண்ணிடறேன் :/)

    பதிலளிநீக்கு
  16. டிபிஆர்.ஜோசப் said...
    வவ்வால் said...
    //the sponsors have applied for renewal of the lease-deed in appropriate time. but it was not renewed by the authorities for reasons known only to them
    kindly check it so that we can
    understand the real reason//

    சிவஞானம்ஜி சொன்னது போல,போனக்கலைஞர் ஆட்சியில் ஏதோ அனுமதி கொடுத்ததாக சொல்லிக்கிட்டு இருக்காங்க,அது லீஸ் ஆ இல்லை நில ஒதுக்கீட்டு ஆணையானு தெரியலை, அதான் நான் சுத்தி வலைச்சி கேட்டிக்கிட்டு இருக்கேன்.

    சரி ஏதோ அனுமதிக்கொடுத்திருக்கார் ஏன் அதை ரொம்ப குறுகிய காலத்திற்கு கொடுத்து இப்படி மாட்டிவிட்டார்னு இப்போ இன்னொரு கேள்வியும் வருது அவ்வ்!

    இந்த இடிப்பு முழுக்க "சில தனிப்பட்ட காரணங்களால்' தான், அரசு இடத்தில கட்டினது,இடிச்சதுலாம் வெறும் கதை,அதை வச்சு ஜோசப் அவர்களும் எழுதி இருப்பதாலேயே சந்தேகம் கேட்டேன் ,அஃதே!//

    இந்த நினைவுச் சின்னத்தின் மதில் சுவரும் அதையொட்டி இருந்த பூங்காவும் எதற்காக இடித்துத் தள்ளப்பட்டன என்பதற்கு பல காரணங்களை கூறலாம். அதில் சில அரசியல் காரணங்களும், தனிநபர் மீதான வெறுப்பும் உள்ளன.

    முதலில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ள நிலத்தின் ஒரு பகுதி உடன் பிறவா சகோதரியின் கணவர் நடராஜனுடையது. ஆகவே அம்மையார் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்தே அங்கு பிரச்சினைதான். கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே உள்ளூர் பஞ்சாயத்து ஆட்களின் இடையூறும் இருந்ததாம். இத்தகைய சிரமங்களை எல்லாம் மீறி அது கட்டி முடிக்கப்பட்டு துவக்க விழாவை நடத்த உள்ளூர் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டபோது அதை அவர்கள் கண்டுக்கொள்ளவே இல்லையாம். அதன் பிறகு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றார்களாம். அதன் பிறகும் காவல்துறையின் இடையூறு விடவில்லை. துவக்க விழா நள்ளிரவு வரை செல்ல காவல்துறை வந்து ஒலிபெருக்கிகளையெல்லாம் கழற்றி எடுத்துக்கொண்டு சென்றதுடன் நில்லாமல் தங்களுடைய உத்தரவை மீறியதாக வழக்கும் பதிவு செய்தனராம். இதன் க்ளைமாக்ஸ்தான் நெடுஞ்சாலைத் துறையினரின் இடிப்பு நடைபெற்றதாம்.

    பதிலளிநீக்கு
  17. அவர்களின் முன்னோர்கள் நியாயமாக நடக்காமல் தவறு செய்தார்கள் என்பதுக்காக இப்போ இருக்கிறவன் கேக்க கூடாதா ????//

    தாராளமா கேக்கலாம். ஆனா அந்த கேள்விக்கு உடனே நீ ரொம்ப ஒழுங்கான்னு கேள்வி வரும். இந்தியாவும் இந்த நிலையில்தான் உள்ளது. காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாதிருக்கும் வரையிலும் நாமும் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைத்தால் அவமானம்தான் மிஞ்சும். நார்வே, சுவிஸ், பெல்ஜியம் போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர இலங்கையை குற்றம்சாட்ட வேறெந்த நாட்டுக்கும் அருகதை இல்லை என்பதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  18. இங்கிலாந்து, இங்கிலாந்தைச் சார்ந்த பிரதமர் என்றால் அவரை ஒரு கோமகனா பார்க்குமளவுக்கு நம்மவங்களில் சிலருக்கு இங்கிலாந்தைச் சார்ந்தவங்க மீது அளவுக்கதிகமான கவர்ச்சி இருக்கு தாங்க.
    அவர்கள் எங்களை ஆண்டதாலும்,வெள்ளை நிறம் காரணமாவும் இருக்கலாம்.
    வெள்ளையனே வெளியேறு என்று கேட்ட நாட்டிலே சிலரது நிலமை இப்படியிருக்கும் போது, வெள்ளையனை வெளியே போ என்று சொல்லாத, வெள்ளையன் தானா விட்டிட்டு போன நாட்டின் இலங்கை மக்கள் இங்கிலாந்தைச் சார்ந்தவர்களை கோமகனாக உயர்வாக பார்ப்பது வியப்பில்லை.

    பதிலளிநீக்கு
  19. வேகநரி said...
    இங்கிலாந்து, இங்கிலாந்தைச் சார்ந்த பிரதமர் என்றால் அவரை ஒரு கோமகனா பார்க்குமளவுக்கு நம்மவங்களில் சிலருக்கு இங்கிலாந்தைச் சார்ந்தவங்க மீது அளவுக்கதிகமான கவர்ச்சி இருக்கு தாங்க.
    அவர்கள் எங்களை ஆண்டதாலும்,வெள்ளை நிறம் காரணமாவும் இருக்கலாம்.
    வெள்ளையனே வெளியேறு என்று கேட்ட நாட்டிலே சிலரது நிலமை இப்படியிருக்கும் போது, வெள்ளையனை வெளியே போ என்று சொல்லாத, வெள்ளையன் தானா விட்டிட்டு போன நாட்டின் இலங்கை மக்கள் இங்கிலாந்தைச் சார்ந்தவர்களை கோமகனாக உயர்வாக பார்ப்பது வியப்பில்லை.//

    இங்கிலாந்து நாட்டிற்கு தங்களுக்கென்று முடிவெடுக்கும் திறன் இருந்ததில்லை. அமெரிக்கா காட்டும் வழியில் செல்வதுதான் அவர்களுடைய கொள்கையாக இருந்து வந்துள்ளது. தங்களுடைய துயரங்களை இத்தகையோரிடம் முறையிடுவதன் மூலம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு எவ்வித நியாயமும் கிடைக்கப் போவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்துக்கொள்வது நல்லது. சீனா போன்ற நாடுகளும் அங்கு தங்களுடைய வர்த்தக நிறுவனங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதில்தான் குறியாய் இருப்பார்களே தவிர அங்குள்ள மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்க என்ன வழி என்று பார்க்க மாட்டார்கள். ஆனால் இந்தியா அப்படியல்ல. அங்குள்ள தமிழர்களுக்கு என்றைக்காவது விடிவு காலம் பிறக்கும் என்றால் அது இந்தியா போன்ற நாட்டால்தான் பெற்றுத் தர முடியும். இந்த முயற்சியில் இந்தியா இறங்கியபோதெல்லாம் அந்த முயற்சிகளையெல்லாம் முறியடித்தது அங்குள்ள மக்கள் பெருமளவில் நம்பியிருந்த தீவிரவாதம் இயக்கம்தான். அது இப்போது இல்லை என்றாகிவிட்டது. மீண்டும் அப்படியொரு இயக்கம் தலைதூக்கிவிடக் கூடாது என்பதால்தான் நாட்டின் வட மாகாணங்களில் சிங்களர்களை குடியமர்த்தும் முயற்சியில் சிங்கள அரசு இறங்கியுள்ளது. தங்கள் வசமுள்ள பாலஸ்தீனத்தில் இஸ்ராயேலரை குடியமர்த்தும் இஸ்ராயேல் அரசின் செயல்பாட்டைப் போன்றதுதான் இதுவும். பொறுத்தார் பூமியாள்வார். இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வில் நிச்சயம் ஒளி பிறக்கும். பொறுமைதான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. ///வெள்ளையனே வெளியேறு என்று கேட்ட நாட்டிலே சிலரது நிலமை இப்படியிருக்கும் போது, வெள்ளையனை வெளியே போ என்று சொல்லாத, வெள்ளையன் தானா விட்டிட்டு போன நாட்டின் இலங்கை மக்கள் இங்கிலாந்தைச் சார்ந்தவர்களை கோமகனாக உயர்வாக பார்ப்பது வியப்பில்லை.///


    'ஆந்தையைப் பழித்ததாம் கூகை'. வெள்ளையனே வெளியேறு என்று போராடி சுதந்திரம் பெற்ற பின்னர் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் காலடியில் ஆட்சியைப் போட்டு விட்டு, அம்மா தாயே, சொக்கத்தங்கம், எங்களை ஆழ வந்த மருமகளே மகராசி, நீ மட்டுமல்ல உன் வயிற்றில் பிறந்த திருவயிற்றின் கனியும், எங்களை ஆளப் பிறந்தவரே என்று கூறும் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தளவு வாய்க்கொழுப்பு கூடாது, ஏனென்றால் இலங்கையில் ஒரு வெள்ளையரை போர்டு கவுன்சிலராக கூட தெரிவு செய்ய மாட்டார்கள். வெள்ளைத் தோலாசை இந்தியர்களிடம் குறிப்பாக தமிழ்நாட்டு தமிழர்களிடம் உள்ள அளவுக்கு, இலங்கையர்களிடம் அதாவது, சிங்களவர்களிடமோ அல்லது ஈழத் தமிழர்களிடமோ கிடையாது.

    வேகநரி அவர்களின் ராஜபக்ச பாசம், இப்படி சிந்திக்காமல் பேச வைக்கிறது போல் தெரிகிறது. :)

    பதிலளிநீக்கு
  21. கைது செய்யப்போகின்றார்கள் என்றவுடன் முன்ஜாமீன் கிடைக்கும் வரையிலும் ஓடி ஒளிந்து திரிந்த எமன் (எம். நடராஜனை இப்படித்தான் செல்லமாக அழைப்பார்களாம்) குறித்த விசயங்களை படித்த போது மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  22. வியாசர்வாள்,

    காணாமல் போயிட்டீரேனு பார்த்தேன் வந்துட்டீரா,இனிமே நல்லா காமெடியா போவும் அவ்வ்!

    # உள்நாட்டு போர் உயிர்ப்பிழைக்க ஓடினோம்னு எப்படிய்யா ஜெர்மன்,அமெரிக்கா,கனடானு வெள்ளைக்கார நாடாப்பார்த்து அந்த அவசரத்துலவும் ஓட முடிஞ்சது, பாஸ்போர்ட்,வீசா, ஃபிளைட் டிக்கெட்லாம் எப்படி கிடைச்சிருக்கும் அவ்வ் :-))

    வெள்ளைத்தோல் கொண்ட நாட்டுக்கு தான் போகணும்னு மோகம் கொண்டு உயிர் ஆபத்தான நிலையிலும் போனவங்களாம் ஆட்டாமை பண்ரக்கூத்தை என்னானு சொல்ல அவ்வ்.

    அது சரி, அடேல் ஆண்டன்பாலசிங்கம் அம்மையார் "பச்சை தமிழ்"பெண் தானே அவ்வ்.

    வருங்காலத்தில அவங்க தான் உங்க தலைவியா வந்தால் என்ன செய்வதா உத்தேசம் ?

    பதிலளிநீக்கு
  23. வியாசர்வாள்,

    அமெரிக்கா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து,கனடாவில் எல்லாம் இலங்கை தமிழர்கள் தேர்தலில் போட்டியிடும் போது ,இங்கே எப்படி போட்டியிடலாம்னு வெள்ளைக்காரன் சொன்னால் ,நீங்க அமைதியா ஏத்துப்பிங்களா?

    உலக நாடுகளில் எல்லாமே அந்த நாட்டில பிறந்து குடியுரிமை பெற்றுவிட்டால் ,அனைத்து பதவிக்கும் வரும் தகுதி கொடுத்திடுவாங்க, மற்றபடி ஓட்டு போடுறதும்,போடாததும் மக்களின் விருப்பம், ஆனால் பதவிக்கு வரவே கூடாதுனு யாரும் தடுக்க முடியாது, கொஞ்சம் அரசியல் அறிவையும் வளர்த்துக்கிட்டு பொங்கவும்.

    பதிலளிநீக்கு
  24. வியாசன் அவர்களே,
    இந்தியர்கள் ஒரு போதும் இலங்கையில் உள்ள உங்களை போல் வெள்ளைக்காரர்களுக்கு நாம் துதிபாடுவதில்லை. எங்களிடம்வந்தவர் எந்தமதமோ எந்த இனமோ அவர் எங்களவர் தான். உங்களை மாதிரி பிற மக்களை வெறுக்கும் ஒரு அநாகரியமான வாழ்க்கை இந்தியர்கள் ஒரு போதும் வாழவில்லை. அந்நியன் வெள்ளைகாரனிடம் டேவிட் கெமரூடமும் நாம் ஒருபோதும் கையேந்தியதில்லை.

    பதிலளிநீக்கு
  25. ஜோதிஜி திருப்பூர் said...
    கைது செய்யப்போகின்றார்கள் என்றவுடன் முன்ஜாமீன் கிடைக்கும் வரையிலும் ஓடி ஒளிந்து திரிந்த எமன் (எம். நடராஜனை இப்படித்தான் செல்லமாக அழைப்பார்களாம்) குறித்த விசயங்களை படித்த போது மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.//

    MN என்பதைத்தான் எமன் என்று ஆக்கிவிட்டார்கள். அவர் இடத்தில் நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் ஓடி ஒளிந்திருப்பேன். வளர்ப்பு மகனையே படாதபாடு படுத்தியவரிடமிருந்து ஓடி ஒளிவதுதான் புத்திசாலித்தனம்.

    பதிலளிநீக்கு
  26. viyasan said...
    வேகநரி அவர்களின் ராஜபக்ச பாசம் இப்படி சிந்திக்காமல் பேச வைக்கிறது போல் தெரிகிறது. :)

    பிரபாகரன்,ஒசாமா பின் லாடன் என்ற வெளிநாட்டவர்கள் மீதே எனக்கு எந்த பாசமும் கிடையாது. சீமான்,பாமக ராமதாஸ் என்ற உள்நாட்டவர் மீதே எனக்கு எந்த பாசமும் கிடையாது. பாசம் என்பது எந்த அடிப்படையில் இவர்கள் மீது உருவாக வேண்டும் என்று நீங்க எதிர்பார்க்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு