18 அக்டோபர் 2013

நரேந்திர மோடியை அடுத்த பிரதமராக தெரிவு செய்யலாமா?

நாட்டின் அடுத்த பிரதமராக நான் வந்தால்...... என்று பல வாக்குறுதிகளை, அவற்றில் சில சிறுபிள்ளைத்தனமானதும் கூட, அள்ளி வீசிக்கொண்டே நாட்டை வலம் வருகிறார் நமோ என்கிற நரேந்திர மோடி.

அவர்தான் அடுத்த பிரதமராக வரவேண்டும் அவரால் மட்டுமே நாட்டை பிரகாசமான பொருளாதார பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்றெல்லாம் நெட்டிசன்கள் எனப்படும் பல படித்த இளைஞர்கள் கருதுகின்றனர். இப்போது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் இத்தகைய கோஷங்களை நாள்தோறும் முழங்கிவரும் இவர்கள் அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தால் நமோ பிரதமராவதில் எவ்வித ஐயமும் இல்லை.

சரி, என்னைப் போன்ற பெரிசுகள்,  குறிப்பாக நான்; அதாவது ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஒருவன்,  பொருளாதார வளர்ச்சி என்றால் என்ன என்பதை ஓரளவுக்கு புரிந்து வைத்திருக்கும் ஒருவன், ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி அதனுடைய பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிப்பது  மட்டும் இல்லை என்று பல ஆண்டுகளாக எண்ணிக்கொண்டிருக்கும் ஒருவன், நமோ அடுத்த பிரதமராக வரவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று ஒருசில தேவைகளை பட்டியலிட்டு வைத்திருக்கிறோம். 

1. கோத்ராவில் நடைபெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களிடத்தில் நிபந்தனையற்ற - அதாவது பேரளவுக்கு அல்லாமல் - மன்னிப்பு கோரவேண்டும். 

2.வெறுமனே குஜராத் பாணி முன்னேற்றம் என்றோ அல்லது இதுவரை காங்கிரஸ் கடைபிடித்துவந்த பொருளாதார கொள்கைகளை குறை கூறியோ வலம் வந்துக்கொண்டிருக்காமல் நான் பிரதமரானால் இன்னின்னவற்றை செய்வேன் என்று தெளிவாக பட்டியலிடவேண்டும்.

3.தன்னுடைய கட்சிக்குள் இருப்பவர்களிடமே ஒத்துப்போக முடியாத ஒருவரால், தன்னுடைய கட்சி தலைவர்களிடமிருந்தே முழு நம்பிக்கையை பெற முடியாத ஒருவரால் எப்படி கட்சிக்கு வெளியில் உள்ளவர்களுடைய - எதிர் கட்சியினரை விட்டுவிடுவோம் -  நம்பிக்கையை  பெற முடியும் என்று குரல் எழுப்புவோருக்கு என்னால் முடியும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

4.நமோ நாட்டின் பிரதமராக விரும்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்ட பிறகு எதற்காக இன்னும் குஜராத் முதல்வர் பதவியிலிருந்து விலகாமல் இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நாட்டின் பிரதமாரவாதில் அவருக்கு முழு நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் பலரும் கூறுகின்றனர். ஆகவே அவர்களுடைய எண்ணம் தவறு என்பதை நிரூபிக்க அவர் உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். 

5.உலக பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களில் அவர் இதுவரை காட்டி வந்துள்ள ஞானம் அல்லது அறிவு நகைப்புக்குரியதாகவே உள்ளது. குறிப்பாக நம்முடைய அண்டை நாட்டினருக்கு எதிராக அவர் காட்டி வரும் துவேஷ போக்கை பிரதமாரன பின்பும் தொடர்ந்து கடைபிடிப்பாரேயானால் அது நாட்டை போருக்கு தள்ளிவிடும் என்று கூறி வருவோருக்கு அவர் தகுந்த பதில் கூற வேண்டும். 

6.மதச்சார்பின்மை என்பது நம்முடைய நாட்டின் ஆணி வேர். வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒரு நாட்டை வளர்ந்த நாடு என்று உலகம் ஏற்றுக்கொள்ளாது. நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவரும் அதை முழுமையாக அனுபவிக்க மிகவும் தேவைப்படுவது அமைதியான சூழல். அதற்கு மிக அடிப்படையான தேவை நாட்டு மக்களிடையே  சுமூகமான உறவு. அதற்கு தேவை மதநல்லிணக்கம். மத்தியில் ஆட்சியிலுள்ளவர்களால் மட்டுமே அத்தகைய சூழலை உருவாக்க முடியும்.  மதவெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் என்று வர்ணிக்கப்படும் இவரால்  அதை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதும் சிறுபான்மையினரின் கேள்வியாக உள்ளது. முடியும் என்று நமோ உறுதியளிக்க வேண்டும். 

7.ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்று தன்னை பறைசாற்றிக்கொள்ளும் நமோ குஜராத் மாநில லோக் அதாலத் தலைவர் நியமனத்தில் தலையிட்டு பிடிவாதம் பிடிப்பது ஏன்? எதை மறைக்க இந்த முயற்சி? மடியில் கணம் இருந்தால்தானே இந்த அச்சம் வரும்? யார் வேண்டுமானால் வந்துக்கொள்ளட்டும் எனக்கு அதைப் பற்றி அச்சம் ஏதும் இல்லை என்ற நிலையை அவர் அறிவிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் நமோ செய்தால் என்னுடைய ஓட்டு அவருக்கே.....!

ஆனால் அதற்காக அவருக்கு எதிராக காங்கிரஸ் முன்னிலைப் படுத்தும் ராகுலுக்கு என் ஓட்டா என்ற கேள்வி எழலாம்.... 

அதற்கு அடுத்த பதிவில் பதில்...

**********

34 கருத்துகள்:

  1. உங்களுடைய அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்...
    அதன் பின்னர்தான் இப்பதிவுக்கும் கருத்திடமுடியும் என்னால்...

    பதிலளிநீக்கு
  2. //என்னைப் போன்ற பெரிசுகள்,//

    இப்பதிவுக்கு எங்களின் (என்னைப் போன்ற பெரிசுகள்,)ஓட்டுகள் உங்களுக்கே!

    R.S.S. அதிகாரத்திற்கு வெளியே இருந்து அவரால் ஆட்சி செய்ய முடியுமா?

    பதிலளிநீக்கு
  3. நமோ நாராயணா! நல்ல கேள்விகள்! அத்வானி அத்வானி என்று ஊதிக் கொண்டு இருந்தார்கள். இப்போது நீங்கள் கூறும் நமோ! அதாங்க நரேந்திர மோடி!

    பதிலளிநீக்கு

  4. ராஜி said...
    நல்ல அலசல்//

    வந்ததுக்கும் கருத்து சொன்னதுக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  5. சாய்ரோஸ் said...
    உங்களுடைய அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்...
    அதன் பின்னர்தான் இப்பதிவுக்கும் கருத்திடமுடியும் என்னால்...//

    சரிங்க. நன்றி :)

    பதிலளிநீக்கு

  6. தருமி said...
    //என்னைப் போன்ற பெரிசுகள்,//

    இப்பதிவுக்கு எங்களின் (என்னைப் போன்ற பெரிசுகள்,)ஓட்டுகள் உங்களுக்கே!

    R.S.S. அதிகாரத்திற்கு வெளியே இருந்து அவரால் ஆட்சி செய்ய முடியுமா?//

    சரியான கேள்வி... இதுக்கும் அவர் முடியும்னு சொல்லணும். முடியுமா?

    பதிலளிநீக்கு

  7. தி.தமிழ் இளங்கோ said...
    நமோ நாராயணா! நல்ல கேள்விகள்! அத்வானி அத்வானி என்று ஊதிக் கொண்டு இருந்தார்கள்.//


    பிஜேபியில் வாஜ்பாயை தவிர வேறெந்த தலைவரும் தன்னை மதச்சார்பற்றவர் என்று நிரூபிக்கவில்லை, அத்வானி உள்பட.


    பதிலளிநீக்கு
  8. விஸ்வரூபம் தேவையற்ற விளம்பரத்தால் வெற்றியடைந்தது. ஊடகங்கள் மோடிக்கும் விளம்பரத்தைத் தந்து பெரிய தலைவரைப்போல பிரமிப்பை ஏற்படுத்த முயல்கின்றன. கண்டுகொள்ளாமல் தவிர்ப்பதே நல்லது.

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் தந்திருக்கும் பட்டியலில் உள்ள தேவைகள் திரு மோடி அவர்களால் நிறைவேற்றமுடியாது என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. Packirisamy N said...
    விஸ்வரூபம் தேவையற்ற விளம்பரத்தால் வெற்றியடைந்தது. ஊடகங்கள் மோடிக்கும் விளம்பரத்தைத் தந்து பெரிய தலைவரைப்போல பிரமிப்பை ஏற்படுத்த முயல்கின்றன. கண்டுகொள்ளாமல் தவிர்ப்பதே நல்லது.//

    நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் நாட்டின் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் வாய்ப்புள்ளதே! இந்த சமயத்தில் நாம் வாய் மூடி மவுனம் காப்பது சரியாகுமா என்ற கரிசனத்தால் (concern) என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  11. வே.நடனசபாபதி said...
    நீங்கள் தந்திருக்கும் பட்டியலில் உள்ள தேவைகள் திரு மோடி அவர்களால் நிறைவேற்றமுடியாது என நம்புகிறேன்.//

    இந்த விருப்பங்கள் என்னைப் போன்ற நடுநிலையாளர்கள் அனைவருக்குமே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

    பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதுபோன்ற நடுநிலைமை அல்ல இது.


    பதிலளிநீக்கு
  12. வே.நடனசபாபதி said...
    நீங்கள் தந்திருக்கும் பட்டியலில் உள்ள தேவைகள் திரு மோடி அவர்களால் நிறைவேற்றமுடியாது என நம்புகிறேன்.//

    இந்த விருப்பங்கள் என்னைப் போன்ற நடுநிலையாளர்கள் அனைவருக்குமே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

    பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதுபோன்ற நடுநிலைமை அல்ல இது.


    பதிலளிநீக்கு
  13. மோடி மட்டும் அல்ல வேறு எந்த தலைவர்களும் இதற்கு பதில் அளிப்பார்களா என்பது சந்தேகமே!மொத்தத்தில் வாக்காளர்கள்தான் ஏமாளிகள் ஆகிறோம்!

    பதிலளிநீக்கு

  14. s suresh said...
    மோடி மட்டும் அல்ல வேறு எந்த தலைவர்களும் இதற்கு பதில் அளிப்பார்களா என்பது சந்தேகமே!மொத்தத்தில் வாக்காளர்கள்தான் ஏமாளிகள் ஆகிறோம்!//

    உண்மைதான். ஆனாலும் இதைப்பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லையே?

    கண்மூடித்தனமாக யாரையோ பழிவாங்க யாரையோ ஆதரிப்பதுபோலல்லவா இருக்கிறது இந்த நமோ ஆதரவு கோஷம்!

    பதிலளிநீக்கு
  15. இதற்கு முன்பு இருந்தவங்கலிடம் இதே கேள்வியை கேட்டிங்களா. மன்மோகன் பொருளாதர மேதை அவர் என்ன செய்தாரு நான் மோடி ஆதரவாளன் இல்லை ஆனா ஒரு வாய்ப்பு கொடுத்தா தப்பில்லை. குடும்பம் கிடையாது நோ சான்ஸ் 4 லூட். உலக பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களில் அவர் இதுவரை காட்டி வந்துள்ள ஞானம்" இதற்கு முன்பு இருந்தவங்களுகெல்லாம் இது இருந்ததா?. அப்படி இருந்து என்ன செஞ்சிட்டாங்க

    பதிலளிநீக்கு
  16. ஓலையூர்
    நீங்க சொன்ன எதையும் நான் மறுக்கவில்லை. ஆனா ஒண்ணே ஒண்ணு ...//குடும்பம் கிடையாது நோ சான்ஸ் 4 லூட்.//

    ஏமாந்துட்டீங்களே .. நம்ம ஊர் மம்மிக்கும் குடும்பமே இல்லைங்றாங்க..! எதுல குறைச்சல்?

    பதிலளிநீக்கு
  17. ஆனாலும் ஜோசப் .. நிச்சயமா என் ஓட்டு காங்கிரசிற்கும் கிடையவே கிடையாது. அப்புறம் யாருக்குப் போட ...?
    49 ‘ஓ’ விற்கா?

    பதிலளிநீக்கு
  18. மோடி வேண்டாம்.... நல்ல முடிவு ...

    …பின் இத்தாலி சோனியாவிற்கு ஓட்டுப் போடவேண்டுமா?

    …அதுக்கு இந்தியர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்ளலாம்.

    …இவ்வளவு தெளிவா இருக்கும் நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும்... வருவீர்களா?

    பதிலளிநீக்கு
  19. ஊடங்ககள் எல்லாம் மோடிக்கு வேலை செய்வதால், அவர் இதைப் பற்றி எல்லாம் கவலைப் படப் போவதில்லை.

    வெகுஜனப் பத்திரிக்கையின் அஜண்டா தெரிந்ததே! அதை அறியாதவர்கள் கீழ் தட்டு மக்கள்.

    உங்களுக்கு பதில் கிடைப்பது கடினம். நல்ல இடுகை; என் தமிழ்மணம்: 5 வோட்டு

    பதிலளிநீக்கு
  20. compering by Ragul,mannu,sony Modi is hundred percentage best best best

    பதிலளிநீக்கு
  21. அரசியல்வாதியின் அதிகபட்ச ஆசை தானே

    பதிலளிநீக்கு
  22. OLAIYUR said...
    இதற்கு முன்பு இருந்தவங்கலிடம் இதே கேள்வியை கேட்டிங்களா. மன்மோகன் பொருளாதர மேதை அவர் என்ன செய்தாரு நான் மோடி ஆதரவாளன் இல்லை ஆனா ஒரு வாய்ப்பு கொடுத்தா தப்பில்லை. குடும்பம் கிடையாது நோ சான்ஸ் 4 லூட். உலக பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களில் அவர் இதுவரை காட்டி வந்துள்ள ஞானம்" இதற்கு முன்பு இருந்தவங்களுகெல்லாம் இது இருந்ததா?. அப்படி இருந்து என்ன செஞ்சிட்டாங்க//

    நீங்க சொன்னது எல்லாமே சரிதான் ஒரே ஒரு விஷயத்த தவிர. அதாவது நமோவுக்கு குடும்பம் கிடையாது, அதனால அவர் லூட் அடிக்க மாட்டார். நம்ம நாட்டுல குடும்பம் இல்லாத இன்னும் ரெண்டு சிஎம் இருக்காங்க. அவங்க ரெண்டு பேர் மேலயும் சொத்துக் குவிப்பு வழக்கு போட்டு ஒருத்தர் நூலிழையில தப்பிச்சிக்கிட்டார். இன்னொருத்தர் நாமளும் தப்பிச்சிருவோம்கற கனவுல இருக்காங்க. ஒருத்தர் நார்த்ல இன்னொருத்தர் சவுத்ல.

    லூட் அடிக்கறது தேவைக்காக இல்லீங்க. அது ஒரு நோய். அது எல்லா அரசியல் மற்றும் ஆன்மீக வாதிகளுக்கு இருக்குன்னாலும் சிலருக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கு.

    அடுத்த பதிவையும் படிச்சிட்டு ஒங்க கருத்த சொல்லியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  23. தருமி said...
    ஓலையூர்
    நீங்க சொன்ன எதையும் நான் மறுக்கவில்லை. ஆனா ஒண்ணே ஒண்ணு ...//குடும்பம் கிடையாது நோ சான்ஸ் 4 லூட்.//

    ஏமாந்துட்டீங்களே .. நம்ம ஊர் மம்மிக்கும் குடும்பமே இல்லைங்றாங்க..! எதுல குறைச்சல்?//

    குடும்பம் இல்லேன்னா என்னங்க? அதான் உடன் பிறப்பு இருக்கே? அது போதாது?

    பதிலளிநீக்கு
  24. தருமி said...
    ஆனாலும் ஜோசப் .. நிச்சயமா என் ஓட்டு காங்கிரசிற்கும் கிடையவே கிடையாது. அப்புறம் யாருக்குப் போட ...?
    49 ‘ஓ’ விற்கா?//

    அதுதான் சமீபத்துல உச்ச நீதிமன்றம் இன்னொரு ஆப்ஷனையும் குடுத்திருக்காங்களே. இவங்க யாரையுமே புடிக்கலன்னு ரிஜிஸ்தர் செஞ்சிட்டா போச்சி. என்னுடைய் அடுத்த பதிவ பாருங்க.

    பதிலளிநீக்கு

  25. ராவணன் said...
    மோடி வேண்டாம்.... நல்ல முடிவு ...

    …பின் இத்தாலி சோனியாவிற்கு ஓட்டுப் போடவேண்டுமா?

    …அதுக்கு இந்தியர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்ளலாம்.

    …இவ்வளவு தெளிவா இருக்கும் நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும்... வருவீர்களா?//

    என்னுடைய அடுத்த பதிவையும் படிச்சிட்டு இப்படி நக்கல் செஞ்சிருக்கலாம். என்ன பண்றது? இப்ப நிறைய பேருக்கு இப்படி அவசர புத்தி இருக்கு. எடுத்தோம் கவுத்தோம் பேசிட்டு அப்புறமா என்னெ மன்னிச்சிருங்கன்னு சொல்றது!

    பதிலளிநீக்கு

  26. நம்பள்கி said...
    ஊடங்ககள் எல்லாம் மோடிக்கு வேலை செய்வதால், அவர் இதைப் பற்றி எல்லாம் கவலைப் படப் போவதில்லை.

    வெகுஜனப் பத்திரிக்கையின் அஜண்டா தெரிந்ததே! அதை அறியாதவர்கள் கீழ் தட்டு மக்கள்.

    உங்களுக்கு பதில் கிடைப்பது கடினம். நல்ல இடுகை; என் தமிழ்மணம்: 5 வோட்டு//

    உங்க ஓட்டுக்கு நன்றி நம்பள்கி.

    ஆனா மீடியா மட்டுமே ஓட்டுச்சாவடிக்கு போனா போறாதே?

    பாமரனுக்கு இதுவெல்லாம் சென்றடையப் போவதில்லை. நான் பட்டியலிட்டிருக்கும் எந்த உறுதிமொழியையும் அவன் எதிர்பார்க்க போவதில்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் தான் போடும் ஒவ்வொரு ஓட்டுக்கும் ஈடாக காசோ பொருளோ அவ்வளவுதான். யார் அதிகம் தருகிறார்களோ அல்லது தருவேன் என்று சொல்கிறார்களோ அவனுக்குத்தான் ஒட்டு.

    பதிலளிநீக்கு
  27. Maasianna said...
    compering by Ragul,mannu,sony Modi is hundred percentage best best best//

    இப்படி கம்பேர் பண்ணி கம்பேர் பண்ணிதான NDAன்னு ஒரு ஆட்சிய கொண்டு வந்தீங்க? என்னாச்சி....? அவங்க ஒழுங்கா ஆட்சி செஞ்சிருந்தா நீங்க சொன்ன மூனுபேருமே இருக்கற இடம் தெரியாம போயிருப்பாங்களே?

    பதிலளிநீக்கு

  28. கவியாழி கண்ணதாசன் said...
    அரசியல்வாதியின் அதிகபட்ச ஆசை தானே//

    உண்மைதான் யார் வேண்டுமானாலும் பிரதமராக ஆசை படலாம். நம்ம மேடத்துக்கு இல்லையா, ஏன் கேப்டன், அப்புறம் சீமான் இவங்களுக்கெல்லாம் கூடத்தான் அந்த ஆசை இருக்கு.

    ஆனா அதிர்ஷ்டம் இருக்கறது எதையோ மேய்க்கத்தான? அதுமாதிரிதான் இந்த நமோவும்....

    பதிலளிநீக்கு
  29. பெயரில்லா10:48 AM

    Joseph Sir,
    I am a regular reader of Tamilmanam and your blog for the last several years.
    many people were killed in a train in Godra station. Many innocent people ( irrespective of the religion) were killed in many bomb blasts and riots in the last many years.
    Have you ever asked any politicians who had instigated such violence to ask apology whenever they contested in elections .
    I am disappointed at this question( Namo asking apologies to minorities) from you, a matured person with lot of experience and exposure.
    Do you say the lives of minorities are more equal than others?


    For other comments I am waiting for your next article.

    Regards

    K.G.Subramanian

    பதிலளிநீக்கு
  30. Joseph Sir,

    Have you ever asked any politicians who had instigated such violence to ask apology whenever they contested in elections .//

    I am not getting into that kind of argument. Whoever has instigated the violence do you justify taking against one particular community?

    I am disappointed at this question( Namo asking apologies to minorities) from you, a matured person with lot of experience and exposure.
    Do you say the lives of minorities are more equal than others?//

    I won't say that. Lives are lives, minority or not. In the aftermath of Godhra incident severl innocent lives were lost. It is alleged that the State police at the behest of the rulers were mute spectators to massive attacks against one particular community. How can anyone justify that?

    I am against the brutal attacks mounted by the Congress supporters against the Sikhs after IG assasination, as well. Pl. Read my next post.

    பதிலளிநீக்கு
  31. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன். அவர் எந்த ஊழலிலும் அடிபடவில்லை அதனால் தான்
    வாய்ப்பு இல்லை என்று சொன்னேன்

    பதிலளிநீக்கு
  32. அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா. நரேந்திரமோடியை ஒரு கட்சி முன்னிலைப் படுத்தி இருக்கிறது. முதலில் அந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும். பின் அல்லவா மோடி பிரதமராவது. இந்தியக் குடிமகன் லேசுப்பட்டவன் அல்ல. அவன் எந்த படித்த மேதாவியையும் பின் பற்றப் போவதில்லை. அவனது பட்டறிவை சாதாரணமாக எண்ண வேண்டாம். நம் நாட்டு அரசியல் அமைப்பில் பிரதமர் நேரடியாகத் தேர்வு ஆவதில்லை. எப்படி ஆனாலும் மோடி பிரதமர் ஆனால் அது நம் சாபக்கேடு.தனிப்பட்டவரை அவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் தேர்வு செய்வதில் அர்த்தமில்லை. அவர் சார்ந்திருக்கும் கட்சியின் செயல் பாடும் கொள்கைகளுமே கருத்தில் கொள்ள வேண்டும். பாஜக வின் கொள்கைகள் நாட்டுக்கு நலம் விளைக்காது என்பதே என் கருத்து.

    பதிலளிநீக்கு
  33. G.M Balasubramaniam said...
    அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா. நரேந்திரமோடியை ஒரு கட்சி முன்னிலைப் படுத்தி இருக்கிறது. முதலில் அந்தக் கட்சி வெற்றி பெற வேண்டும். பின் அல்லவா மோடி பிரதமராவது. இந்தியக் குடிமகன் லேசுப்பட்டவன் அல்ல. அவன் எந்த படித்த மேதாவியையும் பின் பற்றப் போவதில்லை. அவனது பட்டறிவை சாதாரணமாக எண்ண வேண்டாம். நம் நாட்டு அரசியல் அமைப்பில் பிரதமர் நேரடியாகத் தேர்வு ஆவதில்லை. எப்படி ஆனாலும் மோடி பிரதமர் ஆனால் அது நம் சாபக்கேடு.தனிப்பட்டவரை அவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் தேர்வு செய்வதில் அர்த்தமில்லை. அவர் சார்ந்திருக்கும் கட்சியின் செயல் பாடும் கொள்கைகளுமே கருத்தில் கொள்ள வேண்டும். பாஜக வின் கொள்கைகள் நாட்டுக்கு நலம் விளைக்காது என்பதே என் கருத்து.//

    என்னுடைய முழு பதிவின் சாராம்சத்தையும் சுருக்கி மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் சார். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு