25 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 57

முன்கதை 

'அதுதான் பாஸ் மிஸ்டரியா இருக்கு.' என்றான் வசந்த். 'ஒருவேளை ராமராஜன் தள்ளிவிட்டு மாதவிக்கு அடி கிடி பட்டுருந்தா ஆஸ்ப்பிட்டலுக்கு கொண்டுபோலாம்னு போயிருப்பாங்களோ?'

'அப்படீன்னா ஏற்கனவே அடிபட்டு கிடந்த மாதவிய மறுபடியும் எதுக்கு இன்னும் சிவ்வியரா அடிச்சிருக்கணும்?' என்றான் ராஜசேகர்.

'அதுவும் சரிதான் பாஸ்.....' என்ற வசந்த் சட்டென்று பிரகாசமானான். 'இப்ப புரியுது பாஸ்.'

'என்னடா புரியுது?' என்றான் ராஜசேகர் சலிப்புடன். 'சஸ்பென்ஸ் வைக்காம சொல்லு.'

'மாதவிய ஏதோ  ஒரு காரணத்துக்காக மர்டர் பண்றதுதான் முருகேசனோட ப்ளான். அதுக்கு ராமராஜன யூஸ் பண்ணிக்கலாம்னு நினைச்சி முருகேசந்தான் ராமராஜன முதல்ல அனுப்பியிருக்கணும்..... ஆனா ராமராஜன் சொதப்பிட்டார்....'

'அதெப்படிறா முருகேசனுக்கு தெரியும்?'

'இருங்க பாஸ்.....' என்றான் வசந்த். 'இது என் யூகம்தான் பாஸ். கரெக்டா இல்லையான்னு நீங்கதான் சொல்லணும்.'

'சரி சொல்லு.'

'அன்னைக்கி சாயந்தரம் கோபால் ஃபோன் பண்ண அதே டைம்ல, இல்லன்னா ஒரு சில நிமிஷத்துக்கப்புறம் முருகேசனும் ஃபோன் பண்ணி மாதவி ஃபோன எடுக்கறாளான்னு பாத்துருக்கணும்.... ஆனா ரிசீவர் ஆஃப் ஹூக்ல (off the hook) இருந்ததால எங்கேஜ்ட் டோன் கிடைச்சிருக்கும்..... அதுலருந்து ராமராஜன் கையால மாதவி சாகலைங்கறது முருகேசனுக்கு தெரிஞ்சிருக்கும்.... அதனாலதான் இந்த தடவ ராமராஜன தனியா அனுப்புனா சரிவராதுன்னு முருகேசனும் போயிருப்பார்.... ஆனா போற வழியில ராமராஜன் என்னால முடியாதுன்னு ஜகா வாங்கியிருப்பார்..... அதான் அவர கார்ல விட்டுட்டு முருகேசன் மட்டும் வீட்டுக்குள்ள போயி காரியத்த முடிச்சிட்டு வந்துட்டார். அவரோட அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ... அடுத்த வீட்டு மிசஸ் ராகவன் அந்த நேரம் பாத்து அங்க வந்துருக்காங்க....அவங்க நம்மள பாத்துட்டாங்களேங்கற ஷாக் முதல்ல இருந்தாலும் அதையே தங்களுக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கிட்டாங்க ரெண்டு பேரும்... கோபால அங்க பாத்ததா அந்த லேடி சொல்லிட்டா பழி கோபால் மேல விழுந்துருமே....? என்ன பாஸ்... என் யூகம் சரியாருக்குமா?'

உடனே பதிலளிக்காமல் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்த ராஜசேகர்....'இத விட யாராலயும் விஷுவலைஸ் பண்ண முடியாதுறா.... நீ சொல்றா மாதிரிதான் நடந்துருக்கணும்.....' என்றான் இறுதியில்...

'ஆனா ஒரு டவுட் பாஸ்..'

என்ன என்பதுபோல் அவனைப் பார்த்து தன் புருவங்களை உயர்த்தினான் ராஜசேகர். 

'குமார எதுக்காக பாஸ் கிட்நேப் பண்ணி ரூம்ல அடைச்சி வச்சாங்க.? அவந்தான் இவங்க ரெண்டு பேரையும் பத்தி போலீஸ்ல மூச்சே விடலையே?'

'அதுக்கு என்னோட யூகம் என்னன்னு சொல்லட்டுமா?' என்றான் ராஜசேகர் புன்னகையுடன்.'

'சொல்லுங்க பாஸ்.' என்று கேட்க தயாரானான் வசந்த்.

'மாதவிய மிரட்டுனா மாதிரியே அந்த பையன் குமாரையும் இவங்க ரெண்டு பேரும் மிரட்டி வச்சிருப்பாங்க.. அதுக்கு பயந்துதான் போலீஸ்ல இவங்க ரெண்டு பேரை பத்தியும் அவன் போலீஸ்ல சொல்லல. அது மட்டுமில்ல... தன்ராஜ் முதல்ல மிசஸ் ராகவன் சொன்னத கேட்ருக்கார்.... அதுக்கப்புறம் அதே ஆங்கிள்ல குமார்கிட்ட விசாரிச்சிருப்பார். அதாவது அன்னைக்கி சாயந்தரம் கோபால் அவர் கார அங்க பார்க் பண்ணியிருந்தாரான்னு மட்டும் கேட்டுருப்பார்..... அவனும் ஆமா சார்னு சொல்லியிருப்பான்...'

'ஆனா பாஸ்....' என்று குறுக்கிட்ட வசந்தை சைகை காட்டி தடுத்த ராஜசேகர் தொடர்ந்தான். 'இர்றா... முழுசையும் கேட்டுட்டு சொல்லு..... போலீசோட இன்வெஸ்ட்டிகேஷன் முழுசும் கோபால அக்யூஸ்டா முன்வைச்சியே நடக்கறத பாத்த முருகேசனும் ராமராஜனும் சரி நாம தப்பிச்சோம்னு நினைச்சிருப்பாங்க..ஆனாலும் மிஸ்டர் ராகவன் வீட்டையும் குமாரையும் டெய்லி வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்துருப்பாங்க.... அப்பத்தான் குமார போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டு போனதும் இன்ஸ்பெக்டர் பெருமாள் ராகவன் வீட்டுக்கு வந்துபோனதும் தெரிஞ்சிருக்கும்.... போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ட்டு வந்த குமார மிரட்டி என்னடா சொன்னாங்கன்னு கேட்ருப்பாங்க.... அவன் கோபால் ஏழு மணிக்கும் வீட்டுக்குள்ளருந்து வந்தத பாத்ததா சொல்லச் சொல்லி மிரட்டுனாங்கன்னு சொல்லியிருப்பான். சரி அப்படியே சொல்லிரு... இல்லன்னா நீ க்ளோஸ்னு சொல்லி இவங்க ரெண்டு பேரும் மிரட்டியிருப்பாங்க..... ஏற்கனவே போலீஸ் மிரட்டுனதுல மிரண்டு போயிருந்த குமார் இவனுங்க ரெண்டு பேரும் மிரட்டுனதும் இன்னும் அரண்டுட்டான்.  மிசஸ் ராகவனையும் போலீஸ் இப்படித்தான் சொல்லணும்னு மிரட்டிட்டுப் போனதும் அவங்க மூலமாவே இவங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்.... அட நாம சொன்னதையே போலீசும் சொல்லுது அதனால நமக்கு இனிமே ப்ராப்ளம் இல்லேன்னு முருகேசனும் ராமராஜனும் நினைச்சிருப்பாங்க.'

'இருக்கும் பாஸ்.. அப்படீன்னா அவனெ  எதுக்கு திடீர்னு கிட்நேப் பண்ணாங்க?'

ராஜசேகர் பதிலளிக்காமல் சிந்தனையில் ஆழ்ந்தான். 'இதுக்கு ரெண்டு காரணம் சொல்லலாம். ஒன்னு, குமார் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ட்டு வந்ததும் இதுலருந்து எப்படிறா தப்பிக்கறதுன்னு யோசிச்சிருப்பான்.  இங்க இனியும் இருந்தா கோர்ட்டுக்கு போயி பொய் சொல்ல வேண்டி வரும்... போகலைன்னா போலீஸ் மட்டுமில்லாம முருகேசனையும் விரோதிச்சிக்கணும். அவங்க ரெண்டு பேரையும் விரோதிச்சிக்கிட்டு சென்னையில நிம்மதியா இருக்க முடியாதுன்னு நினைச்சிருப்பான். கொஞ்ச நாளைக்காவது ஊர் பக்கம் போயிறலாம்னு நினைச்சி போயிருப்பான். அவனெ தினமும் வாட்ச் பண்ணிக்கிட்டிருந்த ராமராஜன் அவனெ ரெண்டு நாளா காணம்னு முருகேசன்கிட்ட சொல்லியிருப்பார். அவனுக்கு சொந்த ஊர தவிர வேற போக்கிடம் கிடையாதுன்னு நினைச்சி அங்க தேடிப் போயி புடிச்சிட்டாங்க. இனியும் இவனெ வெளியில விட்டா சரிவராதுன்னு கடத்திட்டானுங்க.'

'இருக்கலாம் பாஸ்.... என்னமோ ரெண்டு காரணம்னு சொன்னீங்க? அதென்ன ரெண்டாவது?'

'முருகேசனுக்கு பிராசிக்யூஷன் விட்னசஸ்ஸ நா எப்படி கிராஸ் பண்ணுவேங்கறது ஞாபகத்துக்கு வந்துருக்கும்!' என்றவாறு சிரித்தான் ராஜசேகர்.

வசந்தும் சிரித்தான். 'ஓ! அதான் மேட்டரா? ரெண்டாவதுதான் பொருத்தமா இருக்கு. சொளையா லட்சக் கணக்குல கையாடல் பண்ணவனையே ரெண்டு தரம் வெளியில கொண்டு வந்த ஆளாச்சே நீங்க? உங்கக் கிட்ட மாட்டுனா பையன் என்னாவறதுன்னு நினைச்சிருப்பானுங்க? கரெக்ட் பாஸ்...' 

'ஆமா. இவன் நிச்சயம் அவரோட கிராஸ்ல உளறிடுவான்னு நினைச்சி கடத்திட்டானுங்க.....'

'ஆமா பாஸ், ஒத்துக்கறேன்.' என்று ஒத்துக்கொண்ட வசந்த், 'அப்படின்னா நீங்க சொன்ன கண்டிஷன் மிசஸ் ராகவனுக்கும் அப்ளிக்கபிள்தான?' என்றான்.

'குமார் தனியாள். சென்னையில அவனுக்குன்னு யாரும் இல்ல. ஆனா மிசஸ். ராகவன் அப்படியாடா? அவங்களோட சேத்து ராகவனையும் கடத்தணும்..... அவங்க ரெண்டு பேரையும் திடீர்னு காணம்னா அக்கம்பக்கத்துலருக்கறவங்க தேட மாட்டாங்க?'

ராஜசேகரின் விளக்கத்தை ஒரு சில நொடிகள் அசைபோட்ட வசந்த் இறுதியில், 'அப்படியும் இருக்கலாம்' என்றான். 'ஆனா எதுக்கும் அவங்க மேலயும் ஒரு கண் வச்சிருக்கணும் பாஸ்.'

'அது நம்மால எப்படிறா முடியும்? நாம என்ன போலீஸா? எனக்கென்னவோ அந்த அளவுக்கு முருகேசனோ இல்ல ராமராஜனோ போக மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அதுவுமில்லாம குமாருக்கு தெரிஞ்சிருக்கற அளவுக்கு ராகவனுக்கும் அவரோட வய்ஃபுக்கும் தெரிஞ்சிருக்க சான்ஸ் இல்லையே.....?'

'சரி அத விடுங்க பாஸ்.. எனக்கு இன்னொரு டவுட்!'

'என்னைக்கோ ஒரு நாள் நீ டெவில்ஸ் அட்வகேட் மாதிரி கேள்விங்கள கேடுடான்னு சொன்னதுக்கா இத்தன கேள்வி கேக்கறே?' என்று சிரித்தான் ராஜசேகர். 'சரி சொல்லு என்ன டவுட்?'

'எதுக்கு ராமராஜனும் அப்ஸ்கான்டாய்ட்டார்?' 

'அதான்டா மிஸ்டரியா இருக்கு!'

'இப்படியும் இருக்கலாம் பாஸ்.'

'எப்படி?'

'ரெண்டு மூனு நாள் இவனெ செடேஷன்ல (sedation) வச்சிரு அதுக்குள்ள நா ஒரு ப்ளானோட வரேன்னுட்டு முருகேசன் சொல்லியிருப்பார்.... ஆனா ஒரு வாரமாயும் ஆள் வரவேயில்ல... இவன் முழிச்சிக்கறதுக்குள்ள வந்துறலாம்னுட்டு அவர தேடிக்கிட்டு ராமராஜன் போயிருப்பாரோ என்னவோ?  போன எடத்துல என்ன ஆச்சோ!'

'நீ சொல்றா மாதிரி பாத்தாலும் இந்நேரம் முருகேசனாவது இவனெ தேடிக்கிட்டு வந்துருக்கணுமே? லாட்ஜ கூப்ட்டு பாக்கலாமா?'

'இங்க வர்ற வழியில கூப்ட்ருந்தேன் பாஸ்..... நாங்க நேத்து அங்கருந்து கிளம்புனதுக்கப்புறம் யாரும் வரலையாம்.' என்ற வசந்த் 'அந்த மேனேஜர் இன்னொன்னும் சொன்னார்.' என்றான்.

'என்ன?'

'ரூம்ல ராமராஜனோட திங்ஸ் எதையுமே காணமாம்! காலி பெட்டி மட்டுந்தான் இருக்காம். ஆள் எஸ்கேப் ஆய்ட்டார் போலருக்கு.'

'என்னடா சொல்ற? அவரோட திங்ஸ் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போனத யாருமே பாக்கலையா? How is it possible?'

'அதுவும் சரிதான் பாஸ். ஆனா அவர் எல்லா மாசாமாசமும் ரூம் ரென்ட்ட கரெக்டா குடுக்கறவர்ங்கறதால அவர் ஹேன்ட் பேக்கோட  போனப்போ ஆஃபீஸ் விஷயமா எங்கயாச்சும் போவாராருக்கும் ரெண்டு நாள்ல வந்துருவார்னு மேன்சன் ஆளுங்க நினைச்சிருப்பாங்க....'

'சரி....அத அப்புறம் பாத்துக்கலாம்.... இன்னைக்கி காலையில சந்தானம் சார்.... அந்த பையன் என்ன ஸ்டேட்மென்ட் குடுத்தான்னு ஒங்களுக்கு தெரியுமான்னு கேட்டார்..'

'நீங்க என்ன சொன்னீங்க?' என்றான் வசந்த் ஆவலுடன்..

'எனக்கு தெரியாது சார்... அப்படியே தெரிஞ்சாலும் இந்த கேஸ் முடியற மட்டும் ஒங்ககிட்ட சொல்றது கஷ்டம் சார்னு சொன்னேன்....'

'அதுக்கு அவர் ஒன்னும் சொல்லலையா?'

'ஒன்னும் சொல்லலை.... இன்னும் ரெண்டு மூனு நாள்தான? கேஸ் ஒருவழியா முடிஞ்சிருச்சின்னா சொல்லிக்கலாம்.'

'ரெண்டு மூனு நாளா? அதுக்குள்ள கேஸ் முடிஞ்சிருமா? எப்படி பாஸ்?'

ராஜசேகரின் புன்னகையே பதிலாக வந்தது. அதில் தெரிந்த ஏதோ ஒரு மர்மம் வசந்தை மேலும் குழப்பியது. 'என்ன பாஸ் சி.ஐ.டி கணக்கா ஸ்மைல் பண்றீங்க? சீக்ரெட்டா ஏதாச்சும் பண்றீங்களா, எனக்கு தெரியாம?'

ராஜசேகர் சிரித்தான். 'சேச்சே அப்படியெல்லாம் இல்லடா...'

'பின்ன? எப்படி மூனு நாளுக்குள்ள கேஸ் முடிஞ்சிரும்னீங்க?'

'டேய்.. ரெண்டு மூனு நாள்ங்கறது ஒரு எக்ஸ்பிரஷன்றா (expression), அதையே லிட்டரலா (literal) எடுத்துக்கறதா?'

'ஓ! அதான பார்த்தேன்.... இன்னும் ஒரு விட்னசக் கூட முழுசா எக்ஸாமின் பண்ணி முடிக்கலையேன்னு பாத்தேன்....'

'என்னடா சொல்ற? பிபி மறுபடியும் அந்த  தன்ராஜ கூப்ட்டு ரீ-எக்ஸாமின் பண்ணுவாருன்னு சொல்றியா?'

'கண்டிப்பா பாஸ்... நீங்க பண்ண டேமேஜ முழுசா ரிப்பேர் பண்ண முடியாட்டாலும் அங்க, இங்க டிங்கரிங் பண்ணாமயா உட்ருவார்.....? எனக்கென்னவோ இந்த ஒரு வாரத்துல வேணுவும் ஏதாச்சும் பண்ணுவார்னு தோனுது...'

'அவர் என்ன வேணா செய்யட்டும்..... நமக்கு வேண்டியது பிராசிக்யூஷன் விட்னஸ் ஒன்னும் ரெண்டும் கூண்டுல ஏறணும்... அத்தோட கேஸ் க்ளோசாயிரும்... என்ன சொல்ற?'

வசந்த் சிரித்தான். 'பாஸ்..... அது அவ்வளவு சீக்கிரத்துல நடக்காது. நீங்க வேணா பாருங்க.'

ராஜசேகர் முறைத்தான். 'எதுக்கு அப்படி சொல்ற?'

'PW 1 ஆஸ்ப்பிடலைஸ்ட் PW2 அப்ஸ்கான்டிங்.... அப்புறம் எப்படி அவங்கள கூப்டுவாங்க?' என்ற வசந்த் கோப்பிலிருந்த அரசுதரப்பு சாட்சிகள் பட்டியலைப் பார்த்தான். 'அதனால அடுத்ததா பி.எம் பண்ண டாக்டர்... இல்லன்னா ஃபிங்கர் ப்ரின்ட் பியரு (Finger Print Bureau)ஆளுங்க, அதுவும் இல்லன்னா ஃபாரன்சிக் ஆளுங்கன்னு யாரையாச்சும் கூப்ட்டு ப்ளேடு போடுவார்.....'

ராஜசேகர் சிடுசிடுத்தான். 'டேய், PW2தான் சரன்டராய்ட்டானே?'

'அது இதுவரைக்கும் பிபிக்கு தெரியாதே? அவனெ கூட்டிக்கிட்டு போகறதுக்கே E1 ஸ்டேஷன்லருந்து யாரையும் அனுப்பாம சந்தானம் சார் அவரோட ஆஃபீஸ் ஆளுங்களத்தான அனுப்புனாராம், கேள்விப்பட்டேன்..'

ராஜசேகர் வியப்புடன் வசந்தைப் பார்த்தான்... 'டேய்... என்ன ரொம்ப கேஷுவலா சொல்ற? இந்த நீயூஸ் உனக்கு எப்ப தெரிஞ்சிது?'

வசந்த் தன் வாயால் தானே சிக்கிக்கொண்டவனாய் திருதிருவென விழித்தான். 'உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன் பாஸ்.' என்று அசடு வழிந்தான். 

'நல்லா நினைச்சே போ..... நா பேசினப்போ சந்தானம் சார் தன்ராஜ் கிட்ட சொல்றேன்னுதான் சொன்னார்.. அப்பவே பிபிக்கும் நியூஸ் போயிருக்கும்னு நினைச்சேன்...'

'எனக்கென்னவோ இந்த ஐடியாவுக்கு பின்னால தன்ராஜும் இருக்கார்னு நினைக்கிறேன் பாஸ்... அவருக்கு குமார் விஷயத்துல இன்டர்ஃபியராவதுக்கு தயக்கமா இருந்துருக்கும்... அத்தோட பெருமாள் சாருக்கு தெரிஞ்சா அது உடனே பிபிக்கும் தெரிஞ்சிரும்... அவன் இருக்கற எடத்த தெரிஞ்சிக்கிட்டு போயி மறுபடியும் அவனெ உருட்டி மிரட்டி தான் நினைச்சத சொல்ல வச்சிருவார்னு நினைச்சிருப்பார்.... அதனால அவர் சொல்லித்தான் சந்தானம் சார் தன்னோட ஸ்டாஃப அனுப்பிருப்பார்னு நினைக்கிறேன்....'

' நீ சொல்றதுலயும் லாஜிக் இருக்கு....' என்றான் ராஜசேகர். 'தன்ராஜுக்கும் கோபல தவிர வேற யாரோ ஒரு ஆள் இதுல இன்வால்டாயிருக்க சான்ஸ் இருக்குனு தோனியிருக்கும்.....  ஆனா தன்ராஜ் பண்ற இந்த பேக்ரவுன்ட் விளையாட்டு மட்டும் பிபிக்கு தெரிய வந்துது.... அவ்வளவுதான்.....' 

வசந்த் சிரித்தான்.... 'தன்ராஜ் கதி அதோகதிதான்....'

'ஒனக்கு எல்லாமே தமாஷ்தான்டா.' என்று முறைத்தான் ராஜசேகர்.

'பாஸ்.... இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன்.' என்றான் வசந்த் சட்டென்று.

தொடரும்..

10 comments:

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பரே...
இயல்பான நடையில் சென்று கொண்டிருக்கிறது தொடர்..
முந்தைய பகுதிகளை நேரம் கிடைக்கையில்
படித்துக்கொண்டிருக்கிறேன்..
என் தளம் வரை வந்து என் கவிதைகளை வாழ்த்தியமைக்கு
நன்றிகள் பல.

வே.நடனசபாபதி said...

வசந்த் சொல்ல வந்த அந்த ‘இன்னொரு விஷயம்’ என்ன என்று அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.

T.N.MURALIDHARAN said...

இன்னைக்கு ஊகங்கள் மட்டும்தானா?ஆக்ஷன் நாளையா?

G.M Balasubramaniam said...

ராஜசேகருக்கு கோபால் குற்றவாளி இல்லை என்று நிரூபித்தால் போதும். யார் குற்றவாளி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு போலீசுக்குத்தானே.

டிபிஆர்.ஜோசப் said...

மகேந்திரன் said...

இயல்பான நடையில் சென்று கொண்டிருக்கிறது தொடர்..//

மிக்க நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
வசந்த் சொல்ல வந்த அந்த ‘இன்னொரு விஷயம்’ என்ன என்று அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...


T.N.MURALIDHARAN said...
இன்னைக்கு ஊகங்கள் மட்டும்தானா?ஆக்ஷன் நாளையா?//

இந்த ஊகங்கள் எல்லாம் முன்னால் நடந்த நிகழ்ச்சிகள் எவ்வாறு அல்லது ஏன் நடந்தன என்பதை வாசகர்களுக்கு விளக்க மிகவும் அவசியம் என்று நான் நினைத்தேன்.

நாளையும் சில ஊகங்கள் தொடரும்.... அதன் பிறகு ஆக்‌ஷன்தான் :)

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
ராஜசேகருக்கு கோபால் குற்றவாளி இல்லை என்று நிரூபித்தால் போதும். யார் குற்றவாளி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு போலீசுக்குத்தானே.//

கரெக்ட். நிரூபணமானால் போதும் என்றிருக்க வேண்டும். நன்றி.

Sasi Kala said...

ஒரு வக்கிலும் அசிஸ்டென்டும் இவ்வளவு அலசி ஆராயனுமா சிரமம் தான்.
உண்மையா ஒரு வக்கில் அல்லது காவல் துறையினர் இந்த கதையை எழுதியிருந்தாலும் இவ்வளவு நேர்த்தியாக எழுத முடியாது போல.
நீ காட்சிகளை தத்துருபமா வர்ணித்து எழுதுறிங்க. எங்கும் குறை கண்டு பிடிக்க முடியாது.

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...
ஒரு வக்கிலும் அசிஸ்டென்டும் இவ்வளவு அலசி ஆராயனுமா சிரமம் தான்.
உண்மையா ஒரு வக்கில் அல்லது காவல் துறையினர் இந்த கதையை எழுதியிருந்தாலும் இவ்வளவு நேர்த்தியாக எழுத முடியாது போல.
நீ காட்சிகளை தத்துருபமா வர்ணித்து எழுதுறிங்க. எங்கும் குறை கண்டு பிடிக்க முடியாது.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.