19 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 51


'I don't think so, your honour' என்று சுருதியிறங்கிய பிபி திரும்பி தன்ராஜை பார்த்து  தன் புருவங்களை உயர்த்தினார். அவர் அதை கண்டுக்கொள்ளாமல் தலையை குணிந்துக்கொண்டார். அப்படியொரு ரிப்போர்ட் இருந்தால்தானே டிஃபென்சுக்கு தருவதற்கு? 'அதெல்லாம் ஒன்னும் தேவையில்லீங்க.. அப்படியே அவங்க குடுத்தாலும் அதுல ஒரு வேல்யூவும் இருக்காது.... நீங்களே வாய் வார்த்தையா அவங்கக் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்குங்க.' என்று ஆய்வாளர் பெருமாள் சொன்னது அவருடைய நினைவுக்கு வந்தது. 

நீதிபதி ராஜசேகரைப் பார்த்தார். 'உங்களுக்கு கூடிய விரைவில் அந்த அறிக்கையின் நகல் தரப்படும்.' என்று கூறிவிட்டு தன் அலுவலரைப் பார்த்தார். 'prepare an order to this effect.'

'நன்றி யுவர் ஆனர்' என்று பதிலளித்த ராஜசேகர் நீதிபதி மீண்டும் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பதை கவனித்தான். 

'இன்னும் ஒன்னோ ரெண்டோ கேள்விங்கதான் யுவர் ஆனர்.' 

'Go ahead... but make it short.'

'நன்றி யுவர் ஆனர்' என்று பதிலளித்த ராஜசேகர் சாட்சி கூண்டில் நின்றிருந்த தன்ராஜை நெருங்கினான். 'நீங்க க்ரைம் சீனுக்கு போனதுக்கப்புறம்தான் அடுத்த வீடுகளில் இருந்தவர்களை விசாரித்தீர்களா?'

'ஆமாம்...அந்த வீட்டுக்கு பக்கத்துலருந்த ஏறக்குறைய எல்லா வீட்லயும் ஏறி இறங்கினேன்... அதுமட்டுமில்லாம அந்த ரோடுக்கு ஆப்போசிட் சைட்லருந்த கடைகள்... அங்கிருந்த எல்லாரையும் விசாரிச்சேன்... அப்போ கிடைச்ச விட்னஸ்தான் மிஸ். மாதவி குடியிருந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டுல குடியிருக்கற லேடி, மிசஸ் ராகவன். அவங்க அக்யூஸ்ட அந்த எடத்துல பாத்த விஷயத்த சொன்னாங்க...அதே மாதிரி அந்த வீட்டுக்கு எதிர்ல இருந்த கார்ப்பரேஷன் பார்க்கிங் லாட்ல இருந்த ஆளும் அக்யூஸ்ட பாத்ததா ஒத்துக்கிட்டார்.'

ராஜசேகர் புன்னகையுடன் அவரை பாராட்டினான்... 'you have done your job... no doubt about that... I am not going into that.... may be latter... ஆனா எனக்கு ஒன்னே ஒன்னு தெரியணும்..... நீங்க சொன்ன விட்னஸ் ரெண்டு பேரையும்தான் PW1, PW2ன்னு விட்னஸ் லிஸ்ட்ல பாத்ததா ஞாபகம்...... நீங்க அந்த லிஸ்ட்ல எட்டாவது விட்னஸா இருக்கீங்கன்னு நினைக்கேன்.... சரிதான?'

அவர் எங்கு வருகிறார் என்பதை உணர்ந்த தன்ராஜ் சங்கடத்துடன் பிபி வேணுவை பார்த்தார். அவர் உடனே எழுந்து, 'objection.' என்றார் 'அரசு தரப்பு சாட்சிகளை எப்போது விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்வது என்னுடைய உரிமை. அதை கேள்வி கேட்க இவருக்கு எவ்வித உரிமையும் இல்லை....'

நீதிபதி எரிச்சலுடன் ராஜசேகரைப் பார்த்தார். 'Objection sustained..' என்றார்.... 'உங்க கேள்விங்க முடிஞ்சிதா?'

'கடைசியா ஒரேயொரு கேள்வி மட்டும் யுவர் ஆனர்.'

சரி என்பதுபோல் தலையசைத்த நீதிபதி தன் அலுவலரைப் பார்த்தார். அவருடைய பார்வையின் பொருளை உணர்ந்துக்கொண்ட அலுவலர் உடனே தன் முன்னால் இருந்த மாதவியின் வழக்கு சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் திரட்டி கட்டில் (bundle) வைத்து கட்டிவிட்டு அடுத்து விசாரணைக்கு வரவிருந்த வழக்கின் ஆவண கட்டை எடுத்து தன் முன்னால் தயாராக வைத்துக்கொண்டார்.

'உங்க தரப்பு முதல் சாட்சியா இன்னைக்கி ஆஜராக இருந்தவர் தலைமறைவாயிட்டார்ங்கறது உண்மையா? அதனாலதான் உங்களால அவர இன்னைக்கி கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ண முடியலன்னு நா கேள்விப்பட்டது சரிதானா?'

பிபி உடனே ஆவேசமாக எழுந்து இறைந்தார். 'This is unwarranted and preposterous observation your honour..'

நீதிபதி எரிச்சலுடன் ராஜசேகரைப் பார்த்தார். ஆனால், 'you may answer the question' என்றார் தன்ராஜிடம்....

இன்னைக்கி யார் முகத்துல முழிச்சேன்னு தெரியலையே என்று நொந்துப்போன தன்ராஜ் தயக்கத்துடன், 'உண்மைதான்... தேடிக்கிட்டிருக்கோம்...' என்றார்.

உடனே நீதிமன்ற அறைமுழுவதும் சலசலக்க தன்னுடைய மரச் சுத்தியால் ஓசை எழுப்பிய நீதிபதி, 'ஆர்டர்.. ஆர்டர் என்றார்.' பிறகு 'Case is adjourned' என்று தன்னுடைய அலுவலர் தன்னிடம் நீட்டிய அடுத்த வழக்கிற்கான கட்டை பெற்றுக்கொண்டு, 'அடுத்த கேஸ கூப்டுங்க.' என்றார்.

***********

ராஜசேகர் எழுந்து வெளியில் வந்ததும் வசந்த் அவனுடைய கரங்களை பற்றி குலுக்கினான். 'பின்னி பெடலெடுத்திட்டீங்க பாஸ்....'

'டேய், நா  ஆர்க்யூ பண்ணத கேட்டதே இல்லையா? என்னமோ இப்பத்தான் புதுசா கேட்டா மாதிரி சொல்ற?' என்றான் ராஜசேகர் சிரித்தவாறு.

அவனைத் தொடர்ந்து வந்த கோபாலும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். 'இப்பவாவது இந்த கொலைக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லேன்னு நம்பினீங்களே அதுவே போதும் சார்....'

அதற்குள் அங்கு வந்து சேர்ந்த மகாதேவன் முதலில் அவரை கண்டும் காணாததுபோல் நின்றிருந்த கோபாலின் முதுகில் தட்டிக்கொடுத்தார். 'இனி நீ வெளியில வர்றதுல எந்த பிரச்சினையும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.... சீனி இத கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவான்....'

அப்போதும் பதிலளிக்காமல் விறைப்புடன் நின்றிருந்த கோபாலை பொருட்படுத்தாமல் ராஜசேகரை நெருங்கி அவனுடைய கைகளைப் பற்றி குலுக்கினார் மகாதேவன். 'I am really impressed......ரொம்ப நல்லா ஆர்க்யூ பண்ணேள்.... ஆனா வேணுவை சீண்டிட்டேள்.... அடுத்த ஹியரிங்ல சீறிக்கிட்டு வருவான்.... ஜாக்கிரதை...' என்றவர் நெருங்கி வந்து கிசுகிசுத்தார். 'அந்த PW2 அப்ஸ்கான்டிங்தானா?'

ராஜசேகர் புன்னகையுடன் பதிலளித்தான். 'ஆமா சார்..... ரெண்டு நாளைக்கி முன்னாலதான் எனக்கு தெரிஞ்சிது.... ஆனாலும் கன்ஃபர்மா தெரியலை....அதான் கடைசியா ஒரு கொக்கி போட்டு பாத்தேன்.... வேற வழியில்லாம ஒத்துக்கிட்டார்.'

'இதுக்கு பின்னால ஏதாச்சும் இருக்கும்....'

'வேறென்ன சார்... எல்லாம் வேணு சாரோட டார்ச்சர்தான்.' என்றான் வசந்த், 'பாக்காததையெல்லாம் பாத்தேன்னு சொல்லுடான்னா அவன் என்ன பண்ணுவான்... அதான் எஸ்கேப்பாய்ட்டான்....'

'இவர் உங்க அசிஸ்டென்ட்டா சார்....?' என்று சிரித்த மகாதேவன், 'நல்லா ஸ்மார்ட்டா பேசறார்....' என்றவாறு வசந்தை தோளில் தட்டிக்கொடுத்தார். 'நல்லா வருவேள்.... ஆல் தி பெஸ்ட்...' 

அவர் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த கோபால் 'நா வரேன் சார்.... அப்பாவ கேட்டதா சொல்லுங்க... அடுத்த ஹியரிங் எப்ப வரும்?' 

'தலைமறைவான விட்னஸ் சீக்கிரமே கிடைச்சிட்டா நல்லது... இல்லன்னா பிபி வாய்தாக்கு ட்ரை பண்ணுவார்.....' என்றான் ராஜசேகர். 'அப்படி அவர் செஞ்சார்னா... நாம மறுபடியும் பெய்லுக்கு அப்ளை பண்லாம்... கவலைப்படாதீங்க.'

'அப்போ சரி சார்.' என்ற கோபால் தன்னுடன் வந்திருந்த காவலர்களை பார்க்க அவர்கள் மூவரும் காவல்துறை வாகனத்தை நோக்கி நகர்ந்தனர்.

'இதுவரைக்கும் டல்லா இருந்த கோபால் முகத்துல இன்னைக்கித்தான் லேசா நம்பிக்கை வந்தா மாதிரி இருக்கு.....என்ன பாஸ்?' என்றான் வசந்த்.

'ஆமாம்....' என்று பதிலளித்த ராஜசேகர், 'ஆனா அடிபட்ட புலி மாதிரி பிபி ஒக்காந்திருந்தத பாத்தே இல்ல? அந்தாள நம்பவே முடியாது... நாம எதிர்பாக்காத மாதிரி எதையாச்சும் செய்வார்னு நினைக்கேன்..... வா போய்க்கிட்டே பேசலாம்.' என்றவாறு தன் வாகனத்தை நோக்கி நகர வசந்த் அவன் பின்னால் சென்றான்.

**********

நீதிமன்றத்திலிருந்து தன்னுடைய அலுவலகம் திரும்பிய பி.பி. வேணு தன் கையிலிருந்த கேஸ் கட்டுகளை மேசை மீது வீசி எறிந்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார். அவர் அறைக்குள் நுழைந்த வேகத்திலிருந்தே அவருடைய மனநிலையை உணர்ந்துக்கொண்ட அவருடைய ஊழியன் இப்பத்தைக்கி ரூமுக்குள்ள போனா நாம செத்தோம் என்று நினைத்தான். 

'இடியட்ஸ்...... ஒரு சாதாரண இன்வெஸ்ட்டிகேஷன கூட ஒழுங்கா பண்ணத் தெரியாதவன்களையெல்லாம் வச்சிக்கிட்டு என்னத்த கேஸ நடத்தறது?' என்று தனக்குள் முனகிக்கொண்டு அதே வேகத்தில் தொலைபேசியை எடுத்து ஆய்வாளர் பெருமாளை அழைத்தார். எதிர்முனையில் எடுக்கப்பட்டதும் இரைந்தார்.

'ஏங்க நீங்க போலீஸ் ஸ்டேஷந்தான் நடத்தறீங்களா?'

அவருடைய கோபத்தை சற்றும் எதிர்பாராத பெருமாள் என்ன இந்த ஆள் கொஞ்சம் விட்டா ரொம்பத்தான் துள்றான் என்று நினைத்தார்.... ஆனால், 'என்ன சார்... எதுக்கு இந்த கோபம்?' என்ற அவருடைய  பதிலில் அந்த கோபம் தென்படவில்லை.

'பின்ன என்ன சார்? நீங்க அடிச்சிருக்கற கூத்து இன்னைக்கி கோர்ட்ல நாறிப் போச்சி.... துக்கடா பையன் அந்த டிஃபென்ஸ் லாயர்... இதுதான் அவனுக்கு முதல் மர்டர் கேஸ்னு சொன்னாங்க.... ஆனா அவனே இன்னைக்கி ஒங்க எஸ்.ஐய நாறடிச்சிட்டான்....'

ஓ! அந்த மாதவி கேஸ் விஷயமா?  வேணும்.... பெரிய இவன் மாதிரி நாம எதிரியோட ஆஃபீஸ வாட்ச் பண்ண ஆள் விட்டதுக்கு எகிறுனான்? 'என்ன சார் நடந்துது?' என்றார் வேண்டுமென்றே பிபியை உசுப்பிவிடும் நோக்கத்துடன்.

'என்ன, நடந்துதா?' என்று மேலும் இரைந்தார்  பிபி... 'சரி அது இருக்கட்டும்.... அன்னைக்கி இன்ஃபர்மேஷன் கிடைச்சப்போ ஸ்டேஷன்ல நீங்களும் இல்லையாம் ஒங்க ரெண்டு எஸ்.ஐயும் இல்லையாமே, உண்மையா?'  

அதையும் கோர்ட்லயே உளறிட்டானா என்று ஆவேசமடைந்தார் பெருமாள். ஆனாலும் வேறுவழியில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. 'ஆமா சார்... அன்னைக்கின்னு பாத்து நா கமிஷனர் ஆஃபீஸ்ல இருந்தேன். நம்ம லா அன்ட் ஆர்டர் குமரேசன் லஸ் கார்னர்ல பந்தோபஸ்த் ட்யூட்டில இருந்தார் சார்...'

'உங்களுக்கு கமிஷனர் கிட்ட அப்பாய்ன்ட்மென்ட் இருந்துச்சா என்ன?'

'இல்ல சார்... ஒரு ப்ரீஃபிங் இருக்குது வாங்கன்னு ஐ.ஜி. சொல்லி போயிருந்தேன்...'

''என்னங்க இது அக்கிரமமா இருக்கு....? மர்டர்னு இன்ஃபர்மேஷன் வந்தா ஐஜி கிட்ட சொல்லிட்டு போயிருக்க வேணாம்? சரி... நீங்கதான் அப்படி.... மர்டர விட ஒரு துக்கடா பொலிட்டிக்கல் பார்ட்டியோட டெமோவுக்கு பந்தோபஸ்த் ரொம்ப முக்கியமா? அப்படி எந்த விஐபி இருந்தார் அங்க?'

அது உண்மையில் அது ஒரு துக்கடா கட்சியுடைய மறியல் போராட்டம்தான் என்றும் அதிகம் போனால் ஐம்பது பேருக்கு மேல் குழுமியிருக்க வாய்ப்பில்லை என்பதும் அவருக்கு தெரியும்.... ஆனால் அவருக்கு கீழ் பணியாற்றிய இரு எஸ்.ஐ.களுக்கும் இடையிலேயே சுமூகமான உறவு இல்லை என்பதாலேயே அவர் மர்டர் ஸ்பாட்டுக்கு செல்வதை வேண்டுமென்றே தட்டிக்கழித்துவிட்டார் என்பதை இவரிடம் சொன்னால் வேறு வினையே வேண்டாமே?

'என்ன சார் சைலன்டாய்ட்டீங்க?' என்று எதிர்முனையிலிருந்து பிபி இரைந்தார். 

மனுஷனுக்கு பொறுமையே கிடையாது போலருக்கே என்று நினைத்த பெருமாள். 'விஐபின்னு யாரும் இல்லை சார்.....ஒருவேளை தன்ராஜ் அவர்கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணலையோ என்னவோ?'

அவருடைய தொத்தல் பதில் பிபியை மேலும் வெகுண்டெழ செய்தது. 'இதெல்லாம் ஒரு எக்ஸ்க்யூசா சார்....? ஸ்டேஷன்ல இருக்கற மூனு ஆஃபீசர்ங்களுக்குள்ளயும் எந்த கோஆர்டினேஷனும் இல்லேன்னுதான அர்த்தம்? நா இத சும்மா விடப்போறதில்ல சார்.... I am going to speak to your IG... அவரும் கண்டுக்கலன்னா மினிஸ்டர் வரைக்கும் போகத்தான் போறேன்...'

என்னடா இது வம்பா போச்சி என்று நொந்துப்போனார் பெருமாள். இந்தாள் மினிஸ்டர் வரைக்கும் போனா கண்டிப்பா டிரான்ஸ்ஃபர்தான்.... சொந்த ஊர்லருந்து நிம்மதியா ரிட்டையர் ஆவறதுக்கு முடியாது போலருக்கே... எல்லாம் இந்த திமிர் புடிச்ச தன்ராஜாலத்தான்.... அவன டிரான்ஸ்ஃபர் பண்ணா போறும்...  இந்த ஸ்டேஷன்லருக்கற எல்லா டென்ஷனுக்கும் அவன் தான் காரணம்.... 

அதுவும் ஓரளவுக்கு உண்மைதான்.... பெருமாளும் லா அன்ட் ஆர்டர் குமரேசனும் அடிமட்டத்திலிருந்து பதவி உயர்வு பெற்றிருந்தவர்கள். படிப்பு என்னவோ பள்ளியிறுதி வரை மட்டும்தான்..... ஆங்கில அறிவும் சுமார்தான்..... பொறியியல் பட்டம் பெற்றிருந்தும் தன் தந்தையின் வற்புறுத்தலால் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் ரேங்க் எடுத்து நேரடியாக எஸ்.ஐ பதவியில் அமர்ந்த தன்ராஜுக்கு அவ்விருவரிடமும் சுமூக உறவு இல்லாமல் போனதற்கு அவருடைய இளம் வயதும்... அனுபவமின்மையுமே முக்கிய காரணமாக இருந்தது. 

'லைன்ல இருக்கீங்களா?' என்று பிபி வேணு இரைவது கேட்டது.

தொடரும்..

12 comments:

Anonymous said...

வணக்கம்

கதை அருமை தொடருகிறேன் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வே.நடனசபாபதி said...

பி‌பி(PP)க்கு பி‌பி (BP) ஏறியிருக்கிறது நல்லதுக்குத் தான். அப்போது தானே சுவாரஸ்யமான குறுக்கு விசாரணை இருக்கும். காத்திருக்கிறேன் அதற்காக!

T.N.MURALIDHARAN said...

சார் ஒரு கலக்கு கலக்கிட்டீங்க.அடுத்ததை ஆவலுடன் எதிர் பார்த்துக்கிட்டுருக்கேன்

டிபிஆர்.ஜோசப் said...

2008rupan said...
வணக்கம்

கதை அருமை தொடருகிறேன் வாழ்த்துக்கள்//

நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...

PM
வே.நடனசபாபதி said...
பி‌பி(PP)க்கு பி‌பி (BP) ஏறியிருக்கிறது நல்லதுக்குத் தான். அப்போது தானே சுவாரஸ்யமான குறுக்கு விசாரணை இருக்கும். காத்திருக்கிறேன் அதற்காக!//

பிபிக்கு பிபி... நல்ல சிலேடை...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

PM
வே.நடனசபாபதி said...
பி‌பி(PP)க்கு பி‌பி (BP) ஏறியிருக்கிறது நல்லதுக்குத் தான். அப்போது தானே சுவாரஸ்யமான குறுக்கு விசாரணை இருக்கும். காத்திருக்கிறேன் அதற்காக!//

பிபிக்கு பிபி... நல்ல சிலேடை...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...


T.N.MURALIDHARAN said...
சார் ஒரு கலக்கு கலக்கிட்டீங்க.அடுத்ததை ஆவலுடன் எதிர் பார்த்துக்கிட்டுருக்கேன்//

நன்றிங்க.

தருமி said...

//'I don't think so, your honour'//

இப்போவெல்லாம் your honour எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டதாகச் சொன்னாங்களே .. இன்னும் வழக்கில் இருக்கா?

G.M Balasubramaniam said...

படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று பொறுப்பில் இருப்பவர்களுக்கு நேரடியாகப் பதவிக்கு வருபவர்களைப் பிடிக்காமல் போக பொறாமை மட்டும்தான் காரணமா.? பல இடங்களில் இந்த நிலை காணப் படுகிறது. நடுநிலையான பதில் தேவைப் படுகிறது.கதையையும் மீறிய கருத்தை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

டிபிஆர்.ஜோசப் said...

தருமி said...
//'I don't think so, your honour'//

இப்போவெல்லாம் your honour எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டதாகச் சொன்னாங்களே .. இன்னும் வழக்கில் இருக்கா?//

நாலஞ்சி வருசத்துக்கு முன்னால சமீபத்துல ரிட்டையர் ஆன ஜஸ்டிஸ் சந்த்ருதான் முதன் முதலா 'My Lord' or 'Your Lordship' னு தன்னை அட்றெஸ் பண்ணக்கூடாதுன்னு சொன்னாராம். அவர தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா ஹை கோர்ட்டலயும் அத மாதிரி ஒரு உத்தரவு வந்துதாம். இத நாட்லருக்கற எல்லா கோர்ட்லயும் அமுல்படுத்தணும்கற எண்ணத்துல இந்திய பார்கவுன்சில் இனிமேல் சுப்ரீம் கோர்ட்லயும் ஹை கோர்ட்லயும் 'Your Honour'னும் அதுக்கு கீழ இருக்கற ட்ரையல் கோர்ட்ல சார்னு அட்றெஸ் பண்லாம்னு ஒரு சர்க்குலர் விட்டாங்க. இன்னைக்கி மாவட்ட கோர்ட்ல பெரும்பாலும் தமிழ்லதான் ஆர்க்யூமென்ட் நடக்குது. அதனால ஜட்ஜ 'ஐயா'ன்னு தான் கூப்டறாங்க. இல்லன்னா சார்னு கூப்டுவாங்க. ஆனா ஹைகோர்ட்ல இப்பவும் Your Honour தான். இந்த ப்ராக்டிஸ் வந்து அஞ்சி வருசம் ஆனாலும் நா சென்ஷன்ஸ் கோர்ட்டுல போய் ஒக்காந்திருந்தப்போ ஏறக்குறைய எல்லா லாயர்களுமே யுவர் ஹானர்னுதான் அட்றெஸ் பண்ணத பாத்தேன். அதான் கேக்கறதுக்கும் கெத்தா இருக்கு. அதனாலதான் அதையே யூஸ் பண்ணேன்....

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று பொறுப்பில் இருப்பவர்களுக்கு நேரடியாகப் பதவிக்கு வருபவர்களைப் பிடிக்காமல் போக பொறாமை மட்டும்தான் காரணமா.? பல இடங்களில் இந்த நிலை காணப் படுகிறது. நடுநிலையான பதில் தேவைப் படுகிறது.கதையையும் மீறிய கருத்தை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.//

இது கொஞ்சம் டீப்பா போயி பாக்க வேண்டிய ப்ராப்ளம். முன்னாலல்லாம் அதிகார பதவிகளுக்கு (supervisory cadre) நேரடியா அப்பாய்ன்ட்மென்ட் பண்ற வழக்கம் இருக்கவில்லை. சீனியாரிட்டி பிரகாரம்தான் பதவி உயர்வு இருந்தது. பேங்குகள்லயும் இதே மெத்தேட்லதான் ப்ரொமோஷன்லாம் இருந்துது. ஆனா சுமார் 1987-90 பீரியட்ல ப்ரொபேஷனரி ஆஃபீசர்ஸ்னு நேரடியாவே அப்பாய்ன்ட்மென்ட் பண்ண ஆரம்பிச்சாங்க. இந்த மாதிர எங்க பேங்க்லயும் 25 பேருக்கு மேல டைரக்டா ஆஃபீசர் ரேங்க்ல அப்பாய்ன்ட் ஆனாங்க. இது ஒரு பெரிய புயலையே கிளப்புச்சு. ஏன்னா ரேங்க்லருந்து வந்தவங்கள்ல இருபத்தஞ்சி பேருக்கு ஆஃபீசராவர சான்ஸ் போயிருச்சேங்கற ஆதங்கம். அதனாலயே ட்ரெய்னிங்குக்கு பிராஞ்சஸ்ல போஸ்ட் பண்ண இவங்களுக்கு சரியான ட்ரெய்னிங் குடுக்க மாட்டேன்னுட்டாங்க. இன்னொரு பிரச்சினை மொழி. டைரக்டா ரெக்ரூட் ஆனவங்களுக்கு ஆங்கிலம் சரளமாக பேச வந்தது. ஆனா ப்ரொமோஷன் வழியா மேனேஜரானவங்களுக்கு அது வராது..... இதனாலயே இந்த ரெண்டு கேட்டகரிக்கும் ஒத்தே போகாது. இத ஜெனரேஷன் கேப்புன்னும் சொல்லலாம். சாதாரணமா ஒரு கிளார்க்கா சேந்தவர் க்ரேட் ஒன் ஆஃபீசராவதுக்கு எப்படியும் பத்துலருந்து பதினைஞ்சி வருஷம் ஆயிரும். அதாவது நாப்பது வயசாயிரும். ஆனா இருபத்தெட்டு வயசுலயே ஒருத்தர் நேரடியா ஆஃபீசர் கேடர்ல வரும்போது இவங்களுக்குள்ள எந்தவிதத்துலயும் ஒத்துப்போகாது. இதுதான் மெய்ன் ரீசன். போலீஸ் டிப்பார்ட்மென்ட்லயும் இன்னைக்கி மிகப் பெரிய பிரச்சினையா இருக்கறது இதுதான்னு சொல்றாங்க. முக்காவாசி ஸ்டேஷன்ல ஸ்டேஷன் ஹெட்னு சொல்ற இன்ஸ்பெக்டர் ப்ரொமோஷன் வழியா வந்துருப்பார். ஆனா அவருக்கு கீழ எஸ்.ஐயா இருக்கறவங்க நாலஞ்சி வருசத்துக்கு முன்னால டைரக்டா எஸ்.ஐ. ரேங்க்ல வந்துருப்பாங்க. இவங்கள்ல பெரும்பாலும் பட்டதாரிகளாவோ ஏன் முதுநிலை பட்டதாரிகளாகவோ கூட இருப்பாங்க. இவங்களுக்குள்ள கருத்தொற்றுமை இருக்க சான்ஸ் ரொம்ப குறைவுதான். இது சரியா தப்பான்னு பாக்கறத விட இத எப்படி சால்வ் பண்றது இல்லன்னா இத எப்படி மேனேஜ் பண்றதுன்னுதான் எல்லா நிறுவனங்கள்லயும் மேனேஜ்மென்ட் யோசிக்கணும்.

G.M Balasubramaniam said...

அன்பின் டி.பி.ஆர்.ஜோசப் என் பின்னூட்டத்துக்கு மறு மொழி இட்டதற்கு நன்றி. நான் பதிவுலகில் கால் வைத்தபோது ஒரு பதிவு எழுதி இருந்தேன். முதலில் ஆங்கிலத்தில் இரு பாகமாகவும் , பிறகு அதையே தமிழாக்கம் செய்து ஒரு பதிவாகவும் எழுதி இருந்தேன். என் பின்னூட்டம் உங்கள் மறுமொழி இரண்டும் ஒரு ஒப்பிடலுக்காக நீங்கள் அதைப் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். சுட்டிகள் கீழே
gmbat1649.blogspot.in/2010/09/random-thoughts-in-eight-hours.html

gmbat1649.blogspot.in/2010/09/random-thoughts-in-eight-hours-contd.html

எண்ணத் தறியில் எட்டு மணி நேரம்
gmbat1649.blogspot.in/2010/12/blog-post_30.html

நன்றி.