16 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 48


'இவங்க மூனு பேரோட நோக்கம் கோபால ஜெயிலுக்கு அனுப்பணும்கறதுதான்னா எதுக்கு கோபால தெய்வம் ரேஞ்சுக்கு உங்கக்கிட்ட ஏத்தி விடணும்?' என்றான் வசந்த்.

'டேய்.... அதுவும் ஒரு மாதிரி டிரிக்தான்....' என்று இடைமறித்தான் ராஜசேகர், 'அவர் தெய்வம் மாதிரி அதனால அவரே அந்த லேடிய போட்டு தள்ளியிருந்தாக்கூட நாங்க காட்டிக்குடுக்க மாட்டோம்னு சொல்றப்பவே கோபால்தான் மர்டர் பண்ணார்னு சொல்லாம சொல்றா மாதிரி இல்ல?'

'அப்படீன்னா, இத நேரா போலீஸ் கிட்டவே சொல்லிற வேண்டியதுதான?'

'மறுபடியும் யோசிக்காம பேசறே! நம்மக் கிட்ட சொல்றா மாதிரி போலீஸ் கிட்ட சொல்லிற முடியுமா? ராமராஜன் கேஸ எடுத்துக்க. கோபால் அன்னைக்கி ஆட்டோவுல போனார்னு சொல்லியிருந்தா போலீஸ் அந்த ஆட்டோ ஸ்டான்டுலருக்கற எல்லாரையும் போட்டு குடைஞ்சிருக்க மாட்டாங்க? அப்போ இல்ல சார் அந்த டைம்ல இங்கருந்து யாரும் ஆட்டோவுல போலன்னு சொன்னா அவர் கதி என்னாவறது? அப்புறம் அந்த ஆட்டோ மணி. அவன் எங்கிட்ட சொன்னா மாதிரி அன்னைக்கி கோபால் கையில ஒரு பை வச்சிருந்தார்.... அத அடையார் ஆத்துல தூக்கி போட்டார்னு சொன்னா வாடா வந்து காமின்னு போலீஸ் சொல்லாது? அப்படியே ஒரு பைய செட்டப் பண்ணி ரத்தக்கறையோட தூக்கிப் போட்டாலும் அதுல மாதவியோட ரத்தக்கறை வேணும்.... அதுக்கப்புறம் அந்த பைய கோபால்தான் தூக்கிக்கிட்டு போட்டார்னா அதுல அவரோட ஃபிங்கர் ப்ரின்ட்ஸ் வேணும்... .இதையெல்லாம் செய்யிறது அவ்வளவு லேசா....?'

'சரி... அத உங்கக் கிட்ட சொன்னா மட்டும் அவங்களுக்கென்ன லாபம் பாஸ்...?'

'நீயே கொஞ்ச நேரம் யோசிச்சிப் பார்... ஆன்சர் வரும்...' என்ற ராஜசேகர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். இதுல எப்படி ஃபர்தரா ப்ரொசீட் பண்றது? ராமராஜன தேடி கண்டுபுடிக்கிறது முடியாத காரியம். அதே மாதிரி அந்த ஆட்டோக்காரனையும் புடிக்க முடியாது.... ஒருவேளை அப்படியொரு ஆளே இல்லையோ என்னவோ.... இல்லன்னா பேரு போலியா இருக்கும்..... இந்த கால டயல்ட் லிஸ்ட்லருந்து டெலிட் பண்ணிருங்க சார்னு சொன்னப்பவே லேசா இடிக்கிதேன்னு நினைக்காம அவனோட புத்திசாலித்தனத்த பாராட்டுன நம்ம முட்டாத்தனத்த என்னன்னு சொல்றது என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டான்.... அன்று மட்டும் அந்த எண்ணை சேமித்திருந்தால் இப்போது அந்த எண்ணின் விவரங்களையும் தேடி பிடித்திருக்கலாமே.....

'யோசிச்சிட்டேன் பாஸ்.... ஒன்னும் புடிகிடைக்கலை.' என்ற வசந்தின் குரல் கேட்டு மீண்ட ராஜசேகர் அவனை பார்த்து முறைத்தான்....

'என்ன பாஸ்... எதையோ டீப்பா திங்க் பண்ணிக்கிட்டிருந்தீங்க போலருக்கு..... டிஸ்டர்ப் பண்ணிட்டனா?' என்றான் வசந்த் புன்னகையுடன். 

இல்லை என்பதுபோல் தலையை அசைத்த ராஜசேகர் தொடர்ந்தான். 'ராமராஜனும் அந்த ஆட்டோக்காரனும்  கோபாலுங்களோட ஆளுங்கன்னு நம்ம கிட்ட எஸ்டாபிளிஷ் பண்ணிக்க போட்ட ப்ளான்தான் அது. அதாவது மாதவிய மர்டர் பண்றதுக்கு கோபாலுக்கு மோட்டிவ் இருக்குன்னு காமிக்கிறதுக்காக அவர் எங்கிட்ட வந்து அந்த வீட்டோட டாக்குமென்ட வாங்கிக்கிட்டு போனார்னும் அப்போ கார்ல போகாம ஒரு ஆட்டோவுல ஏறி போனார்னும் சொன்னது. ரெண்டுமே உண்மையில்ல... ஏன்னா கோபால் அன்னைக்கி சாயந்தரம் மறுபடியும் மாதவி வீட்டுக்கு போகவே இல்லை..... ராமராஜன் சொன்ன முதல் பொய்யை மெய்யின்னு காட்டிக்கறதுக்கு எங்கிட்ட சொன்ன ரெண்டாவது பொய்தான் யாரோட ஃபோனையோ எங்கிட்ட குடுத்து மணிங்கற ஆளுக்கு ஃபோன் பண்ண வச்சது. மணிங்கற பேர்ல எங்கிட்ட ஃபோன்ல பேசினது முருகேசனா கூட இருக்கலாம்.... ஏன் ராமராஜனே கூட குரல மாத்தி பேசியிருக்கலாம்.... நா பண்ண முட்டாத்தனம் அந்த செல்ஃபோன் நம்பர சேவ் பண்ணாம விட்டது..... அதுக்கப்புறம் கோபால் அவரோட வய்ஃப டைவர்ஸ் பண்ணிட்டு மாதவிய மேரேஜ் பண்ணிக்கப் போரேன்னு எங்கிட்ட சொன்னார்னு ராமராஜன் சொன்னது மூனாவது பொய்....'

'எப்படி சொல்றீங்க பாஸ்...? நீங்க அந்த மல்லிகா மேடத்த ஆஸ்ப்பிட்டல்ல போயி மீட் பண்ணப்ப அவங்களும் அதையேத்தான் சொன்னாங்கன்னுதான் சொன்னீங்க?'

'டேய்.... எதையாவது முழுசா கேக்கறியா?' என்று எரிந்து விழுந்தான் ராஜசேகர்... 'நா என்ன சொன்னேன்? கோபாலோட பிஏ அப்படி எங்கிட்ட சொன்னார்னு மல்லிகா சொன்னதாத்தான உங்கிட்ட சொன்னேன்? இது எல்லாத்துக்கும் பின்னால இருக்கறது ராமராஜந்தான்டா..... அவந்தான் முருகேசன ஆட்டிவைக்கிற சூத்திரதாரியா? இல்ல... முருகேசன்கிட்ட மாட்டிக்கிட்டு வேற வழியில்லாம இப்படியெல்லாம் பொய் சொன்னாராங்கறதுதான் டவுட்டாருக்கு!.....'

'அப்போ கோபாலோட வய்ஃப் அவர் கிட்டவே கேட்டப்போ ஆமா என்ன இப்போன்னு கேட்டதா சொன்னாங்களே? அது?'

'கோபாலுக்கு உண்மையிலேயே அந்த மாதிரியான ஐடியா இருந்துருக்க வாய்ப்புருக்கு.... அதுமட்டுமில்ல அந்த வீட்டையும் மாதவிக்கே எழுதிக்குடுக்கற ஐடியாவும் இருந்துருக்கணும்.  அதனாலதான் மகாதேவன் சார கூப்ட்டு ஒரு கிஃப்ட் டீட் ரெடி பண்ண சொல்லியிருக்கார். ஆனா அது தன்னால வந்த ஐடியாவா இல்ல முருகேசன் குடுத்த ப்ரஷர்னால வந்த ஐடியாவான்னு தெரியல.'

'கரெக்ட் பாஸ்... இப்பத்தான் எல்லாம் ஞாபகம் வருது....'

'எல்லாமே லேட்டாத்தான வருமா?' என்ற ராஜசேகர் தொடர்ந்தான். 'சரி.... அது இருக்கட்டும்.... இப்ப எதுக்கு ராமராஜன் ரிசைன் பண்ணார்? ஒருவேளை நா அவர் சொன்னது பொய்யின்னு கண்டுபுடிச்சிட்டேன்னு நினைச்சிருப்பாரோ?'

'இருக்கும் பாஸ்....' என்ற வசந்த் சட்டென்று 'பாஸ் எனக்கு ஒரு ஐடியா?' என்றான் முகமெல்லாம் மலர்ந்து.

'என்ன?'

'பேசாம ஒங்க செல்ஃபோன் கால் டீட்டெய்ல்சும் என் ஃப்ரென்ட் கிட்ட சொல்லி எடுத்து பாத்துறலாமா? அந்த ஆட்டோக்காரன் செல்ஃபோன் நம்பர புடிச்சிறலாமே?'

'கிடைச்சி....? இப்ப ராமராஜன் நம்பரும்தான் நம்ம கிட்ட இருக்கு... எடுத்து டயல் பண்ணி பாரேன்... நிச்சயம் அது இப்ப யூஸ்ல இருக்காது......'

வசந்த் உடனே எடுத்து அந்த எண்ணை அழைத்தான்..... 'நாட் ரீச்சபிள்னு வருது பாஸ்' என்றான். 

'சிம்ம எடுத்து போட்டுட்டாலும் அப்படித்தான்டா வரும்.....'

'ஆனா பாஸ்.... அந்த ஃபோன்ல வேற ஏதாச்சும் சிம் போட்டாலும் அந்த போனோட IMIE நம்பர வச்சி புடிச்சிறலாம் பாஸ்....'

'டேய்... நாம என்ன போலீசா? இதெல்லாம் உன்னோட ஃப்ரென்டுக்கிட்ட போயி கேக்காத... அப்புறம் அவனுக்கு சந்தேகம் வந்துரும்..... கால ட்ரேஸ் பண்ணி லொக்கேஷன சொல்ற விஷயம் எல்லாம் போலீஸ் கேட்டாத்தான் செய்வாங்க.... அப்புறம் இப்ப கிடைச்சிக்கிட்டிருக்கற கால் லிஸ்ட் கூட ஃப்யூச்சர்ல கிடைக்காம போயிரும்....'

'பாஸ் இன்னொரு ஐடியா!'

'இதாவது உருப்படியா இருக்குமா?'

'தெரியல பாஸ்.' என்று சிரித்தான் வசந்த். 'இருந்தாலும் சொல்றேன்.... இப்ப உங்க செல்ஃபோன ஒங்க ஃபேஸ்புக் ப்ரொஃபைல்லயோ இல்ல ஒங்க blog ப்ரொஃபைல்லையோ குடுத்து வச்சிருந்தீங்கன்னா... உங்க சென்ஃபோன நம்பர கூகுள்ல அடிச்சா அந்த சைட்லருந்து உங்க அட்ரஸ புடிச்சிறலாம்... நா என்னுத அடிச்சி பாத்துருக்கேன்..... வந்துருக்கு....'

'அட! அப்படியா? நா கேள்விபட்டதே இல்லையே? உண்மையாவா சொல்ற?'

'ஆமா பாஸ்... ஆனா இந்த ஆளுங்களுக்கு அதெல்லாம் எங்க இருக்கப் போவுது?'

'சொல்ல முடியாது.... ஆனா ராமராஜனோட அட்றஸ் வேணும்னாதான் அவரோட ஆஃபீஸ் ரெக்கார்ட்ல இருக்குமே....? நாம கேட்டு தரலைன்னாலும் சீனிவாசன் சார் கிட்ட சொல்லி சொல்லச் சொன்னா கிடைச்சிறப்போவுது...? ஆனா அவர் அங்க இருந்தாத்தான? நாம நினைக்கறா மாதிரி அந்தாளுக்கும் முருகேசனுக்கும் கனெக்‌ஷன் இருந்துதுனா இந்நேரம் ரெண்டு பேருமே அப்ஸ்கான்டாயிருப்பாங்க..... என்ன சொல்ற?'

'ஆமா பாஸ்....' 

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தவாறு ராஜசேகர்  மணியை பார்த்தான். இரவு ஒன்பதைக் கடந்திருந்தது. 

'சரிடா.... எனக்கு நாளையிலருந்து இந்த வாரம் முழுசும் கேஸ் இருக்கு.... ஒனக்கு வேற ஏதாச்சும் அசைன்மென்ட்ஸ் இருக்கா?' என்றான்..

'ஆமா பாஸ்... பிரைவேட் இன்வெஸ்ட்டிகேஷன்தான்.... நாலஞ்சி நாள் வேலை... அடுத்த ஹியரிங் வரைக்கும் ஃப்ரீதான? அதான் உங்கக்கிட்ட சொல்லிட்டு சொல்றேன்னுட்டு சொல்லியிருக்கேன்.'

'லோக்கலா.... அவுட் ஸ்டேஷன் போணுமா?'

வச்ந்த் சிரித்தான். 'அம்மாவ விட்டுட்டு எங்க பாஸ் போறது? இனி கொஞ்ச நாளைக்கி லோக்கல் அசைன்மென்ட்ஸ்தான்..'

'சரி.... நெக்ஸ்ட் ஹியரிங் அடுத்த மண்டே இல்லன்னா டியூஸ்டே இருக்கும்னு நினைக்கேன்... எதுக்கும் டெய்லி காஸ்லிஸ்ட பாத்து வச்சிக்க.... நா அந்த தன்ராஜ எப்படியெல்லாம் மடக்கலாம்னு திங்க் பண்ணி வைக்கிறேன்.'

'பாத்து பாஸ்.... அந்த ஆள் ஏற்கனவே நம்ம மேல கடுப்புல இருப்பார்!' என்றான் வசந்த் புன்னகையுடன். 'அத்தோட அவர் இதுவரைக்கும் டீல் பண்ண எல்லா கேஸ்லயுமே கன்விக்‌ஷன் வாங்குனவராம்.'

'நானும் கேள்விப்பட்டேன்.... ஆனா அதுலல்லாம் அக்யூஸ்ட் கன்ஃபெஸ் பண்ண கேசஸ்சாம்.... மனுஷன் கன்ஃபெக்‌ஷன் வாங்குறதுல எக்ஸ்பர்ட் போலருக்கு... ஆனா கோபால்கிட்ட அந்த வித்தைய காட்ட முடியலையே? அத்தோட இன்னொரு விஷயமும் இருக்குடா.'

'என்ன பாஸ்?'

'நா மாதவி வீட்டுக்குள்ள போயி பாத்தப்போ நிறைய விஷயத்துல போலீஸ் கோட்டை விட்டுருக்கறத பாத்தேன்....' என்ற ராஜசேகர் அவன் மாதவி வீட்டில் எடுத்திருந்த புகைப்படங்களையும் ஒரு வீடியோ கோப்பையும் வசந்திடம் காட்டினான். 

அவற்றை உன்னிப்பாக பார்த்த வசந்த் சட்டென்று நினைவுக்கு வந்தவனாய், 'பாஸ் இதப்பாத்ததும்  நீங்க காலையில சொன்ன முதல் விஷயத்துல நா கலெக்ட் பண்ண விஷயம் ஞாபகத்துக்கு வந்திருச்சி..... முருகேசனோட கால் லிஸ்ட்ட பத்தி சொல்லணும்னு நினைச்சிக்கிட்டிருந்ததுல இந்த விஷயம் மறந்தேபோச்சி.'

'மாதவி வீட்ட கலைச்சி போட்டது யார்னுதான? சரி.. இப்ப சொல்லு......'

'அத செஞ்சது போலீஸ் இல்ல பாஸ்.'

'பின்னே....?'

'சொல்றேன்.... அதுக்கு முன்னால இன்னொரு விஷயம். அன்னைக்கி மர்டர் இன்ஃபர்மேஷன் கிடைச்சப்போ E1 ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரும் இல்லையாம் அவருக்கு கீழ இருந்த ரெண்டு எஸ்.ஐகளும் இல்லையாம்.... ஸ்டேஷன்ல ஒரு எஸ்.எஸ்.ஐயும் ரெண்டு பிசிங்க மட்டுந்தான் இருந்தாங்களாம்... அதுல ஒரு பிசிய ஸ்டேஷன்ல விட்டுட்டு மத்த ரெண்டு பேரும்தான் க்ரைம் சீனுக்கு போயிருக்காங்க.'

'அப்படியா?' என்றான் ராஜசேகர் வியப்புடன், 'என்னடா இது அக்கிரமம்? க்ரைம் சீன் இன்வெஸ்ட்டிகேஷனுக்கு எஸ்.ஐ ராங்குக்கு கீழ இருக்கற யாரையும் அனுப்பக்கூடாதுங்கறது கூட தெரியாம ஒரு ஸ்டேஷனா?'

'வேற வழியில்லையாம் பாஸ்.... பெருமாள் கமிஷனர் ஆஃபீசுக்கும் தன்ராஜ் ஒரு கேஸ்ல விட்னஸ் குடுக்கறதுக்கும் போய்ட்டாங்களாம். இன்னொரு எஸ்.ஐ.க்கு ஒரு பந்தோபஸ்த் ட்யூட்டி இருந்துச்சாம்.  அத விட பெரிய விஷயம் என்னன்னா....பாடிய அங்கருந்து மூவ் பண்ணிட்டு ஃபாரன்சிக், FIB ஆளுங்க அவங்க வேலைய முடிச்சிக்கிட்டு போனதுக்கப்புறம் தன்ராஜ் சீனுக்கு வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணாம ஒரு மணி போல ஸ்டேஷன்லருந்து போன ரெண்டு பேரும் வீட்ட பூட்டிக்கிட்டு ஸ்டேஷனுக்கு திரும்பி போய்ட்டாங்களாம்..... காமடியா இல்ல? மறுபடியும் தன்ராஜ் அந்த சீனுக்கு போனப்போ பகல் ரெண்டு மணிக்கி மேல ஆயிருச்சாம். அதுவரைக்கும் ஸ்பாட்ல எந்த செக்யூரிட்டியும் இல்ல...'

'நீ சொல்றத பாத்தா பாடிய அங்கருந்து மூவ் பண்ணதுக்கப்புறம் மறுபடியும் தன்ராஜ் அங்க போறதுக்குள்ள வேற யாரோ வீட்டுக்குள்ள போயி இந்த சேர்ச்ச பண்ணியிருக்காங்க.... அப்படித்தான?'

தொடரும்...6 comments:

வே.நடனசபாபதி said...

தொடரைப் படிக்கும் சுவாரஸ்யத்தில் நாற்காலியின் நுனிக்கே வந்துவிட்டேன்! காத்திருக்கிறேன் மேற்கொண்டு நடந்தவைகளை அறிய.

Packirisamy N said...

Fiction is more difficult than factual. Because, fiction need to have some logic. Interesting to read, how the jigsaw fits. Waiting for the next episode.

இராஜராஜேஸ்வரி said...

கோபாலின் மனைவி மல்லிகா தான் இன்னும் சந்தேக எல்லைக்குள் வராமல் இருக்கிறாள்..

அதையும் கொஞ்சம் முடிச்சுப்போட்டால் கதை எகிறும் ...!

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
தொடரைப் படிக்கும் சுவாரஸ்யத்தில் நாற்காலியின் நுனிக்கே வந்துவிட்டேன்! காத்திருக்கிறேன் மேற்கொண்டு நடந்தவைகளை அறிய.//

நீங்கள் காட்டும் ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...
Fiction is more difficult than factual. Because, fiction need to have some logic. //

You are right. In most of the Hitchcok movies he would unravel each and every knot beautifully through dialogues, which is very rare in our movies. Crime thrillers without logic is a joke. Movies can be made like that becuase scenes run through very fast. But not in novels.

Interesting to read, how the jigsaw fits. Waiting for the next episode.//

Thanks for your visit and comment.

டிபிஆர்.ஜோசப் said...

AM
இராஜராஜேஸ்வரி said...
கோபாலின் மனைவி மல்லிகா தான் இன்னும் சந்தேக எல்லைக்குள் வராமல் இருக்கிறாள்..

அதையும் கொஞ்சம் முடிச்சுப்போட்டால் கதை எகிறும் ...!//

ஆக்சுவலா அவங்களுக்கும் கோபால மாட்டிவிடறதுக்கு நல்ல மோட்டிவ் இருக்கு! வெய்ட் பண்ணி பாக்கலாம்.