08 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 40


'அப்படியா? அப்போ நிச்சயமா இதுக்கும் நா பொறுப்பில்லேன்னுதான் சொல்வார், பாருங்க.' என்றான் வசந்த்.

'பாக்கலாம்.. ஆனா அதுவே உண்மையாருந்தா நம்ம கேஸ் முடிஞ்சாப்பலதான்.... சார்ஜஸ் ஃப்ரேம் (Framing of charges) பண்ற ஸ்டேஜிலயே டிஸ்மிசல்க்கு மூவ் பண்ணிறலாம்... என்ன சொல்றே?'

'கரெக்ட் பாஸ்.... அப்படீன்னாத்தான் கோபால் DNAவுக்கு ஒத்துக்குவார். அப்படி அவர் ஒத்துக்கிட்டார்னா நாம ஜெயிக்கறது கன்ஃபர்ம் ஆயிரும்....'

'நீ சொல்றதும் சரிதான்.' என்று ஒத்துக்கொண்டான் ராஜசேகர். 'சரி, இன்னும் ரெண்டு சார்ஜஸ் இருக்கு. அதையும் படிக்கிறேன் கேளு.... இத அநேகமா பி.பி. சொல்லி சேத்துருப்பாங்கன்னு நினைக்கிறேன்...'  

'அப்படியென்ன பாஸ் புதுசா?'

'இது சார்ஜ் ஷீட்லருக்கற மூனாவது சார்ஜ்: 'ட்ரெஸ்பாஸ்' அதாவது கோபால் அனுமதியில்லாம மாதவி வீட்டுக்குள்ள போனாராம்....'

வசந்த் உரக்க சிரித்தான். 'ஹை! அதெப்படி பாஸ்?'

ராஜசேகர் பதிலளிக்காமல் ஒரு சில நொடிகள் யோசித்தான். 'ரீசன் இருக்குடா.... ஒன்னு, முதல் ரெண்டு சார்ஜஸ மட்டும் வச்சிக்கிட்டு ட்ரையலுக்கு போனா ரெண்டுமே படுத்துக்குமோன்னு பி.பி. பயந்துருப்பார். அதனால எதையாச்சும் அடிஷனலா சேத்தா ஒருவேளை அதுல எதுலயாச்சும் கன்விக்‌ஷன் கிடைச்சாலும் கோபால உள்ள அனுப்பிறலாம் இல்ல? பி.பிக்கு அதான வேணும்? ரெண்டாவது, லீகலா பார்க்கப் போனா  ஹவுஸ் ஓனர்னாலும் ஒருதடவ ரென்டுக்கு குடுத்தாச்சின்னா அந்த டெனன்டோட பர்மிஷன் இல்லாம அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சா அது trespassதான்... கோபாலுக்கும் மாதவிக்கும் ஏற்கனவே வீட்ட எழுதி குடுக்கறதுல தகராறு இருந்துருக்கு, அதனால அவளோட விருப்பம் இல்லாமத்தான் இவர் அந்த வீட்டுக்குள்ள போயிருப்பார்னு ப்ராசிக்யூஷன் ஆர்க்யூ பண்ணுவாங்கன்னு நினைக்கேன்... ஆனா அதனால ஒன்னும் பெருசா செஞ்சிர முடியாது.... இத நாம எப்படி ஃபேஸ் பண்றதுன்னு யோசிச்சி வை... பழைய ஜட்ஜ்மென்ட்ஸ் எதுலயாச்சும் இதுக்கு ஒரு சொலூஷன் இருக்கும்....'

வசந்த் தன் குறிப்பேட்டில் இதை குறித்துக்கொண்டான்... 'கண்டிப்பா பாஸ்.... பாத்து வைக்கிறேன். அப்புறம்?'

'தடயங்களை மறைத்தார், சாட்சிகளை கலைக்க முயற்சித்தார்னு ரெண்டு சார்ஜஸ்.... கடைசியா சொன்னதுக்கு ஏற்கனவே அவர பனிஷ் பண்ணியாச்சி..... எந்த தடயத்த கோபால் மறைச்சார்னு அவங்கதான் ப்ரூஃப் பண்ணணும்.... அத அவங்க செய்யிறப்ப எப்படி ரெஃப்யூட் (refute) பண்றதுன்னு யோசிக்கலாம்....'

'இதெல்லாம் சொத்த சார்ஜஸ் பாஸ்.... முதல் சார்ஜ் மட்டுந்தான் தன்ராஜ் மென்ஷன் செஞ்சிருப்பார். அதுக்கப்புறம் இருக்கறதெல்லாம் பி.பி.யோட வேலை... என்ன பாஸ்?'

'நானும் அப்படித்தான் நினைக்கேன்..... இதுல எல்லாத்துலயும் ரெண்டாவது சார்ஜ்தான் நமக்கு முக்கியமானது. கோபால்தான் இதுக்கு பொறுப்பு. அவர் DNAக்கு ஒத்துக்கிட்டு நெகட்டிவ்னு வந்துட்டா கேஸ் க்ளோஸ்....'

'கரெக்ட் பாஸ்... அதுக்கப்புறம் எந்த சாட்சியும் நிக்காது... இல்ல பாஸ்?'

'ஆமா.... சரி அது வுடு... நாம PM ரிப்போர்ட்ட பாக்கலாம்' என்றவாறு பிரேதப் பரிசோதனை அறிக்கையை எடுத்தான் ராஜசேகர். 

இதுல நமக்கு வேண்டியது ரெண்டு விஷயங்கள்.

1. மாதவி எப்ப இறந்தாங்கங்கறது.

2. அவங்க தலையில எங்க காயம் இருந்துதுங்கறது...'

'ஆமா பாஸ்.'

'மாதவியோட சாவு முதல்ல ராத்திரி ஏழுலருந்து எட்டுக்குள்ள போலீஸ் சொன்னாங்க... ஆனா அப்படி கரெக்டா சொல்ல முடியாது..... எட்டு மணிக்கி மேல எப்ப வேணும்னாலும் அவங்க இறந்துருக்கலாம்னு PMR சொல்லுது.... இது பிரகாரம் ரெண்டாவது அடி அதாவது ஏழு மணி வாக்குல பட்ட அடிதான் சிவியரா (severe) இருந்துருக்கணும்.... முதல் அடி பட்ட இடத்துலருந்து ரெண்டாவது அடி  கொஞ்சம் மேல பட்டுருக்கறதுனாலதான் ரெண்டையும் டிஸ்ட்டிங்விஷ் (distinguish) பண்ண முடிஞ்சிருக்கு போல... ரெண்டாவது அடிதான் கொஞ்சம் டீப்பா, ப்ராடா இருக்குதாம். இது சோபா கைப்பிடி மேல பட்டுத்தான் இருக்கணும்னு இல்லையாம்... முனை தடிச்ச (blunt edged) இரும்பு தடியாலயும் இருக்கலாமாம்...'

'என்னது இரும்புத் தடியா? ஆனா அப்படி எதையும் போலீஸ் மர்டர் ஸ்பாட்லருந்து சீஸ் பண்ணதா தெரியலையே?'

ராஜசேகர் சிரித்தான். 'அதனாலதான்டா தடயங்களை மறைச்சார்ங்கற சார்ஜும் இருக்கு?'

'பி.எம் ரிப்போர்ட்ல இந்த விஷயத்த பாத்ததுக்கப்புறந்தான் பி.பி.க்கு இந்த ஐடியாவே வந்துருக்கும்.' என்று சிரித்தான் வசந்த்.

'இருக்கும்.... ஆனா இதுக்கும் வாய்ப்பில்லைன்னு நினைக்கேன்... ஏன்னா மாதவி வீட்டு சோபா கைபிடியில ரத்தக்கறை இருந்ததாவும் அது மாதவியோட ரத்தம்தான்னும் forensic ரிப்போர்ட்ல சொல்லியிருக்கறதா பிஎம் பண்ண டாக்டரே மென்ஷன் செஞ்சிருக்கார்.... so there can not be any other tool or instrument... என்ன சொல்றே?'

'அப்படியே இருந்தாலும் கோபால் அதையும் எடுத்துக்கிட்டு போயிருக்க முடியுமா என்ன? அப்படீன்னா அந்த பக்கத்து வீட்டு லேடி அதையும் பாத்துருக்க சான்ஸ் இருக்கே.... நா அவங்கள மீட் பண்ணப்போ நா கோபால பாத்தேங்கறத கூட அவ்வளவு கன்வின்சிங்கா அவங்க சொல்லல பாஸ்.... கொஞ்ச நேரம் அவங்க ஹஸ்பன்டையே பாத்துக்கிட்டு இருந்துக்கிட்டு அப்புறந்தான் பாத்தேன்னு ஒரே வார்த்தையில சொன்னாங்க.... எனக்கென்னவோ போலீஸ் அவங்கள மிரட்டி சொல்ல வச்சிருப்பாங்கன்னு நினைக்கேன்...'

ராஜசேகர் வியப்புடன் வசந்தைப் பார்த்தான். 'இதென்னடா புது நியூஸ்...? நீ ஒன் ரிப்போர்ட்ல அவங்க ஹெசிடேட் (hesitate) பண்ணாங்கன்னு சொல்லவே இல்லை?'

வசந்தும் வியப்புடன் ராஜசேகரைப் பார்த்தான். 'இருக்காதே பாஸ்.... நா பாத்தத, கேட்டத அப்படியே சொல்லியிருந்தேனே?'

'டேய், டூப்படிக்காதே' என்றான் ராஜசேகர் எரிச்சலுடன். 'நா படிச்சிருந்தா நீ சொன்னத கேட்டதும் சர்ப்ரைஸ் ஆயிருப்பேனா.... நீ அவங்க ஹெசிடேட் பண்ணத ஹைலைட் பண்ணவே இல்லை...'

'தெரியலையே பாஸ்.... விட்டுப்போயிருக்கும் போலருக்கு...'

'நல்லா விட்டே போ... இந்த பாய்ன்ட் கேஸ இன்னும் காம்ப்ளிகேட்டட் ஆக்கும்டா....'

'என்ன சொல்றீங்க பாஸ்?'

ராஜசேகர் சிரித்தான். 'டேய் நா காம்ப்ளிக்கேட்டட் ஆக்கும்னு சொன்னது நமக்கில்ல... ப்ராசிக்யூஷனுக்கு...'

அப்போதும் விளங்காததுபோல் விழித்தான் வசந்த். 'எப்படி சொல்றீங்க?'

'டேய்.... அந்த லேடி உண்மையிலேயே கோபால அங்க பாக்காம போலீஸ் சொல்லி சொல்லியிருக்கலாம்னு நீ ஒரு ஹின்ட் குடுத்துருக்கே இல்ல... இது ஒன்னே போறும்... அதுதான் உண்மைன்னா அந்த ஆங்கிள்ல அந்த லேடிய நம்ம க்ராஸ்ல மடக்குற விதத்துல மடக்குனா அது வெளிய வந்துறாது? அப்புறம் கேஸ் டிஸ்மிஸ்தான்....' சீனிவாசன் முந்தைய தினம் மாலை தன்னிடம் கூறியதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. கோபாலை அந்த வீட்டு வாசலில் பார்த்ததையே தயக்கத்துடன் சொன்ன ஒருவரை அவர் வீட்டிற்குள் இருந்து வந்ததை பார்த்ததாகவும் சாட்சியம் அளிக்க காவல்துறை முயல்வது எந்த அளவுக்கு புத்திசாலித்தனம்?

'என்ன பாஸ் யோசிக்கிறீங்க?'

'இல்லடா' என்று பதிலளித்த முந்தைய தினம் சீனிவாசன் தன்னிடம் தெரிவித்ததை வசந்திடம் விவரித்தான். 

'அட! இப்படி வேற பண்ணாங்களா? அப்ப அந்த லேடிய மறுபடியும் மீட் பண்ண வேண்டியதுதான் பாஸ்?'

'எதுக்கு?'

'அவர அங்க பாக்கவே இல்லைன்னு சொல்ல வைக்கத்தான்.'

'டேய்... இடியட் மாதிரி பேசாத' என்று எரிந்து விழுந்தான் ராஜசேகர். 'கோபால் உள்ள போனா மாதிரி நீயும் உள்ள போவணுமா? டிஃப்ன்ஸ் லாயர்னாலும் சாட்சிய கலைக்க முயற்சி செஞ்சார்னு உன்னையும் உள்ள போட்ருவாங்க... ஜாக்கிரதை...'

'சாரி பாஸ்... கொஞ்சம் எமோஷனலாய்ட்டேன்..'

'நல்லா ஆனே போ.... அந்த மாதிரி முட்டாள்தனமா எதையாச்சும் செஞ்சி வைக்காத... போலீஸ் என்ன வேணும்னாலும் செஞ்சிக்கட்டும்.. இனி ட்ரைய்ல்ல பாத்துக்கலாம்.... சரியா?'

'சரி மேல கேளு, பின்னந்தலையில பட்ட அடிமட்டுமில்ல, மாதவியோட முகத்துல அதாவது வலது கண்ணுக்கு கொஞ்சம் மேல டீப்பா ஒரு க்னைஃப் கட் (knife cut) மாதிரி ஒரூ வூன்டும் இருக்காம். அதுலருந்து வடிஞ்ச ரத்தத்துல வலது கண்ணோட பார்வையே போயிருக்க வாய்ப்புருக்காம். இது எப்ப, எப்படி ஏற்பட்டிருக்கும்?'

மாதவியின் தலையில் ஏற்பட்ட முதல் காயத்திற்கு தானே பொறுப்பு என்று நினைத்தான் ராஜசேகர். அவன் வலுவுடன் அவளை தள்ளிவிட்டதால் மாதவி அங்கிருந்து சுமார் நான்கடி தூரத்தில் இருந்த சோபாவின் கைப்பிடியில் விழுந்து அடிபட வாய்ப்புள்ளது என்று நினைத்தான். இரண்டாவது அடி, கோபால் மீண்டும் மாலை ஆறே முக்கால்-ஏழு மணிக்கு அங்கு சென்றபோது ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே அவள் அடிப்பட்டுக் கிடந்ததையும் வாசற்கதவருகே தேநீர் அருந்திய கோப்பை ஒன்று உடைந்து கிடந்ததையும் கண்ட கோபால் தான் அங்கிருந்து சென்றதற்குப் பிறகு வேறு யாரோ ஒருவர் அங்கு வந்திருந்ததை உணர்ந்திருப்பார். தான் அவளை திருமணம் செய்துக்கொள்வதாக வாக்குறுதியளித்திருந்தும் தன் தலை மறைந்ததும் இன்னொருவனுடன் அவள் கூடி சல்லாபித்திருக்கக் கூடும் என்ற நினைப்பு அவரை கொதிப்படைய செய்திருக்க வேண்டும். கட்டுக்கடங்காமல் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஏற்கனவே அடிபட்டுக் கிடந்தவளுடைய தலையை பிடித்து அதே சோபா கைப்பிடியில் இடித்து கொன்றிருக்க வேண்டும்..... அந்த இடியின் தாக்கம் தாங்காமல் அவளுடைய தலை சரிந்து அருகில் இருந்த கண்ணாடி டீப்பாயில் இடித்து நெற்றியில் வெட்டு பட்டிருக்க வேண்டும் என்று நினைத்த ராஜசேகர் குற்றப்பத்திரிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களில் க்ரைம் சீன் புகைப்படங்கள் உள்ளனவா என்று தேடினான்.

'என்ன பாஸ் தேடுறீங்க?' என்றான் வசந்த்.

'க்ரைம் சீன் ஃபோட்டோஸ் தரலையா?'

'இல்ல பாஸ்... அத காப்பி போட முடியாதாம்.. .ட்ரையல் சமயத்துல பாத்துக்க வேண்டியதுதான்னு பாஸ்கர் சொல்லிட்டார்.'

'அடப் போடா' என்றான் ராஜசேகர் சலிப்புடன்.... 'பாக்கவாவது தந்தாரா இல்லையா?'

'இல்ல பாஸ்.... அதெ ரிஜிஸ்ட்ரார்க்கு பெட்டிஷன் பண்ணி வாங்கிக்கணும்னு சொல்லிட்டார்.... அவர் கிட்டருந்து போயிருச்சாம்....'

'ச்சை.. இப்படியாவும்னு தெரிஞ்சிருந்தா நேத்து சாயந்தரம் கோர்ட் டைம் முடியறதுக்குள்ள போயி பாத்துருக்கலாம்....' என்று ஏமாற்றத்துடன் கூறிய ராஜசேகர் சிறிது நேரத்தில் சகஜ நிலமைக்கு வந்தான். 

'மாதவி வீட்டு சாவியவாவது பாஸ்கர்கிட்டருந்து வாங்கினியா?'

'அத ஸ்டேஷன்லதான் வாங்கிக்கணும்னு சொல்லிட்டார் பாஸ்..... நீங்க இங்க வெய்ட் பண்ணிக்கிட்டு இருப்பீங்களேன்னுட்டு நேரா இங்க வந்துட்டேன்... இனி நாளைக்கித்தான்....'

'சரி.... நாளைக்கி நேரா அங்க போயி ஒரு ரிக்வெஸ்ட் எழுதிக்குடுத்து வாங்கிட்டு வா....' என்றான் ராஜசேகர் 'அதுக்கு முன்னால கோர்ட் ஆர்டர் கையெழுத்தாயிருச்சான்னு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டு போடா.... அந்த தன்ராஜ் அவ்வளவு ஈசியா சாவிய குடுத்துறமாட்டார்... ஆர்டர் கைக்கு வரலேன்னு சொன்னாலும் சொல்வார்.... பாத்துக்கோ..'

'யெஸ் பாஸ்...' என்று பதிலளித்த வசந்த்... 'பி.எம். ரிப்போர்ட்ட படிச்சிட்டு கொஞ்ச நேரம் அப்படியே ஒக்காந்துட்டீங்களே பாஸ்.... எதுக்கு?' என்றான் வியப்புடன்.

தொடரும்..10 comments:

வே.நடனசபாபதி said...

பி‌பி தடுக்குக் கீழே நுழைந்தால், பிராசிக்யூஷன் வழக்கறிஞர் கோலத்திற்கு கீழே நுழைவார் போல இருக்கிறதே. தொடர் சுவரஸ்யமாய் போய்க்கொண்டிருக்கிறது துரந்தோ எக்ஸ்பிரஸ் இரயில் போல்!

Packirisamy N said...

//அவர் DNAக்கு ஒத்துக்கிட்டு நெகட்டிவ்னு வந்துட்டா கேஸ் க்ளோஸ்....'//

பாசிடிவ்னு வந்துட்டா, கோபால் க்ளோஸ் இல்லையா?

G.M Balasubramaniam said...

இதுவரை படித்ததில் ராஜசேகர் மறுபடியும் மாதவி வீட்டுக்குப் போனதாகச் செய்தி இல்லை. ஆனால் மரணம் மாலை ஏழரைக்கு மேல்தான் நடந்திருக்கவேண்டும் என்பது PMR ஆகவே ராஜசேகர் சொந்த செலவில் சூனியம் வைக்கச் சான்ஸ் குறைவு. கோபாலுக்கு தண்டனை கிடைத்தாலும் யாரும் கவலைப் படப் போவதில்லை.பார்ப்போம். எப்படி கதை நகருகிறது என்று.

Sasi Kala said...

நான் நினைக்கிறேன் அப்படியே திருப்பி இந்த வக்கில் மாட்டும் படி எதாவது நடக்கும்என ...பார்க்கலாம்.

இன்று வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தி இருக்கேன். வருக.

http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html?showComment=1381289857959#c6032878679408769451

டிபிஆர்.ஜோசப் said...

வே.நடனசபாபதி said...
பி‌பி தடுக்குக் கீழே நுழைந்தால், பிராசிக்யூஷன் வழக்கறிஞர் கோலத்திற்கு கீழே நுழைவார் போல இருக்கிறதே. தொடர் சுவரஸ்யமாய் போய்க்கொண்டிருக்கிறது துரந்தோ எக்ஸ்பிரஸ் இரயில் போல்//

இதே வேகத்தில் கொண்டு சென்று முடித்துவிட வேண்டும் என்பதுதான் என் ஆவல்...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...
//அவர் DNAக்கு ஒத்துக்கிட்டு நெகட்டிவ்னு வந்துட்டா கேஸ் க்ளோஸ்....'//

பாசிடிவ்னு வந்துட்டா, கோபால் க்ளோஸ் இல்லையா?//

ஓரளவுக்கு உண்மைதான். அவர் மாதவிக்கு வீட்டிற்குள் சென்றிருந்தார் என்பது நிரூபணமாகும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
இதுவரை படித்ததில் ராஜசேகர் மறுபடியும் மாதவி வீட்டுக்குப் போனதாகச் செய்தி இல்லை. ஆனால் மரணம் மாலை ஏழரைக்கு மேல்தான் நடந்திருக்கவேண்டும் என்பது PMR ஆகவே ராஜசேகர் சொந்த செலவில் சூனியம் வைக்கச் சான்ஸ் குறைவு. கோபாலுக்கு தண்டனை கிடைத்தாலும் யாரும் கவலைப் படப் போவதில்லை.//

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...

டிபிஆர்.ஜோசப் said...

ண்டுக்கல் தனபாலன் said...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...//

பார்த்தேன். தகவலுக்கு நன்றி.

இளமதி said...

வணக்கம் சகோதரரே!

வலைச்சரத்தில் இன்று உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன். வாழ்த்துக்கள்!

முதலில் என்னிடம் உள்ளே இருப்பதைக் காட்டமாட்டேனென முரண்டு பிடித்துத் துள்ளியது உங்கள் தளம்..
சிறிது நேரத்தின்பின் உங்கள் வலைப்பூப் பக்க முகவரியின் இறுதியில் http://ennulagam.blogspot.com/ncr

என மாற்றமிட்டுட்டுச் (சேர்க்கும்படி முன்பு அறிந்ததைச்) சேர்க்க ஒருவாறு சாந்தமாகி வழிவிட்டது..:)

அருமையாக பல்சுவைகளை அள்ளித் தந்துள்ளீர்கள் இங்கே.. ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும்.

தொடர்கிறேன்... வாழ்த்துக்கள் மீண்டும்!