03 October 2013

சொந்த செலவில் சூன்யம் - 36


ராஜசேகர் தன்னுடைய அலுவலகத்தை அடைந்தபோது வசந்த் வந்திருக்கவில்லை.

அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்தவன் அலுவலகத்தை திறந்து ஏசியை ஆன் செய்த கையோடு மின்விசிறியையும் ஓடவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான். என்னதான் ஏசி இருந்தாலும் அதன் குளுமையை அறையெங்கும் பரப்புவது மின்விசிறிதான். உச்சி வெயிலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வந்தவனுக்கு மின்விசிறியின் காற்று சற்றே இதமளித்தது.

கைப்பெட்டியை திறந்து தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த வழக்கு சம்மரியை (summary) எடுத்து மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்த்தான். வசந்த் ஊரில் இல்லாத கடந்த இரண்டு நாட்களில் தான் கண்டுபிடித்தவைகளை அப்படியே வசந்திடம் கூறுவதா வேண்டாமா என்று சிறிது நேரம் யோசித்தான். 

எப்படியிருந்தாலும் அவன் மாதவியின் வீட்டுக்கெதிரில் இருந்த பப்ளிக் பூத் மற்றும் பழமுதிர்சோலைக்கு சென்று வந்ததைப் பற்றி நிச்சயம் கூற முடியாது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல். அங்கு தன்னை சந்தித்த ராமராஜன் என்றாவது ஒருநாள் 'சார நா அன்னைக்கி அங்க பாத்தேன்' என்று வசந்திடம் கூறிவிட்டால்.... என்றும் சிந்தனை ஓடியது. சரி, அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். என்னதான் வசந்த் அவனுடைய அசிஸ்டென்ட் என்றாலும் மாதவியுடன் தான் வைத்திருந்த தகாத உறவை அவனுடன் பகிர்ந்துக்கொள்ள முடியுமா என்ன?

அடுத்தது, அன்று கோபாலை மாதவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டி தன்னிடம் கூறியவற்றை அப்படியே வசந்திடம் கூறிவிடுவது முறையாகுமா என்கிற எண்ணமும் எழுந்தது. நான் இதை வேறு எவரிடம் கூறிவிட மாட்டேன் என்கிற நம்பிக்கையில் அவர் தன்னிடம் கூறிய ரகசியமாயிற்றே...? மேலும் அவருடைய சாட்சி ஒன்றே போதுமே இந்த வழக்கில் கோபாலுக்கு தண்டனை பெற்றுத்தர? 

இந்த இரண்டு சம்பவங்களும்தான் வசந்த் ஊரில் இல்லாத இந்த இரண்டு நாட்களில் நடந்தவைகளில் முக்கியமானவை. அவன் ஏதாச்சும் புதுசா இருக்கா சார்னு கேட்டப்போ நிறைய இருக்கு வா சொல்றேன்னு சொல்லிட்டு இந்த இரண்டு நிகழ்வுகளையும் கூறாமல் இருந்தால் அவன் என்ன நினைத்துக்கொள்வான்? என்னடா இது சோதனை என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டவனுக்கு சட்டென்று கோபாலின் முந்தைய வழக்கறிஞரை சந்தித்துப் பேசியது நினைவுக்கு வந்தது.... சரி அதை சொல்லி சமாளிப்போம். இருந்தாலும்.. அவன் கேட்டப்போ பெருசா ஒன்னும் இல்லைன்னு சொல்லியிருக்கலாம். நுணலும் தன் வாயால் கெடும் என்பது உண்மைதான் போல...

'என்ன பாஸ், ரொம்ப டீப்பா திங்க் பண்ணிக்கிட்டு இருக்கீங்க போல?' என்ற குரல் கேட்டு நிமிர்ந்தவன் எதிரில் வசந்த் ஒரு விஷம புன்னகையுடன் நிற்பதைக் கண்டான். 'நா வந்து நின்னு முழுசா ஒரு நிமிஷம் ஆச்சி... அப்படியென்ன யோசனை பாஸ்?'

'ஒன்னும் இல்லடா' என்று சமாளித்தான் ராஜசேகர். 'எல்லாம் இந்த கேச பத்தித்தான். முதல்ல உக்கார்.

'வசந்த் தன் தோளில் இருந்த லேப்டாப் பையை கழற்றி காலடியில் வைத்துவிட்டு அமர்ந்தான். 'லேப்டாப்புன்னுதான் பேரு... என்னா வெய்ட் பாஸ்... இத தூக்கி தூக்கியே ஷோல்டர் இறங்கிரும் போலருக்கு.'

'ஏன்டா இப்பல்லாம் லைட் வெய்ட்டுன்னு நிறைய வந்துருக்காமே?'

வசந்த் சிரித்தான். 'இந்த கேஸ்ல ஜட்ஜ்மென்ட் வந்ததும் முதல் வேலையா அந்த மாதிரி ஒன்னு வாங்கிரணும் பாஸ்.'

ராஜசேகரும் சிரித்தான். 'அப்பா நாமதான் ஜெயிக்கப்போறோம்ற?'

'பின்னே.... அதுல சந்தேகம் வேறயா?'

'சரி... அந்த மாதிரி திங்கிங்கும் இப்ப நமக்கு தேவைதான்....' என்ற ராஜசேகர், 'என்ன நடந்துதுன்னு சொல்றதுக்கு முன்னால ஒரு அர்ஜன்ட் விஷயம்... மண்டே கோர்ட்ல நாம செய்ய வேண்டிய முதல் வேலை...'

வசந்த் தன் காலடியில் இருந்த லேப்டாப் பையில் வைத்திருந்த தன்னுடைய குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தான். 'சொல்லுங்க பாஸ்.'

'முதல் வேலையா மாதவி வீட்டுல போலீஸ் போட்டு வச்சிருக்கற சீல ரிமூவ் பண்ணிட்டு ரீப்பொசிஷன் கேக்கணும். இன்னைக்கே பெட்டிஷன் ரெடி பண்ணிறு...'

'எதுக்கு பாஸ்?'

'ரீசன் இருக்குடா... இந்த கேஸ எடுத்ததுலருந்தே அந்த வீட்டுக்குள்ள ஒருதடவையாவது நாம போயி பாத்துறணும்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்.. நேத்து ராமராஜன மீட் பண்ணப்போதான் அது போலீஸ் கஸ்டடியிலருக்கறது தெரிஞ்சிது... அது நம்ம கையில வர்ற வரைக்கும் நாம நினைச்சது நடக்காது....அதான் அர்ஜன்ட்னேன்..' ஆனால் ராஜசேகரின் நோக்கம் அதுவல்ல... அந்த வீட்டில் தன்னைக் காட்டிக்கொடுக்கக் கூடிய பொருட்கள் ஏதாவது உள்ளனவா என்பதை தெரிந்துக்கொள்வதுதான் அவனுடைய நோக்கம். இதை வசந்திடம் எப்படி சொல்ல முடியும்?

'என்னது, நீங்க ராமராஜன மீட் பண்ணீங்களா?'

'சொல்றேன்.... அதுக்கு முன்னால் இது ரொம்ப முக்கியம்னு பட்டுது.... நாளைக்கே நாம பெட்டிஷன் ஃபைல் பண்ணலன்னா... அப்புறம் மஜிஸ்டிரேட் கேஸ செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாத்தனதுக்கப்புறம் அந்த வீடு நம்ம கைக்கு வர்றதுக்கு இன்னும் ரெண்டு வாரம் ஆயிரும்... அதனாலதான் சொல்றேன்.'

'எனக்கு இன்னும் புரியல பாஸ்... அந்த வீட்டுக்குள்ளருந்து என்னத்த கண்டுபுடிக்கப் போறீங்க?

'எல்லாத்தையும் சொல்றேன்... ஆனா ஒன்னொன்னாத்தான சொல்ல முடியும்?'

வசந்த் சிரித்தான். 'சாரி பாஸ்.... சொல்லுங்க..'

'பிராசிக்யூஷன் தரப்புல மாதவிய யாரோ வேணும்னே தலையை புடிச்சி சோபா கைமேல இடிச்சி போட்டுட்டு போய்ட்டாங்கன்னு வாதாடுவாங்கன்னு நினைக்கிறேன். ஆனா அந்த மாதிரி அடி கால் இடறி பின்பக்கமா விழுந்தாலும் அடிபட சான்ஸ் இருக்குன்னு நாம வாதாடணும். அதுக்கு மாதவி வீட்டு ஹால் என்ன சைஸ், அங்க எத்தன சோஃபா இருந்துது ஐ மீன் எத்தன பீஸ்... த்ரீ பீஸ் சோபான்னா எது எந்த இடத்துல எவ்வளவு இடைவெளியில இருந்துது, ஒவ்வொரு சோபாவும் எவ்வளவு பெருசு, அது டீப்பாய்லருந்தோ இல்லன்னா இன்னொரு சோஃபாவுலருந்தோ எவ்வளவு தூரத்துல இருந்துது அப்படீன்னு மெஷர் பண்ணி ஒரு டிராயிங்கோ இல்ல ஒரு ஸ்டில் ஃபோட்டோவோ எடுத்து வச்சிக்கணும்.... சோபாவுங்களுக்கு நடுவுல தரையில கார்பெட் ஏதாச்சும் இருந்துதா, மாதவி அந்த கார்பெட் மடிப்புல தடுக்கி பின்பக்கமா விழுந்தா சோபா ஹேன்டில்ல அடிபட சான்ஸ் இருக்கான்னுல்லாம் பாக்கணும். முடிஞ்சா ஒரு மாதவி உயரத்துலருக்கற ஒரு ஆள வச்சி வீடியோ எடுத்தாலும் தப்பில்லை.....'

வசந்த் மலைத்துப்போய் அமர்ந்திருந்தான். 'இந்த மாதிரியெல்லாம் எப்படி பாஸ் யோசிக்க முடியுது? இதுதான் உங்களுக்கு முதல் ஹோமிசைட் கேஸ்... இப்பவே இப்படின்னா..... பாஸ் நீங்கதான் ஃப்யூச்சர் ஜெத்மலானி!!' என்று சிரித்தான்.

'டேய்... வாறாத.... சட்டுன்னு தோனிய ஐடியா. அவ்வளவுதான்... இத அப்படியே கோர்ட்ல டெமோ பண்ண முடியுமா, அப்படியே பண்ணாலும் ஜட்ஜ இம்ப்ரெஸ் பண்ண முடியுமான்னுல்லாம் தெரியல... நீ என் அசிஸ்டென்டா இல்லாம கொஞ்ச நேரத்துக்காவது ஒரு டெவில்ஸ் அட்வகேட் மாதிரி நா சொல்றத க்ரிடிக்கலா அனலைஸ் பண்ணி நா சொல்றது ப்ராக்டிக்கலான்னு பாரு... என்ன?'

'சரி பாஸ்....I agree with your point... நமக்கு சூப்பர்னு படறது ஒருவேளை கோர்ட்ல சில்லியா தெரியும்னு சொல்றீங்க... அதான பாஸ்?'

'கரெக்ட்... நா சொல்லலலாம்னு நினைச்சத கரெக்டா சொல்லிட்டே.... அதேதான்...'

அதுமட்டுமில்ல, மாதவி வீட்டு ஹால் மட்டுமில்லாம வீடு முழுசையும் லென்ஸ் வச்சி பாக்கறா மாதிரி பாத்துறணும்.. போலீஸ் கண்ணுக்கு படாத ஏதாச்சும் நம்ம கண்ணுக்கு படலாம்..... எனக்கு வேண்டியது எல்லாம் கோபால தவிர வேற யாராச்சும் அந்த வீட்டுக்குள்ள போயி மாதவிய கொன்னுருக்க சான்ஸ் இருக்கான்னு தெரியணும்.... ஒரு சின்ன க்ளூ கிடைச்சாக் கூட போறும... நம்ம சைட் வாதத்த எடுத்து வைக்கிறதுக்கு முன்னால என் கட்சிக்காரர தவிர வேறொரு நபரும் அன்னைக்கி அந்த வீட்டுக்குள்ள போயி வந்துருக்கார்... போலீஸ் முதல்ல அத கண்டுபிடிக்கட்டும்னு ஆர்க்யூ பண்ணி கேஸ ஒன்னும் இல்லாம ஆக்கிறலாம்.....என்ன சொல்றே?'

'நீங்க இவ்வளவு டீட்டெய்லா சொன்னதுக்கப்புறம் எனக்கும் அந்த வீட்டுக்குள்ள போயி பாத்துறணும்னு தோனுது பாஸ்... முதல் வேலையா நாளைக்கே ஒக்காந்து பெட்டிஷன ரெடி பண்ணிடறேன்... மன்டே நாம ஃபைல் பண்ணப் போற மொதல் பெட்டிஷன் இதுதான்.... ஓக்கேவா பாஸ்?'

ராஜசேகர் சிரித்தான். 'Yes.. That's the spirit... இதே மாதிரியான எந்தூவோட (enthusiasm) நீ இருந்தா போறும்... நாம ஜெயிச்சிட்டா மாதிரிதான்...' 

பிறகு ராஜசேகர் கோபாலின் மனைவி மல்லிகாவை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று அவரை சந்தித்தையும் சுருக்கமாக கூறினான். 

'உங்கக் கிட்ட நல்லா பேசினாங்களா பாஸ்? நா அன்னைக்கி போனப்போ அந்த சீஃப் டாக்டர் சரியாவே பேச விடலை.'

'ஆமாடா.. உங்கிட்ட பேச சரியா பேச முடியலேன்னு சொன்னாங்க.... பாக்க ரொம்ப பாவமா இருந்துது.... கோபால் மறுபடியும் எங்க பெய்ல வந்து நம்மள ஏதாச்சும் செஞ்சிருவாரோங்கற பயம் நிஜமாவே அந்த பொண்ணோட முகத்துல இருந்தத பாத்தேன்.....'

'அவங்கள் ப்ராசிக்யூஷன் ஒரு விட்னஸா கூப்டறதுக்கு சான்ஸ் இருக்குன்னு நினைக்கேன் பாஸ்.... நா அங்க போறதுக்கு முன்னாலயே எஸ்.ஐ. தன்ராஜ் அங்க போயிருந்ததா கேள்விப்பட்டேன்...'

'ஆமாடா... ஆனா என்னால வரமுடியாது சார்னு அவர்கிட்ட சொல்லிட்டேன்..... அதே மாதிரி நீங்களும் என்னெ சாட்சி சொல்ல கூப்டக்கூடாதுன்னு என் கிட்ட கேட்டாங்க... சரிம்மான்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.... அந்த பொண்ணு இருக்கற நிலையில சாட்சி சொல்ல கூப்டறது மனுஷத்தனம் இல்லேன்னு தோனுது... என்ன சொல்ற?'

'ஆமா பாஸ்.... அதுவுமில்லாம நமக்கு அவங்களோட சாட்சியம் சாதகமா இருக்க சான்ஸே இல்ல பாஸ்...'

'கரெக்ட்... அதனால ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு வந்துட்டேன்... அதுக்குள்ளவே அந்த பொண்ணு ரெண்டு மூனுதரம் அடக்க மாட்டாம அழுதுருச்சி.... ஒரே அண்ணன் இருக்கான்னு பேரு... இதுவரைக்கிம் வந்து பாக்கவே இல்லையாம்... சீனிவாசன் சொல்லி வருத்தப்பட்டார்.'

'உண்மைதான் பாஸ்... இப்படியொரு உறவு இருந்தா என்ன இல்லாட்டி என்ன, சரிதானே பாஸ்?'

ராஜசேகர் ஆமோதிப்பதுபோல் தலையை அசைத்தான்.

அதன் பிறகு கோபாலின் முதல் மனைவி கொலை வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ராகவாச்சாரியையும் அவருடைய மகனையும் சந்தித்ததைப் பற்றி சுருக்கமாக தெரிவித்தான். 

'அவர் சொல்ற ஸ்ட்ரேட்டஜியத்தான் நானும் ஃபாலோ பண்ணணும்னு கோபால லாட்ஜ்ல வச்சி ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணவே டிசைட் பண்ணிட்டேன் வசந்த். அவர் சாட்சி கூண்டுல ஏத்துனா அது நம்ம செலவுல நாமளே சூன்யம் வச்சிக்கிட்டா மாதிரிதான் இருக்கும்னு நினைச்சேன்...'

வசந்த் சிரித்தான். 'நம்ம செலவுல நாமளே சூன்யம்... சூப்பரா இருக்கு பாஸ்.... அந்த மனுஷனுக்கு இருக்கற கோவத்துக்கு அவர சாட்சி கூண்டுல ஏத்துனா ஹெவனுக்கு பதிலா ஹெல்லுக்கு போனா மாதிரிதான்.... அவரோட கோவம்தான் அவருக்கு எதிரி....'

ராஜசேகரும் சிரித்தான். 'டேய்... அவருக்கு மட்டுமில்ல... நம்ம எல்லாருக்குமே நம்ம கோவம்தான் நம்மோட முதல் எதிரி... என்ன சொல்றே?'

தொடரும்...15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இருந்தாலும்....

வே.நடனசபாபதி said...


வசந்த் வந்துவிட்டார். இனி கதை ஜெட் வேகத்தில் பறக்கும் என நினைக்கிறேன்.

//அவருக்கு மட்டுமில்ல... நம்ம எல்லாருக்குமே நம்ம கோவம்தான் நம்மோட முதல் எதிரி...//

கடைசி வரியானாலும் முதல் தரம்.

இராஜராஜேஸ்வரி said...

தலைப்பை அருமையாக கதையுடன் இணைத்த விதம் அருமை .. பாராட்டுக்கள்..

கோபம் பாபம் ..சண்டாளம் ..!

G.M Balasubramaniam said...

/ராஜசேகர் தன் தோளில் இருந்த லேப்டாப் பையை கழற்றி காலடியில் வைத்துவிட்டு அமர்ந்தான்/.... ?
இனிதான் சொந்த செலவில் சூனியம் ஆரம்பமா.?

டிபிஆர்.ஜோசப் said...

திண்டுக்கல் தனபாலன் said...
இருந்தாலும்....//

என்ன சொல்ல வறீங்கன்னு புரியுது...

வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.

டிபிஆர்.ஜோசப் said...


2:51 PM
வே.நடனசபாபதி said...

வசந்த் வந்துவிட்டார். இனி கதை ஜெட் வேகத்தில் பறக்கும் என நினைக்கிறேன்.//

இனிமேல்தானா :)

//அவருக்கு மட்டுமில்ல... நம்ம எல்லாருக்குமே நம்ம கோவம்தான் நம்மோட முதல் எதிரி...//

கடைசி வரியானாலும் முதல் தரம். //

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...


இராஜராஜேஸ்வரி said...
தலைப்பை அருமையாக கதையுடன் இணைத்த விதம் அருமை .. பாராட்டுக்கள்..//

தலைப்பு இத விட இன்னொன்னுக்கும் பொருந்தும்... பொறுமையா படிங்க :)

டிபிஆர்.ஜோசப் said...


4:40 PM
G.M Balasubramaniam said...
/ராஜசேகர் தன் தோளில் இருந்த லேப்டாப் பையை கழற்றி காலடியில் வைத்துவிட்டு அமர்ந்தான்/.... ?
இனிதான் சொந்த செலவில் சூனியம் ஆரம்பமா.?//

ஹாஹா.... பயங்கர பார்வை சார் உங்களுடையது....

மாத்திட்டேன். நன்றி.

Packirisamy N said...

சூன்யம் வைத்துக்கொள்வது ராஜசேகர் என்று நினக்கிறேன். பொறுத்திருந்து பார்க்கிறேன்.

தருமி said...

//முன்னால என் கட்சிக்காரர தவிர வேறொரு நபரும் அன்னைக்கி அந்த வீட்டுக்குள்ள போயி வந்துருக்கார்... போலீஸ் முதல்ல அத கண்டுபிடிக்கட்டும்னு ஆர்க்யூ பண்ணி ...//

என்ன இந்த ஆளு .. தனக்குத்தானே குழி வெட்டிக்கிறாரு ...ம்..!

டிபிஆர்.ஜோசப் said...

Packirisamy N said...
சூன்யம் வைத்துக்கொள்வது ராஜசேகர் என்று நினக்கிறேன். பொறுத்திருந்து பார்க்கிறேன்.//

அவர் போயிருந்தத போலீசால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைக்கிறாரோ என்னவோ?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...தருமி said...
//முன்னால என் கட்சிக்காரர தவிர வேறொரு நபரும் அன்னைக்கி அந்த வீட்டுக்குள்ள போயி வந்துருக்கார்... போலீஸ் முதல்ல அத கண்டுபிடிக்கட்டும்னு ஆர்க்யூ பண்ணி ...//

என்ன இந்த ஆளு .. தனக்குத்தானே குழி வெட்டிக்கிறாரு ...ம்..!//

நாம மாட்டிக்கிட்டாலும் பரவால்லை நம்ம கட்சிக்காரர் தப்பிக்கணும்னு நினைச்சிருப்பார். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ப்ரையாரிட்டி.

டிபிஆர்.ஜோசப் said...தருமி said...
//முன்னால என் கட்சிக்காரர தவிர வேறொரு நபரும் அன்னைக்கி அந்த வீட்டுக்குள்ள போயி வந்துருக்கார்... போலீஸ் முதல்ல அத கண்டுபிடிக்கட்டும்னு ஆர்க்யூ பண்ணி ...//

என்ன இந்த ஆளு .. தனக்குத்தானே குழி வெட்டிக்கிறாரு ...ம்..!//

நாம மாட்டிக்கிட்டாலும் பரவால்லை நம்ம கட்சிக்காரர் தப்பிக்கணும்னு நினைச்சிருப்பார். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ப்ரையாரிட்டி.

Sasi Kala said...

சோபாவுங்களுக்கு நடுவுல தரையில கார்பெட் ஏதாச்சும் இருந்துதா, மாதவி அந்த கார்பெட் மடிப்புல தடுக்கி பின்பக்கமா விழுந்தா சோபா ஹேன்டில்ல அடிபட சான்ஸ் இருக்கான்னுல்லாம் பாக்கணும். ///

கிரிமினல் (வக்கில்) என்பதை எப்படியெல்லாம் நிருபிக்கிறாங்க..

நமக்கு நம் கோபம் தான் முதல் எதிரி இதை மட்டும் மிகச்சரியா சொல்லி இருக்காங்க..

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...
சோபாவுங்களுக்கு நடுவுல தரையில கார்பெட் ஏதாச்சும் இருந்துதா, மாதவி அந்த கார்பெட் மடிப்புல தடுக்கி பின்பக்கமா விழுந்தா சோபா ஹேன்டில்ல அடிபட சான்ஸ் இருக்கான்னுல்லாம் பாக்கணும். ///

கிரிமினல் (வக்கில்) என்பதை எப்படியெல்லாம் நிருபிக்கிறாங்க..//


குற்றம் சுமத்துறவங்க அத நிரூபிக்கறதுக்கு எவ்வளவு சிரமப்படுவாங்களோ அதை விடவும் கூடுதலா அதை disprove பண்றவங்களும் சிரமப்படுவாங்க. தப்பு செய்யறதவிட அத மறைக்கறதுக்கு நாம படாதபாடு படறதில்லையா, அது மாதிரி.

நமக்கு நம் கோபம் தான் முதல் எதிரி இதை மட்டும் மிகச்சரியா சொல்லி இருக்காங்க..//

கரெக்ட். முன்னேர்கள் சொல்லி வைத்துள்ளவை அனைத்துமே அவர்கள் அனுபவித்து சொன்னவை. ஆகவே அது மிகச் சரியானதாகவே இருக்கும்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.