30 September 2013

சொந்த செலவில் சூன்யம் - 33

முன்கதை

வேறுவழியில்லை... இனியும் பேசாமல் இருந்தால் அது தன்னுடைய கரியரையே (career)பாதிக்கும் என்று உணர்ந்த தன்ராஜ், 'அன்னைக்கி நா அவுட் சைட் ட்யூட்டியில இருந்தேன் சார்.... சைதாப்பேட்டை கோர்ட்ல ஒரு கேஸ்ல விட்னஸ் குடுக்க வேண்டியிருந்தது....  ஸ்டேஷன் ஹெட்டும் கமிஷனர் ஆஃபீஸ் வரை போயிருந்தார்....'

'என்ன சார் சொல்றீங்க? சரி நீங்களும் இல்லை SHOவும் இல்லை... லா அன்ட் ஆர்டர் எஸ்.ஐ இருந்துருப்பார் இல்ல?'

'அன்னைக்கின்னு பாத்து லஸ் கார்னர்ல ஒரு டெமோ இருந்தது சார்... அங்க போய்ட்டார்.'

'அப்ப மர்டர் ஸ்பாட்டுக்கு யார்தான் போனா?'

'அந்த சமயத்துல ஸ்டேஷன்ல இருந்த எஸ்.எஸ்.ஐ ஒருத்தர்தான் எனக்கு ஃபோன் பண்ணார் சார்.. நா அங்க போயி என்னல்லாம் செய்யணும்னு ஃபோன்லயே சொன்னேன்... அவர் சரின்னு சொல்லிட்டு போனார்....'

அவர் சொல்ல சொல்ல கோபத்தின் உச்சிக்கே சென்ற பி.பி. 'How can this happen?' என்று உச்ச ஸ்தாயியில் கத்தினார். 'இந்த மாதிரி இர்ரெஸ்பான்சிபிளா நீங்க இருந்துட்டு கடைசியில கவர்ன்மென்ட் அட்வகேட் கேஸ சரியா ஆர்க்யூ பண்ணலைன்னு எங்க தலையில தூக்கி போட்ருங்க.....'

தவறு தன்மீதுதான் என்பதை உணர்ந்த தன்ராஜ் மறுபேச்சு பேசாமல் அமர்ந்திருந்தார். 

'சரி அதுபோவட்டும்..... நீங்க அந்த ஸ்பாட்டுக்கு போனீங்களா இல்லையா? அதச் சொல்லுங்க.'

'போனேன் சார்.....'

'எப்போ?'

'கோர்ட்லருந்து அங்க போயி சேர்ந்தப்போ மதியானம் மூனு மணி இருக்கும்...'

'அதாவது அப்ராக்சிமேட்டா ட்வென்டி அவர்ஸ் கழிச்சி.... சரி... வீட்ட முழுசா சேர்ச் பண்ணீங்களா?'

'ஆமா சார்..... அங்கருந்து என்னல்லாம் சீஸ் (seize) பண்ண முடியுமோ அதையெல்லாம் சீஸ் பண்ணிக்கிட்டு வந்து ஃபாரன்சிக் ஸ்டடிக்கு அனுப்பிச்சி வச்சேன்....'

'நா கேக்கறது அது இல்ல.... எதிரி கையிலயோ இல்ல டிரஸ்லயோ ப்ளட் ஸ்டெய்ன் பட்டிருந்தா அந்த ஸ்டெயினோட அவர் வெளியில வர்றதுக்கு சான்ஸ் இல்ல.... வீட்டுலயே துடச்சிட்டோ இல்ல கழுவிட்டோதான் வந்துருப்பார்.... அதுக்கு அவர் பாத்ரூமயோ இல்ல வாஷ்பேசினையோ நிச்சயம் யூஸ் பண்ணியிருப்பார்.... அந்த ஆங்கிள்ல சேர்ச் பண்ணீங்களான்னு கேக்கேன்... did you do that?'

ச்சை.... இதுவும் ஒரு லாப்ஸ் (lapse)தான்... எதுக்கு இந்த ஆங்கிள்ல நம்ம திங்கிங் போகலை என்று தன்னைத்தானே நொந்துக்கொண்டார். நாம கேள்விப்பட்டதுபோல இந்த பி.பி. அவ்வளவு முட்டாள் இல்ல போலருக்கே... இப்ப நாமதான் முட்டாள் மாதிரி நிக்கிறோம்.... 

'என்ன சார்... did you do it or not?'

'இல்ல சார்.... நா டெட் பாடிய பாக்கலேங்கறதால என்னால அந்த ஆங்கிள்ல திங்க் பண்ண முடியலை...'

'இதெல்லாம் ஒரு எக்ஸ்க்யூஸா? நீங்க போனப்போ மர்டர் ஸ்பாட்டுக்கு முதல்ல போன ஆளுங்க அங்க இல்லையா? அவங்கள கேக்க வேண்டியதுதான?'

மர்டர் ஸ்பாட்டுக்கு அவர் செல்வதற்கு முன்பே அங்கு சென்றிருந்த பிசியும் எஸ்.எஸ்.ஐயும் வீட்டை பூட்டிவிட்டு  காவல்நிலையத்திற்கு திரும்பிவிட்ட விஷயத்தை இவரிடம் சொன்னால் என்னாவது என்று நினைத்த தன்ராஜ், 'நாங்களும் பாடிய முழுசா பாக்கலை சார்னு சொல்லிட்டாங்க....'

இப்படியும் ஒரு காவல்நிலையமா என்பதுபோல் அவரையே பார்த்தவாறு நின்றிருந்த பி.பி. பதில் பேசாமல் தன் இருக்கையில் வந்து அமர்ந்து தன் மேசை மீது கிடந்த குற்றப்பத்திரிக்கையை மீண்டும் கையில் எடுத்தார்....

'சரி.. முடிஞ்சி போன விஷயத்த பத்தி பேசி என்ன ஆவப் போவுது? அடுத்த சார்ஜ பாக்கலாம்...'

'அடுத்ததா பி.எம் ரிப்போர்ட்ல மர்டருக்கு முன்னால உடலுறவு இருந்திருக்கலாம்னு இருந்துது சார்....'

'ரைட்... அதனால it is a rapeனு சொல்லியிருக்கீங்க... குட்.... அது எப்படி நடந்துச்சோ நமக்கு கவலையில்லை.... நம்மள பொருத்த வரைக்கும் அது ஒரு ரேப்தான்... Let the defense refute it..... என்ன சொல்றீங்க?'

'ஆமா சார்... அந்த ஆங்கிள்லதான் நானும் செக்‌ஷன் 375ன்னு க்வோட் பண்ணியிருக்கேன்....'

'அவ்வளவுதான் போலருக்கு?'

அவர் சொல்வது விளங்காததுபோல் பி.பி.யை பார்த்தார் தன்ராஜ்....

'என்ன சார் சொல்றீங்க? புரியல.'

பி.பி. சிரித்தார். 'சார்ஜ் ஷீட்னா ஒன்னு ரெண்டு சார்ஜஸ் இருந்தா போறாதுங்க.... நமக்கு வேண்டியது எதிரி கண்டிப்பா தண்டிக்கப்படணும்.... ஒரு சார்ஜ்ல இல்லன்னா இன்னொன்னுல.... அதனால மேக்சிமம் எவ்வளவு சார்ஜஸ் லெவல் பண்ண முடியுமோ அவ்வளவையும் செஞ்சிறணும்....'

எப்படி பதிலளிப்பது என தெரியாமல் தன்ராஜ் அமர்ந்திருக்க வேணு மீண்டும் தன் இருக்கையில் இருந்து எழுந்து அறையின் குறுக்கே நடக்கத் துவங்கினார்.

'சொல்றேன்.... இந்த லிஸ்ட்ல ட்ரெஸ்பாஸ்சிங் (trespassing) அப்புறம் கன்சீலிங் எவிடென்சஸ்னு (concealing evidences), சாட்சிகளை கலைத்தல்ங்கற (threatening witnesses) சார்ஜசையும் சேத்துருங்க.'

'கன்சீலிங் எவிடென்ஸ சேத்துக்கலாம் அதே மாதிரி எதிரி சாட்சியத்தை கலைக்க ட்ரை பண்ணதும் உண்மைதான்.... ஆனா ட்ரெஸ்பாஸ்சிங்னு எப்படி.... அவர்தான சார் அந்த வீட்டோட ஹவுஸ் ஓனர்?'

'ஓனர்னா...? வீட்ட வாடகைக்கு விட்டாச்சின்னா வீட்ல இருக்கறவங்களோட பெர்மிஷன் இல்லாம உள்ள பூந்தா அதுக்கு பேரு ட்ரெஸ்பாஸ் சார்....'

'இருக்கலாம் சார்... ஆனா அந்த லேடியோட பர்மிஷன் இல்லேன்னு அஸ்யூம் பண்ண முடியுமா?'

'இதுக்கு பதில் நா கொஞ்ச நேரத்துக்கு முன்னால சொன்னதுலயே இருக்கு. அதாவது எதிரிக்கும் அந்த பொண்ணுக்கும் இடையில நாலஞ்சி நாளா பேச்சு வார்த்தையே இல்லை... அதனால நாம அங்க போனாலும் அந்த பொண்ணு உள்ள விடறதுக்கு சான்ஸ் இல்லேன்னு எதிரிக்கு தெரியும். அவர்தான் அந்த வீட்டோட ஓனர்ங்கறதால அவர்கிட்ட ஒரு செட் சாவி நிச்சயமா இருந்துருக்கும். அத யூஸ் பண்ணித்தான் அன்னைக்கி அந்த வீட்டுக்குள்ள ரெண்டு தரம் நுழைஞ்சிருக்கார்னு நா ஆர்க்யூ பண்ணப் போறேன்...'

என்னைய்யா சொல்றீரு? அவர் அந்த வீட்டுக்குள்ள ஒருதரம் போனதுக்கே சரியான விட்னஸ் இல்ல.... முதல் விட்னஸ் பார்க்கிங் ஏரியாவுல எதிரியோட கார் சாயந்தரம் நாலே முக்கால் மணியிலருந்து ஆறு மணி வரைக்கும் நின்னுக்கிட்டிருந்ததுன்னு மட்டும்தான் சொல்வான்... ரெண்டாவது விட்னஸ் சாயந்தரம் ஏழு மணிக்கி அந்த வீட்டு முன்னால நின்னத பார்த்தேன்னு மட்டுந்தான் சொல்ல போறாங்க.... ஆறு மணிக்கி பாத்த ஆள் ஏழு மணிக்கி பாக்கல. ஏழு மணிக்கி பாத்த ஆள் ஆறு மணிக்கி பாக்கல... போறாததுக்கு ரெண்டு பேருமே எதிரிய வீட்டுக்குள்ள போனதையோ இல்ல வீட்டுக்குள்ளருந்து வெளியில வந்ததையோ பாக்கல... இந்த லட்சணத்துல இவர் எப்படி அவர் ரெண்டு தரம் வீட்டுக்குள்ள போயிருக்கார்னு ப்ரூஃப் பண்ணுவார்? போறாதுக்கு ரெண்டு என்ட்றியும் வீட்ல இருந்தவங்களோட அனுமதியில்லாம செய்யபட்ட ட்ரெஸ்பாஸ்னு ப்ரூஃப் பண்ணணும்! நடக்கற காரியமா? எல்லாம் இவரோட விஷ்ஃபுல் திங்கிங்னுதான் சொல்லணும்...

'என்ன சார் சத்தத்தையே காணம்? நீங்க புடிச்சிருக்கற ரெண்டு சாட்சியுமே எதிரி வீட்டுக்குள்ளருந்து வந்தத பாக்கலேன்னுதான யோசிக்கறீங்க?'

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்த தன்ராஜ் 'அவங்க ரெண்டு பேரையுமே அத பாத்ததா சொல்ல வையிங்க சார்....' என்று பி.பி அசால்ட்டாக கூறிவிட்டு சிரிக்க  என்னது சொல்ல வைக்கிறதா? என்று அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தார்...

சில நொடிகள் கழித்து, 'என்னது, சாட்சிகளை சொல்ல வைக்கிறதா? That's not possible.' என்றார் தன்ராஜ் தீர்மானமாக.

பி.பியின் பார்வையில் கோபம் தெறித்தது. 'Impossibleனா? உங்களால முடியாதுன்னு சொல்றீங்களா?' 

'ஆமா சார்... என்னோட சர்வீஸ்ல இதுவரைக்கும் இந்த மாதிரியான காரியம்லாம் செஞ்சதில்லை.... இனியும் செய்யிறதா இல்லை... I am sorry.'

'நீங்க டிப்பார்ட்மென்ட்ல சேர்ந்து எத்தன வருசம் ஆச்சி?'

'அது எதுக்கு சார் இப்ப?'

'சும்மா சொல்லுங்க.'

'இந்த அக்டோபர் வந்தா ஏழு வருசம்.'

'இது வரைக்கும் எத்தன கேஸ் பாத்துருப்பீங்க?'

'பத்துக்கு மேல இருக்கும்.'

'அதுல எத்தன கன்விக்ட் ஆயிருக்கு?'

'என்ன சார் கேள்வி இது? சென்ட் பர்சன்ட்.. அதுவும் நியாயமான முறையில.....'

பி.பி. சிரித்தார். 'ஒங்களோட காட்ஃபாதர் எஸ்.பி. சந்தானமும் இதைத்தான் சொன்னார். அதனாலதான் அவர சிட்டிக்கி கொண்டு வந்தேன்னு....'

இதுல சிரிக்கிறதுக்கு என்னய்யா இருக்கு? இந்த ஆள் சரியான லூசாருப்பார் போலருக்கே என்று தனக்குள் நினைத்தார் தன்ராஜ். ஒரு நேரம் ரொம்பவும் புத்திசாலித்தனமா பேசறார் அடுத்த நிமிஷமே சுத்த இடியட்டாட்டம்.... ஸ்ப்லிட் பர்சனலாட்டியா (split personality) இருக்குமோ?

'சரி... அதுல எத்தனை கன்ஃபெஷன் கேஸ்?'

'எல்லாமே தான்...'

பி.பி இம்முறை உரக்க சிரித்தார். 'அதானே உங்க வேலையே? மாட்டறவன ஏமாத்தி இல்லன்னா மிரட்டி கன்ஃபெஸ் பண்ண வச்சி கன்விக்‌ஷன் வாங்கறது ஒன்னும் பெரிய விஷயமில்லீங்க.... அக்யூஸ்டோட எந்த கோவாப்பரேஷனும் இல்லாம நாமளா எவிடன்சையும் விட்னசையும் தேடிப்பிடிச்சி கேஸ ப்ரூஃப் பண்ணணும்.... அதுலதான் இருக்கு சாமர்த்தியம்.... அப்படி எதுவும் செஞ்சிருக்கீங்களான்னுதான் கேட்டேன்..... இருக்கா?'

சட்டென்று எழுந்த கோபத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்ட தன்ராஜ் இல்லை என்பதுபோல் தலையை அசைத்தார். 

'அதனாலதான் இந்த கேஸ எப்படி அப்ரோச் பண்ணா கன்விக்‌ஷன் வாங்க முடியும்கறது தெரியாம இப்படியொரு தொத்தல் சார்ஜ் ஷீட்டோட வந்து நிக்கீங்க.... எடுத்துக்கிட்டு போயி நா சொன்ன கரெக்‌ஷனையெல்லாம் செஞ்சி கொண்டாங்க... Only then I will go to Court...'

என்ன திமிர் இந்த ஆளுக்கு? நா என்ன இவர் வெச்ச ஆளா? இதுக்குத்தான் இந்த மாதிரி ஆளுங்கக் கிட்டல்லாம் சார்ஜ் ஷீட்ட குடுக்கக் கூடாதுங்கறது... இந்த ஆள மாதிரிதான்  எல்லா கவர்ன்மென்ட் லாயர்களும் இருப்பாங்க போலருக்கு. அதனாலதான் ஒரு கேஸ இன்வெஸ்ட்டிகேட் பண்ணி அத கோர்ட்டுக்கு கொண்டு போலாமா வேணாமான்னு தீர்மானிக்க வேண்டியது போலீஸ்தான்னு சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருக்கு போல. பொய்சாட்சி சொன்னா சிறைன்னு சொல்ற சட்டத்த வச்சி பொழப்பு நடத்தற இந்த மாதிரி ஆளுங்களே அந்த சட்டத்தையே யூஸ் பண்ணி  சாட்சிகள மிரட்டி பொய்யா சாட்சியம் சொல்ல வைக்கிறது எந்த விதத்தில் நியாயம்? இந்தாள் வேணும்னா இந்த மாதிரி பொழைப்பு நடத்தறதுல எந்த தப்பும் இல்லேன்னு நினைச்சிக்கட்டும்... நம்மால முடியாது.... இன்னைக்கே சந்தானம் சார பாத்து சொல்லிற வேண்டியதுதான்.

'என்ன சார் முறைக்கறீங்க? எடுத்துக்கிட்டு போங்க.....' 

இனியும் அவர் முன்னால் நின்று பேச்சை வளர்க்க விருப்பமில்லாமல் பி.பி.யின் மேசை மீதிருந்த அனைத்து ஆவணங்களையும் அள்ளி எடுத்து உறையில் இட்டுக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார் தன்ராஜ்.

*****

மகாதேவனை சந்தித்துவிட்டு திரும்பிய ராஜசேகர் அன்றைய தினம் வழக்குகள் ஏதும் இல்லையென்பதால் தன்னுடைய அலுவலகம் திரும்பி அதுவரை மாதவியின் கொலை வழக்கில் தான் சேகரித்து வந்திருந்த தகவல்களையும் ஆவணங்களையும் ஆராயத் துவங்கினான்.

நல்லவேளையாக அவனுடைய குமாஸ்தா நாகுவை இன்று அலுவலகம் வரவேண்டாம் என்று கூறியிருந்தது  அவனுடைய அலுவலகத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல் அவற்றை ஆய்வு செய்ய முடிந்தது.

இன்னும் எப்படியும் ஓரிரண்டு தினங்களில் காவல்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துவிடுவார்கள் என்று நினைத்தான். அதற்குள் இந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தேவையான யூகங்களை வகுத்துவிட வேண்டும் என்ற முடிவுடன் அதுவரை சேகரித்திருந்த ஆவணங்களை தேதிவாரியாக வரிசைப்படுத்தி பட்டியலிட்டான்.

முதலில் அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது மாதவியின் வீடு மற்றும் கோபாலின் வீடு/அலுவலகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அடங்கிய பட்டியல்கள். 

அதில் காவல்துறை முக்கியமாக கருதக்கூடியவற்றை மட்டும் தன்னுடைய குறிப்பேட்டில் பட்டியலிட்டான்.

1. மாதவியின் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட உடைந்த கோப்பை துண்டுகள். இதை ஒரு முக்கியமாக எக்சிபிட்டாக பிராசிக்யூஷன் சமர்ப்பிக்கக் கூடும். கோபாலுக்கும் மாதவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அதனால் கோபமடைந்த இருவரில் ஒருவர் இதை மற்றவர் மீது இதை தூக்கி எறிந்ததால்தான் அது உடைந்து கிடந்திருக்கிறது என்பது அவர்களுடைய வாதமாக இருக்கும்.

2.மாதவியின் ரத்தக்கறை படிந்த நைட்டி. ஒருவேளை கோபாலுக்கும் இந்த மோதலில் காயம் ஏற்பட்டு அவருடைய ரத்தம் அந்த ஆடையால் கறையாக படிந்திருந்தால் ஒரு நல்ல எவிடென்சாக அமைந்திருக்கும்... ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை போலிருக்கிறது. 

இவ்விரண்டு பொருட்களைத் தவிர மாதவியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் எதுவும் இந்த வழக்கில் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை என்று கருதிய ராஜசேகர் அடுத்ததாக கோபாலின் அலுவலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பட்டியலை ஆராய்ந்தான்.

தொடரும்...8 comments:

Sasi Kala said...

பொய்சாட்சி சொன்னா சிறைன்னு சொல்ற சட்டத்த வச்சி பொழப்பு நடத்தற இந்த மாதிரி ஆளுங்களே அந்த சட்டத்தையே யூஸ் பண்ணி சாட்சிகள மிரட்டி பொய்யா சாட்சியம் சொல்ல வைக்கிறது எந்த விதத்தில் நியாயம்?///
நம்ம கேட்க வேண்டியதை அவர் மனசாட்சி சரியா கேட்டிருக்கு. என்ன ஆகுமோ என்று அறியும் ஆவலில் காத்திருக்கிறேன்.

வே.நடனசபாபதி said...

//இந்த லிஸ்ட்ல ட்ரெஸ்பாஸ்சிங் (trespassing) அப்புறம் கன்சீலிங் எவிடென்சஸ்னு (concealing evidences), சாட்சிகளை கலைத்தல்ங்கற (threatening witnesses) சார்ஜசையும் சேத்துருங்க.'//
நாங்க ‘டாட்டா பிர்லா இல்லை.’ என்ற திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன் பெயரிலும் நடிகர் கவுண்டமணி பெயரிலும் இதுபோல் வேறு சில கொலை கொள்ளை கேசுகளையும் சேர்த்துக்கொள்ள சொல்லி அதில் ஆய்வாளராக வருபவர் சொல்லுவார். அதுபோல் இருக்கிறது இது.
உண்மையில் நடப்பதை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

இராஜராஜேஸ்வரி said...

ஒரு நேரம் ரொம்பவும் புத்திசாலித்தனமா பேசறார் அடுத்த நிமிஷமே சுத்த இடியட்டாட்டம்.... ஸ்ப்லிட் பர்சனலாட்டியா (split personality) இருக்குமோ?

விறுவிறுப்பான கதை..!

ஸ்கூல் பையன் said...

இந்தக் கதையை எனக்குப் படிக்க நேரம் கிடைக்கவில்லை சார், படிக்கலாம் என்று எடுத்தால் பல அத்தியாயங்கள் கடந்துவிட்டன, வரும் ஞாயிறுக்குள் பொறுமையாகப் படித்து கருத்துரையிடுகிறேன்... நன்றி..

டிபிஆர்.ஜோசப் said...


Sasi Kala said...
பொய்சாட்சி சொன்னா சிறைன்னு சொல்ற சட்டத்த வச்சி பொழப்பு நடத்தற இந்த மாதிரி ஆளுங்களே அந்த சட்டத்தையே யூஸ் பண்ணி சாட்சிகள மிரட்டி பொய்யா சாட்சியம் சொல்ல வைக்கிறது எந்த விதத்தில் நியாயம்?///
நம்ம கேட்க வேண்டியதை அவர் மனசாட்சி சரியா கேட்டிருக்கு. //

ஒருவழியா எல்லாத்தையும் படிச்சி முடிச்சிட்டீங்க போலருக்கு :)) மிக்க நன்றி.

மனசாட்சியோட வேலையே அதுதானே? அதாவது உண்மையிலேயே நல்ல எண்ணங்களுடன் தங்களுடைய அலுவலை செய்ய விரும்பும் எவரையும் தவறு செய்யாமல் தடுக்கும் வேலையை அது செய்ய எப்போதுமே தவறுவதில்லை.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...
//இந்த லிஸ்ட்ல ட்ரெஸ்பாஸ்சிங் (trespassing) அப்புறம் கன்சீலிங் எவிடென்சஸ்னு (concealing evidences), சாட்சிகளை கலைத்தல்ங்கற (threatening witnesses) சார்ஜசையும் சேத்துருங்க.'//
நாங்க ‘டாட்டா பிர்லா இல்லை.’ என்ற திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன் பெயரிலும் நடிகர் கவுண்டமணி பெயரிலும் இதுபோல் வேறு சில கொலை கொள்ளை கேசுகளையும் சேர்த்துக்கொள்ள சொல்லி அதில் ஆய்வாளராக வருபவர் சொல்லுவார். அதுபோல் இருக்கிறது இது.//

மிக பொருத்தமான உதாரணம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...


இராஜராஜேஸ்வரி said...
ஒரு நேரம் ரொம்பவும் புத்திசாலித்தனமா பேசறார் அடுத்த நிமிஷமே சுத்த இடியட்டாட்டம்.... ஸ்ப்லிட் பர்சனலாட்டியா (split personality) இருக்குமோ? விறுவிறுப்பான கதை..!//

நன்றிங்க... தொடர்ந்து படிங்க...

டிபிஆர்.ஜோசப் said...


ஸ்கூல் பையன் said...
இந்தக் கதையை எனக்குப் படிக்க நேரம் கிடைக்கவில்லை சார், படிக்கலாம் என்று எடுத்தால் பல அத்தியாயங்கள் கடந்துவிட்டன, வரும் ஞாயிறுக்குள் பொறுமையாகப் படித்து கருத்துரையிடுகிறேன்... நன்றி..//

பரவால்லைங்க... நிதானமாவே படிச்சிட்டு வாங்க :)

நீங்களும் ஒரு க்ரைம் நாவல் எழுதறவர்தானே... எங்கயாச்சும் லாஜிக் ஒதைச்சா சொல்லுங்க....