29 September 2013

சொந்த செலவில் சூன்யம் - 32


'ஒரு ப்ரீ-ப்ளான்ட் மர்டருக்கு ஒரு சரியான மோட்டிவ் வேணும்...' என்று தொடர்ந்தார் பிபி வேணு. 'அது இதுதான். அந்த வீடு... அவ உயிரோட இருந்தா அந்த வீட்ட எழுதிக் குடுத்தாத்தான் ஆச்சி, இல்லன்னா நீங்க இங்க வந்து போற விஷயத்த எல்லாத்துக்கிட்டயும் சொல்லி மானத்த வாங்கிருவேன்னு மிரட்டிக்கிட்டேத்தான் இருப்பான்னு எதிரி நினைச்சிருப்பார்.... இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா.... சொசைட்டில ஒரு பெரிய பில்டர்னு நடமாடிக்கிட்டிருக்கறவருக்கு எப்படி இருக்கும்...? அதான்.... ப்ளான் பண்ணி மர்டர் பண்ணிட்டார்.... என்ன சொல்றீங்க?' 

எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டு ஒவ்வொரு கேள்விக்கும் என் ஒப்பீனியன கேட்டா நா என்ன சார் பண்றதுன்னு கேட்க நினைத்தார் தன்ராஜ்... ஆனால் கேட்கவில்லை....

வேணு தொடர்ந்தார்.

'இதுல இன்னொரு விஷயத்தையும் கவனிச்சேன்.... எதிரியோட மொபைல் ஃபோன் கால் டீட்டெய்ல்ஸ்.... மத்தவங்க மாதிரி இல்லாம நீங்க புத்திசாலித்தனமா ஒரு வருஷத்தோட கால் டீட்டெய்ல்ஸ் எடுத்துருக்கீங்க.... அதனால அவங்க ரெண்டு பேருக்கும் இடையில இருந்த ரிலேசன்ஷிப் எவ்வளவு டீப்புன்னு தெரிஞ்சிக்க முடிஞ்சிது.... You have done a good job....I appreciate that....'

'தாங்ஸ் சார்...' என்று விருப்பமில்லாவிட்டாலும் சொல்லி வைத்தார் தன்ராஜ்.

'வெல்கம்....' என்று கெத்தாக ஒப்புக்கொண்டு தொடர்ந்தார் வேணு... 'போன ஒரு மாசமாவே அவங்க ரெண்டு பேருக்கும் இடையில ஆல்மோஸ்ட் டெய்லி பேச்சு நடந்துருக்கு.... அதுவும் மணிக்கணக்கா.... நா சொல்றேன்... அவங்க சாதாரணமா பேசிக்கலை.... இந்த வீட்டு விஷயமா பெரிய சண்டையே போட்டுருக்காங்க..... அதான் ஒவ்வொரு காலும் ஒரு மணி நேரத்துக்கும் மேல போயிருக்கு.....' என்றவர் தன்னுடைய மேசையை நெருங்கி அதில் கிடந்த கோபாலில் செல்ஃபோன் கால் லிஸ்ட அடங்கிய பட்டியலை எடுத்தார். 'ஆனா, மர்டர் ஆன 12ம்தேதியிலருந்து நாலு நாள் முன்னாலருந்து அதாவது 8ம் தேதியிலருந்து ஒரு கால் கூட அந்த பொண்ணோட நம்பருக்கு போகலை.... அத கவனிச்சீங்களா?'

'ஆமா சார்....' 

'ஏன்? நா சொல்றேன்... அவங்க ரெண்டு பேருக்கும் இடையில பேச்சுவார்த்தை இல்லை.... அதுக்கு முந்தின நாள் அதாவது ஏழாம் தேதி நடுராத்திரியிலருந்து ஏறக்குறையை ஒன்னரை மணி நேரம் ரெண்டு பேரும் பேசியிருக்காங்க.... இடையில இடையில கால் கட்டாயிருக்கு....  ஒன்னு இவர் கட் பண்ணியிருக்கணும் இல்லன்னா அந்த பொண்ணு... அதான் அடுத்தடுத்து நாலஞ்சி ஃபோன்.... அதுக்கப்புறம் நாலு நாளைக்கி ஒரு காலும் இல்லை..... சண்டை முத்தி ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கறதுக்குக் கூட விருப்பம் இல்லாம இருந்துருக்காங்க....  எதிரி பல தடவ ஃபோன் செஞ்சிருப்பார்.... அந்த பொண்ணு எடுத்துருக்காது... நாலஞ்சி நாள்.... அதுக்கு மேல தாங்க முடியல. அவ்வளவு திமிரா உனக்குன்னு நினைச்சிருப்பார். இவள போட்டுத்தள்ளிட்டுத்தான் மறுவேலைன்னு நினைச்சிருப்பார். இருந்தாலும் இன்னொருதரம் நேர்ல போயி பேசி பாக்கலாம்னு 12ம் தேதி சாயந்தரம்  அந்த வீட்டுக்கு போயிருக்கார்.... பேசி பாப்போம்... ஒத்துக்கிட்டா சரி... இல்லையா போட்டு தள்ளிருவோம்னு நினைச்சிருப்பார். கத்தியில குத்துனாலோ இல்ல ஏதாச்சும் ஆயுதத்தாலோ அடிச்சாலோ நாம மாட்டிக்கிருவோம்னு நினைச்சிருப்பார்... இதுல இன்னொரு விஷயத்தையும் கவனிக்கணும்.... அவரோட ஃபர்ஸ்ட் வய்ஃபும் இதே மாதிரி பாத்ரூம்ல பின்னந்தலையில அடிபட்டு கேப்பார் இல்லாமத்தான் இறந்துக் கிடந்தாங்க.... ஏறக்குறைய மாதவி மாதிரியே.... அப்போ பாத்ரூம்ல வழுக்கி விழுந்து சுவத்துல இடிச்சி செத்தாங்கன்னு சொல்லி தப்பிச்சிக்கிட்டார். இங்கயும் அதே மாதிரி பின்னந்தலையில அடி.... பக்கத்துல கிடந்த சோபா கைப்பிடி மேல ரத்தக் கறை... வேணும்னே புடிச்சி தள்ளி கொன்னுட்டார்... ரெண்டு மர்ட்லருயும் இருக்கற ஒத்துமைய பாத்தா இது ஒரு ப்ரீ-ப்ளான்ட் மர்டர்னு மட்டுமில்ல ரெண்டுக்கும் கோபால்தான் காரணம்னு கூட ஈசியா ப்ரூஃப் பண்ணிறமுடியும்.... அன்னைக்கி எங்கிட்டருந்து தப்பிச்சவன் அவனாவே வந்து மறுபடியும் மாட்டிக்கிட்டான்....'

ஓ! இதான் விஷயமா? என்று நினைப்புடன்  வெறி பிடித்தவர்போல் தன் முன் நின்றவரைப் பார்த்தார் தன்ராஜ். அன்னைக்கி அவர் கிட்ட தோத்துப் போனோமேங்கற வெறிதானா இந்த கேஸ்ல இவ்வளவு இன்ட்ரஸ்ட் காமிக்க காரணம்? 

'என்ன தன்ராஜ் பாக்கறீங்க? நா சொல்றது புரியுதா இல்லையா?' 

அவருடைய குரலில் இருந்த உக்கிரமம் தன்ராஜை அதிரிச்சியடைய வைத்தது. How can he think rationally when he is so angry? இந்த தேவையற்ற கோபம் நிதானமாக சிந்திக்க வைக்காதே.. என்ன செய்வது, இவரை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் அவர் பதிலளிக்காமல் அமர்ந்திருந்தது வேணுவை மேலும் கொதிப்படையச் செய்தது.

'Why are you silent mister? say something!' வேணுவின் இரைச்சலைக் கேட்டு அறைக்குள் நுழைந்த அவருடைய சிப்பந்தி 'கூப்ட்டீங்களா சார்?' என்று கேட்க, 'யோவ் வெளிய போய்யா... ஒன்னெ யார் உள்ள வரச்சொன்னது?' என்று வேணு மேலும் இரைய சிப்பந்தி கலவரத்துடன் தன்ராஜை பார்த்துவிட்டு அடுத்த நொடியே அறையை விட்டு ஓடினான்.

'I agree with you Sir.... I'll make the correction.' என்றார் தன்ராஜ நிலைமையை சமாளிக்க... 'IPC section 300னு மாத்திடறேன்.' 

'இருங்க... இதுல இன்னொரு விஷயத்தையும் கவனிக்கணும்..'

இன்னும் முடியலையா? 'என்ன சார்?'

'பி.எம். ரிப்போர்ட்ல சொல்றா மாதிரி மூனு வூன்ட்ஸ்... ரெண்டு பின்னந்ததலையில... ஆஃபனவர் கேப்புல... அப்புறம் நெத்தியில... எதுக்காக... எப்படின்னு யோசிச்சீங்களா? ட்ரையல்ல கேள்வி வருமே?'

அதையும் நீங்களே சொல்லிருங்களேன்... என்னெ எதுக்கு கேட்டுக்கிட்டு... என்று தனக்குள் சொல்லிக்கொண்ட தன்ராஜ் தன் எதிரில் நின்ற வேணுவை பார்த்தார். இவர் இருக்கற மூடுல ராத்திரி வரைக்கும் சொன்னதையே சொல்லிக்கிட்டிருப்பாரோ.....  நாம நினைச்சாலும் இன்னைக்கி இவர ஸ்டாப் பண்ண முடியாது... 'ஆமா சார்.' என்றார் வேறு வழி தெரியாமல்..

'I will explain.... இது யூகம்தான்... ஆனா இதுதான் நடந்துருக்கணும்.... எதிரி சாயந்தரம் நாலு, நாலரை மணிக்கி போயிருக்கார்..... பார்க்கிங் லாட் பையனோட ஸ்டேட்மென்ட் படி ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கும் மேல அந்த வீட்டுக்குள்ள இருந்துட்டு வந்துருக்கார். ஆரம்பத்துல பேசி பாத்துருப்பார். வீட்ட மட்டும் கேக்காத... வேற எதுவானாலும் கேளுன்னு சொல்லியிருப்பார்.... அந்த பொண்ணு மசிஞ்சிருக்காது.... வாக்குவாதம் வந்துருக்கும்... எதிரிக்குத்தான் கோபத்த கன்ட்ரோல் பண்ண தெரியாதே.... ஃபர்ஸ்ட் வய்ஃப பண்ணா மாதிரி தலைய புடிச்சி சோஃபா ஹேண்டில் மேல வச்சி இடிச்சிருப்பார்.... அந்த பொண்ணு swoon ஆயிருக்கும்.... செத்துத் தொலைன்னு அப்படியே போட்டுட்டு வீட்ட பூட்டிக்கிட்டு கிளம்பியிருப்பார்.... அதுக்கப்புறம்.... அவ செத்தாளா இல்லையான்னு  தெரிஞ்சிக்கறதுக்காக ஆஃபனவர் கழிச்சி மறுபடியும் ஃபோன்ல கூப்ட்டு பாத்துருக்கார்.... மயங்கிக் கிடந்த அந்த பொண்ணு மயக்கம் தெளியற சமயத்துல இந்த ஃபோன் போயிருக்கும்.... தட்டித் தடுமாறி எழுந்து ஃபோன எடுத்து பேச ட்ரை பண்ணியிருக்கும்... ரிசீவர எடுக்க முடிஞ்சிருக்கு... ஆனா பேச முடியல.... she must have felt drowsy.....அவளையுமறியாம கையிலருந்த ரிசீவர் கைநழுவி கீழ விழுது..... அத்தோட அந்த பொண்ணும் மறுபடியும் மயங்கி விழுது... எங்க? பக்கத்துலருக்கற டீப்பாய் மேல.... கிளாஸ் டாப் டீப்பாய்.... edges must have been very sharp.....நெத்தியல டீப்பா ஒரு கட்..... அதுலருந்து ப்ளட் லாஸ் ஆவுது..... எதிரி மாதவி ஃபோன எடுப்பான்னு எதிர்பார்க்கல.... அவ உயிர் பொழைச்சிட்டா எங்க நம்மள காட்டிக் குடுத்துருவாளோங்கற பயம்... மறுபடியும் அவ வீட்டுக்கு போறார்.... தன் கையிலருக்கற சாவிய யூஸ் பண்ணி திறந்து உள்ள போயி ஏற்கனவே மயக்கமா இருக்கற மாதவியோட தலைய மறுபடியும் புடிச்சி பலமா அதே சோஃபா ஹேன்டில்ல இடிக்கிறார்.... அவ அதுக்கு மேல உயிர் பிழைக்க சான்ஸ் இல்லேங்கறத கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டு கதவ சாத்திக்கிட்டு வந்துடறார்.... This is what must have happened..... என்ன சொல்றீங்க?'

வேணுவின் யூகத்தில் பல ஓட்டைகள் இருந்தாலும் அதை மறுத்துப் பேசும் மனநிலையில் தன்ராஜ் இல்லை. எப்படியிருந்தாலும் நீதிமன்றத்தில் வாதாடி குற்றத்தை நிரூபிக்கப் போவது அவர்தானே என்று நினைத்தார். இவரை மறுத்துப் பேசி தன்னுடை நேரத்தை வீணடிக்க விரும்பாத அவர், 'நீங்க சொல்றது சரிதான்னு நினைக்கறேன் சார்.' என்று சொல்லி வைத்தார்.

'Yes... It must be... It must be..'

'வேற ஏதாவது.....' என்று மீண்டும் தயக்கத்துடன் சொன்ன தன்ராஜை வேணு வெறித்துப் பார்க்க.... இன்னும் முடியல போலருக்கே என்று கலங்கினார். 

'என்ன மிஸ்டர் தன்ராஜ்... வேற ஏதாச்சும் அர்ஜன்ட் ஒர்க் இருக்கா....?' என்றார் எரிச்சலுடன்.... 

'இல்லையே சார், ஏன் கேக்கறீங்க?'

'எதுக்கா? பின்னே என்ன சார்....? இது உங்க கேஸ், நீங்கதான் இன்வெஸ்ட்டிகேட் பண்ணீங்க.... ஆனா நீங்க சொல்ல வேண்டியதையெல்லாம் நா சொல்லிக்கிட்டிருக்கேன்.... நீங்க என்னடான்னா நா சொல்றதே விதியேன்னு கேட்டுக்கிட்டிருக்கா மாதிரி ரியாக்‌ஷன் குடுக்கீங்க?'

இதென்னடா வம்பா போச்சி என்று நினைத்தார் தன்ராஜ். 'சாரி சார்.... I didn't want to interrupt you.. அதனாலதான்...'

'It's OK....' என்று அவருடைய விளக்கத்தை ஏற்றுக்கொண்ட வேணு தொடர்ந்தார். 'இதுல இன்னொரு விஷயம் தெளிவில்லாம இருக்கு. கவனிச்சீங்களா?'

'என்ன சார்?'

'எதிரி ரெண்டாவது தடவ அந்த லேடியோட தலைய புடிச்சி இடிச்சப்போ பின்னந்தலையில ரொம்ப டீப்பான காயம் ஏற்பட்டிருக்கு.....அதுவுமில்லாம அந்த டைம்ல அந்த பொண்ணோட நெத்தியில பட்டிருந்த காயத்துலருந்து பளட்டும் போய்க்கிட்டிருந்துருக்கு..... அதனால எதிரி மேல ரத்தம் நிச்சயமா பட்டுருக்க சான்ஸ் இருக்கு, என்ன சொல்றீங்க?'

இத்தனை நேரம் இடைவிடாமல் பேசியதில் இந்த கேள்விதான் சரியான கேள்வி என்று நினைத்தார் தன்ராஜ். இது ஏன் நமக்கு தோன்றவில்லை? ஆனால் கொலையுண்டவரின் பின்னந்தலையில் இரண்டு காயங்கள் இருந்தன என்றும் இரண்டாவது காயம்தான் அவர் உயிரிழக்க முக்கிய காரணம் என்பதும் பி.எம் செய்த மருத்துவர் கூறியபிறகுதானே தெரிய வந்தது? அது மட்டுமல்லாமல் மர்டர் ஸ்பாட்டுக்கு அவர் சென்றடைந்தபோது கொலை நடந்த நேரத்திலிருந்து ஏறக்குறைய இருபது மணி நேரம் ஆகியிருந்ததே? அன்று மட்டும் மாதவியின் பணிப்பெண் தொலைபேசியில் அழைத்தபோது அவர் காவல்நிலையத்தில் இருந்திருந்தால் உடல் அங்கிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு அவராலும் காயங்களை பார்த்திருக்க முடியும், ரத்தக்கறை ஏதேனும் இருந்தாலும் அதையும் கவனித்திருக்க முடியும். 

'என்ன சார் சைலன்டாய்ட்டீங்க? அவர பாத்ததா சொன்ன லேடிக்கிட்ட இந்த விஷயத்த பத்தி கேட்டீங்களா? இல்ல அவர் அங்க போன கார்ல ஏதாச்சும் ப்ளட் ஸ்டெய்ன பாத்தீங்களா? அப்படியிருந்தா ஏன் உங்களோட எந்த ரிப்போர்ட்லயும் அதப்பத்தி ஒன்னையும் காணம்?'

வேணுவின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தன்னால் ஒரு பதிலையும் சொல்ல முடியவில்லையே என்று அங்கலாய்த்துப் போனார் தன்ராஜ். சம்பவ தினத்தன்று காவல்நிலையத்தில் இரண்டு துணை ஆய்வாளர்களும் காவல் நிலைய ஆய்வாளரும் இல்லை என்றும் ஆகவே மர்டர் ஸ்பாட்டுக்கு அப்போது நிலையத்தில் இருந்த ஒரு எஸ்.எஸ்.ஐ மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மட்டுமே முதலில் சென்றனர் என்பதையும் இவரிடம் தெரிவித்தால் எப்படி ரியாக்ட் செய்வார் என்று தெரியவில்லையே என்கிற அச்சமும் அவரை மேலும் மவுனமாக இருக்க வைத்தது.

'நீங்க சைலன்டா இருக்கறத பாத்தா நீங்க அந்த ஸ்பாட்டுக்கே போகலைன்னு தோனுது.... சரியா சார்?'

தொடரும்..8 comments:

வே.நடனசபாபதி said...


ஒரு PP அரசு அலுவலரான ஒரு துணை ஆய்வாளரை தனது ஊழியர் போல் நடத்தமுடியுமா? முடியும் என்றால் இந்த சட்டம் மற்றும் நீதி முறைகளின் மேல் உள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது. தொடர்கிறேன். மேற்கொண்டு நடந்த உரையாடலை அறிய.

Packirisamy N said...

//'நீங்க சைலன்டா இருக்கறத பாத்தா நீங்க அந்த ஸ்பாட்டுக்கே போகலைன்னு தோனுது.... சரியா சார்?'//

In my opinion, if any report is submitted, it must contain all the basic information as standard. That should include the crime spot attending officer. If that be the case, the above question may not be come. The most difficult problem in any organisation is the human problem. It is shown very well in this episode. Thanks.

டிபிஆர்.ஜோசப் said...


வே.நடனசபாபதி said...

ஒரு PP அரசு அலுவலரான ஒரு துணை ஆய்வாளரை தனது ஊழியர் போல் நடத்தமுடியுமா? முடியும் என்றால் இந்த சட்டம் மற்றும் நீதி முறைகளின் மேல் உள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது.//

எல்லா அரசு வழக்கறிஞர்களுமே இப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது. எல்லா துறைகளிலும் போலவே இங்கும் இப்படி சிலர் உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டத்தான் இப்படியொரு பாத்திரத்தை உருவாக்கினேன்.

இப்படியொரு ஆணவம் பிடித்த வழக்கறிஞரை நான் சந்தித்திருக்கிறேன். அவருடைய சாயலில் வடிக்கப்பட்ட பாத்திரம் இது.

ஆனால் பெரும்பாலான அரசு பிபிக்கள் குற்றப்பத்திரிக்கை தயாரிப்பதில் தலையிடுவதால்தான் உச்ச நீதிமன்றமே தன்னுடைய பல தீர்ப்புகளில் இதை கண்டித்துள்ளது என்பதையும் நினைவில் கொண்டு படைக்கப்பட்ட பாத்திரம் இது என்ற்ம் கூறலாம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

டிபிஆர்.ஜோசப் said...

PM
Packirisamy N said...
//'நீங்க சைலன்டா இருக்கறத பாத்தா நீங்க அந்த ஸ்பாட்டுக்கே போகலைன்னு தோனுது.... சரியா சார்?'//

In my opinion, if any report is submitted, it must contain all the basic information as standard. That should include the crime spot attending officer. If that be the case, the above question may not be come. The most difficult problem in any organisation is the human problem. It is shown very well in this episode. Thanks.//

Normally the reports by IOs on their visit to crime scene would not be submitted to the PP or the Court, unless it is required by the defense.

Because, the PP is not supposed to see the Charge sheet till it is submitted to the Court. His duty is to conduct the case on behalf of the Govt based on the charges contained in the charge sheet. If some of the irrelevant sections of IPC are included and some are left and if the case is lost or the accused gets a lesser punishment due to this error the blame would be passed on to the IO who prepared the CS.

The most difficult problem in any organisation is the human problem. //

Yes.. Managing people is an art. It cannot be taught but can only be learnt. It comes only through experience. It is in short supply not only in India but the world over.

Thanks for your thought provoking comments.

Sasi Kala said...

இதென்னடா வம்பா போச்சி என்று நினைத்தார் தன்ராஜ்.
பாவம் இந்த தன்ராஜ் எப்படியெல்லாம் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்..
யாரோ தப்பு செய்ய யார் யார் எல்லாம் அலைச்சல் படுறாங்க.

G.M Balasubramaniam said...

பப்ளிக் ப்ராசிக்யூட்டர் PM ரெபோர்ட்டை சரியாகப் பார்க்கலையா.? அவருடைய சில கேள்விகள் IO வைத் தடுமாறச் செய்வதிலிருந்து அவர் வெறும் மந்திரியின் மொக்கையான ஆள் என்பது சரியா.?

டிபிஆர்.ஜோசப் said...

Sasi Kala said...
இதென்னடா வம்பா போச்சி என்று நினைத்தார் தன்ராஜ்.
பாவம் இந்த தன்ராஜ் எப்படியெல்லாம் மாட்டிக்கிட்டு முழிக்கிறார்..
யாரோ தப்பு செய்ய யார் யார் எல்லாம் அலைச்சல் படுறாங்க.//

நமக்கும் சில சமயங்களில் அத்தகைய சூழல் ஏற்படுகிறதே, அதுபோலத்தான் இவருக்கும்...இதைத்தான் தலையெழுத்து என்பார்கள் போலிருக்கிறது.

டிபிஆர்.ஜோசப் said...


G.M Balasubramaniam said...
பப்ளிக் ப்ராசிக்யூட்டர் PM ரெபோர்ட்டை சரியாகப் பார்க்கலையா.? அவருடைய சில கேள்விகள் IO வைத் தடுமாறச் செய்வதிலிருந்து அவர் வெறும் மந்திரியின் மொக்கையான ஆள் என்பது சரியா.?//

சிலபேர் இப்படித்தான் சார்... எந்த ரிப்போர்ட்ட குடுத்தாலும் அதுல ஏதாச்சும் தப்பு கண்டுபிடிக்கலாமான்னுதான் பாப்பாங்களே தவிர அதுல என்ன எழுதி இருக்குன்னு பாக்க மாட்டாங்க. இந்த மாதிரி பல உயர் அதிகாரிகளை என்னுடைய சர்வீசில் சந்தித்திருக்கிறேன். அவதியும் பட்டிருக்கிறேன். அந்த மாதிரியான அதிகாரிகளுள் ஒருவர்தான் பிபியும்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.