06 ஆகஸ்ட் 2013

வறுமைக் கோடு என்னும் மாயை!

இப்பல்லாம் இதப் பத்தி பேசினாலே கம்ப எடுத்துக்கிட்டு அடிக்க வர்றவங்கதான் அதிகம்.

சமீபத்துல ஒரு மூன்றெழுத்து மூத்த பதிவர் - இவர் வயசுல இளையவர்தான்னாலும் ரொம்ப நாளாவே பதிவுலகுல இருக்கிறவர்ங்கறதால மூத்தவர்னு சொன்னேன் - இதப்பத்தி எழுதி காது குடுத்து கேக்க முடியாத வார்த்தைகள கருத்துரை மூலமா வாங்கிக் கட்டிக்கிட்டார். இத்தனைக்கிம் இவர் கவர்ன்மென்ட் சொன்னத பத்தி எதுவுமே எழுதலைங்க. தனக்கு ஒரு நாளைக்கி சாப்பாட்டுக்கு என்ன செலவாகுதுன்னுதான் சொன்னார்.

இவர நக்கல் பண்ணி இன்னொரு மூன்றெழுத்து மூத்த பதிவர் - இவரோட வயச பத்தி எனக்கு தெரியாதுங்க. ஆனா இவரோட எழுத்த படிச்சீங்கன்னா இவருக்கு ரத்தம் ரொம்ப சூடாருக்கறத புரிஞ்சிக்க முடியும். அதனால இவர் வயசுல மூத்தவரா இருக்க சான்ஸ் இல்லை - ஒரு பதிவு எழுதுனார். இதுலயும் மொதல்ல பதிவு எழுதுனவரப் பத்திய விமர்சனம்தான் ஜாஸ்தி இருந்துச்சி.

ஆனா இந்த ரெண்டு பேர் எழுதுனதப் பத்தியோ இல்ல இதப் பத்தி அல்பத்தனமா அறிக்கைகளை விட்ட சில அரசியல்வாதிகளைப் பத்தியோ நாம பேசப் போறதில்லை.

உண்மையிலேயே வறுமைக்கோடுங்கறது என்ன, எதுக்கு, ஏன் இந்த கோட்ட போடறாங்கங்கறத ஒரு ஆக்கபூர்வமா - குத்தம் சொல்றது எப்பவுமே ரொம்பவே ஈசிங்க. அதுக்குன்னு தனியா எந்த ஆராய்ச்சியும் செய்ய வேணாம். சகட்டுமேனிக்கி எழுதிட்டு போயிறலாம். சேத்த வாறி இறைக்கிறது ஈசிதானே. அத கழுவி சுத்தம் பண்றதுதான் கஷ்டம் - பாத்தா என்னன்னு எனக்கு ரொம்ப நாளாவே ஒரு யோசனை. ஆனா இதப்பத்தி நாலாப்பக்கமும் இருந்து வந்த இரைச்சல் எல்லாம் அடங்கட்டும்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்.

சரி இப்ப விஷயத்துக்குள்ள போலாம் வாங்க.

வறுமைக் கோடுன்னா என்னங்க?

இது என்ன பெரிய லக்‌ஷமண் ரேகையா இதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்கறதுக்கு? நிச்சயமா இல்லைங்க. இந்த கோடு ஒரு அடையாளம் மட்டுமே. இதுக்குக் கீழ இருக்கறவங்கள பரம ஏழைங்கன்னு சொல்லலாம், அவ்வளவுதான்.  உதாரணத்துக்கு சொல்லணும்னா இருக்க வீடு இல்லாம, மூனு வேளையும் சுமாராக் கூட சாப்பிட முடியாம, தங்களோட குழந்தைகள பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியாம அன்னாடம் பொழப்புக்கே திண்டாட்டம் போடறவங்கன்னு சொல்லலாம்.

இதுதான் வறுமைக்கோடு, இதுக்குக் மேலை இருக்கறவங்க எல்லாம் ஏழைகள் இல்லேன்னு சொல்லிற முடியாது. உதாரணத்துக்கு இருக்க வீடுன்னு ஒன்னு இருக்குது. ஆனா மழை வந்துதுன்னா வீட்டுக்குள்ள இருக்கறதுக்கு வெளியிலயே இருக்கலாம்கறா மாதிரியான ஒரு வீடு, ஒரு வேளையாச்சும் வயிறார சாப்பிட முடியற அளவுக்கு வருமானம், பசங்கள கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைக்க முடியும்... ஆனா ஒடம்புக்கு பெரிசா ஏதாச்சும் வந்திருச்சின்னா மருத்துவம் பாக்க வசதியிருக்காது, பசங்கள ஒரு லிமிட்டுக்கு மேல படிக்க வைக்க முடியாது... இப்படி சொல்லிக்கிட்டே போவலாம்.

இவங்களுக்கும் மேல இருக்கறவங்கள நடுத்தரவாசிகள்னு சொல்றாங்க. இப்போ இந்தியாவுல இருக்கறவங்கள்ல இந்த வகுப்ப சேர்ந்தவங்கதான் ஜாஸ்தியாம். சொந்தமா இல்லன்னாலும் வாடகைக்கு - வசதியா இல்லன்னாலும் தேவைக்கு -  ஒரு வீடு, அந்த வீட்டுல டிவி, ஃபிர்ட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வசதிகள், மூனு வேளையும் பகட்டா இல்லன்னாலும் வயிறு நிறையறா மாதிரி சாப்பாடு, ஸ்கூல், காலேஜ் வரைக்கும் பசங்கள படிக்க வைக்க முடியற வசதி, வெளிய போய், வர்றதுக்கு ரெண்டு சக்கர வாகனம் - அது சைக்கிளோ இல்ல ஸ்கூட்டரோ, மோட்டார்சைக்கிளோ எதுவானாலும் - மாசத்துல ஒருநாள் ஜாலியா சினிமா செலவுகளை செய்ய முடியற சவுகரியம், பசங்களுக்கு உடம்பு சரியில்லன்னா தனியார் மருத்துவமனைகள்ல மருத்துவம் பாத்துக்க முடியற வசதி, தீபாவளி, பொங்கல் பிரமாதமா இல்லன்னாலும் ஓரளவுக்கு சந்தோஷமா கொண்டாடக் கூடிய வசதி.... இந்த பிரிவுல வர்றவங்க மொத்த ஜனத்தொகையில சுமார் நாற்பது பர்சென்டாம்.

இதுக்கு மேலருக்கறவங்களப் பத்தி சொல்லவே வேணாம். ஏன்னா நம்ம நாட்டுல இந்த பிரிவுல வர்றவங்க 10%க்கும் கம்மியாம்!

எப்படி இந்த கோட்ட போடறாங்கன்னு பாக்கறதுக்கு முன்னால எதுக்கு இந்த கோடுன்னு பாத்துரலாம்.

மத்தியில இருக்கற அரசாங்கமும் சரி, மாநிலங்கள்ல இருக்கற அரசாங்கமும் சரி - அது எந்த கட்சிங்கறது முக்கியமே இல்லைங்க. ஏன்னா இத வரையறுக்கறது அரசாங்க நியமிக்கிற அதிகாரிங்க, பொருளாதாரத்துல டாக்டர் பட்டம் வாங்கினவங்கள மெம்பர்ஸா கொண்ட ஒரு குழுதான் - தங்களோட மக்கள் நல திட்டங்கள் யாருக்கு ஜாஸ்தி போயி சேரணும்கறத தீர்மானிக்கிறதுக்குத்தான் இந்த கோட ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தையும் ஃபைனலைஸ் பண்றதுக்கு முன்னால போட்டு பாக்கறாங்க.

இப்ப இந்த கோட்ட எப்படி டிரா (Draw) பண்றாங்கன்னு பாக்கலாம்.

இந்தியாவுல என்ன செய்யிறாங்கன்னு சொல்றதுக்கு முன்னால உலகளவுல இருக்கற உலக வங்கி அவங்களோட கணிப்புல என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்.

உலகளவுல அமெரிக்க பணமான டாலர வச்சித்தான் இந்த கோட்ட போடறாங்க. அதாவது ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கி அமெரிக்க பணத்துல 1.25 டாலர் அளவுக்கு வாங்கும் சக்தி இல்லாதவங்கள பரம ஏழைங்க அதாவது வறுமைக் கோட்டுக்கு கீழ இருக்கறவங்கன்னு சொல்லுது. இதுல முக்கியமா பாக்க வேண்டியது Purchasing power parityங்கற (தனிநபருடைய வாங்கும் திறன் விகிதம்னு சொல்லலாம்) விஷயம். அதாவது உலக பொது அளவி நாணயம்னு சொல்லப்படற அமெரிக்க டாலர் ஒன்னுக்கு அமெரிக்காவுல என்ன வாங்க முடியும்கறத கணக்கு போட்டு அதே பணத்துக்கு ஒவ்வொரு நாட்டுலயும் என்னத்த வாங்க முடியும்னு கணக்கு போடுவாங்க. இத மாத்தி சொல்லணும்னா - உதாரணத்துக்கு நம்ம நாட்டு பணத்த எடுத்துக்குவோம் - நம்ம நாட்டு ஒரு ரூபாவுக்கு அமெரிக்காவுல என்ன கிடைக்கும்னு பாக்கறதுதான் இந்த purchasing power parity (PPP). அஞ்சி வருசதுக்கு முன்னால உள்ள விலைவாசி கணக்குல பாத்தா அமெரிக்காவுல நம்ம ஒரு ரூவாவ பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான். ஏன்னா கடைசியா எடுத்த கணக்கு பிரகாரம் நம்ம நாட்டு ஒரு ரூவா அமெரிக்க பணத்தோட வாங்கற சக்தியில மைனஸ் அறுபத்திரண்டு பர்சன்டாம்!! ஆனா இன்னைக்கி இந்த இரண்டு நாட்டுக்கும் நடுவுல நடக்கற பிசினஸ்ல மாத்திக்கிற பண மாற்று விகிதப்படி (Exchange rate) ஒரு அமெரிக்க பணத்துக்கு சுமார் அறுபது இந்திய ரூபாவ குடுக்கணும். இதுக்கும் நாம கொஞ்ச நேரத்துக்கு முன்னால பாத்த PPPக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. ஆனாலும் உலக வங்கி சொன்ன அமெரிக்க பணம் 1.25க்கு நிகரான இந்திய பணம் எவ்வளவுன்னு பாத்தா சுமார் ரு.75/- அதாவது ஒரு நபர், ஒரு நாளைக்கி ரூ.75/- கூட செலவு பண்ண முடியலன்னா அவர் பரம ஏழை - அதாவது வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவர்னு அர்த்தம்!

ஆனா சமீபத்துல செஞ்ச PPP எஸ்டிமேட் என்ன சொல்லுதுன்னு பாத்தா அமெரிக்க-இந்திய பணத்தை ஒப்பிட்டுப்பாக்கறப்போ இந்திய பணம் அமெரிக்க பணத்தை விட இரு மடங்கு குறைவானதாம்! அதாவது ஒரு அமெரிக்க பணத்துல அமெரிக்காவுல என்ன வாங்க முடியுமோ அதவிட ரெண்டு மடங்கு இங்க வாங்க முடியுமாம். இதுல இன்னொரு சூட்சுமத்தையும் உலக வங்கி சொல்லுது. ஒரு பொருளை தயாரிக்கறதுக்கு அமெரிக்காவுல ஆகற செலவுல பாதிதான் இந்தியாவுல ஆகும்கறதையும் கவனிக்கணுமாம். அதே மாதிரிதான் விவசாயத்துலயும். உதாரணத்துக்கு இங்க ஒரு கிலோ சன்ன ரக பொன்னி அரிசி சந்தையில ரூ.65/-க்கு வாங்க முடிஞ்சா அதே அரிசி அமெரிக்காவுல வாங்கணும்னா ரூ.130/- குடுக்கணுமாம். ஏன்னா அங்க அத பயிர் செஞ்சி, மில்லுல அரைச்சி, பேக் பண்ணி, மாலுங்களுக்கு (Mall) கொண்டு போயி சேக்கற செலவையெல்லாம் சேக்கறதால இந்த அடிஷனல் விலையாம்!

இந்த கணக்குப் பிறகாரம் பாத்தா உலக வங்கி சொல்ற அமெரிக்க பணம் 1.25ல பாதி அளவு அதாவது 0.65 டாலர் வாங்கும் திறன் இருந்தாலே ஒருத்தர் வறுமைக்கோட்டுக்கு மேல வந்துருவாராம்! ஓங்கி ஒரு அறை அறைஞ்சா என்னான்னு தோனுமே? நல்லவேளை, இத நா சொல்லலை. உலகவங்கி சொல்லுது. இது நமக்கு மட்டுமில்லீங்க, ஆப்பிரிக்கா, பஞ்சத்துக்கு பேர்போன சோமாலியா மாதிரியான நாட்டுல இருக்கறவங்களையும் இதே மாதிரியான வாங்கும் திறன் விகிதத்த (PPP) வச்சித்தான் கால்குலேட் பண்றாங்க.

அப்படிப்பார்த்தா அமெரிக்க பணம் 0.65 = ரூ.40/-னு வச்சிக்கலாம். அதாவது இந்தியாவுல இருக்கற ஒருத்தருக்கு தினசரி நாப்பது ரூபா செலவு பண்ண வசதி இருந்தா அவர் பரம ஏழையாக கருதப்பட மாட்டார். இது வருமானம் இல்லைங்கறத மனசுல வச்சிக்குங்க. அவருக்கு தினசரி நாற்பது ரூபா கணக்குல மாசத்துக்கு 1200 ரூபா செலவு பண்ண முடியற அளவுக்கு வருமானம் இருக்கணும். அவர் குடும்பத்துல அவரோட அஞ்சி பேர் இருந்தா 6000 ரூபா மாச செலவு செய்ய முடியணும். இப்ப சொல்லுங்க இந்த அளவுக்குள்ள செலவு செய்ய நம்ம நாட்டுல எத்தன குடும்பத்துக்கு முடியும்? அது முடியாதவங்க மட்டுந்தான் பரம ஏழைங்க, அதாவது அரசாங்கம் சொல்ற வறுமைக் கோட்டுக்கு கீழ இருக்கறவங்களாம்.

உலகவங்கி அப்பப்போ அறிவிக்கிற இந்த விகித அடிப்படையிலதான் நம்ம நாட்டுல மட்டுமில்லாம உலகத்துலருக்கற எல்லா நாட்டுலயும் செய்யிறாங்க. ஆனா, அத அப்படியே காப்பியடிச்சி செய்யிறதில்லேங்கறதும் உண்மைதான். சாதாரணமா முன்னேறிய நாடுங்கன்னு சொல்றாங்களே அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், இத்தாலி மாதிரி நாடுங்கள்ல உலகவங்கி சொல்றத விட கொஞ்சம் ஜாஸ்தியாவே வச்சி (higher level) வறுமைக்கோட்ட ஃபிக்ஸ் பண்ணுவாங்க. ஆனா இந்தியா மாதிரி வளர்ந்துவரும் நாடுகள்ல பல காரணங்களுக்காக (இதுல அரசியலும் ஒன்னுதான். மறுக்க முடியாது) உலகவங்கி சொல்றத விட இன்னும் கொஞ்சம் குறைச்சி (lower level) ஃபிக்ஸ் பண்றாங்கன்னும் ஒரு ஆய்வு (study) சொல்லுது. இது நிசம்தாங்கறா மாதிரிதான் இருந்துது இந்த வருசம் நம்ம திட்டக் குழு தீர்மானிச்சி அடிவாங்குன எஸ்டிமேட்டும். எல்லா பக்கத்துலருந்து கிடைச்ச அடிக்கப்புறம் மறுபடியும் ஏதாச்சும் செஞ்சி ஜனங்கள திருப்திப் படுத்தலாமான்னு பாக்கறாங்க.

சரி, இந்த கோட்ட நாங்களா போடலைன்னும் இதுக்குன்னு நாங்க அமைச்ச ஒரு எக்ஸ்பேர்ட் குழுதான் இத தீர்மானிச்சி சொல்லிச்சின்னும் நாங்க சும்மா அத ரிப்போர்ட்தான் பண்ணோம்னும் சமீபத்துல ஜகா வாங்குனார் நம்ம திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் அலுவாலியா. இவரப் பத்தி நிறைய அக்கப்போர் இருக்குது. இவரோட வீட்டுலருக்கற அஞ்சாறு கக்கூஸ - நாகரீகமா சொன்னா கழிவறை - இடிச்சி மாத்தி கட்டுறதுக்கே முப்பத்தஞ்சி லட்சம் செலவு பண்ணாராம்! இப்படிப்பட்டவர் மாசம் ஆறாயிரம் ரூபாவுக்குள்ள அஞ்சி பேர் இருக்கற குடும்பம் நடத்த முடிஞ்சா அவர் பரம ஏழை இல்லேன்னு சொன்னா கோவம் வருமா வராதா? என்னதான் எக்ஸ்பர்ட் குழு சொன்னாலும் இவர் எப்படி அத ஏத்துக்கலாம்னு கேக்கறாங்க ஜனங்க. நியாயம்தானே?

இந்த எக்ஸ்பர்ட் குழு எப்படி இந்த செலவு லிமிட்ட  (expenditure limit) கண்டுபுடிச்சாங்க?

சுதந்திரத்துக்கப்புறம் இந்த வறுமைக் கோட்ட கால்குலேட் பண்றதுக்கு ரெண்டு மூனு குழு அமைச்சிருக்காங்க. அதுல ஒரு குழு ஒவ்வொருத்தருக்கும் தினசரி எத்தன கலோரி உணவு தேவைப்படும்னு கால்குலேட் பண்ணி அப்புறம் அதுக்கு எவ்வளவு செலவாவும்னு ஒர்க் அவுட் பண்ணி அத்தோட மாசா மாசம் குடுக்க வேண்டிய வாடகை, கரன்ட், மருத்துவ செலவுன்னு ரொம்பவும் தேவைப்படற செலவையும் சேர்த்து அத முப்பதால வகுத்து ஒரு ஆளுக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு வருமானம் (செலவு இல்ல!) வேணும்னு தீர்மானிச்சாங்க. அது சரிவரலை.

அதுக்கப்புறம் வந்த குழு விலைவாசி பட்டியல் (price index) அடிப்படையில கிராமத்துல வசிக்கறவங்களையும் நகரத்துல வசிக்கறவங்களையும் தனித்தனியா எஸ்டிமேட் பண்ணலாம்னு ஒரு ஐடியா குடுத்தாங்க. அதுவும் சரிவரலை.

அதுக்கப்புறம் கடைசியா ஒரு குழு அமைச்சாங்க. அதான் காலம் சென்ற பேராசிரியர் சுரேஷ் டென்டுல்கர் - இவர் ஒரு பொருளாதார மேதை. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் - தலைமையில ஒரு குழு அமைச்சி இந்த கோட்ட மறுபடியும் கொஞ்சம் சைன்ட்டிஃபிக்கா எல்லாருக்கும் புரியறா மாதிரி போடுங்கன்னு சொன்னாங்க.

அவங்க அதுக்கு முன்னால சொன்ன வருமானத்த பாக்காம ஒவ்வொரு குடும்பத்தையும் சில தகுதிகள் (Economic Status) வேணும்னு தீர்மானிச்சி அதன் அடிப்படையில அந்த தகுதிய maintain பண்றதுக்கு ஒருத்தருக்கு ஒரு நாளைக்கு அவரோட அத்தியாவசிய தேவைகளை (இத முக்கியமா புரிஞ்சிக்கணும். அத்தியாவசியம்னா அன்னாடம் உயிர்வாழ என்ன தேவையோ அத மட்டும் பாத்துக்கற அளவுக்கு) நிறைவேத்திக்கறதுக்கு எவ்வளவு செலவு செய்யணும்னு பாக்கலாம்னு டிசைட் பண்ணி அதுக்கு எந்தெந்த செலவையெல்லாம் சேத்துக்கணும்னு ஒரு லிஸ்டே போட்டாங்க.

அதுல பதிமூனு ஐட்டம் இருந்துது.

1.நிலம்,
2.வீடு,
3.உடை,
4.உணவு,
5.சுகாதாரம்,
6.வீட்டு உபயோகத்திற்கு தேவையான சாமான்கள் (இதுல டிவி, ஃபிரிட்ஜ் மாதிரியான ஆடம்பர சாமான்கள் சேத்துறக்கூடாதுங்க!)
7.கல்வி
8.வேலை
9.வருமானம்
10.குழந்தைகள்,
11.கடன் சுமை
12.குடிபெயர்ந்ததற்கான காரணம் (கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்திருந்தால் அதற்கு என்ன அடிப்படைக் காரணம்?)

இந்த ஒவ்வொரு பிரிவுக்கும் 0லருந்து 4க்குள்ள மார்க் (Mark- மதிப்பெண்கள்) குடுக்கணும்னு டிசைட் பண்ணி சர்வே நடத்தச் சொல்லி ரெக்கமென்ட் பண்ணாங்க.

இதுல ஒரு cut-off mark நிர்ணயம் செஞ்சி இதுக்கு  கீழ மார்க் வாங்குனவங்கள வறுமைக்கோட்டுக்கு கீழ உள்ளவங்கன்னு தீர்மானிக்கலாம்னு ஐடியா!

உதாரணத்துக்கு சொந்த நிலமே இல்லன்னா முதல் பிரிவுல அவருக்கு பூஜ்யம் மதிப்பு கிடைக்கும். நிலம் சொந்தம் ஆனா அது பூர்வீகமா வந்துதுன்னா அதுக்கு 1, தானா சம்பாசிதிச்சதுதான் ஆனா அதுல கொஞ்சம் கடன் இருக்குன்னு சொன்னா அதுக்கு 2 அல்லது 3 கிடைக்கு சுயசம்பாத்தியத்திலிருந்து வாங்கிய வில்லங்கம் ஏதும் இல்லாத நிலம்னா அவருக்கு முழுசா 4 மார்க் கிடைக்கும்.

ரெண்டாவது ஐட்டத்துலருக்கற வீடு: சுய சம்பாத்தியத்துல வாங்குன சொந்த வீடுன்னா அதுக்கு 4 மார்க். சொந்த வீடு ஆனா கடன் நிறைய இருக்குன்னா அதுக்கு 3, பூர்வீக வீடுன்னா அதுக்கு 2. சொந்த வீடுதான் ஆனா அது குடிசைன்னா அதுக்கு 1 சொந்த வீடே இல்லைன்னா அதுக்கு 0.

இப்படி ஒவ்வொரு பிரிவுலயும் மார்க் போட்டு எல்லாத்தையும் சேர்த்து பாக்கறப்போ திட்டக்குழு ஏற்கனவே டிசைட் பண்ணி வச்சிருக்கற cut-offக்குள்ள இருக்கறவங்கள வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவங்கன்னு ஃபிக்ஸ் பண்ணாங்க.

இத ரெக்கமென்ட் பண்ண டென்டுல்கர் கமிட்டியே இதுல இருக்கற லிமிட்டேஷன்ஸ (limitations) சொல்லாம இல்ல. இது ஒரு முழுமையான அளவுகோல்னுல்லாம் சொல்லிக்கல. இதுக்கு முன்னால இருந்த குழுக்கள் சொன்னதையும் நாங்க சொன்னதையும் சேத்து ஒருத்தருக்கு எவ்வளவு தேவைங்கறத அரசு தீர்மானிச்சிக்கலாம்னும் சொன்னாங்க. ஏன்னா ஒரு மனுஷனோட அடிப்படை தேவை இதுதான்னு சொல்ல முடியாது. அத்தோட இதுல திடீர்னு ஏற்படற மருத்துவ செலவு, வீட்டுல ஏற்படக் கூடிய சுப மற்றும் துர்பாக்கிய நிகழ்வுகளால ஏற்படக் கூடிய செலவுகள், சமுதாய, சாதி அடிப்படையில் தேவைப்படுகிற செலவுகள்னு நிறைய விட்டுப்போயிருக்குன்னு சொல்லிட்டு நாங்க சொன்னத அடிப்படையா வச்சிக்கிட்டு அரசு எந்த தொகையையும் தீர்மானிச்சிக்கலாம்னுதான் சொல்லியிருக்காங்க.

ஆனா சமீபத்துல நடந்தது என்னன்னா கமிட்டி என்ன சொல்லிச்சோ அதை வச்சே ஒரு தொகைய கால்குலேட் பண்ணி அதுல எந்த மாத்ததையும் அரசு செய்யாம வெளியில விட்டுட்டு ஜனங்கக்கிட்டருந்து அடி கிடைச்சதும் இப்போ இத நாங்க சொல்லல எக்ஸ்பேர்ட் குழுதான் சொல்லிச்சின்னு சமாளிக்கப் பாக்கறாங்க. ஆனா இந்த முட்டாத்தனம் இப்ப மட்டுமில்லீங்க ஏறக்குறைய சுதந்திரம் வாங்குனதுலருந்தே செஞ்சிக்கிட்டுத்தான் இருக்காங்க. இப்பருக்கற ஆட்சிக்கு முன்னால பிஜேபி, என்டிஏ வும் கூட பிளானிங் கமிட்டி சொன்னதையே வேதவாக்கா எடுத்துக்கிட்டுத்தான் தங்களோட நல திட்டங்கள்லாம் யாருக்கு போய் சேரணும்னு டிசைட் பண்ணாங்க.

ஆனா எந்த தடவையும் இல்லாம இந்த அளவுக்கு இது கிண்டலுக்கு ஆளானதுக்கு மெயின் காரணம் ஆளுங்கட்சி ஆளுங்க சில பேர் அடிச்ச முட்டாத்தனமான ஜோக்ஸ்தான். அப்புறம் இருக்கவே இருக்கு எத வேணும்னாலும் பரபரப்பாக்கி (sensationalise) காசு பண்லாம்னு பாக்கற மீடியா. நாம ஆட்சியிலருக்கறப்போ என்ன பண்ணோம்கறதையே மறந்துபோன எதிர்க்கட்சிகள்....இவங்கல்லாம் சேர்ந்து செஞ்ச ஒரே நல்ல காரியம் இந்த கோமாளித்தனமான கோட்ட நாட்டு ஜனங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுனதுதான்.

இதுலருந்து உருப்படியா ஏதாச்சும் நடந்தா சரி. ஆனா ஒன்னு... இப்ப சொன்ன லிமிட்டுலருந்து ஒரு அஞ்சோ பத்தோதான் கூட்டி சொல்வாங்களே தவிர நாம நினைக்கறாமாதிரி ரூ.40ங்கறத ரூ.100ன்னு மாத்திரமாட்டாங்க. அந்த கணக்குல அஞ்சி பேர் இருக்கற குடும்பத்துக்கு மாச செலவுக்கு ரூ.15,000/- வேணுமே? அப்படிப் பாத்தா நாட்டுலருக்கற மொத்த ஜனங்கள்ல பாதிக்கும் மேல பரம ஏழையாயிருவாங்களே?

இந்த சூட்சுமத்த புரிஞ்சிக்காம இதப்பத்தி கமென்ட் அடிச்ச நிறைய பேர் அவங்களோட பொருளாதார நிலையில வச்சி இந்த தொகை ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு போறுமான்னு கணக்கு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அது சரியில்லை. தங்கறதுக்கு வீடு வாசல் இல்லாதவங்க, முழுசா மூனு வேளை சாப்பிட வசதியில்லாதவங்க, எங்க போனாலும் கால்நடையாவே போய்ட்டு வர்றவங்க, பசங்கள கார்ப்பரேஷன் ஸ்கூலுக்குக் கூட அனுப்ப வசதியில்லாதவங்க.... இவங்களுக்கு ஒரு நாளை ஒரு ஆளுக்கு எவ்வளவு தேவைன்னு அவங்க லெவல்லருந்து பாக்கணும். அதுக்கு அவங்கள கேட்டாத்தான் தெரியும். உங்களுக்கும் எனக்கும் என்ன தெரியும்?

*********

20 கருத்துகள்:

  1. நன்கு தெளிவாகச் சொன்னீர்கள். இதுக்கு மேலே வேறு யாரும் ஒன்றும் எழுதிட முடியாது.

    அலுவாலியாவையே முழுங்கிவிடக் கூடியவர்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள். ” உனக்கு சர்ட்டிபிகேட்தானே வேண்டும்” என்று வறுமைக்கோடு சான்றிதழ் வாங்கி விடும் பலரைக் காணலாம்.

    பதிலளிநீக்கு
  2. //ஒரு நாளை ஒரு ஆளுக்கு எவ்வளவு தேவைன்னு அவங்க லெவல்லருந்து பாக்கணும். அதுக்கு அவங்கள கேட்டாத்தான் தெரியும். உங்களுக்கும் எனக்கும் என்ன தெரியும்?’’

    மிகச் சரியான கூற்று.

    விரிவாக வறுமைக் கோடு பற்றி எழுதியமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. ஓ வறுமைக்கோட்டில் இவ்வளவு விசயம் இருக்கா??

    பதிலளிநீக்கு
  4. //அதுக்கு அவங்கள கேட்டாத்தான் தெரியும். உங்களுக்கும் எனக்கும் என்ன தெரியும்?//


    Sorry Sir. I believe this is correct only to some extent. In my opinion, if they could able to judge that, they won’t be in that situation. Even if you try to get some information, do you really think you can get some sort of valid response from the people? They are not going to trust you. I have read the blog you have mentioned. I believe he is sincere in his views, the views may have flaws in others point of view. If I give fruits instead of chocolates, they will definitely say that I don’t understand their needs. People always compare. I can only say we do not have leaders with good intention.
    Elaborate article. Thanks

    பதிலளிநீக்கு
  5. வறுமைக்கோடு தெளிவான விளக்கங்கள்...

    பதிலளிநீக்கு
  6. அலுவாலியாவையே முழுங்கிவிடக் கூடியவர்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள். ” உனக்கு சர்ட்டிபிகேட்தானே வேண்டும்” என்று வறுமைக்கோடு சான்றிதழ் வாங்கி விடும் பலரைக் காணலாம்//

    உண்மைதான். சாதி, வருமான சர்டிஃபிக்கேட் மாதிரி இதுக்கும் சர்ட்டிஃபிகேட் குடுக்கறதுக்கு தாசில்தாருக்கு அதிகாரம் குடுத்துட்டா அவரும் ஒரு பெரிய பணக்காரர் ஆவறதுக்கு சான்ஸ் குடுத்தா மாதிரி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. ஒரு நாளை ஒரு ஆளுக்கு எவ்வளவு தேவைன்னு அவங்க லெவல்லருந்து பாக்கணும். அதுக்கு அவங்கள கேட்டாத்தான் தெரியும். உங்களுக்கும் எனக்கும் என்ன தெரியும்?’’

    மிகச் சரியான கூற்று. //

    நன்றி சார். ஆனா இதையும் சரியில்லன்னு சொல்றவங்களும் இருக்காங்க.

    பதிலளிநீக்கு
  8. I have read the blog you have mentioned. I believe he is sincere in his views, the views may have flaws in others point of view.//

    I do not know whose blog you refer. If it is the first one I agree. He is not known for controversial blog posts.

    If it is the 2nd one I still beg to differ, though I don't want to elaborate and invite angry comments.


    பதிலளிநீக்கு
  9. If I give fruits instead of chocolates, they will definitely say that I don’t understand their needs. People always compare.//

    For any study to be effective it is dependent on people's honest and truthful answers. If you say they can't be expected to understand the purpose of the survey or intentionally give wrong responses then the outcome of the such a study would also give a vague results.

    பதிலளிநீக்கு
  10. I can only say we do not have leaders with good intention. //

    I am sorry to say this. But one can't find fault with the leaders always. Especially in this study. If you go through the extract of Mr.Suresh Tendulkar's report available on the web you would find that the study has been conducted as per the norm suggested by World Bank. This has been the norm which was being followed all along ever since our Independence. The outcome has also been on these lines only. Even after targeting the welfare schemes towards the poor and downtrodden who have been identified through these studies if some has not so far been benefitted there could be lapses in implementation at the ground level as well. How can we blame our leaders for such a lapse?

    I agree that some of the leaders from the ruling Congress have made some stupid comments about the recent announcement of the BPL limits but the fact remains that nothing much can be done even if it is reviewed. They may at the most add Rs.5/- to Rs.10/- to the already announced cut-off limit which would add another one or two crores of beneficiaries.

    Since the study has been conducted on the basis of an internationally accepted parameters I don't think there is any justification in finding fault with the methods of the study or those who were behind this.

    There would always some - may be upto 1 or 2% of the population - who would be left untouched by the welfare schemes. It is there in every country, including US,UK and elsewhere. Don't you find people sleeping on footpaths and parks in these two countries? My nephew who regularly travels abroad on duty has told me there are more number of beggars on the roadsides than he had expected to see. So we can't expect to cover every single citizen under social security.

    பதிலளிநீக்கு
  11. உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு வெங்கட் மற்றும் கருண் அவர்களே.

    பதிலளிநீக்கு
  12. //So we can't expect to cover every single citizen under social security.//

    I agree in most of the countries a common man is better than a politician. Here in Australia the original owners of the land “Aboriginals” life is pretty bad than an Indian citizen. I cannot even identify a single leader in India who is patriotic and has a vision. This is my opinion.
    About the blogger your opinion and my opinion is same. I did not read the second one at all.

    பதிலளிநீக்கு
  13. இதைப்பற்றி சென்ற வாரம் எழுதத் தொடங்கினேன்.இந்த மாதிரி சீரியஸ் எழுத்தெல்லாம் நமக்கு ஒத்து வருவதில்லை!
    அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.
    வறுமைக்கோட்டை முதலில் போட்டவர் ஔரங்கசீப்பாமே!

    பதிலளிநீக்கு
  14. இந்த மாதிரி சீரியஸ் எழுத்தெல்லாம் நமக்கு ஒத்து வருவதில்லை!//

    இந்த மாதிரி பதிவுகள எழுதறதுக்கு மெனக்கிடனும். நெட்ல தேடியலைஞ்சி நம்மவங்களுக்கு புரியறா மாதிரி டிரான்ஸ்லேட் பண்ணி.... ஆனா பாருங்க, பெரிசா எந்த effortsம் இல்லாம எழுதுன 'வாலுப்பசங்க' பதிவ படிக்கறதுக்கு 1000 பேர் ஆனா இதுக்கு? 250 பேர் மட்டுமே. ஒருவேளை நீங்க முன்னே சொன்னா மாதிரி வேற மாதிரியா அட்ராக்ட்டிவான டைட்டில் வச்சிருந்தா படிச்சிருப்பாங்களோ என்னமோ. வறுமைக்கோடுன்னு பாத்ததுமே நமக்கெதுக்கு இதுன்னு போய்ட்டாங்க போலருக்கு.

    அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.//

    நன்றி சார்.

    வறுமைக்கோட்டை முதலில் போட்டவர் ஔரங்கசீப்பாமே!//

    அப்படியா? இருக்கும். இன்னைக்கி நடைமுறையில இருக்கற பல நல்ல திட்டங்கள் முகலாயரும் நம் தமிழ் மன்னர்களும் ஆண்ட காலத்தில்தான் தொடங்குனாங்களாம். படிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  15. ஓ வறுமைக்கோட்டில் இவ்வளவு விசயம் இருக்கா??//

    ஆமாங்க. ஆனா இதையெல்லாம் புரிஞ்சிக்காம இத குத்தம் சொல்றதுக்குமட்டும் எத்தன பேர் வராங்க பாருங்க.

    பதிலளிநீக்கு

  16. இந்த வறுமைக் கோட்டைப்பற்றி நானும் எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் என்னால் இம்மாதிரி விளக்கமாகச் சொல்ல முடியாது. ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு எவ்வளவு தேவை என்பதை அவர்கள் லெவலுக்குப் போய்த்தான் தெரிந்து கொள்ள வேண்டும். அடிப்படைத் தேவைகள் என்று குறிப்பிட்டவை ஒரு அளவு கோலுக்கு உதவலாம்.. ஒரு சின்ன எக்சாம்பிள். நான் 1991-ல் விருப்ப ஓய்வு பெற்று வெளிவந்த போது என் சேமிப்பு மற்றும் செலவுகள் கணக்கிட்டு அதிக கஷ்டமில்லாமல் ஜீவனம் நடத்தலாம் என்று நம்பினோம். நானும் என் மனைவி இருவர் மட்டுமே, வாடகை கொடுக்க வேண்டாம் சொந்த வீடு. மாதம் இரண்டாயிரம் போதுமென்று கணக்குப் போட்டோம். ஒரு தவறு என்னவென்றால் பணவீக்கம் பற்றி நினைக்கவே இல்லை. 1991-ல் கிடைத்த ரூ 2000/- இன்று நினைத்து பார்க்கக் கூட முடியாத அளவிற்கு குறைவாய் இருக்கிறதுஇரண்டாவதாக, நாட்கள் செல்லச் செல்ல தேவைகள் ஏறிக்கொண்டே போகின்றன. எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் வாடகையாக ரூ.7000/- கொடுக்கிறார்கள் எலெக்ட்ரிக் பில்ல் மாதம் ரூ 800/- க்கும் அதிகமாகக் கட்டுகிறார்கள். அரசாங்கம் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்ளை அடையாளம் காட்ட கொடுக்கப் படும் ரேஷன் கார்ட் இவர்களிடம் இருக்கிறது. நலத் திட்டங்கள் உரியவருக்குப் போய்ச் சேருவதில்லை. இது ஒரு சின்ன மாதிரியே. எல்லாவற்றையும் குறை சொல்லும் மனப்போக்கு இங்கும் அல்லாமல் அங்கும் அல்லாமல் இடையில் இருக்கும் நடுத்தர வர்க்கம் எதிலும் குறை காணும். என்னவெல்லாமோ சொல்லத் தோன்றுகிறது. கடைசியாக ஒன்று கூறுகிறேன். That which can not be cured must be endured.

    பதிலளிநீக்கு
  17. That which can not be cured must be endured.//

    இதுதான் நம்மில் பலருடைய மனப்போக்கும். இது தவறில்லை.

    மேலும் நீங்கள் கூறுவதுபோலவே அரசின் பல நலத்திட்டங்கள் உரியவருக்கு செல்லாமல் இருப்பதற்குக் காரணமும் நம்மைப் போன்றோர்கள் எவ்வித மனசாட்சியும் இல்லாமல் அதை பயன்படுத்திக்கொள்வதுதான். வருமானத்தை வேண்டுமென்றே குறைத்துக் காட்டுவது, பணத்தைக் கொடுத்து வருமான சான்றிதழ் பெறுவது இதை எல்லாம் செய்துவிட்டு பிறகு ஏழைகள் இன்னும் பரம ஏழைகள் ஆகிவிட்டனர் என்று அரசைக் குறைகூறுவதால என்ன பயன்? முந்தைய அரசு கொடுத்த இலவச தொலைக்காட்சியை மாத குடும்ப வருமானம் முப்பதாயிரம் மேலுள்ள வீடுகளிலும் நான் பார்த்திருக்கிறேன். எப்போதோ கொடுக்கப்பட்ட பொது வினியோக அட்டையை அதே வருமானத்தைக் காட்டி அவ்வப்போது புதுப்பித்துக்கொண்டு வந்ததால் இன்றும் அரசு வழங்கும் பல சலுகைகளை இவர்களும் பெற்று வருகின்றனர். இதை எங்குபோய் சொல்வது?

    பதிலளிநீக்கு
  18. ரொம்ப தெளிவாக எழுதி இருக்கீங்க.

    இது போன்ற பதிவுகளை 250 பேர்கள் படித்து உள்ளார்கள் என்றால் 250 பேர்களும் முழுமையாக படித்து உள்வாங்கி உள்ளனர் என்பதை நினைத்துக் கொள்ளுங்க. மேலும் இது போன்ற பதிவுகள் கூகுள் தளத்தில் நிரந்தர தேடி பொறியில் இருக்கும். ஐந்து வருடம் கழித்துப் பாருங்க. இந்த உழைப்பின் பலன் தெரியும்.

    வாலுப்பசங்க சங்கதியெல்லாம் காத்து பிரியற வாடை மாதிரி அந்த நேரம் மட்டுமே.

    பதிலளிநீக்கு
  19. இது போன்ற பதிவுகளை 250 பேர்கள் படித்து உள்ளார்கள் என்றால் 250 பேர்களும் முழுமையாக படித்து உள்வாங்கி உள்ளனர் என்பதை நினைத்துக் கொள்ளுங்க.//

    அப்படி நினைத்துத்தான் இத்தகைய பதிவுகளை தொடர்ந்து எழுத வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். இப்போது நான் எழுதி வரும் சட்டம் பற்றிய பதிவுகளையும் படித்துவிட்டு உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்களேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

    பதிலளிநீக்கு