22 ஜூலை 2013

என் முதல் கணினி அனுபவம் ((நிறைவுப் பகுதி)

இருந்தாலும் தனியா வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கணுங்கற என்னோட ஆசை 1999லதான் நடந்துது. 

நாலஞ்சி வருசத்துக்கப்புறம் மும்பையிலருந்து டிரான்ஸ்ஃபர் ஆயி சென்னைக்கு வந்துட்டேன். 

மூத்த மகள் கல்லூரி முதலாம் ஆண்டில் நுழைந்திருந்தாள். 'என் ஃப்ரென்ட்ஸ் வீட்லல்லாம் கம்ப்யூட்டர் இருக்குப்பா' என்று நச்சரிக்க சரி வாங்கித்தான் பாப்போமேன்னு டிசைட் பண்ணி ஒவ்வொரு கம்ப்யூட்டர் கடையா ஏறி இறங்குனோம். 

அப்போ கொஞ்சம் பிரபலமா இருந்தது HCL Beanstalk. 1GB HDD. 32MB RAM. ஆச்சரியமா இருக்குல்லே? இப்ப இருக்கற கம்ப்யூட்டர் கான்ஃபிகரேஷனோட ஒப்பிட்டு பார்த்தா இது ஒன்னுமே இல்லேன்னு தோனும்.  இத வச்சிக்கிட்டு என்னத்த சார் செஞ்சீங்கன்னு கேக்க தோணும்.  அப்ப அதுவே ஜாஸ்தி. ஏன்னா அன்னைக்கி பெரும்பாலான கம்ப்யூட்டர்ல வெறும் 16mb RAMதான்! அதுக்கு இன்னொரு காரணமும் இருந்துது. அப்போல்லாம் வெறும் text based applicationsதான் யூஸ்ல இருந்ததால அதுவே போறுமா இருந்தது.    மானிட்டரோட ரெண்டு பக்கத்துலயும் அட்டாச்ட் ஸ்பீக்கர்ஸ்! தனியா வேணும்னாலும் கழட்டி வச்சிக்கலாம். ஒரு ஃப்ளாப்பி டிரைவ், ஒரு சிடி ட்ரைவ்ன்னு அன்னைக்கி அதுதான் லேட்டஸ்ட்! விலைய சொல்லணுமே.. ரூ.55,000/-! அந்த காசுல இன்னைக்கி ஒரு அட்டகாசமான லேப்டாப் வாங்கிரலாம். கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகமாக அதிகமாக விலை ஏறிடும்னு நினைச்சோம். அதுக்கு நேர் மாறா விலை பயங்கராம இறங்கிறும்னு அன்னைக்கி யாரும் நினைக்கல. 

பேங்க்ல வேலைங்கறதால லோன் போடறதெல்லாம் ரொம்ப ஈசி. ப்ரோஃபார்மா இன்வாய்ஸ் கொண்டு போய் கொடுத்தா போறும். இன்வாய்ஸ் வேல்யூல 90% லோன் கிடைச்சிறும். ஸ்டாஃப்ங்கறதால வட்டியும் கம்மி. 

பேசாம லோன போட்டு வாங்கியிருக்கலாம். ஆனா இடையில ஒரு சோதனை வந்துது. அப்போ க்ரெடிட் கார்டோட அறிமுக காலம். டெய்லி ஒரு பத்து ஃபோனாவது வரும். ஒரேயொரு பேங்க்லருந்து விடாம டார்ச்சர் பண்ண சரி வாங்கித்தான் பார்ப்பமேன்னு வாங்கினேன். பேங்க் மேனேஜர்ங்கறதால எடுத்த உடனே ரூ.50000/- க்ரெடிட் லிமிட்டோட வந்துது. சரி இதுல வாங்குனா முதல் நாப்பது நாள் வட்டி கிடையாதேன்னு நினைச்சி மொத்த லிமிட்டுக்கும் முதல் பர்சேஸே கம்ப்யூட்டர வாங்கிட்டேன். மீதிய கையிலருந்து குடுத்தேன். ஆனா இன்ஸ்டால்மென்ட்ல கட்டற ஐடியா ஏதும் இல்லை. கார்ட் பில் வரும்போது பேங்க்லருந்து லோன் போட்டுக்கிட்டா போறும்னு நினைச்சி வாங்கிட்டேன்.

அன்னையிலருந்து புடிச்சது தொல்லை. கார்ட வாங்கிக்குங்கன்னு டார்ச்சர் குடுத்த ஏஜன்ட் கார்ட்ல முதல் பர்ச்சேஸ்லயே மொத்த லிமிட்டையும் யூஸ் பண்ணிருவேன்னு நினைச்சிருக்க மாட்டார் போலருக்கு. இவன் ஒரு 420யாருப்பான் போலருக்கேன்னு நினைச்சிட்டார். டெய்லி ஒருதரம் ஃபோன்ல கூப்ட்டு ட்யூ டேட்ல கட்டிருவீங்களா சார், கட்டிருவீங்களா சார்னு டார்ச்சர் குடுக்க ஆரம்பிச்சார். அவரோட நிக்காம பேங்க் கார்ட் டிவிஷன்லருந்தும் கூப்ட ஆரம்பிச்சதும் கடுப்பாய்ட்டேன். இவனுங்கக் கிட்டருந்து தப்பிச்சா போறும்னு க்ரெடிட் பீரியட் முடியறதுக்குள்ளவே பேங்க்ல லோன போட்டு ட்யூ முழுசுக்கும் செக்க எழுதி அத்தோட அந்த பேங்க் க்ரெடிக் கார்டையும் நாலு துண்டா வெட்டி நீயும் வேணாம் ஒன் கார்டும் வேணாம்னு ஒரு லெட்டரையும் எழுதி ஒரு கவர்ல வச்சி ரிஜிஸ்தர் தபால்ல அனுப்பி வச்சேன். 

ஒரு வாரம் கழிச்சி அந்த ஏஜன்ட் என் ஆஃபீசுக்கே வந்துட்டார். என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? நீங்களும் ஒரு பேங்க் மேனேஜர்தானே? குடுத்த கடன வசூல் பண்ண கஸ்டமர கேட்டதில்லையான்னு புலம்பி தள்ளிட்டார். இருக்கலாங்க. அதுக்காக இப்படியா? ராத்திரியும் பாக்காம எத்தன பேர் கூப்டுவீங்கன்னு திருப்பி திட்டி அனுப்பினேன்... அதுக்கப்புறம் கொஞ்ச நாள் க்ரெடிட் கார்ட் சமாச்சாரம் பக்கமே திரும்பலை.... அதாவது 2007 வரைக்கும். அதுக்கப்புறம் மறுபடியும் ஒரு வேவ் மாதிரி - அதாவது ICICI, UTI, IDBI மாதிரி தனியார் பேங்குங்க வந்ததுக்கப்புறம் - க்ரெடிட் கார்ட் விற்பனை வந்துதே அப்ப மறுபடியும் ICICI ஏஜன்ட் வலையில விழுந்தேன். ஆனா ஏற்கனவே ஒரு பாடம் படிச்சிருந்ததால இதுவரைக்கும் எந்த பிரச்சினையிலும் சிக்கிக்காம இருக்கேன். 

விஷயத்துக்கு வருவோம். 

கம்ப்யூட்டர் வீட்ல வேணும், வேணும்னு பிடிவாதம் புடிச்ச என்னோட டாட்டருக்கு கம்ப்யூட்டர் வந்ததும் சிடி டிரைவ்ல பாட்டு கேக்கறதுதான் முழு நேர வேலையாருந்தது. நல்லவேளையா அப்பல்லாம் இப்ப இருக்கறா மாதிரி கம்ப்யூட்டர் கேம்ஸ் எதுவும் பிரபலமாயிருக்கலை. அதனால ஆஃபீஸ்லருந்து word star காப்பி பண்ணிக்கிட்டு வந்து போட்டு டைப்ரைட்டிங் படிச்சிக்கப்பான்னு சொன்னேன்.. ஆனா கருப்பு பேக்ரவுன்டுல குச்சி, குச்சியா என்னப்பா இது நல்லாவே இல்லைன்னுட்டாங்க. அப்புறம் ஒரு ஃப்ரென்ட புடிச்சி திருட்டு MS Office போட்டேன்.  அவர் ரூ.500/- வாங்கிக்கிட்டு போட்டு குடுத்தார். MS word, Excel, Power Point மூனு மட்டுந்தான். வேர்டும், எக்சல்லும் யூஸ் ஆச்சோ இல்லையோ மூனு மாசத்துல விதம், விதமா PP slide பண்றதுக்கு படிச்சிட்டாங்க. அப்புறம் காலேஜ்லருந்து வந்ததும் அதுவேதான் வேலை. 

ரெண்டு பொம்பளை புள்ளைங்கள வச்சிக்கிட்டு அதுக்கு நகை, நட்டுன்னு வாங்காம 55000/- குடுத்து இத வாங்கினேன்னு அத பாக்கறப்பல்லாம் கேட்டாங்க எங்க அம்மா. ஆனா அந்த வயசுல என் மூத்த மகளுக்கு கிடைச்ச அந்த அனுபவம் பிற்காலத்துல ஒரு நல்ல டிசைன் ஆர்ட்டிஸ்டா வர்றதுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்னு அப்போ நாங்க நினைச்சிக்கூட பாக்கல. 

எனக்கும் அது பிற்காலத்துல ரொம்பவும் யூஸ்ஃபுல்லா இருந்ததுங்கறதையும் சொல்லியே ஆகணும். சென்னையிலருந்து மறுபடியும் மாற்றலாகி எங்களோட வங்கி ஊழியர்கள் பயிற்சிக்கல்லூரிக்கு பிரின்சியா போனேன். அப்போ எங்களுடைய வங்கியின் பெரும்பாலான கிளைகள்ல கம்யூட்டர் இன்ஸ்டால் செஞ்சிருந்ததால ஊழியர்களுக்கு கம்யூட்டர் ட்ரெய்னிங் குடுக்கறதுக்கு இருபத்தஞ்சி கம்ப்யூட்டர், ஒரு சர்வர்னு (server) செட்டப்ப் பண்ணி கம்ப்யூட்டர் வகுப்ப நடத்தற அளவுக்கு எனக்கு தைரியம் குடுத்தது. அதுலருந்து முன்னேறி நாலஞ்சி வருசம் கழிச்சி எங்க வங்கியோட information technology டிவிஷன்னு ஒன்னு ஸ்டார்ட் பண்ணப்போ என்னோட லெவல்லருந்த மத்த அதிகாரிங்களுக்கு கம்ப்யூட்டர் அனுபவம் இல்லேங்கறதால அந்த டிவிஷனுக்கே headஆ வர்ற அளவுக்கு எனக்கு அது ஹெல்ப் செஞ்சிதுன்னு சொன்னா மிகையாகாது. 

இப்போ எல்லார் வீட்லயும் கம்ப்யூட்டர்ங்கறது ரொம்பவும் சகஜமா போயிருச்சி. ஆனா இருபது வருசத்துக்கு முன்னால அத ஒரு தேவையில்லாத செலவுன்னு பாக்காம வாங்கி யூஸ் பண்ணதால என் மகள்களுக்கு மட்டுமில்லாம என்னோட careerல வேகமா முன்னேறவும் அது ஒரு பெரிய ரோல் ப்ளே பண்ணிச்சின்னுதான் சொல்லணும். அதுக்கப்புறம் நாலஞ்சி தரம் கம்ப்யூட்டர மாத்தியாச்சின்னாலும் முதமுதல் வாங்குன கம்ப்யூட்டர வெறும் டைப்ரைட்டரா ரொம்ப நாள் யூஸ் பண்ணோம். அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு 1GB ஹார்ட் டிஸ்க்கும் 32 mb RAM எதுக்குமே யூஸ் ஆகாதுல்ல? அப்புறம் கடைசியில ஒரு நெய்பரோட பையனுக்கு சும்மாவே குடுத்துட்டேன்... அம்பாதாயிரத்தோட மதிப்பு பத்து வருசம் கழிச்சி பூஜ்யம்தான்!

என்னுடைய அனுபவத்தை தொடர்ந்து என்னுடைய நெருங்கிய பதிவர் நண்பர்களான:

தருமியையும்  துளசியையும் அழைக்கிறேன். நா எழுதனத விட அவங்களோட அனுபவம் சுவாரஸ்யமா இருக்கும்னு நினைக்கிறேன்.




*********

30 கருத்துகள்:

  1. பேங்க்ல வேலைங்கறதால லோன் போடறதெல்லாம் ரொம்ப ஈசி.
    >>
    அப்படியா? அப்போ உங்க தங்கை ராஜிக்கு ஒரு கார் லோனுக்கு ஏற்பாடு பண்ணுறது:-)

    பதிலளிநீக்கு
  2. ரெண்டு பொம்பளை புள்ளைங்கள வச்சிக்கிட்டு அதுக்கு நகை, நட்டுன்னு வாங்காம 55000/- குடுத்து இத வாங்கினேன்னு அத பாக்கறப்பல்லாம் கேட்டாங்க எங்க அம்மா.
    >>
    20000 வேஸ்ட் பண்ணிட்டேன்னு என் அம்மா திட்டினாங்க.:-(

    பதிலளிநீக்கு
  3. உங்களை எவ்வளவு நல்லவர் ... வல்லவர்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். கடைசியில ‘இப்படி பண்ணிட்டீங்களே!”

    பதிலளிநீக்கு
  4. //அம்பாதாயிரத்தோட மதிப்பு பத்து வருசம் கழிச்சி பூஜ்யம்தான்!//

    You can’t say that. You have to include the benefit and happiness received from the process. Then you have received more than what you have paid for. Also the computer was still useful to someone else too. I felt pretty bad to sell my first car. I had an emotional attachment with that car. After selling the car, I gave the money to the temple. Your experience shows the advantages of learning something new. Thanks.

    பதிலளிநீக்கு
  5. சுவையான அனுபவம்......

    கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள பீர் கொடுத்ததையும் படித்தேன்! :)

    நடுவே சொன்ன க்ரெடிட் கார்ட் அனுபவமும் நன்று.....

    பதிலளிநீக்கு
  6. அப்போ உங்க தங்கை ராஜிக்கு ஒரு கார் லோனுக்கு ஏற்பாடு பண்ணுறது:-)//

    நாலு வருசம் லேட்டா கேட்டுட்டீங்க :/) சர்வீஸ்லருந்து ரிட்டையர் ஆய்ட்டா யார் மதிக்கறாங்க. இப்போ நானும் ஒரு கஸ்டமர் மாதிரிதான்.

    பதிலளிநீக்கு
  7. 20000 வேஸ்ட் பண்ணிட்டேன்னு என் அம்மா திட்டினாங்க.:-(//

    திட்டறது அம்மாங்க வேலை. அத கேட்டுக்கிட்டு நம்ம வழியிலேயே போய்கிட்டு இருக்கறது பிள்ளைங்க வேலை :-)

    பதிலளிநீக்கு
  8. You can’t say that. You have to include the benefit and happiness received from the process. //

    You are right. The happiness receive by us is immeasurable. I didn't mean that it was a loss to me.

    பதிலளிநீக்கு
  9. உங்களை எவ்வளவு நல்லவர் ... வல்லவர்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். //

    நீங்களா நெனைச்சிக்கிட்டா நா என்ன பண்றது? சீக்கிரமாவே எழுதிறுங்க. இல்லன்னா கோச்சிக்கிட்டீங்கன்னு மக்கள்ஸ் நினைக்க வாய்ப்பிருக்குல்லே!!

    பதிலளிநீக்கு
  10. ஆஹா.... செய்ஞ்சுருவோம்!!!!!

    பதிலளிநீக்கு
  11. வந்தபுதிதில் டெலிவிஷனும் இப்படித்தான் அதிக விலையில் இருந்தது..

    // இப்போ எல்லார் வீட்லயும் கம்ப்யூட்டர்ங்கறது ரொம்பவும் சகஜமா போயிருச்சி. ஆனா இருபது வருசத்துக்கு முன்னால அத ஒரு தேவையில்லாத செலவுன்னு பாக்காம வாங்கி யூஸ் பண்ணதால என் மகள்களுக்கு மட்டுமில்லாம என்னோட careerல வேகமா முன்னேறவும் அது ஒரு பெரிய ரோல் ப்ளே பண்ணிச்சின்னுதான் சொல்லணும். //

    நன்றாகச் சொன்னீர்கள். தருமியும் துளசியும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  12. தருமியும் துளசியும் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.//

    ரெண்டு பேருமே அருமையான பதிவர்களாச்சே. சூப்பராத்தான் இருக்கும். அவங்க இன்னும் ரெண்டு பேர அழைச்சாங்கன்னா தொடர்ந்து போய்க்கிட்டே இருக்கும்.எல்லாருக்குமே முதல் அனுபவம் ஒரு புது அனுபவம்தானே.... நீங்களும் கூட எழுதலாமே.

    பதிலளிநீக்கு
  13. Ayyo! Thulasiyum aarambichchuduvaangala?//

    அட! ஊர்லதான் இருக்கீங்களா? எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சி.

    அது சரி, எதுக்கு ஐயோங்கறீங்க? துளசியுமாங்கறா மாதிரி ஒரு கேள்வி வேற? அப்போ நா சொன்னது அந்த அளவுக்கு ரம்பமா இருந்துச்சா? இருந்தாலும் இப்படி நக்கலா ஒரு கேள்வி உங்கக்கிட்ட வர்றது நல்லாத்தான் இருக்குது. அடிக்கடி வாங்க:))

    பதிலளிநீக்கு
  14. நல்ல அனுபவம்...! தருமி + துளசி அவர்களின் முதல் கணினி அனுபவத்தையும் காண ஆவலுடன் உள்ளேன்...

    நம்ம ஸ்கூல் பையன் மூலம் (http://schoolpaiyan2012.blogspot.com/2013/07/blog-post_24.html) உங்கள் தளம் வருகை... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கு மிக்க நன்றி தனபாலன். உங்களுடைய பதிவுகளும் மிகச் சிறப்பாக உள்ளன.

    பதிலளிநீக்கு

  16. யார் யார் என்ன என்ன எழுதுகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏஎனென்றால் என்னையும் இதில் கோர்த்து விட்டிருக்கிறார்களே.சுவையான அனுபவப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. முதல் கணினி அனுபவங்கள் அருமை....!

    பதிலளிநீக்கு
  18. ஏஎனென்றால் என்னையும் இதில் கோர்த்து விட்டிருக்கிறார்களே.//

    நல்லதுதானே! நம் அனைவருக்குமே முதல் அனுபவத்தை அசைபோடுவதில் ஒரு அலாதி இன்பம் இருக்குமே.

    சீக்கிரமா எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  19. முதல் கணினி அனுபவங்கள் அருமை....!//

    நன்றி மனோ. அடிக்கடி வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  20. நாங்க அப்பவே எழுதிட்டோம்ல.

    http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post.html

    http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post_11.html

    பதிலளிநீக்கு
  21. இப்போதுதான் உங்களது பதிவுகள் இரண்டையும் படித்தேன். வங்கிகளில் கணினி அறிமுகப்படுத்தியதை விரிவாக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள். உண்மைதான். விற்பனைத்துறையில் First movers advantage என்று சொல்வதுபோல், தாங்கள் முன்வந்து கணினி உபயோகத்தை கற்றுக்கொண்டதால்தான் தங்கள் வங்கியில் Information Technology துறைக்கே தலைவராக வரமுடிந்தது. பதிவை இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  22. வாங்க நடனசபாபதி சார்,

    உண்மைதான். விற்பனைத்துறையில் First movers advantage என்று சொல்வதுபோல்...//

    சரியா சொன்னீங்க. நா அடிப்படியான கணினி விஷயங்களை கற்றுக்கொள்ள முயன்றபோது எனக்கு அடுத்த கிளைகளில் மேலாளராக இருந்த நண்பர்கள் நமக்கு எதுக்கு டிபிஆர் இதெல்லாம், அதெல்லாம் கிளார்க்குங்க வேலை என்பார்கள். ஆனால் அவர்களுக்கே கணினி பயன்பாடு பற்றி பிற்காலத்தில் நான் வகுப்பு எடுத்தபோது தங்களுடைய முட்டாள்தனத்தை உணர்ந்து வருந்தினார்கள்.

    அப்புறம் இன்னொரு விஷயம் சார். வங்கிகள் அன்றும் இன்றும் என்ற ஒரு தொடர் பதிவு எழுதலாம்னு எண்ணம் உங்கள மாதிரி வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விரும்பினால் செய்யலாம்.... என் http://tbrbank.blogspot.com/" வங்கியுலகம் என்ற வலைப்பூவையும் படித்து பார்க்க அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. நல்ல சுவாரசியமான எழுத்து நடையில் எங்களை எல்லாம் கவர்ந்து விட்டீர்கள் சார் ! நல்ல பதிவு !

    பதிலளிநீக்கு
  24. நல்ல சுவாரசியமான எழுத்து நடையில் எங்களை எல்லாம் கவர்ந்து விட்டீர்கள்//

    நன்றி சுரேஷ். உங்களுடைய பதிவுகளும் மிக நன்றாக இருக்கின்றன. நிறைய விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  25. முன்பு ஒரு முறை ட்ரைவ்-இன்னில் நடந்த கூட்டத்தில் பாலபாரதி அவர்கள் மூலம் உங்கள் பெயர் எனக்கு அறிமுகமாயிற்று.இப்போது மீண்டும் ஆக்டிவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
    விரிவான பகிர்வு!

    பதிலளிநீக்கு
  26. இப்போது மீண்டும் ஆக்டிவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
    விரிவான பகிர்வு!//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு