19 July 2013

என் முதல் கணினி அனுபவம்!எங்கும் கணினி எதிலும் கணினி என்றாகிவிட்ட கலியுகத்தில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு முதன் முதலாக கணினியை இயக்க கற்றதை மீண்டும் ஒருமுறை அசைபோட்டால் என்ன என்று தோன்றுகிறது. இதற்கு பதிவர் நண்பர் ராஜியும்  ஒரு காரணம்.

'இந்த மாதிரி இலக்கண சுத்தமா எழுதணுமா என்ன? சும்மா பேச்சு நடையில எழுதுங்க சார், இப்ப அதான் ஃபேஷன்!'

சரி, சரி... பழக்க தோஷம்... அவ்வளவு ஈசியா போயிருமா என்ன?

விஷயத்துக்கு வருவோம்...

இன்னைக்கி கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லேன்னாலும் இந்தியாவுல முதல் முறையா அதிக அளவுல computerisation நடந்தது வங்கிகள்லதான்னு நினைக்கிறேன். அதுக்கப்புறம்தான் ரயில்வே.

Banksla ஆட்டோமேட்டிக் லெட்ஜர் போஸ்ட்டிங் மெஷின்னு (ALPM) சொல்லி ஒரு பூதாகரமான மெஷின அறிமுகப்படுத்துனது எப்ப தெரியுமா? 1980! ஆச்சரியமா இருக்குல்ல? ஏறக்குறைய முப்பது வருசத்துக்கு முன்னால! அப்போ பெரும்பாலான அரசுத் துறை வங்கிகள்ல இந்த மெஷின அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களோட கணக்கு புத்தகத்த அழகா ஸ்டேட்மென்டா அடிச்சி குடுத்துருவாங்க. அதுதான் முதல் இயந்திரமயமாக்கல்.

அதுக்கப்புறம் படிப்படியா ஏறக்குறைய எல்லா வங்கி அலுவல்கள்லயும் கம்ப்யூட்டர் நுழைஞ்சி புது ரெக்ரூட்மென்டே இல்லாம செஞ்சிருச்சி. அப்போ இத எதிர்த்து எல்லா வங்கி ஊழியர்களும் சேர்ந்து போராட்டமெல்லாம் செஞ்சோம். ஒன்னும் நடக்கல. யூனியன் ஆளுங்கள சமாளிக்கறதுக்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அலவன்ஸ்னு கொண்டு வந்தாங்க... மாசம் ரூ.100/-நமக்கு அலவன்ஸ் கிடைச்சா போறும் புதுசா ஆள் எடுத்தா என்ன, எடுக்காட்டி என்னன்னு யூனியன் ஆளுங்களும் வாய மூடிக்கிட்டாங்க. ஆனா அதுக்கப்புறம் இருக்கற ஆளுங்களும் ரிட்டையர் ஆனதுக்கப்புறம் பிராஞ்சில இருக்கற கிளார்க் ஒவ்வொருத்தரும் இத்தன வவுச்சர் போஸ்ட் பண்ணித்தான் ஆவணும்னு ரூல் வந்தப்போ அடிச்சி, அடிச்சி கை சுளுக்குற அளவுக்கு வேலை. கணினிமயமாக்கல் வேலை பளுவை குறைக்கும்கறதெல்லாம் சும்மா. ஆரம்பத்துல வேலைப்பளு பல மடங்கு ஜாஸ்தியாருக்கும்கறத அனுபவிச்சி உணர்ந்தவங்க நாங்க.

எங்க வங்கியில முதல் முறையா கம்ப்யூட்டர் நுழைஞ்சது 1994-95ன்னு நினைக்கறேன். நான் அப்போ மும்பையில இருந்தேன். டெய்லி ஆப்பரேஷன computerise பண்ண முயற்சிகள் துவக்கப்பட்ட காலம். In-house டெவலப்மென்ட்டுன்னு சொல்லி நாலஞ்சி கத்துக்குட்டி பசங்க க்ளிப்பர்னு (clipper) ஒரு பழங்கால மென்பொருள்ல Integrated Banking software (IBS) ஒன்னெ செஞ்சி எடுத்துக்கிட்டு வந்து போட்டாங்க. அப்பல்லாம் விண்டோஸ் வரலை. எல்லாமே DOS commandலதான். மொத்த சாஃப்ட்வேரும் ஒரேயொரு ஃப்ளாப்பில (floppy) அடங்கிரும். A ட்ரைவ்ல போட்டு insன்னு சொன்னா போறும் இன்ஸ்டாலாயிரும்.

எங்க ஐடி டிவிஷன்லருந்து வந்த ஒருத்தர் - இவர் டெவலப்மென்ட் டீம சேர்ந்த ஆள் இல்ல. வெறும் இன்ஸ்டல்லேஷந்தான் - படு பயங்கர ஸ்பீட்ல இத இத இப்படி செய்யணும்... இத செய்யக் கூடாதுன்னு ஒரு ரெண்டு அவர்ல காமிச்சிட்டு போய்ட்டார். அப்போ என் கீழ இருந்த பத்து குமாஸ்தாங்கள்ல ரெண்டு பேர் மட்டும் தமிழ்காரங்க. மத்தவங்க எல்லாம் கேரளம். ஒரேயொரு ஆள் மும்பை. தமிழ் பசங்க ரெண்டு பேரும் பயங்கர சூட்டிகையான பசங்க. ஒடனே கப்புன்னு புடிச்சிக்கிட்டாங்க. அதுவரைக்கும் அவங்கள அவ்வளவா மதிக்காத கேரளமும் மும்பையும் அன்னையிலருந்து இவங்க ரெண்டு பேருக்கும் ஸ்டூடன்ஸாய்ட்டாங்க.

நானும்தான்.

ஆனாலும் பிராஞ்ச் மேனேஜர் ஆச்சே... கிளார்க்குங்களோட சேர்ந்து ஒக்காந்து படிக்கறதுக்கு கொஞ்சம் கூச்சம். அதனால அந்த ரெண்டு பேரையும் தாஜா பண்ணி (சாயந்தரம் ஆனா ரெண்டு பீர் பாட்டில் வாங்கி தந்துருவேன். அதான் கூலி!) மத்த கிளார்க்குங்க எல்லாம் வேலைய முடிச்சிட்டு போனதுக்கப்புறம் இது என்ன, அது என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்குவேன். நான் ஏற்கனவே டைப்ரைட்டிங் தெரிந்து வைத்திருந்ததால, கீபோர்ட் எல்லாம் அத்துப்படி. மத்தவங்கள மாதிரி esc பட்டன் எங்கருக்கும் ctrl பட்டன் எங்கிருக்குன்னுல்லாம் கேனத்தனமா கேக்க வேணாம். ஆனாலும் dos கமான்ட் எதுவும் தெரியாது. அந்த பசங்க பொறுமையாத்தான் சொல்லி தருவாங்க. ஆனாலும் மண்டையில ஏறாது. என்னடா இவன் ஒரு ரோதனைங்கறா மாதிரி பாப்பாங்க. இருந்தாலும் மேனேஜர என்னத்த சொல்றதுன்னு நினைச்சிக்கிட்டு (சாயந்தரம் கிடைக்கப்பொற பீர் வேற ஒரு இன்சன்ட்டிவாச்சே) ரொம்பவுமே பொறுமையா சொல்லித் தந்தத மறக்க முடியாது. ஆனாலும் சாஃப்ட்வேற முழுசா ஆப்பரேட் பண்றது மட்டும் வரவே இல்ல. கீபோர்டே தெரியாத கிளார்க்குங்க எல்லாம் ரெண்டு மூனு மாசத்துல படிச்சிக்க முடியறப்போ நமக்கு ஏன் இது வரவேயில்லன்னு மாஞ்சி போயிருக்கேன். அப்புறம் ப்ளேன் (plane) ஓட்ட வேண்டியவன் சைக்கிள் ஓட்ட முடியலையேன்னு கவலைப்படக் கூடாதுன்னு (சும்மா ஒரு கெத்துதான்) நெனைச்சிக்கிட்டு நம்ம மேனேஜர் வேலைய மட்டும் பார்ப்போம்னு அத்தோட விட்டுட்டேன்.

அப்போ dosல வேர்ட் ஸ்டார்னு ஒரு ப்ராசர் இருந்துது. ஆஃபீஸ் லெட்டர்லாம் கம்ப்யூட்டர்லதான் எழுதணும்னு எங்க HO ஆர்டர் போட்டதும் இது என்னடா புது தலைவலின்னு இருந்துது. நல்லவேளையா நம்ம தமிழ்பசங்க மும்பை முழுசும் சுத்தி ஒரு கைட (guide) வாங்கிக்கிட்டு வந்து குடுத்தாங்க. சின்ன குழந்தைக்கு புரியறா மாதிரி சிம்பிளா ஒவ்வொரு கமான்டும் இருந்ததாலயும் எப்படியும் இத தெரிஞ்சிக்கிட்டுத்தான் மறுவேலைன்னு நினைச்சதாலயும் நாலஞ்சி வாரத்துல அதையும் படிச்சி நம்ம பசங்களே மெச்சற அளவுக்கு தேறிட்டேன்.

அப்புறம் 1995ல windows 3.1.வந்து dos உலகத்தையே அசைச்சி போட்டுது. அடுத்த நாலஞ்சி வருசத்துல கணினி இல்லாத வங்கி கிளையே இல்லேங்கறா மாதிரி விரிவடைஞ்சது.

இருந்தாலும் தனியா வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கணுங்கற என்னோட ஆசை 1999லதான் நடந்துது. அது ஒரு பெரிய கதை...

அத நாளைக்குச் சொல்றேன். 

6 comments:

மென்பொருள் பிரபு said...

நன்றி.

G.M Balasubramaniam said...

பணியில் இருக்கும்போது கணினி யில் பணி கற்றுக்கொண்ட அனுபவம் நினைத்துப் பார்க்கும்போது இனிமையாய் அசை போட வைத்திருக்கிறது. கணினி இயக்கம் பற்றி ஒன்றுமே தெரியாதிருந்த நான் கல்லூரியில் MCA பட்டத்துக்காகப்ராஜெக்ட் வர்க் செய்ய வந்த மாணவர்களுக்கு கைடாக இருந்திருக்கிறேன்.அந்த அனுபவம் பதிவில் எழுதி இருக்கிறேன்,படித்துப் பாருங்களேன். gmbat1649.blogspot.in/2012/03/project-work.html

ராஜி said...

நாங்கலாம் பணம் குடுத்து கிளாசுக்கு போனோம், நீங்க பீர் குடுத்து கத்துக்கிட்டீங்களா?! அனுபவத்தை பதிவாக்கியமைக்கு நன்றி

டிபிஆர்.ஜோசப் said...

நாங்கலாம் பணம் குடுத்து கிளாசுக்கு போனோம், நீங்க பீர் குடுத்து கத்துக்கிட்டீங்களா?! //

நான் படிக்க ஆரம்பிச்சப்போ எனக்கு வயசு 45! அந்த வயசுல மத்த சிறு வயசு பிள்ளைகளோட உக்கார்ந்து படிக்க கூச்சமாயிருந்தது! அதுவும் தேவைக்காக படிக்கணும்னு நிர்பந்தம் வேற. மேனேஜருக்கு கம்ப்யூட்டர பத்தி ஒன்னும் தெரியாதுன்னு நம்ம ஸ்டாஃப் நினைச்சிறக் கூடாதுல்ல? அதுக்கு நான் குடுக்க வேண்டிய கூலிதான் அந்த பீர்!!

தி.தமிழ் இளங்கோ said...

//ஆனாலும் பிராஞ்ச் மேனேஜர் ஆச்சே... கிளார்க்குங்களோட சேர்ந்து ஒக்காந்து படிக்கறதுக்கு கொஞ்சம் கூச்சம். அதனால அந்த ரெண்டு பேரையும் தாஜா பண்ணி (சாயந்தரம் ஆனா ரெண்டு பீர் பாட்டில் வாங்கி தந்துருவேன். அதான் கூலி!) மத்த கிளார்க்குங்க எல்லாம் வேலைய முடிச்சிட்டு போனதுக்கப்புறம் இது என்ன, அது என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்குவேன். //

// ... ... ...அந்த பசங்க பொறுமையாத்தான் சொல்லி தருவாங்க. ஆனாலும் மண்டையில ஏறாது. என்னடா இவன் ஒரு ரோதனைங்கறா மாதிரி பாப்பாங்க. இருந்தாலும் மேனேஜர என்னத்த சொல்றதுன்னு நினைச்சிக்கிட்டு (சாயந்தரம் கிடைக்கப்பொற பீர் வேற ஒரு இன்சன்ட்டிவாச்சே) ரொம்பவுமே பொறுமையா சொல்லித் தந்தத மறக்க முடியாது //

அவர்களுக்கு வாங்கித் தந்த கூலி என்று சொல்லவேண்டாம். நட்புக்காக என்று சொல்லுங்கள்.. என்ன இருந்தாலும் அந்த நேரத்தில் அவர்கள் உங்களுக்கு குருவானவர்கள்..

டிபிஆர்.ஜோசப் said...

அவர்களுக்கு வாங்கித் தந்த கூலி என்று சொல்லவேண்டாம். //

கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்க. நானும் அத எழுதிட்டு படிச்சி பார்த்தப்போ என்னடா இப்படி எழுதிட்டமேன்னு நினைச்சேன். என்ன இருந்தாலும் அவங்க நம்ம Staff ஆச்சேன்னு கொஞ்சம் ஃபீலிங்கா இருந்துது. தமாஷா சொன்னதாவும் எடுத்துக்கலாமேன்னு விட்டுட்டேன்.

இன்னைக்கி அந்த ரெண்டு பேரும் Chief Manager லெவலுக்கு வந்துட்டாங்க.