16 ஜூலை 2013

இன்னையிலருந்து விடுதலை...


அப்பாடா! ஒருவழியா விட்டது தொல்லை.

போகணும்னுதான் தோன்றது ஆனா எங்க போறதுன்னு தெரியலையேன்னு அன்னைக்கி மகன் சிவாஜி புலம்புனதும் அவர் ஒருவழியா போய்ட்டதுக்கப்புறம் பாலூட்டி வளர்த்த கிளின்னு அப்பா சிவாஜி கதறுனதும்...

அது மாதிரிதான்  இருந்துது என் பொழப்பும்.. நேத்து வரைக்கும்.

எத்தனை இணையதளங்கள்ல, பிளாகுகள்ல, முகநூல்ல எத்தன நண்பர்கள் என்னத்த எழுதுனாலும் நம்மால ஒன்னையும் ஒழுங்கா படிக்க முடியலையே ஈஸ்வரா, சாரி, கர்த்தாவேன்னு புலம்பிக்கிட்டிருந்த எனக்கு எங்க வேணும்னாலும் போவலாம் என்னத்த வேணும்னாலும் படிக்கலாம் எத்தன பின்னூட்டம் வேணும்னாலும் போடலாம்கற சுதந்திரம் கிடைச்சிருக்குறது.... ரொம்ப சந்தோசமா இருக்கு.

அதனால இன்னையிலருந்துதான் ஒரு நிஜ சுதந்திரத்தை அனுபவிக்கிறா மாதிரி ஒரு ஃபீலீங்.

எல்லாம் நம் நாடு, நம் அரசுன்னு நினைச்சிக்கிட்டு BSNL குடுக்கற இணைய இணைப்பைத்தான் யூஸ் பண்ணுவேன்னு பிடிவாதமா இருந்ததுதான் காரணம். சென்னையில இருந்தப்போ வரைக்கும் பரவால்லை. ஆனா ஆவடி மாதிரியான புறநகர்ல BSNL கனெக்ஷன் சுத்த வேஸ்ட். சாதாரணம் ஜிமெய்ல திறக்கறதுக்கே ஸ்லோவா சுத்திக்கிட்டே இருக்கும். கூகுள் டாக் திறக்கவே திறக்காது. Facebook மட்டும் போன போறதுன்னு திறக்கும். அதுக்கும் பத்து பதினஞ்சி நொடி காத்திருக்கணும்.

இந்த லட்சணத்துல மாசம் ஒரு பதிவு போடறதே ஜாஸ்தி. பதிவ save பண்றதுக்கே பத்து பதினஞ்சி நிமிஷமாயிரும். பப்ளிஷ் பட்டண அழுத்திட்டு சாவகாசமா போயி சாப்ட்டுட்டே வந்துறலாம். அவ்வளவு நிமிஷம் எடுக்கும்.

சரி, விட்டுத்தொலைங்களேம்ப்பா என்பாள் என் மகள். ஐய்யோ ஆயிரத்தைந்நூறு குடுத்து வாங்கினதாச்சே.. இந்த pen drive வேற கனெக்‌ஷனக்கு யூஸ் பண்ண முடியாதுல்லேம்பேன். அட, நீங்க வேற... நா வேணும்னா வாங்கித்தரேன்னு சொல்லி நேத்துதான் ரிலையன்ஸ் கனெக்‌ஷன வாங்கிட்டு வந்து குடுத்தாங்க...

BSNL மாதிரி pendrive deliveryக்கு ஒரு நாள். அப்புறம் install பண்ண ஒரு நாள்னு இழுத்தடிக்காம வந்து அஞ்சே நிமிஷத்துல install பண்ணி.... அடுத்த நொடியே பரபரன்னு லோடான இணையதள பக்கங்கள பாத்தப்போ உண்மையிலேயே சந்தோஷமாத்தாங்க இருந்துது. அதுவும் சர்வீஸ்ல இருந்த கடைசி அஞ்சி வருசத்துல 1MB லீஸ் லைன்ல பிரவுஸ் செஞ்சிக்கிட்டு இருந்தவனுக்கு போன மூனு வருசமா ஆமையா நகர்ந்துக்கிட்டிடுருந்த BSNL கனெக்‌ஷன்லருந்து விடுபட்டது ஒரு பெரிய விடுதலைநாள் மாதிரிதான் தெரியுது.

என்னோட பதிவுகள போடறதையே பெரிய விஷயமா நினைச்சிக்கிட்டிருந்த எனக்கு இன்னையிலருந்து மத்தவங்க போடற பதிவையும் ரொம்ப எளிதா படிக்க முடியுங்கறது ரொம்ப பெரிய விஷயம்தான்.

எப்பவாச்சிம் வந்துக்கிட்டிருந்தவன் இனி அப்பப்போ வருவேன்னு சொல்லிக்கறேன்...

*********

21 கருத்துகள்:

  1. அச்சச்சோ .. இனிமே என் பதிவுகளையும் பார்க்க ஆரம்பிச்சிருவீங்களோ...!

    இதையும் பாருங்கோ ... http://dharumi.blogspot.in/2005/09/65.html

    எங்களுக்கெல்லாம் அப்பவே சுதந்திரம் கிடச்சிருச்சில்லா ...

    பதிலளிநீக்கு
  2. அதென்ன ” பதின்ம வயது நினைவுகள்” என்ற தலைப்பில் இந்தப் பதிவு வருது!!

    பதிலளிநீக்கு
  3. அப்போ இனி தொடர்ந்து பதிவுகள் எதிர்பார்க்கலாமா?!

    பதிலளிநீக்கு
  4. அச்சச்சோ .. இனிமே என் பதிவுகளையும் பார்க்க ஆரம்பிச்சிருவீங்களோ...!//

    பின்னே? கிடைச்ச சுதந்திரத்த கொஞ்ச நாளைக்காவது முழுசா அனுபவிக்க வேணாமா?


    இதையும் பாருங்கோ ... http://dharumi.blogspot.in/2005/09/65.html//

    பாத்துட்டு சொல்றேன்.

    எங்களுக்கெல்லாம் அப்பவே சுதந்திரம் கிடச்சிருச்சில்லா//

    ஹூம்... எல்லாத்துக்கும் நேரம் வரணும்ல?

    பதிலளிநீக்கு
  5. அதென்ன ” பதின்ம வயது நினைவுகள்” என்ற தலைப்பில் இந்தப் பதிவு வருது!!//

    அதானே.. நானும் இப்பத்தா பாக்கறேன். பதிவர் வட்டம் லேபிளத்தான் க்ளிக் பண்ணேன்னு நினைக்கறேன்.. சரி போவட்டும்... ஒரு ஜூனியர் பையனாருந்தப்போ சின்னதுக்கெல்லாம் சந்தோசப்பட்டா மாதிரிதான இப்பவும்னு நினைச்சிக்கறேன்.

    பதிலளிநீக்கு


  6. அப்போ இனி தொடர்ந்து பதிவுகள் எதிர்பார்க்கலாமா?!//

    எழுதறதுக்கு மட்டுந்தான் விஷயம் வேணும். அது கிடைக்கறப்பல்லாம் வரும் :)

    பதிலளிநீக்கு
  7. விடுதலைன்னாவே கஷ்டப்பட்டு வாங்கணும். அப்பதான் அதன் மதிப்பு பெரூசாத்தெரியும்!

    மீண்டு(ம்) வந்தமைக்கு இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ம்ம்ம்ம்...ஆரம்பிங்க கச்சேரியை!


    உங்க நகைச்சுவை பதிவுகளுடன் சீக்கிரம் வாங்க.

    காத்திருக்கொம்லெ:-))))

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா5:22 PM

    அப்போ, உங்களை நம்மக் கடைப் பக்கமும் காணலாம் என்கின்றீர்கள். வாங்கோ வாங்கோ, களத்தில் குதியுங்கோ.

    பதிலளிநீக்கு
  9. உங்க நகைச்சுவை பதிவுகளுடன் சீக்கிரம் வாங்க.//

    இப்ப க்ரைம் நாவல் நேரம். ரெடியாய்ட்டு இருக்கு.. சீக்கிரமே வருவேன்.

    உங்க ஆதரவு தொடர்ந்து வேணும் :)

    பதிலளிநீக்கு
  10. அப்போ, உங்களை நம்மக் கடைப் பக்கமும் காணலாம் என்கின்றீர்கள்.//

    கண்டிப்பா. வரவேற்புக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
  11. இன்றுதான் தங்கள் பதிவறிந்து உள்ளே வந்தேன்
    2005 முதல் பதிவராக இருப்பது குறித்து மிக்க சந்தோஷம்
    நானெல்லாம் அந்த வகையில் கத்துக் குட்டிதான்
    இனி விடாது தொடர்வோம்
    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு

  12. 2006-லிருந்து பதிவர்ன்னு போட்டிருக்கு. நான் 2010-ன் கடைசியில்தான் பதிவரானேன். அப்போது எழுதியவற்றைப் படித்து யாரும் மகிழலை. இப்போதுதான் புதிதாய் மலர்ந்த மாதிரியான உங்கள் பதிவை இதுவரை நான் எப்படி மிஸ் செய்தேன். .? ஓ. இப்போதுதான் புதிதாய்ப் பிறந்தீர்களோ. வெல்கம். படியுங்கள். ஸ்பெஷலி என் எழுத்துக்களைப் படியுங்கள். அடிக்கடி சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  13. // எல்லாம் நம் நாடு, நம் அரசுன்னு நினைச்சிக்கிட்டு BSNL குடுக்கற இணைய இணைப்பைத்தான் யூஸ் பண்ணுவேன்னு பிடிவாதமா இருந்ததுதான் காரணம். //

    எனக்கும் இதே கொள்கைதான். இதனால் எனக்கும் அதே பிரச்சினைதான்.

    //சென்னையில இருந்தப்போ வரைக்கும் பரவால்லை. ஆனா ஆவடி மாதிரியான புறநகர்ல BSNL கனெக்ஷன் சுத்த வேஸ்ட். சாதாரணம் ஜிமெய்ல திறக்கறதுக்கே ஸ்லோவா சுத்திக்கிட்டே இருக்கும். கூகுள் டாக் திறக்கவே திறக்காது. Facebook மட்டும் போன போறதுன்னு திறக்கும். அதுக்கும் பத்து பதினஞ்சி நொடி காத்திருக்கணும். //

    BROADBAND – இல் இணையத்தில் எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்சினை. சிலசமயம் வெறுத்தே போய்விடும். எங்கள் வீட்டில் BSNL மற்றும் அவசரத்திற்கு TATA DOCOMO
    .
    // எப்பவாச்சிம் வந்துக்கிட்டிருந்தவன் இனி அப்பப்போ வருவேன்னு சொல்லிக்கறேன்... //

    நல்ல செய்தி! அடிக்கடி வாருங்கள்!


    பதிலளிநீக்கு
  14. நானெல்லாம் அந்த வகையில் கத்துக் குட்டிதான்//

    நான் இன்னும் கத்துக்குட்டிதான். மத்தவங்க எதிர்பார்க்கறத எழுதாம எனக்கு புடிச்சத மட்டுந்தான் எழுதிக்கிட்டிருந்தேன். ஊரோட ஒத்துவாழ்ங்கறத நா ரொம்ப நாள் புரிஞ்சிக்கவே இல்ல. இனி அப்படி இருக்கறதா இல்ல :)

    இனி விடாது தொடர்வோம்//

    கண்டிப்பா...

    பதிலளிநீக்கு
  15. ஸ்பெஷலி என் எழுத்துக்களைப் படியுங்கள். அடிக்கடி சந்திப்போம்.//

    கண்டிப்பா... இப்பத்தான் எவ்வளவு பேர் எவ்வளவு அழகா எழுதறாங்கங்கறத தெரிஞ்சிக்கிட்டேன். படிப்பேன், விமர்சிப்பேன்...

    பதிலளிநீக்கு
  16. நல்ல செய்தி! அடிக்கடி வாருங்கள்!//

    எழுத மட்டும் இல்லாம உங்கள மாதிரி பதிவர்களுடைய பதிவுகளை படிக்கவும் நிச்சயம் வருவேன். வரவேற்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்! உங்களைப் போல ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, திரு வே.நடனசபாபதி அவர்கள் நினைத்துப்பார்க்கிறேன் ( ஒரு வங்கியாளனின் நினைவோட்டங்கள் ) என்ற பதிவில் எழுதி வருகிறார்.( http://puthur-vns.blogspot.com ) நேரம் கிடைக்கும் போது சென்று பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  18. திரு வே.நடனசபாபதி அவர்கள் நினைத்துப்பார்க்கிறேன் ( ஒரு வங்கியாளனின் நினைவோட்டங்கள் ) என்ற பதிவில் எழுதி வருகிறார்.( http://puthur-vns.blogspot.com ) நேரம் கிடைக்கும் போது சென்று பாருங்கள்.//

    நிச்சயம் பார்க்கிறேன். தகவலுக்கு மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம், ஜோசப் சார்,என் பிரச்சினையும் உங்களது போலவேதான் சார்.உங்களின் கருத்துக்கு நன்றி தெரிவிக்க நாலு நாள் ஆனது சார். வெறும்மொபைல் சிம் மோடத்தை வைத்துக்கொண்டும், தமிழ் தட்டச்சு தெரியாதாததாலும் பதிவு எழுதுவது மிக சிரமமாக உள்ளது.

    /எப்பவாச்சிம் வந்துக்கிட்டிருந்தவன் இனி அப்பப்போ வருவேன்னு சொல்லிக்கறேன்/
    அடிக்கடி வாங்க சார்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஶ்ரீதர்.

    தமிழ் தட்டச்சு தெரியாதாததாலும் பதிவு எழுதுவது மிக சிரமமாக உள்ளது.//

    ஈகலப்பை softwareல phonetic keyboard option இருக்குதே? அத யூஸ் பண்ணி ஆங்கிலம் டைப் அடிப்பது போலவே அடிக்கலாமே. எனக்கும் தமிழ் தட்டச்சு தெரியாதுதான். ஆனால் இந்த phoenotic option எனக்கு யூச்ஃபுல்லா இருக்கு. ட்ரை பண்ணி பாருங்க.

    வரவேற்புக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு