11 பிப்ரவரி 2013

விஸ்வரூபம் - மெய்யாலுமா?


நானும் கமலின் விஸ்வரூபம் படத்தை பார்த்துவிட்டேன் என்பதைத் தவிர பிரமாதமாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.

இதற்கு முன்பு அவர் இயக்கிய படங்களை விட அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் எப்போதும் போலவே எதையுமே ஆழமாக செய்யாமல் மீண்டும் கோட்டை விட்டுவிட்டார்.

ஆஃப்கானிஸ்தானில் நிகழ்வதாக காண்பிக்கப்படும் நிகழ்வுகளும் அநேகமாய் Frederick Forsyth (Odessa File, Day of the Jackal நாவல்களை எழுதியவர்) எழுதிய The Afghan நாவலிலிருந்து காப்பியடிக்கப்பட்டது போன்று தெரிகிறது. அதில் இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவர் (மைக் மார்ட்டின்) ஆஃப்கானிஸ்தான் நாட்டை ஆக்கிரமித்திருந்த ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக போராடும் ஆஃபாகானிஸ்தான் போராளிகளுக்கு உதவும் சாக்கில் ஆஃப்கானிஸ்தானுக்கு நுழைந்து அல்கொய்தா போராளிகளூக்கு பயிற்சியளிக்கும் அளவுக்கு முன்னேறுவார். அவருடைய தாயார் ஒரு பெங்காலி என்பதால் (அப்பா ஆங்கிலேயர்) அவருடைய உருவமும் நிறமும் ஆஃப்கானியராக வேடமிட ஒத்துப்போனதாம் (இதுவே காதில் பூ சுற்றிய கதைதான்!). இருந்தாலும் நாவல் சிறப்பான நடையுடன் விருவிருப்பாக இருக்கும். அதிலும் அமெரிக்கர்கள் சிறைபிடிக்கப்படுவது, கழுத்து அறுபட்டு ஒருவர் மடிவது, மற்றவர்களை மீட்க அமெரிக்கப் படை ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்துவது அதில் மைக் மார்ட்டினின் ஆஃப்கானிய நண்பருடைய (இஸ்மத் கான்) குடும்பமே அழிந்துபோவது அதன் விளைவாக அவர் அமெரிக்கர்களுக்கு எதிராக சபதமேற்பது என விஸ்வரூப படக்காட்சிகள் பலவும் நாவலில் வரும் நிகழ்வுகளுடன் ஒத்துப்பொகின்றன. நாவலில் இஸ்மத் கானாக வருபவர்தாம் விஸ்வரூபத்தின் முல்லா ஓமர்.

ஆக இதுவும் கமலின் சொந்த கற்பனை அல்ல.

The Afghan நாவலில் ஆங்கிலேய ராணுவ வீரர் ஆஃப்கானிஸ்தானில் எப்படி நுழைகிறார் என்பதையும் அதுபோலவே அங்கிருந்து அவர் எப்படி படாதபாடுபடு தப்பிச் செல்கிறார் என்பதையும் விலாவாரியாக, விருவிருப்பாக கூறியிருப்பார் ஆசிரியர்.  விஸ்வரூபத்தில் இந்த இரண்டுமே அவிழ்க்கப்படாத முடிச்சுகள்.

படத்தின் க்ளைமாக்ஸும் ஒரு புரியாத புதிர் மட்டுமல்ல சற்று சிறுபிள்ளைத்தனமானதும் கூட. எழுந்துவரும் போது ஒரு படத்தின் இடைவேளைபோதே எழுந்து வந்துவிட்டது போன்றதொரு பிரமை!

ஆனால் சராசரியான ஒரு திரைப்படம் எதிர்பாராத அளவுக்கு வெற்றிபெற இந்திய, குறிப்பாக தமிழக, இஸ்லாமிய சமூகத்தினருடைய எதிர்ப்பும் படத்தையே பார்க்காமல் அதற்கு தடை விதித்த தமிழக அரசுமே காரணம். ஒருவேளை எல்லாமே திட்டமிட்ட ஏற்பாடோ! இதில் எந்த காட்சியில் அல்லது வசனத்தில் இந்திய, குறிப்பாக தமிழக இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளனர் என்பதுதான் புரியாத புதிர்.

உலகிலுள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையே தீவிரவாதிகளைப் போல் சித்தரித்துள்ளார் என்றும் கூற முடியாது. ஏனெனில் protoganist எனப்படும் பாத்திரமும் ஒரு இஸ்லாமியர்தான். ஆக, தீவிரவாதத்தின் இருபக்கமும் இஸ்லாமிய சமூகத்தினர் உள்ளனர் என்பதுதான் உண்மை என்கிறார் கமல் சூசகமாக.

படத்தைவிட சுவாரஸ்யமாக இருந்தது திரையரங்கில் எனக்கு பின்னால் அமர்ந்திருந்த இரு நண்பர்களின் பேச்சு.

ஒருவர் தன் நண்பரிடம் கேட்கிறார்: 'ஏன்டா இந்த முஸ்லீம்களுக்கு அமெரிக்கா மேல இவ்வளவு ஆத்திரம்?'

நண்பரின் பதில்: 'அவன்களுக்கு இஸ்ரேயல்காரன்க மேலதான்டா ஆத்திரமெல்லாம். அமெரிக்கா இஸ்ரேலுக்கு சப்போர்ட் பண்றதால அவனுங்க மேலயும் ஆத்திரம். எல்லாத்துக்கும் இஸ்ரேல்தான் காரணம்!'

'மெய்யாலுமா?'

'ஆமாடா. எல்லாம் பங்காளி சண்டைதான்.'

'என்னது பங்காளி சண்டையா, அப்படீன்னா?'

நண்பர் பதிலளிப்பதற்குள் அக்கம்பக்கத்திலிருந்து 'உஷ்.....'

'ஒனக்கு அப்பால விலாவாரியா சொல்றன்... இப்ப படத்த பார்'

உண்மைதான்.

இஸ்ரவேல் (Israel) யூதர்களும் அரபு நாடுகள் (அரேபியர்கள்) மற்றும் உலகெங்கும் வசிக்கும் இஸ்லாமியர்களும் ஒருவகையில் பங்காளிகள்தான்.

எப்படி?

எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்...

தொடரும்..

8 கருத்துகள்:

  1. //தொடரும்....//

    தொடரட்டும்.

    awaiting ...

    பதிலளிநீக்கு
  2. அதாவது, ஒரு எழுத்தல்லாத மற்றக் கலைகளில் சுறுசுறுப்பாக தன்னை ஆக்கிரமித்தவண்ணம் உள்ள கலைஞனுக்கு, தானே சிந்தித்து ஒரு கதையை சுயமாக உறுவாக்க நேரமிருக்காது என்கிறீர்கள் :) நன்று.

    இஸ்ரேல் எனும் நாடு அமைந்துள்ள‌ இன‌வாத‌ த‌ள‌ம் தான் பிர‌ச்ச‌னைக்குறிய‌து. அது "ஒரு நாடு" என்று அமையாம‌ல், "சியோனிச‌ நாடு" என்று அமைன்துள்ள‌து தான் பிர‌ச்ச‌னை. என‌வே யூத‌ர்க‌ளல்லாத‌வ‌ர்களை அந்த நாட்டிலிருந்து அழிக்க‌ அவ‌ர்க‌ள‌து குழந்தைக‌ளையும் பெண்க‌ளையும் குறிவைத்துத் தாக்குவ‌துதான்ன் பிர‌ச்ச‌னை.

    ஆனால் த‌ருமி என்ப‌வ‌ர் இதில் ஆர்வ‌ம் காட்டுவ‌தினால், நீங்கள் எக்ஸைட் ஆகி மாய்ந்து மாய்ந்து எழுதி உங்களை வறுத்திக்கொள்ளாதீர்கள். அவ‌ர் ராப‌ர்ட் ஸ்பென்ஸ‌ர், டேவிட் ஹோரோவிட்ஸ் ம‌ற்றும் டேனிய‌ல் பைப்ஸ் போன்ற‌ சியோனிஸ‌ யூத‌ர்க‌ளை ஹீரோவொர்ஷிப் ப‌ண்ணுவ‌தால், அவ‌ருக்கு உண்மையை அறியும் ஆற்ற‌ல் ச‌ற்று க‌ம்மி. என‌வே அவ‌ருடைய‌ ஆர்வ‌த்தினால் நீங்க‌ள் உங்க‌ளை சிர‌ம‌ப்ப‌டுத்திக் கொள்ளாதீர்க‌ள்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க தருமி...

    நீங்க awaiting என்று சொல்லும்போதே பயமாருக்குங்க.... இன்னும் ஒரு விவாதமான்னு....

    இருந்தாலும் சுருக்கமா ரெண்டு மூனு பதிவுல சொல்றேன். ரொம்ப டீப்பா போயி டிபேட் பண்ணாதீங்க:/)

    பதிலளிநீக்கு
  4. ஆனால் த‌ருமி என்ப‌வ‌ர் இதில் ஆர்வ‌ம் காட்டுவ‌தினால், நீங்கள் எக்ஸைட் ஆகி மாய்ந்து மாய்ந்து எழுதி உங்களை வறுத்திக்கொள்ளாதீர்கள். அவ‌ர் ராப‌ர்ட் ஸ்பென்ஸ‌ர், டேவிட் ஹோரோவிட்ஸ் ம‌ற்றும் டேனிய‌ல் பைப்ஸ் போன்ற‌ சியோனிஸ‌ யூத‌ர்க‌ளை ஹீரோவொர்ஷிப் ப‌ண்ணுவ‌தால், அவ‌ருக்கு உண்மையை அறியும் ஆற்ற‌ல் ச‌ற்று க‌ம்மி. என‌வே அவ‌ருடைய‌ ஆர்வ‌த்தினால் நீங்க‌ள் உங்க‌ளை சிர‌ம‌ப்ப‌டுத்திக் கொள்ளாதீர்க‌ள்.//

    இப்பவே கண்ணெ கட்டுதே...

    பதிலளிநீக்கு
  5. waiting Sir..//

    புதுசா ஒன்னும் எழுதப் போறதில்லை.. ஏற்கனவே எழுத வச்சிருக்கறதத்தான் சொல்லப்போறேன்.. யாரையும் சார்ந்தோ அல்லது எதிர்த்தோ இருக்காது...

    பதிலளிநீக்கு
  6. ஜோ,
    பல நாள் கழித்து உங்கள் பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி, இந்த மகிழ்ச்சி தொடரவேண்டும்; தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டுமென்ற பொருளில் awaiting ... போட்டேன்.

    மாலிக் பயங்காட்டுவது பார்த்து பயந்து விடாதீர்கள். பயங்காட்டுவது அவர் மார்க்கம் - அதாவது அவர் வழி ...

    அதுவும் மாலிக் மாதிரி நான் பெரும் புத்திசாலி இல்லை. அவர் சொன்னது மாதிரி எனக்கு // உண்மையை அறியும் ஆற்ற‌ல் ச‌ற்று க‌ம்மி.//

    கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள்.//

    எழுதறதுக்கு உருப்படியான விஷயம் வேணுமே. இப்பல்லாம் தமிழக, இந்திய அரசியலைப் பற்றியெல்லாம் எழுத மனம் வருவதில்லை.

    பதிலளிநீக்கு