09 ஆகஸ்ட் 2011

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!


சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைபடுத்துவது குறித்து அளிக்கப்பட்ட சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சமர்ப்பிக்கப்பட்ட தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது!


உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு அம்மையாரைத் தவிர தமிழகத்தின் அனைத்து தரப்பினராலும் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். எப்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து சமச்சீர் கல்வி பாடத் திட்ட புத்தகங்களை உடனே வினியோகிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோ அப்போதே இத்தகைய ஒரு முடிவுக்குத்தான் உச்ச நீதிமன்றம் வரும் என்பது தெளிவாக தெரிந்தது. அப்போதே பெருந்தன்மையுடன் சமச்சீர்கல்விக்கென அச்சடிக்கப்பட்டு வினியோகிக்க தயார் நிலையிலிருந்த புத்தகங்களை வினியோகித்திருந்தால் தமிழக மக்களின் நன்மதிப்பை அம்மையார் பெற்றிருக்கலாம். ஆனால் பெருந்தன்மைக்கும் அம்மையாருக்கும் பொருத்தமேயில்லையே!



உச்சந்தலையில் அடித்து கூறினால்தான் சிலருக்கு எதுவுமே புரியும். அந்த ரகத்தைச் சார்ந்தவர் அம்மையார். இனியாவது தன்னுடைய சுயகவுரவத்திற்காக வினியோகத்தை இழுத்தடிக்காமல் முடிப்பார் என நம்புவோம்.



அம்மையாரின் பிடிவாத போக்கால் கடந்த இரண்டு மாத காலமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் அம்மையாருக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர ஏதேனும் வழியுள்ளதா?



***********