18 ஏப்ரல் 2011

மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களுக்கு....

திரு சகாயம் அவர்களே,

சமீப காலமாக உங்களுடைய பெயர் தினத்தாள்களில் அதிகம் அடிபடுகிறது. மத்திய அமைச்சர் ஒருவர் மீது நீங்கள் பொய் வழக்கு போடச் சொல்லி உங்களுக்கு கீழ் பணியாற்றிய ஒரு அதிகாரியை வற்புறுத்தியதாகவும் அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்டு தன்னை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கவேண்டும் என்று விண்ணப்பிக்க அவரை சஸ்பெண்ட் செய்ய தேர்தல் அதிகாரி தமிழக அரசுக்கு பரிந்துரைத்ததாகவும் அதற்கும் நீங்கள்தான் காரணம் என்பதுபோலவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் இரண்டு தினங்களுக்கு முன்னர் தினமலரில் வெளியான உங்கள் அலுவலக வாழ்க்கைப் பயண விவரங்களை படித்த பிறகு
உங்களைப் போன்ற ஒரு நேர்மையான அதிகாரி ஒரு மத்திய அமைச்சர் மீது பொய் வழக்கு போடச் சொல்லும் அளவுக்கு தரமிறங்கியிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

மேலும் தினமலரில் வெளியாகியிருந்த அந்த கட்டுரையில் "இவர் பந்தாடப்பட்ட விதமே இவருடைய நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாக்கியம்தான் என்னை உங்களுக்கு இந்த கடிதத்தை எழுத தூண்டியது.

இந்த வாக்கியம் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் நான் பட்ட பாட்டை நினைவுக்கு கொண்டு வருகிறது. நான் பணியாற்றிய வங்கியில் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற நாளிலிருந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை அதாவது சுமார் இருபத்தைந்து ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட கிளைகளில்/அலுவலகங்களில் பணியாற்ற வேண்டியிருந்தது. நான் என்னுடைய இறுதி பத்தாண்டுகளில் கொச்சியில் நான்கு வருடங்களும் சென்னையில் ஆறு வருடங்களும் பணியாற்றிய காலத்தை இதிலிருந்து குறைத்துவிட்டு பார்த்தால் மீதமுள்ள பதினைந்து ஆண்டுகளில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பணியாற்றியுள்ளது தெரியவரும். சாதாரணமாக ஒரு அதிகாரியை நான்காண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வேறொரு இடத்திற்கு மாற்றுவார்கள். ஆனால் நானோ ஒரு இடத்திலும் சராசரியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருந்ததில்லை அல்லது இருக்க அனுமதிக்கப்படவில்லை.

இதற்கு காரணம் நான் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் மட்டுமல்ல. நான் மனமுதிர்வு இல்லாதவனாய், அவசரபுத்திக்காரனாய், அளவுக்கு மீறிய கண்டிப்புள்ளவனாய் இருந்ததும் ஒரு காரணம் என்பதை இப்போது உணர்கிறேன். நேர்மையான பல அதிகாரிகளும் செய்யும் தவறுதான் இது. ஏதோ நான் மட்டும்தான் நேர்மையானவன் என்றும் கண்டிப்புடன் நடந்துக்கொண்டால் மட்டுமே நமக்கு கீழே பணியாற்றுபவர்கள் நம்மைக் கண்டு அஞ்சி பணிபுரிவார்கள் என்றும் நான் நினைத்துக்கொண்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம். அதுமட்டுமல்லாமல் மேலதிகாரிகள் அனைவருமே நேர்மையற்றவர்கள் ஆகவே அவர்களுடன் எதிலும் ஒத்துப்போக தேவையில்லை என்று எண்ணியிருந்ததும் ஒரு காரணம். ஆகவேதான் எந்த ஒரு இடத்திலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மேல் என்னால் நிலைத்து பணியாற்ற முடியவில்லை. இளம் வயதிலேயே அதிகாரியானதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை இப்போது உணர்கிறேன்.

பதினைந்தாண்டு காலம் அதிகாரியாக பணியாற்றியபிறகுதான் என்னுடைய தவறுகளை என்னால் உணர முடிந்தது. என்னுடைய முன்கோபம், தேவையற்ற பிடிவாதம், கண்டிப்பு ஆகியவைகளை களைந்து மனப்பக்குவம் அடைந்த பின் என்னுடைய இறுதி பத்தாண்டுகளில் இரண்டு இடங்களில் நிலைத்து பணியாற்றி நிம்மதியுடன் ஓய்வுபெற்றேன்.

ஒரு சிறிய தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றிய எனக்கே இந்த நிலை என்றால் அரசு அதிகாரியாக பணியாற்றுகின்ற உங்களுடைய நிலை?

அந்த கட்டுரையில் நீங்கள் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி அதில் 'நேர்மையான அதிகாரிகள் புறக்கணிப்படுகின்றனர்' என்று குறிப்பிட்டதுடன் உங்களுடைய சொத்து விவரம், வங்கிக் கணக்கு ஆகியவற்றையும் குறிப்பிட்டு இதை தவிர வேறு ஏதாவது சொத்து இருப்பதாக தெரியவந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்' என்று முதல்வருக்கே சவால் விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உங்களுடைய நேர்மையையும் துணிச்சலையும் விட உங்களுடைய மனமுதிர்வின்மையையே காட்டுகிறது. நாம் நேர்மையானவர்கள் என்பதை பிறர்தான் கூற வேண்டும். அதை நாமே பறைசாற்றிக்கொள்வது சிறுபிள்ளைத்தனம். நேர்மையானவன் என்பது பட்டமோ அல்லது நீங்கள் உங்கள் சட்டையில் அணிந்துக்கொண்டு செல்லும் 'பேட்ஜோ' அல்ல மிஸ்டர் சகாயம். மேலும் நேர்மை என்பது உங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு virtue அல்ல என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். நீங்கள் நேர்மையானவர் என்பதாலேயே அரசு உங்களை தலை மீது தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்பதில்லை. அல்லது உங்களுடைய நேர்மைக்கு அங்கீகாரம் அளித்து கவுரவிக்க வேண்டும் என்றும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உங்களை சுற்றிலுமுள்ள நேர்மையற்ற அதிகாரிகள் மத்தியில் நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டீர்கள், அல்லவா? அதனுடைய பலனை அல்லது விளைவுகளை (consequence) எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அடிக்கடி ஏற்படுகின்ற ஊர் மாற்றங்களால் நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடைய மனைவி, மக்களும் சிரமங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் நேர்மையாக மட்டுமே இருப்பேன், எவருக்கும் அடிபணிய மாட்டேன் என்பது நீங்களாக தெரிவு செய்துக்கொண்ட நிலை. அந்த நிலைபாட்டால் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்பதில்லை... இந்த பத்து பதினைந்தாண்டுகளில் ஐஏஎஸ் அதிகாரி என்னும் அந்தஸ்த்தை எட்டிப் பிடித்துள்ளீர்களே அது உங்களுடைய நேர்மைக்கு கிடைத்த பரிசாக எடுத்துக்கொள்ளுங்களேன்.

தமிழக அரசியலில் மலிந்து கிடக்கும் ஊழலை அடியோடு ஒழிக்க அவதாரம் எடுத்தவன் நான் என்றும் கூட உங்களைக் கற்பித்துக்கொண்டு உங்களுடைய பதவிக்கு மீறிய செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதும் கூட இதுவரை நீங்கள் கடந்து வந்த அலுவலக வாழ்க்கை பாதையை பற்றிய குறிப்புகளை அந்த கட்டுரையில் காண முடிகிறது. கோவையிலுள்ள சைவ உணவு விடுதியில் அனுமதி பெறாமல் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபான சரக்குகளை அரசு அதிகாரி ஒருவர் நேரடியாக சென்று ரெய்டு நடத்தி பிடிப்பதும், மணல் திருட்டை தடுக்கப் போன இடத்தில் கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாவதும்... ஒரு சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு உங்களை நீங்கள் கற்பனை செய்துக்கொள்வதை எடுத்துக்காட்டுகின்றன. இதெல்லாம் செய்துதான் ஒரு அரசு அதிகாரி தன்னுடைய நேர்மையை அல்லது யாருக்கும் எதற்கும் நான் அஞ்சாதவன் என்று காட்டிக்கொள்ள தேவையில்லை மிஸ்டர் சகாயம். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தன்னுடைய பதவிக்கு உரிய அதிகாரத்தை மட்டும் பயன்படுத்தி சட்டத்தை நிலைநாட்டுவதுதான் ஒரு அதிகாரியிடமிருந்து அரசு எதிர்பார்க்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

Playing to the gallery என்பார்களே அதுபோல மக்கள் நம்மை பாராட்ட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தேவையற்ற வேலைகளில் நீங்கள் ஈடுபடுவதால்தான் உங்களுடைய மேலதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலருடைய பகைக்கும் நீங்கள் உள்ளாக வேண்டிய நிலையில் இருந்திருக்கிறீர்கள். நேர்மையான அதிகாரி என்றால் இப்படித்தான் செயலாற்ற வேண்டும் என்று நீங்கள் கருதுவது உங்களுடைய மனமுதிர்ச்சியின்மையையே காட்டுகிறது என்றால் தவறில்லை என கருதுகிறேன்.

மதுரை ஆட்சியராக உங்களுடைய சமீபத்திய செயல்பாடுகளால் பத்திரிகைகள் பாராட்டும் அளவுக்கு நீங்கள் புகழடைந்திருக்கிறீர்கள் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வரை தொடர்ந்து பணியாற்ற வேண்டியது இதே அரசியல்வாதிகளுக்கு கீழேதான் என்பதையும் நினைவில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எறும்பை எடுத்து காதுக்குள் விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்று புலம்பும் நிலைதான் உங்களுடைய நிலை.

அரசு அதிகாரியாக பணியாற்றும் ஒருவர் நாட்டில் நிலவும் அரசியல் அமைப்புடன் இணைந்து அதன் துணையுடன் திறம்பட பணியாற்ற முயல வேண்டுமே தவிர அதை எதிர்த்துக்கொண்டு போராட முயல்வது சிறுபிள்ளைத்தனம். You should know how to use the SYSTEM for more effective functioning instead of fighting it. ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் விதிமீறல்களை, ஊழலை ஒரே இரவில் ஒழித்துவிட முயல்வது சிறுபிள்ளைத்தனம் மட்டுமல்ல முட்டாள்தனமும் கூட என்பதை நீங்கள் உணர வேண்டும்.

ஒரு அரசு அதிகாரியின் பெயர் பத்திரிகைகளில் வந்து பிரபலமடைய வேண்டும் என்பது முக்கியமல்ல. அது அரசியல்வாதிகளுக்கு. திரை மறைவில் பணியாற்றுவது அதிகாரிகளுடைய கடமை. அவர்களுடைய திறமைக்கு கிடைக்கும் பரிசு? அரசியல்வாதிகளிடமிருந்து கிடைக்கும் பாராட்டு. அங்கீகாரமும் பாராட்டும் உங்களை தேடி வர வேண்டும். அது கிடைக்கவில்லை என்பதற்காக அந்த அமைப்பையே எதிர்கொண்டு போராடுவேன் என்று எல்லா அரசு அதிகாரிகளும் இறங்கினால் நாட்டின் நிலை என்னவாகும்?

இத்தகைய செயல்பாடுகளால் பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகளிடமிருந்து கிடைக்கும் பாராட்டுகளால் நீங்கள் பெறும் மகிழ்ச்சி சொற்ப காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும். ஆனால் மனப்பக்குவத்துடன் உங்களுக்கு மேலுள்ள அதிகாரிகளையும் மற்றும் உங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களையும் அரவணைத்து செல்வதால் மட்டுமே அரசு இயந்திரத்தை திறம்பட கையாள முடியும். அதன் காரணமாக உங்களுடைய பணியிலும் நீங்கள் வெற்றியடைய முடியும். அதனால் உங்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கிறதோ இல்லையோ நீங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும்போது உங்களுக்கு நிம்மதியான மனதிருப்தி கிடைக்கும். அதுதான் நிரந்தரம்.

அன்புடன்,
டிபிஆர்.

70 கருத்துகள்:

  1. ||ஆனால் மனப்பக்குவத்துடன் உங்களுக்கு மேலுள்ள அதிகாரிகளையும் மற்றும் உங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களையும் அரவணைத்து செல்வதால் மட்டுமே||

    இதை எப்படிச் செய்வது என்று வழிமுறைகளை விளக்கினால் அவருக்கு உபயோகமாக இருக்குமே..

    பதிலளிநீக்கு
  2. இதை எப்படிச் செய்வது என்று வழிமுறைகளை விளக்கினால் அவருக்கு உபயோகமாக இருக்குமே//

    சுமார் இருபது ஆண்டுக்காலம் அரசு துறையில் அதிகாரியாக பணியாற்றியுள்ள ஒருவருக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அத்தகைய அணுகுமுறை எனக்கு தெரியாமல் இல்லை, ஆனால் அது எனக்கு தேவையில்லை என்கிற மனப்பாங்குள்ள அதிகாரிகள் பலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் திரு சகாயம். என்னுடைய அணுகுமுறைதான் சரியானது என இத்தகையோர் கருதுவர்.

    பதிலளிநீக்கு
  3. //ஓய்வுபெறும்போது உங்களுக்கு நிம்மதியான மனதிருப்தி கிடைக்கும். அதுதான் நிரந்தரம்.// சத்தியமாய் கிடைக்காது. குற்ற உணர்ச்சிதான் மிஞ்சும். அதிகாரம் இல்லையென்றால் யாரும் உங்களை மதிக்கப் போவதில்லை. அதிகாரம் இருக்கும்போதே ஏதாவது செய்தால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
  4. ஒருத்தர் ரெண்டு பேர் இருக்கும் சாக்கடைகளை சுத்தம் செய்ய நினைச்சாலும் இந்த மாதிரி பதிவு போட்டு ஆப்பு வச்சுடுவீங்களே:(

    எப்படி....எப்படி...//அது அரசியல்வாதிகளுக்கு திரை மறைவில் பணியாற்றுவது அதிகாரிகளுடைய கடமை.//

    இப்படி புத்தியோடு நினைப்பதனாலதானே 5 வருடத்துக்குள் எத்தனை கொள்ளை அடிக்க வழியிருக்குதோ அதற்கெல்லாம் ஆமாஞ்சாமி போடும் மனப்பான்மை வந்து விடுகிறது.
    //அவர்களுடைய திறமைக்கு கிடைக்கும் பரிசு? அரசியல்வாதிகளிடமிருந்து கிடைக்கும் பாராட்டு.//
    கிடைக்கும் பாராட்டுக்கள்தான் ஊர் அறிந்த விசயமாக இருக்குதே

    // அங்கீகாரமும் பாராட்டும் உங்களை தேடி வர வேண்டும். அது கிடைக்கவில்லை என்பதற்காக அந்த அமைப்பையே எதிர்கொண்டு போராடுவேன் என்று எல்லா அரசு அதிகாரிகளும் இறங்கினால் நாட்டின் நிலை என்னவாகும்?//

    அதுதானே!நாட்டின் நிலை மாறிடவே கூடாது.நமக்கெதுக்கு அங்கீகாரமும் மாற்றங்களும்.சகாயம் விளம்பரம் தேடினாரா?விளம்பரம் சகாயத்தை தேடி வந்ததா?

    அம்பு எய்த தேர்தல் கமிசனை விட்டுட்டு சகாயமா கிடைக்குதேன்னு இவரப் புடிச்சிட்டீங்க:)

    பதிலளிநீக்கு
  5. திரைப்படங்களில் வில்லன் நல்லது செய்யும் கதாநாயகனைப் பார்த்து உனக்கு இதெல்லாம் தேவையான்னு கேட்கிற மாதிரி இருக்குது பதிவு:)

    பதிலளிநீக்கு
  6. தனியொருவருக்கு எழுதும் கடிதத்தை பொதுவில் வைத்தால் அதற்கு "பகிரங்க" கடிதம் எனத் தலைப்பிடுவது தான் சரியாக இருக்கும்.

    மதுரை ஆட்சியர் திரு. உ. சகாயம் அவர்களின் செயல்பாடுகளை சில காலம் அருகில் இருந்து கவனித்தவன் என்ற வகையில்,

    அவரது செயல்கள் மனமுதிர்ச்சி அற்றவை, சிறுபிள்ளைத் தனமானவை, சினிமா ஹீரோத்தனமானவை போன்ற உங்கள் அனுமானங்கள் தவறானவை என்று இங்கே பதிவு செய்கிறேன்.

    //முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி அதில் 'நேர்மையான அதிகாரிகள் புறக்கணிப்படுகின்றனர்' என்று குறிப்பிட்டதுடன் உங்களுடைய சொத்து விவரம், வங்கிக் கணக்கு ஆகியவற்றையும் குறிப்பிட்டு இதை தவிர வேறு ஏதாவது சொத்து இருப்பதாக தெரியவந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்' என்று முதல்வருக்கே சவால் விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. //

    ஊடகத்தினர் தரும் அரைகுறை செய்திகளை அப்படியே எடுத்துக் கொண்டு கடிதம் எழுதினால் இப்படித்தான் ஊகம் செய்ய வேண்டி வரும்.

    "நேர்மையான அதிகாரி" என்று அவர் தம்மை எப்போதும் குறிப்பிட்டதில்லை. முதல்வருக்கு அவர் எழுதிய கடிதத்தில் அவர் பதவிக் காலத்தில் செய்த தனித்துவமிக்க செயல்களை பட்டியலிட்டு அப்படியிருந்தும் தமக்கு பல ஆண்டுகளாகப் பதவியுயர்வு மறுக்கப்பட காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    வங்கிப் பணியில் இருந்த உங்களுக்கு performance self appraisal பற்றி நன்கு தெரிந்திருக்கும். என்னைப் பொறுத்தவரையில் இதுவும் ஒரு வகை performance self appraisal தான்.

    //உங்களுடைய பதவிக்கு மீறிய செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதும் கூட இதுவரை நீங்கள் கடந்து வந்த அலுவலக வாழ்க்கை பாதையை பற்றிய குறிப்புகளை அந்த கட்டுரையில் காண முடிகிறது.//

    கொஞ்சம் விளக்கமாக எந்த குறிப்புகளை அந்தக் கட்டுரையில் காண முடிகிறது என்று சொல்ல முடியுமா?

    நான் அறிந்த வரையில் தன் பதவியின் அனைத்து அதிகாரங்களையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் ஒரு போதும் தமது பதவிக்கு மீறிய செயலில் இறங்கியதில்லை.

    சில அதிகாரங்களை அவர் பயன்படுத்திய பிறகே மற்றவர்களுக்கு அந்தப் பதவிக்குறிய அதிகார வரம்புகளைப் பற்றிய தெளிவு ஏற்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  7. //அத்தகைய அணுகுமுறை எனக்கு தெரியாமல் இல்லை, ஆனால் அது எனக்கு தேவையில்லை என்கிற மனப்பாங்குள்ள அதிகாரிகள் பலர் உள்ளனர். அதில் ஒருவர்தான் திரு சகாயம். என்னுடைய அணுகுமுறைதான் சரியானது என இத்தகையோர் கருதுவர்.//

    தன்னுடைய அணுகுமுறை தான் சரி எனக் கருதுவோர் யாரும் மற்றவர்கள் கருத்தை அறிய விரும்ப மாட்டார்கள். திரு. சகாயம் அவர்கள், எந்த ஒரு சிக்கலிலும் அனைவரின் கருத்தையும் அறியாமல் எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையாய் எடுப்பவர் அல்ல.

    வெறும் உறுதிப் படுத்தாத செய்திகள், ஊகங்களின் அடிப்படையில் ஒருவரைப் பற்றி முன்முடிவுகள் எடுக்காமல்
    5 பகுதிகளாக அவரைப் பற்றி ஒரு அரசு கல்லூரித் தமிழ் பேராசிரியர் நடுநிலையுடன் எழுதிய கட்டுரைகளையும் படித்துவிட்டு முடிவெடுங்கள்.

    http://www.perumalmurugan.com/

    பதிலளிநீக்கு
  8. சத்தியமாய் கிடைக்காது. குற்ற உணர்ச்சிதான் மிஞ்சும். அதிகாரம் இல்லையென்றால் யாரும் உங்களை மதிக்கப் போவதில்லை. அதிகாரம் இருக்கும்போதே ஏதாவது செய்தால்தான் உண்டு.//

    குற்ற உணர்வு யாருக்கு வரும். தவறு செய்தவர்களுக்கு. உலகில் நடக்கும் தவறுகளை என்னால் ஒருவனால் மட்டுமே திருத்த முடியும் என்று செயலில் இறங்கி தோற்று போகின்றவர்களுக்கும் வரும்.

    நான் ஒத்துப்போக வேண்டும் என்று சொல்வது என் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதியில் நடைபெறும் அக்கிரமங்களை கண்டும் காணாமல் இருந்துவிட வேண்டும் என்றல்ல. அதே சமயம் அவற்றை எல்லாம் என்னால் மட்டுமே நேரடியாக தலையிட்டு தீர்க்க முடியும் என்று நினைப்பது சரியல்ல என்றுதான் கூறுகிறேன்.

    அதிகாரம் இருந்தால்தான் நல்லது எதையும் செய்ய முடியும் என்றால் அன்னா ஹசாரே,மேதா பதக், ஏன் மகாத்மா போன்றவர்கள்களை இந்த நாடு கண்டிருக்காது.

    பதிலளிநீக்கு
  9. அதுதானே!நாட்டின் நிலை மாறிடவே கூடாது.நமக்கெதுக்கு அங்கீகாரமும் மாற்றங்களும்.சகாயம் விளம்பரம் தேடினாரா?விளம்பரம் சகாயத்தை தேடி வந்ததா?//

    சகாயம் விளம்பரம் தேடினார் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி பத்திரிகைகளுக்கு எப்படி தெரிந்தது? முதல்வரே சொல்லியிருப்பாரா?

    அம்பு எய்த தேர்தல் கமிசனை விட்டுட்டு சகாயமா கிடைக்குதேன்னு இவரப் புடிச்சிட்டீங்க.

    தேர்தல் கமிஷனின் கீழ் தமிழகத்தில் திரு சகாயத்தைப் போன்று நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். ஏன் இவரை மட்டும் அது அம்பாக எய்துகிறது?

    பதிலளிநீக்கு
  10. ||இதை எப்படிச் செய்வது என்று வழிமுறைகளை விளக்கினால் அவருக்கு உபயோகமாக இருக்குமே.. ||

    இதை அங்கதமாகத்தான் கேட்டிருந்தேன்.
    எதிர்பார்த்த படியே நீங்கள் வழாவழா பதில் அளித்திருந்தீர்கள்.

    தகடூர் கோபி அசத்தலான உங்கள் பதிவுக்கு பதில் சொல்லியிருக்கிறார்..

    இன்றைய உலகில் தனக்கு மேல் மட்ட அதிகாரத்தில் இருப்பவர்கள் அநியாயம் செய்தாலும் அவர்களை சொறிந்து விடும் மனோபாவம்தான் வெகு ஜன மனோபாவம்.
    அதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது உங்கள் பதிவு.

    எந்த சூழலிலும் நேர்மைத்திறம் ஒளிரச் செயல்படும் அறத் துணிவு மிகச்சிலருக்குத்தான் இருக்கும்.உமாசங்கர்,சகாயம் போன்ற சிலர் அவர்களில் இருவர்.

    இந்த எண்ணிக்கை ஏற்கனவே சிறு பான்மையாக இருக்கிறது;அக்கினிக் குஞ்சு போல இருக்கும் இது விசிறி விடப்பட்டு வளர வேண்டிய பெரு நெருப்பு..

    அதை உங்களது போன்ற சொம்பு தூக்கும் பதிவுகளை எழுதி அழிக்க முற்படாதீர்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்..

    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. தனியொருவருக்கு எழுதும் கடிதத்தை பொதுவில் வைத்தால் அதற்கு "பகிரங்க" கடிதம் எனத் தலைப்பிடுவது தான் சரியாக இருக்கும்.//

    அல்லது எழுதாத கடிதம் என்றும் வைக்கலாம்.

    மதுரை ஆட்சியர் திரு. உ. சகாயம் அவர்களின் செயல்பாடுகளை சில காலம் அருகில் இருந்து கவனித்தவன் என்ற வகையில்,//

    எனக்கு விசுவாசமான அலுவலக நண்பர்கள் நான் தண்டிக்கப்பட்டபோதும் அப்படித்தான் நினைத்தார்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்து அவரை கவனித்தீர்கள் என்று கூறினால் நல்லது.

    தனித்துவமிக்க செயல்களை பட்டியலிட்டு அப்படியிருந்தும் தமக்கு பல ஆண்டுகளாகப் பதவியுயர்வு மறுக்கப்பட காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.//

    நான் என்னுடைய பணியை திறம்பட ஆற்ற வேண்டியது எனனுடைய கடமை. அதற்கு எனக்கு ஏன் பதவி உயர்வு அளிக்கவில்லை என்று தன்னுடைய உடனடி மேலதிகாரியிடம் கேட்பதை ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் ஒரு மாநிலத்தின் முத்ல்வருக்கு கடிதம் எழுதுவது சற்று அதிகப்படியான செயல்தான். அதை பத்திரிகைகளில் வரும்படி செய்வது இன்னும் சற்று அதிகம்...

    பதிலளிநீக்கு
  12. நான் அறிந்த வரையில் தன் பதவியின் அனைத்து அதிகாரங்களையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் ஒரு போதும் தமது பதவிக்கு மீறிய செயலில் இறங்கியதில்லை. //

    ஒரு மாவட்ட வருவாய் அதிகாரி தவறுகள் நடைபெறும் ஒவ்வொரு இடத்திற்கும் அவரே நேரடியாக சென்று ரெய்ட் நடத்த வேண்டுமா? வேறு அதிகாரிகளை போதாதா? இலாக்காக்கள் இயங்கும் விதம் தெரியாமல் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அதை உங்களது போன்ற சொம்பு தூக்கும் பதிவுகளை எழுதி அழிக்க முற்படாதீர்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்..//

    அறிவன்,

    உங்களுக்கு என்னைப் பற்றி முழுமையாக தெரிய வேண்டும் என்றால் என்னுடைய அலுவலக அனுபவங்கள் அடங்கிய 'திரும்பிப் பார்க்கிறேன்' பதிவுகளை படித்துவிட்டு நான் சொம்பு தூக்குபவனா இல்லையா என்று தெரியும்.

    நானும் திரு சகாயத்தைப் போன்று பந்தாடப்பட்டவந்தான்.

    பதிலளிநீக்கு
  14. //அல்லது எழுதாத கடிதம் என்றும் வைக்கலாம்.//

    அல்லது அவருக்கு எழுதுவதாக நீங்கள் மற்றவர்களுக்கு தெரியப்படுத்திய கடிதம் என்றும் வைக்கலாம். ('பகிரங்க கடிதம்' என்பதன் பொருளும் அது தான்)

    :-)))

    //எனக்கு விசுவாசமான அலுவலக நண்பர்கள் நான் தண்டிக்கப்பட்டபோதும் அப்படித்தான் நினைத்தார்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்து அவரை கவனித்தீர்கள் என்று கூறினால் நல்லது.//

    இந்த இடத்தில் நான் திரு.உ.சகாயம் அவர்களுக்கு எந்த வகையிலும் விசுவாசமாகவோ சார்பாகவோ இருக்க வேண்டிய தேவையில்லாதவன் என்று பதிவு செய்கிறேன்.

    ஒரு நுட்பத் தன்னார்வலனாக அவரது சில நுட்பத் திட்டங்களின் செயல்பாடுகளில் அவரை அருகில் இருந்து கவனித்தவன்.

    "உங்களுக்கு விசுவாசமான அலுவலக நண்பர்களுக்கும்" எனக்குமான வேறுபாடு உங்களுக்கு விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

    //சகாயம் விளம்பரம் தேடினார் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி பத்திரிகைகளுக்கு எப்படி தெரிந்தது? முதல்வரே சொல்லியிருப்பாரா?//

    "நீங்கள் மதுரை ஆட்சியருக்கு எழுதிய இந்தக் கடிதம் எங்களுக்கு எப்படி தெரிந்ததோ அப்படித்தான்" என்று கிண்டலாக பதில் சொல்லலாம் தான். ஆனால் அரசாங்க வழிமுறைகளில் "through proper channel" என்பதை அறிந்திருப்பீர்கள். இந்த கடித விவகாரத்தில் நான் அறிந்த வகையில் உ.சகாயம் அலுவலக வழிமுறைகளை மீறிச் செயல்படவில்லை. ஒரு கடிதம் "through proper channel" செல்லும் வழியில் எங்கு/எப்படி வேண்டுமானால் அது ஊடகத்துக்கு தெரிந்திருக்கும்.

    நான் அவருக்கருகில் இருந்த போது அவர் பலரிடம் விவாதித்த சில கருத்துக்களைக் கூட அவர் சொன்னார் என்று நான் வெளியிட முடியும். இதற்கெல்லாம் "அவரே விளம்பரம் செய்வதற்காக என்னிடம் சொல்லி வெளியிடச் சொன்னார்" என்று கருதுவீர்களா? இல்லை அப்படி நடந்தால் அவர் இது போன்ற ஒவ்வொரு செயலுக்கும் ஊடகத்தின் முன் வந்து மறுப்பு/பதில் சொல்ல வேண்டும் என்று சொல்வீர்களா?

    பொதுவாகவே ஊடகத்தினர் பரபரப்புக்காக வெளியிடும் செய்தி முழு உண்மை கொண்டது என்று நீங்கள் நம்பினால் உங்கள் எண்ணம் தவறானது என்பது என் கருத்து.

    //தன்னுடைய உடனடி மேலதிகாரியிடம் கேட்பதை ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் ஒரு மாநிலத்தின் முத்ல்வருக்கு கடிதம் எழுதுவது சற்று அதிகப்படியான செயல்தான். அதை பத்திரிகைகளில் வரும்படி செய்வது இன்னும் சற்று அதிகம்...//

    தன்னுடைய உடனடி மேலதிகாரி என்றால்? எல்லா IAS அதிகாரிகளுக்கும் உடனடி மேலதிகாரி மத்திய கேபினெட் செக்ரெட்டரி தான். ஆனால் பதவி உயர்வு போன்றவற்றுக்கு அந்தந்த மாநில முதல்வர்களும் தேர்தல் கமிசன் போன்ற தன்னாட்சி அமைப்புகளும் தான் மனசு வைக்க வேண்டும்.

    //தேர்தல் கமிஷனின் கீழ் தமிழகத்தில் திரு சகாயத்தைப் போன்று நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். ஏன் இவரை மட்டும் அது அம்பாக எய்துகிறது?//

    இதற்கான பதில் உங்கள் கேள்வியிலேயே இருக்கிறது :-))

    //ஒரு மாவட்ட வருவாய் அதிகாரி தவறுகள் நடைபெறும் ஒவ்வொரு இடத்திற்கும் அவரே நேரடியாக சென்று ரெய்ட் நடத்த வேண்டுமா? வேறு அதிகாரிகளை போதாதா? இலாக்காக்கள் இயங்கும் விதம் தெரியாமல் கேட்கிறேன்//

    அவரே சென்று ரெய்ட் நடத்தும் நிலை ஏன் ஏற்பட்டது? வேறு அதிகாரிகள் ஏன் போதவில்லை என்று சிந்தித்தால் (அல்லது அந்த சம்பவம் நடந்த உள்ளூர் மக்களை கேட்டால்) இதற்கான பதில் விளங்கும்.

    அது சரி.. இன்னொரு பின்னூட்டத்தில் நான் சொல்லியிருந்த http://www.perumalmurugan.com வலைத்தளத்தை படித்தீர்களா?

    திரு. உ.சகாயம் நாமக்கல் ஆட்சியராக பணி செய்தது பற்றி அரசு கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் நடுநிலையுடன் (நிறை குறைகளை அலசி) 5 பகுதிகளாக எழுதிய கட்டுரை.

    பதிலளிநீக்கு
  15. இன்று சகாயம் அவர்களை உசுப்பி விட்டு ஜே போடும் பத்திரிக்கை மற்றும் பதிவர்கள் அவருக்கு ஏதாவது தொல்லை (அரசினால் மற்றும் வேறு வகையில்) வரும்போது ஓடி போவார்கள் அல்லது மாற்றி பேசுவார்கள்.உங்கள் பதிவு தேவையான நேரத்தில் சரியான அறிவுரை.

    பதிலளிநீக்கு
  16. //இன்று சகாயம் அவர்களை உசுப்பி விட்டு ஜே போடும் பத்திரிக்கை மற்றும் பதிவர்கள்//

    சகாயம் அவர்களை யாரும் உசுப்பியெல்லாம் விட முடியாது பராரி.

    //அவருக்கு ஏதாவது தொல்லை (அரசினால் மற்றும் வேறு வகையில்) வரும்போது ஓடி போவார்கள் அல்லது மாற்றி பேசுவார்கள்//

    இது வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் திரு.சகாயம், திரு. உமாசங்கர் போன்றோர் கவலைப்படுவோரல்ல.

    நுட்பத் தன்னார்வலனாக திரு. உமாசங்கர் அவர்களையும் நான் பெரிதும் மதிக்கிறேன். எல்காட்டில் அவர் பணி செய்த போது கொண்டு வந்த நுட்ப மாற்றங்கள் மகத்தானது.

    பதிலளிநீக்கு
  17. தகடூர் கோபி,

    திரு சகாயம் அவர்களுடனான உங்களுடைய உறவு அவரைப் பற்றி நன்றாக புரிந்துக்கொள்ள உதவியுள்ளது. நீங்கள் கூறியது போன்று வெறும் பத்திரிகை செய்திகளை வைத்து ஒருவரின் குணத்தை எடை போட முடியாதுதான்.


    என்னுடைய பதிவின் நோக்கம் அவரை குறை கூறுவதல்ல. ஆனால் நேர்மையான ஒரு அதிகாரி தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்தலாகாது என்பதை மட்டுமே வலியுறுத்த.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா1:15 PM

    Gopi

    U say u have watched him closely while he worked.

    It is the improper conduct of a government officer to allow a stranger to watch his work closely.
    Only his PA or PS can do that, that too, unofficially. Because a PA has his room next to his boss; and often with him also. He knows who comes and goes in and out of his boss room and for what purpose.

    Even then, the officer should take care that the PA does not know secret offical matters.

    Who are you to know everything he deals with you ?

    If a person likes you makes a public confession of privy to all his offical action, a strong punitive action should be taken against the officer for leading government information to a stranger.

    We can get the information only through RTI; but not peeping into his room.

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா1:22 PM

    தன்னுடைய உடனடி மேலதிகாரி என்றால்? எல்லா IAS அதிகாரிகளுக்கும் உடனடி மேலதிகாரி மத்திய கேபினெட் செக்ரெட்டரி தான். ஆனால் பதவி உயர்வு போன்றவற்றுக்கு அந்தந்த மாநில முதல்வர்களும் தேர்தல் கமிசன் போன்ற தன்னாட்சி அமைப்புகளும் தான் மனசு வைக்க வேண்டும்.


    It appears you dont know abt IAS. Sahayyam appears to be from TN Gr A service and promoted to IAS. Because I hve not seen his name as recruited by UPSC.

    Whether from UPSC or State SC, an officer while posted in his home cadre is to report to the Home Secretary of the State only. His performance is apprised by the HS only. HS sends his report to the CM.

    So, it is HS of the State ->CM of the State for the officer.

    Cabinet Secretary is not concerned with the officer.

    True, Cabient Secretary is the chief of the IAS cadre but only the officer working in Cabinet Secretariat report to him, that too, through a Secretary above him.

    The Cabient Secretary is not the boss of all IAS officers in all IAS cadres. The CS is charged with the task of overseeing the cadre, not individual officers; and how best to reform and finetune the cadre through policy initiatives.

    Sahayam cant send his letter on any matter to CM directly. He should send it to HS only. And, it is the prerogative of HS whether to send his letter to CM or not. More often than not, the HS disposes it on his own level.

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா1:26 PM

    Sahayam cant ask CM why he has not been promoted despite good performance. He can ask the HS only. HS is the chief of all IAS officers and he functions as their welfare officer. Grievances should be addressed to him.

    CM gets in touch with HS on daily basis. It is his duty to meet CM every morning at an appointed hour if CM is in station. If out of station, the contact is though other channels.

    CM does not ask which officer functions in which way. Because he does not pick up an officer for queries.

    HS may take up a case of particular officer; and he gives feedback on him. If a HS takes a decision, CM genrally does not interferes.

    Sahayam case - has not gone to the knowledge of CM? Sahayam should have told a close friend like you such official matters. If it has, why not he tells u what CM has done on that.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா1:27 PM

    Why is Sahyama concealing that ? If he has been wronged in the state cadre by cadre authorities like HS, he can go to Central Adminsitrative Tribunal. Why has he not done that while Uma Shankar has?

    You should tell us being his close friend! Shouldn't u?

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா1:28 PM

    ஒரு நுட்பத் தன்னார்வலனாக அவரது சில நுட்பத் திட்டங்களின் செயல்பாடுகளில் அவரை அருகில் இருந்து கவனித்தவன்.


    Departmental action is necessary against Sahayam for allowing an NGO person to watch him closely.

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா1:32 PM

    அவரே சென்று ரெய்ட் நடத்தும் நிலை ஏன் ஏற்பட்டது? வேறு அதிகாரிகள் ஏன் போதவில்லை

    An RDO or a Dist Collector or a Teshildar has powers to conduct raids themselves.

    But the powers are rarely used coz it amounts to telling that his subordiante officers are not working properly.

    Only when complaints pour in alleging that the subordinates are not working, or working to the advanatage of social bad elements, the super boss like an RDO or DC goes for raids himself.

    Has such things happened that Sahayam went for raids himself ?

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா1:33 PM

    Generally such raids by super boss are publicity stunts. There are many such officers - Kiran Bedi, Sakuntala, Sundaram and now Sahayam.

    As this blogger has written here, good work can be done by such officers w/o such publicity stunts.

    பதிலளிநீக்கு
  25. டி.பி.ஆர்,

    வலைப்பதிவுலகில் (வயதால் மட்டுமல்ல, பதிவுகளாலும்) மூத்த பதிவரான நீங்கள் ஒரு சிறந்த அரசு அலுவலர் பற்றி தவறாக எண்ணக் கூடாது என்பதற்காகவே எனது விளக்கங்களை அளித்தேன்.

    உங்கள் "திரும்பிப் பார்க்கிறேன்" பதிவுகளை அவை வெளியான போதே படித்து வந்திருக்கிறேன்

    பின்னூட்டம் இட்டதில்லை. பணிச்சுமை காரணமாகவும், அப்போதெல்லாம் உச்சத்தில் இருந்த (உங்களுக்கு நன்கு தெரிந்த) "ஒரு" சிக்கல் காரணமாகவும் இரு தரப்பிலுமே யாருக்கும் பின்னூட்டமிடுவதை தவிர்த்திருக்கிறேன்.

    அதன் பின் இந்த இடுகை மீண்டும் உங்கள் வலைப்பதிவுக்கு என்னை இழுத்து வந்துவிட்டது.

    :-)))

    திரு.சகாயம் அவர்கள் தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்தினாரா என்பது தெரியாது. ஆனால் அதை எதிர்த்துப் போராடும் முறைகளில் அவர் (முதல்வருக்கு கடிதம்) செய்ததும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா1:41 PM

    இது வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் திரு.சகாயம், திரு. உமாசங்கர் போன்றோர் கவலைப்படுவோரல்ல.



    I laughed at this when I first read it.

    Gopi is making super humans out of humans.

    The affidavit filed before CAT by Uma Shanker reads like a cry in agony. He details how he suffered mental agony in his service. Prior to filing appn in CAT, wrote to Home Minister and Home Secretary and Cabinet Secretary Delhi as he says in the affidavit.

    Similarly Sahayam. He has not divulged what he felt.

    Kiran Bedi was deeply hurt when she was superseded.

    Sahyama aired his grievance to CM, as you said, which shd be taken to mean how he was deeply affected.

    If promotion is denied, it often happens, a government servant should patiently wait. If denied unjustly, he can go to CAT.

    Raagahvan IPS was in charge of security for Rajiv Gandhi when he was assassinated. The government purused with a lot of queries and his work was questioned. Yet he never complained. But he says he thought of resigning.

    Finally, he ended up as the Chief of CBI, you know, recommended by the very TN governemnt !

    Civil servants should be civil servants. If you cant, dont enter the service.

    பதிலளிநீக்கு
  27. டி.பி.ஆர்,

    jo.amalanக்கான எனது பதிலை இரு நாட்களுக்கு முன் இங்கே பின்னூட்டமாக இட்டிருந்தேன். Spamல் போய்விட்டதா என்று பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  28. jo.amalanக்கான எனது பதிலை இரு நாட்களுக்கு முன் இங்கே பின்னூட்டமாக இட்டிருந்தேன். Spamல் போய்விட்டதா என்று பாருங்கள்.//

    இல்லையே:((

    பதிலளிநீக்கு
  29. Useless advice...

    Overall you r suggesting sagayam to "shut his mouth and eyes".. No ...I will not accept your advice..

    பதிலளிநீக்கு
  30. மின்னஞ்சல் ஸ்பேமில் இல்லை எனில் ப்ளாக்கர் டேஷ்போர்டில் கமண்ட்ஸ் பிரிவில் "Spam" என்பதன் கீழும் ஒருமுறை பாருங்களேன். சற்றே பெரிய பதில். இன்னொரு முறை தட்டச்சிட்டால் அதே சொற்களுடன் சொல்வேனா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  31. //இதற்கு காரணம் நான் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் மட்டுமல்ல. நான் மனமுதிர்வு இல்லாதவனாய், அவசரபுத்திக்காரனாய், அளவுக்கு மீறிய கண்டிப்புள்ளவனாய் இருந்ததும் ஒரு காரணம் என்பதை இப்போது உணர்கிறேன். //

    அசத்தல் சார்

    உங்களைப்போலவே நானும் பணித்தடத்தின் ஆரம்ப காலங்களில் இப்படித்தான் இருந்திருக்கிறேன் . . . . ஆனால் ஆறு மாதங்களில் தெளிந்து விட்டேன். . . . அதன் பிறகு நடந்தவை தான் கிராமப்புற மருத்துவக்கதைகள் - மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க போன்ற கதைகள் எல்லாம்

    பதிலளிநீக்கு
  32. //ஏதோ நான் மட்டும்தான் நேர்மையானவன் என்றும் கண்டிப்புடன் நடந்துக்கொண்டால் மட்டுமே நமக்கு கீழே பணியாற்றுபவர்கள் நம்மைக் கண்டு அஞ்சி பணிபுரிவார்கள் என்றும் நான் நினைத்துக்கொண்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம்.//

    அரசு பணியில் சேரும் அனைவரும் வாசிக்க வேண்டிய வரிகள் !!

    // அதுமட்டுமல்லாமல் மேலதிகாரிகள் அனைவருமே நேர்மையற்றவர்கள் ஆகவே அவர்களுடன் எதிலும் ஒத்துப்போக தேவையில்லை என்று எண்ணியிருந்ததும் ஒரு காரணம்.//

    அரசு பணியில் சேரும் அனைவரும் வாசிக்க வேண்டிய வரிகள் !!

    பதிலளிநீக்கு
  33. //பதினைந்தாண்டு காலம் அதிகாரியாக பணியாற்றியபிறகுதான் என்னுடைய தவறுகளை என்னால் உணர முடிந்தது. //

    அதாவது அவசர புத்தியினால் நேர்ந்த தவறுகள்

    மனமுதிர்வினால் நேர்ந்த தவறுகள்

    மனித வள மேலாண்மை திறன் செழுமையடையாததால் நேர்ந்த தவறுகள்

    ---

    விளக்கி சொல்லுங்கள் சார்

    இல்லை என்றால் இதை பிடித்து தொங்குவார்கள்

    பதிலளிநீக்கு
  34. //இது உங்களுடைய நேர்மையையும் துணிச்சலையும் விட உங்களுடைய மனமுதிர்வின்மையையே காட்டுகிறது.//

    :) :)

    // நாம் நேர்மையானவர்கள் என்பதை பிறர்தான் கூற வேண்டும். //

    :) :)

    //அதை நாமே பறைசாற்றிக்கொள்வது சிறுபிள்ளைத்தனம். //

    :) :)

    //நேர்மையானவன் என்பது பட்டமோ அல்லது நீங்கள் உங்கள் சட்டையில் அணிந்துக்கொண்டு செல்லும் 'பேட்ஜோ' அல்ல //

    :) :)

    பதிலளிநீக்கு
  35. //சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தன்னுடைய பதவிக்கு உரிய அதிகாரத்தை மட்டும் பயன்படுத்தி சட்டத்தை நிலைநாட்டுவதுதான் ஒரு அதிகாரியிடமிருந்து அரசு எதிர்பார்க்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.//

    வழிமொழிகிறேன்

    பதிலளிநீக்கு
  36. //அரசு அதிகாரியாக பணியாற்றும் ஒருவர் நாட்டில் நிலவும் அரசியல் அமைப்புடன் இணைந்து அதன் துணையுடன் திறம்பட பணியாற்ற முயல வேண்டுமே தவிர அதை எதிர்த்துக்கொண்டு போராட முயல்வது சிறுபிள்ளைத்தனம். You should know how to use the SYSTEM for more effective functioning instead of fighting it. //
    வழிமொழிகிறேன்

    பதிலளிநீக்கு
  37. //ஆனால் மனப்பக்குவத்துடன் உங்களுக்கு மேலுள்ள அதிகாரிகளையும் மற்றும் உங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களையும் அரவணைத்து செல்வதால் மட்டுமே அரசு இயந்திரத்தை திறம்பட கையாள முடியும். அதன் காரணமாக உங்களுடைய பணியிலும் நீங்கள் வெற்றியடைய முடியும். அதனால் உங்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கிறதோ இல்லையோ நீங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும்போது உங்களுக்கு நிம்மதியான மனதிருப்தி கிடைக்கும். அதுதான் நிரந்தரம்.//

    சூப்பர்

    பதிலளிநீக்கு
  38. //தன்னுடைய உடனடி மேலதிகாரி என்றால்? எல்லா IAS அதிகாரிகளுக்கும் உடனடி மேலதிகாரி மத்திய கேபினெட் செக்ரெட்டரி தான். //

    ???

    ஒரு துனை ஆட்சியரின் உடனடி மேலதிகாரி ஆட்டியர்

    ஒரு துனை செயலரின் உடனடி மேலதிகாரி செயலர்

    என்று தான் எனக்கு தெரிந்த விதிகள் கூறுகின்றன

    நீங்கள் எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள் ??

    பதிலளிநீக்கு
  39. மின்னஞ்சல் ஸ்பேமில் இல்லை எனில் ப்ளாக்கர் டேஷ்போர்டில் கமண்ட்ஸ் பிரிவில் "Spam" என்பதன் கீழும் ஒருமுறை பாருங்களேன். //

    உங்களுடைய ஆதங்கம் புரிகிறது கோபி. ஆனால் எதிலுமே உங்களுடைய பதில் பின்னூட்டம் காணவில்லையே

    பதிலளிநீக்கு
  40. உங்களுடைய கண்ணோட்டம் என்னுடையதுடன் ஒத்துப்போகிறது புருனோ. மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
  41. Overall you r suggesting sagayam to "shut his mouth and eyes".. //

    நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லை. வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  42. //உங்களுடைய கண்ணோட்டம் என்னுடையதுடன் ஒத்துப்போகிறது புருனோ. மகிழ்ச்சி. நன்றி. //

    அனுபவம் சார் !!

    பதிலளிநீக்கு
  43. மதுரைல தேர்தல் நியாமா நடத்துனதுனால தானங்க இத்தன பிரச்சனை,
    பெப்ஸி கம்பனி சீல் வெச்சப்ப தெரியலையா,சரி விடுங்க
    நாமக்கல் மாவட்ட கலட்டரா இருந்தப்ப மணியாரர் எல்லாம் கிராமத்துல இருந்துதான் சேவை(!) செய்யனும்னு சொன்னதுக்கு,ஒட்டுமொத்த VAOக்கும் சேர்ந்து அவர எதுத்தாங்க,யாரோட தூண்டுதளும் இல்லாம மக்களே வீதில இறங்கி அவருக்காகா போராடுனாங்க,
    எனக்குத்தெரிஞ்சு உதயசந்தின் அவர்களுக்கு அப்புறம் நான் பாத்த நல்ல மனிதர் இவர்

    பதிலளிநீக்கு
  44. ஆளும் கச்சி வேட்பாளர் திரு.துரைசாமி அவர்கள் பல இடங்கள்ல ஓட்டு கேட்டு போனப்ப சில சமூக நல அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க,காரணம் சகாயம் அவர்கள் மாறுதல் ஆக காரணம் இவர் தான்னு நம்புராங்க,அவர் தோத்தா அதுக்கு திரு.சகாயம் அவர்களும் ஒரு காரணமா அமைவார் பாருங்க.

    பதிலளிநீக்கு
  45. Sir, you have every right to share your experiences ,your trials , hardships, stress in your job , but not compare or advice with/to Mr.Sahayam..

    No two person are same..

    Almost many might have gone through similar experiences like you and would have fine tuned themselves later..

    Sadly , some give-up too..

    I cant advice you without knowing your intentions, hardships , risks etc., involved in your job .

    Lets not judge also without knowing a person very well that too publicly ..:)

    Hope you take this in right way.. not to demean you Sir..

    பதிலளிநீக்கு
  46. டி.பி.ஆர். கட்டுரை முழுக்கவும், பின்னூட்டங்களையும் படித்தேன்.

    நேரடியாய் சொல்கிறேன். சமீப காலங்களில் நான் படித்த மிக மோசமான, பொறுப்பற்ற கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

    உங்களுக்கு எப்படி என்று தெரிய வில்லை.உங்களிடமிருந்து இப்படி ஒரு கட்டுரை வந்ததற்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  47. ஹ்ம்ம்! ரொம்ப நாள் கழித்து உங்க பதிவுப் பக்கம் எட்டிப் பார்க்கிறேன்! நலமா?

    நல்ல பதிவு!

    ஆனால் திரு சகாயம் அவர்கள்உண்மையாலுமே மக்களின் நன்மதிப்பையும் அன்பையும் சம்பாதித்து வைத்துள்ளார்!

    பதிலளிநீக்கு
  48. டி.பி.ஆர்,

    சரி விடுங்க, ஏதோ நுட்பக் கோளாறு போல இருக்கு.

    jo.amalanக்கு நான் அளித்த பதிலை மறுபடி பெரிதாக இல்லாமல் ஒவ்வொன்றாக இங்கே அளிக்கிறேன். (சொற்கள் மாறியிருக்கலாம் கருத்து ஒன்றே)

    //U say u have watched him closely while he worked.//

    Your assumptions or my Tamil is wrong.

    கவனித்தவன் = observed
    அருகில் இருந்து = "near by" not "in next seat"
    செயல்பாடுகள் = "activities" not "day to day WORK"

    பொது மக்கள் மனு அளிக்கும் நிகழ்வுகளில் யார் வேண்டுமானாலும் அவர் அருகில் இருந்து அவரது செயல்பாடுகளை கவனிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  49. //Who are you to know everything he deals with you ?

    If a person likes you makes a public confession of privy to all his offical action, a strong punitive action should be taken against the officer for leading government information to a stranger.//

    அவரைப் பற்றி எல்லாம் தெரியும்னு நான் எங்கே சொன்னேன்?

    யாரும் இங்கே அவரது செயல்களுக்கு அவர் சார்பா விளக்கம் சொல்லலை. அவரை பற்றி "எனது கருத்துக்களை" நான் சொன்னேன். அவ்வளவே.

    பதிலளிநீக்கு
  50. //It appears you dont know abt IAS. Sahayyam appears to be from TN Gr A service and promoted to IAS. Because I hve not seen his name as recruited by UPSC.//

    உங்க அளவுக்கு எனக்கு IAS பற்றி தெரியாதுன்னே வச்சிக்கலாம்..

    சரி. அதனால் அவர் UPSC எழுதி பாஸ் ஆன IAS அதிகாரிகளை காட்டிலும் தரம்/தகுதி குறைந்தவர் என்று சொல்ல வருகிறீர்களா?

    பதிலளிநீக்கு
  51. //Sahayam cant send his letter on any matter to CM directly. He should send it to HS only. And, it is the prerogative of HS whether to send his letter to CM or not. More often than not, the HS disposes it on his own level.//

    சரிங்க... உங்களுக்கு தெரிஞ்ச அளவு அலுவலக விதிமுறைகள் திரு.சகாயம் அவர்களுக்கு தெரியலை போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  52. //Sahayam case - has not gone to the knowledge of CM? Sahayam should have told a close friend like you such official matters. If it has, why not he tells u what CM has done on that.//

    close friend? யாரு சார் சொன்னாங்க? உங்க பக்கதுல இருந்து பாத்தவனெல்லாம் உங்க close friendஆ? நீங்களே ஊகம் செஞ்சிக்கறீங்க போல?

    அவர் official matters எல்லாம் என் கிட்ட சொல்வாருன்னு கூட நீங்க ஊகம் செஞ்சிக்கறீங்க போல?

    ஊகம் தானே என்ன வேணா ஊகம் செய்யலாம் உங்களுக்கு முழு உரிமை இருக்கு

    பதிலளிநீக்கு
  53. //You should tell us being his close friend! Shouldn't u?//

    மறுபடியும் close friend? தாங்கலை. ஆனா உங்க ஊகம் தானே. இருக்கட்டும்

    பதிலளிநீக்கு
  54. //Departmental action is necessary against Sahayam for allowing an NGO person to watch him closely//

    NGO person? இன்னோரு ஊகமா? சரி சரி.. நடத்துங்க நடத்துங்க...

    அருகில் இருந்து கவனித்தவன்னா "watch him closely (as in next seat during his office hours)" என்று உங்களைப் போல தவறாகவும் புரிந்து கொள்ளலாம் "observe him closely (as in near by during his public interaction)" என்றும் பொருள் கொள்ளலாம். உங்க வசதி

    மற்றபடி டிப்பார்ட்மென்ட் ஆக்சன் எல்லாம் எடுக்கனும்னா ஏற்கனவே எடுத்திருப்பாங்க.

    பதிலளிநீக்கு
  55. //Only when complaints pour in alleging that the subordinates are not working, or working to the advanatage of social bad elements, the super boss like an RDO or DC goes for raids himself.

    Has such things happened that Sahayam went for raids himself ?//

    இது குறித்து விரிவா நீங்களே ஒரு ஆய்வு நடத்தி ஊர் மக்கள்/அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அனைவரிடமும் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  56. //Generally such raids by super boss are publicity stunts. There are many such officers - Kiran Bedi, Sakuntala, Sundaram and now Sahayam.

    As this blogger has written here, good work can be done by such officers w/o such publicity stunts.//

    திரு உ.சகாயம் அவர்கள் இது போன்ற (உங்கள் கருத்துப்படி) publicity stunts தவிர்த்து வேறு என்னென்ன நல்ல செயல்களை செய்துள்ளார் என்பதை மேலுள்ள எனது பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்ட திரு.பெருமாள்முருகன் அவர்களின் வலைத்தளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  57. //Gopi is making super humans out of humans. //

    இல்லை. திரு.சகாயம், திரு. உமாசங்கர் போன்ற நல்ல "மனிதர்கள்" பற்றி எனது கருத்துக்களை சொன்னேன். "கவலைப்பட மாட்டார்கள்" என்பதை அப்படியே literal ஆக எடுத்துக் கொள்ளாமல், அதை எதிர்த்து போராடி வெல்வார்கள் என்பதாக கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  58. புருனோ,

    //???

    ஒரு துனை ஆட்சியரின் உடனடி மேலதிகாரி ஆட்டியர்

    ஒரு துனை செயலரின் உடனடி மேலதிகாரி செயலர்

    என்று தான் எனக்கு தெரிந்த விதிகள் கூறுகின்றன

    நீங்கள் எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள் ??//

    எனக்குத் தெரிந்த சிவில் சர்விசஸ் நடைமுறைப்படி சொல்கிறேன். எனது அறியாமையாகக் கூட இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  59. டி.பி.ஆர்,

    தனித்தனியே பல பின்னூட்டங்களாக இட்டுள்ளேன். எனது கணினியிலும் சேமித்துள்ளேன். நுட்பக் கோளாறு காரணமாக காணாமல் போனால் சொல்லுங்கள். மறுபடி பின்னூட்டம் இடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  60. ஆனால் திரு சகாயம் அவர்கள்உண்மையாலுமே மக்களின் நன்மதிப்பையும் அன்பையும் சம்பாதித்து வைத்துள்ளார்!//

    நான் திரு சகாயம் அவர்கள் நல்லவர் இல்லை என்று எங்கும் கூறவில்லை.

    பதிலளிநீக்கு
  61. //உங்களுடைய கண்ணோட்டம் என்னுடையதுடன் ஒத்துப்போகிறது புருனோ. மகிழ்ச்சி. நன்றி. //

    அனுபவம் சார் !!//

    அனுபவம்தான் ஒருவரை பக்குவப்படுத்துகிறது என்பது எத்தனை உண்மை!

    பதிலளிநீக்கு
  62. நேரடியாய் சொல்கிறேன். சமீப காலங்களில் நான் படித்த மிக மோசமான, பொறுப்பற்ற கட்டுரைகளில் இதுவும் ஒன்று.//

    தினமலர் கட்டுரை ஒன்றில் எழுதப்பட்ட விவரங்களை வைத்து திரு சகாயம் அவர்களுடைய நடவடிக்கைகளை சுய விளம்பரத்திற்காக செய்தவை என்ற எண்ணத்தை எழுதியிருந்தேன். அப்படியெல்லாம் ஒரு ஆட்சியர் செய்துதான் திறம்பட நிர்வகிக்க முடியுமென்று என்று என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் என்னுடைய கருத்தை எழுதியிருந்தேன். அது எப்படி பொறுப்பற்றதாகும்? விளங்கவில்லை.

    ஏதோ நான் சகாயம் போன்ற அதிகாரிகளையெல்லாம் குறை கூறுவதாக கருதி பல பதிவர்கள் மிகவும் தரக்குறைவாக பின்னூட்டம் இடுகின்றனர். இவர்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்றுதான். முதலில் நான் சொல்ல வருவது என்ன என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டாதீர்கள். அத்தகைய பின்னூட்டங்களை பிரசுரித்து என்னுடைய ப்ளாகின் தரத்தை குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.

    பதிலளிநீக்கு
  63. Hope you take this in right way.. not to demean you Sir..//

    I fully accept your view. I always expect views that are quite opposite to mine. I never consider such views as against me or demeaning.

    பதிலளிநீக்கு
  64. ஒட்டு மொத்த பதிவும், அதன் சாராம்சமும் முழுக்க தவறு என்று சொல்கிறோம். ஒரு அரசாங்க அலுவலர் அறிவுரை சொல்லி கடிதம் எழுத வேண்டிய நிலையிலேயே சகாயம் அவர்கள் இல்லை என்று நினைக்கிறோம். ஒரு வேளை அரசு இயந்திரங்கள் பொறுப்பற்ற முறையில் இயங்குவது குறித்தான சமூக அக்கறையுடன் இந்தக் கடிதம் எழுதப்பட்டது என்றால், கடிதம் எழுதப்பட வேண்டிய நிலையில் கணக்கிலடங்காதவர்கள் இருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  65. //முதலில் நான் சொல்ல வருவது என்ன என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டாதீர்கள். அத்தகைய பின்னூட்டங்களை பிரசுரித்து என்னுடைய ப்ளாகின் தரத்தை குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.//

    இதில் பொதுவாக பிளாக்கர்கள் என்றும், உணர்ச்சி வசப்பட்டு வார்த்தையைக் கொட்டுபவர்கள் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் மேலே என்னுடைய பின்னூட்டத்தை மேற்கோள் காட்டி பொறுப்பற்ற என்ற வார்த்தையை போல்ட் செய்திருப்பதால் இதில் நானும் அடங்குகிறேனா இல்லையா என்று சந்தேகம் எழுகின்றது.

    என்னைப் பொறுத்த வரை ஒரு தினமலர் கட்டுரையைப் படித்து விட்டு அதனடிப்படையில் ஒரு ஆட்சியரின் நடவடிக்கைகளை விமர்சித்தும், அறிவுரை செய்தும், மன முதிர்ச்சியற்ற செயல்கள் என்று வர்ணித்தும் உங்களுக்கு இருக்கின்ற உரிமைகள் உங்களது இந்தக் கட்டுரைக்கு இத்தகைய வார்த்தைகளுடன் கூடிய பின்னூட்டங்களை அளிப்பதில் எனக்கும் உரிமை இருப்பதாகவே கருதுகின்றேன்.

    ஒரு வேளை தரக்குறைவான பின்னூட்டங்களை மட்டும்தான் நீங்கள் சொல்ல வந்திருந்த்தால் எனதூ மேற் சொன்ன பதிலை தவிர்க்கவும்.

    பதிலளிநீக்கு
  66. //எனக்குத் தெரிந்த சிவில் சர்விசஸ் நடைமுறைப்படி சொல்கிறேன். எனது அறியாமையாகக் கூட இருக்கலாம்.
    //

    மத்திய அரசின் விதியா அல்லது மாநில் அரசின் விதியா

    விதி எண் ஏதாவது உள்ளதா

    பதிலளிநீக்கு
  67. ஒட்டு மொத்த பதிவும், அதன் சாராம்சமும் முழுக்க தவறு என்று சொல்கிறோம்//

    அது என்ன 'சொல்கிறோம்'? நீங்கள் ஒருவர் மட்டுமா அல்லது நந்தா என்னும் பதிவருக்குள் பலர் உள்ளனரா:))

    ஒட்டுமொத்த பதிவும் தவறு என்பது உங்கள் கருத்து, அவ்வளவுதான். ஏனெனில் அது சரிதான், அருமையான, சரியான தருணத்தில் வந்த பதிவு என்ற பின்னூட்டங்களும் பிரிசுரிக்கப்பட்டுள்ளதை பார்த்திருப்பீர்கள்.

    ஒரு வேளை தரக்குறைவான பின்னூட்டங்களை மட்டும்தான் நீங்கள் சொல்ல வந்திருந்த்தால் ...//

    அவற்றை மட்டும்தான்...

    பதிலளிநீக்கு
  68. புருனோ,

    //மத்திய அரசின் விதியா அல்லது மாநில் அரசின் விதியா

    விதி எண் ஏதாவது உள்ளதா//

    சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் UPSC தேர்வு எழுத எண்ணிய போது அது தொடர்புடைய ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். உங்களுக்கு போதிய ஆதாரத்துடன் நிறுவ என்னிடம் online/offline proof ஏதுமில்லை.

    பதிலளிநீக்கு
  69. உங்கள மாதிரி ஆளுங்க இருக்கிற வரையில் இந்த நாடு சத்தியமா உருப்படாது !

    செஞ்சாலும் குத்தம், செய்யவில்லை என்றாலும் குத்தம், அட்ஜஸ்ட் செஞ்சி போனாலும் குத்தம், என்னதான் பன்னனும் உங்களுக்கு ????

    பதிலளிநீக்கு
  70. I have missed your article with my last comment and I am here again.

    Indian rigid bureaucracy is one of the reason why India not growing fast and most of the prominent supportive commentators reveal that aspect.

    I am not blaming you but the suppressed bureaucracy views what may be a reality.

    பதிலளிநீக்கு