01 ஜூன் 2010

பதிவுலகத்தின் இழிநிலை...

நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் சில ஆண்டுகளுக்கு முன்பு அவ்வப்போது பதிவுலகில் எழுதிக்கொண்டிருந்ததை மீண்டும் முழு நேர  அலுவலாக மேற்கொண்டால் என்ன நினைத்ததுண்டு.

ஆனால் சில, பல காரணங்களுக்காக அது தள்ளிக்கொண்டே போனது. இருந்தும் தமிழ்மணத்தில் தருமி, துளசி, ஜோ, கண்ணன் போன்ற நண்பர்களின் பதிவுகளை மட்டும் வாசிப்பதற்காக தமிழ்மணத்திற்கு அடிக்கடி வருவதுண்டு.

அப்போதெல்லாம் சில பதிவர்களுடைய பதிவுகளுக்கு மட்டும் அபிரிதமான வரவேற்பு இருப்பதை கண்டிருக்கிறேன். அப்படியென்ன எழுதுகின்றனர் என்பதை ஒருசில சமயங்களில் சென்று படித்துவிட்டு வெறுத்துப் போயிருக்கிறேன்.

சாதி ஒழிய வேண்டும் என்று ஒட்டுமொத்த சமுதாயமே அறைகூவல் இட்டுக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் அதையே மையக்கருத்தாக வைத்து ஒரு சாதியைச் சார்ந்த பதிவர்களை அவர்களைச் சாராதோர் இழித்து எழுதுவதும் அதற்கு அவர்களுடைய பாஷையிலேயே மறுமொழி அளிப்பதும்....

ஒருமுறை என்னுடைய பெயரை கூகுளில் இட்டு தேடிக்கொண்டிருக்கையில் 'டிபிஆர்.' தலித் சமூகத்தைச் சார்ந்தவரா என்று தெரியவில்லை' என்று என்னைப் பற்றி ஒரு பதிவர் தன்னுடைய பின்னூட்டங்களில் ஒன்றில் அங்கலாய்த்திருப்பதை காண முடிந்தது.

நான் தலித் சமூகத்தைச் சார்ந்தவனா இல்லையா என்பதை தெரிந்துக்கொள்வதில் அவருக்கென்ன அப்படியொரு ஆவலோ தெரியவில்லை. ஒருவேளை நான் தலித்தாக இருக்கும் பட்சத்தில் நான் தலித் கிறிஸ்துவர்களுக்கு இந்து தலித்துகளுக்கென அளிக்கப்படும் அனைத்து சலுகைகளையும் அளிக்க வேண்டும் என்று வாதிட்டதை என் சொந்த லாபத்திற்காகத்தான் என்று திரித்துக் கூறலாம் என்று நினைத்தாரோ என்னவோ!

என்னுடைய வங்கி மேலாளர் அனுபவத்தில் இப்படியொரு கணிப்புக்கு நான் ஆளாகி பலமுறை அவதிப்பட்டதுண்டு. அப்போதெல்லாம் இது காலப்போக்கில் மறைந்துவிடும் என்று நினைத்து ஆறுதலடைந்ததுண்டு. ஆனால் சுமார் முப்பதாண்டு காலங்களுக்கு பிறகும் இது பதிவுலகிலும் தலைவிரித்தாடுவதை பார்த்துவிட்டு எதற்கு இந்த சாக்கடையில் உழல வேண்டும் என்று கருதியே விலகியிருக்கிறேன்.

அதுவும் கடந்த ஒரு வார காலமாக இரண்டு அணிகளாக பிரிந்து பதிவர்கள் ஒருவர் மற்றவர்களை இழித்துரைப்பதையே எவ்வளவு 'அழகாக' செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை காணும் மனம் வலிக்கிறது.

அழகு தமிழை இப்படியெல்லாம் கூட பயன்படுத்த முடியும் என்பதை மிகத் தெளிவாக நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர் இன்றைய இளம் எழுத்தாளர்கள். வாழ்த்துக்கள் :((((((((((

21 கருத்துகள்:

  1. //என்னுடைய வங்கி மேலாளர் அனுபவத்தில் இப்படியொரு கணிப்புக்கு நான் ஆளாகி பலமுறை அவதிப்பட்டதுண்டு. அப்போதெல்லாம் இது காலப்போக்கில் மறைந்துவிடும் என்று நினைத்து ஆறுதலடைந்ததுண்டு. ஆனால் சுமார் முப்பதாண்டு காலங்களுக்கு பிறகும் இது பதிவுலகிலும் தலைவிரித்தாடுவதை பார்த்துவிட்டு எதற்கு இந்த சாக்கடையில் உழல வேண்டும் என்று கருதியே விலகியிருக்கிறேன்.//

    எருமை மாடுகள் நகரத்துக்கு போனால் நாகரீகம் பெற்றுவிடும் என்று நாம நினைப்போம் ஆனால் நடக்காது.

    :)

    சிலர் சாதிப் பெருமையில் குளிர்காய்வார்கள், சிலர் சாதிகளை சிறுமை படுத்தி மகிழ்வார்கள்.

    உங்களுக்கு என்ன சாதின்னு ஆராய்ச்சி நடத்தியது போலவே என் பெயரில் சாதி ஆராய்ச்சி நடத்தி ஒரு கோட்டான் என்னை 'கோணார்' என்று வலைப்பதிவுகளில் எழுதிவருகிறான்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம். நலமா?

    பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டீர்களா என்ன?

    இப்போதைய பதிவுலக சூழல் மனக்கவலை தருவதாக இருக்கு:(

    பதிலளிநீக்கு
  3. ஜோசப் சார், மூத்த அனுபவஸ்தவரான உங்கள் வருத்தத்தை ,ஆதங்கத்தை பகிர்ந்து கொள்ள முடிகிறது . பதிவுகளுக்கு வெளியே பதிவுகள் சார்ந்த விவாதங்கள் ,விசாரிப்புகள் நடந்தால் பரவாயில்லை .ஆனால் பதிவர்கள் பற்றிய விவாதங்கள் , குழு மனப்பான்மை , மூன்றாம் தரப்பை பற்றி கோள் மூட்டுதல் , தனிமனித தகவல் பரிமாற்றங்கள் அளவு கடந்து போகும் போது இத்தகைய நிகழ்வுகளை தவிர்க்க முடியாது.

    பதிலளிநீக்கு
  4. //இளம் எழுத்தாளர்கள்.//

    ??

    Don't get frustrated by this bad situation. There are people can away from all this.

    பதிலளிநீக்கு
  5. வாங்க கண்ணன்,

    எருமை மாடுகள் நகரத்துக்கு போனால் நாகரீகம் பெற்றுவிடும் என்று நாம நினைப்போம் ஆனால் நடக்காது. //

    இருக்கலாம். ஆனால் இது எத்தனை காலத்திற்கு நடக்கும். விடிவே வராதா?

    பதிலளிநீக்கு
  6. கோவியாரே ,

    ரொம்பச் சரி.
    மனம் 'கோணார்'ன்னு சொல்லி இருக்கலாம்:-))))))

    பதிலளிநீக்கு
  7. வாங்க துளசி,

    பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டீர்களா என்ன?//

    ஆமாம். ஜனவரி மாத இறுதியில்.

    இப்போதைய பதிவுலக சூழல் மனக்கவலை தருவதாக இருக்கு:(//

    அங்கும் உங்களைப் போன்ற சிலர் தொடர்ந்து எழுதி வருவது ஆறுதலை அளிக்கிறது. உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்து மகிழும் பலருள் நானும் ஒருவன். தொடர்ந்து எழுதுங்கள். நான் ஒரு எமோஷனல் பேர்வழி என்பதுதான் உங்களுக்கு தெரியுமே. எழுதுகின்ற மனநிலையில் நான் இல்லை என்பதாலும் எழுதாமல் தயங்கி நிற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க ஜோ,

    பதிவுகளுக்கு வெளியே பதிவுகள் சார்ந்த விவாதங்கள் ,விசாரிப்புகள் நடந்தால் பரவாயில்லை .ஆனால் பதிவர்கள் பற்றிய விவாதங்கள் , குழு மனப்பான்மை , மூன்றாம் தரப்பை பற்றி கோள் மூட்டுதல் , தனிமனித தகவல் பரிமாற்றங்கள் அளவு கடந்து போகும் போது இத்தகைய நிகழ்வுகளை தவிர்க்க முடியாது.//

    ஒத்துக்கொள்கிறேன். அடிப்பதை தாங்கிக்கொண்டு வாளாவிருப்பதையும் கோழைத்தனமாக கருதிவிட வாய்ப்புண்டு. ஆனால் எழுதுவதற்கும் விவாதம் செய்வதற்கும் எத்தனையோ நல்ல விஷயங்கள், நிகழ்வுகள் நாட்டில் நடக்கும்போது இத்தகைய இழி விவாதங்கள் தேவையா என்பதையும் அனைவருமே சிந்தித்து பார்ப்பது நலமில்லையா? இதுதான் என் ஆதங்கம்.

    பதிலளிநீக்கு
  9. வாங்க யாசவி,

    //இளம் எழுத்தாளர்கள்.//

    ??//

    என் வயதொத்த பதிவர்களை தவிர்த்து அனைவருமே இளம் எழுத்தாளர்கள்தான்... என்னைப் பொருத்தவரை :)

    Don't get frustrated by this bad situation. There are people can away from all this//

    I know that. I was just thinking aloud about the way the writings have degenerated over the last few years.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம். நானும் உங்களைப்போன்ற கருத்துகளைக்கொண்டவன்.
    முடிந்தால் இந்த பதிவைப் பார்க்கவும்.
    http://swamysmusings.blogspot.com/2009/09/blog-post_29.html
    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாங்க டாக்டர், வாதம், பிரதிவாதம் எல்லாம் எழுத்தாளர்கள் மத்தியில் சகஜம்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில சமயங்களில் அது குழாயடி சண்டையாக மாறிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  12. ஜோசப் சார், ரிடையர்மெண்டை எதிர்கொள்வது எப்படி என பதிவுத்தொடர் ஆரம்பியுங்களேன். Retirement Planning - எப்படி, எதில் Invest செய்வது போன்றவை மிக உபயோகமாக இருக்கும்.

    ஆண் வாரிசு இல்லாதோர், ரிடையர்மெண்டுக்குப் பிறகு பென்ஷன் இல்லாத தனியார் துறையில் வேலை செய்வோர், ரிடையர்மெண்டை எதிர்கொள்ள எப்படி தயார் செய்ய வேண்டும் etc

    Thanks

    பதிலளிநீக்கு
  13. வாங்க சாம்பார்வடை, ரிடையர்மெண்டை எதிர்கொள்வது எப்படி என பதிவுத்தொடர் ஆரம்பியுங்களேன். Retirement Planning // மீண்டும் ஒரு தொடரா? மேலும் இன்வெஸ்ட்மெண்ட் விஷயத்தில் நான் எக்ஸ்பர்ட் இல்லையே. எமோஷனலாக இதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி வேண்டுமானால் எழுதலாம்..

    பதிலளிநீக்கு
  14. அதென்ன ஆண் வாரிசு இல்லாதோர்!!!!!

    ரிட்டயர்மெண்ட் வாழ்க்கைன்னு இல்லை எப்பவுமே வாரிசுகள் நமக்குச் செய்யுமுன்னு இருக்கும் எதிர்பார்ப்பே கூடாது என்ற கருத்துடையவள் நான்.

    அதே போல கையில் இருக்கு ஒன்னு ரெண்டையும் நாம் போனபிறகுதான் வாரிசுகளுக்குன்னு எழுதி வைக்கணும் என்ற கருத்தும் உண்டு.

    இது என் சொந்தக் கருத்து. எல்லோரும் ஆமோதிக்கணும் என்ற எண்ணம் இல்லை.

    பதிலளிநீக்கு
  15. ரிட்டயர்மெண்ட் வாழ்க்கைன்னு இல்லை எப்பவுமே வாரிசுகள் நமக்குச் செய்யுமுன்னு இருக்கும் எதிர்பார்ப்பே கூடாது என்ற கருத்துடையவள் நான்.//

    என்னுடைய கருத்தும் இதுதான். ஆனால் நம் நாட்டில் பெற்றோர் வயதான காலத்தில் தங்களுடைய வாரிசுகளின் நிழலில் வாழ்வது தங்களுடைய உரிமை என்று கருதுகின்றனர். வளர்த்து ஆளாக்கிய கடமைக்கு தங்களை வைத்து ஆதரிக்க வேண்டிய கடமை வாரிசுகளுக்கு உண்டு என்றும் எண்ணுகின்றனர்.

    அதே போல கையில் இருக்கு ஒன்னு ரெண்டையும் நாம் போனபிறகுதான் வாரிசுகளுக்குன்னு எழுதி வைக்கணும் என்ற கருத்தும் உண்டு.// இதிலும் உங்களுடைய கருத்துதான் எனக்கும். ஆனால் சில பெற்றோர் தங்களுடைய காலத்திலேயே தாங்கள் ஈட்டியதை வாரிசுகளூக்கு பகிர்ந்தளித்துவிட்டு அவர்களுடன் இணைந்து வாழ்ந்தால் போதும் என்று கருதுகின்றனர். அதுவே சில சமயங்களில் வினையாய் முடிந்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  16. கோவியாரே ,

    ரொம்பச் சரி.
    மனம் 'கோணார்'ன்னு சொல்லி இருக்கலாம்:// இருக்கலாம். ஆனால் கோவியார் யாராக இருந்தால் யாருக்கு என்ன லாபம் அல்லது நஷ்டம். அவர் கோணாராகவே இருந்துவிட்டு போகட்டுமே அதில் யாருக்கு என்ன? சாதியை திருமண பந்தங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று கேட்டிருக்கிறேன். நட்புக்குமா? சாதி என்ன என்று கேட்டுவிட்டுத்தான் பழகுவார்கள் போலிருக்கிறது. அதுவும் இந்த நூற்றாண்டில்.

    பதிலளிநீக்கு
  17. அன்பு திரு டி.பி.ஆர்.

    எல்லோரும் மனம் வருந்தும் நிகழ்ச்சிகள் நடந்தேறி இருக்கின்றன.
    உண்மைதான்.
    ஆனாலும் உங்களைப் போன்றவர்கள் மீண்டும் எழுத
    ஆரம்பித்தால் ஒரு நல்ல திருப்பம் இருக்கும்.

    தமிழுக்காக எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  18. Pls look out the good things in blog world, dont focus on the negative things alone.

    பதிலளிநீக்கு
  19. you and me can very well avoid reading those caste/religious related posts, blogs.

    No one force us to read those posts.

    பதிலளிநீக்கு