09 July 2009

ரொம்ப நாளாச்சு ....

சுமார் மூன்று வருடங்களாக இழுத்தடித்த கணினி மயமாக்கல் பயணம் (ப்ராஜக்ட்) ஒருவழியாக கடந்த சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது, வெற்றிகரமாக.

என்னுடைய வங்கியின் அனைத்துக் கிளைகளும் வலையிணைப்பின் கீழ் (Wide Area Network) கொண்டுவரப்பட்டு ஒரே மென்பொருளை பயன்படுத்தும் வகையில் (Core Banking Solution) இணைக்கப்பட்டன.

இந்த மூன்றாண்டுகளில்தான் எத்தனை ஏமாற்றங்கள், காலதாமதங்கள், விவாதங்கள், மனத்தாங்கல்கள்... நண்பர்களை சம்பாதித்தேனோ இல்லையோ நிறைய விரோதங்களை ஏற்படுத்திக்கொண்டேன்.

ஆனால் இந்த எல்லாவற்றினூடே முடியாது என்று பலரும் கூறியதை சாதித்துவிட்டோம் என்கிற ஒரு கர்வம் நிறைந்த மனநிறைவு....

இதை வெற்றிகரமாக செயலாற்றி முடிக்க என்னுடன் உழைத்த இளம் பொறியாளர்கள் கொண்ட அந்த அணியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

கடந்த ஓராண்டுகாலமாக சனி, ஞாயிறு, பொது விடுமுறை நாட்கள், பண்டிகை என்று எந்த ஓய்வும் இல்லாமல் ஒழிவும் இல்லாமல் அலுவலகமே கதி என்று கிடந்த அந்த இளைஞர்களை என்ன சொல்லி பாராட்டுவது. அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்?

இது முழுக்க முழுக்க ஐ.டி நிறுவனமாயிருந்தால் இந்த பாராட்டுக்குறிய சாதனைக்கு கணிசமான ஊதிய உயர்வு கிடைத்திருக்கும். ஆனால் கங்கிராட்ஸ் என்ற ஒரு வார்த்தையைத் தவிர, ஐந்து நட்சத்திர உணவகத்தில் ஒருவேளை உணவைத் தவிர வேறொன்றும் என்னால் பரிசாக தரமுடியவில்லை.

இதுமட்டுமே என்னால் முடியும் என்பதையும் அந்த இளைஞர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பது ஒரு சிறிய ஆறுதல்.

நான் ஓய்வு பெறுவதற்கு முன்பு இதை முடித்துவிட முடியுமா என்று பல நாட்கள் மாய்ந்து போயிருக்கிறேன். பல இரவுகளில் உறக்கத்தை இழந்திருக்கிறேன். பல உயர் அதிகாரிகளின் முன்பு பதிலளிக்க முடியாமல் நின்றிருக்கிறேன். பல ஏச்சுகளை, பேச்சுகளை கேட்டிருக்கிறேன்...

ஆனால் என்னுடைய மிக ஆழமான இறைபக்தி, என்னுடைய இளைஞர் அணியின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை இவை மட்டுமே இதை முடித்து தந்திருக்கிறது என்றால் மிகையல்ல...

இதோ, இனியும் ஆறே மாதங்கள். அறுபது வயதில்தான் வாழ்க்கையே துவங்குகிறது என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்...

எனக்கும் மிகவும் மன ஆறுதலை அளிக்கும் என்னுடைய எழுத்து பயணத்தை மீண்டும் துவக்க முடியும் என்ற மகிழ்ச்சியில்....

எதிர்வரும் மாதங்களில் அடிக்கடி எழுத முடியாமல் போனாலும் பின்னூட்டங்கள் இட்டு வலையுலக தொடர்பை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன்...

மீண்டும்... டிபிஆர்.

15 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தங்களுடைய சாதனைக்கு எனது பாராட்டுக்கள் ஸார்..!

விதை விதைத்தவனை அந்த விதையினால் முளைத்த மரத்தின் நிழலில் சுகம் காண்பவர்கள் என்றென்றும் ஒரு நிமிடம் எண்ணிப் பார்ப்பார்கள்.

தாங்கள் என்றென்றும் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மனதில் இருப்பீர்கள் ஸார்..!

கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீள வாருங்கள்..!

Fan of your blog said...

Welcome back.

As a person who has undergone such things in my projects, I can understand what your team went through. Kudos to them!

Hope to see your "looking back" series again.

வினையூக்கி said...

வாழ்த்துகள். பின் திரும்பிப்பார்க்கையில் நிச்சயமாக அது ஒரு பிரமிப்பான அனுபவம் தான். :)

டி.பி.ஆர் said...

வாங்க உண்மைத்தமிழன்,

கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீள வாருங்கள்..!//

நிச்சயமாக... இதில் கிடைக்கும் மனநிறைவு வேறு எதிலும் கிடைப்பதில்லை.

டி.பி.ஆர் said...

Welcome My Dear Fan,

As a person who has undergone such things in my projects, I can understand what your team went through. Kudos to them!//

Yes. It is like giving birth. After so much of trials and tribulations it gave the entire team a sense of achievement and satisfaction..

Hope to see your "looking back" series again.//

I should be back... but only after my retirement.. i.e. from 1st of Feb, 09:))

டி.பி.ஆர் said...

வாங்க வினையூக்கி,

பின் திரும்பிப்பார்க்கையில் நிச்சயமாக அது ஒரு பிரமிப்பான அனுபவம் தான். //

உண்மைதாங்க.. எங்களுடன் இணைந்து அயராது உழைத்த உங்களுடைய முந்தைய நிறுவனத்தை சார்ந்த குழுவுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

அந்த அனுபவத்தையும் பகிர்ந்துக்கொள்ள ஆசைதான்...

siva gnanamji(#18100882083107547329) said...

vango sir vango!

ஜோ/Joe said...

ஜோசப் சார்,
அச்சு அசலான இதே போன்ற Core Banking system உருவாக்கத்திலும் ,நிறுவுதலிலும் வருடக்கணக்காக தொடர்ந்து உழைத்த அனுபவம் உள்ளவன் நான் என்பதால் ,நீங்கள் சொல்ல வரும் சிரமங்கள் ,குழப்பங்கள் துல்லியமாக எனக்கு புரிகின்றன .வெற்றிகரமாக இந்த பணியை செய்து முடித்ததற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் .மகிழ்ச்சி.

டி.பி.ஆர் said...

வாங்க ஜோ,

அச்சு அசலான இதே போன்ற Core Banking system உருவாக்கத்திலும் ,நிறுவுதலிலும் வருடக்கணக்காக தொடர்ந்து உழைத்த அனுபவம் உள்ளவன் நான் என்பதால் ..

அப்படியா? very good. நான் நீங்க Non-IT personனு நினைச்சேன்...

உங்களுடைய வாழ்த்துகளுக்கு நன்றி.

டி.பி.ஆர் said...

வாங்க ஜி!

எப்படியிருக்கீங்க?

vango sir vango!//

முழுசா வந்து சேர்றதுக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆவும் போலருக்கு :((

Seemachu said...

ரொம்ப நாள் கழித்து உங்களைப் பதிவில் கண்டது மிக மகிழ்ச்சி. அடிக்கடி பதிவிடுங்கள் !!

அன்புடன்
சீமாச்சு

கோவி.கண்ணன் said...

டிபிஆர் ஐயா,

சாதனைகளுக்கு பிறரின் பாராட்டுகளை விட கிடைக்கும் அவரவரின் மன நிறைவு மேலானாது, அதற்கும் மேல் பிறரின் பாராட்டு வெறும் வெளி அங்கீகாரம் தான்.

மூன்றாண்டுகள் சிறப்பாக எண்ணிய செயலை முடித்த உங்களுக்கு பாராட்டுகள்.

உங்கள் பதிவுகள் இனி தொடர்ந்து வெளிவரும் என்று தெரிகிறது. வாழ்த்துகள்.

டி.பி.ஆர் said...

வாங்க சீமாச்சு,

அடிக்கடி பதிவிடுங்கள்//

முயற்சி செய்கிறேன். உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.

டி.பி.ஆர் said...

வாங்க கண்ணன்,

சாதனைகளுக்கு பிறரின் பாராட்டுகளை விட கிடைக்கும் அவரவரின் மன நிறைவு மேலானாது, அதற்கும் மேல் பிறரின் பாராட்டு வெறும் வெளி அங்கீகாரம் தான்.//

உண்மைதான்.

மூன்றாண்டுகள் சிறப்பாக எண்ணிய செயலை முடித்த உங்களுக்கு பாராட்டுகள்.//

நன்றி.

Anonymous said...

congraulation iyya