06 மே 2009

என்னுடைய ஓட்டு யாருக்கு, ஏன்?

என்னுடைய ஓட்டு இருக்கட்டும். நம் அனைவருடைய ஓட்டும் யாருக்கு என்று சிந்திப்போமே.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தமிழகம் என்றில்லாமல் ஒட்டுமொத்த நாட்டின் அடுத்த ஐந்தாண்டு கால தலைவிதியை நிர்ணயிக்கப் போகிற தேர்தல்.

இந்த தேர்தலில் எந்த பிரச்சினைகள் முக்கியம்?

1. ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி.

2. நாட்டின் பாதுகாப்பு. அதாவது நம்மைச் சுற்றியுள்ள தெரிந்த மற்றும் தெரியாத பகைவர்களிடமிருந்து (நாடுகள், போராளி அமைப்புகள்)  நமக்கு பாதுகாப்பு.

3. உள்நாட்டு பாதுகாப்பு. அதாவது நமக்குள்ளேயே புல்லுருவிகளாக இருந்து நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அமைப்புகளிடமிருந்து பாதுகாப்பு. இதற்கு முக்கிய தேவை மத நல்லிணக்கம். சாதீய சாயமில்லாத நடுநிலையான சூழல்.

4. கடந்த ஐந்தாண்டுகளில் துவங்கப்பட்டு இன்றும் நிறைவுபெறாமல் நிற்கும் சேதுசமுத்திர திட்டம் போன்ற ஒட்டுமொத்த நாட்டுக்கும் நலமளிக்கக் கூடிய திட்டங்கள் நிறைவேறுதல்.

இவை மட்டுமே நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் நம்முடைய தலையாய தேவைகளாயிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

சமீப காலமாக சிலரால் முன்நிறுத்தப்படும் பிரச்சினைகள், பிரச்சினைகள்தான் என்றாலும் அவை இந்த பொதுத்தேர்தலுக்கு பொருத்தமில்லாதவை.

முதன்முதலாக இலங்கைத் தமிழர்களின் அவலநிலை.

உணர்ச்சிவசப்படாமல், அதாவது நான் ஒரு தமிழன் என்ற நிலையைக் கடந்து இந்தியன் என்ற நிலையில் இந்த பிரச்சினையை அணுகும்போது இப்போதைய மத்திய அரசுக்கு எதிராக நான் வாக்களிக்க ஒரு முக்கிய காரணமாக இது தென்படவில்லை.

அப்படியே அது இருந்தாலும் அதை தகுந்த முறையில் கையாளும் திறன் இப்போது மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களிடம்தான் உள்ளது. பலரும் நினைப்பதுபோன்று பாஜக ஆட்சி வருமானால் இப்போதைய நிலையைவிடவும் மோசமடையவே வாய்ப்புள்ளது. இன்று தமிழகத்தில் தமிழ் ஈழம், தமிழர்களுக்கு சம உரிமை என வாய் கிழிய பேசும் கட்சித்தலைவர்கள் வெற்றிபெற்றாலும் மத்தியில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் கட்சியுடன் (அது காங்கிரசாகவே இருந்தாலும்) இணைந்து தங்களுடைய கட்சிக்கு எத்தனை அமைச்சகங்களைக் கைப்பற்றி அடுத்த தேர்தலுக்குள் எத்தனை கோடிகளை சுருட்டலாம் என்பதில்தான் குறியாக இருப்பார்களே தவிர பல இளம் பதிவாளர்களும் கருதுவதுபோல் தமிழ் ஈழம் உருவாக்க உதவிபுரியும் கட்சிக்கு மட்டுமே ஆதரவளிப்போம் என முன்வரமாட்டார்கள். மருத்துவரையும், கேப்டனையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

அடுத்து கலைஞரின் ஆட்சித்திறன்.

அதை முடிவு செய்ய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஜெ அவர்கள் வேண்டுமானால் இதையே சொல்லிக்கொண்டு ஊர், ஊராக ஹெலிகாப்டரில் சுற்றட்டும். மருத்துவர் கூறுவதையெல்லாம் தண்ணீரில் கரைத்துவிடலாம். கேப்டன் இந்த தேர்தலைப் பொருத்தவரை ஒரு பொருட்டே அல்ல.

ஆக இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலையையும், கலைஞரின் தவறுகளையும் தள்ளிவையுங்கள்.

இப்போது சொல்லுங்கள்? யாருக்கு நம்முடைய ஓட்டு?

என்னைப் பொருத்தவரை நாட்டின் பொருளாதார நிலை உலகிலுள்ள மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக நன்றாகவே உள்ளது. நாட்டின் வெளி மற்றும் உள் பாதுகாப்பும் மோசமாக இல்லை. முக்கியமாக பாஜக ஆளும் ஒருசில மாநிலங்களைத் தவிர்த்தால் மத நல்லிணக்கம் நன்றாகவே உள்ளது. சாதீய போராட்டங்களும் வெகுவாகவே குறைந்துள்ளன.

ஆகவே என்னுடைய ஓட்டு நிச்சயம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குத்தான்.

இதை விடுத்து இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம்தான் முக்கியம் என்று இளைய தலைமுறை தீர்மானித்து வாக்களிக்குமானால் மத்தியில் இன்று தமிழகத்திற்கு இருக்கும் பங்கு குறையும். தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை குறையும்.  தமிழகத்திற்கு கிடைக்கவிருக்கும் நலத்திட்டங்கள் குறையும். முதலீடுகள் குறையும். சேது சமுத்திரம் மட்டுமல்ல ஹொகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிடும்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கு வேண்டுமெனில் முதலில் தமிழகம் வலுப்பெற வேண்டும். தமிழகத்தை ஆளும் கட்சி மத்தியில் ஆளும் கூட்டணியில் மிக முக்கியமான, பலம் வாய்ந்த அங்கத்தினராக இருக்க வேண்டும். மறந்துவிடாதீர்கள்.

இன்றைய சூழலில் அது திமுகதான்.

7 கருத்துகள்:

  1. //இப்போதைய மத்திய அரசுக்கு எதிராக நான் வாக்களிக்க ஒரு முக்கிய காரணமாக இது தென்படவில்லை.//

    :((((((((((((((((((((((((((

    பதிலளிநீக்கு
  2. வாங்க ஜோ,

    உங்களுடைய வருத்தம் நியாயமானதுதான் ஜோ. இதுதான் இன்றைய பல இளைய தலைமுறையினரின் கருத்தும் கூட.

    ஆனாலும் இதற்கு தீர்வு வேண்டுமெனில் காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக இப்போது ஏதாவது இருக்கிறதா என்ன?

    காங்கிரஸ் இல்லையென்றால் பிஜேபிதானே. அவர்கள் தனித்து ஆட்சியமைக்கப் போவதில்லை. இங்குள்ள ஜெயலலிதாவை விட்டால் யார் அவர்களுக்கு ஆதரவளிக்கப் போகிறார்கள்?

    இலங்கை தமிழர்கள் விஷயத்தில் ஜெயின் நிலைப்பாடு என்னவாயிருந்தது சமீப காலம் வரை?
    தேர்தலுக்காக ஈழத்தை கையில் எடுத்தவர் அதை கீழே போட எத்தனை நொடி வேண்டுமென நினைக்கிறீர்கள்?

    ஆதலால்தான் இன்றைய மத்திய ஆட்சி நாம் நினைத்த அளவுக்கு இலங்கையரசை பணிய வைக்கவில்லையென்றாலும் இதற்கு அவர்களைத் தவிர இப்போதைக்கு வேறு மாற்று இல்லை என்று நினைக்கிறேன்.

    என்னைப் பொருத்தவரை நான் பல காலமாகவே காங்கிரஸ்காரன். அவருடன் கூட்டு வைக்கும் திராவிட கட்சியை ஆதரிக்க வேண்டும் அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  3. ராஜன்11:39 AM

    //நாட்டின் வெளி மற்றும் உள் பாதுகாப்பும் மோசமாக இல்லை//
    மும்பையை அவ்வளவு சீக்கிரம் மறந்துட்டீங்களா? அங்கு இலங்கை போராளிகள் விடயத்தில் தேவையில்லாமல் தலையிடதெரியும். பாகிஸ்தான் உங்க நடு வீட்டுக்குள் வந்து ஆயி போட்டு போட்டான் அவனுக்கு எதிரா வாய் திறக்க கூட சக்கதி இல்லை. பூனை எலியோடுதான் விளையாடும் நாயிட்ட வாலாட்டாது.

    பதிலளிநீக்கு
  4. மும்பையை அவ்வளவு சீக்கிரம் மறந்துட்டீங்களா? //

    அதாவது பிஜேபிக்கோ அல்லது மூன்றாவது/நான்காவது அணிக்கோ ஓட்டுப்போட்டா இந்த மாதிரி தாக்குதல்கள் நடக்காதுன்னு சொல்ல வறீங்க. அயோத்தியா மாதிரி விஷயங்களையே தடுக்க முடியாதவங்க அவங்க.

    காங்கிரஸ் இல்லன்னா பிஜேபி இவங்களாலதான் மத்தியில ஆட்சியமைக்க முடியும்.

    பிஜேபிக்கு காங்கிரஸ் மேல். வேணும்னா lesser evilனு சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா5:51 AM

    I perfectly agree with your assessment. Congress is far better than any other party as of now. However I feel central govt should take fast action with terrorists TN voters are confused by vested interests.

    பதிலளிநீக்கு
  6. I perfectly agree with your assessment.//

    Thanks.
    Congress is far better than any other party as of now.//

    That is the main reason for supporting the Congress led alliance. BJP can never be trusted. It may not take much interest in the Srilankan issue as it has not aligned with any regional party from TN. If Jayalalitha does not corner sufficient number of seats to prompt BJP to invite her to join the government TN would be totally isolated. I am unable to understand the emotional stand taken by some of our youngsters against Congress and Sonia. I really pity them.
    However I feel central govt should take fast action with terrorists TN voters are confused by vested interests.

    பதிலளிநீக்கு
  7. //மும்பையை அவ்வளவு சீக்கிரம் மறந்துட்டீங்களா?//
    கார்கிலையும் , பாராளுமன்றத் தாக்குதலையும் நினைக்கையில் மும்பை சுண்டைக் காய். பெரிய பாதுகாப்பில்லாத தனியார் இடத்தில் தீவிரவாதி புகுந்ததே பெரிய குறை என்றால் பாராளுமன்றக் கட்டிடம் வரை அனுமதித்த பிஜெபியை என்ன சொல்வது? கார்கிலில் பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்கிறமித்து பல மலைப் பகுதிகளையும் பிடிக்கும் வரை சர்வ நேரமும் டிவி கேமராக்களுக்கு போஸ் கொடுபப்தையே தொழிலாக வைத்திருந்தவர்களை ஒப்பிட்டால் காங்கிரஸ் உச்சத்தில் இருக்கிறது தலைவா.

    //பூனை எலியோடுதான் விளையாடும் நாயிட்ட வாலாட்டாது.//

    புலி அல்ல எலி தான் என்று ஒத்துக் கொண்டதர்கு வந்தனங்கள் பாஸ். :)

    //பாகிஸ்தான் உங்க நடு வீட்டுக்குள் வந்து ஆயி போட்டு போட்டான்//

    எதோ சொல்லத் தோன்றுகிறது. ஆனால் உங்கள் ஒருவருக்காக பலரையும் புண்படுத்த விரும்பவில்லை. பிழைத்துப் போங்கள்.

    பதிலளிநீக்கு