24 மார்ச் 2009

தேர்தல் களம் - 2 விஜயகாந்தின் முடிவு!

என்னுடைய முந்தைய பதிவுக்குப் பிறகு கேப்டன் தன்னுடைய முடிவை சூசகமாக ரசிகர்கள் மத்தியில் தெரிவித்துவிட்டார்.

இங்குள்ள கட்சிகளுடன் அல்லாமல் கடவுளுடன் கூட்டணி அமைத்துள்ளாராம். ஆனாலும் அதை பகிரங்கமாக 26ம் தேதிதான் வெளியிடுவாராம். அதென்ன அந்த தியதில் விசேஷமோ தெரியவில்லை!

அவரைப் பற்றி அவர் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. யானைக்கு பலம் தும்பிக்கையில் என்பதுபோல இவருடைய பலம் நம்பிக்கையில்தான். ஆனால் அதுவே அதீத நம்பிக்கையாகும்போது முட்டாள்தனத்தின் எல்லையைத் தொட்டுவிடுகிறது.

கடந்த சட்டசபை தேர்தல்களில் இவர் பெற்ற வாக்குகள் அஇஅதிமுகவுக்கு கிடைக்கவிருந்த வாக்குகள் என்றும் இவரால்தான் அந்த கட்சி பல தொகுதிகளிலும் தோற்றது என்றன பல நாளிதழ்கள். இப்போதும் அதே போல் நடந்தால் திமுகவுக்கு லாபம். ஆனால் இவருடைய கட்சி மீண்டும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறப்போவதில்லை என்பது நிச்சயம்.

பன்ருட்டியார் போன்ற அனுபவம் மிக்க தலைவர்கள் அவருடன் இருந்தும் அவரால் இப்படியொரு முடிவை எப்படி எடுக்க முடிந்தது என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

அடுத்தது பாமக.

விஜயகாந்தின் முடிவு அவரை திமுக கூட்டணிக்கு திருப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். திமுக கூட்டணியில் இணைந்தால் கூட்டணிக்கு லாபமோ இல்லையோ அவருடைய கட்சிக்கு நிச்சயம் லாபமாகத்தான் இருக்கும். தங்கபாலு என்னதான் பாமக இப்போதும் எங்கள் கூட்டணியில்தான் என்றாலும் மருத்துவர் ஐயா இப்போது விரும்புவதெல்லாம் மு.கவிடமிருந்து பேருக்கு ஒரு அழைப்பு. ஆனால் அவர் விடுவதாக தெரியவில்லை.

கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வெற்றி விவரங்கள் கீழே:




பாமக திமுக கூட்டணியில் தொடர்வதை அஇஅதிமுக விரும்பவில்லை என்றாலும் மேடமும் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள தயங்குகிறார். கேப்டனுக்கு செல்லும் வாக்குகளை பாமகவுக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் சில தொகுதிகளிலாவது சரிகட்ட முடியும். ஆனால் அதை வெளிப்படையாக கூறினால் மருத்துவர் தன் சுயரூபத்தை காட்டுவாரோ என்கிற அச்சம். இதே அச்சத்தில்தான் மு.கவும்.

'இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா' என்ற கவுண்டமனியின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

3 கருத்துகள்:

  1. பெயரில்லா11:31 AM

    Sir,

    Request your views through a post in tamil for the following news.

    thanks

    http://business.rediff.com/report/2009/mar/27/big-banks-to-make-money-from-free-atms.htm

    பதிலளிநீக்கு
  2. Request your views through a post in tamil for the following news.//


    எழுதுகிறேன்.

    இத எதுக்கு அநாமதேயமா வந்து கேக்கறீங்க?

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா3:24 PM

    thanks.
    sorry sir. when i entered the name and clicked submit - probably the blogger did not copy.

    mahesh s

    பதிலளிநீக்கு