27 June 2008

பணவீக்கமும் வீட்டுவாடகையும் நடுத்தர குடும்பங்களும்

இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழில் வெளிவந்த
கட்டுரை

நான் சென்னையில் 1980களில் பணியாற்றியபோது சுமார் 1100 ச.அடி மூன்று படுக்கையறை தனி வீட்டில் மாத வாடகை ரூ.750/-க்கு குடியிருந்தேன். அங்கிருந்து தஞ்சை, தூத்துக்குடி, மதுரை போன்ற நகரங்களில் பணியாற்றிவிட்டு 1987ல் திரும்பி வந்தபோது கே.கே. நகரில் இரண்டு படுக்கையறை குடியிருப்பின் ( flat) வாடகை ரூ.2250/- ஆக உயர்ந்திருந்தது. மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் மாற்றலாகி மும்பை சென்று 1997ல் திரும்பியபோது அதே அளவு குடியிருப்பு ரூ.3500/- 2002ல் நான் கொச்சிக்கு மாற்றலாகி சென்றபோது அதுவே ரூ.5000/- ஆக உயர்ந்திருந்தது. 2005ல் திரும்பி வந்தபோது ரூ.7000/- இப்போது நான் குடியிருக்கும் குடியிருப்புக்கு மாத வாடகை ரூ.12000/- பராமரிப்புக்கு தனியாக ரூ.1500/- இதுதான் நான் இதுவரையில் குடியிருந்த குடியிருப்புகளிலேயே மிகவும் சிறியது!

வாடகை உயர்வது ஒன்றும் சமீபத்திய நிகழ்வு அல்ல. ஆனால் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஏதோ சமீபத்தில் உயர்ந்த பணவீக்க விகிதத்தின் விளைவே இந்த வாடகை உயர்வு என்பதுபோல் சித்தரித்திருக்கிறது. அதுபோலத்தான் முதல் பக்கத்தில் வந்துள்ள கட்டுரையும்.

1980 மற்றும் 1990களில் சென்னையில் வீட்டு வாடகை உயர்வுக்கு காரணமாயிருந்தவர்கள் வங்கி ஊழியர்கள் என்றனர். இப்போது அது ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களால் என்கின்றனர். இது ஓரளவுக்கு உண்மைதான். என்னுடைய கட்டடத்திலேயே நான் குடியிருக்கும் அதே அளவு உள்ள குடியிருப்புக்கு ஐ.டி. துறையில் பணியாற்றும் ஒரு இளம் ஜோடி ரூ.15,000/-க்கு சமீபத்தில் குடிவந்துள்ளனர்!. நான் இருப்பது 2ம் தளத்தில் அவர்கள் 8ம் தளத்தில். தளம் உயர, உயர வாடகையும் உயருமோ என்னவோ. அல்லது இருவரும் ஊதியம் ஈட்டுகின்றனர் என்பதாலோ. இதற்கு இடைத்தரகர்கள்தான் முக்கிய காரணம் எனலாம்.

இதற்கும் சமீபத்திய பணவீக்க விகிதம் உயர்ந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இதுபோன்றே நாளிதழ்கள் தினமும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வைப் பற்றி தெருவில் போவோர் வருவோர் மற்றும் குடும்பப் பெண்கள் இவர்களிடமெல்லாம் பேட்டி கண்டு விலைவாசி உயர்வைப் பற்றி அவர்களை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்று கேட்டு அதை பெரிதுபடுத்தி பக்கங்களை நிரப்புவதைக் காண்கிறோம். இதனால் தேவையற்ற பீதி மக்களிடம் பரவுகிறது என்பதுதான் உண்மை.

பணவீக்கமும் விலைவாசி உயர்வும் புதியதும் அல்ல, இப்போதைய விலைவாசி உயர்வு இந்தியாவில் மட்டுமே நிலவும் நிகழ்வும் அல்ல. உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் நிலவும் ஒரு பொது பிரச்சினை. இதை நாம் நினைத்தால் மட்டுமே சரிசெய்துவிட முடியாது. இதன் தொடர்பாக அமெரிக்க அதிபர் புஷ் சமீபத்தில் கூறியதுபோல இதை தீர்க்க யாரிடமும் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை. இடதுசாரி கட்சிகள் முறையிடுவதுபோல இது நம்முடைய பிரதமரின் பொருளாதார கொள்கைகள் மட்டுமே காரணமும் இல்லை. உலகமயமாக்கல் என்பது இன்று அனைத்து வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொதுவான பொருளாதார கொள்கை! அதிலிருந்து நாம் மட்டும் விலகி நிற்க இயலாது. இத்தகைய சூழலில் உலகில் மற்ற நாடுகளில் ஏற்படும் பிரச்சினை நம்மையும் பாதிக்கத்தான் செய்யும்.

இடதுசாரி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொல்லையால் ரிசர்வ் வங்கியும் பல அவசர நடவடிக்கைகளில் இறங்கி பிரச்சினையை மேலும் சிக்கலாகி வருகின்றது. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய நிதியை கூட்டுவதன்மூலம் கடன் வட்டி விகிதம் நிச்சயம் உயரும். அது மேலும் விலைவாசியைக் கூட்டுமே தவிர குறைக்க நிச்சயம் வாய்ப்பில்லை. அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் அலங்கோலமாகவே இருக்கும் என்பார்கள். அதுதான் இப்போது நடக்கிறது.

19 comments:

மங்களூர் சிவா said...

/
அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் அலங்கோலமாகவே இருக்கும் என்பார்கள். அதுதான் இப்போது நடக்கிறது.
/

கண்டிப்பாக!

கோவி.கண்ணன் said...

//நான் இருப்பது 2ம் தளத்தில் அவர்கள் 8ம் தளத்தில். தளம் உயர, உயர வாடகையும் உயருமோ என்னவோ.//

ஜோசப் ஐயா,

இங்கு சிங்கையில் உயர உயர வீட்டில் விலையும் உயரும். காரணம் தூய்மையான காற்று அங்கு வருமாம்.
:)

இந்திய நகரங்களில் மட்டுமல்ல..இங்கேயும் இருமடங்கு வாடகை உயர்ந்திருக்கிறது. வீட்டின் மதிப்பும் 30 விழுக்காடு அளவுக்கு இந்த ஆண்டில் மட்டும் உயர்ந்திருக்கிறது. க்ளோபல் வார்மிங்க் :)

நடுத்தர மக்கள் சுமார் ரூபாய் 6000 - 10,000 வரை வருமானம் உள்ளவர்கள் இனி சென்னையில் வசிக்க முடியாது என்றே நினைக்கிறேன்

SP.VR. SUBBIAH said...

////பணவீக்கமும் விலைவாசி உயர்வும் புதியதும் அல்ல, இப்போதைய விலைவாசி உயர்வு இந்தியாவில் மட்டுமே நிலவும் நிகழ்வும் அல்ல. உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் நிலவும் ஒரு பொது பிரச்சினை. இதை நாம் நினைத்தால் மட்டுமே சரிசெய்துவிட முடியாது. இதன் தொடர்பாக அமெரிக்க அதிபர் புஷ் சமீபத்தில் கூறியதுபோல இதை தீர்க்க யாரிடமும் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை.///

1. இணையவர்த்தகத்தை வைத்துக் கொண்டு வேளாண் பொருட்களில் விளயாடுவதை தடை செய்ய வேண்டும்
2. ரியல் எஸ்டேட்டில் புழங்கும் கருப்புப் பணத்தைக் கட்டுப் படுத்த வேண்டும்
இது இரண்டையும் செய்தால் நிலைமை கொஞ்சம் கட்டுக்குள் வரும் என்பது என்னுடைய தாழ்மையான
அபிப்பிராயம்!

டி.பி.ஆர் said...

வாங்க சிவா,

நம்முடைய நாட்டில் எல்லா பிரச்சினைகளுமே உணர்ச்சிபூர்வமாகவே அணுகப்படுகின்றன. எந்த சூழலிலும் பதட்டப்படாமல் இருக்கும் பிசிதம்பரமே பதற்றத்துடன் அறிக்கைவிடுவது வாடிக்கையாகிப்போய்விட்டது. அதுபோலவே ரிசர்வ் வங்கி. இத்தகைய சூழலில் நாட்டில் பணப்புழக்கத்தை குறைக்க ரிசர்வ் வங்கி எடுக்கும் ஒரு நடவடிக்கைதான் இந்த CRR உயர்வு. ஆனால் அதனாக் எப்போதுமே எதிர்மறையான விளைவுகளே ஏற்படுகின்றன. ஆயினும் இந்த பாதையிலேயே ரிசர்வ் வங்கி சென்றுக்கொண்டிருக்கி
றது. அதுதான் புரியாத புதிராக உள்ளது.

டி.பி.ஆர் said...

வாங்க கண்ணன்.

நடுத்தர மக்கள் சுமார் ரூபாய் 6000 - 10,000 வரை வருமானம் உள்ளவர்கள் இனி சென்னையில் வசிக்க முடியாது என்றே நினைக்கிறேன்//

அப்படியில்லை. சென்னையில் அதுதான் விசித்திரம். ரூ.12000/- மாத வாடகையுள்ள அதே அளவு குடியிருப்பு மாதம் ரூ.5000/-க்கு கிடைக்கும் இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதுபோலவே குறைந்த பட்ச மாத வாடகை ரூ.500-1000/-க்கு கிடைக்கும் வீடுகளும் (போர்ஷன்கள்) இருக்கத்தான் செய்கின்றன. வாழ நினைத்தால் வாழலாம் என்பது சென்னைக்கு மிகவும் பொருந்தும்!!

டி.பி.ஆர் said...

வாங்க சுப்பையா,

1. இணையவர்த்தகத்தை வைத்துக் கொண்டு வேளாண் பொருட்களில் விளயாடுவதை தடை செய்ய வேண்டும்
2. ரியல் எஸ்டேட்டில் புழங்கும் கருப்புப் பணத்தைக் கட்டுப் படுத்த வேண்டும்
இது இரண்டையும் செய்தால் நிலைமை கொஞ்சம் கட்டுக்குள் வரும் என்பது என்னுடைய தாழ்மையான
அபிப்பிராயம்!//

இரண்டையுமே செய்ய விடமாட்டார்கள் இந்த அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளூம்!!

தமிழ்நெஞ்சம் said...

vaanga sir. vanga sir.

ellorum pogi agricutlure vivasaayam paarthu, vayalileye veedu katti, suthamaana kaatrai suvaasithu, aathuthanneeril kulithu, 100 varusam nalaamaga vaalvom - endha tension um illaama.

veettu vaadagai free.
thanneer kudikka water drum vendam.
current bill kku solar alternative vaicchukkuvom.
air pollution free.
mental torture free.

vaanga sir. vanga.

yaaraavadhu enakku vivasaayam seivadhu eppadi appadinnu class edunga.

please. sathiyamaa naan idhai sila naadkalaaga ninaikka mattum seidheen.

ungal post ai parthadhum manadhil irundhadhu... varthaiyil vandhu.. post comment la vandhurucchu..

thanks

மனதின் ஓசை said...

ஜோசப் சார்..

இந்த விஷயத்துல உண்மையான நிலவரம் என்ன? காரணம் என்ன? சரியாகுமா? எதுவுமே புரிய மாட்டேங்குது..

வீட்டு கடன் வட்டி கூடிகிட்டே போகுதுன்றதுதான் இப்பொதைய என் முக்கிய பிரச்சினை.:-(

டி.பி.ஆர் said...

வாங்க தமிழ்நெஞ்சம்,

உங்க புனைப்பெயர் நல்லாருக்கு:))

veettu vaadagai free.
thanneer kudikka water drum vendam.
current bill kku solar alternative vaicchukkuvom.
air pollution free.
mental torture free.

vaanga sir. vanga

இதென்ன மரத்தடி வீட்டுக்கு விளம்பரமா?

வசதியில்லாவனுக்கு வானமே கூரை!!

டி.பி.ஆர் said...

வாங்க ம.ஓசை,


இந்த விஷயத்துல உண்மையான நிலவரம் என்ன? காரணம் என்ன? சரியாகுமா? எதுவுமே புரிய மாட்டேங்குது..//

இதுதான் இன்றைய நிதர்சனம். இது மாறுமா என்றால் நிச்சயம் மாறும். ஆனால் எப்போது? அது ஈசனுக்கு வெளிச்சம். Integrated நொர்ல்ட் economy என்பது ஒரு வேலியில்லா நிலம் போல. யார் நிலத்திலும் யார் வேணுமானாலும் மேயலாம் என்பதுபோல். ஆகவே our economy is insulated from other economies என்கிற நிலை இப்போது இல்லை. அமெரிக்காவில் ஏற்படும் பணவீக்கம் அடுத்த சில தினங்களில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அனைத்து நாடுகளூக்கும் பொதுவான தேவை பெட்ரோல் எனப்படும் OIL. அதற்கு மாற்று வரும்வரை உலகப் பொருளாதாரம் அதன் பிடியில்தான்.

வீட்டு கடன் வட்டி கூடிகிட்டே போகுதுன்றதுதான் இப்பொதைய என் முக்கிய பிரச்சினை.:-(//

இப்போது நடப்பது ஒரு upward swing. மேலே செல்வதெல்லாம் கீழே வந்துதானே ஆகவேண்டும் என்பார்கள். அதுபோல இதுவும் கீழே வரும். எப்போது? அதில்தான் சிக்கலே. இது ஒரு vicious circle. காத்திருங்கள். வேறு வழியில்லை:(

மனதின் ஓசை said...

//வேறு வழியில்லை:(//

அது மட்டும் நல்லா புரியுது சார்.:-((

IT-ல இல்லாத (increment கொஞ்சமா வாங்கர) ஆளுங்க என்ன பன்னுவாங்கன்னுதான் புரியல. 6-7% ல கணக்கு போட்டு வாங்கி இருப்பாங்க..இப்ப அது 12% ஆகறப்ப அடி பலமா இருக்கும்.. பட்ஜெட்ல பெரிய துண்டு விழும்..

அது மட்டுமில்லாம பெரிய கம்பெனில இருக்கறவங்களுக்கு கம்மி வட்டி விகிதம். சொல்லப்போனா அவன்தான் அதிகமா சம்பலம் வாங்கறவனா இருப்பான்.. இன்னும் இது போல பல பிரச்சினை இருக்கு வீட்டு கடன் பத்தி பேசினா மட்டுமே..

டி.பி.ஆர் said...

IT-ல இல்லாத (increment கொஞ்சமா வாங்கர) ஆளுங்க என்ன பன்னுவாங்கன்னுதான் புரியல. 6-7% ல கணக்கு போட்டு வாங்கி இருப்பாங்க..இப்ப அது 12% ஆகறப்ப அடி பலமா இருக்கும்.. பட்ஜெட்ல பெரிய துண்டு விழும்..

உண்மைதான். இது தொடர்பாக நான் எழுதியுள்ள இந்த பதிவை நீங்கள் படித்துள்ளீர்களா என்பது தெரியவில்லை.

அது மட்டுமில்லாம பெரிய கம்பெனில இருக்கறவங்களுக்கு கம்மி வட்டி விகிதம். சொல்லப்போனா அவன்தான் அதிகமா சம்பலம் வாங்கறவனா இருப்பான்.. //

பணம் இருக்கறவங்கக்கிட்டதான் பணம் சேரும்னு சொல்வாங்க. அதுமாதிரிதான் இதுவும். யாருக்கு சலுகைகள் தேவையில்லையோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
மேலே செல்வதெல்லாம் கீழே வந்துதானே ஆகவேண்டும் என்பார்கள். அதுபோல இதுவும் கீழே வரும். ==>
100க்கு 100 உண்மை

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<=
அது மட்டுமில்லாம பெரிய கம்பெனில இருக்கறவங்களுக்கு கம்மி வட்டி விகிதம். சொல்லப்போனா அவன்தான் அதிகமா சம்பலம் வாங்கறவனா இருப்பான்.. //

பணம் இருக்கறவங்கக்கிட்டதான் பணம் சேரும்னு சொல்வாங்க. அதுமாதிரிதான் இதுவும். யாருக்கு சலுகைகள் தேவையில்லையோ அவர்களுக்குத்தான் அது கிடைக்கும்
==>
யாரால திரும்ப கட்ட முடியுமோ அவனுக்கு குறஞ்ச வட்டி (சலுகை)ன்னு வச்சுக்கலாமோ?

டி.பி.ஆர் said...

வாங்க சாமான்யன்,

யாரால திரும்ப கட்ட முடியுமோ அவனுக்கு குறஞ்ச வட்டி (சலுகை)ன்னு வச்சுக்கலாமோ?//

அதாவது வங்கிகளுடைய கணிப்பில் திரும்பி கட்டிவிடுவார்கள் என்று கருதப்படுபவர்களுக்கு வட்டி விகிதத்தில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் அவர்கள் திருப்பி கட்டுகிறார்களா என்பது வேறு விஷயம்!

Tamil Paiyan said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

விஜய் said...

வீட்டு வாடகையை கட்டு படுத்த சில கருத்துக்கள்

1.அரசு வீட்டு வசதி வாரியதிற்கு பரவலாக சலுகைகள் அளித்து அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டி நியாயமான விலையில் கொடுக்கவேண்டும்.அதிக லாபம் பார்க்க கூடாது

2.காலிமனைகளை அதிகமாக வைதிருப்போர்ருக்கு( கொள்ளை லாபம் பார்க்க வேண்டும் எனும் வியாபர நோக்கோடு) அதிகமான ஆண்டு வரி செலுத்தச் சொல்லி அதை
வீட்டு வசதி வாரியச் செயல்களுக்கு உபயோகப் படுத்தலாம்.

3.எல்லா நகரங்களிலும் துணை நகரங்கள் அமைத்து விட்டு வசதியை பெருக்கலாம்.

4.இன்னும் தீவிரமாக மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுபடுத்துதல்.

தி.விஜய்

http://pugaippezhai.blogspot.com

நவநீத்(அ)கிருஷ்ணன் said...

நீயா நானாவில் இதைப் பற்றி தெளிவாகப் புரிய வெய்த்திருப்பார்கள்.

"http://www.movielanka.com/video/category/tv"

ஒருவர் 25- 50 இலட்சம் செலவு செய்து ஒரு ப்ளாட் வாங்கி எவ்வளவு வட்டிகட்ட வேண்டியிருக்கும். வாடகையே தேவல.

It is all because of the persons who is ready to pay whatever the amount of rent. Due to that other suffers.

It is mostly because of bachelors who was caused. A portion of the house taken by them will be shared by 4 or more people.

The thing will be come down or it will be stable in next 5 years.

now freshers are more encouraged to join the IT / BPO field. after 5yrs the cost of the people will be more so there will be no hike in there salary or there will be layoff (sad it will be happen in one day). Why to have a 10yrs experience and doing all most the same job what a 3 yrs people can do. Who are all in IT / BPO better reduce there unwanted and lavish expense, it will hit the roof in next 5 - 10 yrs. Only the people who is having very good stuff can survive, increase your knowledge and be ready for what ever the change.

Every year the cost is increasing for the employer but the customer is trying to reduce the job cost.


Every one trying to buy the land irrespective of there use. an acre land is purchased by 1 L and a ground is selling at 2-4 L. See how much the profit a Real estate people making. Government does his duty as usual just watching it.

After the land rate is increased the near by lands will be selling in prime rate and our people is ready to buy thats the sad part.

Don't miss to watch the program neeya naana.

tamiljunction said...

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com