19 ஜூன் 2008

இது அரசியல் கட்டுரை அல்ல!!

குறை கூறுவது மனித இயல்பு. நம்மில் குறை கூறாதவர்களே இல்லை எனலாம்.

இருவர் கூடிவிட்டாலே அங்கு இல்லாதவர்களைப் பற்றி பேசுவதுதான் வாடிக்கை. ஏனெனில் அந்த இருவரே ஒருவரையொருவர் குறை கூற துவங்கினால் இறுதியில் கைகலப்பில்தான் முடியும் என்பதால் அங்கு இல்லாதவர்களைப் பற்றி பேசுவது இயல்பு.

ஆனால் நாம் எப்படி மற்றவர்களை குறை கூறுகிறோமோ அதேபோல் மற்றவர்களும் நம்மை குறை கூற வாய்ப்புள்ளது என்பதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்!

மற்றவர்களை குறை கூறுவதில் மகிழ்ச்சி காணும் நாம் நம்மை மற்றவர்கள் குறை கூற முயல்கையில் வெகுண்டு எழுகிறோம்.

இதுவும் மனித இயல்புதான்.

குறை கூறுவதும் ஒரு கலை. அதில் கற்று தேர்ந்தவர்கள்தான் தலைமை இடத்திற்கு வரமுடியும் போலிருக்கிறது.

அதாவது நமக்கு கீழே இருப்பவர்களை குறை கூறி, கூறி நம்முள் இருக்கும் குறைகளை நமக்கு மேலிருப்பவர்கள் உணராமல் செய்துவிடமுடியும்!

ஆனால் குறை கூறுவதும் தேவையான ஒன்றுதான்.

No pain no gain என்பார்கள். நம் உடம்பில் உள்ள குறைகளை நாம் கண்டுணர்வது வலியால்தான். சாதாரண வலி என்றுதான் மருத்துவரை அணுகுகிறோம். பிறகுதான் தெரிகிறது வலிக்கு பின்னால் இருக்கும் நோய் (சரிதானே ப்ருனோ?).

அதுபோன்று நம்முடைய செயல்களைக் குறித்து பிறர் விமர்சிக்கும்போதுதான் நம்மில் உள்ள குறை நமக்கே தெரிகிறது. இதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்.

நமக்கு நெருங்கியவர்கள், நம்மில் அக்கறையுள்ளவர்கள் நம்மை குறை கூறுவதும் நமக்கு எதிரிகள் என்று நாம் கருதுபவர்கள் குறை கூறதும் ஒன்றல்ல. முன்னவர்களுடைய குறை கூறும் போக்கு அவர்களுக்கு நம் மீதுள்ள அக்கறையை, அன்பை, எதிர்பார்ப்பைக் காட்டுகிறது என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.

'குறை கூறுபவர்களுக்கு எவ்வித தகுதியும் தேவையில்லை. அடிமுட்டாளும் குறை கூறுவான். ஆனால் அதை ஏற்றுகொள்ள அல்லது பொருட்படுத்தாமல் இருக்க அனைவராலும் முடிவதில்லை. It needs a strong character, willpower to put up with criticism especially when it is not constructive'

***

இதை நான் பா.ம.க தலைவருக்காகவோ அல்லது மு.கவுக்காகவோ எழுதவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

8 கருத்துகள்:

  1. /குறை கூறுவதும் ஒரு கலை. அதில் கற்று தேர்ந்தவர்கள்தான் தலைமை இடத்திற்கு வரமுடியும் போலிருக்கிறது//
    :-)


    //சாதாரண வலி என்றுதான் மருத்துவரை அணுகுகிறோம்.//

    எந்த மருத்துவரை சொல்றீங்க? புரியலியே...


    //இதை நான் பா.ம.க தலைவருக்காகவோ அல்லது மு.கவுக்காகவோ எழுதவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.//

    உள்குத்துன்னா இதானா? :))

    பதிலளிநீக்கு
  2. வாங்க ம.ஓசை,


    எந்த மருத்துவரை சொல்றீங்க? புரியலியே...//

    சத்தியமா நீங்க நினைக்கற மருத்துவரை அல்ல:))

    உள்குத்துன்னா இதானா?//

    நமக்கு அதெல்லாம் தெரியாதுங்க. அதுக்குத்தான் நிறைய எக்ஸ்பெர்ட்ஸ் தமிழ்மணத்துல இருக்காங்களே:-)

    பதிலளிநீக்கு
  3. அட! ஆமாம்ல்லே..... இனிமே குறை கூறுமுன் கொஞ்சம் யோசிக்கணும்போல இருக்கே.

    கோபால்கிட்டேதான் பயிற்சி எடுத்துக்கணும்.

    சாந்தமூர்த்தி:-)

    பதிலளிநீக்கு
  4. ////'குறை கூறுபவர்களுக்கு எவ்வித தகுதியும் தேவையில்லை. அடிமுட்டாளும் குறை கூறுவான். ஆனால் அதை ஏற்றுகொள்ள அல்லது பொருட்படுத்தாமல் இருக்க அனைவராலும் முடிவதில்லை. It needs a strong character, willpower to put up with criticism especially when it is not constructive'///

    அருமை ! நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  5. வாங்க துளசி,

    கோபால்கிட்டேதான் பயிற்சி எடுத்துக்கணும்.

    சாந்தமூர்த்தி:-)//

    ஹூம் குடுத்து வச்சவங்க நீங்க!

    புரியும்னு நினைக்கேன்:-)

    பதிலளிநீக்கு
  6. வாங்க சுப்பையா சார்,

    வருகைக்கு மிக்க நன்றி.

    குறைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வந்துவிட்டால் பிறகு பிரச்சினையே இல்லைதானே சார்.

    பதிலளிநீக்கு
  7. //மற்றவர்களை குறை கூறுவதில் மகிழ்ச்சி காணும் நாம் நம்மை மற்றவர்கள் குறை கூற முயல்கையில் வெகுண்டு எழுகிறோம்.
    //

    ஜோசப் ஐயா,

    காரணம் எப்போதும் ஒருவர் அரைகுறையாக இருப்பதால் அடுத்தவர்களிடம் மட்டும் மீதி குறையை காண முடிகிறது. ஒரு வேளை முழுக்குறை தன்னிட(மு)ம் இருக்கிறது என்று உணர்ந்தால் திருத்திக் கொள்வார்களோ !
    :)

    பதிலளிநீக்கு
  8. வாங்க கண்ணன்,

    காரணம் எப்போதும் ஒருவர் அரைகுறையாக இருப்பதால் அடுத்தவர்களிடம் மட்டும் மீதி குறையை காண முடிகிறது. ஒரு வேளை முழுக்குறை தன்னிட(மு)ம் இருக்கிறது என்று உணர்ந்தால் திருத்திக் கொள்வார்களோ !//


    இருக்கலாம். ஆனால் குறையே இல்லாத மனிதர்கள் இருக்கிறார்களா என்ன?

    குறை கூறும் குணத்தை முழுவதுமாக யாராலும் தவிர்த்து விட முடியாது. ஆனால் காரணமில்லாமல் குறை கூறுவதை தவிர்த்தால் நல்லது. இதை 'அவர்' உணர்ந்திருந்தால் இப்படியொரு அவஸ்த்தை ஏற்பட்டிருக்காதே!

    பதிலளிநீக்கு