01 அக்டோபர் 2007

புது வலைப்பூ எழுத்து மேடை

வலைப்பூவில் எழுதுவதற்கு தற்போது பல வழிகள் உள்ளன.

நம்மில் பலரும் ஈகலப்பையை பயன்படுத்தி நேரடியாக ப்ளாகர்.காம் (Blogger.com) வழங்கும் 'புதிய இடுகை' (New Post)மேடையில் எழுதி பதிவு செய்வது வழக்கம். ஆனால் இதற்கு நாம் 'ஆன் லைனில்' இருக்க வேண்டும். அலுவலகத்திலிருந்து 'ஓசியில்' இணைப்பை பயன்படுத்துபவர்களுக்கு இதுதான் எளிது. இதில் இன்னுமொரு தொல்லை, நம்முடைய இடுகையின் நகலை நம்முடைய கணினியில் சேமித்துக்கொள்ள முடிவதில்லை. 

இதற்கு மாற்றாக நம்முடைய கணினியில் உள்ள நோட்புக்கில் எழுதி அதை காப்பி, பேஸ்ட் மூலம் ப்ளாகரிலுள்ள புதிய இடுகை தளத்தில் பதிவு செய்யலாம். இது ஆஃப் லைனில் இடுகையை தயாரிக்க வகை செய்கிறது. இடுகையின் நகலையும் கணினியில் சேமிக்க முடிகிறது. ஆனால் முந்தைய முறையை விடவும் கூடுதல் நேரம் தேவைப்படும்.

இவ்விரண்டு முறைகளுக்கும் மாற்றாக மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் லைவ் ரைட்டர் என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது கிடைக்கும் இடம்:

இதிலுள்ள வசதிகள் என்ன?

நம்முடைய பதிவு பக்கத்திலேயே நேரடியாக எழுதுவது போன்ற பிரமையை அளிக்கிறது:

Post scr

இதற்கு  'வியூ' மெனுவில் 'வெப் லேஅவுட்' தெரிவு செய்ய வேண்டும்.

win1

மேலும் 'Insert Picture', 'Insert Hyperlink', வசதிகள் மூலம் எந்த ஒரு படத்தையோ, வலைத்தள சுட்டையையோ மிக எளிதாக இணைத்துவிடலாம். இதிலுள்ள படங்கள், சுட்டி எல்லாமே இவ்வாறு பதிவு செய்தவைதான். இதற்கென படங்களை வேறெந்த third party தளங்களில் சேமித்து வைத்து தரவிறக்கம் செய்ய தேவையில்லை.

win3 

நம்முடைய எழுத்துருவின் வடிவம், நிறம் ஆகியவற்றையும் மிக எளிதாக அமைத்துக்கொள்ள உதவுகிறது 'Format' மெனு.

மேலும் 'Align' 'Numbering' 'Bulleting' வசதிகள் நம்முடைய இடுகையை மெருகூட்டவும் உதவுகின்றன.

win4

இதிலுள்ள 'Table' மெனு ஒரு முழுமையான 'table' ஐ இணைக்கவும் வசதி செய்கிறது. 

win5

'Tools' மெனுவிலுள்ள 'Preferences' மெனு மேலும் பல வசதிகள செய்துக்கொள்ள உதவுகின்றன.

win6

மேலும் இதே மெனுவிலுள்ள 'Accounts' மெனு நம்முடைய அனைத்து வலைப்பூக்களையும் இந்த மேடையில் இணைத்துக்கொள்ள உதவுகிறது.

win7

'Weblog' மெனு நம்முடைய இடுகையை இடுவதற்குண்டான பதிவை தெரிவு செய்ய உதவுகிறது. இது ஒன்றுக்கு மேற்பட்ட பதிவை வைத்திருப்பவர்களுக்கு மிகவும் உதவுகிறது. ஒரே மேடையில் தங்களுடைய எந்த பதிவையும் நொடிப்பொழுதில் தெரிவு செய்ய முடியும்.

 win9

சரி... எழுதி முடித்தாகி விட்டது.

நம்முடைய இடுகையை நம்முடைய கணினியிலேயே சேமிக்கவும் 'Save Local Draft' என்ற மெனு வசதி செய்கிறது. அதாவது நம்முடைய வலைப்பூவில் எப்படி தெரியுமோ அதே வடிவத்தில்!!

நாம் எழுதி முடித்ததும் உடனே பதிவு செய்துவிட வேண்டும் என்றில்லை. எத்தனை நாட்கள் கழித்து வேண்டுமானாலும் 'Open' மெனுவை க்ளிக்கினால் நாம் சேமித்து வைத்துள்ள இடுகைகளின் பட்டியல். இப்பதிவு நான் சனி, ஞாயிற்று கிழமைகளில் தயாரித்தது.

win12

'Publish' செய்வதற்கு முன்னர் நம்முடைய இடுகை எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை காண ' Web Preview' வசதியும் உண்டு!

win11

ஒரே ஒரு க்ளிக்கில்  நேரடியாக நம்முடைய வலைப்பூவில் வெளியிடும் 'Publish' வசதியும் இருப்பதால் அதற்கென 'blogger.com' தளத்தில் ஓவ்வொரு முறையும் நம்முடைய ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து அவதிப்படவும் தேவையில்லை.

மென்பொருளை தரவிறக்கம் செய்யும்போதே நம்முடைய பளாகர் ஐடியையும் பாஸ்வேர்டையும் ஒரேயொரு முறை கொடுத்து சேமித்து விட்டாலே போதும்.

*********

15 கருத்துகள்:

  1. இது நல்ல முறைதான். இதற்கு முன்பு நான் ஜிமெயிலில் எழுதிவிட்டு பிறகு ப்ளாக்கரில் ஏற்றுவேன். ஜிமெயிலில் உள்ள வசதி, அடிக்கடி தானாகவே சேமிக்கும், பின்பு அதனை எந்த கணனியிலும் திறந்து பயன்படுத்தலாம். வெளியிடும் போது ப்ளாகர் எதாவது சொதப்பினாலும் சேமிப்பு எப்போதும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. //கோவி.கண்ணன் said...
    இது நல்ல முறைதான். இதற்கு முன்பு நான் ஜிமெயிலில் எழுதிவிட்டு பிறகு ப்ளாக்கரில் ஏற்றுவேன்.
    //
    நானும் இதே முறையை தான் பின்பற்றுகின்றேன்

    பதிலளிநீக்கு
  3. வாங்க கண்ணன்,

    நான் ஜிமெயிலில் எழுதிவிட்டு பிறகு ப்ளாக்கரில் ஏற்றுவேன்//

    நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் செய்துக்கொண்டிருந்தேன். ஆனால் பிறகு ஆஃப்லைனில் நோட்பேடில் எழுதிவிட்டு (வீட்டில் இருந்து எழுத இதுதான் சவுகரியம்) ப்ளாகரில் பேஸ்ட் செய்துவிடுவேன்.

    விண்டோஸ் ரைட்டர் முறை என்னைப் போன்றுள்ளவர்களுக்கு மிகவும் வசதி.

    பதிலளிநீக்கு
  4. நன்றி வினையூக்கி.

    பதிலளிநீக்கு
  5. உபயோகமான செய்தி ஜோசஃப் சார்
    மிக்க நன்றி1

    பதிலளிநீக்கு
  6. நானும் நோட்பேடில்தான் எழுதிவச்சுக்கிட்டு இருந்தேன்.

    புதுக்கணினி சொதப்பல். முந்தாநாளில் இருந்து நான் 'வேர்டு பேடு'க்கு மாறியாச்சு:-))))

    பதிலளிநீக்கு
  7. நன்றி சுப்பையா சார்.

    உபயோகிச்சி பார்த்துட்டு சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  8. வாங்க துளசி,

    புதுக்கணினி சொதப்பல். முந்தாநாளில் இருந்து நான் 'வேர்டு பேடு'க்கு மாறியாச்சு//

    ஆனால் இந்த விண்டோஸ் ரைட்டர் ரொம்பவும் சுலபமா இருக்கு. ஒரே விண்டோலருந்து நம்ம எல்லா வேலைகளையும் முடிச்சிரலாம். யூஸ் பண்ணி பாருங்க.

    பதிலளிநீக்கு
  9. நன்றி ஜோசப்.

    நல்லா வேலை செய்யுது.

    பதிலளிநீக்கு
  10. நல்லா வேலை செய்யுது.//

    Enjoy:-)

    பதிலளிநீக்கு
  11. இதென்ன மாதம் ஒரு பதிவு என்று ஏதாவது ஒரு கணக்கு இருக்கா? அப்படியே ப்ளாக்குக்கு எத்தனை நாள் விடுமுறைன்னு சொன்னா உபயோகமா இருக்கும். தினமும் நீங்க பதிவு போட்டிருகீங்களான்னு சோதிக்க தேவையில்லை பாருஙக.

    பதிலளிநீக்கு
  12. மிகவும் பிரயோசனமான உதவி.
    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. வாங்க சிவா,

    இதென்ன மாதம் ஒரு பதிவு என்று ஏதாவது ஒரு கணக்கு இருக்கா? //

    அப்படியில்லீங்க. டைம் கிடைக்கறப்ப எழுதலாம்னுதான். என்னுடைய இன்னொரு தளத்தில் எழுதுகிறேனே.

    http://vedhagamam.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. உபயோகமான செய்தி

    நன்றி

    பதிலளிநீக்கு