22 May 2007

காலம் மாறிப் போச்சு

பின் தூங்கி பின் எழுபவரா நீங்கள்? கவலையே வேண்டாம்.

உங்களைப் போலவே பலரும் உள்ளனர்.

சோம்பேறி, ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன், முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவன்... இப்படி எத்தனை பட்டங்கள்?

கவலைப்படாதீர்கள்.

டென்மார்க் நிறுவனம் ஒன்று சமீபத்தில் காலையில் எழுந்து எட்டுமணிக்கெல்லாம் அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கெதிராக ஒரு இயக்கத்தையே துவக்கியுள்ளது.

B-Society என்ற இணையதளம் வழியாக முன்தூங்கி முன்எழுபவர்களுக்கு எதிராக ஒரு இயக்கத்தையே துவங்கியிருக்கிறது இந்த நிறுவனம்.

அதிகாலையில் எழுந்து எட்டு மணியிலிருந்து மாலை நான்கு மனி வரையிலும் வேலை செய்பவர்களுக்கும் காலையில் சாவகாசமாக எழுந்து பதினோரு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை வேலை செய்பவர்களுக்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் இல்லை என்று வாதாடுகின்றனர் இதன் இயக்க உறுப்பினர்கள்.

உண்மைதானே!

இந்த இயக்கம் துவக்கப்பட்ட நான்கே மாதங்களில் 4,800 அங்கத்தினர்கள் சேர்ந்துள்ளனர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறது இந்த நிறுவனம்!

இதே இயக்கம் நம் நாட்டில் துவக்கப்பட்டால் இன்றைய ஐ.டி. தலைமுறை இதில் பெருமளவில் சேர முன்வருவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

டேனிஷ் குடும்ப நல அமைச்சர் கரீனா க்ர்ஸ்டென்சனும் இந்த இயக்கத்திற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருக்கிறாராம். 'அலாரம் கடிகாரத்திற்கு அடிமையாக வாழ்ந்தது போதும். நம்முடைய வாழ்க்கை அமைதியாகவும் நம் விருப்பத்திற்கேற்பவும் அமைய இந்த விடுதலை நிச்சயம் தேவை.' என்கிறார் அவர்!

இந்த B-Society அமைப்பின் தலைவர் கமிலா க்ரிங் இந்த துறையில் ஒரு டாக்டர் பட்டத்தையே பெற்றிருக்கிறாராம்! அவருடைய இயக்கத்தில் இத்தகைய பள்ளியே இயங்கி வருகிறதாம். இங்கு வகுப்புகள் நண்பகலில்தான் துவங்குகிறதாம்!

இது டென்மார்க்கிலிருந்து ஸ்வீடன், ஃபின்லேண்ட் மற்றும் நார்வே போன்ற நாடுகளுக்கும் வேகமாக பரவுகிறதாம்!

இதை ஏன் நம்முடைய நாட்டிலும் துவங்கக் கூடாது?

அதிகாலையில் எழுந்து அழுது வடிந்த முகங்களுடன் பள்ளிக்கு செல்லும் நம்முடைய குழந்தைகளுக்கு நிச்சயம் இது பயனுள்ளதாக இருக்கும்!

ஏன் நம்முடைய இளைஞர்களுக்கும்தான்! படித்து முடித்து பணிக்கு செல்லும் வயதிலும் என்னுடைய மகளை காலையில் ஏழரை மணிக்கு எழுப்ப எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது!

ஆகவே இந்த இயக்கத்தை துவக்கிய கமிலா க்ரிங் அவர்களை இந்தியாவுக்கு வருகை தருமாறு ஒரு வேண்டுகோள் விடுத்தால் என்ன என்று தோன்றுகிறது:-)

12 comments:

vinodh said...

Wow.....Thanks for the info. Let me go ahead join first.....

Aani Pidunganum said...

Edhuku thaan Iyakamnu ellama pochu, Innum pona "Nature calls" solluvangaleh, adhuku morning poravangaluku edhira kuda oru Iyakam varalam.....Kashtam kashtam....

மா சிவகுமார் said...

பின் நவீனத்துவம் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

வினையூக்கி said...

தகவலுக்கு நன்றி சார். :):)

siva gnanamji said...

முன்தூங்கி பின்எழும் நண்பர்கள்
சங்கம் ஏதுமுண்டோ?

tbr.joseph said...

வாங்க வினோத்,

நம்ம தமிழ்மண இளைஞர் மன்ற சார்பாகவோ அல்லது வ.வா. சங்க சார்பாகவே டென்மார்க்கில் இந்த இயக்கத்தை துவக்கியவரை இந்தியாவிலும் துவக்குமாறு அழைக்கலாம்.. நீங்க அதுக்கு முயற்சி பண்ணுங்க. முதல் மெம்பர்ஷிப் உங்களுக்குத்தான் :-)

tbr.joseph said...

வாங்க ஆணி,

Innum pona "Nature calls" solluvangaleh, adhuku morning poravangaluku edhira kuda oru Iyakam varalam.....Kashtam kashtam.... //

அட! இதுவும் நல்ல யோசனைதான்...
இப்ப இருக்கற டென்ஷன்ல அதுவும் ஒரு பிரச்சினைதான்:-(

tbr.joseph said...

பின் நவீனத்துவம் :-)//

அழகா சொல்லிட்டீங்க...

ஆனா யோசிச்சிப் பார்த்தா எதுக்கு காலைல ஒன்பது மணிக்கு ஆஃபீஸ்னு ஒரு ரூல் இருக்கணும்னு கூட தோனுது...

பதினோரு மணியிலருந்து எட்டு மணி வரைன்னு இருந்தா என்ன?

tbr.joseph said...

வாங்க வினையூக்கி,

அடுத்த முறை ஒங்க பாஸ சந்திக்கறப்போ இந்த யோசைனைய முன் வைக்கவா;-)

tbr.joseph said...

வாங்க ஜி!

முன்தூங்கி பின்எழும் நண்பர்கள்
சங்கம் ஏதுமுண்டோ? //

ஏன் அதுல நீங்க மெம்பராவணுமா?

நாமல்லாம் பிந்தூங்கி முன் எழும் ஆட்களாச்சே...

ஆறு மணிக்கு மேல தூக்கம் வந்தாத்தான?

aravindaan said...

inga ellam flexible hours. En nanbar 10hrs 4 days tuesday-friday. namba eppothum 9-5 office pakkam 8manikku ezhunthal pothum.. inga oru appartment adv ithu than leave at 9:0 and back home at 5:05 and spend time with ur kids, appart avalau pakkathulla irukkan.

tbr.joseph said...

வாங்க அரவிந்தன்,

En nanbar 10hrs 4 days tuesday-friday. namba eppothum 9-5 office pakkam 8manikku ezhunthal pothum.. inga oru appartment adv ithu than leave at 9:0 and back home at 5:05 and spend time with ur kids, appart avalau pakkathulla irukkan.//

ஹூம்.... குடுத்த வச்ச ஆளுங்க...

எஞ்சாய் பண்ணுங்க..