19 மே 2007

செல்பேசியா தொல்லைபேசியா!

இரண்டு நாட்களுக்கு முன்பு உலக தொலைத்தொடர்பு தின விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களின் உபயோகத்தைப் பற்றி பேசுகையில் செல்பேசிகளின் தீமையைப் பற்றி மிக 'அருமையாக?' பேசினார்.

அதாவது அவருடைய பல்கலைக்கழக வளாகத்தில் செல்பேசிகளின் உபயோகத்தை நிறுத்தியதிலிருந்து மாணவர்கள் தேர்வில் வெற்றிபெறும் விழுக்காடு கணிசமாக உயர்ந்திருக்கிறதாம்! அத்துடன் மாணவர்களுடைய employability அதாவது வேலைக்கு 'லாயக்கான' மாணவர்களாக மாறிவிட்டனராம்!

அவர் தொடர்ந்து செல்பேசி இப்போதெல்லாம் தொல்லைபேசியாக மாறிவருகிறது. அது படிக்கும் மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கிறது என்றும் கூறியிருந்தார்.
அதைப் படித்ததுமே சிரிப்புத்தான் வந்தது. எப்படி இத்தனை பொறுப்புள்ள பதவியிலுள்ளவர்களால் இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேச முடிகிறது?

இன்று அவருடைய கூற்றை மறுப்பதுபோல திரு.R.K. ராகவன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி ராகிங் தொல்லையிலிருந்து மாணவர்கள் விடுபட செல்பேசிகள்தான் மிகவும் பயனுள்ள தொலைத்தொடர்பு கருவியாக பயன்படுகிறது என்று கூறியதாக செய்தி வந்துள்ளது!

அவரே தொடர்ந்து மாணவர்கள் வகுப்புகளில் செல்பேசியை பயன்படுத்தாமலிருக்க சம்பந்தப்பட்ட கல்லூரிகள் இப்போது சந்தையில் கிடைக்கும் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

அதாவது தொலைத்தொடர்பு சாதனங்கள் மக்கள் பயன்படுத்தத்தான் உருவாக்கப்படுகின்றன. அதை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதைக் காரணம் காட்டி அதை முழுவதுமாக தடைசெய்வது அறிவின்மை.

இதை உலகளவில் பிரசித்தமாயுள்ள ஒரு பல்கலைக்கழக தலைவரே செய்கிறார் என்பதுடன் அதனால் நன்மையே விளைந்திருக்கிறது என்பதுபோல் பேசி வருவதுதான் வேடிக்கை!

அதுவும் தொலைத்தொடர்பு தின விழாவில்!

அவருடைய உத்தரவின்பேரில் இப்போதெல்லாம் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாமல் கல்லூரிக்குள் நுழையும் விருந்தாளிகளுடைய (guests) செல்பேசியும் வாசலிலேயே பறித்துக்கொள்கிறார்கள்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய் மகளுடைய பட்டமளிப்பு விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். 'சார் செல்ஃபோன இங்கயே சரண்டர் பண்ணிட்டு ரிசிட் வாங்கிட்டு போங்க.. இல்லன்னா உங்கள உள்ள விடமாட்டோம்.' என்று வாசலிலேயே குண்டர் லெவலுக்கு நின்ற காவலாளி வழிமறித்தார். 'பாத்தீங்களா நா சென்னேன்லே.' என்று விஷமத்துடன் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை பார்த்துக்கொண்டிருந்தார் என்னுடைய மகள். வேறு வழியில்லாமல் தேமே என்று கொடுத்துவிட்டு சென்றேன்.

மாணவர்களை தடைசெய்ததுடன் நில்லாமல் அவர்கள் தேர்வில் வெற்றிபெற அவர்களுடைய வீடுகளிலும் இனி செல்பேசிகளை பயன்படுத்தலாகாது என்று அடுத்த விழாவில் அவர் கூறாமல் இருந்தால் சரி!

****

7 கருத்துகள்:

  1. TBR Sir,

    As my sis-in-law is a Prof at Anna Unty, and lives in qtrs, i have the oppurtunity to visit AU often.
    vistiors and others use cellphones.
    The VC could have banned the cellphones within class rooms, labs, etc. many students and hostelers keep in touch with parents and relatives thru cell phone. now it is underground..

    I have lost all my illusions aboout AU. It is a now a den of corruption and nepotisim. Ten of crores of rupees are siphoned off from contracts, purchases, etc.
    the booty is shared from bottom to CM level. the amounts are staggering. and it was said that the post of VC for the new AU, Coimbaotore was bought for 1.5 crores by the incumbendent (with the help of cronies). imagine the
    amount that would be re-earned.
    only the shell remains with a reputation ; the core has been
    corrupted long back...

    Anbudan
    athiyaman.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. வாங்க ஜி,

    cellphones are
    'pis aller' (necessary evil)//

    ஆமாம்... அது நம்முடைய பர்சனல் லைஃபையே புரட்டி போட்டுவிட்டது என்பது உண்மைதான்..

    ஆனால் அது இல்லாவிட்டால் முடியாது என்பதுபோல் ஆகிவிட்டதே...

    பதிலளிநீக்கு
  3. வாங்க அதியமான்,

    I have lost all my illusions aboout AU. It is a now a den of corruption and nepotisim. Ten of crores of rupees are siphoned off from contracts, purchases, etc.
    the booty is shared from bottom to CM level. the amounts are staggering. //

    இது எந்த அரசு நிறுவனங்களில்தான் இல்லை...

    பதிலளிநீக்கு
  4. /மாணவர்களை தடைசெய்ததுடன் நில்லாமல் அவர்கள் தேர்வில் வெற்றிபெற அவர்களுடைய வீடுகளிலும் இனி செல்பேசிகளை பயன்படுத்தலாகாது என்று அடுத்த விழாவில் அவர் கூறாமல் இருந்தால் சரி!/

    ஆஹா...ஆஹா... :)
    இது அருமை!

    பதிலளிநீக்கு
  5. செல்பேசி தொடர்பான துணைவேந்தரின் நடவடிக்கை மிக சரியானதென்பதே என் கருத்து.கல்விச்சாலையின் உள்ளிருக்கும் போது செல்பேசி அத்தியாவசியமற்றது என்பது மிக சரியே.

    பதிலளிநீக்கு
  6. The cell phone has made people gone mad. you cannot see a person without a mobile when sitting idle.Moving fingers all over the keypad.
    Trying to restrict it usage will only lead to it use secretlt which my cousin too in her college now.

    So let things go as it happens...

    VC please cocentrate on some other areas..

    பதிலளிநீக்கு