09 May 2007

ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிர்ப்பு...

ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிர்ப்பு... பா.ம.கவின் லேட்டஸ்ட் ஸ்டண்ட்!!


இப்போதெல்லாம் தமிழக சட்டசபையில் தினமும் ஒரு நகைச்சுவை காட்சியை அரங்கேற்றுவதென திமுகவின் தோழமைக் கட்சிகளில் ஒன்று இறங்கியிருக்கிறது. அது எந்த கட்சி என்று வெளிச்சம் போட்டக் காட்ட தேவையில்லையென்று நினைக்கிறேன்.

நேற்றைய தமாஷ்...

குறிப்பிட்ட கட்சித்தலைவர் எழுந்து ரிலையன்ஸ் கடைகளால் சிறு காய்கறி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்களை சென்னையிலிருந்து மட்டுமல்லாமல் தமிழகத்திலிருந்தே விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

அதைவிட வேடிக்கை... தமிழக முதல்வரின் பதிலுரை...

'ரிலையன்ஸ் கடைகளை மூடும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது. ஆகவே மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்புவோம்.'

நல்லவேளையாக சட்டமன்றத்தில் நடந்த இந்த கூத்தை சன் டிவியில் மட்டுமே காண முடிந்தது. இன்றைய பத்திரிகைகள் எதுவும் அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை... அதாவது ஆங்கில பத்திரிகைகள்...

நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதால் கடந்த நாற்பதாண்டு காலத்தில் இங்கு ஏற்பட்டு வரும் பல மாறுதல்களையும் அதனால் சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் உணரமுடிகிறது.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் நகரமெங்கும் பெரும்பாலான கடைகள் செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்களின் கைவசமிருந்தது. பிறகு பெருந்தலைவர் காமராஜின் ஆட்சி காலத்தில் அது நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்களின் கைகளுக்கு மாறியது. காங்கிரசாரின் கைவசமிருந்த ஆட்சி திராவிடக் கட்சிகளுக்கு மாறிய ஆரம்ப காலத்தில் இவ்விரு சமூகத்தைச் சார்ந்தவர்களின் ஆதிக்கம் சற்றே தளர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் (இன்றைய தோழமைக் கட்சியைச் சார்ந்தவர்கள்) சென்னையை நோக்கி படையெடுத்து அங்கிங்கெனாதபடி எங்கும் பரவ ஆரம்பித்தனர்.

அதற்குப் பிறகு வடநாட்டைச் சார்ந்தவர்கள்... அடகுக் கடையிலிருந்து பாத்திரக் கடைகள், துணிக்கடைகள், பகட்டான ஷோ ரூம்கள் என இவர்களுடைய ஆதிக்கம்தான்...

பிறகு நம்முடைய அண்டை மாநிலமான கேரளத்தினரின் படையெடுப்பு.. இன்று சென்னையிலுள்ள டீக்கடைகள், பெட்டிக் கடைகள், பேக்கரி, ஃபேன்சி கடைகள் இவர்கள் கைவசம்... அவர்களைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்தவர்கள்...

இன்று சென்னையிலிருக்கும் பல உணவகங்கள் இவர்களிருவர் கைவசம்...

இன்று சில்லறை வியாபாரிகள் அதாவது பலசரக்கு கடைகளை வைத்திருப்பவர்களும் கூட பலர் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள்தான்...

ஆக கடந்த முப்பதாண்டு காலமாக சென்னையில் தமிழகத்தைச் சார்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு ஆதிக்கம் செலுத்துபவர்கள் பிற மாநிலத்தவர்கள்தான்...

இதே காலக்கட்டத்தில் பல்நோக்கு அதாவது மல்ட்டி லெவல் ட்ரேடிங் நிறுவனங்கள் பல தோன்றி இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோயின... ஸ்டாப் அண்ட் ஷாப் சங்கிலி ஷோ ரூம்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்..

இதில் இருபதாண்டு காலத்திற்கும் மேல் நிலைத்து நிற்பது நீல்கிரீஸ் கடைகள்.... அதற்குப் பிறகு வந்தது ஃபுட் வேர்ல்ட் கடைகள்... கடந்த ஆண்டு இவை ஸ்பென்சர் டெய்லி, ஃபுட் வேர்ல்ட் என இரண்டானது... இவ்விரண்டு நிறுவனங்கள் இன்று சுமார் நூறு பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளை நடத்துகின்றன... போறாததற்கு பழமுதிர்ச்சோலை என்ற பெயரில் சுமார் ஐம்பது கடைகள்...

ஆனால் இந்த கடைகளில் வாங்குபவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்...

ஜீன்சும் டீஷர்ட்டும் போட்ட கும்பல்தான்.. அவர்களுடன் ஐ.டி நிறுவனங்களில் ஊதியத்திற்கு பதிலாக கிடைக்கும் கூப்பன்வாசிகள், க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட்வாசிகள்...

என்னுடைய இரு மகள்களும் இத்தகைய கடைகளுடைய வாடிக்கையாளர்கள்தான்.. மறுப்பதற்கில்லை..

ஆனால் நானோ அல்லது என்னுடைய மனைவியோ எப்போதாவது அத்திபூத்தாற்போல்தான் இத்தகைய கடைகளுக்குள் நுழைவோம்.. அதுவும் பலசரக்குக் கடைகளில் கிடைக்காத பொருட்களுக்காக... நிச்சயம் காய்கறி வாங்க நுழைவதில்லை..

நான் குடியிருக்கும் குடியிருப்பின் வாசலிலேயே ஃபுட் வேர்ல்ட கடையும் அங்கிருந்து பத்து கட்டடங்கள் தள்ளி ஸ்பென்சர் டெய்லி கடையும் உள்ளது... இதே தெருவில் நம்முடைய gool old காய்கறிக் கடைகளும் இருக்கின்றன...

அவர்களிடம் கேட்டால்... அட போங்க சார்.. இவனுங்கல்லாம் எத்தன நாளைக்கி... நா இந்த கடைய போட்டு பத்து வருசத்துக்கு மேல ஆவுது... நாங்க என்ன ஓடியா போய்ட்டோம்... ஆனா இவனுங்க இன்னைக்கி இருப்பானுங்க... நாளைக்கி? என்பார்கள் கூலாக...

இவர்களுக்காக அரசியல்வாதிகள் பரிந்துபேசிக்கொண்டு வருவதெல்லாம் வெறும் நாடகத்தனமான அதுவும் அமெச்சூரிஷான செயல் என்பது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் மிக நன்றாகவே தெரிந்துதானிருக்கிறது...

ஆனால் ஒன்று இப்படி பேசுபவர்கள் காய்கறி வாங்குவது எங்கு என்று பார்த்தால்.... ஆங்கிலமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய பேரப் பிள்ளைகளை கான்வெண்ட் பள்ளிக்கு அனுப்புவதுபோலத்தான்...

*******

16 comments:

Raju said...

Fantastic, Mr. TBR. You have hit the nail on the head. Believe me, this hypocrisy does not stop only with sending their children to convents. Even they name their grand children with Sanskrit names, while claiming to be messiahs of Tamil language. Ever wonder why such things don't work in Kerala? It's because people are more literate and can easily see through the games of these self-styled leaders.

தென்றல் said...

/இதே தெருவில் நம்முடைய gool old காய்கறிக் கடைகளும் இருக்கின்றன...

அவர்களிடம் கேட்டால்... அட போங்க சார்.. இவனுங்கல்லாம் எத்தன நாளைக்கி... நா இந்த கடைய போட்டு பத்து வருசத்துக்கு மேல ஆவுது... நாங்க என்ன ஓடியா போய்ட்டோம்... ஆனா இவனுங்க இன்னைக்கி இருப்பானுங்க... நாளைக்கி? என்பார்கள் கூலாக...
/

இந்த பெரிய நிறுவனங்களின் வரவால், சிறு காய்கறி வியாபாரிகள் பாதிக்கப் படுவார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. உடனே பாதிப்பு இல்லையென்றாலும் ....வரும் காலங்களில் இருக்கும் (முதற் கட்டமாக சென்னை போன்ற பெரிய நகரங்களில்).

இந்த பெரிய நிறுவனங்களின் 'படையெடுப்பை' தாக்கு பிடிப்போம்-னு நம்பிக்கையில் அவ்வாறு சொன்னார்களா அல்லது அவர்களின் ஆக்கிரமிப்பை உணராதவர்களாக இருக்கிறார்களா? தெரியவில்லை...

K.R.Athiyaman said...

Reliance Fresh offers excellent
vegetables at low prices. Both the
farmers from whom these are sourced and the cosumers are happy.
No one has any moral or legal rights to oppose these shops. All
the talk about fair prices for farmers will be mere rhetoric if these are blocked.

Economics of scale, modern technology and management with logisitcs enable such big stores to offer best quality goods cheaply. That is good for eveyone.

the traders association need not fear them as their customers will not leave them and lower middle class and the poor will continue to patronose them. even other wise,
the changes are inevitable.

When mechanised farming (trators, etc) were introduced in India, there was similar opposition ; now it is unimaginable to farm without
trators...

The small groceries employ many boys (child labour) and many owners evade income tax. and there is a lot of 'kalapadam' in the wares and prices and quality do not always match. These people are now grumbling against RIL stores !

Ours is a free country and anyone can live and do business anywhere.
Millions of Tamils live in Delhi,
Mumbai and elsewhere in India ;
many are leading traders and businessmen in many states. If other lingual groups talk similarly about Tamils (like Shiva Sena) outside TN, then what will be
the condition ?

the Kandhu vatti business is dominated by Tamils and they exist
all over India : from Assam to Kerala. Doesn't that make Tamil's
exploitning other people ?

Hence we may avoid such comments "
North Indians, etc dominate the scene in Chennai.. etc"

anbudan
K.R.Athiyaman

G.Ragavan said...

இது விஷயமா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சார். பாதிப்பு இருக்கவே இருக்காதுன்னு உறுதியா சொல்ல முடியலை. கண்டிப்பா பாதிப்புன்னும் உறுதியாச் சொல்ல முடியலை. புட்வேர்ல்டு கடைகள் ஊர் முழுக்க இருக்க. அதுலயே காய்கறிகளும் கிடைச்சிக்கிட்டுதான் இருந்தது. இப்ப காய்கறிக்குன்னு தனிக்கடை.

ஆனா ஒன்னு. மக்களுக்கு எத எங்க வாங்குறது நல்லதுன்னு தெரிஞ்சிருக்கு. குறிப்பா பெண்களுக்கு. சகோதரியோட ரிலையன்ஸ் கடைக்குப் போயிருந்தேன். சென்னையில. அங்க காய்கறிகள் அது இதுன்னு வாங்குனா. அப்ப மருமகன் பலாப்பழம் வேணும்னு கேட்டதாச் சொன்னா. நானும் ஒரு பாலாப்பழப் பாக்கெட்டைப் பையில போட்டேன். அத அவ எடுத்து வெளிய வெச்சுட்டு. இத வெளிய வாங்கனும். அங்கதான் வெலையும் குறைச்சலா இருக்கும்னு சொன்னா. நானும் சரீன்னு கேட்டுக்கிட்டேன். எது எப்படியோ! எல்லாரும் நல்லாயிருந்தாச் சரி.

முத்துகுமரன் said...

//பா.ம.கவின் லேட்டஸ்ட் ஸ்டண்ட்!!//

சரி அவர்கள் வேறு என்ன செய்தால்தான் ஒத்துக்கொள்வீர்கள்??. போராட்டங்கள், எதிர்ப்பு குரல்கள் சிலருக்கு எப்போதும் தமாசாகத்தான் இருக்கும் கொஞ்சம் மேலே ஏறிய பின். உங்கள் தெருவில் இருக்கும் கடைக்காரர் ஒட்டுமொத்தமாக சிறுவியாபாரிகளை பிரதிபலிக்கின்றாரா என்ன?.

tbr.joseph said...

வாங்க ராஜு,

Ever wonder why such things don't work in Kerala? It's because people are more literate and can easily see through the games of these self-styled leaders. //

அப்படி சொல்ல முடியாது அங்கும் மார்க்சிஸ்ட் கட்சிகள் இத்தகைய ஸ்டண்டுகளை அவ்வப்போது அடிப்பதுண்டு..

ஆனால் மக்கள் அதை கண்டுக்கொள்ள மாட்டார்கள்..

tbr.joseph said...

வாங்க தென்றல்..

இந்த பெரிய நிறுவனங்களின் வரவால், சிறு காய்கறி வியாபாரிகள் பாதிக்கப் படுவார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. உடனே பாதிப்பு இல்லையென்றாலும் ....வரும் காலங்களில் இருக்கும் (முதற் கட்டமாக சென்னை போன்ற பெரிய நகரங்களில்). //

சென்னைப் போன்ற நகரங்களில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர் என்பதை பலரும் உணர்வதில்லை. இங்கு ரிலையன்ஸ் போன்ற கடைகளில் நுழையும் மேல்தட்டு மக்களை விட நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களே அதிகம்... இது என்னுடைய அனுபவத்தில் உணர்ந்த உண்மை... சென்னை ஒரு மல்டி லெவல் சொசைட்டி... இங்கு யார் வேண்டுமானாலும் வந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. எல்லோருக்கும் வாய்ப்பு உண்டு... யாரும் யாருடைய வாய்ப்பையும் தட்டிப் பறிக்க முடியாது...

இந்த பெரிய நிறுவனங்களின் 'படையெடுப்பை' தாக்கு பிடிப்போம்-னு நம்பிக்கையில் அவ்வாறு சொன்னார்களா அல்லது அவர்களின் ஆக்கிரமிப்பை உணராதவர்களாக இருக்கிறார்களா? தெரியவில்லை... //

இதுதாங்க நம்ம அரசியல்வாதிகளோட மற்றும் நம்மள மாதிரி ஆளுங்களோட நினைப்பு. அதாவது அவர்கள் பாமரர்கள்.. அவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது.. ஆகவே நாம்தான் அவர்களைப் பற்றி வாதாட வேண்டும்...

அவர்கள் நம்மையும் விட விவரமானவர்கள்..

tbr.joseph said...

வாங்க அதியமான்,

As usual you have hit the nail on its head..

But there are people (why talk about politicians?) in our own midsts who still believe that this a country where no should be allowed to come from outside.. Earlier they were against those from outside the Country.. Now it is against those from outside the State... Later it might even turn against those from outside the District, the town and finally the village...

tbr.joseph said...

வாங்க ராகவன்,

ஆனா ஒன்னு. மக்களுக்கு எத எங்க வாங்குறது நல்லதுன்னு தெரிஞ்சிருக்கு. //

கரெக்ட்... இத அரசியல்வாதிங்கதான் இன்னும் புரிஞ்சிக்கலை. இல்ல புரிஞ்சிக்காத மாதிரி நடிக்கிறாங்க...

tbr.joseph said...

வாங்க முத்துக்குமரன்,


எதிர்ப்பு குரல்கள் சிலருக்கு எப்போதும் தமாசாகத்தான் இருக்கும் கொஞ்சம் மேலே ஏறிய பின். //

அப்படியா? ஏன் நேரடியாவே சொல்லுங்களேன்.. ஏன்னா நா மேஏஏஏஏல போயாச்சி... பாங்குல ஒரு கோடி பாலன்ஸ் இருக்கு..

அதனாலதான் ரோட்டோர காய்கறி கடைகள்ல வாங்காம ரிலையன்ஸ் கடைக்கு போறேன்...

அதனால எனக்கு இது தமாஷாத்தான் தெரியுது....அப்படீன்னு சொல்லுங்க...

Aani Pidunganum said...

//கரெக்ட்... இத அரசியல்வாதிங்கதான் இன்னும் புரிஞ்சிக்கலை. இல்ல புரிஞ்சிக்காத மாதிரி நடிக்கிறாங்க... //

Saarval,

Rombha correct, (Politician - Should know to act & shouldnt understand anything & should be able to talk rubbish without laughing in public - Great skill)

ivanga ippadi thaaan edhavadhu stunt vitu ennakum oru katchi irukunu solla vidaradhu. Ithanai akkarai irundha PMK starting periodla they cut so many trees, adhu yosikavendiyadhuthaneh. Ellam pammathu vellai. Idha oru katchiyaveh eduthukaradhula artham ellai.
On the whole, Ramdos oru thamazhana manidharnu sollaradha vida Komalinu sollalaam.

tbr.joseph said...

வாங்க ஆணி,

On the whole, Ramdos oru thamazhana manidharnu sollaradha vida Komalinu sollalaam. //

நீங்க ஆணி பிடுங்கறவர்னு நெனச்சேன்.. நல்லாவே ஆணி அடிக்கவும் செய்யறீங்க...

முத்துகுமரன் said...

//அப்படியா? ஏன் நேரடியாவே சொல்லுங்களேன்.. ஏன்னா நா மேஏஏஏஏல போயாச்சி... பாங்குல ஒரு கோடி பாலன்ஸ் இருக்கு..//

ஏமாற்றமாக இருக்கிறது ஜோசப் சார். உங்கலைக் கிண்டல் பண்ணுவதோ காயப்படுத்துவதோ என் நோக்கமல்ல. நான் சொல்லவந்ததை நீங்கள் சரியாக எடுத்துக் கொள்ளவில்லை. யார் செய்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கிறீர்களே தவிர அதன் நியாயங்களை உணர மறுக்கிறீர்கள். ஒருவரின் போராட்ட நியாயங்கள் மற்றொருவருக்கு அசவுகரியமாக இருக்கும் அவலத்தை சுட்டவே அப்படிக் குறீப்பிட்டிருந்தேன். எடுத்துகாட்டுகள் நிறைய சொல்லலாம். ஆனால் பயனேதும் இருக்காது என்றே கருதுகிறேன். 50 ஆண்டுகளுக்கு முன் இலவசமாக இருந்த குடிநீருக்கு இன்று விலை உண்டு. எந்தப் பக்கத்திலிருந்து பேசுகிறோம் என்பதைப் பொறூத்துதான் எல்லா உணர்வுகளும்.

உங்களை கிண்டல் செய்ததாக கருதியிருந்தால் என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்

tbr.joseph said...

உங்கலைக் கிண்டல் பண்ணுவதோ காயப்படுத்துவதோ என் நோக்கமல்ல.//

உங்களுடைய நோக்கம் என்னவாக இருந்தாலும் நீங்கள் எழுதிய விதம் அதைத்தான் செய்தது..

யார் செய்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கிறீர்களே தவிர அதன் நியாயங்களை உணர மறுக்கிறீர்கள். //

இருக்கலாம்.. இந்த போராட்டத்தை யாருடைய தூண்டுதலும் இல்லாமல் சிறு காய்கறி வியாபாரிகள் செய்திருந்தால் நிச்சயம் என்னுடைய கருத்து இதுவாக இருந்திருக்காது. ஏதாவது ஒரு பிரச்சினையை முன்வைத்து தினம் ஒரு போராட்டம் என்பவர்களை என்னவென்று சொல்வது? அந்த போக்கைத்தான் எதிர்க்க வேண்டும் என்று நினைத்தேன்...

எடுத்துகாட்டுகள் நிறைய சொல்லலாம். ஆனால் பயனேதும் இருக்காது என்றே கருதுகிறேன்.//

உங்களுடைய இந்த கருத்தும் புண்படுத்தக்கூடியதுதான்..அதாவது இத்தகைய கண்ணோட்டம் கொண்ட உங்களிடம் கூறி பயனேதும் இருக்காது என்கிறீர்கள்...

என்னுடைய கருத்து இதுதான்.. ஆத்மசுத்தியோடு நாம் தவறு என்று கருதுவதை எதிர்த்து மட்டுமே போராடவேண்டும். ரிலையன்சோ அல்லது வேறெந்த இந்திய நிறுவனமோ ஒரு தொழிலிலோ அல்லது வணிகத்திலோ ஈடுபடுவதை நம்மால் தடுக்க முடியாது... தடுக்கவும் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து...

இந்த போக்கை அனுமதித்தால் நாளை மொத்த வியாபாரிகள் எல்லோருமே சில்லறை வியாபாரிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்கள்தான் ஆகவே அவர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற நிலைவந்தால் என்னாவது?

குடிநீரை விலைகொடுத்து வாங்குவதைப் பற்றி கூறுகிறீர்கள். இன்று தமிழகத்தில் தினம் ஒன்றுக்கு ரூ.20 கொடுத்து குடிநீர் கேன் வாங்குபவர்கள் எத்தனை சதவிகிதம் பேர் என்று நினைக்கிறீர்கள்? எல்லோரும் காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தால் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் கூட சப்ளை செய்ய முடியாது...

அசுரன் said...

///
//வாங்க முத்துக்குமரன்,


எதிர்ப்பு குரல்கள் சிலருக்கு எப்போதும் தமாசாகத்தான் இருக்கும் கொஞ்சம் மேலே ஏறிய பின். //

அப்படியா? ஏன் நேரடியாவே சொல்லுங்களேன்.. ஏன்னா நா மேஏஏஏஏல போயாச்சி... பாங்குல ஒரு கோடி பாலன்ஸ் இருக்கு..

அதனாலதான் ரோட்டடீர காய்கறி கடைகள்ல வாங்காம ரிலையன்ஸ் கடைக்கு போறேன்...

அதனால எனக்கு இது தமாஷாத்தான் தெரியுது....அப்படீன்னு சொல்லுங்க...////

அதுதான் உண்மை என்பது போல தெரிகிறது. ஏனேனில் தண்ணீர் தனியார்மயம் குறித்து முத்துக்குமரன் எழுப்பிய கேள்விக்கு உங்களது பதில் எனக்கென்ன வந்தது என்பது போலத்தான் உள்ளது.//குடிநீரை விலைகொடுத்து வாங்குவதைப் பற்றி கூறுகிறீர்கள். இன்று தமிழகத்தில் தினம் ஒன்றுக்கு ரூ.20 கொடுத்து குடிநீர் கேன் வாங்குபவர்கள் எத்தனை சதவிகிதம் பேர் என்று நினைக்கிறீர்கள்? எல்லோரும் காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தால் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் கூட சப்ளை செய்ய முடியாது...//

தண்ணீர் தனியார் ஆனால் விலை கொடுத்த வாங்க இயலுபவ்ர்களுக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்றாகிப் போகும். இதோ இந்தியா சீனாவில் நல்ல தண்ணீர் கிடைப்பவரின் சதவீதம் படு பாதளத்திற்க்கு குறைந்துள்ளது.

அவர்கள் நாளை தனியார் த்ண்ணீர் இறைப்பு நிலையங்களை தாக்கும் போதோ அல்லது அதனை எதிர்த்து போராடும் போதோ இதே போல நீங்கள் பதிவெழுதுவீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதாவது இவர்கள்(ரிலையன்ஸ்) இங்கு வியாபாரம் செய்ய உரிமை உள்ளது என்று.//
இந்த போக்கை அனுமதித்தால் நாளை மொத்த வியாபாரிகள் எல்லோருமே சில்லறை வியாபாரிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவர்கள்தான் ஆகவே அவர்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற நிலைவந்தால் என்னாவது?//

இது உங்க கற்பனைதான். அப்படியெனில் நீங்கள் மொத்த வியாபாரிகளின் ஆதரவாளரா என்று என்னால் கேட்க்க முடியும். இன்று வாழ்க்கை பறிபோகும் பெரும்பான்மை சிறுவியாபாரிகள் போராடினால் அதற்க்கு பதில் சொல்ல வக்கின்றி இப்படி சப்பை கட்டு கட்டுவது நேர்மையானது அல்ல. மேலும் இந்திய மொத்த வியாபாரிகளுக்கும் ரிலையன்ஸ் பாணி தரகு பன்னாட்டு மூலதனத்துக்கும் வேறுபாடு உள்ளது.

மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயத்தையும் காவு வாங்கும் திட்டங்களீன் ஒரு அம்சமாக சில்லறை வணிகத்தில் பன்னாட்டு மூலதனத்தை அனுமதிப்பது உள்ளது. இந்த் போக்கை அனுமதித்தால் என்ற எச்சரிக்கை உண்மையில் இந்த அம்சத்தை முன்னிட்டே வந்திருக்க வேண்டும். ஆயினும் உங்களது வர்க்க இயல்பு போராடும் மக்களை குறித்து எச்சரிக்க வைக்கிறது.

ராஞ்சி ரிலையன்ஸ் கடைகள் உடைக்கப்பட்டதில் எந்த பமகா அரசியல் செய்தது என்பதையும் கண்டுபிடித்த் தருவார் tpr

ஒரு பிரச்சனை நடக்கிறது எனும் பொழுது அதில் எந்த பக்கத்தை எழுதுகிறீர்கள் என்பதுதான் உங்களது அரசியல் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள உதவுகிறது.

ஓட்டுக் கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை எழுதிய நீங்கள் உண்மையிலேயே ரிலையன்ஸ் எதிர்ப்பில் உள்ள நியாயத்தையும் எழுதியிருக்கலாம்.


//ஆத்மசுத்தியோடு நாம் தவறு என்று கருதுவதை எதிர்த்து மட்டுமே போராடவேண்டும். ரிலையன்சோ அல்லது வேறெந்த இந்திய நிறுவனமோ ஒரு தொழிலிலோ அல்லது வணிகத்திலோ ஈடுபடுவதை நம்மால் தடுக்க முடியாது... தடுக்கவும் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து...
//

அது என்ன ஆத்ம சுத்தியோடு தவறு? உஙக்ளுக்கு தவறு என்று ஏற்புடைய தவறா? அதாவது சென்னையை அசிங்கப்படுத்தும் சேரிவாழ் மக்களின் தவறு என்பது போல, நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு செய்யும் கோடிஸ்வர ந்டைப்பாதைக் கடைக்காரர்களின் தவறு என்பது போல...(ஒரு எ-காதான்)

அது என்ன இந்திய நிறுவனம்? அமெரிக்க பெப்ஸ்யின் CEO ஒரு இந்திய பெண். அது ஒரு இந்திய நிறுவனமா?

இந்திய தேசிய முதலாளியோ அல்லது சிறு வியாபாரியோ வணிகத்தில் வாழ்வதை நீங்கள் சொல்லும் மேற்ப்படி தரகு பன்னாட்டு மூலதனங்கள் தடுக்கிறதே? அது குறித்து TPRன் கலகக் குரலை எங்குமே கேட்க்க இயலவில்லையே?

Read Article about Relaince:
http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_25.html

அசுரன்

அசுரன் said...

//இது விஷயமா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை சார். பாதிப்பு இருக்கவே இருக்காதுன்னு உறுதியா சொல்ல முடியலை. கண்டிப்பா பாதிப்புன்னும் உறுதியாச் சொல்ல முடியலை. புட்வேர்ல்டு கடைகள் ஊர் முழுக்க இருக்க. அதுலயே காய்கறிகளும் கிடைச்சிக்கிட்டுதான் இருந்தது. இப்ப காய்கறிக்குன்னு தனிக்கடை.

ஆனா ஒன்னு. மக்களுக்கு எத எங்க வாங்குறது நல்லதுன்னு தெரிஞ்சிருக்கு. குறிப்பா பெண்களுக்கு. சகோதரியோட ரிலையன்ஸ் கடைக்குப் போயிருந்தேன். சென்னையில. அங்க காய்கறிகள் அது இதுன்னு வாங்குனா. அப்ப மருமகன் பலாப்பழம் வேணும்னு கேட்டதாச் சொன்னா. நானும் ஒரு பாலாப்பழப் பாக்கெட்டைப் பையில போட்டேன். அத அவ எடுத்து வெளிய வெச்சுட்டு. இத வெளிய வாங்கனும். அங்கதான் வெலையும் குறைச்சலா இருக்கும்னு சொன்னா. நானும் சரீன்னு கேட்டுக்கிட்டேன். எது எப்படியோ! எல்லாரும் நல்லாயிருந்தாச் சரி.
//

நல்ல பிழைப்புவாதம்.


// எது எப்படியோ! எல்லாரும் நல்லாயிருந்தாச் சரி.//

இந்த எல்லாரும்கிறதுல யாரெல்லாம் வராங்க? ரிலையன்ஸ் அம்பானிக்கு இதில் இடம் உண்டா? ரிலையன்ஸால் நால்லாயில்லாமல் போகும் ஒரு பெரும் கூட்டம் குறித்து உங்களது கருத்து என்ன? ஓ... ஒரு வேளை உங்களது கவலையெல்லாம் உங்கள் அக்காவினுடைய மருமகனுக்கு விலை குறைவாக ஆனால் தரமான பொருள் கிடைப்பது குறித்துதானா?

ஏன் ராகவன் அடுத்தவங்க பிரச்சனை குறித்து நமது இன்றைய நாகரீக வாழ்விற்க்காக உழைத்து ஓடாய் தேய்பவர்கள் குறித்தேல்லாம் யோசிப்பீர்களா?

இவையெல்லாம் கேள்விகள்தான்

அசுரன்